இம்முறை தென்காசி சென்றிருந்த பொழுது ஸ்ரீ அண்ணனிடம் "எதாது வித்தியாசமான எடத்துக்கு கூட்டிட்டுப் போங்கண்ணே" என்றேன். இவரிடம் மட்டும் தான் இது போன்ற கேள்விகளைக் கேட்க முடியும். அவரும் சற்றும் யோசிக்காமல் "விந்தன் கோட்டைக்கு போயிட்டு வரலாமா, நாம எல்லாரும் பாக்க வேண்டிய எடம்" என்றார்.
கோட்டையின் மிச்சங்கள் |
அறுபது ஏக்கருக்கும் மேல் பரந்து விரிந்த பிரமாண்டமான கோட்டை. மண் கொண்டு கட்டப்பட்டது தான் என்றாலும் மிகவும் வலுவான கோட்டை. எதிரிகள் எளிதில் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்பதற்காக பல அடி ஆழத்திற்கு குளங்கள் வெட்டி நீரால் பாதுகாக்கப்பட்ட கோட்டை, அதனால் இக் கோட்டையை நீராலான கோட்டை என்றும் குறிப்பிடுவர்.
உங்கள் மனமென்னும் காலச் சக்கரத்தை சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் அதாவது 15ம் நூற்றாண்டுக்கு சுழற்றி, மேற்கூறிய வரிகளை உங்கள் கற்பனையின் காட்சியாக்குங்கள், தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த சடையவர்மன் பாராக்கிரமப் பாண்டியன் எழுப்பிய விந்தன்கோட்டை உங்கள் கண்முன் தோன்றும்.
மதுரையை நாயக்கர்களும், முகலாயர்களும் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்த பாண்டிய மன்னர்கள் தென் மாவட்டங்களை நோக்கி நகர்ந்து, அங்கே பல குறும்பகுதிகளை தங்கள் வசப்படுத்தி அவற்றை ஆளத் தொடங்கினர்.
குதிரைக்கு தண்ணீர் வைக்கும் கல் |
மதுரையை நாயக்கர்களும், முகலாயர்களும் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்த பாண்டிய மன்னர்கள் தென் மாவட்டங்களை நோக்கி நகர்ந்து, அங்கே பல குறும்பகுதிகளை தங்கள் வசப்படுத்தி அவற்றை ஆளத் தொடங்கினர்.
இவ்வாறாக சடையவர்மன் பாராக்கிரமப் பாண்டியன் மற்றும் அவன் வழி வந்தவர்கள் தென்காசியை தலைநகராகக் கொண்டு தென்காசி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை ஆளத் தொடங்கினர். மேலும் இவர்கள் தென்காசிப் பாண்டியர்கள் என்றறியப் படுகின்றனர். தென்காசிப் பாண்டியர்களுள் முதன்மையானவன் சடையவர்மன் பாராக்கிரமப் பாண்டியன், அவனுக்கு விந்தன் என்றொரு பெயரும் உண்டு, எனவே விந்தன் எழுப்பிய கோட்டை விந்தன்கோட்டை என்றழைக்கப் படுகிறது. தென்காசிக்கு மொத்தம் பதினாறு பெயர்கள் அவற்றில் விந்தன் கோட்டை என்ற பெயரும் அடங்கும்.
இது போன்ற பல விசயங்களை வெகு சமீபத்தில் அறிந்திருந்ததால் விந்தன் கோட்டை செல்ல வேண்டிய ஆர்வம் இன்னும் அதிகமாகியது. ஸ்ரீ அண்ணன், ஜெய் கணேஷ் அண்ணன் மற்றும் இவர்களின் வழிகாட்டியும் குருவுமான செண்பகராமன் (செம்பா ப்பா), இந்த மூவரும் வழிகாட்ட ஏழு பேர் அடங்கிய குழு விந்தன் கோட்டை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. எங்களுடன் தென்காசிக்கே சொந்தமான தூறல் மழையும் சேர்ந்து பயணிக்கத் தொடங்கியது.
