Showing posts with label பீட்சா. Show all posts
Showing posts with label பீட்சா. Show all posts

15 Nov 2013

பிட்ஸா II - வில்லா - சத்தியமாக இது விமர்சனமல்ல


நாவலூர் ஏ.ஜி.எஸ். அஜீத் விஜய் போன்ற மாஸ் ஹீரோ நடித்த படத்தின் முதல் காட்சியைக் கூட அமைதியாய் ரசிக்கும் அரங்கம், பேய் படம் என்றதும் கூடுதல் மவுனத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு ரசிக்கத் தொடங்கியிருந்தது. அரங்கில் நிலவிய மவுனமானது திரைப்படத்தின் பின்னணி இசையைக் கூட பின்னுக்குத் தள்ளிவிட்டு கூடுதல் திகிலை சேர்த்துக் கொண்டிருந்தது. 

முகேஸின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவது கண்கூடாகத் தெரிகிறது. "நான் தான் முகேஷ்" என்றபடி முகேஷ் திரையில் தோன்றும் போது விசில் பறக்கிறது, போதாக்குறைக்கு நுரையீரல் பஞ்சு போன்ற மென்மையானது என்ற வாசகம் வரும்பொழுது துள்ளிக் குதிக்கிறார்கள். எ.மா.ச.வா.

பிட்ஸா II - வில்லா - சத்தியமாக இது விமர்சனமல்ல 


மிகப் பரிட்ச்சியமில்லாத நடிகர்கள், மிக மிக மெதுவாக நகரும் திரைக்கதை, கொஞ்சம் சஸ்பென்ஸ் இவற்றை மட்டுமே ஒரு படம் எடுக்க முடியும் என்று நிருபித்துள்ளார் இயக்குனர் தீபன். 

இது குறியீடுகளின்        காலம் என்று நினைக்கிறன். இந்தப் படத்திலும் குறியீடுகள் இல்லாமல் இல்லை. வில்லாவில் வசிப்பவர்கள் தனக்கும் தனக்கு அடுத்து வருபவனுக்கும் என்ன நேரும் என்பதை ஏதேனும் சில குறியீடுகளின் மூலம் கடத்துபவர்களாகவே வலம் வருகிறார்கள். கவிஞனாக, ஓவியனாக, எழுத்தாளனாக, சினிமா இயக்குனாராக என்று குறியீடுகள்  படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.

பயப்படாதீர்கள் கதை எல்லாம் சொல்லப் போவதில்லை. சினிமா விமர்சனம் எழுதப் போவதில்லை என்று முடிவெடுத்து பலகாலமாகிவிட்டது. இருந்தும் சமீபகாலமாக எதுவுமே எழுதுவதில்லை, எழுதத் தோன்றுவதுமில்லை, ஒருவேளை சிந்தனை வறட்சியா என்றால் அதுவுமில்லை, சிந்திக்கத்தான் நேரமே கிடைப்பதில்லையே. 

பேய்படம் என்ற மாயையில் இருந்ததால் பேய் வரும் பேய் வரும் என்று நம்ப வைத்தே ஏமாற்றியது போன்ற உணர்வு. 

எண்ண அலைகளை சுற்றி நிகழும் ஒரு கதை, நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் என்பதை மையமாக வைத்து நகருகிறது, இறுதியில் நல்ல எண்ணம் ஜெயிக்கிறதா இல்லை கெட்ட எண்ணம் ஜெயிக்கிறதா என்பதை தமிழ் சினிமா பாணியில் சொல்லாமல் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் தீபன். 

