24 Apr 2013

திருநவேலி அல்வா

"எம்மா திங்கதுக்கு ஏதாது இருக்கா"

"ஒன்னுமே இல்ல , வேணும்னா போய் ஆளுக்கு அம்பது அல்வாவும் மிச்சரும் வாங்கிட்டு வா"

வீட்டிலிருந்து பழைய ஆஸ்பத்திரி லாலா கடை நோக்கி கால்கள் வேகமாக நடக்கும் அல்லது ஓடும். கடையை அடைந்தது மூச்சு வாங்கிக் கொண்டே... 

"அல்வா சூடா இருக்கா, நேத்து செஞ்ச அல்வான்னா வேணாம்ன்னே "

"அந்த அல்வா நேத்தே காலியாயிட்டுடே, இத இப்ப தான் அடுப்புல இருந்து இறக்கியிருக்கேன், சுட சுட இருக்கு, பாரு எப்படி ஆவி பறக்குன்னு"

"அப்டியே அம்பது மிச்சரும் குடுங்க, அல்வா நாலு மிச்சர் நாலு"

வாழை இலையை சரக்கென்று கிழித்து, கைகளாலேய அளவெடுத்து கரண்டியில் அள்ளிய அல்வாவை அதற்கென்றே கிழித்த வாழை இலையில் வைத்தால் தராசு மிகச் சரியாக அம்பதைக் காட்டும். அந்த இலையை அப்படியே ஒரு தினசரியின் வயிற்றுக்குள் வைத்து சுருட்டி பொட்டலமாக்கி அதன் காதை திருக்கி மடித்தார் என்றால் அல்வா பொட்டலமாகியிருக்கும்.   


வீட்டிற்கு வந்து சூடாக இருக்கும் அந்த அல்வா பார்சலை பிரிக்கும் பொழுதே கை கொதிக்கும். தினமலரையோ தினத்தந்தியையோ கொண்டு சுருட்டப்பட்ட அல்வா பொட்டலம், அதனுள் சுருட்டபட்ட வாழை இலை, அதனுள் வழுவழு அல்வாகொஞ்சம் வேகமாக வாழை இலையைப் பிரித்தால் அவ்வளவு தான் ஆசையாக வாங்கிய அல்வா நழுவி தரையில் உருளத் தொடங்கி விடும்.


ருவேளை நழுவாமல் கையில் சிக்கிய அல்வாவை எடுத்த வேகத்தில் வாயில் வைத்தாலும் அவ்வளவு தான், அல்வாவின் சூடு மொத்தமாக நாக்கைப் பதம் பார்த்துவிடும்ஐந்து நிமிடத்திற்கு வாயைத் திறந்து காத்தாட நின்றால் மட்டுமே சூடு குறையும்.

ல்வாவின் சூடு தாங்காமல் வாழை இலையின் நிறமே மாறி இருக்கும்அல்வாவின் மணமும், சுடசுட கட்டியதால் ஏற்பட்ட வாழை இலையின் மணமும் மனதை என்னவோ செய்யும். அல்வாவின் சுவை வாழை இலையிலும், வாழை இலையின் சுவை அல்வாவிலும் ஒட்டிக் கொண்டு விடும். இப்போதெல்லாம் எந்தக் கடையிலுமே வாழையில் அல்வா தருவதில்லை. பிளாஸ்டிக் தாளில் தான் தருகிறார்கள். வாழை இலை அல்வா சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிறது. ஆனால் அதன் சுவை மட்டும் இன்றும் நினைவில் பசுமையாக இருக்கிறது.      

ல்வாவை சைடிஷ் இல்லமால் சாப்பிட்டால் சுவை நன்றாய் இருக்காதுஅல்வாவைப் பிரிப்பதற்கு முன், வாங்கிவந்த மிச்சரை முதலில் பிரிக்க வேண்டும். கொஞ்சம் அல்வாவைப் பிய்த்து மிச்சரில் நன்கு புரட்டி, மிச்சரில் இருக்கும் சகலவிதமான வஸ்துகளும் அல்வாவின் முதுகில் ஏறிக் கொண்டபின் மொருமொருமென்று அந்த அல்வாவை சாப்பிட்டால் அதன் ருசியே தனி தான்.  

ம்பது அல்வா என்ன, கால்கிலோ அல்வாவைக் கூட தயங்காது சாப்பிடலாம் திகட்டவே திகட்டாது. அல்வா திகட்டக்கூடது என்பதற்காகவே வந்த ஆபத்பாந்தவன் தான் மிச்சர்.

