11 Jul 2013

சொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 7

அத்தியாயம் 1 | அத்தியாயம் | அத்தியாயம் 3 | அத்தியாயம் |
அத்தியாயம் 5 | அத்தியாயம் 6

முன்கதை சுருக்கம் 

வினோத் விக்ரம் பாலாஜி மூவரும் ஒரே துப்பறியும் நிறுவனத்தில் வேலை செய்தவர்கள். தற்போது பாலாஜி நெல்லை கலெக்டர். கலெக்டர் பங்களா புகுந்து பாலாஜி மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. கார்த்திக் நெல்லை இன்ஸ்பெக்டர். இந்த கேஸை ஆராய்பவர். ஆஸ்பத்திரியில் அனுமதிகப்பட்ட பாலாஜி காணாமல் போய் பின்பு விக்ரம் மூலம் பாதுகாப்பாக மறைக்கப்பட்ட விஷயம் தெரிகிறது. இந்த இடைப்பட்ட வேளையில் பாலாஜி மீது தாக்குதல் நடத்த ஆஸ்பத்ரியினுள் நுழைந்த மர்ம நபரை போலீசார் தப்ப விட்டுவிட்டனர். அவனது கைரேகை மட்டும் கிடைத்துள்ளது. கலெக்டர் பங்களாவில் ஏதேனும் தடயம் சிக்குமா என்று இன்ஸ்பெக்டர் கார்த்திக்குடன் வினோத்தும் விக்ரமும் தேடிக் கொண்டுள்ளனர்.    

இனி 



தன் கையில் கிடைத்த பொருளையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம், சிதைந்த நிலையில் அதன் வடிவமே முற்றிலும் மாறி இருந்தது. அதன் மேல் சுற்றியிருந்த தாளில் சீன அல்லது ஜப்பானிய மொழியில் எழுதியிருந்த எழுத்துக்கள் அழிந்தும் அழியாமலும் காணப்பட்டன, நிச்சயம் அது ஒரு பெப்ஸி டின் போல் உருளையாக இருந்திருக்க வேண்டும்,  அதனை மூக்கின் அருகில் கொண்டு சென்று ஆர்வத்துடன் முகர்ந்து பார்த்தான், தீய்ந்து போன பேட்டரியில் இருந்து வரும் கார்பன் வாடையை நீங்கள் முகர்ந்து இருந்தால் ஒருமுறை நியாபகப்படுத்திப் பாருங்கள். 

நின்ற இடத்தில் இருந்தே கலெக்டர் பங்களாவை வெறித்தான். நான்கு பேர் நொடி பொழுதில் தப்பி ஓடினார்கள் என்று வீட்டு வேலையாள் சொல்லியது நினைவில் வந்தது, இவர்கள் தவிர்த்து டிரைவர் ஒருவன் என்றாலும் குறைந்தது ஐந்து பேராவது வந்திருக்கலாம். கலெக்டர் பங்களாவுக்குள் நுழைந்து கொலை செய்ய முயன்றதை தன் கற்பனையாக்குள் கொண்டுவர முயன்ற போது கைபேசி ஒலிக்க ஆரம்பித்தது, திரையைத் தடவினான். 

"சொல்லுங்க பாஸ்"

"விக்ரம் உடனே இங்க வா, சம்திங் இன்ட்ரெஸ்டிங்"

"ஏன் பாஸ், நிஜாமவுமே ஆவிய பார்த்துடீங்களா, அது கூட பேசிட்டே இருங்க, தோ வந்துர்றேன்" என்று கூறிய விக்ரமின் பதிலை பொருட்படுத்தாமலேயே இணைப்பைத் துண்டித்தான் வினோத், நிச்சயம் கோபப்பட்டிருப்பான் அல்லது சிரித்திருப்பான். 

அந்த அறையினுள் விக்ரம் நுழையும் போது கார்த்திக்கும் வினோத்தும் பாலாஜியின் டைரி குறித்து பேசிக் கொண்டிருந்தனர், விக்ரம் அறையினுள் நுழையவும் அவனிடம் அந்த டைரியின் பக்கத்தை நீட்டினான் வினோத்.