வாயில் ரத்தம் சொட்ட சொட்ட வந்து நிற்கும் பேய், வெள்ளை உடையில் அங்குமிங்கும் அலைந்து கிலி ஏற்படுத்தும் பேய், திடிரென்று தோன்றி நாடி நரம்பை சீண்டிப் பார்க்கும் பேய், ம்ம்ஹூம் இப்படியான எந்தக் பேய்களுமே இல்லை. பேய்கள் இல்லை என்றாலும் திரைக்கதையை அதன் கடைசி காட்சி வரை ஒருவித அமானுஷ்யம் கலந்த சஸ்பென்ஸ் உடனேயே நகர்த்தியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம், பின்னணியும், ஒளிபதிவும் படத்தின் பக்க பலம். இது போன்ற படங்களுக்கு கலை தான் மிக முக்கியம், கலை இயக்குனர் அமர்க்களபடுத்தியுள்ளார். வில்லாவில் செய்யபட்டிருக்கும் கலை கனவு இல்லம். வசனம் அருமை.

*****

பிட்ஸா வாரி கொடுத்த மிதப்பில் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையறா கதைகளுக்கு பிட்ஸா 2,3,4.....n என்று பெயர் வைத்துவிட்டாலே படம் ஓடி விடும் என்று தயாரிப்பாளர் நினைத்துவிட்டார் போலும். இருக்கலாம் படத்தின் விளம்பரத்திற்கு, கவர்ச்சிக்கு, முன்னோட்டத்திற்கு வேண்டுமானல் இந்த உத்தி உதவியிருக்கலாம் ஆனால் வில்லாவிற்கு உதவியிருக்கிறதா என்றால்... படம் முடிந்து வெளியே வரும் பொழுது "*த்தா பீட்சா டூ-ன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க மச்சி... மொதோ வந்ததே, அது ன்னா படம் தெரியுமா மச்சி... நானே மெர்சசலாயிட்டேன்.. *த்தா நம்மள வச்சி காமெடி பன்றானுங்களா...?"

மேற்சொன்ன இந்த டயலாக்கை வெவ்வேறு நபர்களிடம் அவர்களின் பப்ளிக் டீசன்ஸியைப் பொறுத்து வெவ்வேறு டோன்களில் கேட்க முடிந்தது. இப்படி ஒரு ரியாக்ஷனை ரசிகர்களிடமிருந்து தயாரிப்பாளர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறன். எது தனக்கு வெற்றியைத் தரும் என்று தயாரிப்பாளர் நினைத்திருக்கக் கூடுமோ அதுவே அவரை சாய்த்து விட்டது. 

பிட்ஸாவுக்கும் வில்லாவுக்கும் இடையே இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை என்னவென்றால் இரண்டுமே வீட்டை மையமாக வைத்து, அந்த வீட்டைச் சுற்றி நடக்கும் கதை, மேலும் முன்னதில் நாயகி எழுத்தாளர் பின்னதில் நாயகன். இதைத் தவிர்த்து வேறொன்றுமில்லை. (இதிலும் பிட்ஸ்டாப் வருகிறது, நினைக்குதே... பாடல் வருகிறது )  

பிட்ஸாவின் தொடர்ச்சி அல்லாத ஒரு படத்திற்கு அதன் சாயல் இல்லாத ஒரு படத்திற்கு II என்று பெயர் வைப்பதை தயாரிப்பாளர்கள் வேண்டுமானால் வியாபார உத்தியாய் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தான் எதிர்பார்த்த ஒன்று தன்னை எதிர்பார்க்கச்  செய்த ஒன்று அந்த படத்தில் இல்லை எனும் பொழுது சராசரி சினிமா ரசிகனால் அதனை எப்படி வெறும் வியாபார உத்தியாய் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்.

ஒரு பதார்த்தம் நன்றாகவே சமைக்கப்பட்டு சிறப்பாகவே பரிமாறப்பட்டிருந்தாலும், தான் எதிர்பார்த்தது கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவனைத் துரத்திக் கொண்டே இருக்காதா... 

சிக்கன் பிரியாணியும் கறிசோறும் எதிர்பார்த்து சென்ற ஒருவனுக்கு சுவையான வெஜ் பிரியாணி பரிமாறப்பட்டால் எப்படி உணர்வானோ அது தான் இந்த பிட்ஸா || வில்லா.



