28 Jun 2012

காவி நிறத்தில் ஒரு காதல்


ந்தர்ப்ப சூழ்நிலைகளால் காவி உடைக்குள் தன்னை புகுத்திக் கொண்டு சாமியாராக மாறிய ஒரு இளைஞனின் (சாமியாரின்) காதல் கதை. காதல் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னுடைய பதினெட்டு வயதில் காட்டிற்குள் சென்ற இளைஞன் பதினெட்டு வருடம் கழித்து மீண்டும் தன்னுடைய காதலியைத் தேடி, அவள் கரம் பிடிக்க தான் பிறந்த மண்ணைத் தேடி வருகிறான் சாமியாராககாதலின் வலி பொறுக்காமல் மீண்டும் உலக வாழ்க்கைக்குள் வரும் ஒரு சாமியாரை இந்த உலகம் பார்க்கும் பார்வைகளில் இருந்தும் காவி உடையில் இருந்தாலும் தன் காதலியை மறக்க நினைக்கும் முயற்சியே அவளை நினைப்பதற்கான பயிற்சியும் ஆகிவிட்டது என்று புலம்பும் சாமியாரின் உணர்சிக் குவியல்களில் இருந்தும் ஆரம்பமாகிறது இந்தப் பயணம்.  

விதை பாடும் கவிஞர் ஓருவர் தன் அழகான வசன நடையால் சாமியார் ஒருவருக்குள் காதலைப் புகுத்தி எதார்த்தமான சூழ்நிலைகளைக் கொண்டு கதை சொல்ல ஆரம்பிக்கிறார், அந்தக் காதலுக்கு அவர் கொடுத்த தலைப்பு காவி நிறத்தில் ஒரு காதல். அந்தக் கவிஞரின் பெயரோ கவிபேரரசு வைரமுத்துகவிபேரரசு வைரமுத்து அவர்கள் பத்துவருடங்களுக்கு முன்பு எழுதிய இப்புத்தகத்தினைப் படிக்கும் வாய்ப்பு தற்போது தான் கிடைக்கப் பெற்றேன் அந்த அனுபவத்தை இங்கு பதிவாக எழுதுகிறேன்.

நான் படிக்காத சுஜாதா புத்தகங்களையும் படித்த பிற எழுத்தாளர்கள் புத்தகங்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒவ்வொருமுறையும் சுஜாதா அவர்களின் புத்தகத்தைப் படித்துவிட்டு புத்தகவிமர்சனம் எழுத வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் நினைப்பதோடு நின்றுவிடுவேன் காராணம் அப்போது என்னிடம் அப்போது வலைபூ இல்லை. என் முதல் புத்தக விமர்சனத்தை இந்தப் புத்தகத்திலிருந்து தொடங்குகிறேன். 

இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் இருந்து என்னுடைய அண்ணன் காவி நிறத்தில் ஒரு காதல் புத்தகத்தை வாங்கி வந்திருந்தான். தலைப்பைப் பார்த்ததுமே படிக்கத் தோன்றவில்லை. படிக்கத் தூண்டும் தலைப்பு தான் இருந்தும் காவி என்று வருவதால் மதக் கலவரம் அது இது என்று எரிச்சலூட்டுவர்கள் என்று புத்தகத்தை தொட்டுக் கூட பார்க்கவில்லை. வாங்கி வந்த என் அண்ணனும் புத்தகத்தைப் படிக்கவில்லை. படித்திருந்தால் கண்டிப்பாக என்னையும் படிக்கச் சொல்லியிருப்பான். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக படி படி என்று கூறும் விதமாக அடிகடி என் கண்களில் தட்டுப்பட்டுக் கொண்டே இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு படிப்பதற்கு வேறு புத்தகம் எதுவும் இல்லை என்ற காரணத்தால் இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு புதுமையான வாசிப்பு அனுபவத்தைப் பெற்றேன்.

