முன் குறிப்பு :
காதல் கடிதப் போட்டியில் பங்குகொண்டு எழுதியிருக்கும் பதிவர் அல்லாத ஒருவரின் முதல் கடிதம்.
ரேவதி சதீஷ் :
தம்பி தளத்தில் எழுதிவரும் சதீஷ் அண்ணா அவர்களின் மனைவியே ரேவதி சதீஷ். இவர் தற்போது நர்சிங் படித்து வருகிறார், இவர்களது திருமணம் காதல் திருமணம், சே பாரதி இவர்களது சுட்டிக் குழந்தை. காதலித்து மணம் புரிந்த தனது ஆர்மி கணவருக்காக எழுதிய காதல் கடிதம்.
உன் காதலே அன்றி
உன் காதலே அன்றி
வேறொன்றுமில்லை
எனது வாழ்வின் அடையாளமாய்...
எட்டு வருசத்துக்கு அப்புறம் இப்படி ஒரு கடிதம்.. என்னப்பா எழுத? ஒன்று மாத்தி ஒன்று எழுத சொல்லும் எத்தனையோ நினைவுகளில் எழுத்துக்கள் முட்டுகின்றன. எனக்கு இன்னும் ஆச்சரியமா இருக்குப்பா. எப்படி நீயும் நானும் ஒன்னு சேர்ந்தோம்?
உன்ன மொத மொத எப்ப பார்த்தேன்? ஆ... ஆ.. ஒரு கருக்கலான நேரம் களத்தில் வழி மறிச்சு என்ன கேட்ட? ஏங்க உங்க போட்டோ கொடுங்க... பாஸ்போர்ட் போட்டோனா கூடப் பரவாயில்லை... லூஸாடா நீ ? ஒரு பொண்ணுகிட்ட முதல் முதலாக என்ன பேசனும்னு கூட தெரியல.
அப்ப உன் முகத்தைக் கூட சரியா பாக்கலை. ஆச்சர்யம் கலந்த பயத்தில் ஒன்னும் சொல்லாம போய்ட்டேன். யார் நீ? மறுநாள் களத்துப் பக்கம் நீ இருந்தா பாக்கனும்னு ஒரு ஆவல். (காதல்?) முதல் சந்திப்பிலேயே போட்டோ கேக்கனும்னா எவ்ளோ தைரியம் வேணும்? நீயும் ராஜேஸ் அண்ணாவும் காம்பவுண்ட் சுவர்ல ....பாக்கவா வேணாமா? அப்பவும் சரியா பாக்கல.
பார்க்க மறுத்த பயம் ...
பார்க்க வைத்த தைரியம் ...
இரண்டுக்கும் நடுவில் இருந்த
காதல் தான் நீ!!
அப்புறம் தெனமும் நான் வரும்பொழுது தெரு விளக்கை நீ ஆன் பண்ணும் போது தான் எனக்கு உன் முகம் அறிமுகம். நினைச்சா சிரிப்பா வருது.
முதல் முதலாக நெல்லைய்ப்பர் கோயிலில் என் பிறந்த நாள் பரிசாக நீ கொடுத்த கிப்ட்டை நான் மறுத்தப்ப உன் கண்ணுல பார்த்த கலக்கம்தான் என்னை கலக்கிடுச்சு. அதுக்கப்புறம் நாம பேசினது, சந்தித்தது, காதலிச்சது எல்லாம் கனவா போகாம நனவானது எல்லாமே உன்னால்தான். நீ என்னை நேசிச்ச மாதிரி நான் உன்னை நேசிச்சேனான்னு கேட்டா நிச்சயமா இல்ல. நீ உன் உசுருக்கும் மேலா என்னைய காதலிச்சன்னு தெரியும். அந்த அளவுக்கு என்னை காட்டிக்கொள்ள கூட நீ வாய்ப்பு கொடுக்கல.
