15 Nov 2013

பிட்ஸா II - வில்லா - சத்தியமாக இது விமர்சனமல்ல


நாவலூர் ஏ.ஜி.எஸ். அஜீத் விஜய் போன்ற மாஸ் ஹீரோ நடித்த படத்தின் முதல் காட்சியைக் கூட அமைதியாய் ரசிக்கும் அரங்கம், பேய் படம் என்றதும் கூடுதல் மவுனத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு ரசிக்கத் தொடங்கியிருந்தது. அரங்கில் நிலவிய மவுனமானது திரைப்படத்தின் பின்னணி இசையைக் கூட பின்னுக்குத் தள்ளிவிட்டு கூடுதல் திகிலை சேர்த்துக் கொண்டிருந்தது. 

முகேஸின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவது கண்கூடாகத் தெரிகிறது. "நான் தான் முகேஷ்" என்றபடி முகேஷ் திரையில் தோன்றும் போது விசில் பறக்கிறது, போதாக்குறைக்கு நுரையீரல் பஞ்சு போன்ற மென்மையானது என்ற வாசகம் வரும்பொழுது துள்ளிக் குதிக்கிறார்கள். எ.மா.ச.வா.

பிட்ஸா II - வில்லா - சத்தியமாக இது விமர்சனமல்ல 


மிகப் பரிட்ச்சியமில்லாத நடிகர்கள், மிக மிக மெதுவாக நகரும் திரைக்கதை, கொஞ்சம் சஸ்பென்ஸ் இவற்றை மட்டுமே ஒரு படம் எடுக்க முடியும் என்று நிருபித்துள்ளார் இயக்குனர் தீபன். 

இது குறியீடுகளின்        காலம் என்று நினைக்கிறன். இந்தப் படத்திலும் குறியீடுகள் இல்லாமல் இல்லை. வில்லாவில் வசிப்பவர்கள் தனக்கும் தனக்கு அடுத்து வருபவனுக்கும் என்ன நேரும் என்பதை ஏதேனும் சில குறியீடுகளின் மூலம் கடத்துபவர்களாகவே வலம் வருகிறார்கள். கவிஞனாக, ஓவியனாக, எழுத்தாளனாக, சினிமா இயக்குனாராக என்று குறியீடுகள்  படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.

பயப்படாதீர்கள் கதை எல்லாம் சொல்லப் போவதில்லை. சினிமா விமர்சனம் எழுதப் போவதில்லை என்று முடிவெடுத்து பலகாலமாகிவிட்டது. இருந்தும் சமீபகாலமாக எதுவுமே எழுதுவதில்லை, எழுதத் தோன்றுவதுமில்லை, ஒருவேளை சிந்தனை வறட்சியா என்றால் அதுவுமில்லை, சிந்திக்கத்தான் நேரமே கிடைப்பதில்லையே. 

பேய்படம் என்ற மாயையில் இருந்ததால் பேய் வரும் பேய் வரும் என்று நம்ப வைத்தே ஏமாற்றியது போன்ற உணர்வு. 

எண்ண அலைகளை சுற்றி நிகழும் ஒரு கதை, நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் என்பதை மையமாக வைத்து நகருகிறது, இறுதியில் நல்ல எண்ணம் ஜெயிக்கிறதா இல்லை கெட்ட எண்ணம் ஜெயிக்கிறதா என்பதை தமிழ் சினிமா பாணியில் சொல்லாமல் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் தீபன். 

வாயில் ரத்தம் சொட்ட சொட்ட வந்து நிற்கும் பேய், வெள்ளை உடையில் அங்குமிங்கும் அலைந்து கிலி ஏற்படுத்தும் பேய், திடிரென்று தோன்றி நாடி நரம்பை சீண்டிப் பார்க்கும் பேய், ம்ம்ஹூம் இப்படியான எந்தக் பேய்களுமே இல்லை. பேய்கள் இல்லை என்றாலும் திரைக்கதையை அதன் கடைசி காட்சி வரை ஒருவித அமானுஷ்யம் கலந்த சஸ்பென்ஸ் உடனேயே நகர்த்தியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம், பின்னணியும், ஒளிபதிவும் படத்தின் பக்க பலம். இது போன்ற படங்களுக்கு கலை தான் மிக முக்கியம், கலை இயக்குனர் அமர்க்களபடுத்தியுள்ளார். வில்லாவில் செய்யபட்டிருக்கும் கலை கனவு இல்லம். வசனம் அருமை.

*****

பிட்ஸா வாரி கொடுத்த மிதப்பில் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையறா கதைகளுக்கு பிட்ஸா 2,3,4.....n என்று பெயர் வைத்துவிட்டாலே படம் ஓடி விடும் என்று தயாரிப்பாளர் நினைத்துவிட்டார் போலும். இருக்கலாம் படத்தின் விளம்பரத்திற்கு, கவர்ச்சிக்கு, முன்னோட்டத்திற்கு வேண்டுமானல் இந்த உத்தி உதவியிருக்கலாம் ஆனால் வில்லாவிற்கு உதவியிருக்கிறதா என்றால்... படம் முடிந்து வெளியே வரும் பொழுது "*த்தா பீட்சா டூ-ன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க மச்சி... மொதோ வந்ததே, அது ன்னா படம் தெரியுமா மச்சி... நானே மெர்சசலாயிட்டேன்.. *த்தா நம்மள வச்சி காமெடி பன்றானுங்களா...?"