ஒரு சாமியார் தான் கதாநாயகன். காதலியைத் தேடி காட்டிற்குள் இருந்து நாட்டிற்குள் வருகிறான். தொலைந்து போன காதலியைத் தேடிச் செல்லும் இடங்களில் எல்லாம் காதலி வாழ்ந்ததற்கான தடங்களும் தடயங்களும் மட்டுமே கிடைகின்றதே தவிர காதலி கிடைக்கவே இல்லை. இறுதியில் காதலியை சென்று சேர்ந்தாரா. பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் இருவரின் மன நிலையும் எப்படி இருந்தது என்பன போன்ற பல விசயங்களை சலிப்பு தட்டாமல் சொல்லிச் செல்கிறார்.    

ஷங்கர் படம் போன்ற காஸ்ட்லி காதலோ, சசிகுமார் தரணி லிங்குசாமி படம் போன்ற அடிதடிக் காதலோ, இல்லை பாரதிராஜா படம் போன்ற முழுக்க முழுக்க மண்வாசம் வீசும் காதல் போன்றோ இல்லாமல் பாலா அமீர் மிஷ்கின் படம் போன்ற எதார்த்தமான கொஞ்சம் அழுத்தமான சம்பவங்களைக் கொண்டு காதல் பேசுகிறார் இந்தச் சாமியார். காதலியைத் தேடி செல்லும் இடங்களில் எல்லாம் பட்டாம்பூச்சி விளைவு என்று சொல்லப் படகூடிய (நடைபெறக் கூடிய சம்பவங்களுக்குள் தொடர்பு இருக்கும்) விளைவின் மூலம் கதாநாயகன் தான் தவறவிட்ட உறவுகளையும் அவர்கள் மூலம் காதலியின் இருப்பிடமும் அறிகிறான். நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சந்தர்பத்தில் பட்டாம்பூச்சி விளைவுகளை சந்தித்துக் கொண்டு தான் உள்ளோம் என்ற கோணத்தில் கதையுடன் ஒன்றினோம் என்றால் கதை நமக்கு மிகவும் பிடித்து போகும். ( பட்டாம்பூச்சி விளைவை முழுவதுமாக தெரிந்து கொள்ள இந்தக் கதையோ இல்லை தசாவதாரம் படமோ எளிய உதாரணம். அது போதவில்லை என்றால் எண்ணிலடங்கா ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன தேடித் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்). 

தவறான விசாரணையால் போலீசாரிடம் சிக்கி கொள்ளும் சாமியார்

"காட்டுக்குள் வாழ்ந்தேன், மிருகங்களிடம் எனக்குப் பாதுகாப்பு இருந்த்தது. நாட்டுக்குள் வந்தேன் மனிதர்களிடம் தான் எனக்குப் பாதுகாப்பில்லை"  என்று புலம்பும் வரிகளில் இருந்து வைரமுத்துவின் சிந்தனை ஓட்டத்தை அறிந்து கொள்ளலாம்.

தனக்காக தன் காதலியும் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவரும் ஒவ்வொரு இடங்களிலும் காதலின் மேன்மை மிக மென்மையாக இருக்கும்.காதலியின் அக்கா கொடுத்த தகவல்களில் இருந்து தேடத் தொடங்கும் சாமியார் இடையில் பல சந்திபுகளுக்குப் பின் காவல்துறையில் டி.எஸ்.பி யாக பணிபுரியும் நண்பன் மூலம் அவள் 'கண்டதும் சுட' ப் பட வேண்டிய கொலைக் குற்றத்தில் இருக்கிறாள் என்பது வரை தெரிந்து அதிர்ந்து நொறுங்கும் வரை காதலின் ஒருபக்கமும், அதன் பின் நடக்கும் நிகழ்வின் மூலம் காதலின் மறுபக்கத்தையும் உணர்ச்சி பொங்கச் சொல்லிச் செல்கிறார். 