இந்த நேரம் நான் ஒரு உண்மையை சொல்லித்தான் ஆகணும். சதிஷ், அந்த நேரம் நம்ம ரெண்டு வீட்டுக்கும் தெரிஞ்சு நம்மளை கேள்வி கேட்டப்ப நிஜமா நான் ரெண்டு மனசா இருந்தது தான் உண்மை. உன்ன விட்டுடலாம்னு ஒரு மனசு... நீ வேணும்னு இன்னொரு மனசு. ரொம்ப தவிச்சுட்டேன். ஆனா உன்ட்ட இருந்த உறுதிதான் ஜாதி மதம் தாண்டி இன்று உன்னோடு சந்தோஷமாக வாழ வைத்துள்ளது. உன்னாலே தான் இந்த காதல் வாழ்க்கை. இந்த மாதிரி வாழ்க்கை அமைய தகுதியானது தானா 'நானும் என் காதலும்?'
நீ ஆர்மியில் சேர கிளம்பும் போதுதான் முதன்முதலாய் என் கைப்பற்றி பேசினாய். எவ்வளவு குளிர்ச்சி தெரியுமா? வெட்கத்தை விட்டு உண்மையை சொன்னால் அன்னைக்கு நீ முத்தமிடுவாய் என்று காத்திருந்தேன். எவ்வளவு நாசூக்கான approach. சான்சே இல்லை. உன் கண்களில் தேங்கி நின்ற பிரிவும்... காதலும்... அது விவரிக்க இயலாதது. இறுக்கமான கைகளை பொத்துக் கொண்டு வந்தது காதலா? கண்ணீரா? அடக்க இயலா காதலில் என் பெண்மையின் இயல்பு மீறி வெட்கம் துறந்து உனக்கு நான் தந்த அந்த முதல் முத்தம்தான் உன் மேலான என் காதலை எனக்கே அறிமுகம் செய்தது. அன்றுதான் என் பெண்மையின் உண்மையை நான் உணர்ந்தேன் என்று கூட சொல்லலாம்.
மொத்த காதலும் நிறைகிறது
முதல் முத்தத்தில் ....
உனது ஒவ்வொரு முத்தமும்
எனக்கு
முதல் முத்தமே !!
பாரதியை கூட பத்து மாசம்தான் சுமந்தேன். உன் மேலான காதலை இன்னும் சுமந்து நிற்கிறேன். பிரசுவிக்கத்தான் தெரியவில்லை. நீயோ மழையை போல காதலை பொழிந்துவிட்டு சென்று விடுகிறாய். திருமணம் போன்ற கூட்டமான நிகழ்வுகளில்தான் அதிகமாக தனிமையை உணர்கிறேன். எப்பவும் தனியாகவே இருக்கும் உன்னை போன்ற ஆர்மி கணவர்களுக்கு என்ன புரியும்?
காலங்கள் கடக்க கடக்க உனது மேலான ஈர்ப்பு அதிகரிக்கிறதே தவிர குறைவதில்லை.. உன்னோட இயல்பை, காதலை நீ மாற்றிக் கொள்வதே இல்லை. புதுப்பித்துக் கொள்கிறாய். எதிர்பார்த்த இடங்களில் ஏமாற்றத்தையும் எதிர்பாரா இடங்களில் ஆச்சரியத்தையும் தந்து அசத்தி விட்டு சென்று விடுகிறாய் நீ. அதிலிருந்து மீள்வதற்க்குள் மீண்டும் வந்து விடுகிறாய். உனது ஆபத்தான வேலையில் மீண்டும் வராமலேயே போய் விட்டால்.... நினைத்தாலே பயமாக உள்ளது .கை நடுங்குகிறது. உனக்கு பிடித்த பாடலை திடீரென கேட்கும் போதும், Yamaha வின் உறுமலை கேட்கும் போதும் மளுக்கென்று வரும் கண்ணீரை அடக்க முடிவதில்லை.