நீராலான கோட்டைக்கான ஆதாரம் |
தென்காசியில் இருந்து 15 கி.மீ தொலைவில் ஆய்க்குடி கடந்து சாம்பவர் வடகரை செல்லும் வழியில் உள்ளது விந்தன் கோட்டை. முழுக்க முழுக்க வயலும் வயல் சார்ந்த இடங்களாலும் சூழப்பட்ட இடம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்வெளி பரந்து விரிந்த இடங்களில் எல்லாம் தற்போது காற்றாலைகள் சாவகாசமாக மின்சாரத்தை உறிஞ்சிக் கொண்டுள்ளன.
அழகிய மணவாளப் பெருமாள் கோவில்
விந்தன் கோட்டையை அடைந்ததும் நாங்கள் முதலில் தரிசித்த இடம் அழகிய மணவாளப் பெருமாள் கோவில். கோட்டையின் உள்ளேயே அமையப் பெற்றுள்ள இக்கோவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த அரச குடும்பத்தவர்களுக்கு சொந்தமான குலதெய்வக் கோவில் என்று குறிப்பிடுகின்றனர். வெகு சமீபத்தில் தான் இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது. கும்பாபிஷேகத்திற்கு சமஸ்தானத்தை சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக கோவில் நிர்வாகி கூறினார்.
இதற்கு முன் பிரம்மாண்டமான கோட்டை இருந்த இடங்களில் எல்லாம் அதன் எச்சங்களைக் கூட காண முடியவில்லை. எச்சங்களின் எச்சங்கள் மட்டுமே எங்களை வரவேற்றன.
பல அடி உயரத்திற்கு எழுப்பப்பட்ட கோட்டையின் சுவர்கள் அத்தனையும் அழிந்து கோட்டையின் அடித்தளம் மட்டும் எஞ்சி நிற்கிறது. கோட்டை மற்றும் கோட்டை சார்ந்த இடங்களில் இருந்த கற்கள் அனைத்தையும் இந்தப்பகுதி மக்கள் வீடு கட்டுவதற்காக பெயர்த்து எடுத்துவிட்டனர். மிச்சமிருக்கும் கோட்டையின் கற்கள் கோவிலின் முன்பகுதியில் வளர்ந்திருக்கும் புதர்களுக்கு அடியில் இளைப்பாறிக் கொண்டுள்ளன.
குதிரை லாயம் |
கோவிலின் பின்புறம் சிதிலமடைந்த நிலையில் பராக்கிரமப் பாண்டியனின் குதிரை லாயம் உள்ளது. லாயம் புதர் மண்டிக் காணப்படுகிறது, இந்த புதர்களுக்கு மத்தியில் குதிரைகள் கட்டுவதற்கான தூண்களும், தண்ணீர் வைப்பதற்கான தொட்டியும் உள்ளது. குதிரை லாயத்தின் பின்புறம் பாழடைந்த நிலையில் கிணறு உள்ளது. இதனை அரண்மனையின் அந்தபுரத்துக் கிணறு என்று சொல்கிறார்கள். மிகவும் பாசிபடிந்த நிலையில் உபயோகிக்கவே முடியா நீருடன் பரிதபமாய் இருக்கிறது இப்பாழுங்கிணறு.
பாழுங்கிணறு |
விந்தன்கோட்டையில் இருந்து தென்காசிப் பெரிய கோவிலான காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்வதற்காக சில இடங்களில் சுரங்கப் பாதைகள் இருந்துள்ளது. தற்போது அந்த இடங்களில் சுரங்கம் இருந்ததற்கான தடங்களை மட்டுமே நம்மால் காண முடிகிறது.
கோட்டையின் வெளிப்புறம் மூன்று அடி உயரம் கொண்ட நடுகல் ஒன்று நட்டு வைக்கப்பட்டுள்ளது. நடுகல்லின் மத்தியில் வீரன் ஒருவன் போர்வாளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு போர்க்களம் நோக்கி ஓடுவது போன்ற சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. போரில் வீர மரணம் அடையும் வீரர்களின் நினைவாக நடுகற்கள் கோட்டை வாயிலில் வைக்கப்படுவது மரபு. அதனால் இந்த நடுகல் இருக்கும் இந்த இடத்தில தான் அன்றைய கோட்டைக்கான வாயிலும் இருந்திருக்க வேண்டும். கோட்டைக்கு இரண்டு வாயில், மற்றொரு வாயிலிலும் நடுகல் நட்டு வைக்கப்பட்டுள்ளது.