டி.எஸ்.பி நண்பன் அடர்ந்த வனபகுதிக்குள் இருக்கும் நக்சலைட்டுகளை கைது செய்ய செல்கிறார், செலும் இடத்தில இருவரும் நக்ஸல்களிடம் பணயக் கைதிகளாக சிக்கிக் கொள்கிறார்கள். அந்தக் நக்சல் குழுவில் சாமியாரின் காதலியும் இருப்பது அதிர்ச்சியின் உச்சம் என்றால் அவர்களுக்குள் நடைபெறும் சந்திப்பு உணர்சிகளின் உச்சம்.   

நெடுநாளைக்குப் பின் தன் காதலியைப் பார்த்த நொடியில் சாமியார் நினைக்கிறார் 

"சுவடுகள் மாறவில்லை. கொஞ்சம் சதை போட்டிருக்கிறாள். கண்களில் மட்டும் அதே பௌர்ணமிகள்".

தீவிரவாதியாக இருக்கும் தன் காதலியைச் சந்திக்கச் செல்லும் முன், தன் வாழ்க்கைப் பற்றி முடிவு செய்ய வேண்டிய கடைசி நொடியில் இருக்கும் சாமியாரின் சிந்தனைகள் இதோ 

" லௌகீகம் சிக்கல் தான்: உலகம் ரணம் தான்; உறவு சுகம் தான்

 எந்த வாழ்க்கை முறை சரி? தள்ளி வாழ்வதா? தழுவி வாழ்வதா? 

சாமியாரின் உள்ளக் கடலில் இரண்டு புயல்கள் மையம் கொண்டன. இரண்டையும் முட்டவிட்டு முட்டவிட்டு ஒரு முடிவுக்கு வந்தார். தள்ளி வாழும் வாழ்கையில் அமைதி இருக்கலாம், அது மயான அமைதி. 

தழுவி  வாழும் வாழ்கையில் சப்தம் இருக்கலாம். அது உயிருள்ள சப்தம்.

இந்த சந்தர்பத்தில் நக்ஸல்களிடம் பணயக் கைதிகளாக மாட்டிக் கொண்டுவிட்ட சாமியாரை தப்பிச் செல்லாமல் பாதுகாக்கும் பொறுப்பு அவர் காதலிக்கே வழங்கப் பட்டிருக்கும்.இங்கேசாமியாரின் மனநிலை 

சாமியார் கண்கொட்டாமல் அவளையே பார்த்தார். இப்போது பதினெட்டு வருடத் தேடல் பத்தடி தூரத்தில் 

அதே முகம்! என் மடியில் புதைந்த அதே முகம்! என் உள்ளங்கைகளில் ஏந்திய அதே முகம்! நான் முத்தமிட்ட முகம்! என் பதினெட்டு வருடக் கனவில் பவனி வந்த முகம்.  என் இருப்புக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட வாழ்க்கைக்கு ஆதாரமாய் இருக்கும் அதே முகம்! களத்தின் கனத்தாலும், வாழ்கையின் இனத்தாலும் கொஞ்சம் முற்றிப் போயிருந்தாலும் பழைய பசுமையின் சின்னங்கள் பறிபோய்விடாத அதே பழைய பால் முகம்.

இந்த  நிலையில் தன் காதலியைச் சந்தித்த சாமியாரிடம் டி.எஸ்.பி நண்பனின் கிண்டலும் அதற்கு சாமியாரின் பதிலும் 

" என்ன சாமியாரே சொர்கத்திற்கு வந்திருகீங்களா....நரகத்திற்கு வந்திருகீங்களா? " அந்த நேரத்திலும் டி எஸ் பி கிண்டலடித்தார்.

