26 Apr 2013

கடவுள் வந்திருந்தார் - சுஜாதாவும் பாட்டையாவும்


பேஸ்புக் சாதாரணர்களையும் அசாதாரணர்களுடன் எளிதில் இணைத்துவிடுகிறது. பல பெரிய மனிதர்களுடன் எளிதில் தொடர்பு கொண்டுவிட முடிகிறது. 

ழுத்தாளர் மற்றும் இயக்குனர் சுகாவின் பேஸ்புக் மூலம் பாட்டையா பாரதிமணி அவர்களுடன் நட்பாக முடிந்தது. நட்பு என்பது சுகா மற்றும் பாட்டையாவுடன் ஒரே அறையில் உறங்கி, ஒரே தட்டில் உண்டு ப்ளா ப்ளா ப்ளா என்னும் படியான நட்பு அல்ல, "எனக்கு ஐ.ஜி யத் தெரியும் ஆனா அவருக்கு" எனும்படியான தெய்வீக நட்பு. இந்த தெய்வீகமான நட்பிற்குக் காரணம் பேஸ்புக் என்பதாலேயே அந்த முதல்வரியை எழுதினேன்.



பாட்டையா பேஸ்புக்கில் "கடவுள் வந்திருந்தார்" நாடகம் குறித்து பகிர்ந்திருந்த பொழுதே எப்பாடுபட்டாவது பார்த்தே தீருவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன், முதல் காரணம் நாடகாசிரியர் வாத்தியார் சுஜாதா, இரண்டாவது காரணம் சுகாவிற்கும் பாட்டையாவிற்கும் இடையே நிகழும் பேஸ்புக் புகழ் நெல்லைத் தமிழ் உரையாடல்.

நாடகங்கள் மீது தீராக் காதல் கொண்ட மெட்ராஸ் பவன் சிவக்குமாரும், வாத்தியார் மின்னல் வரிகள் பாலகணேஷுக்கும் வரமுடியவில்லை, அதற்கு முக்கிய காரணம் நாடகம் அரங்கேறிய தினம் சென்னை அசுரத்தனமாக இயங்கக் கூடிய வேலை தினம். கணேஷ் சார் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார் அலுவல் இடம் கொடாததால் அவரால் வரமுடியாமல் போயிற்று. இதைப் போல் நாடகத்தைத் தவற விட்ட சுஜாதா மற்றும் பாட்டையாவின் ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். பாட்டையா இதை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது என் முதல் விண்ணப்பம். (வார இறுதியில் அனைத்து நாடக அரங்கங்களும் நிறைந்துவிட்ட காரணத்தால் வாரநாளில் நாடகம் அரங்கேற்றப்பட்டது என்பது செவி வழித் தகவல்). 

னது வேலை நேரத்தை மாற்றி அமைத்துக் கொண்டு எக்மோர் நோக்கி பயணிக்கத் தொடங்கினேன். சுமார் 35 கி.மீ. எப்படி பயணித்தேன் என்பதை எழுதினால் அது நாடோடி எக்ஸ்பிரஸாக மாறிவிடும் அபாயம் உள்ளதால் கடவுளை சந்திக்கக் கிளம்பி விடுவோம் .       

எனது தங்கை ஸ்ரீ எனக்கு முன்னமே அரங்கத்தை அடைந்திருந்ததால், அரங்க மையத்தில் வசதியான ஒரு இருக்கை கிடைத்தது. வாழ்க ஸ்ரீமதி. அரங்கம் முழுவதும் பெரும்பாலும் இளைஞர்களாலேயே நிறைந்திருந்தது. ஆரம்பம் முதலே அரங்கம் நிறையத் தொடங்கியிருந்தது. பிரிடீஷ் அரசாங்கத்து கட்டடம், கட்டட அமைப்பு, உள்ளரங்க அமைப்பு, அசந்துவிட்டேன், அத்தனை அருமையாக இருந்தது. எதோ ஒரு அரண்மனை அரங்கத்தில் அமர்ந்து நாடகம் பார்ப்பது போன்ற உணர்வு.

ரியாக ஆறரை மணிக்கு அரங்கினுள் கடவுள் வரத் தொடங்கினார். ஸ்ரீனிவாசனாக பாரதிமணி, அவர்தான் கதையின் நாயகன். பொருத்தமான பாத்திரம் மற்றும் உடலமைப்பு.   