கோட்டையை சுற்றிலும் வற்றிப்போன குளங்களைக் காண முடிகிறது. விந்தன் கோட்டையை நீராலான கோட்டை என்று குறிப்பிடுவதற்கான சாட்சிகள் இந்த வற்றிப் போன குளங்கள் மட்டுமே.
பராக்கிரமப் பாண்டியனின் குல தெய்வமான வீர கண்டியம்மனின் கோவில் கோட்டைக்கு வெகு அருகில் உள்ளது. போருக்கு செல்வது முதல் எந்த ஒரு முக்கியமான முடிவு எடுப்பதுமாய் இருந்தாலும் வீர கண்டியம்மனிடம் ஆசி பெற்று செய்வதுதான் பாண்டிய மன்னர்களின் வழக்கமாக இருந்துள்ளது. வேப்ப மரங்கள் சூழ வீர கண்டியம்மன் வீற்றுள்ளார். நாங்கள் சென்ற நேரம் கோவிலன் நடை சாத்தபட்டிருந்தது. கோவிலின் கதவில் இருந்த ஜன்னல் வழியாக அம்மனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம். கோவிலன் உள்ளே கும்மிருட்டு. அந்த இருட்டுக்கு கண்கள் பழகி அம்மன் காட்சியளித்த அந்த நொடியை சற்றே ரம்மியமானதாய் உணர்ந்தோம்.
கோட்டையின் அடித்தளம் |
வீர கண்டியம்மனுக்குப் பின்னால் சிறிது தொலைவில் வீற்றிருப்பவர் விந்தன் கோட்டையின் காவல் தெய்வமான கோட்டை கருப்பசாமி. இவர் மிகவும் உக்கிரமான சாமி என்பதால் அவரின் அருகில் சென்று வழிபட அவ்வூர் மக்கள் எங்களை அனுமதிக்க வில்லை. அதனால் சில மீட்டர் தொலைவில் நின்றே தரிசித்தோம். பத்தடி உயரத்திற்கு மண் கொண்டு எழுப்பட்ட இந்த கோட்டை கருப்பசாமி விந்தன் கோட்டையை தீய சக்திகள் எதுவும் நெருங்கிவிடா வண்ணம் காத்து வருகிறார் என்று இவ்வூர் மக்கள் கூறுகிறார்கள்.
தென்காசியின் வரலாறை சுமந்து நிற்கும் விந்தன் கோட்டை பற்றி தென்காசியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் பலருக்கும் தெரியாது. நம்மை ஆண்ட மன்னர்கள் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை. பராகிரமப் பாண்டியன் கட்டிய தென்காசி பெரிய கோவில் பாண்டியர்களின் கட்டிட மற்றும் சிற்ப கலைக்கு சான்றான ஒன்று. இன்றைய நிலையில் அக்கோவில் ஒன்று தான் அவனது புகழை கம்பீரமாக பறை சாற்றிக் கொண்டுள்ளது.
வரலாற்றின் மிக முக்கியமான ஆதாரத்தை, நினைவுச் சின்னங்களை பாதுகாக்க அரசாங்கமும், எம்மக்களும் தவறி விட்டனர் என்பதை நினைக்கும் பொழுது சற்றே வருத்தமாய் உள்ளது. எஞ்சிய பகுதிகளையாவது பாதுகாக்க வேண்டும் என்பதே எம்போன்றோரின் அவா!
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சென்று வாருங்கள். தென்காசியில் இருந்து பேருந்து வசதி எதுவும் இல்லை.ஆட்டோ மற்றும் காரில் செல்லும் அளவுக்கு வழி உள்ளது.
Tweet |
கோவில் படம் அழகாக இருக்கிறது. கோட்டையைப் பற்றி இன்னும் சுவாரஸ்யமாக எதிர்பார்த்தேன். இது மாதிரி இடங்களைப் பார்ப்பதில் எனக்கும் ஆர்வம் இருக்கும்.
ReplyDeleteமிக்க நன்றி ஸ்ரீராம் சார்.... இன்னும் சுவாரசியமான விஷயங்கள் பொதிந்து கிடக்கலாம், அறிந்து கொள்ள வேண்டும்... நிச்சயம் மற்றொரு பயணத்தில் மேலும் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறன்... மிக்க நன்றி சார்
Deleteகோட்டையின் மிச்சம் மீதி மட்டுமே இருப்பதால் 21ம் நூற்றாண்டு தலைமுறையினருக்கு வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். எனினும் அவற்றைத் திரட்டி பதிப்பித்த சீனுவுக்கு பாராட்டுக்கள். பின்னாளில் வரும் தலைமுறையினர் இதைப் படித்து வரலாறை அறிந்துகொள்வார்கள். நானும் முடிந்தால் ஊருக்கு வரும்போது சென்று வருகிறேன்...
