8 Aug 2013

நாடோடி எக்ஸ்பிரஸ் - மாஞ்சோலை மலை உச்சி நோக்கி ஒரு த்ரிலிங் பயணம்

மணி மாலை ஐந்து அல்லது ஐந்தரையைக் கடந்திருக்கும். மெல்ல இருட்டத் தொடங்கியிருந்தது. அவ்வளவாக பனி இல்லை, ஆனால் குளிரத் தொடங்கியிருந்தது. எங்கள் கூட்டத்தில் இருந்த பெரும்பாலானவர்கள் தங்கள் கையோடு கொண்டு வந்திருந்த ஜெர்க்கினை அணியத் தொடங்கியிருந்தார்கள். அருகில் நின்ற சுந்தர் ராமன் மேல் என் கைபடும் பொழுது தான் கவனித்தேன் இயற்கை அவனை வைப்ரேட் மோடுக்கு மாற்றியிருந்ததை. மணிக்குமரன் எங்கள் அனைவரையும் அவசரப்படுத்திக் கொண்டிருந்தான்.

"ஏல சீக்கிரம் கிளம்புல, இப்ப கிளம்புனா தான், குதிரவெட்டி போயிட்டு ரிடர்ன் ஆக முடியும், ரொம்ப மோசமான ரோடு, இருட்டிட்டா ரோடு தெரியாது ஒன்னும் பண்ண முடியாது. சீக்கிரம் எல்லாரையும் வேன்ல ஏறச் சொல்லு"

"ஆமா குதிரவெட்டில என்ன இருக்கு" 

"தங்கமீன்கள் படத்துல ஆனந்தயாழை பாட்டு பாத்தியா, அதுல அப்பாவும் பொண்ணும் ஒரு மலை உச்சியில நிப்பாங்க தெரியுமா, அந்த மல உச்சிக்குத் தான் போகப் போறோம்" 

வேன் குதிரைவெட்டியை நோக்கி மெல்ல மெல்ல மலையேறத் தொடங்கியது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, அதவாது ஜூன் மாதம், கடந்த வருடம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி சென்றுவந்த எங்கள் நண்பர் கூட்டம் இம்முறை எங்கு செல்லலாம் என்று கூடி விவாதிக்கத் தொடங்கியது. 



ஏகப்பட்ட இடப் பரிசீலனைகளுக்குப் பின் "குற்றாலம் போகலாமா?" என்றேன். என்னுடைய பெரும்பாலான நண்பர்கள் குற்றாலம் சென்றதில்லை, மேலும் அவர்களை குற்றாலம் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது எனது நெடுநாளைய விருப்பமும் கூட. அனைவரும் உற்சாகமாக சம்மதிக்க அடுத்த நிமிடமே சென்னையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் பொதிகை எக்ஸ்ப்ரெஸில் டிக்கெட் புக் செய்து, கடந்த இருமாதங்களாக பயணிக்கப் போகும் அந்த தேதியையே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.

இரண்டு நாள் சுற்றுல்லா, முதல் நாள் பாபநாசம் காரையாறு, இரண்டாம் நாள் குற்றாலத்தின் அனைத்து அருவிகளும் என்பது தான் எனது திட்டமாக இருந்தது. ஆனால் மணிக்குமார் எப்பாடுபட்டாவது மாஞ்சோலைக்கு சென்றாக வேண்டும் என்றும் அன்றைய இரவை அங்குதான் கழிக்க வேண்டும் என்றும் அடம் பிடிக்கத் தொடங்கினான். இதற்கு முன்பே மாஞ்சோலை சென்ற பயண அனுபவம் எனக்கு இருப்பதால் இந்த திட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை.அதற்கு முன் மாஞ்சோலையை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். 

மாஞ்சோலை - மாஞ்சோலை என்றதும் நெல்லையில் நடந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனையும் ஏராளமான உயிர்பலிகளும் வேண்டுமானால் உங்களுக்கு நியாபகம் வரலாம். ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் இப்படியொரு அழகான மலைபிரதேசம் இருப்பது நெல்லைவாழ் மக்களில் பலருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் உண்மை.

இதற்கு மிக முக்கியமான காரணம் மாஞ்சோலை சுற்றுல்லாத் தளம் கிடையாது, பாதுகாக்கப்பட்ட புலிகள் சரணாலயம் அடங்கிய வனபகுதி மற்றும் தனியார் பராமரிப்பில் இருக்கும் தேயிலைத் தோட்டப் பகுதி. மாஞ்சோலைவாழ் மக்கள் சென்று வருவதற்காக திருநெல்வேலி, பாபநாசம், தென்காசியில் இருந்து ஒருநாளைக்கு மொத்தமாகவே ஐந்து முறை மட்டுமே பேருந்து வசதி உண்டு. 