சுருக்கமாக கதை சொன்னால், ரிட்டயர் ஆகி வீட்டில் இருக்கும் ஸ்ரீநிவாசன், சினிமா மற்றும் டிவி பைத்தியமான மனைவி மற்றும் மகள் வசு , மகளை டாவடிக்கும் மாடி வீட்டு சுந்தர். வசு சுந்தரை வெறுக்கிறாள் காரணம் அவள் அவளது அலுவலக மானேஜரை விரும்புகிறாள், இதை அறிந்து சுந்தர் செய்யும் கலாட்டா. இந்த கல்யாணத்தை தடுப்பதாக சொல்லி சவால் விடுகிறான். இப்படி ஆரம்பமாகிறது கதை.

வ்வேளையில் சுந்தர், சுஜாதா என்னும் பெங்களூர் தமிழ் எழுத்தாளர் எழுதிய எதிர்கால மனிதன் என்ற புத்தகத்தை ஸ்ரீனிவாசனுக்கு கொடுக்க, ஸ்ரீநிவாசன் அதைபடிக்கும் பொழுதே எதிர்கால மனிதன் இவர் முன் பறக்கும் தட்டில் வந்து இறங்குகிறான்.

திர்கால மனிதனை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதை பற்றி சுஜாதா எழுதியிருக்கும் அந்த வாசகம் மிக அருமை, கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால்  எதிர்கால மனிதனை நாம் சந்திபதற்குக் கூட வாய்ப்பு இருக்கிறது. 

விஞ்ஞான வளர்ச்சியில் மனிதன் கால எந்திரம் கண்டுபிடிக்கலாம், ஒருவேளை கண்டுபிடித்தால் அவன் இறந்த காலத்திற்கு வரும் பொழுது நம்மை சந்திக்க வாய்ப்பு கிடைக்கலாம், அதாவது நம்மால் அவனை இப்போது சந்திக்க முடியாது, ஆனால் அவனால் அப்போது நம்மை சந்திக்க முடியும்.               



ப்படி சந்திக்க முடிந்த எதிர்கால மனிதனை ஸ்ரீனிவாசனால் மட்டுமே பார்க்க முடியும் பேச முடியும், தொட முடியும், அவன் உட்கொள்ளும் கரண்டை ஷாக்காக தன்  உடம்பில் வாங்கிக் கத்த முடியும். இதனால் எதிர்கால மனிதனுடன் ஸ்ரீநிவாசன் பேசும் பொழுதெலாம் அவரைச் சுற்றி நிற்பவர்கள் இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ என்று நினைக்கிறார்கள்.

குடும்பத்திற்குள் பல குழப்பம் எழுகிறது, இதைத் தவிர்க்க  எதிர்கால மனிதனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். ஒரு மணி அடித்தால் வீட்டினுள் வர வேண்டும், இரண்டடித்தால் போய்விட வேண்டும். இதை சுந்தர் கவனித்து விட, சுந்தரிடம் மட்டும் உண்மையைக் கூறுகிறார். அவன் நம்ப முடியாமல் நம்புகிறான்.       




ந்நேரத்தில் வசுவின் மேனேஜர் அவளைப் பெண்பார்க்க குடும்பத்துடன் வருகிறான். சுந்தர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஒரு சுட்டிக் குழந்தையின் மூலம் மணியடித்து எதிர்கால மனிதனை காட்சிக்குள் கொண்டு வர, ஸ்ரீனிவாசன் அவனை வெளியே போகுமாறு திட்ட, பெரும் ரகளையாகிறது. நிச்சயதார்த்தம் தடையாகிறது. பைத்தியம் முற்றிவிட்டது என்று நினைத்து சாமியார் வைத்து மந்திரிக்கிறார்கள், மருத்துவர் வைத்து வைத்தியம் பார்கிறார்கள், ஆனால் சுந்தர் புத்திசாலித்தனத்தால் எதிர்கால மனிதனைக் கொண்டு மக்களின் மூடத்தனத்தை மூலதனமாக மாற்றி ஸ்ரீனிவாசனை சாமியாராக்கி விடுகிறான். கிளைமாக்ஸ் என்ன என்பது சஸ்பென்ஸ்.

சுஜாதாவின் அறிவியல் புதினம் சார்ந்த நாடகம்.  ட்ரேட்மார்க் வசனங்கள் இருக்கும் கலகலப்பான நாடகம். போகிறபோக்கில் மக்களின் மூடநம்பிக்கைகளை அற்புதமாக நையாண்டி செய்திருப்பார்.