கொஞ்சம் பெரியவனாகி மேல்நிலைப் வகுப்பு சென்ற பொழுது வீட்டில் அனுமதி வாங்கி அல்வா சாப்பிடும் நாட்களும் மலையேறிவிட்டது. அல்வா சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலே எதாவது ஒரு லாலா கடைக்கு சென்று விடுவோம். டீ கடையில் வடை பஜ்ஜி சாப்பிடுவது போல் தான் லாலா கடையில் அல்வா சாப்பிடுவது, வீட்டிற்கு வாங்கி வந்து தான் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை, சுட சுட கடை வாசலிலேயே நின்று சாப்பிடலாம்இன்றும் கூட நெல்லையில் பல கடைகளின் வாசலில் அல்வா சாப்பிடுபவர்களைப் பார்க்கலாம்

முன்பெல்லாம் அல்வா சாப்பிட்டு முடித்தவுடன், கை நிறைய ஒரு கொத்து மிச்சரையும் தருவார்கள், சில வருடங்களுக்கு முன்பு வரை நாமே கேட்டால் மட்டுமே முகம் சுளித்துக் கொண்டு தருவார்கள், இன்றோ காசு கொடுத்தால் மட்டுமே ஒரு கொத்து  மிச்சர்  கிடைக்கிறது

ஜாருக்கு சென்றால் பெரும்பாலும் பெரிய லாலா கடைக்கு சென்று அல்வா சாப்பிடாமல் திரும்பியது இல்லைதென்காசி பெரிய லாலா கடை அல்வாவை விரும்பி வாங்கி செல்பவர்கள் அதிகம். எப்போதுமே பெரிய லாலா கடையில் கூட்டம் மொய்த்துக் கொண்டுதான் இருக்கும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கூட அல்வா ஏற்றுமதி செய்வதாக சொன்னார்கள், அதைப்பற்றி எனக்கு தெரியவில்லை

ருட்டுக்கடை அல்வாவோ அல்லது நெல்லையில் இருந்து வாங்கி வந்த  அல்வாவோ அவற்றை  நள்ளிரவில் அரை தூக்கத்தில் சாப்பிட்ட நாட்களே அதிகம். வீட்டில் இருந்து யாராவது நெல்லை சென்றாலே அன்று வீட்டிற்கு அல்வா வரப்போவது நிச்சயம். அல்வாவின் சூடு தணியும் முன் சாப்பிட வேண்டும் என்பதற்காக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கூட எழுப்பி அல்வா ஊட்டிவிட சாப்பிட்ட நியாபகங்கள் இருக்கிறது.   

த்யா அண்ணனுடன் ஒருமுறை குற்றாலம் சென்றிருந்த பொழுது குற்றாலநாதர் கோவிலுக்குப் அருகே இருக்கும் முதல் சந்தில் இரண்டாவதாக இருக்கும் வெங்கடேஸ்வரா அல்வா கடைக்கு அழைத்துச் சென்றார்குற்றால சீசனில் குளித்துவிட்டு சூடாக நெய் அல்வா சாப்பிட்டால் எவ்வவளவு அருமையாக இருக்கும். இன்றுவரை குற்றாலம் சென்றால் வெங்கடேஸ்வரா நெய் அல்வா கடையில் சாப்பிடாமல் திரும்புவது கிடையாது. மெயின் பால்ஸ் அருகே பல வெங்கடேஸ்வரா நெய் அல்வா கடை உள்ளது, நான் கூறிய கடையில் மட்டுமே சுவை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அல்வாவை கையில் கொடுக்கும் பொழுதே குற்றால அருவி போல் நெய் வழிந்தோடும்.    

நெல்லை அல்வா என்றவுடன் அனைவருக்கும் நியாபகம் வருவது இருட்டுக்கடை அல்வா மட்டுமே, ஆனால் நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும் நெல்லையில் எங்கு அல்வா வாங்கினாலும் அதன் சுவை கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். வெளி மாவட்டத்தவர்களால் இருட்டு கடை அல்வாவையும் மற்ற கடைகளின் அல்வா சுவையையும் எளிதில் பிரித்தறிந்து விட முடியாது.  