ReplyDelete//ல் 21ம் நூற்றாண்டு தலைமுறையினருக்கு வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.//
Deleteமிக்க நன்றி சார்.. வரலாற்றுச் சின்னங்கள் தான் அழிந்து போயின... வரலாறு நம்முடன் தான் இருக்கிறது... தெரிந்து கொள்ள தான் நமக்கு வாய்ப்பு கிடைக்கவேயில்லை....
குற்றாலம் செல்லும் போதெல்லாம் தென்காசி கோவிலுக்கு செல்வதுண்டு... இந்த விந்தன் கோட்டைக்கு இந்த முறை தான் செல்ல வேண்டும்... நன்றி...
ReplyDeleteநிச்சயம் சென்று வாருங்கள் சார்... ஒருவேளை செல்வதாயிருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள், நிச்சயம் வழிகாட்டுகிறேன்....
Deleteமுறையான பேருந்து வசதி இல்லாதும் விந்தன் கோட்டைக்கு சென்று வந்து பயண விவரங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteகேள்விப் படாத வரலாறு. உக்கிரசாமி சுவாரசியம்.
சீரான சுவையான எழுத்து.
// உக்கிரசாமி சுவாரசியம். //
Deleteஎனக்கும் ரொம்ப ரொம்ப சுவாரசியமாய் இருந்தது.. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சென்று வாருங்கள்..
//சீரான சுவையான எழுத்து.//
மிக்க நன்றி சார்... ஜாம்பவான்களிடம் இருந்து பாராட்டு என்றால் சும்மாவா :-)
பாண்டிய மன்னனின் வரலாறு என்றால் சுவைதான். வீரம் செழித்த மண்.காலத்தால் அழிக்கப் படாமல் ஹரப்பா நிலமெல்லாம் இருக்கும்போது இந்தக் கோட்டை மட்டும் மக்களால் பெயர்த்தெடுக்கப் படுகிறது என்று கேட்கவே வருத்தமாக இருக்கிறது. மிக அழ்காகப் பகிர்ந்திருக்கிறீர்கள். தொல்பொருள் காப்பு இலாகவின் ஆதரவு கிடைத்தால் இந்த இடமும் பயன் பெறுமோ என்னவோ. மிக நன்றி திரு சீனு.
ReplyDeleteபாண்டிய மன்னர்கள் என்பதை விட மூவேந்தர்களிடம் இருந்தும் நமக்குத் தேவையான அளவு வீர வரலாறு உள்ளது... கல்வியும், சார்ந்த சமுதாயமும் கொடுக்க மறந்துவிட்டது... நாமே தேடித் தெரிந்து கொள்ள வேண்டியது தான்... மிக்க நன்றி அம்மா
Deletetenkasila ippidi oru kottai irukka? arumaiyana information sharing.nanum tenkasi pakkanthan boss
ReplyDeleteமிக்க நன்றி நண்பா... தென்காசி பக்கம் எங்க நண்பா
Deleteenakku puliangudi nanba
Deleteஇந்த பதிவிர்க்கு பின்னால் நெறைய மெனக்கெடல் இருப்பது தெரிகிறது . இது மாதிரியான பதிவுகளை தான் எதிர்பார்த்தேன் .
ReplyDeleteஒரு வரலாற்று பயணம் இங்கே
வரலாற்று பதிவாகிறது
வருங்காலம் வாழ்த்தும் - உ(ண்)ம்மை ...!
//ஒரு வரலாற்று பயணம் இங்கே
Deleteவரலாற்று பதிவாகிறது
வருங்காலம் வாழ்த்தும் - உ(ண்)ம்மை ...!//
மிகவும் ரசித்தேன் நண்பா. ஆனால் என் மீது நீங்கள் காட்டும் நம்பிக்கையை பார்த்தால் சற்றே பயமாக உள்ளது... நாளுக்கு நாள் இன்னும் என்னை மெருகேற்ற வேண்டும் என்ற பயம் தான் அது...
