ஒருவழியாய் காதல் கடித போட்டி முடிந்தது. சிலர் அப்பாடா என்று ஏக்கப் பெருமூச்சு விட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறன் ...! பின்னே திரும்பிய இடமெல்லாம் எங்கும் காதல் மழை பொழிந்தால் திகட்டியிருக்காதா, எத்தனை பேர் என்னை திட்டினீர்களோ அந்த பரந்தாமனுக்கே வெளிச்சம்... :-)
காதல் கடிதம் போட்டி குறித்து முதலில் அறிவிப்பு வெளியிட்ட பொழுது ஏதோ ஒரு அவசரத்தில், குழந்தைத்தனமான முடிவு எடுதுவிட்டேனோ என்று தான் சிந்தித்தேன். ஒருவேளை போட்டியில் பங்குகொள்ள யாருமே வராவிட்டால்? இந்தக் கேள்வி என்னுள் நுழைந்த போது தான் குழப்பம் இன்னும் அதிகமாகியது.
"சீனு போட்டியில எத்தன பேர் கலந்துக்க வாய்ப்பு இருக்கு" என்று அப்பாதுரை சார் கேட்ட பொழுது என்னால் சொல்ல முடிந்த பதில் "கொறஞ்சது இருபது பேராவது கலந்துபாங்க சார்! அதிகபட்சம் முப்பது" இதில் குறைந்தபட்ச எண்ணிக்கையையே நம்பிக்கை இல்லாமல் தான் சொன்னேன்.
வெறும் இருபது பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று நினைத்த போட்டியில் மொத்தம் 70 பேர் கலந்து கொள்வதாக தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டனர், அந்த எழுபது பேரில் 48 பேர் தங்கள் கடிதங்களையும் பகிர்ந்து கொண்டனர். அவர்களில் நான்கு பேர் பதிவர் அல்லாதவர்கள்.
காதல் கடித போட்டி மிக அதிகமான அளவில் பதிவர்களை சென்றடைய காரணமும், மிக அதிகமான அளவில் போட்டியாளர்கள் கலந்துகொள்ள காரணமும் பதிவுலக நண்பர்களாகிய நீங்களே அன்றி வேறு யாருமில்லை என்பது தான் நூற்றுக்கு இருநூறு சதவீத உண்மை.
பெரும்பாலான பதிவர்கள் காதல் கடிதம் போட்டி குறித்த விளம்பரத்தை உங்கள் வலைப்பூவில் பகிர்ந்திருந்தீர்கள்...!
பெருமபாலான பதிவர்கள் காதல் கடிதம் போட்டி குறித்த அறிவிப்பை தனி பதிவாகவே பகிர்ந்திருந்தீர்கள்...!
அவர்கள் உண்மைகள் தள ஓனர் மதுரைத் தமிழன் வாரம் ஒரு பதிவாவது காதல் கடிதம் போட்டி குறித்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
இது போல் பல விதங்களிலும் இந்தப் போட்டி குறித்த அறிவிப்பு பலரையும் சென்றடைய காரணமாய் இருந்த உங்கள் அனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது.
எப்படி சாத்தியமாயிற்று... என்றால் நிச்சயமாய் உங்களால் மட்டுமே சாத்தியமாயிற்று...!
நடுவர்கள்
நடுவர்களின் பங்களிப்பைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஏதோ சின்ன பையன் அழைத்துவிட்டான், கடிதங்களைத் தொகுத்துத் தருவான், மதிப்பெண் வழங்கிவிட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார்கள் நிச்சயம் இந்தப் போட்டி தரமான ஒன்றாக இருந்திருக்காது.
போட்டி பற்றி சொன்னதுமே என்னைவிட மிக உற்சாகமாய் களத்தில் குதித்து விதிமுறைகளில் இருந்து பரிசு அறிவிப்பது வரை எப்படி செயல்பட வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர்கள் அவர்கள் தான். அவர்கள் மட்டும் இல்லை என்றால் நிச்சயம் ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாகி இருக்கும்.
மேலும் நடுவர்கள் என்பதால் இவர்கள் அனைத்து பதிவுகளையும் மிகக் கவனமாக படித்தாக வேண்டும், இல்லை என்றால் மதிப்பெண் வழங்குவதில் சிக்கலாகிவிடும். இந்தப் போட்டிக்காக நேரம் ஒதுக்கி கடிதங்களையும் படித்து மதிப்பெண் வழங்கி வருகிறார்கள்.
பெருமதிப்பிற்குரிய நடுவர்களான அப்பாதுரை சார், வாத்தியார் பாலகணேஷ், எங்கள் ஸ்ரீராம் சார், ரஞ்சனி நாராயணன் அம்மா ஆகிய நால்வருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். நீங்கள் இல்லை என்றால் இந்தப் போட்டியின் பாதை எந்த பாதையில் பயணித்து இருக்கும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
இதுவரை வெளியான கடிதங்களின் மொத்த தொகுப்புகள்
முதல் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள்
ஹேமா - அன்பான செல்ல ஹிட்லருக்கு
இரண்டாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள்
வெற்றிவேல் - காதல் கடிதம் திடங்கொண்டு போராடு பரிசுப் போட்டி
மாலதி - திடங்கொண்டு போராடு காதல் கடிதம்
மூன்றாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள்
கிரேஸ் - எழுத மறந்த காதல் கடிதம்
நான்காம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள்
அம்பாளடியாள் - அன்புள்ள சத்யாவிற்கு
ஐந்தாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள்
ராஜராஜேஸ்வரி - நவீன கடிதம்
கவிநாகா - காதல் கடிதம்
வெளங்காதவன் - மொட்டக் கடுதாசி
***********************
ஆறாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள்
Tweet |
என்ன சீனு எனக்கு சொந்தம் இல்லாத ஒன்றுக்கு என்னை ஒனர் ஆக்கீட்டீங்க ? வலைத்தளம் கூகுல்காரனது அவன் அது இலவசம் இல்லையென்றால் நாம துண்டைக்காணும் துணியை காணும் என்ற ஒட வேண்டியதுதான்
ReplyDeleteha ha ha ha.....
Deleteஉங்களுக்கு காதல் ஆசை வந்தாலும் வந்தது அதன்விளைவாக நான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெறட்டும் என்று இப்படி ஒரு போட்டி வைத்து காதலில் விழாதவர்களையும் காதலில் விழ வைச்சீட்டீங்களே
ReplyDelete:) :)
Deleteபொருத்தமான நடுவர்கள், பரிசு பெறுபவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteகலக்கிய உங்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்...
அன்புள்ள காதலிக்கு...! இப்படிக்கு சீனு - இணைப்பை சேர்க்கவில்லையா...?
கலக்கல் சீனு. நாங்கள் மதிப்பெண்கள் இட்டாலும் , அவற்றை வாரா வாரம் தொடுத்து, கடைசியில் தொகுத்து என்று உங்களுக்கும் ஏகப்பட்ட பணிகள். சிறப்பாகவே பாதி கிணறு வந்து விட்டீர்கள்/ வந்து விட்டோம்! மீதியும் நல்லபடி நிறைவு பெறும்.
ReplyDeleteபோட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ! , All the best மக்காஸ்
ReplyDeleteகாதல் கடித போட்டி என்று ஒன்றை ஆரமித்தது சிறப்பாக அதை முடித்து பதிவுலக நண்பர்கள் தோழிகள் மனதில் ஆழத்தில் கிடந்த காதலை தட்டி எழுப்பிவிட்ட பெருமை நண்பர் சீனுவை சேரும் .மேலும் நான் முதலில் தயங்கினாலும் என் பருவ காலங்களை மீட்டுக்கொள்ள இந்த பதிவை பயன்படுத்திகொண்டேன் .காதல் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு ரூபமாகவோ அரூபமாகவோ ஆழ்மனதில் சிம்மாசனம் போட்டுகொண்டு இருக்க கூடிய அற்புத உணர்வுதான் அதை எப்போதும் கொண்டாட வேண்டும் அதற்க்கு இப்படியான ஆரோக்கியமான போட்டிகளை வரவேற்கிறோம் .சிறப்பான நடுவர்களை தேடி பிடித்து இருக்கிறீர்கள் போட்டியில் வெற்றி பெரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் பரிசு பெறாதவர்கள் காதலை இன்னும் வலிமையை உறுதியாய் வெளிபடுத்த அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅடடே இவ்வளவு பேர் எழுதியிருக்காங்களா .. முதலில் இவர்களை ஒருங்கினைத்ததற்கு உங்களுக்குதான் வாழ்த்து சொல்லணும்.இந்த வார சனி ஞாயிறு விடுமுறையில் எல்லா கடிதத்தையும் படித்து விடலாம்னு இருக்கிறேன்.