ருட்டுக்கடை அல்வாவை விட பலருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா பிடிக்கும், சிலருக்கு லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வா மட்டுமே பிடிக்கும்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தினுள் நுழைந்தாலே மிகவும் காமெடியாக இருக்கும், பத்தடி நடப்பதற்குள் பத்து சாந்தி ஸ்வீட்ஸ் பார்த்து விடலாம். ஓம் சாந்தி, ஸ்ரீ சாந்தி, நியூ சாந்தி, ஹாய் சாந்தி, ஒரிஜினல் சாந்தி, புராதன சாந்தி என்று புதிய பேருந்து நிலையம் முழுவதுமே சாந்தி மயமாகத் தான் இருக்கும், பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் சென்றால் யார் கண்ணிலும் படமால் அழுக்குப் படிந்து ஒரு போர்ட் தொங்கிக் கொண்டிருக்கும் "எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, நம்பி ஏமாற வேண்டாம்" என்று. சாந்தி ஸ்வீட்ஸில் அல்வாவை விட அவர்கள் தயாரிக்கும் மைசூர்பாகு மிக நன்றாக இருக்கும்.

ல்வாவை மருத்துவ குணத்துடனும் பார்ப்பது உண்டு, வயிறு சரியில்லாமல் நான்ஸ்டாப் என்றால் மருத்துவர்கள் கூட பரிசீலிப்பது அம்பது கிராம் அல்வா

ல்வா இருபது நாட்களுக்குக் கூட கெடாமல் இருக்கும். டால்டாவில் செய்து இருந்தால் மூன்று நாட்களுக்குள் மேலே வெள்ளை நிற கோட்டிங் வந்துவிடும், தோசைக் கல்லில் போட்டு சுட வைத்து சாப்பிட்டால் அதுவும் வித்தியாசமான சுவை தான்.

சென்னை கல்லூரியில் சேர்ந்த பின் எப்போது ஊருக்கு சென்றாலும் தவறாது அல்வா வாங்கி வர வேண்டி இருக்கும். சில முறை பதினைந்து கிலோ வரை அல்வாவை சுமந்து வந்திருக்கிறேன். ஊரில் இருந்து யார் வீட்டிற்கு வந்தாலும் அல்வா இல்லமால் படியேறுவதில்லை என்பதால் பெரும்பாலும் வீட்டில்  அல்வா ஸ்டாக் இருந்து கொண்டே இருக்கும்


வடியில் ஒரு சூப்பர் மார்கெட்டில் லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வாவைப் பார்த்தேன், முகவரி கூட பழைய பேருந்து நிலையம், நெல்லை என்று தான் போட்டிருந்தது. பேக்கிங் ஆகி இருநாட்கள் என்றுகூறியதுஅல்வா சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது என்றதால் கால் கிலோ வாங்கி சென்றேன், ஆசையாக அந்த அல்வாவைப் பிரித்தவுடன் கண்டு பிடித்து மனம் வெறுத்தேன் அது லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வா இல்லை போலி என்று.

பெரும்பாலும் அல்வா கருஞ்சிவப்பு நிறத்தில் தான் இருக்கும் இதுவோ நல்ல ரோஸ் கலரில் இருந்தது, இருந்தும் அல்வா ஆசை தணியாததால் லேசாக பிய்த்து வாயில் வைத்தேன், ஷப்ப்ப்பா வாந்தி வராத குறை. வாழ்கையில் முதன் முறையாக ஊசிப்போன அல்வாவை வாயில் வைத்தது அன்று தான். வாழ்க சென்னை!   

பின்குறிப்பு :



26 comments:

  1. இப்படியா அல்வாவைப் பற்றி கிளப்பிவிடுறது... சாமீ... முடியலே...

    மதுரை டவுன்ஹால் கடையிலும் இப்படித்தான்... கூட்டமும் + சுவையும்...

    ReplyDelete
    Replies
    1. மதுரை டவுன் ஹால் சாப்பிட்டது இல்ல சார், என்னிகாது வாய்ப்பு கிடைக்குமான்னு பாப்போம்

      Delete
  2. ஒரே அல்வா நினைவுகளாக இருக்கு. மதுரை தங்க ரீகல் தியேட்டர் எதிரேயும் இப்படிச் சுடச்சுட அல்வா வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். எனக்குத்தான் அல்வா பிடிப்பதில்லை. மதுரையின் 'ஹேப்பி மேன்' முந்திரி அல்வா ரொம்பப் பிரபலம். முந்திரியில் கொஞ்சம் அல்வா இருக்கும்! சாப்பிட்டதில்லை இதுவரை என்றால் கட்டாயம் ஒருமுறை முயற்சிக்கலாம்! காஸ்ட்லி. அது கூட இப்போது அலுத்து விட்டது! தஞ்சையில் சாந்தி ஸ்வீட் பார்த்திருக்கிறேன்...70 களில்!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாளா எழுதணும்ன்னு நினைத்த நினைவுகள் சார், இன்னிக்கு ரொம்பவே நியாபகம் வந்தது அதனால் வந்த விளைவு :-)

