3 Apr 2013

ஜஸ்ட் ரிலாக்ஸ் - 03/04/2013

அன்சைஸ் - பா ராகவன் - புத்தக விமர்சனம் 


ன்சைஸ் - பா ராகவனின் சமீபத்திய புத்தகம், புத்தகக் கண்காட்சியில் வாங்கியது. தற்போதைய தமிழ் எழுத்தாளர்களில், எழுத்துலகில் மிக சிறப்பான பயணத்தை தொடர்கிறவர் பா.ராகவன்அன்சைஸ் புத்தகத்தின் முன் - பின் அட்டைகளின் வசனங்களே சொல்லிவிடுக்றது நிச்சயம் இது நம்மை சிரிக்க வைக்கக் கூடிய கட்டுரைகள் அடங்கிய புத்தகம் என்று

பெரும்பாலும் அவர் அவரையே கிண்டல் செய்து எழுதிய கட்டுரைகளே இடம் பெற்றுள்ளனஒரே போன்ற சில கட்டுரைகள் சில சமயம் அலுப்பு தருகிறதுமுதல் இரு கட்டுரைகள் மட்டுமே கொஞ்சம் அதிகமான மொக்கை போல்  உணர்ந்தேன் மற்றவை எல்லாம் அருமை. பதிவுலகில் சற்றே தேர்ந்த நடையில் எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.

என்ன ஒன்று இவை அனைத்தும் அவர் வலைத்தளத்தில் எழுதிய  கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.       

மேடவாக்கம் - அம்பாள் ஸ்டோர் - சைனா ப்ரொடக்ட் 

மேடவாக்கம் அம்பாள் ஸ்டோர் என்னும் பாத்திரக்கடைக்கு சில வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க தம்பியுடன் சென்றிருந்தேன். கல்லாவுக்கு அருகில் "சைனா பொருட்களுக்கு வாரன்டியோ, கியாரண்டியோ கிடையாது, கண்டிப்பாக திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தயவுசெய்து வாங்குவதைத் தவிர்க்கவும்" என்று எழுதிப் போட்டிருந்தனர்.

அதைத் தம்பியிடம் காண்பிக்கும் பொழுது ஓனர் எனது செய்கையைப் பார்த்துவிட்டார். " என்ன தம்பி பண்றது, நம்மாளுக ரேட் கம்மின்னு வாங்குறாங்க, எங்களுக்கும் லாபம் அதிகம் தான், ஆனாலும் யார் எங்ககிட்ட சைனா பொருள் கேட்டாலும் வாங்காதீங்கன்னு சொல்றோம், வியாபாரம் கெட்டாலும் பரவாயில்ல, தரம் முக்கியம், சுதேசித் தயாரிப்பு முக்கியம்.

படிச்சவரு மன்மோகன் சிங் அவரு பண்ணுன நல்ல காரியம் என்ன தெரியுமா திண்டுக்கல் பூட்டு சென்னையில எங்கையும் கிடைக்காது, எல்லா இடத்துலையும் சைனா பூட்டு தான். படிச்ச மனுஷன், வெளிநாட்டுல படிச்சிட்டு வெளிநாட்டுக்காரனுக்காக அரசாங்கத்த நடத்திட்டு இருக்காரு, விவசாயத்துக்கு மானியம் கேட்டா, விவசாயம் பண்ணாதன்னு சொல்றாரு, என்னத்த சொல்ல போங்க" என்று சில நிமிடங்களுக்கு பொங்கோ பொங்கு என்று பொங்கி விட்டார்.

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு மிஸ்டர் அம்பாள் ஸ்டோர்  


பதிவர் சந்திப்பு 

வாத்தியார் மற்றும் வெங்கட் நாகராஜுடன் நான் 

டந்த சனி கிழமை காலை, வாத்தியார் பால கணேஷிடம் இருந்து போன், "ஒரு பிரபல பதிவரை சந்திக்கலாம் வா என்று", அந்தப் பிரபலம் வேறு இல்லை டெல்லி வாழ் பதிவர், வலையுலகில் அதிகமாக பயணக் கட்டுரைகள் எழுதி வருபர் திரு.வெங்கட் நாகராஜ். அவரைப் புகைப்படங்களில் பார்த்துவிட்டு நேரில் பார்த்தால் சற்றே சிலிம்மாக இருக்கிறார். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சார்.