முதலில் மிகத் தெளிவாக நிதானமாக எழுதத் தொடங்கி, "ஊரைப் பொறுத்தவரை அவன் வெறும் மணல் கொள்ளையன், ஆனால் யாருக்கும் தெரியாது அவன் ஒரு தேசத் துரோகி " என்ற இடங்களில் எழுத்துகளின் அழுத்தம் மிக அதிகமாகி,  

"எங்கே நானறிந்த ரகசியங்களை சத்தமாய் அந்த கேசவ பெருமாளிடம் சொல்லி விடுவாயோ என்று பயமாய் உள்ளது." என்ற வரிகளிலிருந்து பாலாஜி எழுதிய எழுத்துக்கள் மிகவும் கோணல் மாணலாய் கிறுக்கப் பட்டிருந்தது. எழுதுவதில் அதிவேக அவசரம் தெரிந்தது. 

நிறுத்தி நிதானமாய் அந்த டைரியை மீண்டும் ஒருமுறை  படித்தான் விக்ரம்

" ரியலி இன்ட்ரஸ்டிங் பாஸ், தெளிவில்லாத சில விஷயங்களுக்கு இதில் பதில் இருக்கு"

"அப்படியா? எங்க ஒண்ணொண்ணா சொல்லு பாப்போம்", வினோத்.

விக்ரம் ஆரம்பித்தான். 

"வெல், இந்தக் கடிதம் எழுதுறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி பாலாஜி உங்க கிட்ட போன்ல தன்னோட பிரச்சன பத்தி பேசியிருக்காரு, நீங்களும் ஆறுதலா அவருக்கு நம்பிகை கொடுத்துருக்கணும், இந்த டைரிய பாருங்க ஆரம்ப வரிகள் எவ்வளவு நிதானமா எழுதத் தொடங்கி இருக்குனு, அந்த கேசவ பெருமாள் பத்தி எழுத ஆரம்பிக்கும் போது அவன் மேல வெறித்தனமான கோபம் உண்டாகி இருக்கனும், இந்த வரிய பாருங்க, இதுல எவ்வளவு அழுத்தம் தெரியுது, அடுத்த பக்கத்துல கூட இந்த எழுத்துக்கள் எவ்வளவு தெளிவா பதிவாகியிருக்கு பார்த்தீங்களா. 

அண்ட், இந்த வீட்டில இருக்குற யார் மேலயும் பாலாஜிக்கு நம்பிக்கை இல்ல, இந்த வீட்ல சுதந்திரமா பேசுரத்துக்கு  கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்கல, இத அவரே தெளிவா எழுதியிருக்காரு, சொல்ல நினைச்ச எல்லா ரகசியத்தையும் இந்த டைரியில எழுதணும்ன்னு தான் எழுத ஆரம்பிச்சிருக்காறு... இந்த நேரத்துல அவருக்கு நிச்சயம் கொலை மிரட்டல் வந்து இருக்கணும்"

"எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற விக்ரம்", வினோத் குறுக்கிட்டான்.

"இந்த வரியப் பாருங்க, 'கேசவ பெருமாள் அவனைப் பற்றி எழுத எவ்வளவோ விஷயங்கள் உள்ளது என்னிடம்' என்று கூறிக் கொண்டே படித்தும் காட்டினான் விக்ரம்.

"சோ", வினோத் 

"எழுத ஆரம்பிக்கிற நேரத்துல, சமாதான தூது இல்லாட்டா கொலை மிரட்டல் , இந்த ரெண்டுல எதோ ஒண்னோ,  இல்ல ரெண்டுமோ நடந்து இருக்கனும், எதுவுமே எழுத முடியாத அளவுக்கு ஒரு மன அழுத்தம் அவர ஆட்டிப்படச்சிருக்கனும், இந்த கடைசி வரிகளப் பாருங்க, தெளிவில்லாம எவ்வளவு அசிங்கமா, கோர்வை இல்லாம எழுதி இருக்காருன்னு "

"பிரிலியன்ட் விக்ரம்" என்றான் கார்த்திக், அவனது குரலில் ஒரு ஆச்சரியம் இருந்தது,  "இப்ப நீ என்ன சொன்னியோ, அதையேத் தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வினோத்தும் சொன்னாரு" என்றான்.