சிறு வயதில் பத்து பைசா சேர்த்து ருசித்த தேன் மிட்டாய், சவ்வு மிட்டாய், இலந்தைப்பழம் என்று வாங்கி தந்த குழந்தை காதலாகட்டும், கையை கீறிக் கொண்ட விடலை காதலாகட்டும்,காலியான தியேட்டரில் வாலிபக் காதலாகட்டும், மார்போடு உறங்க வைத்து உறங்காமல் இருந்த தந்தைக் காதலாகட்டும், ஒடம்புக்கு முடியாதப்ப கவனித்த பக்குவமான பரிவான வயோதிக காதலாகட்டும்... என்ன கிடைக்க வில்லை எனக்கு ?
கஷ்டங்கள் எதுவும் நினைவில் இல்லை. அதுதான் நீ தந்த வரமே. ஓய்வான காலங்களில் சாய்வான நாற்காலியில் உன்னோடான ஒரு மாலை பொழுதில் மரணம் என்னை எடுத்து சென்றால் அதை விட பாக்கியம் எதுவுமில்லை. நீ ஏற்காத கடவுளிடம் நான் வேண்டுவது மறுபடி மறுபடியும் உன்னோடான வாழ்வும் அதில் உனக்கு கொடுக்கும் அளவுக்கு காதலும் மட்டுமே...... எனது முதல் சுவாசம் உன் மடியில் இல்லாது போயிருக்கலாம். ஆனால் என் கடைசி சுவாசம் உன் மடியில்தான் பிரிய வேண்டும்.
மடி சாய்ந்த நேரம் மறுபடியும் பிறந்திருப்பேன் உனக்கான காதல் உலகத்தில்....
உன் காதலே அன்றி
வேறொன்றும் இல்லை
என் வாழ்வின் எச்சமாக....
உனதானவள்...
கோலமிட்டது நான் என்றாலும் அதில் வர்ணமிட்டது என் கணவரின் கவிதை... இப்படியான ஒரு வாய்ப்பை தந்த சீனுக்கு நன்றி.
Tweet |
சதீஷ் அண்ணே சத்தியமா சொல்றேன் நீங்க நான்லா கடைய இழுத்து மூடிட்டு போயிறலாம், அண்ணிய ப்ளாக் எழுத சொல்லுங்க, நம்மள விட ரொம்ப நல்ல எழுதுறாங்க... மீதிய அப்புறமா சொல்றேன்...
ReplyDeleteஇதை நான் வழிமொழிகின்றேன் ....!
Deleteநானும் இதை வழி மொழிகிறேன்...
Deleteநான் கடைய இழுத்து மூடுறதுல, உங்களுக்குலா அம்புட்டு சந்தோசம்... இருக்கட்டும் இருக்கட்டும்
Deleteஇதுவரை இந்த போட்டிக்கு வந்த கடிதத்திலே இந்த கடிதம்தான் மிகச் சிறப்பாகவும் உண்மையான காதல் உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கிறது. இது முதல் பரிசை கண்டிப்பாகவெல்லும்... சதிஷ் & ரேவதி சதிஷ்க்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உங்கள் காதல் வெற்றி பெற்றது போல இந்த கடிதமும் வெற்றி பெறும் கண்டிப்பாக
ReplyDeleteநன்றிகள்
Deleteகூட்டமான நிகழ்வுகளில் தனிமை, இடையில் வரும் சிறு கவிதைகள், இரண்டு மனமாக நின்று பெற்றவர்களை விட முடியாத பாசத்திலும் தவித்தது, (உனது மேலான ஈர்ப்பு என்பதைவிட, 'உன்மேலான ஈர்ப்பு' என்று வந்தால் சொல்ல நினைத்த அர்த்தத்தைத் தரும்!) பல வார்த்தைகள் உணர்வுகளால் சூழப் பட்டுள்ளது. அருமை. கவிதைகள் கணவருடையது என்ற வரிகளும் ஆச்சர்யப் படுத்தின, சந்தோஷப்படுத்தின. ஒரு உணர்வுபூர்வமான கடிதம்.
