26 Jan 2013

ஐ மிஸ் யு டி - சிறுகதை


"எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்குடா...ப்ளீஸ்டா...என்ன லவ் பண்ணுடா " 

போன்-லையோ  இல்ல எஸ்-எம்-எஸ் லையோ அவ என்கிட்ட இப்படி சொல்லல, சொல்லிருந்தா கூட நான் சமாளிச்சிருப்பேன்

நல்ல பரபரப்பான ரோடு, சென்னையோட உச்சி வெயில். அங்க வச்சு தான் அவ என்கிட்டே லவ்வ சொன்னா. அவஅவளோட பைக்ல உக்காந்து  இருந்தா, நான் நின்னுட்டு இருந்தேன். குளிச்ச தல கூட காயல, தலைமுடி ஈரமும், லவ்வ சொல்ற பரபரப்பும் அவ காது பக்கம் வியர்வையா வழிஞ்சிட்டு இருந்தது. கண்ணனுக்கு கீழ கண்மை போட்ருந்தா, அழகான அந்த ()மை கோடுகள், இடது கண்ணுக்கு கீழ அதோட பாதைல இருந்து கொஞ்சம் விலகி இருந்தது, அத சரி பண்றதுக்கு பிரயத்தனப் பட்டு அந்த இடத்துல கொஞ்சம் அதிகமான கண்மை தீட்டப்படிருந்தது, அது கூட கொஞ்சம் அழகு தான்.       
       

யல்விழி பெண்களுக்கு இயல்பிலேயே கருவிழி ஈர்ப்பு சற்று அதிகம் தான், அதிலும் மை தீட்டப்பட்ட விழியாளின் விழிகளை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.   

ரொம்ப சீரியஸா என்கிட்ட சொல்லிட்டு இருந்தா, நான் எங்க மறுப்பு சொல்லிருவேனோன்ற பயம் அவ கண்ணுல கொஞ்சம் அதிகமாவே இருந்தது, பயம்ன்னு சொல்றத விட காதல்ன்னு சொல்றது கரெக்ட்டா இருக்கும். இதக் கேட்டதும் நா சிரிச்சேன், புன்னகை தான். ஆனா அது அவளுக்கு கண்ணீர வர வச்சிட்டு, டக்குன்னு கண்ணு கலங்கிட்டு.


னக்கும் அவளுக்கும் ரொம்ப நாள் பழக்கம் எல்லாம் இல்ல... மூணு மாசப் பழக்கம் தான்... நான் ரொம்ப மதிக்கிற ஒரு சொந்தக்காரங்க வீட்டு விஷேசத்துல வச்சு தான் பழக்கம். ஒரு பொண்ணு நம்மள பார்த்து சிரிச்சாலே பத்திக்கிற வயசு, இதுல மொபைல் நம்பர் கிடைச்சா கேக்கவா வேணும், இருபத்திநாலு வயசோட இருபத்தி நாலு மணி நேரத்தையும் அவளுக்கே கொடுத்ததால வந்த வினை. என்கூட பேசுறதுல அவளுக்கு தான் ஆர்வம் ரொம்ப அதிகம். அத ஒருநாள் கண்டுபிடிச்சிட்டேன் "என்னிகாது ஒருநாள் இவ லவ் பண்ணுறேன்னு சொல்லிருவா, ஒதுங்கிருடா"ன்னு அன்னிக்கே என் மரமண்டைகுள்ள அலாரம் அடிக்க ஆரம்பிச்சது

துங்க ஆரம்பிச்ச அடுத்த நாள், "நீ என்கிட்டே டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ற தான, என் கூட பழகுறவங்க எல்லாருமே இப்படித் தான் டா, சின்ன வயசுல இருந்தே என்கிட்ட எல்லாருமே அப்டி தான் பழகுவாங்க டா, ப்ரியா நல்லா  பேசுவா நீ தான் டி என் பெஸ்ட் பிரண்டுன்னு சொன்னா, எக்ஸாம்ல நா அவள விட ஒரு மார்க் அதிகமா வாங்குனதும் ஈகோ பிரச்சனையில பேசமா போனவ இன்னும் என் கூட பேசினது இல்ல" இப்படி பல ஈகோ எக்ஸாம்பிள் சொல்ல ஆரம்பிச்சா. பொண்ணுங்களோட பிரச்சனையே இந்த ஈகோ தாங்க, இத அவங்ககிட்ட சொல்லுங்க நம்பவே மாட்டங்க