மாஞ்சோலையை சுற்றி மொத்தம் ஆறு குக்கிராமங்கள் உள்ளன (மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரவெட்டி, கோதையாறு), ஒவ்வொரு கிராமத்திலும் மொத்தமே நூற்றும் குறைவானவர்களே வசிக்கின்றனர் இவர்களது தொழில் பொழுதுபோக்கு அத்தனையும் இந்த டீ எஸ்டேட்டை நம்பியே. இவர்களது ஒருநாள் வருமானம் 120 - 140 ரூபாய். தங்குவதற்கு இடம் கொடுத்துள்ளார்கள். நிர்வாகம் மிகக் குறைவான சம்பளமே கொடுத்தாலும் மனித சக்தியை கசக்கி பிழிவதாக அங்கே வேலை செய்யும் ஊழியர் ஒருவர் சொன்னார்.

"பாம்பே - பர்மா ட்ரேடிங் கார்பரேசன்" என்னும் நிறுவனம் (பல ஆயிரம் ஹெக்டேர்) ஒட்டுமொத்த மலைபகுதியையும் 99 வருட காலத்திற்கு குத்தகைக்கு எடுத்து தேயிலைப் பயிர் செய்து வருகிறது. அம்பை அருகே இருக்கும் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு பாத்தியப்பட்ட மலைபகுதி என்றும் அவர்களிடம் இருந்து பிரிடிஷ் அரசாங்கம் குத்தகைக்கு வாங்கியது என்றும் கூறுகிறார்கள். வரும் 2017ல் குத்தகை காலம் நிறைவடைகிறது, அதற்குப் பின் குத்தகை காலத்தை நீட்டிப்பார்களா? தேயிலைத் தோட்டம் என்னாவாகும்? ஒருவேளை வேலையிழப்பு நேரிட்டால் என்ன செய்வது? என்பது குறித்து இப்போதே கவலைப்படத் தொடங்கிவிட்டார்கள் மாஞ்சோலைவாசிகள்.

கல்லிடைகுறிச்சி மலையடிவாரத்தில் இருந்து முப்பது கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் இருந்து கரடுமுரடான மலைப்பாதை வழியாக தொடங்குகிறது மாஞ்சோலைப் பயணம். பெரும்பள்ளம், பள்ளங்களுக்கு இடையில் கைகளால் அமைக்கப்பட்ட தார்சாலைகள், அதிலும் ஒரே ஒரு வாகனம் மட்டும் செல்ல முடியும். அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள். வளைவுகள் மற்றும் பாலங்களில் தடுப்புச் சுவர்கள் கிடையாது. எதிர்புறம் வாகனம் வந்தால் யாராவது ஒருவர் ரிவர்ஸ் சென்று வழியேற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே முன்னே செல்ல முடியும். இப்படியாக மொத்த பயணமும்  சற்றே திகில் நிறைந்ததாகத் தான் இருக்கும் 



மணிமுத்தாறு நீர்த்தேக்கம் அருகே இருக்கும் செக்போஸ்ட் தான் மிக முக்கியமானது. கடுமையான சோதனைகளுக்குப் பின்பே வாகனங்கள் மேலே அனுப்பப்படுகின்றன. இந்த செக்போஸ்டில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் தான் மணிமுத்தாறு அருவியும், நீர்த்தேக்கமும் உள்ளது. அருவிக்கு செல்ல வனத்துறையிடம் இருந்து எவ்விதமான சிறப்பு அனுமதியும் பெறத்தேவை இல்லை. சுற்றுல்லாவாசிகளுக்கும் வாகனங்களுக்கும் நுழைவுகட்டணம் உண்டு. மது மற்றும் பிளாஸ்டிக் கண்டிப்பாக அனுமதி இல்லை. சோதனைகள் பலமாக இருக்கும். 

அரசுப் பேருந்தின் மூலம் செல்வதாய் இருந்தால், சோதனை கிடையாது மேலும் மாஞ்சோலை மற்றும் சுற்றுப்புற மலைகிராமங்களுக்கு சென்று வர எவ்விதமான சிறப்பு அனுமதியும் தேவை இல்லை.   

மணிகுமரனிடம் முதலிலேயே தெளிவாக சொல்லிவிட்டேன். "மாஞ்சோலை திட்டம் போடுவதாய் இருந்தால் வனத்துறை அனுமதி பெறுவதில் இருந்து மீண்டும் கீழே இறங்குவது வரையிலான அத்தனை பொறுப்புகளையும் நீ ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் பிளான் கேன்சல்".