ReplyDeleteநான் முதலிலேயே சொன்னேன் .. இத்தனை பேரையும் ஒரு இடத்தில் சந்திக்க வைத்த சீனுவை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இந்த பகிர்வின் மூலம் புது நண்பர்களும் கிடைத்தனர். சீனு வேறு எந்த தலைப்பு கொடுத்திருந்தாலும் இந்த அளவுக்கு வரவேற்பு இருந்திருக்காது. ஆனால் கடைசி வாரம் மொத்தமாக வந்த கடிதங்களை படிக்க இயலவில்லை. எதையுமே மொத்தமா பார்க்க திகட்டத்தான் செய்யும் . கண்டிப்பாக நேரம் இருக்கும் போது படிக்கிறேன். நன்றி சகோ.
ReplyDeleteஆறு வாரங்கள் தொடர்ந்து கலக்கிய உங்கள் ' திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி'க்கு வாழ்த்துக்கள் ....
ReplyDeleteமொத்தமாக எல்லாக் கடிதங்களுக்கும் இணைப்பு கொடுத்ததற்கு நன்றி சீனு!
ReplyDeleteஇத இத இதத்தான் எதிர்பார்த்தேன்!
இது ஒரு கூட்டு முயற்சி. ஊர் கூடி தேர் இழுத்திருக்கிறோம். எனக்கு இளமைக் காலத்தை நினைவுபடுத்திக் கொள்ள கிடைத்த ஒரு வாய்ப்பு!
கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
முதலில் இப்படி ஒரு சிந்தனை வந்ததுக்கும் அதன் மூலம் பதிவுலகில் பலரை இணைத்து வைத்ததுக்கும் வாழ்த்துக்கள் சீனு!
ReplyDeleteகடைசிவாரம் வந்த சில கடிதம் படிக்கவில்லை இந்தவாரம் படித்துவிடுவேன்.காதலில் உணர்வுகளை தயக்கம் இன்றி பதிவு செய்ய களம் இந்தப்போட்டி.பரிசைவிட நெஞ்சில் இருந்த உணர்வுகளை பதிவாக்கி உங்கள் மூலம் நானும் இரண்டு பதிவு தேற்றிவிட்டேன்:)))
ReplyDeleteபோட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் இன்னொரு தரம்!
அனைவருக்கும் வாழ்த்துக்கள் கலக்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள் சீனு!
ReplyDeleteஇப்படி ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த சீனுவிற்கு பதிவு எழுதிய அனைவரும் சேர்ந்து ஒரு ஓ போடுங்க பார்க்கலாம்! :)
ReplyDeleteபோட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....
பரிசு பெறப் போகும் நண்பர்களுக்கு பாராட்டுகள்.
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....
ReplyDeleteபரிசு பெறப் போகும் நண்பர்களுக்கு பாராட்டுகள்.
தொகுப்புக்கு நன்றி சீனு. போட்டி முடிந்து விட்டது இல்லையா?
ReplyDeleteசீனுவின் முயற்சிக்கு அழுத்தமான கைகுலுக்கல்கள்.,கரம் கோர்த்த அனைவருக்கும் பாராட்டுகள்,வாழ்த்துகள்.
ReplyDeleteஅற்புதமான விஷயம்....
ReplyDeleteபோட்டி என்று ஒன்றை ஆரம்பித்து.... அதற்கான தலைப்புக்காக அழகான ”இனிமையான இம்சை” அதான்பா காதல் கடிதம்.... பங்குப்பெற்ற அனைவருக்கும் நடுவர் குழு எல்லோருக்குமே மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...
சாதித்து விட்டீர்கள்!முடிவுக்காகக் காத்திருக்கிறேன்
ReplyDeleteசீனு,
ReplyDeleteஹேமாவின் கடித இணைப்பு பிரேம்குமாரின் தளத்திற்குச் செல்லுகிறது. சரி செய்யுங்கள், ப்ளீஸ்!
காதல்......
ReplyDeleteகடிதம் எழுதாவிட்டாலும், இன்று காதல் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் சீனு....
http://venkatnagaraj.blogspot.com/2013/08/blog-post_5.html
முடிந்தபோது படிக்கலாம்! :)
அனைவருக்கும் பரிசு கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் சீனு... ஹி ஹி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்....
நண்பா, ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்..
ReplyDeletehttp://www.kovaiaavee.com/2013/08/blog-post.html