13 Mar 2013

உலகை அழிக்கும் பாசக்கயிறு - எமனிடமா? மனிதனிடமா?


மது வாழ்வின் அடுத்த நொடிகளை கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கும் மனிதனின் சுயநல மற்றும் சுயலாபங்களைப் பற்றிய கட்டுரைகள், அடுத்தடுத்த வாரங்களில் தமிழகத்தின் மிக முக்கியமான மூன்று பத்திரிக்கைகளில் வெளிவந்திருந்தனபுதியதலைமுறை, சென்னை போன்ற பெருநகரங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் சூழல் மாசுபடுதலைப் பற்றியும், விகடன் விஷமாகும் குடிநீர் பற்றியும், இந்தியாடுடே நோய் எதிர்ப்பு மருந்துகள் பற்றியும் வெளியிட்டிருந்த கட்டுரைகளின் தாக்கத்தில் இருந்து இந்த பதிவை எழுதுகிறேன்

என்ன அருமையான படம். ஒரு நிமிடம் செயலற்று விட்டேன்  

வாழத் தகுதியற்ற நகரங்களில் ஒன்றாக சென்னையும் இடம் பெற்றுள்ளது என்பதே புதிய தலைமுறை கட்டுரையின் சாராம்சம். நிச்சயமாக சொல்கிறேன் சென்னை ஒரு வாழத் தகுதியற்ற ஒரு ஊர் தான். என்னைப் போன்றவர்கள் அனைவரும் சேர்ந்து சேர்ந்து சேர்ந்து சென்னையை வாழத் தகுதியற்ற ஊராக்கிவிட்டோம். எங்களுக்கு வேறு வழியில்லை. அல்லது வேறு வழியை ஏற்படுத்தித் தர இந்த அரசாங்கம் தயாராயில்லை. சென்னையும் சென்னையுடன் சேர்ந்து நாமும் திணறிக் கொண்டுள்ளோம். சென்னைக்கு நெறி கட்ட ஆரம்பித்துவிட்டது கூடிய சீக்கிரம் நாறத் தொடங்கிவிடும். படிப்பதற்கே அருவருப்பாய் உள்ளது இல்லையா? தினமும் கண்முன் பார்க்கும் சென்னையை நினைக்கும் பொழுது பரிதாபமாய் உள்ளது.

சென்னையில் இல்லாத மாசுபாடுகளே இல்லை. காற்று மாசுபாடு, ஒலி/ஒளி மாசுபாடு, பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர் மாசுபாடு என்று கண்முன்னே பலவற்றையும் கண்டும் காணாமலும் கடந்து கொண்டுள்ளோம்பீக் ஹவர்களில் சென்னை திணறுகிறது. சீறிபாயும் வாகனங்களில் இருந்து வெளிப்படும் கரியமில வாயு மிக வேகமாக காற்றுடன் கலந்து கொண்டிருகிறது. அதை நிம்மதியாய் நாமும் சுவாசித்துக் கொண்டுள்ளோம், எத்தனை நாளைக்கென்று தெரியாமல்! அதை விட கொடுமை புகையுடன் சேர்த்து முறையாக பராமரிக்கபடாத சாலைகளில் இருந்து தூசிகளையும் சேர்த்து சுவாசித்துக் கொண்டுள்ளோம்

மிழகத்தின் மிக மிக சிறிய மாவட்டம் சென்னை, ஆனால் இன்றோ திண்டிவனத்தின் மிக மிக அருகில் என்னும் அளவிற்கு விரிந்துவிட்டதுசென்னையின் புறநகர் முழுவதும் ஆஸ்மா வந்தே சாகப்போகிறது. மாநகராட்சி எதையும் கண்டு கொள்வது கிடையாது. ஆவடி அம்பத்தூர் பூந்தமல்லி தாம்பரம் மேடவாக்கம் வேளச்சேரி இங்கெல்லாம் தூசிகளால் மாசுபாடு என்றால், கிழக்குக் கடற்சாலையின் ஒரு அங்கமான எண்ணூர் திருவெற்றியூர் முழுவதும் ரசாயனக் கழிவுகளின் மாசுபாடுகளால் ஆக்கிரமிக்கபட்டுளது