ReplyDeleteநன்றிகள்
Delete" பார்க்க மறுத்த பயம் ...
ReplyDeleteபார்க்க வைத்த தைரியம் ...
இரண்டுக்கும் நடுவில் இருந்த
காதல் தான் நீ!!"
வரிகள் மிகவும் அருமை.அழகானதொரு காதல் கடிதம். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் திருமதி.ரேவதி சதீஷ் அவர்களே !!!
நன்றிகள்
Delete/// எனது முதல் சுவாசம் உன் மடியில் இல்லாது போயிருக்கலாம். ஆனால் என் கடைசி சுவாசம் உன் மடியில்தான் பிரிய வேண்டும்... ///
ReplyDeleteரசிக்க வைக்கும் காதல்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
நன்றிகள்
Deleteம்ம்ம்ம்... நல்ல கடிதம்... ரசனையுடன் படிப்பவர்களுடைய முகபாவனை சந்தோசம், வேதனை,துக்கம், ஆச்சரியம், கோபம், காதல் என்று மாறிக்கொண்டே இருப்பதை தடுக்க முடியாது...
ReplyDeleteசூப்பர் கமெண்ட் ஸ்பை ...!
Deleteபுல்லரிக்குது
Delete// பிரசுவிக்கத்தான் தெரியவில்லை//
ReplyDelete"பிரசவிக்கத்தான் தெரியவில்லை" என்றிருக்கவேண்டும்... இது சகோதரி ரேவதியின் பிழையா அல்லது தட்டச்சு செய்தவரின் பிழையா?
சார் இது நெல்லைத் தமிழ், எழுத்துப் பிழை இல்ல...
Delete//இது சகோதரி ரேவதியின் பிழையா அல்லது தட்டச்சு செய்தவரின் பிழையா?// உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது,தட்டச்சி அனுப்பிவரும் அவரே :-)
//தட்டச்சி அனுப்பிவரும் அவரே :-)//
Deleteஇதுலேயே நல்லா தெரிதுவே...
"அனுப்பியவரும்"னு வரணும்வே
ஆமாம் அவரு ஸ்கூல் பையனா, ஸ்கூல் வாத்யாரா?
//ஆமாம் அவரு ஸ்கூல் பையனா, ஸ்கூல் வாத்யாரா?//
Deleteஇது ஒரு நல்ல கேள்வி ...! சொல்லுங்க சாமி சொல்லுங்க ...! எங்களுக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும் ...!
என்னுடைய தவறு தான்
Deleteஸ்கூல் பையன யாருப்பா மிரட்டறது.. அவர் மேல கை வைக்கிறதுக்கு யாருக்காவது தைரியம் இருக்கா.. ;-)
Delete'// பார்க்க மறுத்த பயம் ...
ReplyDeleteபார்க்க வைத்த தைரியம் ...
இரண்டுக்கும் நடுவில் இருந்த
காதல் தான் நீ!!//
என்ன வரிகள்!. தபூ சங்கர் தோத்துடுவார். ஒவ்வொரு வரியிலும் காதல் கரைஞ்சு கிடக்கு.
ரெண்டு மனசே இருந்ததுன்னு சொன்ன உண்மை ஆகட்டும், நீ முத்தம் தருவாய் என நினைத்து ஏமாந்ததை சொல்வதாகட்டும்! அப்பா!எவ்வளோ நாள் சேத்து வச்சிருந்தாங்களோ தெரியல
சகோதரி ரேவதி!
பரிசு நிச்சயம்! வாழ்த்துக்கள்
நன்றிகள்
Deleteசில இடங்களில் பேச்சுவழக்காகவும் பல இடங்களில் உவமையுடன் கூடிய உரைநடை வழக்காகவும் இருப்பது முரண்பாடாக இருக்கிறது. முழுக்க முழுக்க ஒரே மாதிரியான எழுத்து நடையில் கொண்டு சென்றிருக்கலாம்... இருந்தாலும் ரசிக்க வைக்கும் கடிதம்... உண்மையாகவே உணர்ந்து எழுதியதாயிற்றே.... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்....