கோட்டையின் மீதமும் மக்களால் சூறையாடப்பட்டு அழிந்து போனாலும் வியப்பில்லை. காக்க வேண்டிய பழங்கால பொக்கிஷங்களை இப்படித்தான் அழித்துக்கொண்டிருக்கின்றனர் நம் மக்கள். நல்ல பகிர்வு சகோ.
ReplyDelete//காக்க வேண்டிய பழங்கால பொக்கிஷங்களை இப்படித்தான் அழித்துக்கொண்டிருக்கின்றனர் நம் மக்கள்.// சரியாய்ச் சொன்னீர்கள், இனியாவது காக்க வேண்டும்
Deleteநல்ல பதிவு சீனு ...
ReplyDeleteஒன்றை கவனித்திர்களா சீனு... ஒவ்வொரு பழைய பொக்கிசங்களை சரியாக பாதுக்காக்க தவறி இருக்கிறோம் ... அரசாங்கமும் அதில் கவனம் செலுத்தவுமில்லை ... எல்லாம் சிதிலம் அடைந்த பிறகே அதை புனரமைக்க நிதி ஒதுக்கி பெயருக்கு வேலை செய்யும் அரசாங்கமும், மதிப்பை உணராமல் சிதைக்கும் மக்களும் உணராதவரை இது போன்ற எண்ணற்ற பொக்கிசங்கள் நம் காலத்திலே அழியும் ..
//மதிப்பை உணராமல் சிதைக்கும் மக்களும் உணராதவரை இது போன்ற எண்ணற்ற பொக்கிசங்கள் நம் காலத்திலே அழியும் ..// எனக்கும் அது தான் வருத்தமாய் இருக்கிறது ராசா.. நம் கண்முன் அழிகிறது, காக்க தான் முடியவில்லை... கோடிகள் கேடிகள் கையில் சென்றால் சர்வமும் சர்வ நாசம் தான் ...
Deleteநல்ல பதிவு சீனு. எத்தனை பொக்கிஷங்களை இழந்து வருகிறோம் என புரிகிறது.
ReplyDeleteஉண்மை சார்...
Deleteஉங்கள் பகிர்வினால் கோட்டை பற்றி அறிந்துகொண்டோம்.
ReplyDeleteவரலாற்றுச் சின்னங்கள் அழிவடைந்து வருவது கவலை தருகின்றது.
வருகைக்கு மிக்க நன்றி சகோ
Deleteவரலாற்று இடங்களை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு உண்டு அந்த வகையில் விந்தன் கோட்டை பற்றிய பகிர்வுக்கு நன்றி சீனு
ReplyDeleteவரலாற்று பொக்கிசங்களை போற்றி பாதுகாக்க வேண்டும்
உங்கள் ஊரே கலைப் பொக்கிஷம் சார்... தஞ்சை குடந்தை என்றால் சும்மாவா
Deleteபல நல்ல செய்திகளை சொல்லும் பதிவு.. இது போன்ற எண்ணற்ற வரலாற்று எச்சங்கள் நம்மை சுற்றி இருக்கின்றன.. நாம் தான் எதையும் கண்டு கொள்வதில்லை.. பராக்கிரம பாண்டியன் பற்றிய இன்னொரு செய்தியை இங்கு சொல்ல விரும்புகிறேன். தென்காசியில் பிரதிஷ்டை செய்வதற்காக காசியில் இருந்து சிவலிங்கத்தை எடுத்து வந்திருக்கிறான் பராக்கிரம பாண்டியன்.. வழியில் ஒரு இடத்தில் தங்கி இளைப்பாறிவிட்டு கிளம்பியிருக்கிறார்கள்.. ஆனால் கீழே வைத்த் சிவலிங்கத்தை மட்டும் எவ்வளவு முயற்சி செய்தும் எடுக்க முடியவில்லை. சரி இங்கேயே இருக்கட்டும் என ஒரு சிறிய கோவில் கட்டி, காசியில் இருந்து எடுத்த வந்த சிவலிங்கம் ஆதலால் அதற்கு சிவகாசி என்று பெயரிட்டு சென்றான் அந்த மன்னன்.. இன்றும் ஊருக்கு மத்தியில் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது அந்த சிவன் கோவில்.. :-)
ReplyDeleteதென்காசி பெரிய கோவில் பற்றி ஒரு பதிவு எழுதிக் கொண்டுள்ளேன், அதில் இதைப் பற்றியும் குறிப்பிட நினைத்தேன்.. ஆனால் அந்தக் கோவிலை நான் பார்த்தது கிடையாது, இப்பொது அதன் நிலை என்னவென்றும் தெரியாது...
