Showing posts with label சிரிதாயணம். Show all posts
Showing posts with label சிரிதாயணம். Show all posts

19 Jan 2013

சரிதாயணம் @ சிரிதாயணம் - புத்தக விமர்சனம்


முன்குறிப்பு : சரிதாயணம் புத்தகத்தில் இடம் பெற்ற கணேஷ் சாரின் எழுத்துகள் நீல நிறத்தில் 

வாத்தியார் - ஆம் இவரை இப்படிக் கூப்பிடுவது எனக்குப் பிடித்துள்ளதுபால கணேஷ் சார் வலைச்சரம் ஆசிரியராக பணி புரிந்தபொழுது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எழுத்தாளர்களின் பிரசித்திபெற்ற கதாப்பாத்திரங்களைக் கொண்டு பல பதிவர்களை அறிமுகம் செய்துவந்தார். இவர் ஆசிரியரான இரண்டாவது நாள் சுஜாத்தாவின் அச்சுப் பிசகாத எழுத்து நடையில் கணேஷ் - வசந்த் மூலம் பதிவர்களை அறிமுகம் செய்த விதம் அற்புதம். அன்றே அந்த பதிவில் சின்ன வாத்தியார் என்று பின்னூட்டம் அளித்திருந்தேன், அதன் பின் வந்த நாட்களில் பதிவு எழுதுவது குறித்து சில அறிவுரைகளை அசால்ட்டாக அள்ளித் தெளித்ததால் இவரையே எனது வாத்தியாராகவும் ஏற்றுக் கொண்டேன்.

வரை முதல்முறை நான் சந்தித்த பொழுது எழுதிய பதிவு.


பிரபல பதிவருடன் திடீர் சந்திப்பு




னது சிறுகதைத் தொகுப்புகளை புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது தான் அவரது நெடுநாளைய விருப்பம் என்று அந்த முதல் சந்திப்பிலேயே கூறி இருந்தார். இந்தப் புத்தகத் திருவிழாவின் மூலம் வாத்தியாரின் நெடுநாளைய ஆசை சரிதாயனமாக நிறைவேறியிருக்கிறது

மின்னல்வரிகள் வலைப்பூவில் அனுபவத் தமிழ் கொண்டு எழுதி வரும் வாத்தியார், அவ்வபோது சரிதா கதைகளைக் கொண்டு வலையுலகை சிரிக்கவைப்பது வழக்கம்சோமசேகர பரதேசியார் என்னும் புகழ் பெற்ற சரித்திர ஆசிரியர் காற்றில் எழுதி  ஆகாயத்தில் வெளியிட்ட புத்தகத்தின் பெயர் 'தமிழக மன்னர்கள் அரசுமுறை'. இந்தப் புத்தகம் மூலம் குறிபெடுத்து இம்சை அரசன் பாணியில் சிரித்திரபுரத்தை ஆண்ட மணிமாற பாண்டியன் என்னும் குறு மன்னனின் குறுகுறு வரலாற்றை அழகாக  எழுதியுள்ளார்சரிதாவின் அடிதடிக் கதைகளும், சோமசேகர பாண்டியனின் அடாவடிக் கதைகளும் இணைந்து முழுவடிவம் பெற்றுள்ளது இந்த சரிதாயணம் @ சிரிதாயணம்.

பட்டுக்கோட்டை பிரபாகரும், காலச்சக்கரம் நரசிம்மாவும் இப்புத்தகத்திற்கு மதிப்புரை வழங்கியுள்ளனர். பட்டுக்கோட்டை பிரபாகர் கணேஷ் சாரின் சிறந்த நண்பர் என்பதால், சரிதாயணம் புத்தகத்தில் எங்கெல்லாம் என்னென்ன குறைகள் செய்துள்ளார், அதை இனி வரும் நாட்களில் எப்படி நிவர்த்தி செய்யவேண்டும் என்றெல்லாம் தெள்ளத்தெளிவாக எழுதியுள்ளார் அதேநேரத்தில் அழுத்தமாக ஒரு குட்டு வைத்துள்ளார். மோதிரக்கையால் குட்டு வாங்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள், வாத்தியாரே நீங்கள் கவனிக்க வேண்டிய மதிப்புள்ள மதிப்புரை அது.

காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் கொடுத்துள்ள மதிப்புரை கணேஷ் சாரை தலை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது, முதல் மதிப்புரையில் குட்டு பெற்ற வாத்தியார், இவரிடம் அரவணைக்கப் படுகிறார். கணேஷ் சாரின் எழுத்துகள் மீது மதிப்பும் எதிர்பார்ப்பும் உயருகிறது, இருந்தும் வாத்தியாரே பட்டுக்கோட்டையார் சொன்னவைகளை மறந்துவிடாதீர்கள், காரணம் சரிதாயனத்துடன் நீங்கள் திருப்தி பெற்று விடக்கூடாது என்பது எங்கள் எண்ணம்.      

சரிதாயணம் - ஒரு பார்வை 



ரிதாயணத்தின் சில கதைகளை நான் மின்னல் வரிகளில் படித்துள்ளேன், பெரும்பாலான கதைகள் புதியதாக இருந்தது, ஒருவேளை நான் தவறவிட்ட கதைகளா என்று தெரியவில்லை. எல்லாக் கதைகளிலும் நகைச்சுவை சரளமாக வருகிறது வாத்தியாருக்கு, காட்சி நகர்வுகள் ஒன்றுக்கொன்று  தொடர்புடையாதாக இருப்பதால் வரிகளை மேற்கோள் காட்டுவதற்கு சற்றே சிரமப் பட வேண்டியுள்ளது.

சிலகாட்சி நகர்வுகளில் வாத்தியார் கொடுக்கும் உவமைகள் அற்புதம். டிவி நிகழ்ச்சியில் சரிதா தன் தோழிகளுடன் பங்குகொள்ள செல்லும் பொழுது அவரின் கணவரான நம் கணேஷ் சார் பார்வையாளராக துணைக்குச் செல்கிறார், தொகுப்பாளினி பெயர் கப்பு ( உங்களுக்கு குஷ்புவின் பெயர் நியாபகம் வந்தால் அதற்க்கு வாத்தியார் பொறுப்பு அல்ல). இனி வாத்தியாரின் சில வரிகளில் என்னைக் கவர்ந்தவை 

"நிகழ்ச்சி ஆரம்பமானது. பலியாடுகள்( அட , கணவர்கள் தான்) பார்வையாளர்கள் காலரியில் அமர்ந்து கொண்டோம். சரிதா பாடுவதில் இப்போது கொஞ்சம் தேறிவிட்டதால் ஒரு பாட்டு பாடினாள்."

ந்த இடத்தில் சரிதா பாடிய பாடலுக்கு நடனமாடத் தொடங்கும் கப்புவின் நடனத்தை வாத்தியார் வர்ணிக்கும் எழுத்துக்கள் அபாரம்.

சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும் யானை உடம்பை அசைப்பது போல் உடலை லேசாக அசைத்து சரிதாவின் பாட்டுக்கு ஆடினாள் கப்பு.  

நி கப்புவை இங்கு கற்பனை செய்யும் பொழுது கணேஷ் சாரின் நகைச்சுவைக்கு நாம் பலியாகி இருப்பதை சந்தேகம் இல்லாமல் காட்டிக் கொடுத்துவிடும் நம் முகத்தில் ததும்பு அந்த சிறு புன்னகை. சரிதாவும் ஷாப்பிங்கும் என்ற கதையின் முடிவல் பின் குறிப்பு கொடுத்துள்ளார், சம்மந்தமே இல்லாத அந்தப் பின் குறிப்பை இரண்டு மூன்று முறை படித்ததன் பின் தான் புரிந்து கொண்டேன் அதில் இழையோடிய மெல்லிய ஹாஸ்யத்தை. அந்தப் பின் குறிப்பை இங்கு தருகிறேன், நீங்களே கண்டுகொள்ளுங்கள் அதில் ஒளிந்து இருக்கும் ஹாஸ்யத்தை 

'பின்' குறிப்பு - குத்தினால் வலிக்கும்.

சரிதாவும் வால்களும் - மல்லாக்க விழுந்து தலையில் அடிபட்ட தாக்கத்தில் அவன் .தி.கு போல விழித்தான் என்று எழுதியுள்ளார், இந்த .தி.கு வின் பொருளை முடிந்தால் புரிந்து கொள் என்னும் தொனியில் எழுதி இருப்பது சுஜாதா போன்ற ஜாம்பவான்கள் செய்யும் வார்த்தை விளையாட்டு. வாத்தியாருக்கு அதுவும் சரளமாக வருகிறது.