ரு மேடை நாடகத்தை எப்படி திறம்பட எழுத வேண்டும் என்பதற்கு இந்நாடகம் மிக சிறந்த உதாரணம். காரணம் மொத்த நாடகத்தையும் ஒரே ஒரு அறையில் நடப்பது போல் எழுதியிருப்பார் சுஜாதா.       

நாடகம் படிக்க கொஞ்சம் பிரம்மிப்பாய் இருந்தாலும் பாட்டையா தனது குழுவினருடன் அசத்தியுள்ளார். இந்த வயதிலும் மனிதர் மிக மிக சுறுசுறுப்பாக மேடையில் ஆடியோடுகிறார். கதாபாத்திரங்கள் அத்தனைபேரும் அசத்தலாக அதனுடன் பொருந்திப் போகின்றனர். ஒலி ஒளி அமைப்புகள் குறைவில்லை, தங்கள் பணியை திறம்பட செய்துள்ளனர். மேடை அமைப்பு எளிமையாக அருமையாக இருந்தது. நாடகத்தில் இடைவேளை விட்டதை முதல்முறையாக இங்குதான் பார்த்தேன்.

திர்கால மனிதனாக வந்த ஜோ, மாடி வீட்டு சுந்தர், சுட்டிக் குழந்தையாக வந்த சிறுமி இவர்களது நடிப்பை வெகுவாய் ரசித்தேன். சாமியாரை வந்தவரது உடல்மொழி கச்சிதம். 

நாடகத்தில் எதாவது ஒரு இடத்தில வசனம் மறந்தாலோ மாறினாலோ காட்சி அமைப்பு சொதப்பி விட வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சொதப்பல் இங்கு இல்லை, நான் கவனித்த வரையில் ஒரே ஒரு இடத்தில ஒருவர் மட்டும் தடுமாறினாலும் அடுத்த நகர்வுகள் கச்சிதமாக நகரத் தொடங்கிவிட்டது. பல இடங்களில் பல வசனங்களில் அரங்கமே கைதட்டி அதிர்ந்தது. நாடகத்திற்கு பாதி பலம் சுஜாதா என்றால் மீதி பலம் பாட்டையாவும் அவரது குழுவினரும் தான்.



நாடகம் முடிந்ததும் மொத்த அரங்கமும் எழுத்து நின்று பாட்டையா குழுவினரை வாழ்த்தியது தான் பாட்டையாவுக்குக் கிடைத்த உண்மையான மகத்தான வெற்றி. 

பாட்டையா மற்றும் சுகாவை சந்திக்கலாமா என்று நினைத்தேன், நாடகம் முடியும் பொழுது மணி ஒன்பதைக் கடந்திருந்தது. ஸ்ரீ ஹாஸ்டல் செல்ல வேண்டும், நான் மேடவாக்கம் செல்ல வேண்டும், காலம் ஒத்துழையாததால் மானசீகமாக சந்தித்து விட்டு கிளம்பினோம்.     

நாடகம் நடக்கும் பொழுதும், முடிந்து வெளியே வந்த பின்னும் ஸ்ரீ அவ்வப்போது கூறிக் கொண்டே இருந்தாள் "வாவ் சூப்பர்". இந்த நாடகத்தை சுஜாதா பார்த்திருந்தாலும் நிச்சயம் சொல்லி இருப்பார் "வாவ் சூப்பர்".


18 comments:

  1. சுவாரஸ்யமான ரசனையான விமர்சனம்... வாழ்த்துக்கள் சீனு...

    திருமதி தமிழ் மறந்திருக்கும் என்று நினைக்கிறேன்... அதற்காக தி.த.தலைவர் மெட்ராஸ் பவன் அவர்களை அழைத்து செல்லாமல் இருப்பது நியாயமா...? ஹிஹி...

    ReplyDelete
  2. muthal nadaga anubavum- migavum arumai..... intha pativai pola.....pimbamum asalai pola vey irunthuthu...valthukal seenu

    ReplyDelete
  3. Dear Mani
    My Best Wishes to you and your team. I really missed it. I hope next time whenever you stage this play kindly let me know.
    With warm warm regards........mahadevan

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம். புத்தகமாகப் படித்திருக்கிறேன். வைத்திருக்கிறேன்!