மாஞ்சோலை சென்றே ஆக வேண்டும் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். வனத்துறையினரிடம் அனுமதி பெறுவது, மாஞ்சோலை சென்று வர வேன் ஏற்பாடு செய்வது என்று மொத்த பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டான். அவனுடைய நண்பர்கள் மூலம் மாஞ்சோலையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்று வர அனுமதியளிக்குமாறு வனத்துறையினரிடம் அனுமதி பெற்றிருந்தான். அனுமதி விண்ணப்பத்தில் நாம் பயணிக்க இருக்கும் வாகனத்தின் பதிவு எண் கண்டிப்பாக குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். 

மாஞ்சோலை மலைப்பாதையில் பேருந்து ஏறுவதற்கே திக்கித் திணறும். சாதாரண பேருந்துகளால் மலையேற முடியாது, இதற்கென சிறப்பாக தயாரிக்கபட்ட டர்போ இஞ்சின் மற்றும் பவர் ஸ்டியரிங் பொறுத்தப்பட்ட, அளவில் சற்றே சிறிய பேருந்து மட்டுமே அங்கு சென்று வரும். 

வேன் அந்த மலை மீது ஏறுமா என்பதில் எனக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அதை உறுதி செய்வதற்காக மணிகுமாரிடம் இருந்து வேன் டிரைவர் நம்பர் வாங்கி அவரிடம் இதுகுறித்து உறுதி செய்து கொண்டேன். மாதத்தில் இருமுறையாவது அவர் மாஞ்சோலை சென்று வருவதாக கூறியதும் தான் எனக்கு பாதி நம்பிக்கை வந்தது. 

தென்காசியில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து அம்பை, அம்பையிலிருந்து வேன் மூலம் மாஞ்சோலை இதுதான் எங்கள் திட்டம். ஆனால் இதற்கு முன்பே எங்களில் சிலருக்கு மாஞ்சோலை சென்ற அனுபவம் இருப்பதால் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலையைப்பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். மாலை ஐந்து மணிக்கெல்லாம் பனி இறங்க ஆரம்பித்து, ஆறு மணிகெல்லாம் சுத்தமாக இருட்டிவிடும், இருட்டிய பிறகு எங்கும் சுற்றிபார்க்க முடியாது, ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து இயற்கையை ரசிக்க வேண்டியது தான். 

அம்பையில் இருந்து மாஞ்சோலை நாலுமுக்கு செல்வதற்கு மட்டுமே குறைந்தது நான்கு மணி நேரம் ஆகும். பொதிகை எக்ஸ்ப்ரெஸ் தென்காசி வந்து சேருவதற்கோ காலை ஒன்பது மணிக்கு ஆகிவிடும். ஒருவேளை முதல் திட்டப்படி பயணித்திருந்தால் இருட்டிய பின்பு தான் மாஞ்சோலை சென்று சேரமுடியும் என்பதை முன்னமே கணித்திருந்ததால், நாங்கள் ஏற்பாடு செய்த வேனை தென்காசி ரயில் நிலையத்திற்கே வரச் சொல்லி விட்டோம்.    

ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு சென்று காலை உணவை முடித்துவிட்டு மறக்காமல் நான்கு போர்வைகளையும் எடுத்துக் கொண்டு மாஞ்சோலை நோக்கி பயணிக்கத் தொடங்கினோம். வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பயணத்தின் நிமிடங்கள் தென்காசியில் இருந்து ஆரம்பமாகியது.

மணிகுமரனின் நண்பர்கள் வனத்துறையினரிடம் இருந்து வாங்கியஅனுமதி விண்ணப்பத்தைப் என்னிடம் காட்டிய பின்னர் தான் உறுதியாக மாஞ்சோலை செல்லப் போகிறோம் என்பதில் மீதி நம்பிக்கையும் வந்தது. 

எல்லாம் சரி இரவு மாஞ்சோலையில் தங்குவதற்கு அனுமதியில்லை. இரவு ஏழு மணிக்குள் கீழே இறங்கிவிட வேண்டும், இல்லையென்றால் வண்டி சிறைபிடிக்கப்படும் என்று மணிமுத்தாறு செக்போஸ்டில் உறுதியாக சொல்லிவிட்டார்கள் அங்கிருந்த ரேஞ்சர்கள். "மாஞ்சோலையில நமக்கு தெரிஞ்ச ரேஞ்சர் இருக்காரு, அவருட்ட நாம பேசிக்கலாம்" என்று சமாதனம் செய்தனர் மணிகுமரனும் அவனது நண்பர்களும். 