பெரிய பெரிய கடைகள், அலுவலகங்கள் முழுமையும் குளுமைப் படுத்தபட்டுள்ளது. இவற்றின் மூலம் காற்று மாசுபாட்டின் மிக முக்கிய காரணியான க்ளோரோ ப்ளோரோ கார்பன் அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. ஓசோன் பாதிப்பும், வெப்பச் சமநிலை பாதிப்பும் பற்றி நமக்கேன் அக்கறை. இருக்கின்ற மரங்களை வெட்டி வீடு கட்டிவிட்டு, இளைப்பாற காடுகளையும் வெட்டிக்கொண்டு இருக்கிறோம். பின் ஏன் பருவ மழை பொய்க்காது. இயற்கையை அதன் போக்கில் இயங்க விடாமல் செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் மிக வேகமாக செய்து வருகிறோம். அதன் பலனை மெதுவாக அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம்

ரி குளங்கள் அனைத்தையும் ஆற்று மணல் கொண்டு வீடுகளாக்கி விட்டோம். ஆற்றை நீரோட சக்த்யில்லாத முடமாக்கிவிட்டோம்மழை இல்லை விவசாயம் இல்லை வருமானம் இல்லை சோற்றுக்கு வழி இல்லை என்று விவசாயிகளும், சிறந்த முதலீடு, நாளைய தலைமுறைக்கான சொத்து சேர்ப்பு என்று நாமும்விளை நிலங்கள் அனைத்தையும் கூறுபோட்டு காசாக்கி விட்டு நாளைய சோற்றுக்கு எதைத் திங்கப் போகிறோம் என்று தெரியவில்லை. மழை வளம் பெருக்கவும், விவசாயம் செழிப்பது பற்றியும் சிந்திக்க துப்பில்லாத என் போன்ற இளைஞர்களும், எங்களுக்கு வழிகாட்ட தெரியாத தலைமுறையாக நீங்களும் இருப்பது நாங்கள் பெற்ற சாபக்கேடு.       

ருத்துவக் கழிவுகள், -வேஸ்டேஜ்கள், பிளாஸ்டிக் கழிவுகள் என்று அழிக்கவே முடியாத கழிவுகளை உலகுக்கு உரமாக கொடுத்துக் கொண்டுள்ளோம். பிளாஸ்டிக் பொருட்கள் நமது உயிரை மட்டும் தான் இன்னும் மாய்க்கவில்லை. எத்தனையோ ஜீவன்கள், உயிரினங்கள் மாண்டு போக தொடங்கிவிட்டன. தினமும் சாலையில் கால்நடைகள் பிளாஸ்டிக் பைகளை உண்பதை நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை. பிளாஸ்டிக் உபயோகத்தையும் நம்மால் குறைக்க முடியவில்லை.  




குடிக்கும் குடிதண்ணீரை ஒழுங்காக சுத்திகரிக்காமல் புட்டிகளில் அடைத்து விற்றுக் கொண்டிருகின்றனர். இந்த ஈனத்தனமான வியாபாரத்திற்காக பல லட்ச ருபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு அதிகாரிகளும் விஷநீரை நம்மை வலுகட்டயாமாக குடிக்க வைக்கின்றனர். சென்னைவாசிகள் அன்றாடம் குடிக்கும் கேன்களில் நிரப்பட்ட குடிநீரில் மலத்தில் இருந்து உருவாகும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன என்றால் உங்கள் குடிநீரின் தரத்தை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். ரயில் பிரயாணத்தின் பொழுது கிடைக்கும் ரயில் நீரிலும் இதே நிலை தான் என்பது கூடுதல் தகவல்


ங்கும் கொசுக்களின் மயம், டெங்கு வந்தபின் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகளை குறும்படமாக ஒவ்வொரு திரை அரங்கிலும் வெளியிடுகிறார்கள். வருமுன் காக்கும் அரசாங்கம் நமக்குக் கிடைப்பது எப்போது? புதிய புதிய கொள்ளை நோய்கள் நம்மை தாக்கத் தொடங்கியுள்ளன. பலவற்றிற்கு மருந்து கிடையாது. பயோ வார் தனது மறைமுகத் தாக்குதல்களை தொடங்கியுள்ளது. , தசாவதாரம், ஏழாம் அறிவு போன்ற படங்கள் சமீபத்தில் பயோவாரை மையமாக வைத்து வெளிவந்த படங்கள். சார்ஸ் என்னும் நோய் பயோவாரின் ஒரு அங்கமே. இவற்றில் இருந்து அரசாங்கம் எப்படி நம்மை காப்பாற்றப் போகிறதுநேரடித் தாக்குதல்களில் இருந்தே நம்மை காப்பாற்றத் தவறும் அரசாங்கம், மறைமுக தாக்குதல்களில் இருந்தா காப்பாற்றப் போகிறது