Deleteமிகச் சரியான நேரத்தில் மிகத் தேவையான தகவலை தந்துளீர்கள் நண்பா... உங்களால் யான் தன்யவானானேன் :-)
ஏதோ உங்களை போன்ற ராமனுக்கு நான் ஒரு அணிலாக உதவினேன் என்பது நான் செய்த பாக்கியம் பிரபு.. :P
Deletethanks Ram Kumar!
ReplyDeleteஅப்பாதுரை சார் உங்களுடன் நானும் சேர்ந்து சொல்கிறேன்
Deletethanks Ram Kumar!
நன்றி அப்பாதுரை சார் & சீனு :-)
Deleteமிகவும் அருமையான கோட்டையைப் பற்றிய அழகான பதிவு! தகவல்களும் படங்களும் வியக்க வைத்தன! இந்த பதிவு என் டேஷ் போர்டில் வரவில்லை! அதனால் தாமதமான வருகை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete///பராக்கிரமப் பாண்டியனின் குல தெய்வமான வீர கண்டியம்மனின் கோவில் கோட்டைக்கு வெகு அருகில் உள்ளது. போருக்கு செல்வது முதல் எந்த ஒரு முக்கியமான முடிவு எடுப்பதுமாய் இருந்தாலும் வீர கண்டியம்மனிடம் ஆசி பெற்று செய்வதுதான் பாண்டிய மன்னர்களின் வழக்கமாக இருந்துள்ளது. வேப்ப மரங்கள் சூழ வீர கண்டியம்மன் வீற்றுள்ளார். நாங்கள் சென்ற நேரம் கோவிலன் நடை சாத்தபட்டிருந்தது. கோவிலின் கதவில் இருந்த ஜன்னல் வழியாக அம்மனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம். கோவிலன் உள்ளே கும்மிருட்டு. அந்த இருட்டுக்கு கண்கள் பழகி அம்மன் காட்சியளித்த அந்த நொடியை சற்றே ரம்மியமானதாய் உணர்ந்தோம்.///
ReplyDeleteவணக்கம் சார்,
நீங்கள் குறிப்பிட்டுள்ள கோவிலிலிருக்கும் அம்மன் எங்கள் குலதெய்வம் தான். பெயர் வீரகண்டி இல்லை. நீலகண்டி. பகிற்விற்கு நன்றிகள்.
அன்புடன், ரெங்கராஜன்.
கோவிலுக்கான மேலும் தகவல் தேவை Rksvg@ telegram id ku message pannavum
Deleteநீலகண்டி அம்மன் கோயில் இருப்பது போல் காவல் தெய்வமாக இருப்பது
Deleteகோடட்டைமாடசாமி
இருக்கிறாா்.அவா் எங்கள் குலதெய்வம்.அருகில்
உள்ள தட்டான்குளம்
கிராமத்தில் ஆலயம்
அமைத்து வணங்கி வருகிறோம்.
விந்தன் கோட்டை பெயர்காரணம் தெரியும். அதன் அருகில் கம்பிளி க்கு பெயர் விளக்கம் என்ன சகோ?
ReplyDeleteநீலகண்டியா? வீரகண்டியா? ரெங்கராஜன் சார்... நீங்க விந்தன்கோட்டையா?
ReplyDeleteஅங்கே மறவர்கள் அதை கும்பிடுவதாக அறிந்தேன். அதான் கேட்கிறேன். தென்காசி அருகே உள்ள கண்டமங்கலம் குணம். உக்கிரபாண்டியத்தேவர் குடும்பத்தினருக்கு இந்த கோயில் குல தெய்வமா?
ReplyDeleteஅங்கே மறவர்கள் அதை கும்பிடுவதாக அறிந்தேன். அதான் கேட்கிறேன். தென்காசி அருகே உள்ள கண்டமங்கலம் குணம். உக்கிரபாண்டியத்தேவர் குடும்பத்தினருக்கு இந்த கோயில் குல தெய்வமா?
ReplyDelete