ReplyDeleteநீங்க சொல்றது சரி தான், ஆனா நானும் எழுதத் தொடங்கும் போது இப்படித் தான் ஆரம்பித்தேன், எழுத எழுத பழகிவிடும், அதனால் ஏதோ தெரியாம பண்ணிடாங்க மன்னிச்சு :-) ஹா ஹா ஹா cool
Deleteசாரு ரெம்ப ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு...!
Deleteநெற்றிக்கண் தொறப்பினும் குற்றம் குற்றமே ...!
தமிழ்ல ஸ்பைக்கு புடிக்காத ஒரே வார்த்த ......! அதே அதே அதேதான் ...!
கமான் ஸ்பை கமான் ...! ஐ வான்ட் மோர் ஸ்ட்ரிக்ட்டு ஃப்ரம் யூ ...!
ஸ்கூல் பையன்னு பேரு வைத்துட்டு வாத்தியாரு மாதிரி, ஏதோசின்ன புள்ளை தெரியாம செய்த தவற மன்னித்து கொள்ளுங்கள் நீங்க தமிழ்அய்யாவா
Deleteதிரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteஞானும் ...!
Deleteஎன்ன வச்சி காமெடி எதுவும் பண்ணலையே நன்றி
Deleteஉணர்வுகள் நிரம்பிய கடிதம்! இடையிடையே வரும் குறுங்கவிதைகள் மிக ரசிக்க வைத்தது!
ReplyDeleteநன்றிங்க
Delete// எதிர்பார்த்த இடங்களில் ஏமாற்றத்தையும் எதிர்பாரா இடங்களில் ஆச்சரியத்தையும் தந்து அசத்தி விட்டு சென்று விடுகிறாய் நீ. // பல மனிதர்கள் உண்மையாக்கும் வாசகம், ரசித்தேன்.... வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிகள்
Deleteகடவுள் நம்பிக்கை இல்லாதவர் தன் காதலிக்கு கொடுத்த முதல் பரிசு, நெல்லையப்பர் கோயிலில்... காதலுக்காக எதையும் ஏற்றுக்கொள்ளும் மனது.
ReplyDelete//திருமணம் போன்ற கூட்டமான நிகழ்வுகளில்தான் அதிகமாக தனிமையை உணர்கிறேன்// உண்மை... உண்மை!
//தகுதியானது தானா 'நானும் என் காதலும்?// இந்தக் கேள்வி மனதில் இருக்கும்வரை உங்கள் காதல் அழியாது என்பது நிச்சயம்.
//உனது ஒவ்வொரு முத்தமும்
எனக்கு
முதல் முத்தமே !!// செம கோல் போட்டீங்க!
குழந்தை காதல், விடலை காதல், வாலிப காதல், தந்தை காதல், வயொதிக காதல்...ம்ம்ம்ம் காதலில் Phd பட்டம் பெற தகுதியானவர்தான் நீங்கள். வாழ்வாங்கு வாழ்க உங்களின் காதல். வாழ்த்துக்கள்.
உண்மை தான் எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாங்க அப்படி அவுங்க செய்யலைன்னா அது நிட்சையம்மா எனக்கு நல்லதா இருக்காது என்கிற நம்பிக்கை நிறையவே உண்டு.
Deleteநல்லா இருக்குங்க. முதல் பரிசை வெல்ல வாழ்த்துக்கள். கொஞ்சம் ஒப்பேத்தி வச்சிருந்தேன், இந்த கடிதம் படிச்சதும்..., எனக்கு நம்பிக்கை இல்லாம போய்ட்டு.., மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கனும் போல:-(
ReplyDeleteமறுபடியும் மொதல்ல இருந்தா .....? பாத்துங்க டைம் முடிஞ்சுடப்போது ....!
Deleteகஷ்டங்கள் எதுவும் நினைவில் இல்லை. அதுதான் நீ தந்த வரமே. ஓய்வான காலங்களில் சாய்வான நாற்காலியில் உன்னோடான ஒரு மாலை பொழுதில் மரணம் என்னை எடுத்து சென்றால் அதை விட பாக்கியம் எதுவுமில்லை. நீ ஏற்காத கடவுளிடம் நான் வேண்டுவது மறுபடி மறுபடியும் உன்னோடான வாழ்வும் அதில் உனக்கு கொடுக்கும் அளவுக்கு காதலும் மட்டுமே.
ReplyDeleteதனிமையின் தவிப்பை அப்பட்டமாக உணர்த்திய வரிகள். வாழ்த்துக்கள் தோழி.
நிஜமான என் தவிப்பை எழுதி இருக்கீங்க
Deleteஇதுதான்யா காதல் கடிதம் ...! வலி , பிரியம் , தவிப்பு , ஏக்கம் ,எதிர்பார்ப்பு , ஏமாற்றம் ன்னு அத்தனை உணர்வுகளையும் வெகு எதார்த்தமாக வெளிப்படுத்தும் அட்டகாசமான கடிதம் ...! ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப நல்லாருக்கு ...!
ReplyDelete//மொத்த காதலும் நிறைகிறது
முதல் முத்தத்தில் ....
உனது ஒவ்வொரு முத்தமும்
எனக்கு
முதல் முத்தமே !!//
சான்சே இல்ல ...!அழகு அழகு அழகு ....!
இது வரையிலும் எழுதியவர்கள் கடிதங்கள படிச்சவகையில பெண்கள் தானப்பா கலக்குறாங்க ...!
நன்றிகள்
Deleteநல்லாருக்குவோய்!
ReplyDeleteநன்றிங்க அண்ணா அது என்ன பேரு
Deleteஒவ்வொரு காலகட்டத்திலும் மாறி மாறி வரும் காதலை புரிந்து கொண்டு, (குழந்தைக் காதலிலிருந்து..வயோதிகக் காதல்வரை - என்ன கிடைக்கவில்லை எனக்கு?) கணவனைப் புரிந்து கொண்ட மனைவியாக - இன்னும் அவனது காதலியாக இருக்கும் ரேவதி சதீஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்!
ReplyDeleteபல மனைவிமார்களையும், கணவன்மார்களையும் ரொம்பவும் சிந்திக்க வைத்துவிட்டீர்கள் அந்த 'என்ன கிடைக்கவில்லை எனக்கு?' என்ற ஒரு கேள்வியில்!
நன்றி அம்மா உங்கள் மனதிற்கு(பாராட்டும்) என்னமோ தெரியவில்லை உங்கள் பாராட்டு எனக்கு என்னமோ நான் மறுபடியும் காதலில் ஜெயித்த சந்தோஷத்தை தருகிறது மறுபடியும் நன்றிகள்.
Deleteஅழகு அருமை இரண்டு கலந்த காதல் கடிதம் சூப்பர் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிகள்
Deleteநாம இன்னும் வளரனும்...
ReplyDeleteபாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். கொழுந்தனாருக்கு தான் நன்றி சொல்லணும் என் காதலை மறுபடியும் என் காதல் கணவருக்கு நன்றிகளுடன் கூடிய என் ஆசைகளை வெளிபடுத்த உதவியதற்கு.
ReplyDeleteஎளிய நடையில் ஓர் அருமையான காதல் (கவிதை) கடிதம்.. காதலிக்கும் போது கிடைத்த சந்தோசத்தை விட, காதலித்த நாட்களில் நடந்தவற்றை இப்போது நினைத்து அசைபோடுவது இன்னும் சுகமே.. அந்த காதலின் வாசத்தை அருமையாக சுவாசித்து எழுதியிருக்கிறீர்கள். நாங்களும் வாசித்து மகிழ்ந்தோம்..