ந்தியாவை இந்தியர்களைப் பொருத்தவரை மருத்துவ படிப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. தேவையான அளவிற்கு பொறியாளர்களை உற்பத்தி செய்து தள்ளியகிவிட்டது. அதிகமான மருத்துவ கல்லூரிகள், மருத்துவ ஆய்வுப் படிப்புகள் முதலியவற்றில் இந்தியா "ஏன் கவனம் செலுத்தவில்லை?" என்பது புரியாத புதிராக இருக்கிறது. மருத்துவ விழிப்புணர்வு இல்லாத இந்தியர்களை தங்களுக்கு சாதகமாக அரசியல்வாதிகளும் மருத்துவ சமுதாயமும் பலியாக்கிக் கொண்டுள்ளது . மருத்துவப் படிப்பு பரவலாக்கப்பட வேண்டும், வருங்கால சீக்காளி இந்தியாவிற்கு அது மிக முக்கியம்.   

ந்தியா டுடே வெளியிட்ட கட்டுரைக்கு வருகிறேன். நாம் உட்கொள்ளும் நோய் எதிர்ப்பு மருந்துகளான ஆன்டிபயாட்டிக் ஒழுங்காக வேலை செய்யவது இல்லை. மருத்துவ ஆலோசனை இல்லாமல் உட்கொள்வதும், தவறான மருத்துவ ஆலோசனையின் மூலம் உட்கொள்வதானாலும் நம் உடலில் இருக்கும் நோய்க் கிருமிகள் நோய் எதிர்ப்பு சக்திக்கு பழகிவிடுகின்றன.

ன்டிபயாட்டிக் மருந்து உட்கொள்ளும் பொழுது கிருமிகள் மருந்தின் மூலக்கூறுகளை வெளியேற்றி விடுகின்றன, அல்லது மருந்து தாக்க வண்ணம் தங்களது வடிவமைப்புகளை மூலக்கூறுகளின் கட்டமைப்புகளை மாற்றி " நீ தேடும் எதிரி நான் இல்லை" என்று ஏமாற்றி விடுகின்றன. சுருங்கச் சொன்னால் மனிதன் கண்டுபிடித்த ஆன்டிபயாட்டிக் மருந்துகளை விட இயற்கை உற்பத்தி செய்த நோய்க் கிருமிகள் அதிக வலு பெற்றுவிட்டன. அனைத்திற்கும் காரணம் நாம் தான் நாம் மட்டுமே தான்.  இந்தியர்கள் அமெரிக்கர்களை விட அழ மடங்கு அதிகமாக ஆன்டிபயாட்டிக் மருந்து உட்கொள்கின்றனர்.  

ன்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகள் இருபதே நிமிடத்தில் இரு மடங்காக வளரும் ஆற்றல் படைத்தவை. நீங்கள் நன்றாக இருக்கும் பொழுது உங்களை ஒன்றும் செய்யாது, விபத்து, அவசர சிகிச்சை காலங்களில் ஆன்டிபயாட்டிக் கொடுக்கும் பொழுது தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும்

"வாழ்க்கை எதிர்பாரா திசையில் திருப்பப்படும் கட்டத்தில் நாம் நிற்கிறோம். ஒரு பிளேடு காயம், கேளே விழும்பொழுது ஏற்படும் சிராய்ப்பு, என எதிலும் அது நேரலாம். நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு பிந்தைய யுகத்தின் துவக்கத்தில் நாம் இருக்கிறோம்" என்று நிறைவடைகிறது இந்தியா டுடேவின் "உங்கள் நோய் எதிர்ப்பு மருந்துக்கே சீக்கு" என்னும் அந்தக் கட்டுரை.   

ஆன்டி பயாட்டிக் எதிர்ப்புக் கிருமிகள் வேலை செய்யும் விதம்.
படம் தமிழில் கிடைக்க வில்லை  
              

ன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே. கட்டுப்பாடில்லாத அரசின் கீழ் கட்டுப்படாத (மா)மக்களாக  வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தனிமனித ஒழுக்கம் இல்லாத போது அதை நிலைநிறுத்த சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. ஆனால் இங்கோ எல்லாமே தலைகீழ், எல்லா இடங்களிலும் அலட்சியம். தனக்கு ரத்தம் வராத வரை எல்லாமே தக்காளி சட்னி தான்சட்ட திட்டம் தீட்டி எல்லாவற்றுக்கும் நிதி ஒதுக்கிவிட்டு, அந்த நிதியை தனதாக்கிக் கொள்ளும் அரசியல்வாதிகளையும், அதைக் கண்டுகொள்ளாமல் தனது அன்றாட வாழ்கையை மட்டும் கவனிக்கும் சாதாரண இயந்திரமாக நாமும் சுழன்று வருகிறோம்.        