விதி எதிர்பார்த்தது போலவே, மாஞ்சோலையில் இருந்த ரேஞ்சர் உதவ மறுக்க இரவு தங்குவதற்கு அனுமதியில்லாமல் கீழே இறங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். அருமையான இடம், அற்புதமான சூழல், எங்கும் மவுனம், மவுனத்தின் ஊடாகப் பனி.  

மணிகுமரன் எங்களை அவசரபடுதினான்.

"ஏல சீக்கிரம் கிளம்புல, இப்ப கிளம்புனா தான், குதிரவெட்டி போயிட்டு ரிடர்ன் ஆக முடியும், ரொம்ப மோசமான ரோடு, இருட்டிட்டா ரோடு தெரியாது. ஒன்னும் பண்ண முடியாது. சீக்கிரம் எல்லாரையும் வேன்ல ஏறச் சொல்லு"

"ஆமா குதிரவெட்டில என்ன இருக்கு" 

"தங்கமீன்கள் படத்துல ஆனந்தயாழை பாட்டு பாத்தியா, அதுல அப்பாவும் பொண்ணும் ஒரு மலை உச்சியில நிப்பாங்க தெரியுமா, அந்த மல உச்சிக்குத் தான் போகப் போறோம்".

வேன் குதிரைவெட்டியை நோக்கி மெல்ல மெல்ல மலையேறத் தொடங்கியது. அன்றைய இரவுமாஞ்சோலையில் தங்க முடியுமா முடியாதா என்ற ஒற்றைக் கேள்விக்குறியுடன் வேன் அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளில் தன்னை செலுத்தத் தொடங்கியிருந்தது. 


பயணிப்போம்... 

38 comments:

  1. எனது இன்றைய வலைப்பதிவில் சிறந்த 10 பேரை தேர்ந்தெடுத்து எனது பதிவிற்கு நல்ல கருத்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளேன். உங்களுக்கு நேரம் இருந்தால் அதற்கான பதிலை தருமாறு உங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்,

    உங்களை நான் தொந்தரவு செய்வதாக நினைத்தால் மன்னிக்கவும்

    http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post_7219.html
    நன்றி

    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்... உங்கள் அன்புக் கட்டளையை ஏற்கிறேன் :-) தொந்தரவு எல்லாம் இல்லை சார், அப்படி நினைக்க வேண்டாம்

      Delete
  2. வெகு அருமையான பயணவிவரம். ஆடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா, விரைவில் அடுத்த பதிவு

      Delete
  3. அழகான இடத்தைப் பற்றி அருமையான தொடக்கம். காத்திருக்கிறேன் தொடர!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார், அருமை அற்புதம் ஏகாந்தம் எப்படி வேண்டுமானாலும் அந்த இடத்தைக் குறிப்பிடலாம்

      Delete
  4. ம்ம்ம்ம்.... அடுத்த பயணக்கட்டுரை ஆரம்பம்.... நடத்துங்க...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இன்னும் ஒன்னே ஒன்னு தான் மிஸ்டர் இஸ்கூல் பையர்

      Delete
  5. பாவநாசம் மலைக்கு எங்களை ஆபீசர் சங்கரலிங்கம்தான் கூட்டி சென்றார், மலை உச்சியில் இருந்து தூரத்தில் இருக்கும் மலைதான் மாஞ்சோலை என்று காட்டி தந்தார், இனி ஊருக்கு போகும்போது ஆபீசரிடம் சொல்லி கூட்டிப் போக சொல்லவேண்டும்.

    அழகான பயண அனுபவம், காரையார்ல படகு பயணம் மற்றும் பாணதீர்த்தம் அருவி அனுபவம் சூப்பராக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை மாஞ்சோலை மிஸ் ஆகியிருந்தா அங்க தான் போயிருப்போம்... காரையாறு பான தீர்த்தமும் பார்க்க வேண்டிய ஒரு இடம்... வாய்ப்பு கிடைத்தால் இங்கும் சென்று வாருங்கள்

      Delete
  6. //இயற்கை அவனை வைப்ரேட் மோடுக்கு மாற்றியிருந்ததை.//

    பயபுள்ள என்னமா எழுதுது..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எல்லாம் உங்க எழுத்த படிக்க ஆரம்பிச்சதுல இருந்துன்னே :-)))

      Delete
  7. //ஆறு குக்கிராமங்கள் உள்ளன //

    அங்கே எல்லாருமே சமையல்காரர்களா??