"இது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல கார்த்திக். நம்ம எழுத்துகளுக்கும் மனசுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. உங்களோட கை மட்டுமே அனிச்சையா எழுதிற முடியாது. உங்க மனசு நினைக்கிற விஷயம் மூளைக்கு போகணும், மூளை அதை கட்டளையா மாத்தி கைக்கு அனுப்பனும். இப்ப விரல்கள் அத உள் வாங்கி எழுதணும்"

"உங்க எழுதுக்கள் மூலமா உங்க மனநிலைய ஈசியா எடை போட முடியும். அதுக்கு பேரு க்ரேபோலஜி. உளவியல்ல கையெழுத்து ரொம்ப முக்கியமான காரணி. உங்க எழுத்து மூலமா நீங்க சகஜமா பழகுறவரா, புத்திசாலியா, கோபக்காரரா, பயந்தவரா, விளையாட்டு வீரரா, விஞ்ஞானியா எல்லாத்தையும் கண்டுபிடிக்கலாம்". என்று கூறிக் கொண்டே வினோத்தை நோக்கி தன் புருவத்தை உயர்த்தினான் விக்ரம்.  

"எஸ் கார்த்திக், ஒருத்தனோட கையெழுத்து ரொம்ப முக்கியமானது,  உண்மையானது. இன்னைக்கு காலையில விக்ரம் கைய ஒருத்தன் பிளேடால கீறிட்டான்னு சொன்னேன் நியாபகம் இருக்கா"

"எஸ் வினோத் "

"அவனோட பாக்கெட் டைரி எங்ககிட்ட மாட்டினது, விக்ரம் அத கொஞ்சம் எடு" விக்ரமின் கையில் இருந்து அந்த டைரியை வாங்கிய வினோத் அதில் இருந்த கையெழுத்தை கார்த்திக்கிடம் காண்பித்தான்,

"இதுல இருக்குற எழுதுக்கள பாருங்க, எவ்வளவு அழுத்தம், கிட்டத்தட்ட மூணு பக்கம் வரைக்கும் இந்த எழுத்துகளோட அழுத்தம் பதிஞ்சிருக்கு, அதிகமா உடற்பயிற்சி செய்றவன், விளையாட்டு வீரன், பஞ்சாயத்து பண்றவன், மன அழுத்தம் இருக்கவன்  இந்த ஒருவைகையில் இவனும் ஒருத்தன். சாதாரண அளவ விட ரொம்ப பெருசா எழுதியிருக்கான், சோ இவன் யோசிக்காம செயல்படுறவன், கொஞ்சம் நியாபகமறதி உண்டு, இவனோட எழுத்து இடது பக்கம் சாய்ந்திருக்கு, யாரோடவும் அவ்வளவு எளிதில பழக மாட்டான், நம்ப மாட்டான், சேர மாட்டான்"     

எதுவுமே புரியவில்லை என்ற முகபாவனையைக் காட்டினான் கார்த்திக்.    

"நாங்க சொன்னதுல முழுசா உங்களுக்கு நம்பிக்கை வரணும்னா, அதுக்கு ரெண்டு வழி இருக்கு, ஒண்ணு பாலாஜி கண்முழிச்சி அன்னிக்கு ராத்திரி என்ன நடந்ததுன்னு சொல்லணும், ரெண்டு அன்னிக்கு ராத்திரி என்ன நடந்ததுன்றத நாமளே கண்டுபிடிக்கணும்" என்றபடி விக்ரமை நோக்கினான் வினோத்.

"பாலாஜியோட போன் கால் ஹிஸ்டரிய அனலைஸ் பண்ணனும், அவருக்கு வந்த மெயில் டீடையில் வேணும், முக்கியமா இந்த கேசவ பெருமாள், அவன பத்தின டீடெயில் வேணும். அவன் சமந்தப்பட்ட ஈமெயில் ஐடி கிடைச்சா ஹேக் பண்ணிப் பார்கலாம். வீ ஹாவ் லாட் ஆப் பாசிபிளிடீஸ் டூ ட்ரேஸ் இன் திஸ் ஓபன் வேர்ல்ட்."

"அவ்ளோ ஈசியா இன்னொருத்தன ஹேக் பண்ண முடியுமா வினோத், ஒரு பாதுகாப்பான உலகத்துல தான நாம எல்லாரும் வாழுறோம்"   

"பாதுகாப்பு என்பது ஒரு மாயையை,இந்த மாயையால் நமக்கு  நம்பிக்கையைத் தர முடியுமே ஒழிய ஒருகாலமும் பாதுகாப்பைத் தர முடியாது, எவன் ஒருவனால் இந்த ரகசியத்தைப் புரிந்துகொள்ள  முடிகிறதோ அவனால் மட்டும் தான் இந்த உலகில் பாதுகாப்பாக வாழ முடியும்" என்றபடி மெல்ல விக்ரமை நோக்கி கண்ணடித்தான்.  

"வா...ரே...வா..., பாஸ் தத்துவம் சூப்பர், பட் என்னோட டைரிய ரொம்ப அதிகமா படிக்றீங்க, இதெல்லாம் நல்லதுக்கு இல்ல...சொல்லிட்டேன்.." சிரித்துக்கொண்டே வினோத்தின் தோளில் ஒரு இடி இடித்தான் விக்ரம்.   

"கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்க வினோத்", காத்திக்கின் குரலில் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

இன்னிக்கு நம்ம கையில ஒரு மெயில் ஐடியும், பாஸ்வோர்டும் கிடைச்சதே, அத ஓபன் பண்ணுவோம் , ஒருவேள அந்த மெயில் உள்ள மிகபெரிய ரகசியம் ஒளிஞ்சு இருந்தா அது பாதுகாப்பா? மாயையா?" என்று சொல்லிக்கொண்டே காலையில் டீக்கடை வாசலில் நடந்த சண்டையின் பொழுது கிடைத்த பாக்கெட் டைரியை விக்ரமிடம் இருந்து வாங்கினான் வினோத்.              

ஒரு ரவுடியின் மின்னஞ்சலினுள் அப்படி என்ன விஷயம் ஒளிந்துகிடக்கப் போகிறது என்ற ஆர்வம் மூவரையும் தொற்றிக் கொண்டது, வினோத் வேகவேகமாக மின்னஞ்சல் முகவரியை டைப்பி பாஸ்வோர்டையும் தட்டினான், இவர்கள் அவசரத்தைப் புரிந்து கொண்ட இணையமும் மிக வேகமாக செயல்பட்டது.

மொத்தமே பத்துக்கும் குறைவான மெயில்களே அதில் இருந்தது, அதில் ஏழு மெயில்களில் நிர்வாண அழகிகள் காம தூது விட்டுக் கொண்டிருந்தனர்.  இதைப் பார்த்த கார்த்திக் நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தான்.

ஒவ்வொரு மெயிலாகப் பார்த்துக் கொண்டே சென்ட் அயிட்டம்ஸை க்ளிக் செய்தான் வினோத், அவனது வேகத்தில் சுவாரசியம் குறைந்திருந்தது. ஒரு மெயில் மட்டும் யாருக்கோ அனுப்பபட்டிருந்தது. அந்த ஒரு மெயிலையும் அசுவாரசியத்துடன் திறந்தான்.

"பாஸ் ஒரு போட்டோ அட்டாச் ஆகியிருக்கு, அத ஓபன் பண்ணுங்க" , விக்ரம்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த போட்டோ திரையில் விரிந்தது, முகம் நிறைய தாடி, உடல் நிறைய பருமன், தன்னை ஒரு அடியாளாக நிருபிக்கத் தேவையான அத்தனை சர்வ லட்சணங்களும் அவனிடம் பொருந்திப் போயிருந்தது. அவனுக்குப் பின்னால் ஒரு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி தன் அஞ்சலியை செலுத்திக் கொண்டிருந்தது. 

" போட்டோ எடுக்க இவனுக்கு வேற இடமே கிடைக்கல போல, சரியான லூசுப்பயன்னு நினைக்கிறன் பாஸ்"  

"விக்ரம், காலைல இவன்தான சண்டைய விலக்கிவிட்டான், இவன் முகத்த மறக்கவே முடியாது டா, வேற எங்கையோ பார்த்து இருக்கேன்."       

"பாஆஆஆஆஆஸ்.. திடிரென்று உற்சாகமாய் அலறினான் விக்ரம்"

கார்த்திக்கும், வினோத்தும் விக்ரமின் இந்த அலறலை வித்தியாசமாய்ப் பார்த்தனர்.

" பாஸ், அந்த கண்ணீர் அஞ்சலி போட்டோவ நல்ல கூர்ந்து பாருங்க, ஒருவேள அதுல இருக்கறவன் செத்துப் போயிருந்தா, காலையில என்கூட சண்ட போட்டது என்ன ஆவியா ? இல்ல என் சட்டையில தெறிச்ச இந்த ரத்தம் தான் ஆவியோடதா...?"    

வினோத்தின் முகம் பிரகாசமானது.

"பாஸ் ஆவி ஆப்டுகிச்சி பாஸ் " 

கலெக்டர் பங்களாவின் அருகில் இருந்த கருவேலங் காட்டுக்குள் இருந்து அந்த ஆவி மனிதன் வெளிபட்டான்.  



உன்னைத் தொடர்கிறேன் ...!

34 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நானும் ஒரு காதல் கடிதம் எழுதியுள்ளேன் மதுரைத்தமிழன் எழுதிய காதல் கடிதம் http://avargal-unmaigal.blogspot.com/2013/07/blog-post_7092.html

      Delete
    2. இந்தப் போட்டி நடத்துறது யாருக்கு வசதியா இருக்கோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப வசதியாப் போச்சு, இருங்க இருங்க வீட்ல மாட்டி விடுறேன்

      Delete
  2. பாதுகாப்பு தத்துவம் அட்டகாசம். க்ரேபோலஜி?
    விறுவிறுப்பைத் தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. graphology சார், கையெழுத்து பற்றிய ஆராய்ச்சி...

      //பாதுகாப்பு தத்துவம் அட்டகாசம்.// ஹா ஹா ஹா மிக்க நன்றி சார்,,,

      Delete
    2. ஓ.. நான் நண்டைப் பத்தி எதையோ போட்டுக் குழப்பிட்டிருந்தேன் ஹிஹி..

      Delete
  3. பெரிய வார்த்தையெல்லாம் விளையாடுது! சுவாரஸ்யமாகப் போகிறது. ஆவி மனிதனா? ஆ! தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பெரிய பெரிய ஆளுங்க படிக்கிறீங்க... அதான் அப்படி # அப்பாடி @ ஹா ஹா ஹா

      Delete
  4. "பாதுகாப்பு என்பது ஒரு மாயையை,இந்த மாயையால் நமக்கு நம்பிக்கையைத் தர முடியுமே ஒழிய ஒருகாலமும் பாதுகாப்பைத் தர முடியாது, எவன் ஒருவனால் இந்த ரகசியத்தைப் புரிந்துகொள்ள முடிகிறதோ அவனால் மட்டும் தான் இந்த உலகில் பாதுகாப்பாக வாழ முடியும்"

    சிறப்பான வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா

      Delete
  5. க்ரேபோலஜி. உளவியல்ல கையெழுத்து ரொம்ப முக்கியமான காரணி.

    அருமையான விறுவிறுப்பான கதை ..!! பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. //அருமையான விறுவிறுப்பான கதை ..!! பாராட்டுக்கள்..//

      மிக்க மிக்க நன்றி அம்மா

      Delete
  6. விறுவிறுப்பு.....

    ஆவி மனிதன்..... ம். ஸ்வாரசியமா தான் இருக்கு. என்ன செய்யப் போகிறார் ஆவிமனிதன்.. அடுத்த பகுதியில் தெரிந்து கொள்ள ஆசை!

    ReplyDelete
    Replies
    1. ஆவி மனிதன் என்ன செய்யப் போறார்ன்னு தெரியலையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      Delete
  7. //ஏதேனும் தடயம் சிக்குமா என்று இன்ஸ்பெக்டர் கார்த்திக்குடன் வினோத்தும் விக்ரமும் தேடிக் கொண்டுள்ளனர். //

    தேடிக் கொண்டிருந்தனர் என்றிருக்க வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. சிறுவன் ஒருவன் ஆங்காங்கு தவறு செய்தால் அதை சுட்டிக் காட்ட வேண்டியது தான் நல்ல ஆவிகளுக்கு அடையாளம்... நீர் ஓர் ஆகச்சிறந்த நல்ல ஆவி

      # மாத்திர்ரம்னே

      Delete
  8. //உங்க மனசு நினைக்கிற விஷயம் மூளைக்கு போகணும்//

    மாட்டிகிட்டீங்களா? மனசு எங்க இருக்கு.. சொல்லுங்க அண்ணே சொல்லுங்க..