யார் மீது கோபப்படுவது என்மீதா, உங்கள் மீதா, இல்லை (நமக்குஎதுவுமே செய்யாமலும், (தனக்கு) எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்ற மனநிலையில் இருக்கும் அரசியல்வாதிகள் மீதா? தெரியவில்லை. பொறுப்பில்லாத நம் ஒவ்வொருவரையும் என் கோபம் சென்று சேரும்இன்றைய பொழுதை கழித்து நாளைய தலைமுறைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் விட்டுச் செல்லும் சிதைந்து போன இந்த உலகத்தில் நாளைய தலைமுறையால் சந்தோசமாக வாழ முடியும் என்று நினைகிறீர்களா

மக்கான பாசக்கயிறை நமக்கு நாமே இறுக்கிக் கொண்டு நாளுக்கு நாள் ஒவ்வொரு நொடியாக செத்துக் கொண்டுள்ளோம் என்ற உண்மை உணரப்படும் பொழுதும் நாம் திருந்தவில்லை என்றால் இந்த உலகம் முழுமையாக நம்மால் அழிக்கபடுவது உறுதி

31 comments:

  1. சொல்லியிருப்பது அனைத்தும் உண்மை. மருந்து சம்பந்தப் பட்ட கட்டுரையை விட மற்ற இரண்டும் பயமுறுத்துகின்றன. இந்த லட்சணத்தில் வெளிநாடுகள் தரும் பணத்துக்குஆசைப் பட்டு அவர்களின் ரசாயன, மின் கழிவுகளை இந்தியா கொண்டு வந்து இந்திய நகரங்களில் கொட்டும் நபர்களும் இருக்கிறார்கள் என்றும் படித்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார் சொல்லியது சில சொல்லாமல் விட்டது பல உள்ளது... என்ன செய்யப் போகிறோம் என்று தான் தெரியவில்லை

      Delete
  2. nalla aazhamaana vethanai konda varikal....


    unmaithaan...!

    ReplyDelete
    Replies
    1. ஆமா நண்பா உலகமே அப்டி தான் இருக்கு

      Delete
  3. படிக்கையில் பயமாகவும் மிகவும் வருத்தமாகவும் இருக்கிறது சீனு. குடிக்கும் குடிநீர்கூட சரியானபடி கிடைக்கவில்லையென்றால்....? என்னத்தச் சொல்ல!

    ReplyDelete
    Replies
    1. அனைத்திலும் கலப்படம்... பேசாமல் பணக்காரர்கள் அனைவரும் சேர்ந்து மிச்ச இருப்பவர்களை கொன்று விட்டால் அவர்களாவது நிம்மதியாக வாழலாம், மற்றவர்கள் நிமதியாய் பொய் சேரலாம்... அதிகாரவர்க்கதின் முடம்....

      Delete
  4. கொடுமை... நாமும் சேர்ந்து சென்னையை பாழாக்கி வருகிறோம் என்பது வேதனைக்குரிய உண்மை...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா சார்... சென்னை பாவம்

      Delete
  5. வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வளமுடன் வாழ வழி தேடியே ஆக வேண்டும் அய்யா

      Delete
  6. சுயநலம்... சுயநலம்... சுயநலம்... இதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை...

    ReplyDelete
    Replies
    1. வேறு எதையும் சொல்ல முடியாது சார்

      Delete
  7. நல்ல விழிப்புணர்வுப் பதிவு. தர்மா மீட்டர் பதிவு. ஜுரம் இருக்கிறது என்பதைக் காட்டும் பதிவு. என்ன செய்தால் / செய்யாமல் இருந்தால் ஜுரம் போகும்? இதை நாம் அனைவரும் கூடி யோசிக்க வேண்டாமா?

    ReplyDelete
    Replies
    1. ///தர்மா மீட்டர் பதிவு. // நல்ல வேளை தர்மாஸ்பத்திரி பதிவுன்னு சொல்லாம விடீங்கலே :-)

      Delete
  8. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. எதிர்காலம் பற்றி பயம் ஏற்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. எதிர்காலம் பற்றி நாம் பயபடுவதை விட தவிர வு எதையுமே நம்மால் செய்ய முடியவில்லையே சார்...

      Delete
  9. தேர்ந்த பத்திரிகையாளரின் எழுத்துக்கள் போல உள்ளது. வாழ்த்துக்கள் . சினிமாவை குறைத்து வேறு தளங்களில் நீர் பயணப்பட வேண்டும் என்பது என் விருப்பம் .