மேற்சொன்ன இந்த டயலாக்கை வெவ்வேறு நபர்களிடம் அவர்களின் பப்ளிக் டீசன்ஸியைப் பொறுத்து வெவ்வேறு டோன்களில் கேட்க முடிந்தது. இப்படி ஒரு ரியாக்ஷனை ரசிகர்களிடமிருந்து தயாரிப்பாளர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறன். எது தனக்கு வெற்றியைத் தரும் என்று தயாரிப்பாளர் நினைத்திருக்கக் கூடுமோ அதுவே அவரை சாய்த்து விட்டது. 

பிட்ஸாவுக்கும் வில்லாவுக்கும் இடையே இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை என்னவென்றால் இரண்டுமே வீட்டை மையமாக வைத்து, அந்த வீட்டைச் சுற்றி நடக்கும் கதை, மேலும் முன்னதில் நாயகி எழுத்தாளர் பின்னதில் நாயகன். இதைத் தவிர்த்து வேறொன்றுமில்லை. (இதிலும் பிட்ஸ்டாப் வருகிறது, நினைக்குதே... பாடல் வருகிறது )  

பிட்ஸாவின் தொடர்ச்சி அல்லாத ஒரு படத்திற்கு அதன் சாயல் இல்லாத ஒரு படத்திற்கு II என்று பெயர் வைப்பதை தயாரிப்பாளர்கள் வேண்டுமானால் வியாபார உத்தியாய் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தான் எதிர்பார்த்த ஒன்று தன்னை எதிர்பார்க்கச்  செய்த ஒன்று அந்த படத்தில் இல்லை எனும் பொழுது சராசரி சினிமா ரசிகனால் அதனை எப்படி வெறும் வியாபார உத்தியாய் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்.

ஒரு பதார்த்தம் நன்றாகவே சமைக்கப்பட்டு சிறப்பாகவே பரிமாறப்பட்டிருந்தாலும், தான் எதிர்பார்த்தது கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவனைத் துரத்திக் கொண்டே இருக்காதா... 

சிக்கன் பிரியாணியும் கறிசோறும் எதிர்பார்த்து சென்ற ஒருவனுக்கு சுவையான வெஜ் பிரியாணி பரிமாறப்பட்டால் எப்படி உணர்வானோ அது தான் இந்த பிட்ஸா || வில்லா.



ஒருவேளை இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் நிச்சயம் அரங்கில் சென்று பாருங்கள். அரங்கில் சென்று பார்க்கும் அளவிற்கு ஒர்த்தான படம் தான். பிட்ஸாவுடன் ஒப்பிட்டு இந்தப் படத்தை மொக்கை என்றால் மொக்கை தான். ஆனால் அது வேறு இது வேறு என்ற எண்ண அலையில் பார்த்தீர்கள் என்றால் வில்லா வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர்.    

10 comments:

  1. //பிட்ஸாவின் தொடர்ச்சி அல்லாத ஒரு படத்திற்கு அதன் சாயல் இல்லாத ஒரு படத்திற்கு II என்று பெயர் வைப்பதை தயாரிப்பாளர்கள் வேண்டுமானால் வியாபார உத்தியாய் எடுத்துக் கொள்ளலாம்.//

    From the makers of Pizza - என்று போட்டிருந்தால் இந்த ஏமாற்றம் தவிர்க்கப் பட்டிருக்கும்! படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறது உங்கள் (விமர்சனமல்லாத) பதிவு! :)

    ReplyDelete

  2. //பிட்ஸாவுடன் ஒப்பிட்டு இந்தப் படத்தை மொக்கை என்றால் மொக்கை தான்.// எனக்கு மொக்கையாத்தான் பட்டது சீனு.

    ReplyDelete
  3. வணக்கம்
    பதிவு அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வெஜ் பிரியாணி என்று நினைக்க வேண்டியது தான்...

    ReplyDelete
  5. சகோதரருக்கு வணக்கம்,,
    படம் பார்த்து கதை சொல்வதை விட பார்க்கலாமா வேண்டாமா என்று நறுக்கென்று சொல்லிச் சென்ற விதம் அருமை நண்பரே. பதிவு அருமை. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  6. படங்கள் பார்ப்பதை குறைத்து விட்டேன்! டிவியில் போட்டால் பார்க்கலாம்! நன்றி!

    ReplyDelete
  7. "நம்ம தியேட்டர்"லதான் எப்பவும் படம் பார்ப்பேன்!

    ReplyDelete
  8. எல்லாரும் மொக்கைன்னு சொல்றதுக்கு காரணம் என்னன்னு விளங்கிடுச்சு...

    ReplyDelete
  9. படம் பற்றிய விமர்சனமல்ல! :) சரி.....

    எப்படியும் இங்கே படம் பார்க்கப் போவதில்லை சீனு!

    ReplyDelete
  10. Visit : http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_27.html

    ReplyDelete