    ReplyDelete
    Replies
    1. //அங்கே எல்லாருமே சமையல்காரர்களா??// இந்த சின்ன வயசுல இம்பூட்டு அறிவா

      Delete
  8. //மாஞ்சோலை என்றதும் //

    மாஞ்சோலைக் கிளிதானோ பாடல் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  9. சரி நைட் ஆயிடிச்சு.. நாளைக்கு பார்க்கலாம்.. ஆவலுடன் வெயிட்டிங்..

    ReplyDelete
    Replies
    1. அம்புட்டு சீக்கிரமாலா வராது... இனிதான் டைப்பவே ஆரம்பிக்கணும்

      Delete
  10. த்ரிலிங் பயணம் தான் ..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா

      Delete
  11. சிறப்பான பயண கட்டுரை. தொடருங்கள்... மாப்ள விபரம் தெளிவா சொன்னா நல்லா இருக்கும், வனத்துறை அனுமதி அனைவருக்கும் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்கும் அனுமதி கிடைக்காது சார்.. சும்மா சுத்திப் பார்க்க என்றால் முதல் பேருந்தில் சென்றுவிட்டு அடுத்த பேருந்தில் இறங்கிவிடலாம்...

      ஒருவேளை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் செல்வதாய் இருந்தால் கூறுங்கள் என் நண்பனிடம் கூறுகிறேன்

      Delete
  12. ஆவலுடன் வெயிட்டிங், அடுத்த பதிவிற்கு... மாஞ்சோலை பற்றி புதிதாக அறிந்துகொண்டேன்....

    ReplyDelete
    Replies
    1. விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது :-))))))

      Delete
  13. மலை ஸ்தலம் என்றாலே நமக்கு தெரிவது என்னவோ ஊட்டியும் , கொடைகானலும்தான்...... உங்களது இந்த பதிவு ஆர்வத்தை தூண்டுகிறது. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் !!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தவறவிடக் கூடாத பகுதி வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சென்று வாருங்கள்

      Delete
  14. இது போல இடங்களை எப்படி பாஸ் கண்டுபிடிக்கிறிங்க. . . .. . . .அருமை. .

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எனக்கும் சில வருடங்களுக்கு முன்பு தான் தெரியும்.... :-)))))))

      Delete
  15. பயணக்கட்டுரை அருமை

    ReplyDelete
  16. நான் அம்பை வரை வந்திருக்கிறேன் சீனு ..மாஞ்சோலை வந்ததில்லை.... ஆனால் உங்கள் பதிவு அதை சுற்றிப்பாத்தது போல் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  17. அருமையான தொடக்கம்! ஆர்வமுடன் அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்! மணிக்குமார் என்ற பெயரில் உங்கள் வயது நண்பர் ஒருவர் எனக்கும் பழக்கம் உண்டு! அவரா என்று போட்டோவில் பார்த்தேன்! இல்லை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  18. படக்கட்டுரையாகவே விரிந்தது மனக்கண்ணில் பயணக்கட்டுரை வாசிக்கும்போது . சூப்பர் ரைட்டப் ...! முதல் ரெண்டு மூணு பத்தில இருந்த ஒரு அருமையான தொனி அடுத்தடுத்த பத்திகளில் மிஸ்ஸிங் ...!

    ஷேக்கிங் ஆ இருந்தாலும் ரெண்டு போட்டோவுமே அழகு ...! ட்ரைவிங் ல எடுத்ததோ ...?

    ReplyDelete
  19. தென்காசி வரை வந்திருந்தாலும் இந்த இடங்களுக்கெல்லாம் சென்றதில்லை சீனு.... ஒரு ட்ரிப் போக நான் ரெடி.... நீங்க ரெடியா?

    ReplyDelete
  20. என்னுடைய நீண்ட நாள் ஆசை அங்கு செல்ல வேண்டும் என்பது. கூகுள் மேப்பில் பார்த்து ரசித்து மனதை தேற்றிக் கொள்வேன். அங்கு சென்று வந்த நீங்கள் அதிஷ்டசாலிகள்....

    ReplyDelete
  21. தமிழ் நாட்டுல கூட இப்படி எல்லாம் இடம் இருக்கா?
    எழுதற ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு சீனு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. யோவ் எப்பிடிய்யா இப்பிடி ஒரு பயண அனுபவத்தை தொடர்கதை மாதிரி எழுத முடியுது உம்மால...
    சூப்பருய்யா

    ReplyDelete
  23. திருநெல்வேலி.. .அம்பை-.. .பாபநாசம்- மாஞ்சோலை அரசுப் பேருந்துகள் புறப்படும் நேரம் கூறவும்..

    ReplyDelete