சந்தோசமோ துக்கமோ இல்லாத குரலில் சாமியார் சொன்னார், 

" நரகதிற்குள்ளே வந்து என் சொர்க்கத்தைப் பாத்திருக்கேன்"

இப்படிச் செல்லும் இந்தக் கதையின் முடிவில் நக்சல் காதலிக்கு மன்னிப்பு கிடைத்ததா இல்லை கூண்டோடு ஒழிக்கப் பட்டார்களா, பதினெட்டு வருடங்களாக தன் காதலனுக்காக தேக்கி வைத்திருந்த காதலை அவள் என்ன செய்தால் தொழுதாளா  இல்லை துடைத்தேரிந்தளா? சாமியார் காதலியால் கொல்லப்பட்டாரா இல்லை  கொள்ளப்பட்டரா, இனிமையாக ஆரம்பித்த காதல் பயணம் சுமை கடந்து சுகம் வரப் போகிறது என்ற எண்ணிய நேரத்தில் ரணமாக மாறியதை கவிஞர் எப்படி முடிவுரையாக மாற்றினார், 

என்பதை எல்லாம் அறிந்து கொள்ள  

வெளியீடு 
சூர்யா இலக்கியம் 
#22 நான்காம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை,

விற்பனையாளர்  
திருமகள் நிலையம் 
#55 வெங்கட்நாரயணா சாலை, தி,நகர், சென்னை.
#2324 2899 

என்னும் முகவரிக்கு எழுதி கேட்டீர்கள் என்றால் புத்தகம் அனுப்புவார்கள் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.

திடங்கொண்டு போராடு  வலைப்பூ தலைப்பின் தாக்கம் கொண்டு கோவைக்கவி அவர்கள் எழுதிய கவிதை வரிகள். அவர்களுக்கு என் மனபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  


பதிவைப் பற்றிய உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்,

24 comments:

  1. வைரமுத்துவின் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் சொல்லிச் சென்ற விதமே புத்தகம் படிக்கும் ஆவலை அதிகப்படுத்துகிறது.

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம்!

    ReplyDelete
  3. dey dey dey.., climax la unaku trick ah.., stupid

    ReplyDelete
  4. பாஸ்,
    ஒரு புத்தக விமர்சனம் மாதிரி எனக்கு தெரியவில்லை.ஒரு புக் படிச்ச மாதிரி எனக்கு தெரியுது. சாமியாரின் காதலை பாலா அமீர் மிஷ்கின் அவர்களின் படங்களில் வரும் காதலோடு ஒப்பிட்டது நன்று.
    பட்டாம்பூச்சி விளைவை என்பதை Butterfly effect என்றே சொல்லி இருக்கலாம். புக் படிப்பேனா என்று எனக்கு தெரியாது...கதையின் முடிவை எனக்கு மட்டும் ஆவது சொல்லவும்..

    ReplyDelete
  5. ''....இனிமையாக ஆரம்பித்த காதல் பயணம் சுமை கடந்து சுகம் வரப் போகிறது என்ற எண்ணிய நேரத்தில் ரணமாக மாறியதை கவிஞர் எப்படி முடிவுரையாக மாற்றினார்...''
    இங்கும் சஸ்பென்சா?..சினிமா விமரிசனம் போன்று!....எமுத்து நடை மிக நன்று. நல்வாழ்த்து.
    எனது படமும் வரிகளும்...இற்கு எடுத்துப் போட்டதற்கு மனமார்ந்த நன்றி....இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. எனது படமும் வரிகளும்...இங்கு எடுத்துப் போட்டதற்கு மனமார்ந்த நன்றி....இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. நான் வைரமுத்துவின் இந்த நூலை படித்ததில்லை. நீங்கள் சொன்னதில் இருந்து படிக்கும் ஆர்வம் எழுகிறது. உடன் தேடிப் பிடித்து படிக்க முயல்கிறேன். நன்று.

    ReplyDelete
  8. 10 வருஷம் முன்னாடியே படிச்சிட்டேன்.இப்பவும் வைரமுத்து கவிதைகளை புத்தகங்களை படிக்க ஆசை இருந்தாலும் அவரது புத்தக விலையும்,அதை விட கருணாக்கு சொம்படிக்கும் முகமும் நினைவுக்கு வருவதால் படிக்க பிடிப்பதில்லை.ஒரு தலை சிறந்த கவிஞன் தன்னை யாருக்கோ அடிமை படுத்தி வாழ்வது அவமானமாக இருக்கிறது.ஈழத்து துக்கங்களை பதிவு செய்யும் வைரமுத்து,துரோகங்களை பதிவு செய்ய வசதியாக மறந்து விடுகிறார்.தாமரை போன்றோர் வேண்டும் தமிழுக்கு,தமிழனுக்கு,தமிழகத்துக்கு....

    ReplyDelete
  9. வைரமுத்துவின் கவிதைகள் எனக்குப் பிடிக்கும்!

    ReplyDelete
  10. nanpaa!
    mikka nantri!

    intha pathivukku!

    muzhuvathumaaka padithathu pol-
    makizhvu!

    idaiyil kavithai!
    arumai!

    ReplyDelete
  11. வைரமுத்து சார் எழுதிய கவிப்புத்தகங்கள் நிறைய கேள்விப்பட்டுள்ளேன் படிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை....காரணம் நான் புத்தகங்கள் படிப்பது குறைவு..முயற்சிக்கிறேன் இந்த புத்தகத்தையாவது படிப்பதற்கு

    சிறந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  12. சுவடுகள் மாறவில்லை. கொஞ்சம் சதை போட்டிருக்கிறாள். கண்களில் மட்டும் அதே பௌர்ணமிகள்".

    சிறப்பான விமர்சன வரிகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  13. "காட்டுக்குள் வாழ்ந்தேன், மிருகங்களிடம் எனக்குப் பாதுகாப்பு இருந்த்தது. நாட்டுக்குள் வந்தேன் மனிதர்களிடம் தான் எனக்குப் பாதுகாப்பில்லை" Azlagana Varigal ..touching ….

    ReplyDelete
  14. நல்ல விமர்சனம். படிக்க முயற்சிக்கிறேன்....

    பகிர்வுக்கு நன்றி சீனு.

    ReplyDelete
  15. எனக்கு இதை போன்ற புத்தகம் படிக்க சத்தியம்மா பிடிக்காது காமிக்ஸ்ன்னா ரொம்ப பிடிக்கும் நீங்க எழுதி இருப்பது நல்லா இருக்கு...

    ReplyDelete
  16. அருமையான ஒரு பத்தக விமர்சனம்.நானும் நீண்ட நாட்களாக புத்தக விமர்சனட் ஒன்று எழுத வேண்டுமென நினைத்தேன்.எப்படி என்று தான் தெரியவில்லை.இன்று இப்படி வாசிக்கக்கிடைத்தது பெருமகிழ்வு.நிச்சயம் படிக்கிறேன்.வாழ்த்துக்கள் சொந்தமே..!

    ReplyDelete
  17. புத்தகத்தில் உள்ள பல சுவாரஸ்யமான விசயங்களை சொல்லியிருக்கீங்க..படிக்கணும் போல இருக்கு.இன்னிக்கு லைப்ரேரில இருக்கானு தேடப்போறேன்...நன்றி

    ReplyDelete
  18. அழகா எழுதியிருக்கீங்க பாஸ்..தொடரட்டும் மேலும் பல புத்தக விமர்சனம்..

    ReplyDelete
  19. I Dont Like Vairamuthu ...but nice article

    ReplyDelete
  20. வித்தியாசமான கதைக்களம், கட்டாயம் வாசிக்கிறேன் :)

    ReplyDelete
  21. எனக்கு புத்தகம் படிக்க ஆர்வம் குடுத்ததே இந்த புத்தகம் தான்

    ReplyDelete
  22. எனக்கு வைரமுத்துவின் படைப்பில் மிகவும் பிடித்த புத்தகம் காவி நிறத்தில் ஒரு காதல்

    ReplyDelete