வெகு சமீபத்தில் பதிவுகள் எழுத ஆரம்பித்தவர். தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கொண்டு இவர் எழுதும் பதிவுகள்  ரசிக்கும் படியாய் உள்ளது. சமீபத்தில் இவர் எழுதிய பதிவான "பேசாத வார்த்தைகள் அழகானவை" - இவர் எழுதியதால் மிக அழகாய் வந்துள்ளது. கவிதைக்கும் கட்டுரைக்கும் இடைப்பட்ட எழுத்து. கண்டிப்பாய் வாசித்துப் பாருங்கள்


குறும்படம் - இடுக்கண் 

ரு வயாதான பிச்சைக்காரருக்கும், உழைத்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் வயதான முதியவருக்கும் இடையில் இருக்கும் புரிந்துணர்வைப் பற்றிய குறும்படம். வழக்கமான குறும்படத் தேடலில் இறங்கிய பொழுது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட திரைப்படம் என்று தெரிந்தது. இசை ஜஸ்டின் - சமீப காலங்களில் பல குறும்படங்களில் இவரின் இசை இடம் பெற்றுள்ளது

சென்னையில் ஒரு நாள் 

னது தம்பி, பதிவர் ஸ்கூல் பையன் மற்றும் அவர் நண்பர் சகிதமாக சென்று பார்த்த திரைப்படம். ஐனாக்சில் நான் பார்த்த முதல் திரைப்படம். ஸ்க்ரீன் கிளாரிட்டி அற்புதம்.     

சென்னையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு முதலில் வெளிவந்த திரைப்படம் ட்ராபிக். இப்படத்தில் நடித்த எந்த நடிகர்களிடமும் எதார்த்தத்தை மீறிய நடிப்பு வெளிப்பட்டு இருக்காது.   இயல்பான நடிப்பு, பின்னணி இசை, முகபாவங்கள் அதே சமயம் வேகமாக நகராவிட்டாலும் பரபரப்புடன் நகரும் திரைக்கதை என்று மனதிற்கு மிகவும் பிடித்த மற்றும் மறக்க முடியா படமாக அமைந்து இருந்தது.

அதே கதையை தமிழில் படம் பண்ணுகிறார்கள் என்றதும் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியது. காரணம் தமிழ் சினிமா பிரம்மாக்கள் மீது வைத்திருந்த அசைக்க முடியா கர்வம் தான். ஆனால் அவை அத்தனையையும் தவிடுபொடியாக்கி விட்டார்கள். இத்தனைக்கும் இந்த இரு படத்திற்கும் கதைஇசை, ஒளிப்பதிவு என்று தொழில்நுட்ப குழுவிலும் எந்த மாற்றமும் இல்லை

இசை படத்திற்கு பொருந்தவில்லையா இல்லை நடிகர்களுக்கு பொருந்தவில்லையா என்று தெரியவில்லை, இந்தப் படத்திற்கு தேவையான பின்னணி இசை சுத்தமாக இல்லை, நெடுகிலும் வயலினை மட்டும் இசைக்க விட்டுவிட்டார். கொஞ்சம் சொதப்பலான திரைக்கதை.

ட்ராபிக் போலீஸான சேரன் வண்டி ஓட்டும் பொழுது போன் பேசுவதை குறிப்பிட்ட எவரும், அவருக்கு பக்கத்துக்கு சீட்டில் அமர்ந்து இருப்பவர் சீட் பெல்ட் போடாதது பற்றி குறிப்பிடவில்லை. சீட் பெல்ட் போடாததும் குற்றம் :-)  

மற்றபடி ட்ராபிக் பார்க்காத அத்தனை நல்ல உள்ளங்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் சென்னையில் ஒரு நாள் .    

கேடி பில்லா கில்லாடி ரங்கா



சி கார்த்திகேயன் மற்றும் பாண்டிராஜ் மீது நம்பிக்கை வைத்து சென்ற படம் என்று சொல்வதை விட, மதிய நேர மின்தடையில் இருந்து தப்பிப்தற்காக சென்ற படம். மேடவாக்கம் குமரன் தியேட்டர், அரங்கம் ஓரளவு நிறைந்தது ஆச்சரியம் அளித்தது, காரணம் நாங்கள் சென்றது திங்கள் கிழமை மதிய காட்சி.

