1 Jan 2013

ஜஸ்ட் ரிலாக்ஸ் 01-01-2013

னைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...




பெரும்பாலான பதிவர்கள் ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு தாங்கள் சொல்ல வரும் சின்ன சின்ன  விசயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். எத்தனையோ விஷயங்கள் நான் எழுத நினைத்ததும் பின்பு இவ்வளவு சிறிய விசயத்திற்காக யாரவது ஒரு பதிவை வீணடிப்பார்களா என்று கடந்ததும் உண்டு. அதன் பின் தான் இந்தப் பகுதிகளுக்கு இருக்கும் மகத்துவம் புரிந்தது. சரி நாமும் ஒரு பகுதி ஆரம்பித்து விடுவோம் என்று நினைத்து அதற்கான தலைப்பையும் சிந்திக்கத் தொடங்கினேன்

கடந்த இரு வாரமாக யோசித்து யோசித்து மண்டையை சூடாக்கிய ஒரு தலைப்பு, எவ்வளவோ முட்டியும் மோதியும் தலைப்பு சிக்கவேயில்லை. வாத்தியார் கணேஷ், வரலாற்று சுவடுகள், இன்னும் சிலரிடமும் கேட்டேன், இருந்தும் நான் எதிர்பார்த்த ஒரு தலைப்பு " சாரி பாஸ்" என்று விலகிக் கொண்டதே தவிர சிக்கவே இல்லை

தலைப்பு சிக்கவில்லை, முயற்சியை கைவிட்டு விடலாம் "ஜஸ்ட் ரிலாக்ஸ் பாஸ்" என்று என்னிடம் நானே சொல்லிக் கொள்ளும் பொழுது சிக்கியது "அட இது நல்லாருக்கே" என்று என்ன வைத்தது. நான் சிந்தித்த எத்தனையோ மோசமான தலைப்புகளுக்கு மத்தியில் இது ஒன்று அவ்வளவு மோசமாக இல்லை என்பதால், எது எதையோ பொறுத்துக் கொள்ளும் நீங்கள் இதையும் பொறுத்துத் தான் ஆக வேண்டும்.   

இந்தப் பகுதியில் எது எதுவெல்லாம் இடம் பெறப் போகிறது என்று இனி தான் சிந்திக்க வேண்டும்

  1. ஒரு வலைப்பதிவு பற்றியோ அல்லது ஒரு பதிவு பற்றிய எனது பார்வையோ இடம் பெரும்
  2.  ஒரு குறும்படம் பற்றிய குறு விமர்சனம் 
  3.  ஒரு புதிர் 


இவை தவிர சிந்திக்கவோ சிரிக்கவோ செய்யும் ரிலாக்ஸ் விஷயங்கள் அடங்கிய ஜஸ்ட்  ரிலாக்ஸ் ஒவ்வொரு புதனும் வெளிவருமா என்று தெரியாது, ஆனால் புதன் கிழமை மட்டுமே வெளிவரும்...   

வலையுலகில் நான் அறிந்த வரை பலரும் எழுதி வரும் தங்களுக்கான டைரிக் குறிப்புகள் 

மின்னல் வரிகள் - மொறுமொறு மிக்ஸர்  
மெட்ராஸ்பவன் - ஸ்பெஷல் மீல்ஸ் 
எங்கள் பிளாக் - பாசிடிவ் செய்திகள் 
கேபிள் சங்கர் -கொத்து பரோட்டா 
ஹாரிபாட்டர் - டைம் பாஸ் 
பிளாக்கர் நண்பன் - பிட் பைட் மெகா பைட்   
வீடு திரும்பல் - வானவில் 
கோகுல் - "பல"சரக்கு கடை  
கரைசேரா அலை - ஊர்ப் பேச்சு 
குடந்தையூர் - ஸ்வீட் காரம் காபி 
கும்மாச்சி - கலக்கல் காக்டெயில் 
ரஹீம் கசாலி - கசாலி கபே 

வாத்தியாரின் கனவு நனவாகிறது : 


ஜனவரி 6 டிஸ்கவரி புக் பேலஸில் வைத்து வாத்தியாரின் மின்னல் வரிகள் எழுதிய சரிதாயணம் @ சிரிதாயணம்  புத்தகமாக வெளியிட இருக்கிறது. அனைவரையும் வாத்தியார் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்

மிக்க நன்றி 

கவனம் ஈர்த்த இளம் பதிவர் திடங்கொண்டு போராடு சீனு என்று என்னைப் பற்றி தன்னுடைய விருதுகள் பதிவில் குறிப்பிட்ட வீடு திரும்பல் மோகன் குமார் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்