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  4. நாகையில், கடைத் தெருவில், ஜெ மு சாமி ஜவுளிக் கடை வாசலில், சாயந்தர நேரங்களில், ஒருவர் அல்வா செய்து கொண்டு வந்து விற்பார். வந்து அமர்ந்தவுடனேயே ஹாட் சேல்ஸ். முழுப் பாத்திரம் அல்வாவும் விற்றுத் தீர்ந்துவிடும், சுவையான, சூடான அல்வா. இது அறுபதுகளில் நடந்த வியாபாரம்.

    ReplyDelete
    Replies
    1. நாகையில் கூட அல்வா சூப்பரா இருக்குமா, புதிய தகவல் சார்...

      Delete
  5. நல்லா அல்வா கொடுத்திருக்கீங்க சீனு. :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அல்வா கொடுக்க வேண்டிய நேரத்துல கொடுக்காட்டா தப்பாயிருமே சார்

      Delete
  6. அல்வாவிற்கு இணையான சுவையுடன் அழகான எழுத்து நடையில் கலக்கிட்ட சீனு . வாழை இலையில் அல்வாவை ஒரு முறை சுவைத்திருக்கிறேன் அது அமிர்தம் . சூப்பர் ....! படிக்க படிக்க நாக்கில் எச்சில் ஊருகிறது .

    //வாழை இலையை சரக்கென்று கிழித்து, கைகளாலேய அளவெடுத்து கரண்டியில் அள்ளிய அல்வாவை அதற்கென்றே கிழித்த வாழை இலையில் வைத்தால் தராசு மிகச் சரியாக அம்பதைக் காட்டும். அந்த இலையை அப்படியே ஒரு தினசரியின் வயிற்றுக்குள் வைத்து சுருட்டி பொட்டலமாக்கி அதன் காதை திருக்கி மடித்தார் என்றால் அல்வா பொட்டலமாகியிருக்கும். //

    சபாஷ் ...! அட்டகாசமான நடை ...! தேர்ந்தெடுத்த வார்த்தைகள் அழகு ...!
    நடையை விட்டுவிடாதே சீனு ....!

    ReplyDelete

  7. உங்கள் பதிவைப் படித்ததும் திருநெல்வேலிக்கே போய் அல்வா சாப்பிட்டது போல் இருந்தது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. "சுவை" யான பதிவு!!

    ReplyDelete
  9. நெல்லையி்ல் நான் வாழ்ந்த காலங்களில் சுடச்சுட அல்வா சாப்பிட்டு விட்டு, ‘‘கொஞ்சம் காரம் தாங்கண்ணா’’ என்றால் முகம் சுளிக்காமல் கை நிறைய மிக்ஸர் அல்லது காராசேவைத் திணிப்பார்கள். இப்ப திருநவேலிக்காரங்க மனசும் மாறிட்டுதா என்ன...? போய்த்தான் பாக்கோணும்! என்னையும் கொஞ்சம் ப்ளாஷ்பேக்குக்குள்ள இழுத்துட்டுப் போய் நாவில் நீர் ஊற வெச்சுட்டே சீனு!

    ReplyDelete
  10. மோகன் குமார் பதிவ பகிர, ஒரு பதிவே எழுதி கலக்கிட்டிங்க.

    ReplyDelete
  11. தம்பி அல்வா பற்றிய பதிவு அருமை ...
    அப்படியே அல்வா கொடுத்த மேட்டரையும் போட்டிருந்தா சுவையா இருந்திருக்கும் .. விரைவில் வருமென்று நம்புகிறேன் ...

    ReplyDelete
  12. யோவ், நான் உமக்கு அசைவப் பசியைக் கிளப்பியது போல நீர் எனக்கு அல்வா பசியைக் கிளப்பிவிட்டீரே... அசைவம்னாலும் பக்கத்துல போய் சாப்பிட்டுக்கலாம். அல்வாக்கு எங்க போறது?

    திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையத்துக்கு வெளியே சாந்தி ஸ்வீட்ஸ் இருக்கிறது. நான் சொல்வது பதினைந்து வருஷத்துக்கு முன்பு, இப்போ இருக்கிறதா தெரியவில்லை. 1997_98 களில் நான் ஊருக்குச் செல்ல்லும்போது வாரா வாரம் ஒரு கிலோ வாங்கிச்செல்வேன். என்னவோ இந்தப்பதிவைப் படித்ததும் அந்த ஞாபகம் வந்துவிட்டது...

    ReplyDelete
  13. நல்ல ஞாபகங்கள்.. எங்கள் ஊரில் வேலாயுத நாடார் கடையில் அல்வா சூப்பராக இருக்கும்.. நான் சிவகாசியில் இருந்தவரை தினமும் அந்தக்கடை பக்கோடாவும் அல்வாவும் உண்டு.. இப்போதும் வீட்டிற்கு செல்லும் போது நிச்சயம் உண்டு.. திண்டுக்கல் தன்பாலன் அண்ணன் சொன்னது போல், மதுரை டவுன் ஹால் ரோட்டின் ஆரம்பத்தில் இருக்கும் கடையில் எப்போதும் கூட்டம் உண்டு..
    ஐயோ அல்வா ஞாபகத்த கொண்டு வந்துட்டீங்களே.. நான் இப்ப ஒடனே சாப்பிடணுமே.. எதாவது வழி சொல்லுங்க நண்பா..

    ReplyDelete
  14. வயசான எங்களை இப்படி கிளப்பிவிட்டு வேடிக்கை பார்க்கலாமா?

    ReplyDelete
  15. ஏம்ல அல்வா பத்தி பதிவை மட்டும் போட்டு எங்களுக்கு "அல்வா' கொடுக்கும் பதிவாளர்களுக்கு கடும் கண்டனம். ஏம்ல அல்வா பத்தி மட்டும் எழுதினா போதாதா அதை சூடா அப்படியே வாங்கி சாப்பிட்டுவிட்டு மிக்ஸரையும் கொஞ்சம் அள்ளி போட்டுவிட்டு என்று வர்ணிக்கவும் வேண்டுமா? ஏம்ல எங்க வைத்தெரிச்சலை கிளப்புறீங்க..

    மோகன் குமார் நேற்று அல்வா பத்தி சொல்லி ஆசையை தூண்டி விட்டார் அதனால் இன்று கடைக்கு போய் அல்வா வாங்கி சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்தால் நீங்கள் இப்படி ஒரு பதிவை போட்டு இந்தியாவிற்கு வரும் ஆசையை தூண்டி இருக்கிறீர்கள் இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிப்புட்டேன்,

    ReplyDelete
  16. //அம்பது அல்வா என்ன, கால்கிலோ அல்வாவைக் கூட தயங்காது சாப்பிடலாம்//

    அரை கிலோ அல்வாவை தயங்காது, கலங்காது சாப்பிட்ட நான் சாட்சி! :) நெல்லை சென்று அல்வா வாங்க நண்பருடன் கடைக்குச் சென்றபோது, ருசி பார்க்க ஆரம்பித்து அரை கிலோ அல்வா நானும், அரை கிலோ அல்வா அவரும் அங்கேயே சாப்பிட்டு வீட்டிற்கு இரண்டு கிலோ பார்சல் வாங்கிக் கொண்டு வந்தது மனதில் வந்து “இப்பவே அல்வா வேணும்”னு கேட்க ஆரம்பித்து விட்டது. தில்லியில் நெல்லை அல்வாவுக்கு எங்கே போவது!

    ReplyDelete
  17. அல்வா!!
    இது போலவே திருவையாறில் பேமஸ் அசோகா அல்வா!

    ReplyDelete
  18. என்ன திடீர்னு திருநெல்வேலி அல்வா இப்படி அல்லாடுதுனு பார்த்தேன்..
    நீங்க சொல்றதைப் பார்த்தா இருட்டுக்கடையை விட பேமஸ் அல்வாக்களும் இருக்காப்புல தெரியுதே?

    திருவையாறு அசோகா அல்வா தேடிப்போயும் கிடைக்கவில்லை குட்டன்..

    ReplyDelete
  19. போலி சாந்தி லாலா கடை பத்தி சொன்னீங்க , ஜங்ஷன்-ல இருட்டுக்கடை அப்டின்னு பெரிய போர்டு வச்சு ஒரு போலி கடை கூட வந்துட்டு .

    ReplyDelete
  20. பகிர்வுக்கு நன்றி. இன்று வலைச்ச்ரத்தில் பகிர்ந்துள்ளேன்.

    ReplyDelete
  21. Dublicates unable to (cannot) give same irutukadai Halwa taste.

    ReplyDelete