ReplyDeleteதங்கை ரேவதி மற்றும் சதீஷ் அவர்களுக்கும் ஆவியின் வாழ்த்துகள்..!
அண்ணாச்சி , நீங்க நம்மூரா?. அண்ணி , பின்னிட்டாங்க.
ReplyDelete"கடமை உணர்ச்சி
கண்ணில் இருக்க
காதல் கவிதை தீட்டிய
கணவரே ,"
வாழ்த்துக்கள்....
படிக்கும் போதே கண்களில் ஆனந்தக் கண்ணீர்.... மொவரும் நலமுடனும், அன்புடனும் செல்வத்துடனும் என்றும் வாழ்ந்திட இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்....
ReplyDelete//மொவரும் //
Deleteசாரி.. அது மூவரும்....
(இதுக்கு தான் சீனு ப்ளாக்ல கம்மென்ட் போட கூடாது... :) )
கடிதமும் ,கவிதையும் மனதை வருடுகின்றது போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒரு உண்மையான ஜீவனுள்ள காதல், இந்த கடிதத்தில் மென்மையாக இழைந்தோடுகிறது. வெறும் கற்பனையில் வடிக்கும் கடிதத்தில் எப்படிவேண்டுமானாலும் உவமையைச் சொருகி மெருகேற்ற முடியும்.. ஆனால் இது நிஜமான காதல் கடிதம் என்பதால் கொஞ்சம் உயிரோட்டமாகவும் இருக்கிறது. இயல்பான நடை.. வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteகாதல் காதல் காதல்.
ReplyDeleteஒவ்வொரு வரிகளிலும் காதல் தெறிக்கிறது வித்தியாசமான கடிதம்
ReplyDeleteபின்னிடிங்க போங்க ................
ReplyDeleteஅசத்தலான கடிதம் சீனு. என்னைக் கேட்டால் இதற்கு முதற் பரிசு தந்திடுவேன்!
ReplyDeleteசதீஷ் தம்பதியர் வாழ்வில் தொடர்ந்து தென்றல் வீசட்டும்.....
இயல்பான நடையில் ஒரு காதல் கடிதம் (கவிதை )
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்
பாராட்டப் பட வேண்டிய நெகிழ்ச்சியான கடிதம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteநெகிழ்ச்சியான காதல் கடிதம்... வெற்றி பெற வாழ்த்துக்கள்....
ReplyDeleteaaaaaaaaaaaaaaaaaaaaahhhhhhhhhhhhhhhhhhhhhhhaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
ReplyDeleteகுழந்தை காதல், விடலை காதல், வாலிப காதல், தந்தை காதல், வயொதிக காதல்...ம்ம்ம்ம் காதலில் Phd பட்டம் பெற தகுதியானவர்தான் நீங்கள். வாழ்வாங்கு வாழ்க உங்களின் காதல். வாழ்த்துக்கள்.
ReplyDeleteபோட்டியில் வென்று பரிசு பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
எல்லாருமே எல்லா விசயத்தையும் சொல்லிட்டாங்க (comments)
ReplyDeleteஇதுல நான் புதுசா சொல்ல ஒன்னும் இல்லை
இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது
//கஷ்டங்கள் எதுவும் நினைவில் இல்லை. அதுதான் நீ தந்த வரமே.//
நச்சுனு சொல்லிடாங்க
பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் ரேவதி! உங்கள் காதல் மேலும் மேலும் இன்று போல் வாழ வாழ்த்துக்கள்!
ReplyDeleteசதீஸ் உங்களை வெல்ல யாருமில்லை
ReplyDeleteகவிதை எழுதத் தெரிந்த மகள் காதலை இத்தனை அற்புதமாய் விளக்கியது வெற்றிக்காகவே