ஒருவேளை இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் நிச்சயம் அரங்கில் சென்று பாருங்கள். அரங்கில் சென்று பார்க்கும் அளவிற்கு ஒர்த்தான படம் தான். பிட்ஸாவுடன் ஒப்பிட்டு இந்தப் படத்தை மொக்கை என்றால் மொக்கை தான். ஆனால் அது வேறு இது வேறு என்ற எண்ண அலையில் பார்த்தீர்கள் என்றால் வில்லா வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர்.    

24 Oct 2012

பீட்சா - இது முறையான விமர்சனம் அல்ல



" பாப்பா நீ படத்த பாத்து பயப்படலியா பாப்பா"


இண்டர்வெலில் அரங்கிலிருந்து வெளியேறும் பொழுது கட்டிளங்காளை ஒருவன், இருபத்தி ஐந்து வயது நிரம்பிய "அழகிய" பாப்பாவின் கையில் இருந்த ஐந்து வயது பாப்பாவை பார்த்து கேட்ட கேள்வி " பாப்பா நீ படத்த பாத்து பயப்படலியா பாப்பா"  

"எனக்கு இன்னும் டவுட்டாவே இருக்கு, அவன் எந்த பாப்பாவ  பார்த்து இந்தக் கேள்வியக் கேட்டான்" சீனு'ஸ் மைன்ட் வாய்ஸ்.

ஒரு ட்விஸ்ட்டுடன் நிறைவடையும் டைட்டில் கார்டில் இருந்து ஆரம்பமாகிறது இரண்டு மணி நேர ட்விஸ்ட். ரஜினி கமல் அஜித் படங்களுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு இந்தப் படத்திலும் என்னை தொற்றிக் கொண்டது காரணம் பதிவுலகமும் பேஸ்புக் உலகமும். எங்கு காணினும் பீட்சா பீட்சா பீட்சா, பீட்சா. எனக்குப் பிடிக்காத ஒரு வஸ்து பீட்சா, "வெண்ணை ரொட்டி" என்பது தான் முறையாகப் பதப் படுத்தப்படாத அந்த ரொட்டியின் தமிழ் பதம் என்று அண்ணன் மெட்ராஸ் அவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். பரவாயில்லை இந்த பீட்சாவை வெகு சிறப்பாக பதப்படுத்தி நம் இதயத்தை காட்சிக்கு காட்சி பதம் பார்த்திருக்கிறார்கள். 


அரங்கின் உள்ளே நுழையும் பொழுது தற்செயலாக ஊழியர் ஒருவரிடம் கேட்டு வைத்திருந்தேன் எப்போ படம் முடியும் என்று "ரெண்டரைக்கு முடியும்" என்று அவர் சொன்னதால் அடிகடி மணிதுளிகளைப் பார்த்துக் கொண்டே இருந்தேன் எப்போது இரண்டரை மணி ஆகும் என்று. " எனக்கெல்லாம் ட்விஸ்ட்டு பிடிக்காது என்று நினைபவர்கள் கடைசி பத்தாவது நிமிடம் வந்தால் போதும், மொத்த படத்தையும் மீண்டும் ஒருமுறை ரீவைண்ட் செய்கிறார்கள் அப்போது பார்த்துக் கொள்ளுங்கள்.        

கார்த்திக் சுப்புராஜ் பற்றிய கவர் ஸ்டோரி சமீபத்தில் ஆனந்த விகடனில் வெளியாகி இருந்தது, அதில் அதில் என்னைக் கவர்ந்த விஷயம், சினிமாவா  இல்லை ஐ டி வேலையா என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் துணிந்து தேர்ந்தெடுத்த துறை தான் சினிமாத் துறை. இவர் இயக்கிய முதல் குறும்படத்திற்கு வந்த கமென்ட் " நீயெல்லாம் எதுக்கு படம் எடுக்குற" இவரது சமீபத்திய குறும்படங்கள் லட்சக்கணக்கான பார்வைகளைத் தாண்டி சென்று கொண்டுள்ளது. இவை எல்லாமே பீட்சா மேல் ஈர்ப்பு வரக் காரணமான விஷயங்கள். 


ரம்யா நம்பீசன் அடுத்த ரவுண்டு வர வேண்டும் என்றால் தன்னிடம் இருப்பதில் ஒரு ரவுண்டை குறைக்க முயல வேண்டும். பின்னணி இசையில் மிரட்டலுடன் இருக்கிறது, வசனம் அருமை. குறைகள் கண்டுபிடிக்க நேரம் தராமல் காட்சி நகர்வுகளில் நேர்த்தி சேர்த்திருப்பது படத்திற்குப் பலம். ஹீரோ ஹீரோயின் காதல் காட்சிகளை பார்க்கும் (சங்கத்து) பேச்சிலர்கள் பொறமை கொள்ளக் கூடாது.      

"தமிழ் சினிமாவையே தலை கீழ புரட்டி போட போறான் மச்சி" படம் முடிந்து வெளியே செல்லும் பொழுது புரட்சிப் போராட்டம் நடத்த ஆரம்பித்தான் தமிழ் சினிமாவின் டெடிகேட் ரசிகன். "த்தா நீயெல்லாம் படம் பாத்திருந்த நெஞ்சு வெடிச்சு செத்ருப்ப" நவநாகரீக இளைஞன் ஒருவன் சென்னைத் தமிழில் தன் நண்பனை சீண்டிக் கொண்டிருந்தான், அவன் கைகளுக்குள் தான் கையை விட்டு மாற்றான் ஆகியிருந்த நவநாகரீக இளைஞிஅவன் இடுப்பை செல்லமாக சீண்ட "த்தா பேசிட்டு இருக்கேன்ல சும்மா வாடி" என்று தேன்பாயும் சென்னை தமிழில் காதல் புரிய அரம்பித்தான். (மேற்கண்ட வாக்கியங்களில் ஓ என்னும் ஒலி சென்சார் செய்யப்பட்டுள்ளது என்பதை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறேன்). 


அரங்கில் மயான அமைதி நிலவிய நேரம் " எப்பா பயத்துல யாரும் பக்கதுல இருக்கவங்க கைய தடவாதீங்க" என்று ஒருவன் நேரடி வர்ணனை புரிய அதில் எந்தவிதமான இரட்டை அர்த்தமும் இல்லாததால் வெகுவாக ரசித்தேன். திருவான்மியூர் எஸ் டூ திரையரங்கம் காதலர்களாக வந்த பெண்கள் சுடிதாரிலும், அப்பா அம்மாவோடு வந்த பெண்கள் டைட் டீஷர்ட் மற்றும் ஸ்லீவ் லெஸ்ஸிலும் வந்தது குறித்து வியப்பின் எல்லை வரை சென்று வந்தேன் "ஒரு வேள டிரண்டு மாறிடிசோ".    

"தயவு செய்து படத்தின் கதையை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள், கிளைமாக்ஸ் என்ன என்பதையும் சொல்லி விடாதீர்கள்" இப்படி தான் அதே கண்கள் படத்தின் டைட்டில் கார்டு ஆரம்பமாகும் என்று எனது சித்தப்பா சொன்னார், நேற்று முகபுத்தாக நண்பர் ஒருவர் கூட அடுத்த அதே கண்கள் என்று தான் சொன்னார், என் கெட்ட நேரம் சிறுவயதில் நான் டியூஷன் முடித்து வரும் பொழுது வீட்டில் அதே கண்கள் கிளைமாக்ஸ் தான் ஒட்டிக் கொண்டிருந்தது. எப்படியோ அதில் தவற விட்ட அனுபவத்தை இதில் மீட்டெடுத்து விட்டேன் என்ற ஆனந்தம் உள்ளது.


படம் பார்த்த பின் முகப் புத்தகத்தில் எனது அண்ணன் பதிந்த ஸ்டேடஸ்       

"எல்லோருக்கும் ஒரு மொமென்ட் வரும், அவ நம்பிக்கையநம்பிக்கை யா மாத்துற மொமென்ட்,your moment is waiting".

Ya i got that moment after watching 'PIZZA', A wonderful horror movie of my life time. Just gone to the movie with out any expectation but had very thrilling experience!!!! My best cinema of the year!!