    ஆனந்த விகடன் கட்டுரையை நானும் படித்தேன். இப்பல்லாம் தண்ணி குடிக்கவே பயமா இருக்கு . தண்ணியா இல்லா விசமா ...?

    இன்றைய நிலையை , இணைப்பு கொடுத்துள்ள காணொளியை விட வேறு என்ன சொல்லிவிட முடியும் . சக மனிதர்களை பற்றியே அக்கறை இல்லாதபோது, விலங்குகள் எம்மாத்திரம் . இங்கு கார்ப்பரேட் ராஜபக்செக்கள் ஏராளம் . அவர்களுக்கு துணைபோகும் , விலைபோகும் நாமும் ராஜபக்செக்களுக்கு இணையானவர்களே.


    கொஞ்சம் கொஞ்சமாக நாமும் செத்து, நம்மை சுற்றி இருப்பவைகளையும் சாகடித்திக்கொண்டிருக்கிறோம் .


    ReplyDelete
    Replies
    1. சினிமா பொழுது போக்கிற்காக மட்டுமே எழுதுகிறேன். வேறு தளங்களில் நீர் பயணப்பட வேண்டும் " என்ற உற்சாகமான கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா...

      Delete
  10. சகோ குடிநீரிலும் இவ்வளவு இருக்கா வளரும் சமுதாயத்திற்கு நாம் விட்டுச் செல்வது அழிவையே என நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. படிக்க படிக்க பயம் தான் வருகிறது. ஆனாலும் திருந்த மாட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. மிக சரியா சொன்னீங்க சகோ

      Delete
  11. இந்த நேரத்திற்குத் தேவையான நல்ல கட்டுரை சீனு!

    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  12. நல்ல பதிவு மச்சி...

    ReplyDelete
  13. இதையெல்லாம் படிக்கும் போது வருங்கலத்தின் மேல் பயம் வருகிறது
    நிகழ்காலத்தின் மேல் வெறுப்பு வருகிறது

    சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்டு பதிவிட்டமைக்கு நன்றி சீனு

    ReplyDelete
  14. நல்ல கட்டுரை சீனு. சென்னை மட்டுமல்ல... இந்தியாவின் பல நகரங்களின் நிலை இது தான்.

    எனது பக்கத்தினையும் சொல்லிச் சென்றதற்கு நன்றி.

    ReplyDelete
  15. எல்லா நகரங்களுமே முறையற்ற வகையில் பெரிதாகிக் கொண்டே போகிறது. எதில் கலப்படம் இல்லை?
    எல்லோருக்குமே சமுதாய அக்கறை வேண்டும். எங்கிருந்து ஆரம்பித்து எப்படி இந்தக் குறைகளைக் களைவது?
    இந்தியா டுடே படம் அருமை!

    ReplyDelete
  16. எமன் தானே செய்ய மாட்டான்;பிறர்மூலம் செய்ய வைப்பான்.அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.மிக முக்கியமான ஒரு பிரச்சினையை விரிவாக அலசியிருக்கிறீர்கள்.நன்று.

    ReplyDelete
  17. சூப்பர் கட்டுரை நண்பா.. தேர்ந்த கட்டுரையாளரின் நடை.. நீங்கள் எடுத்திருக்கும் விசயம் இன்று மனித குலத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய கொடுமைகள்.. ஆனால் நாம் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறோம்.. இதிலும் பிறரை குற்றம் சொல்வதை விடுத்து நம்மால் முடிந்த பங்குக்கு சுற்றுப்புறத்தை எவ்வாறு காப்பது என முயற்சிக்கலாம்.. இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் சொன்னது இது - “நீ காட்டை எல்லாம் அழித்து வீடு கட்டுகிறாய் கேட்டால் அதற்கு பதில் மரங்கள் நடுகிறேன் என்கிறாய்.. மரங்கள் நட்டால் உன்னால் தோப்பை தான் உருவாக்க முடியும்.. அழிந்து போன காடு அழிந்து போனது தான்”.. இதை நாம் உணர்ந்து செயல்படும் போது இந்த உலகம் ரெத்தப்புற்று நோய் முற்றி சாகக்கிடக்கும் என்பது மட்டும் உறுதி..

    ReplyDelete
  18. மனிதனை அழிக்க மட்டுமே எமன். மொத்த உலகத்தையும் அழிக்க மட்டுமே மனிதன்.

    ReplyDelete
  19. அருமையான விழிப்புணர்வு கட்டுரை.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete