22 Mar 2013

திடங்கொண்டு போராடு - அகவை ஒன்று


தையாவது எழுத வேண்டும் என்று ஆரம்பித்து, தோன்றியதை எல்லாம் எழுதித் தள்ளிக்கொண்டு உள்ளேன், மேலும் இடைப்பட்ட காலத்தில் எனக்குக் கிடைத்த பதிவுலகைச் சேர்ந்த நண்பர்களும்,  பல சமயங்களில் அவர்களிடம் இருந்து கிடைக்கும் வழிகாட்டுதல்களும், இன்ன பிற சமயங்களில் வாங்கிக் கொள்ளும் குட்டுகளும் எனது பயணத்திற்கு அவசியமான வழித்துணைகள். இதோ இன்று கண் மூடித் திறப்பதற்குள் ஒருவருடத்தைக் கடந்துள்ளேன். 

டந்த வருடம் இதே நல்ல நாளில் தான் எனது பதிவுலகப் பயணம் உங்களுடன் சேர்ந்து தொடங்கியது, ஆம் உங்களுடன் சேர்ந்து, காரணம் நான் மட்டுமே எழுதி நான் மட்டுமே படித்துக் கொண்டிருந்தால் என்னவாகியிருக்கும், நிலைமை சற்றே பரிதாபமாகி கடையை இழுத்து மூடி பேஸ்புக்கில் நான் போடும் ஸ்டேடஸ் மற்றும் லைக்குகளுடன் திருப்தி அடைந்து இருப்பேன். நல்ல வேளை அப்படி எதுவும் நடந்து விடாமல் என்னைக் காப்பாற்றி விட்டீர்கள். ஆகவே! எனதுடனான பயணத்தில் உங்களுக்கும் சரிபாதி பங்கிருக்கிறது.    

தனால் உங்கள் அனைவருக்கும் எனது மனபூர்வமான நன்றிகள். 


நான் எப்படி பதிவுலகத்திற்கு வந்தேன், ஏன் வந்தேன் என்றெல்லாம் புதிதாய் எதுவும் எழுதி விடவில்லை. வலைச்சர வாரத்தின் பொழுது எனது அறிமுகப் பதிவாய் எழுதிய பதிவை அப்படியே மீண்டும் உங்களுடன் ஒரு மீள் பதிவாய் பகிர்ந்து கொள்கிறேன்.

முதுநிலை முடித்துவிட்டு ஒரு சிறிய அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம். நண்பன் செல்வமணி இன்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் உலவிக் கொண்டிருப்பான். எனக்கு இவற்றை அறிமுகப் படுத்தியதும் அவன் தான். அவன் படித்த பதிவுகள், அவனுக்குப் பிடித்த பதிவுகள் என்று என்னுடன் பகிர்ந்து கொண்டே இருப்பான். நான் செல்வமணி மற்றும் மணி அதிகமான பதிவுகள் படிப்போம், பெரும்பாலும் சினிமா சார்ந்த பதிவுகளாக படிப்போம், யாருக்கும் பின்னூட்டம் இட்டது கிடையாது. செல்வமணியிடம் ஏதேனும் தலைப்பு கூறி எனக்கு இந்த தலைப்புகளில் தகவல் வேண்டும் தேடி கொடு என்றும் சொல்வதுண்டு. சளைக்காமல் தேடி எங்கிருந்தாவது எடுத்துக் கொடுத்து விடுவான். பதிவுலகம் பற்றி நான் முழுமையாக புரிந்து கொண்ட நாட்கள் அது.

