ஒருவழியாய் காதல் கடித போட்டி முடிந்தது. சிலர் அப்பாடா என்று ஏக்கப் பெருமூச்சு விட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறன் ...! பின்னே திரும்பிய இடமெல்லாம் எங்கும் காதல் மழை பொழிந்தால் திகட்டியிருக்காதா, எத்தனை பேர் என்னை திட்டினீர்களோ அந்த பரந்தாமனுக்கே வெளிச்சம்... :-)
காதல் கடிதம் போட்டி குறித்து முதலில் அறிவிப்பு வெளியிட்ட பொழுது ஏதோ ஒரு அவசரத்தில், குழந்தைத்தனமான முடிவு எடுதுவிட்டேனோ என்று தான் சிந்தித்தேன். ஒருவேளை போட்டியில் பங்குகொள்ள யாருமே வராவிட்டால்? இந்தக் கேள்வி என்னுள் நுழைந்த போது தான் குழப்பம் இன்னும் அதிகமாகியது.
"சீனு போட்டியில எத்தன பேர் கலந்துக்க வாய்ப்பு இருக்கு" என்று அப்பாதுரை சார் கேட்ட பொழுது என்னால் சொல்ல முடிந்த பதில் "கொறஞ்சது இருபது பேராவது கலந்துபாங்க சார்! அதிகபட்சம் முப்பது" இதில் குறைந்தபட்ச எண்ணிக்கையையே நம்பிக்கை இல்லாமல் தான் சொன்னேன்.
வெறும் இருபது பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று நினைத்த போட்டியில் மொத்தம் 70 பேர் கலந்து கொள்வதாக தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டனர், அந்த எழுபது பேரில் 48 பேர் தங்கள் கடிதங்களையும் பகிர்ந்து கொண்டனர். அவர்களில் நான்கு பேர் பதிவர் அல்லாதவர்கள்.
காதல் கடித போட்டி மிக அதிகமான அளவில் பதிவர்களை சென்றடைய காரணமும், மிக அதிகமான அளவில் போட்டியாளர்கள் கலந்துகொள்ள காரணமும் பதிவுலக நண்பர்களாகிய நீங்களே அன்றி வேறு யாருமில்லை என்பது தான் நூற்றுக்கு இருநூறு சதவீத உண்மை.
பெரும்பாலான பதிவர்கள் காதல் கடிதம் போட்டி குறித்த விளம்பரத்தை உங்கள் வலைப்பூவில் பகிர்ந்திருந்தீர்கள்...!
பெருமபாலான பதிவர்கள் காதல் கடிதம் போட்டி குறித்த அறிவிப்பை தனி பதிவாகவே பகிர்ந்திருந்தீர்கள்...!
அவர்கள் உண்மைகள் தள ஓனர் மதுரைத் தமிழன் வாரம் ஒரு பதிவாவது காதல் கடிதம் போட்டி குறித்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
இது போல் பல விதங்களிலும் இந்தப் போட்டி குறித்த அறிவிப்பு பலரையும் சென்றடைய காரணமாய் இருந்த உங்கள் அனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது.
எப்படி சாத்தியமாயிற்று... என்றால் நிச்சயமாய் உங்களால் மட்டுமே சாத்தியமாயிற்று...!
நடுவர்கள்
நடுவர்களின் பங்களிப்பைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஏதோ சின்ன பையன் அழைத்துவிட்டான், கடிதங்களைத் தொகுத்துத் தருவான், மதிப்பெண் வழங்கிவிட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார்கள் நிச்சயம் இந்தப் போட்டி தரமான ஒன்றாக இருந்திருக்காது.
போட்டி பற்றி சொன்னதுமே என்னைவிட மிக உற்சாகமாய் களத்தில் குதித்து விதிமுறைகளில் இருந்து பரிசு அறிவிப்பது வரை எப்படி செயல்பட வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர்கள் அவர்கள் தான். அவர்கள் மட்டும் இல்லை என்றால் நிச்சயம் ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாகி இருக்கும்.
மேலும் நடுவர்கள் என்பதால் இவர்கள் அனைத்து பதிவுகளையும் மிகக் கவனமாக படித்தாக வேண்டும், இல்லை என்றால் மதிப்பெண் வழங்குவதில் சிக்கலாகிவிடும். இந்தப் போட்டிக்காக நேரம் ஒதுக்கி கடிதங்களையும் படித்து மதிப்பெண் வழங்கி வருகிறார்கள்.
பெருமதிப்பிற்குரிய நடுவர்களான அப்பாதுரை சார், வாத்தியார் பாலகணேஷ், எங்கள் ஸ்ரீராம் சார், ரஞ்சனி நாராயணன் அம்மா ஆகிய நால்வருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். நீங்கள் இல்லை என்றால் இந்தப் போட்டியின் பாதை எந்த பாதையில் பயணித்து இருக்கும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
இதுவரை வெளியான கடிதங்களின் மொத்த தொகுப்புகள்
முதல் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள்
ஹேமா - அன்பான செல்ல ஹிட்லருக்கு
இரண்டாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள்
வெற்றிவேல் - காதல் கடிதம் திடங்கொண்டு போராடு பரிசுப் போட்டி
மாலதி - திடங்கொண்டு போராடு காதல் கடிதம்
மூன்றாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள்
கிரேஸ் - எழுத மறந்த காதல் கடிதம்
நான்காம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள்
அம்பாளடியாள் - அன்புள்ள சத்யாவிற்கு
ஐந்தாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள்
ராஜராஜேஸ்வரி - நவீன கடிதம்
கவிநாகா - காதல் கடிதம்
வெளங்காதவன் - மொட்டக் கடுதாசி
***********************
ஆறாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள்