30 Aug 2013

வழிகாட்டி - பதிவர் சந்திப்புக்கு வரவிருக்கும் வெளியூர் நண்பர்கள் கவனத்திற்கு


பிராட்வே, சென்ட்ரல், எக்மோரில் இருந்து வடபழனி வருவதற்கு :

பேருந்து எண் : 17M, 17E. M17M       

அனைத்து பேருந்துகளும் பிராட்வேயில் இருந்து சென்ட்ரல் எக்மோர் வழியாக வடபழனிக்கோ, இல்லை வடபழனி கடந்தோ செல்லக் கூடியவை.

17E (பிராட்வே - சாலிகிராமம்) மண்டபம் மற்றும் லாட்ஜ் இருக்கும் நிறுத்தத்தில் நிற்கும், வடபழனி டிப்போவிற்கு அடுத்த நிறுத்தம்.

குறிப்பு :  17M, 17E. M17M  தவிர்த்து வேறு 17 சீரிஸ் பேருந்துகள் ஏற வேண்டாம். பேருந்துகள் அடிகடி உள்ளன.

கோயம்பேடில் இருந்து வடபழனி வருவதற்கு :

பேருந்து எண் : 70A, M70A, G70, D70 மற்றும் M27

கோயம்பேடில் இருந்து கிண்டி தாம்பரம், வேளச்சேரி, திருவான்மியூர், வண்டலூர் செல்லும் அனைத்து 70 (70A, M70A, D70, G70) சீரிஸ் பேருந்துகளும் வடபழனி செல்லும். 

குறிப்பு கோயம்பேடில் பேருந்து ஏறும்போது கவனமாய் இருக்கவும், காரணம்  நீங்கள்;ஏறக் கூடிய பேருந்து கிண்டி, தாம்பரம் வழியாக செல்வதாக இருக்க வேண்டும், அங்கிருந்து வேறு இடங்களுக்கு செல்வதாக இருக்கக் கூடாது.      

70சீரிஸ் பேருந்துகள் அனைத்தும் நூறடி ரோடில் இருக்கும் வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், அங்கிருந்து நடக்க வேண்டும் காரணம் இவை வடபழனி டிப்போ செல்லாது.  

மற்றொரு குறிப்பு : திருவேற்காடில் இருந்து தி.நகர் செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.

தாம்பரத்தில் இருந்து வடபழனி வருவதற்கு : 

பேருந்து எண் : 70A, M70A, G70 மற்றும்  M18M

அனைத்து 70 சீரிஸ் பேருந்துகளும் (கோயம்பேடு, ஆவடி, ரெட்ஹில்ஸ்) வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், (டிப்போ செல்லாது). 

தாம்பரத்தில் இருந்து M18M பேருந்து மட்டும் வடபழனி டிப்போ செல்லும், எண்ணிக்கை குறைவு.

மாம்பலத்தில் இருந்து வடபழனி வருவதற்கு :

பேருந்து எண் : ஹைப்பொதட்டிகல் :-)

சென்னைக்கு புதியவர்கள் மாம்பலத்தில் இறங்குவதைத் தவிர்த்து எக்மோர் செல்வது நலம்.

ஒருவேளை இறங்கினால், அடுத்த மின்தொடர் வண்டி ஏறி கோடம்பாக்கம் சென்று, அங்கிருந்து லிபர்டி நிறுத்தம் வரை நடந்து பின் எக்மோரில் இருந்து வரும் 17M, 17E. M17M பேருந்துகளையோ அல்லது 12B, 25G பேருந்துகளையோ உபயோகிக்கவும்.

அல்லது பொடிநடையாக மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நடந்தால் தி.நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.                           

வடபழனி டிப்போவில் இருந்து லாட்ஜ் மற்றும் மண்டபம் செல்வது 

பேருந்து எண் : நடராஜா சர்வீஸ் (ஆள்(ல்) டைம்)  

வடபழனி டிப்போவில் இருந்து  சில நிமிட நடையில் மண்டபம் வந்துவிடும், இசைகலைஞர்கள் சங்க மண்டபம் என்றால்  தெரியும். மேலும் அங்கிருந்து AVM ஸ்டுடியோ வழிகேட்டு நடந்தால் ஸ்டுடியோ எதிர்புறம் செல்லும் கெங்கப்பா தெருவில் இருக்கிறது மசாபி லாட்ஜ் இங்கு தான் பதிவர்கள் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முகவரி 

Masafi Guest House
No. 5, Gangappa Street, (Opp. to AVM Studio) Vadapalani,
Chennai - 600026.
Ph: 044 - 42136173 / 23766173 / 23766174

பதிவர் சந்திப்பு நடைபெறும் இடம் 

திரை இசைக்கலைஞர்கள் சங்கம், 297 ஆற்காடு ரோடு, வடபழனி, சென்னை - 
26. கமலா தியேட்டர் அருகில்.