சினிமா என்பதையும் தாண்டி தமிழில் பரவலாகப் பலவிதமான பதிவுகள் பதியப்பட்டுள்ளன என்று தெரிந்த பொழுது ஆச்சரியமாக இருந்தது. நிச்சயமாக பதிவர்கள் அனைவரும் தங்களுக்குத் தெரியாமலேயே தமிழுக்கான கலை சேவை செய்து வருகிறார்கள் என்பது உண்மை. செல்வா அடிகடி கேட்பான் "சீனு நாமளும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா என்ன". அவன் அப்படிக் கேட்ட பொழுது, ஏழு வருடங்களுக்கு முன்பு அசோக் அண்ணன் என்னிடம் கேட்ட கேள்வி  நியாபகம் வந்தது "பிளாக் படிக்கிற பழக்கம் உனக்கு உண்டா?". என்னிடம் அந்த கேள்வியைக் கேட்ட அடுத்த நொடி "அப்படினா?" என்றேன். "உனக்குப் பிடிச்சது எல்லாம் எழுதலாம், கிட்டத்தட்ட அது டைரி மாதிரி" என்று அவர் சொல்லியது நியாபகம் வந்தது.

டைரி எழுத எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வருடமும் டைரி எழுத ஆரம்பிப்பேன், அந்தப் பழம் சீக்கிரம் புளித்துவிடும். ஆனால் பிளாக் கூட டைரி போன்றது என்று அசோக் அண்ணன் என்னிடம் சொல்லிய வார்த்தைகள் மனதில் இருந்து நீங்கவே இல்லை. சமீபத்தில் நடைபெற்ற பதிவர் சந்திப்பின் பொழுது கூட அய்யா நடன சபாபதி என்று நினைக்கிறன் அவர் கூட அதே கருத்தை கூறி இருந்தார்.

செல்வமணி என்னிடம் கேட்டதும் "ஆரம்பிக்கலாம் ஆனால் என்ன எழுதவது " என்று கேட்டேன். அதற்கான பதிலை இன்றுவரை அவன் என்னிடம் சொல்லவில்லை. இருந்தும் நான் ஆரம்பித்துவிட்டேன்.


"இப்படிக்கு நண்பன்" என்னும் முகவரியில் "உயிர் எழுத்து" என்னும் தலைப்பில் மார்ச் 2011 அன்று வலைபூ ஆரபித்தேன். மணி தான் ஐடியா கொடுத்தான், "எம்.சி.ஏ பத்தி எழுத்து சீனு" என்றான். அந்த வலைப்பூவில் நான் எழுதிய முதல் கட்டுரை.


இரண்டாவது பதிவு.


ந்தப் பதிவுகளை படித்ததும் மற்ற நண்பர்களுக்கும் ஆர்வ பொங்க அவர்களும் எழுதினார்கள், இன்னும் பலர் எழுத முயன்றார்கள். 

ன் எழுத்தில் ஏதோ ஒன்று குறைந்தது, எனக்கு எழுத்து நன்றாக வரவில்லை. அதில் எழுதுவதையே நிறுத்திவிட்டேன். மற்ற நண்பர்களும் எழுதாததால் வலைப்பூ நாங்கள் நிறுத்திய இடத்தில் இன்னும் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் கூட நண்பர்கள் கேட்டார்கள் அதில் "எம்.சி.ஏ பத்தி எதாது எழுது" என்று. மீண்டும் அதில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் என்னுள்ளும் உள்ளது.

ற்போது நான் வேலை பார்க்கும் கம்பெனியில் சேர்ந்த நாட்களில் எனது எழுதும் ஆர்வம் குறித்து உடன் பணிபுரிந்த விக்ரமிடம் கூறுவேன். சில காட்சிகளை விவரித்து அவைகளைக் கொண்டு ஒரு கதை எழுதித் தரும்படி என்னிடம் கேட்டான். முதல் முறை நம்மையும் மதித்து ஒருவன் கேட்கிறானே என்று எழுதி விட்டேன். நான் எழுதிய அந்த முதல் கதை என்னுள் மிக அதிகமான உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது. எழுதி விட்டேன், "ல்லா இருக்கு, சுமாரா இருக்கு, ன்னும் பெட்டரா ட்ரை பண்ணலாம்" என்பது போன்ற கமெண்டுகளையும் நண்பர்கள் வாயிலிருந்து வற்புறுத்தி வாங்கிவிட்டேன்.

த்தனை நாட்கள் தான் அந்தக் கதையை நான் மட்டும் படித்துக் கொண்டிருப்பது. அந்நேரம் மீண்டும் என் நியாபகத்தில் வந்தது வலைபூ. மேலும் இந்த நேரத்தில் சிறுகதை எழுதுவதில் தீராக் காதல் ஏற்பட்டு இருந்தது. "ஒரு பிளாக் ஆரம்பிக்கிறோம், சிறுகதையா எழுதித் தள்ளுறோம்" என்ற நிலையில் ஆரம்பிக்கபட்டது தான் எனது இரண்டாவது வலைபூ.



ன்ன பெயர் வைப்பது என்றே பல நாள் குழம்பிக் திடங்கொண்டு தேடிக் கொண்டிருந்தேன். மேலும் பாரதியின் வரிகளில் ஒன்று தான் எனது வலைபூ பெயராக இருக்கப் போகிறது என்பதையும் முடிவு செய்துவிட்டேன். அப்படியாக வந்த பெயர் தான் "திடங்கொண்டு போராடு". 

நான் முதன் முதலில் எழுதிய சிறுகதை 





லைபூ ஆரம்பித்த முதல் மூன்று மாதங்களில் வெறும் சிறுகதையாகத் தான் எழுதித் தள்ளிக் கொண்டிருந்தேன். வெறும் சிறுகதையை வைத்து மட்டும் வியாபாரம் செய்ய முடியாது என்பதை எனது இரண்டாவது பதிவே தெளிவாக்கிவிட்டது. முதல் பதிவை நண்பர்களைத் தவிர யாரும் படித்திருக்கவில்லை. சில திரட்டிகளில் இணைத்த பின் கொஞ்சம் ஹிட்ஸ் வந்தது. அந்த நேரத்தில் வெளிவந்திருந்த படம் கர்ணன். நான் மிகவும் விரும்பிப் பார்த்த படம் அது. அதையே பதிவாக எழுதினால் என்னவெண்டு தோன்றியதால் எழுதியும் விட்டேன். எனக்கு கமெண்ட் வராவிட்டாலும் அதிகமான ஹிட்ஸ் வாங்கிக் கொடுத்தது. 


நான் முதன் முதலில் எழுதிய சினிமா விமர்சனம் 



திவு ஆரம்பித்த புதிதில் 100 ஹிட்ஸ் என்பது 100 பேர் என் பதிவைப் படித்திருக்கிறார்கள் என்ற அளவில் தான் என் புரிதல் இருந்தது. அதன் பின் தெளிவு கிடைத்ததும் மீண்டும் சிறுகதைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டேன். மூன்று மதங்களில் வலைபூ பற்றிய அறிவு சற்று அதிகமாகவே எனக்குக் கிடைத்த தளம் மூலம் என் களத்தை சற்றே விரிவு படுத்தத் தொடங்கினேன். 

சிரிபானந்தாவின் அறிமுகம் கிடைத்த நேரம் அவரைப் பற்றி எழுதிய பதிவு 


சிரிபானந்தா பற்றி மற்றுமொரு பதிவு 



பின்பு பலரும் தொடர்பதிவு மற்றும் தொடர் கதைகள் எழுதிவருவதைக் கண்டு என்னுளும் எதாவது தொடர் எழுத வேண்டும் என்ற ஆசை பிறந்தது. என்ன எழுதுவது என்று தெரியவில்லை. நிகழ்காலத்தில் என்னோடு ஒன்றிப்  சென்னையைப் பற்றி பதிவு செய்யலாம் என்று எழுதத் தொடங்கினேன். பேஸ்புக் தோழி லாய் "சென்னையைப் பற்றி எங்களுக்கு தெரியாது கொஞ்சம் விரிவாக எழுது" என்று கொடுத்த டிப்ஸ் மூலம் சென்னை ஒரு முடிவில்லாத தொடராக சென்று கொண்டுள்ளது.