    ReplyDelete
    Replies
    1. மனசு ஆன்மா போன்றவை மாயை... மாயையை உணரத்த் தான் முடியுமே தவிர, உணர்த்த முடியாது... ( இவிங்ககிட்ட ரொம்ப கேர்புல்லா இருக்கணும் டா நல்ல தம்பி )

      Delete
  9. // எவன் ஒருவனால் இந்த ரகசியத்தைப் புரிந்துகொள்ள முடிகிறதோ அவனால் மட்டும் தான் இந்த உலகில் பாதுகாப்பாக வாழ முடியும்"//

    இப்போதைக்கு சொல்ல முடிஞ்ச ரகசியம்?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இதெல்லாம் ரகசியம் இல்ல, பஞ்ச் டயலாக்

      Delete
  10. //கருவேலங் காட்டுக்குள் இருந்து அந்த ஆவி மனிதன் வெளிபட்டான். //

    ஆவி மிரண்டால் காடு கொள்ளாது. பாத்து எழுதுங்க த்த்தம்பி..!

    ReplyDelete
    Replies
    1. பாக்கத்தான போறோம்.. இந்த ஆவிய உண்டு இல்லைன்னு பண்ணிறேன் :-)

      Delete
  11. சொல்லுங்க பாஸ்....சொல்லுங்க .....

    ReplyDelete
    Replies
    1. நீங்க கேட்டு நான் சொல்லாம இருப்பேனா... சொல்லிட்டாப் போச்சு

      Delete
  12. ஒரு துப்பறியும் நாவலுக்கான அதனை அம்சங்களையும் கொண்டு இன்றைய தொழில் நுட்ப நுணுக்கங்களையும் கூறிய விதம் அருமை தொடருங்கள் நாங்களும் உங்களோடு

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் எங்களோடு இந்த துப்பறியும் பயணத்தில் இணைந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி

      Delete
  13. க்ராபாலசி போன்ற விடயங்கள் கதையை அழகாக்குகின்றன. நல்ல வேகம் கதையில். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. கிரெபாலஜி- புதிதாக கேள்விப்படுகிறேன்... அந்த பாதுகாப்புத் தத்துவம் சூப்பர்... தொடருங்கள் சீனு.... கதை அமர்க்களமா போய்கிட்டு இருக்கு...

    ReplyDelete
  15. இந்த துப்பறியும் நாவல் படிக்க ஆரம்பிச்சு கொஞ்சம் பக்கங்கள் நகர்ந்தவுடன் கடைசி பக்கத்தைத் திருப்பி யார் வில்லன்ன்னு தெரிஞ்சிகிட்டு கதை தொடர்ந்து படிப்பேன் இப்போ அதுக்கு வாய்ப்பில்லை... சரி தொடருங்க வெயிட் பண்றேன்..

    ReplyDelete
  16. சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமல் செல்கிறது! கையெழுத்து ஆராய்ச்சி! தத்துவங்கள்! விக்ரமின் நக்கல்கள் என அனைத்தும் கலந்த கலவையான நாவல் ரசிக்க வைக்கிறது! ஆவி மனிதனை நானும் தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  17. சுவாரஸ்யத்துடன் வேகம்.....

    அடுத்து ஆவலுடன்....

    ReplyDelete
  18. கை எழுத்தினைக்கொண்டு ஒருவரின் மனதினைப்படிக்க முடியுமா?? தொடர் வேகத்துடன் நகர்கின்றது யார் ஆவி சொல்லுங்க சார் சொல்லுங்க:))))

    ReplyDelete
  19. Hi super story
    Please continue it....

    ReplyDelete
  20. Seenu.... you did not continue after this? wy?

    ReplyDelete