கார் ஓட்ட கற்றுக்கொள்ளும் சரிதா, மரத்தின் மேல் காரை மோதி விட அந்தக் கணம் கணேஷ் சாரின் மனநிலை, கல்யாணம் ஆன நாளில் இருந்து முதல் முறையாக அவள் முகத்தில் பயத்தைப் பார்த்ததால் எனக்கு அக்கணமே முத்தமிட்டுக் கொஞ்ச வேண்டும் போல் இருந்தது. அவளை இல்லை காரை!

ப்படி மெல்ல மெல்ல உபத்திரவப்படுத்தி (காரை அல்ல என்னை...) ஒரு வழியாக ஓட்டக் கற்றுக் கொண்டுவிட்டாள், சில பல விபத்துகளை ஏற்படுத்தி, காருக்கும் என் பேங்க் பாலன்சுக்கும் சேதாரத்தை ஏற்படுத்தியபின் இப்போது சற்று சுமாராக கார் ஓட்டுகிறாள். முதலில் மெதுவாக ஓட்டி எல்லாருக்கும் வழிவிட்டவள், இப்போது தன சுபாவப்படி "நான் வேகமாகத் தான் போவேன், வேண்டுமென்றால் அவர்கள் வழிவிடட்டும்" என்று விரட்ட ஆரம்பித்துவிட்டாள். ஆகா கார் ஓட்டுவதற்கு அவள் பழகினால் என்பதை விட, எங்கள் வாசிகள் அவள் காருக்கு தகுந்த மாதிரி செல்ல பழகிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்!

ப்படி ஒவ்வொரு வரியாக நான் எழுதிக் கொண்டிருந்தால் புத்தகத்தையே இங்கு எழுதிவிடுவேனோ என்று பயமாக  உள்ளதால் சிரித்திரபுரத்தினுள் நுழைந்து விடலாம்.

ந்தக் கதைகளத்தை முழுக்க முழுக்க சங்க காலத்தில் பஞ்சம் தலைவிரித்து ஆடும் ஒரு கஷ்ட காலத்தில் நடப்பது போல் அமைத்திருப்பார். கதாபாத்திரங்களின் பெயர்களே நம்மிடம் சிரிப்பை வரவழைத்து விடும்

ன்னனின் பெயர் .கொ.சே.செ.வெ..வா.செ.. மணிமாற பாண்டியன். ஷ்ஷ்ஷ்ஷஷஷப்பா புரியவில்லையா  தலைசுற்றுகிறதா, அந்த மன்னனின் பெயர் மதயானை கொன்ற சேநாடு சேர்ந்தமங்களத்து செருக்களம் வென்ற மறத்தமிழ் வாணன் செந்தமிழழகு ஜடாவர்ம மணிமாற பாண்டியன்

சிரித்திரபுரம் கதை முழுவதுமே ஒரு நாடக வடிவில் எழுதப்பட்டிருக்கும், நாட்டை கவனியாமல் வரிப்பணத்தில் சுகம் களிக்கும் ஒரு மன்னன், அவனைச் சுற்றி நம் அரசாங்கம் போலவே பணி செய்யாமல் இருக்கும் அரசு எந்திரங்கள், மன்னனின் ஆசையை நிறைவேற்ற இவர்கள் செய்யும் தந்திரங்கள் என்று கதை விரிகிறது. அரசவைக் காட்சிகள், அரசனுக்கும் மற்றவகளுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் என்று சிரித்திரபுரம் முழுமையும் நம்மை சிரிக்க வைக்க தயங்கவில்லை.    

றுதியில் 'ஆண்டி' கிளைமேக்ஸ் ஆக சரிதாவின் தீபாவளி இம்சைகளைக் கூறி நம்மை சிரிக்க வைத்து புத்தகத்தையும் மனதையும் நிறைவு செய்கிறார் புத்தக எழுத்தாளர்  மிஸ்டர் பால கணேஷ் . 

சரிதாவும் தீபாவளியும் 

விடுமுறை நாட்கள் என்றால் பெரும்பாலான இல்லத்தரசர்கள் சோம்பலாக இருப்பார்கள், இல்லத்தரசிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள் - கணவர்களை வேலை வாங்குவதில்! என்று தன இயல்பான நகைச்சுவையுடன் இந்தக் கதையை  தொடங்குகிறார்.