சென்னையைப் பற்றி எனது முதல் பதிவு.



ரே வாரத்தில் பொன்னியின் செல்வன் புத்தகம் முழுமையையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பலரும் பொன்னியின் செல்வனுக்கு விமர்சனங்கள் எழுதி இருப்பார்கள் என்று தெரியும், இருந்தும் நானும் எழுதினேன், ஆச்சரியம் பல புதிய தகவல்கள் பின்னூட்டங்களாகக் கிடைத்தன.




யணங்கள் என் வாழ்க்கையில் என்னிடம் இருந்து பிரிக்க முடியாத ஒன்று. எவ்வளவு தூர பயணம் என்றாலும் காலம் ஒத்துழைத்தால் நான் தயார். பயணக் கட்டுரைகள் எழுத நான் தேர்ந்தெடுத்தக் கொண்ட தலைப்பு நாடோடி எக்ஸ்பிரஸ்.

ம்மையும் நம் எழுத்துகளையும் அறிமுகம்  வாய்ப்பு கிடைத்தால் யாருக்கு தான் அலுக்காது. விட்டால் நான் எழுத அத்தனை பதிவுகளையும் இங்கே லிஸ்ட் போட்டு விடுவேனோ என்று பயமாய் இருப்பாதால் அடுத்து வரும் ஒன்றுடன் முடித்துக் கொள்கிறேன்.


 வலைபூ ஆரம்பித்த பின் ஒரு பதிவுக்காக நான் சற்றே சிரத்தை எடுத்து, தகவல்கள் தேடி ஓரளவு உருப்படியாய் எழுதிய பதிவு என்றால் அது தனுஷ்கோடியின் வரலாறு பற்றியது தான். நீங்கள் அந்தப் பதிவை படிப்பதும் படிக்காததும் உங்கள் விருப்பம், ஆனால் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஒருமுறை சென்று வாருங்கள். பார்க்க வேண்டிய ஆழி சூழ் அமானுஷ்யம் நிறைந்த உலகு அது.





என்னைத் தட்டியோ, குட்டியோ கொடுக்கும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகள்...

30 comments:

  1. வாழ்த்துகள்!!

    ReplyDelete
  2. Awwwww.... Pathivu romba chinnathaa irukku....:)

    Congrats and wishes for 1st anniversary....:)

    ReplyDelete
  3. வளமான வரிகளுடன்,
    வாய்கொள்ளா வசீகரச் சிரிப்புடன்
    பழகுவதற்கு இனிமையான
    அழகிய சீனு..
    திடங்கொண்டு போராடும்
    உங்கள் தளம்
    உங்களைப் போலவே
    பல்லாண்டு,
    பலப்பலபதிவுகள் கண்டு
    வாழ்க, வளர்க.

    ReplyDelete
  4. பிறந்தநாள் வாழ்த்துக்கள் www.seenuguru.com


    தொடர்ந்து வலையுலகைக் கலக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  6. சீனு அவர்களே... மிக்க மகிழ்ச்சி...

    மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. வலைப்பூவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.திடங்கொண்டு வலைப்பூவை வளர்த்திருக்கும் அண்ணனுக்கு என் பாராட்டுக்கள்...:)

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் நண்பா...!

    ReplyDelete
  9. வணங்க வயதில்லை. வாழ்த்துகிறேன் தம்பி.

    பதிவுலகின் இளைய ஜல்லிக்கட்டு காளையே!!

    என்றும் தொடரட்டும் உன்(னத) லீலையே!!

    ReplyDelete
  10. வாழ்த்துகள் சீனு,தொடர்க

    ReplyDelete
  11. ஹேப்பி பர்த்டே டு யூ ....