"கே நா உன்னோட நல்ல பிரண்டா கடைசி வரைக்கும் இருப்பேன். அதுக்கு மேல நீ என்கிட்டே எதுவும் எதிர்பார்க்கக் கூடாதுன்னு" மனதளவுல ஒரு புரிந்துணர்வு ஒப்பந்ததுதுக்கு நா அவள தயார் பண்ணினேன்

தி.நகர் போறதுக்குகாக பஸ் ஸ்டான்ட் போறேன்ற விசயத்த அவகிட்ட சொன்ன உடனே, பஸ் ஸ்டான்ட் பக்கம் தான் பேங்க் இருக்கு, பேங்க்ல எனக்கு முக்கியமான வேலை இருக்கு, நீ அங்கேயே இரு நா வாரேன்னு சொல்லிட்டு கொஞ்ச நேரத்துல "வந்துட்டேன்னுகுறுந்தகவலும் அனுபுச்சா. எனக்கும் அவளுக்கும் இடையில பத்து கடை வித்தியாசம் இருந்தது. நான் அவள நோக்கி நடந்து வாராத வச்ச கண்ணு வாங்காமலேயே பார்த்துட்டு இருந்தா, அஞ்சாவது கடை கிராஸ் பண்ணும் போது நான் அவளோட கண்ணுல இருந்து எஸ் ஆகி இருந்தேன்


றாவது கடையில அவளுக்குப் பிடிச்ச டைரிமில்க் சாக்லேட் வாங்கிட்டு இருந்தேன். இது தான் பசங்களோட பலகீனம்இத பசங்ககிட்ட சொல்லிப்பாருங்க வழியுவானுங்க. ரெண்டு நிமிஷம் என்ன தேடுனதுல இருந்த கோவம் கையில இருந்த டைரிமில்க்கப் பார்த்ததும் பாசமா மாறிடிச்சு. அவ ரொம்ப நாளா என்கிட்டே கேட்ட டைரி மில்க் இப்ப தான் நான் மொத தடவையா அவளுக்கு வாங்கிக் கொடுக்குறேன், அதனால எனக்கும் ரொம்ப சந்தோசமா தான் இருந்துச்சு

ந்த சந்தோசத்த அடுத்த நொடியே திகிலா மாத்துவான்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அதான் கேட்டுட்டாளே, "எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்குடா...ப்ளீஸ் டா...என்ன லவ் பண்ணுடா... " . அந்த வார்த்தைகள்ல இருந்த காதலும் உண்மையும் தான் என்ன சங்கடப்பட்ட வச்சது. "இல்ல நாம பிரண்ட்ஸ் தான்ன்னு" மறுத்து சொல்ல முடியல, "உன்ன லவ் பண்ண முடியாதுடின்னு கோவப் பாடவும் முடியல". சந்தோசமும் கஷ்டமும் ஒன்னா வரும் போது நீங்க அழ மாட்டீங்க... நா சிரிச்சேன் அவ அழுதுட்டா... இல்ல அழல... ஆனா அழுதா.

ன்னோட இதயத்துல அவ காதலையும், நான் கடபாரையையும் சொருகுன அந்த நொடி இன்னும் எனக்கு நல்லா நியாபகம் இருக்குஎனக்கு மட்டும் லவ் பண்ணனும்னு ஆச இல்லையா என்ன? என்ன விட மூணு வயசு சின்ன பொண்ணுவேற ஜாதி. இதையெல்லாம் எதிர்த்து அவ கைய புடிக்கிற துணிவு என்கிட்ட இல்ல. சும்மா ஆசைய வளர்த்து மோசம் பண்ற பையனும் நா இல்ல. காதலன்றஆயுதத்த தூக்கி சண்ட போடுற தெம்பு என்கிட்டே இல்ல, அதனால அவ முன்னாடி நான் ஒரு கோழை தான். ஆனா எல்லாத்தையும் சமாளிக்கனும்ன்ற தைரியம் அவ கிட்ட இருந்தது.

வள பத்தி எனக்குத் தெரியும். அவளால சமாளிக்க முடியும்ன்னு எனக்குத் தெரியும், "நான்" அப்டின்ற பெரிய கேள்விக்குறிய நான் எப்படி சமாளிக்கப் போறேன்னு தான் எனக்குத் தெரியல. "எனக்கு கொஞ்சம் டைம் வேணும்"ன்னு கேட்டேன்.  அவ கொடுத்த டைம் முடியும் போது காதலிக்க முடியாதுன்னு தான் சொன்னேன்

"சரி பிரண்டா இரு..விலகி போகத"ன்னு அழ ஆரம்பிச்சா. அவ அழும் போது நான் ஏழாம் அறிவு படத்துல என்னோட ஆறாவது அறிவ தொலைச்சுட்டு படம் பார்த்துட்டு இருந்தேன்

வளப் பொறுத்தவரைக்கும் அவ எதிர்பார்த்த அந்த அழகான உலகத்த என்னால தரமுடியும்ன்னு நம்புனா. எதாவது பேசுவா, பேசிட்டே இருப்பா, அவளோட நாடக மேடைல நான் தான் எப்போதுமே ஹீரோ. அவளுக்கு பாட்டு ரொம்ப பிடிக்கும், அவளுக்கு பிடிச்சது எல்லாம் எனக்கும் பிடிக்கணும்ஒரு பொண்ணு என்ன லவ் பண்ணுறா. என்ன கொண்டாடுறா, ஆனா எல்லாத்தையும் தள்ளி நின்னு வேடிக்கைப் பாக்குற நிலமை, எனக்குன்னு ஒரு வட்டம் வரஞ்சு அத தாண்டாமலே நின்னு ரசிச்சிட்டுஇருக்குற கொடுமை எந்தப் பையனுக்கும் வரக் கூடாது. அவளுக்கு எதோ ஒரு நம்பிக்கை. என்னிக்காது ஒருநாள் இவனுக்கு தைரியம் வரமாலா போகப் போகுதுன்ற எதிர்பார்ப்பு அவளுக்குள்ள இருந்துட்டே இருந்தது.   


வளுக்கு டைரி எழுதுற பழக்கம் கிடையாது, ஆனா அவளுக்குப் பிடிச்சது எல்லாத்தையும் டைரி மாதிரி ஒரு வஸ்துல எழுதுற பழக்கம் உண்டு. அதுல சமீப காலமா நான் மட்டும் தான் இருந்தேன். இனியும் நான் மட்டும் தான் இருக்கணும்னு எழுதி வச்சிருந்தா.     

மார்கழி பனி விழும் மாலை 

நானும் அவளும் அவ எரியால நின்னு பேசிட்டு இருகதப் பார்த்ததுல இருந்து ஆரம்பிச்சது அந்தப் பூதாகரமான பிரச்சன. பாதி மாட்டிய நிலைஎன்கிட்டயும் விசாரணை ஆரம்பிச்சது. என் கண்ணு முன்னாடி அவ அடி வாங்க்ரத என்னால பார்க்க முடியல

னக்குள்ள எங்க இருந்து அந்த வேகம் வந்ததுன்னு தெரியல "உங்க பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுங்க"ன்னு கேட்டுட்டேன். நா கேட்டது தப்பு தான். அவசரப்பட்டுடன்னான்னு தெரியல. வெளியில தள்ளி கதவடச்சாங்க. அவளுக்கு இன்னும் அடி விழுந்திருக்கும். ஆனா அங்க நான் இல்ல. நா அப்படி சொன்னதுக்கு அவ சந்தோசபட்டாலா வருத்தப்பட்டாலான்னு கூட எனக்குத் தெரியல. தெரியுமான்னும் தெரியல

னா ஒன்னு மட்டும் சர்வ நிச்சயம். அவள கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நான் சொன்னது உண்ம. இன்னிக்கு வரைக்கும் அந்த நாளுக்காக காத்திருக்கது உண்ம. என்ன ஒன்னு இதையெல்லாம் சொல்றதுக்கு அவள சந்தோசப்படுத்துறதுக்கு என் காதலி என்கூட இல்ல

 மிஸ் யு டி. BUT  டோன்ட் வாண்ட் டூ மிஸ் யு டி...                
 

   
பின் குறிப்பு 1 : சமீபத்தில் என் நண்பன் என்னிடம் சொல்லிய காதல் வரலாறு. அவன் சொன்ன விதம் என்னைப் பாதித்தது. அதனால் அவன் கதை மறந்துவிடும் முன் எழுதிவிட்டேன்.அந்தக் காதல் வெற்றி பெறுமா என்று தெரியாது. வென்றால் காதலே ஜெயம்... இல்லையேல்... 

சட்ட கிழிஞ்சிருந்தா தச்சு உடுத்திகலாம்.. நெஞ்சு கிளிஞ்சிருச்சு எங்க முறையிடலாம்... 

பின் குறிப்பு 2 : கதையில் மானே தேனே உபயம் திடங்கொண்டு போராடு சீனு.
  
சிறுகதை எழுதி ரொம்ப நாளாச்சுன்னு ட்ரை பண்ணிபார்த்தேன் வேர் ஒன்னும் இல்ல. ஆனால் என் நண்பனின் கண்ணில் இருந்த வலி இன்னும் என்னுள் இருக்கிறது .