படம் நெடுக பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக் கொண்டே இருகிறார்கள். பல மெகா சீரியல்களை ஒன்றாய் பார்த்த உணர்வு. குடும்ப திரைப்படம் என்றாலும் மெகா சீரியல் ரசிகர்களுக்கு மட்டுமே மிகப்பிடிக்கும்என்னைப்போல் பொழுது போகாதவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.         

மற்றபடி ரெஜினாவும் பிந்துமாதவியும் செம பிகர், அவர்களை சைட் அடிக்க வேண்டுமனால் மீண்டும் ஒருமுறை படம் பார்க்கலாம். லோ பட்ஜெட்க்கு ஏற்ற நல்ல பிகர்கள். பெரிய பெரிய நடிகர்களுடன் வலம் வருவார்களா என்றெல்லாம் ஆருடம் சொல்லத் தெரியவில்லை. தொடர்ந்து வைப்பு கொடுத்தால் யான் தன்யனாவேன்.


முக்கிய குறிப்பு / முடிவு 

னி சினிமா விமர்சனங்கள் எழுதுவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த படமாக/ பிடித்த நடிகர்கள் நடித்த படமாக இருந்தால் விமர்சனம் எழுத வாய்ப்பு உள்ளது. மற்றபடி எனது சினிமா பார்வை ஜஸ்ட் ரிலாக்சில் தொடரும்.  

நன்றி 

பிளாக்கர் குறித்து எனக்கு வரும் அசாதாரணமான சந்தேகங்களை/ உதவிகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் பிளாக்கர் நண்பனுக்கு.  

19 comments:

  1. சின்னச் சின்ன விஷயங்களாக துக்கடா மாலை! சுவாரஸ்யமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. மிக உற்சாகமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சார் :-)

      Delete
  2. மற்றவர்கள் உன்னை கேலியும், கிண்டலும் செய்வதைவிட அதை நீயே செய்து கொள்வது சாலச் சிறந்தது என்பதுதான் என் கருத்து. பா.ரா.வும் அதைத்தானே செய்கிறார். அதிலென்ன தப்ப சீனு? ரசிக்கும்படி இருந்தால் சிரித்து ரசிக்கலாம்தானே! அச்சச்சோ..! இரண்டு பக்கமும் ஸ்லிம்மான பதிவர்களுக்கிடையில் இருக்கும் குண்டு உருவம்.. நானேதானா? (உடனே உடம்பைக் குறைகக ட்ரை பண்றா லூசு என்கிறது மனஸ்). ஜீவன் சுப்பு-வின் தளத்திற்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். இனி அடிக்கடி செல்வேன். ரைட்டா? குறும்பு அடம்... ஸாரி, குறும்படம் அப்புறம் வந்து பாத்துக்கறேன். சினிமா விமர்சனம்...! எப்பவுமே எனக்கு கொஞ்சம் அலர்ஜிதான். அதனால நோ கமெண்ட்ஸ்! என் கருத்தோட கடைசி வரியா... மேல ஸ்ரீராம் சொல்லியிருக்கறத சேத்துக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. //மற்றவர்கள் உன்னை கேலியும், கிண்டலும் செய்வதைவிட அதை நீயே செய்து கொள்வது சாலச் சிறந்தது என்பதுதான் என் கருத்து. பா.ரா.வும் அதைத்தானே செய்கிறார். அதிலென்ன தப்ப சீனு? // தப்பென்று சொல்லவில்லை சார்... வலையில் எழுதியதை பா ரா புத்தகமாகப் போட்டு உள்ளார், இதில் சில பல கால இடைவெளியில் இந்தக் கட்டுரைகளை எழுதி இருப்பார், ஆனால் புத்தகங்களில் படிக்கும் பொழுது நாம் தொடர்ச்சியாக படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம், இதில் ஒரே போன்ற வாக்கியங்கள், கிண்டல்கள் மீண்டும் மீண்டும் வருகிறது அவற்றை புத்தகமாகப் போடும் பொழுது தவிர்த்து இருக்கலாம்.

      //இரண்டு பக்கமும் ஸ்லிம்மான பதிவர்களுக்கிடையில் இருக்கும் குண்டு உருவம்.. நானேதானா? (உடனே உடம்பைக் குறைகக ட்ரை பண்றா லூசு என்கிறது மனஸ்).// வாத்தியாரே நீங்க குண்டா இருந்ததா தான் அழகு

      //ஜீவன் சுப்பு-வின் தளத்திற்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். இனி அடிக்கடி செல்வேன். ரைட்டா?// நிச்சயம் செல்லுங்கள்

      Delete
  3. சின்ன சின்ன விஷயங்களைக் கோர்த்து ஜஸ்ட் ரிலாக்ஸ் எனத் தந்து எங்களையும் ரிலாக்ஸ் ஆக்கிய உங்களுக்கு நன்றி சீனு!

    எதுக்கு இப்படி படம் போட்டு பயமுறுத்தறீங்க! என் படத்தைச் சொன்னேன்! :)

    குறும்படம் - மிக அழகு!

    ReplyDelete
    Replies
    1. //எதுக்கு இப்படி படம் போட்டு பயமுறுத்தறீங்க! என் படத்தைச் சொன்னேன்! :)// ஹா ஹா ஹா

      Delete
  4. ஜீவன் சுப்பு அசத்துகிறார்... அவருக்கு வாழ்த்துக்கள்... உங்களுக்கும் (செம பிகர்... வாழ்த்துக்கள் பல...)

    வெங்கட் நாகராஜ் அவர்கள் இளமையாக இருக்கிறார்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக... மிக எதார்த்தமாக எழுதுகிறார் சார்

      Delete
  5. திண்டுக்கல் பூட்டு மொத்தமாக வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளலாம்... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தேவை உங்க ஊர் பிரியாணி எப்ப வரட்டும்

      Delete
  6. ரெஜினா படத்தை பெரிதாக போட்ட போதே உள்ள என்ன எழுதியிருப்பீங்கன்னு யுகிச்சுட்டேன்..

    மிஸ்டர் அம்பாள் ஸ்டோர் சொன்னது ரொம்ப கரெக்ட்.. அவருக்கு ஒரு சல்யுட்..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இனி இவங்க ரெண்டு பேரு படத்தையும் மொதோ ஷோ போய் பாத்ருவோம்

      Delete
  7. //பெரும்பாலும் அவர் அவரையே கிண்டல் செய்து எழுதிய கட்டுரைகளே இடம்பெற்றுள்ளன.//

    மற்றவர்கள் உன்னை கேலியும், கிண்டலும் செய்வதைவிட அதை நீயே செய்து கொள்வது சாலச் சிறந்தது என்பதுதான் என் கருத்து. – கணேஷ் அண்ணாவின் கருத்தை வழிமொழிகின்றேன் .


    //"சைனா பொருட்களுக்கு வாரன்டியோ, கியாரண்டியோ கிடையாது,கண்டிப்பாக திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தயவுசெய்து வாங்குவதைத்தவிர்க்கவும்" என்று எழுதிப் போட்டிருந்தனர்.//

    வாழ்த்துக்கள் அம்பாள் “ஸ்(டோ)டார்” அய்யாவுக்கு .


    // பதிவர் சந்திப்பு //

    என்ன நண்பா , ஒயின்ஷாப் சுவத்துக்கு பின்னாடி எடுத்த போட்டா மாதிரி இருக்கு .
    ( ஹா ஹா...! சும்மானாச்சுக்கும் ஜாலிகோ ஜிம்கானா...! )


    // கவிதைக்கும் கட்டுரைக்கும் இடைப்பட்ட எழுத்து. //

    மறுபடியும் ஒரு அங்கீகாரம்- நன் அவன் இல்லை .


    //அவருக்கு பக்கத்துக்கு சீட்டில் அமர்ந்து இருப்பவர் சீட் பெல்ட் போடாததுபற்றி குறிப்பிடவில்லை. சீட் பெல்ட் போடாததும் குற்றம் :-) //

    கரக்ட் நண்பா . மூத்த நண்பர் ஒருவர் , சீட் பெல்டின் அவசியத்தை அழகாக உணர்த்தும் ஒரு வீடியோ அனுப்பி இருந்தார் . பின்னொருநாளில் பகிர்கின்றேன் பாருங்க.


    // மற்றபடி ரெஜினாவும் பிந்துமாதவியும் செம பிகர் //

    வழிகின்றேன் . ஓ சாரி... வழி(ந்து)மொழிகின்றேன் .


    //இனி சினிமா விமர்சனங்கள் எழுதுவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். எனக்குமிகவும் பிடித்த படமாக/ பிடித்த நடிகர்கள் நடித்த படமாக இருந்தால் விமர்சனம் எழுதவாய்ப்பு உள்ளது. மற்றபடி எனது சினிமா பார்வை ஜஸ்ட் ரிலாக்சில் தொடரும். //

    சூப்பர் . குட் டிசிசன் . இனிமே சினிமா விமர்சனம் எழுதுனா அதுக்குன்னு ஒரு பின்னூட்ட, ஒரு கவித(?) ரெடியா வச்சுருந்தேன் . இப்ப அதுக்கு வேல இல்ல .

    ReplyDelete
    Replies
    1. //வாழ்த்துக்கள் அம்பாள் “ஸ்(டோ)டார்” அய்யாவுக்கு .// அடடே அற்புதம்

      என்ன நண்பா , ஒயின்ஷாப் சுவத்துக்கு பின்னாடி எடுத்த போட்டா மாதிரி இருக்கு .
      ( ஹா ஹா...! சும்மானாச்சுக்கும் ஜாலிகோ ஜிம்கானா...! ) ஹா ஹா ஹா அது மா-அம்பலத்தின் ரயில் நிலையம்...

      //மறுபடியும் ஒரு அங்கீகாரம்- நன் அவன் இல்லை/// நீங்க இல்லை இல்லை என்று சொன்னாலும் அங்கீகரிக்கப் பட வேண்டிய எழுத்துக்கள்

      //வழிகின்றேன் . ஓ சாரி... வழி(ந்து)மொழிகின்றேன் .// என் இனமையா நீர் :-)

      //சூப்பர் . குட் டிசிசன் . இனிமே சினிமா விமர்சனம் எழுதுனா அதுக்குன்னு ஒரு பின்னூட்ட, ஒரு கவித(?) ரெடியா வச்சுருந்தேன் . இப்ப அதுக்கு வேல இல்ல ./// ஹா ஹா ஹா மிக்க நன்றி

      Delete

  8. //"சைனா பொருட்களுக்கு வாரன்டியோ, கியாரண்டியோ கிடையாது,கண்டிப்பாக திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தயவுசெய்து வாங்குவதைத்தவிர்க்கவும்" என்று எழுதிப் போட்டிருந்தனர்.//

    வாழ்த்துக்கள் அம்பாள் “ஸ்(டோ)டார்” அய்யாவுக்கு .

    ReplyDelete
  9. ரெஜினா ஆண்ட்டி படம் நன்று

    ReplyDelete
  10. அருமையான குறும்படம். பகிர்ந்தமைக்கு நன்றி. 'ஜஸ்ட் ரிலாக்ஸ்' தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அன்சைஸ் புத்தகம் இன்னும் படித்து முடிக்கவில்லை. விமர்சனத்தை ஒரு தனி பதிவாக எதிர்பார்த்திருந்தேன்.

    //வியாபாரம் கெட்டாலும் பரவாயில்ல, தரம் முக்கியம், சுதேசித் தயாரிப்பு முக்கியம்.// மனுஷன்யா...

    ப்ளாக் போட்டோவில் இருப்பதைவிட வெங்கட் நாகராஜ் மெலிந்து காணப்படுகிறார். பாலகணேஷ் சார், என்னையும் கூப்பிட்டிருந்தா வந்திருப்பேனே.. ஒரு விஷயம் கவனிச்சீங்களா, போட்டோல இடமிருந்து வலமா இறங்கு வரிசையில இருக்கீங்க...

    முதல்ல படிக்கும்போது எனது தம்பிக்கும் பதிவர் ஸ்கூல் பையனுக்கும் இடையில இருந்த கமாவை படிக்கலை.. ஹிஹி..

    கேடி பில்லா கில்லாடி ரங்காவை நானும் ஐநாக்ஸில் பார்த்தேன். இந்த மாதிரி மொக்கைப் படங்களைப் பார்த்ததை வெளியில் சொல்லக்கூடாது...

    மொத்தத்தில் ஜஸ்ட் ரிலாக்ஸ் அருமை...

    ReplyDelete
  12. ஜஸ்ட் ரிலாக்ஸ் நல்ல டைட்டில் சீனு கேடி பில்லா கில்லாடி ரங்கா பார்த்து விட்டேன் டைம் பாஸ்

    ReplyDelete