    பாஸ் , ட்ரீட் தருவீங்களா பாஸ் .....?

    ReplyDelete
  12. தம்பீ! முதற்கண் ஓராண்டுக்கு என் வாழத்துக்கள்! இன்னும் திடம் கொண்டு, தடம் கண்டு எழுதுக! வளர்க! வாழ்க!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  14. தங்கள் தளத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சீனு. தங்களுக்கும் வாழ்த்துக்கள்
    சிறு நடை போட்டு சிகரத்தில் ஏறுங்கள் சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறுங்கள்

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் நண்பா.. கலக்குங்க.. இன்னும் பல்லாண்டு காலம் எழுத்துச்சேவை புரிய இறைவனை வேண்டுகிறேன் :-)

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்.
    தட்டச்சு இருந்தால் மட்டுமே எழுத முடியும் என்ற மாயையில் இருந்த என்னை மீட்டு, வலையுலகில் வழிகாட்டும் பெருமை திடங்கொண்டு போராடும் தங்களையே சேரும். நன்றி சீனு.

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் நண்பரே! இன்னும் பல மைல் கற்களை உங்கள் எழுத்துக்கள் தாண்டட்டும்!வளர்க உமது எழுத்தார்வம்! நன்றி!

    ReplyDelete
  18. ஓராண்டுல்லாம் பெரிய விஷயமே இல்லய்யா உனக்கு... இன்னும் பல மைல்கற்கள் உனக்காகக் காத்திருக்கின்றன. திடங்கொண்ட தொடர்ந்து போராடி வெற்றி மேல் வெற்றிகளைக் குவிக்க என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் தலைவரே ரேஸ்ல ரொம்ப முன்னாடி போய்ட்டிங்க..

    இன்னும் முன்னேற வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  20. முதல்ல செல்வமணிக்கு நன்றி சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. முதல்ல நீர் சீனுவுக்கு வாழ்த்துச் சொல்லுமய்யா!

      Delete
  21. ஓராண்டில் நல்ல வளர்ச்சி சீனு/
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. நண்பரே உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  23. வாழ்த்துகள் சீனு. இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் சீனு.ஒருவருடம்தான் என்றாலும் உங்களின் நட்பு வட்டாரம் ஆச்சர்யப் பட வைக்கிறது.பதிவுலகில் பெரியவர்கள் சிறியவர்கள்,அனுபவஸ்தர்கள்,பத்திரிக்கைத்துரையைச் சார்ந்தவர்கள் என வித்தியாசம் பார்க்காமல் பழகும் உங்கள் நட்பு ஆச்சர்யம்தான்.எனக்கு நீங்கள் 'தம்பி செல்லத்துரை' மூலமாக ஒரு சிறுகதையில் ஊடாக நட்பானீர்கள் .(அவர் ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டார் எனத் தெரியவில்லை...) வேலைப்பளு காரணமாக வலைப்பூவில் நான் சுற்றுவது கொஞ்சநேரம்தான்.அதிலும் உங்கள் பதிவுகளை கண்டிப்பாக படித்து விடுவேன்..சில நேரங்களில் பின்னூட்டம் இட நேரம் இருக்காது.

    வலைபூவிற்கு ஹிட்ஸ் உந்துதலைத் தரும் என்றாலும் தனித்துவமானப் பதிவுகளை அவ்வப்போது எழுதுவதற்கு மறந்து விடாதீர்கள்.குறிப்பாக உங்கள் சிறுகதைகள்.

    உங்கள் வலைப்பூவில் என்னை நெருடிய விஷயம்' FONT ' . தற்போதுதான் கச்சிதமாக அழகாக இருக்கிறது.இதையே மெய்ண்டைன் பண்ணவும்....வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் பாஸ்............

    ReplyDelete
  26. வாழ்த்துகள்!!

    ReplyDelete
  27. மனமார்ந்த வாழ்த்துக்கள் !

    ReplyDelete