நாள்: செப் 1. நேரம்: காலை 9 முதல் மாலை 5.30 வரை. 




மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் 

அதிகாலை ஐந்து மணி முதல் 10 மணி வரை 

தொடர்புக்கு 

சீனு        : 9940229934
அரசன்  : 9952967645
ரூபக்     : 8148915596

10 மணிக்கு மேல் தொடர்புக்கு 

சிவா      : 9841611301
சீனு        : 9940229934
ரூபக்     : 8148915596

விளம்பரம் :-)

எனது சமீபத்திய சிறுகதை : அம்முவும் அகாலமும் 

தமிழ் வலைப்பதிவர் குழுமம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்த்து 

சீனு 

17 comments:

  1. தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  2. ஒரு கூகிள் மேப் - படம் --- திரை இசைக் கலைஞர்கள் சங்கம் கட்டிடத்தை அம்புக்குறி இட்டுக் காட்டி வெளியிட்டிருந்தால் இன்னும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  3. // கோடம்பாக்கம் சென்று, அங்கிருந்து லிபர்டி நிறுத்தம் வரை நடந்து //

    புதிதாக வருபவர்களுக்கு இது கொஞ்சம் கஷ்டம்..

    ReplyDelete
  4. மிக சிறப்பான பகிர்வு சகோ.

    ReplyDelete
  5. //பேருந்து எண் : நடராஜா சர்வீஸ் (ஆள்(ல்) டைம்) //

    இதுதான் சென்னைக் குசும்போ??

    ReplyDelete
  6. நல்ல பணி. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. உங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்த்து
    >>
    மதிய உணவு லிஸ்ட்ல இது இல்லியே! எனக்கு கொடுக்காட்டி நான் சண்டை போடுவேன்

    ReplyDelete
  8. பதிவுலக வழிகாட்டியே !!! நீ வாழ்க !!

    ReplyDelete
  9. //பேருந்து எண் : ஹைப்பொதட்டிகல் :-)//
    //பேருந்து எண் : நடராஜா சர்வீஸ் (ஆள்(ல்) டைம்) //

    :)

    ReplyDelete
  10. அம்முவுக்கு ஒரு உம்மா!! கதை சூப்பர்..
    ////
    அம்மு. மூன்று வயதே நிரம்பிய எங்கள் செல்ல மகள். வரமாக வந்த தேவதையா இல்லை வரம் தர வந்த தேவதையா என்றால், எங்களுக்காக இறைவனிடம் வரம் வாங்கி வரம் தர வந்த தேவதை எங்கள் அம்மு.
    //
    மிக ரசித்தேன்
     நம்மை குழந்தையாக்க குழந்தைகளால் மட்டுமே முடிகிறது.     

    ReplyDelete
  11. சிறப்பான தகவல்கள் நன்றி!

    ReplyDelete
  12. மிக அவசியமான பதிவு!சபாஷ் சீனு!
    (கட் அவுட் நினைவிருக்கட்டும்!)

    ReplyDelete
  13. Hello! Vadapazhani signal to guest house route sollaliye?

    ReplyDelete
  14. அவசியமான தகவல்... மிக்க நன்றி...

    ReplyDelete
  15. //அதிகாலை ஐந்து மணி முதல் 10 மணி வரை

    10 மணிக்கு மேல் தொடர்புக்கு // நீங்க பெரிய ஆளு சார் .... எப்படி மடக்கி மடக்கி எழுதறிங்க

    ReplyDelete
  16. பயபுள்ளைங்க அத்தனை பேர்களுக்கும் கார்ப்ரேட் நிறுவனங்களில் பணிபுரிவதால் ஒவ்வொருவரும் செய்து கொண்டிருக்கும் வேலைகளும் உடனடியாக வெளியிடும் பதிவுகளையும் பார்க்கும் போது











    இனிய நல்வாழ்த்துகள்

    ReplyDelete