    ReplyDelete
  5. சீனு எனக்கும் நாடகம் பார்ப்பது ரொம்ப பிடிக்கும் சுஜாதா நாடகம் என்பதால் இன்னும் ஆர்வமுண்டு.எனக்கு சொல்லியிருந்தீர்களானால் கண்டிப்பாக நான் வந்திருப்பேன் அடுத்து எப்போது நடக்கிறது என்பதை முடிந்தால் தெரியபடுத்தவும்

    ReplyDelete
  6. முன்பு பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள் இந்த நாடகத்தையும் அப்பா நாடகத்தையும் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் போட்ட போது பார்த்திருக்கிறேன்.

    நீங்கள் பார்த்து அருமையாக விமர்சனமும் எழுதிவிட்டீர்கள்.

    சுஜாதா சாரின் வசனம் மிகவும் நறுக்கென்று இருக்கும்.திரு பாரதி மணி ஐயாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.ரசனை மிகுந்த மனிதர்.நாடகம் சிறப்பாக இருந்ததில் அதிசயமே இல்லை.

    ReplyDelete
  7. Great review! நாங்களும் பார்த்தோம் இரண்டாவது நாள்! கன ஜோர். என் விமர்சனம் இதோ - http://ananyathinks.blogspot.in/2013/04/is-god.html

    ReplyDelete
  8. அருமையான நாடகத்துக்கு மிகவும் அருமையாக விமரிசனம் எழுதி, எங்களுக்கும் பார்க்கும் ஆசையை தூண்டிவிட்டிருக்கிறீர்கள்.



    ReplyDelete
  9. நான் நாடகங்கள நேர்ல பார்த்ததே இல்ல, அடுத்த முறை என்னையும் சேர்த்து பிளான் பண்ணுங்க.

    ReplyDelete
  10. அருமையான விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  11. எவ்வ்வ்வளவோ ஆசைப்பட்டு வர முயற்சித்தாலும், அந்த இரண்டு தினங்களில்தானா எனக்கு இத்தனை வேலைகள் வந்து கழுத்தைப் பிடிக்க வேண்டும்? மிக வருந்திய விஷயம் சீனு! உங்கள் விமர்சனம் பார்த்ததும் தான் சற்றே இளைப்பாறுதல் கிடைத்தது. சுஜாதாவின் கதைப் பின்னலும், வசனங்களும்... ஹப்பா! அதிலும் அந்தப் பெண் பார்க்க வருகிற காட்சி இருக்கிறதே... ‌ஜோ, சீனிவாசராவின் வேட்டியை உருவுவதும், அவர் அலறுவதும், இவர் ‘உடற்பயிற்சி செஞ்சு போடறோம்’ என்பதும்.. சிரிச்சு மாளாது! பாட்டையா குழுவினர் அருமையாகச் செய்திருப்பதை அறிந்து கொண்டேன். நானும் கைதட்டி வாழ்த்துகிறேன்! (அவரையும், சுகாவையும் பாக்கறது பெரிய கஷ்டமில்ல சீனு. எப்ப ஃப்ரீன்னு சொல்லுங்க. பாத்திரலாம்!)

    ReplyDelete
  12. எனக்கு நாடகம் பிடிக்கும். சுஜாதாவின் நாடகங்கள் ரொம்ப சுமார் ரகம் என்பது என் கருத்து - அத்தனையும் படித்திருக்கிறேன் - ஆனாலும் இதை நாடகமாக்கிய விதம் பற்றிப் பார்த்து தெரிந்து கொள்ள ஆசை. வாய்ப்பு கிடைக்காமலா போகும்?

    ReplyDelete
  13. மிக விரிவாக விவரித்ததற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  14. படங்கள் ரொம்ப நன்றாக வந்துள்ளதே. அங்கேயே எடுத்ததா?

    அப்பாதுரை போல எனக்கும் நாடகம் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு. 25 வருடங்களுக்கு முன் திருவிழா சமயத்தில் வள்ளி திருமணம் பார்த்தது தான்.

    ReplyDelete
  15. தல இந்த மாதிரி ஒரு நல்ல பொழுதில் நானும் உங்களோடு இருக்க விரும்புகிறேன் ..
    அடுத்த முறை செல்லும் பொது சொல்லாமல் சென்றால் மேடவாக்கத்தில் ஒரு கொலை நிச்சயம் ... எழுதிய நடை சிறப்பா இருந்துச்சி ... இப்படி கலந்து கட்டி எழுத வாழ்த்துக்கள் தலைவரே

    ReplyDelete
  16. அசத்தலான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்...

    ReplyDelete