தெப்படித்தான் ஒரே நிமிடத்தில் சிரிக்கவும் அடுத்த நிமிடத்தில் அழவும் இந்தப் பெண்களால் முடிகிறதோ? என்று வாத்தியார் முடிக்கும் இடத்தில் நாம் சிரிக்க ஆரம்பிப்போம் என்று சொல்லவா வேண்டும்.  

தங்கந்தாண்டி ஆம்பள சிங்கந்தாண்டி என்று சரிதா தன கணவர் கணேசைப் பற்றி  எழுதி இருக்கும் கதை தமிழக தாய்குலங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரெ ஒரு ஆறுதல் பரிசு. இந்தக் கதை மூலம் மாதர் சங்கங்கள்  தொடுக்க இருந்த வழக்குகளில் இருந்து தப்பித்து விட்டார் வாத்தியார்.

தமிழ் என்பவரின் ஓவியங்கள் கதைக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பது எங்கள் பிளாக் ஸ்ரீராம் சாரின் ஒற்றை வரிக் கமெண்ட்டாக இருக்கும் என்பது என் எண்ணம். அத்தனை ஓவியங்களும் அருமை. ஓவியங்களில் பாலகணேஷ் சாரின் இளமைப் பருவம் இருக்கிறது என்று நினைக்கிறன். உண்மையா சார் அது
             
சி சின்னச் சின்ன இடங்களில் எழுத்துப்  பிழைகளும், சில இடங்களில் வரத்தைக் கோர்வைகளும் மிஸ் ஆனது போன்று எனக்குத் தோன்றியது. மேலும் பட்டுக்கோட்டை பிரபாகர் சொல்லியவற்றை நிச்சயம் கவனத்தில் கொள்ளுங்கள். சிரித்திரபுரத்தில் மன்னன் மகன் எழுத்துகளை மாற்றிப் பேசும் பொழுது அந்த வசன அளவை கொஞ்சம் குறைத்து இருக்கலாம், மன்னன் மகன் அவ்வாறு பேசும் பொழுது மிகச் சில இடங்களில் கொஞ்சம் சலிப்பு தட்டுவது போல் ஒரு உணர்வு.

ரிதாவும் பொருட்காட்சியும் நான் மிகவும் எதிர்பார்த்த கதை ஆனால் அது இப்புத்தகத்தில் மிஸ்ஸிங், பர்ஸ்ட்  கிளாஸ் கதை அது,  அதையும் சேர்த்து இருக்கலாமே... 

ந்தப்புத்தகத்தில் நான் மீண்டும் மீண்டும் படித்து ரசித்த  கதைகள் 


  1. சரிதாவும் வால்களும் 
  2. சரிதாவும் காரும் 
  3. சரிதாவும் டார்லிங்கும் 
  4. சரிதாவும் செம்மொழியும் 
  5. தங்கந்தாண்டி ஆம்பள சிங்கந்தாண்டி 
  6. சரிதாவும் தீபாவளியும் 
  7. சிரித்திரபுரம் 

சரிதாயணம் - நல்ல பயணத் தோழன், ரசித்துச் சிரிக்க சிறந்த உத்தரவாதம், முதல் முறை ஒரு எழுத்தாளரின் கையில் இருந்து நான் பெற்ற முதல் புத்தகம்., அதனால் இந்தப் புத்தகம் என்னைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான புத்தகம்.  

புத்தகக் கண்காட்சியிலும், டிஸ்கவரி புக் பேலசிலும் இப்புத்தகம் கிடைகிறது.

ஆர்டர் கொடுக்க வேண்டிய  முகவரி 

ழகரம் புத்தகச் சோலை,
8/36, ஜோதி ராமலிங்கம் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை -33       

கணேஷ் சார் - இன்னும் பல நல்ல படைப்புக்களை உங்களிடம் இருந்து பார்க்கிறோம். கிரைம் கதைகள் கூட உங்களுக்கு சிறப்பாய் வரும் என்று மின்னல் வரிகள் கூறியது. முயன்று பாருங்கள். உங்கள் முதல் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.  இனி வரப் போகும் காலங்களில் உங்களின் ஒவ்வொரு புததகளையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் வாசகனாகிய  மாணவன்.