29 Aug 2015

தனி ஒருவன் - திரையனுபம்

எப்படியும் அடுத்த தீபாவளிக்கோ இல்லை பொங்கலுக்கோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவிடுவர்கள். இல்லை கேவலமானதொரு பிரின்ட் கூடிய சீக்கிரம் உங்கள் ஸ்மார்ட்போனில் வந்து குந்திக்கொள்ளும். பாதி டயலாக் புரிந்து, பாதி பேர் அங்குமிங்கும் நடக்கும் காட்சிகளுக்கு மத்தியில் இந்தப் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற கட்டயாத்தில் இப்படத்தைப் பார்க்கும் பரிதாப நிலைக்கு உங்கள் நீங்களே தள்ளிக்கொல்வீர்கள். அது தேவையா உங்களுக்குன்னு உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டிய நேரமிது.   

அந்த மொக்க பிரிண்டில நயன்தாரா நடித்திருகிறாரா இல்லை நாட்டியப்பேரொளி நக்மா நடித்திருக்கிறா என்பது கூடத் தெரியாமா ஒழுங்கா போய் தியேட்டர்ல பார்த்திருக்க வேண்டிய படம்ன்னு பெருமூச்சு விடுவீங்க. நடக்குதா இல்லையான்னு பாருங்க.



120+30+30 ஓவா கொடுத்து படம் பார்த்து வேலைமெனக்கெட்டு எங்க பேர்ல ஒரு டாக்கிஸ் ஆரம்பிச்சு அதுல ஹிட்ஸ் கிடைக்குதோ இல்லையோ விமர்சனம்ன்ற பேர்ல படம் நல்லா இருக்கு, கேமெரா ஆங்கிள் டாப்பு ம்யுசிக் ராக்கு, ஸ்டோரி சோக்குன்னு மாஞ்சி மாஞ்சி விமர்சனம் எழுதினா 'ரீமேக் ராஜா எடுத்த படம் சுமாரால்லா இருக்கும்னு நினைச்சே'ன்னு இழுப்பீங்க. 'யோவ் நெசமாலுமே அவர் நல்லா இயக்கி இருக்காரு'ன்னு சொன்னப்போ நம்பாமா, சவுன்ட் ஒழுங்கா கேட்காத அந்த ஸ்மார்ட் போன்ல தீமை தான் வெல்லும்ன்னு வாரப்போ பார்வேர்ட் பட்டன் அமுக்கிட்டு போயிட்டே இருக்கபோறீங்க. இருந்தாலும் சொல்றேன் இதெல்லாம் நல்லதுக்கில்ல.

'எழுத்தாளர் சுபா நல்லா வசனம் எழுதி இருக்காங்க. ஒரு லேடிக்குள்ள இவ்வளவு திறமையா'ன்னு தமிழ் சினிமாவப் பார்த்து ஆச்சரியபடுவீங்க. உங்களைப் பார்த்து சுபா வைய்யாம இருந்தா சரி. ஏன்னா சுஜாதாவுக்கு அப்புறம் ஒட்டுமொத்த தமிழ்நாடும் - தமிழ்நாடு நம்பிச்சோ இல்லையோ நீங்களும் நானும் லேடின்னு நம்பின சுபா பெண் இல்லை. சுரேஷ் பாலான்ற இரண்டு ஆண் அப்டின்ற அரிய தகவல் உங்களுக்கு தெரிஞ்சு இருந்தா வாழ்த்துக்கள். 

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கக்கூடிய நல்ல திர்ல்லர்ன்னு பக்கத்து சீட்டில பேசிக்கிட்டாங்க. லவ்வர்ஸா தியேட்டர்க்கு வந்துட்டு படம் பார்த்துட்டு, அந்த படமும் நல்லா இருக்குன்னு பேசிக்கிறாங்கன்னா படம் நல்லா இருக்குதுன்னு தானே அர்த்தம். இது எப்படிடா தம்பி உனக்கு தெரியும்னு சிரிக்காதீங்க. என் காதில விழற மாதிரிதான் பேசிகிட்டாங்க.  

ஜெயம் ரவி பேசினா எதோ கொழந்த பஞ்ச் டயலாக் பேசுற மாதிரியே இருக்கும்னு அப்பப்போ ஹஸ்கி வாய்ஸ்ல என் காதுக்குள்ள கேட்கும். ஆனா பாருங்க அவரு கூட கொஞ்ச கெத்தா பேசிருக்காரு. பேராண்மைக்கு அப்புறம் போலீஸ்க்கு உண்டான ஆண்மையோட நடிச்சு நல்ல பேரு வாங்கிட்டாரு நம்ம ஜெயம் ரவின்னு ஜில்மோர்ல சிவா பேசுவாருன்னு நினைச்சேன். ஏன் பேசலைன்னு இனிதான் போன் பண்ணி கேட்கனும். 

ஜெயர் ரவி ஹீரோ, அரவிந்த் சாமி ஹீரோவுக்கு எல்லாம் ஹீரோன்னு ஆவி எழுதிட்டாரா தெரியல. ஆனா தன்னோட திரையுலக வாழ்க்கையில இது அவருக்கு ஒரு முக்கியமான படம்னு எழுதி இருக்காரு. ஆவி மாதிரி ஜீனியஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும். வில்லன் அவதாரத்தில அவரப் பார்த்துட்டு சரவணா சொன்னான் 'கடல்ல வந்த மொக்கசாமியா இப்படி இருக்காருன்னு'. அடேய் மணி சார திட்டாதாடான்னு அவன திட்டிட்டு 'ஆமா சரவணா ஆளு செமையா இருக்காரு'ன்னு சொன்னேன். ஹீரோயினுக்கு இந்தப் படத்தில நல்ல வேல்யு. சம்பளம் இரண்டு கோடின்னு நினைக்கிறன். வாங்கின சம்பளத்துக்கு கொஞ்சமும் வஞ்சம் இல்லாம நடிச்சு கொடுத்துட்டுப் போயிருக்காங்க. ராஜாராணிக்கு அப்புறமா வயசான அக்கா வேஷம் போட்டு இருந்த நயன்தாரா நவ் பேக் டூ தேவதை மோட்.  

எந்தவிதத்திலும் சோர்வடைய வைக்காத திரைக்கதை. விறுவிறுப்பு கூட்டும் அடுத்தடுத்த காட்சி நகர்வுகள்ன்னு எழுதினா தான் இந்த எழுத்துக்கே ஒரு கிளாமர் வருது. இல்லாட்டா எப்படி நம்மையும் அறிவுஜீவின்னு காமிச்சிகிறது. நாலு எழுத்து எழுதினா நாமலும் எழுத்தாளன் தான். நாலு சினிமா விமர்சனம் படிச்சிட்டு அஞ்சாவதா எழுதினா நாமளும் விமர்சகன் தான். எது எப்படியோ இட் இஸ் எ மெடிக்கல் மிராக்கிள் மூவி தான். டிவிலையோ இல்லாட்டா மொக்க தியேட்டர் பிரின்ட்லையோ படம் பார்க்காம ஒழுங்கா தியேட்டர்க்கு போய் ஒரிஜினல் தியேட்டர் பிரிண்ட்ல படம் பாருங்க. தமிழ் சினிமாவுக்கு அப்போப்போ ஆக்ஸிஜன் கொடுக்ககூடிய படங்கள வால வையுங்க. 


இது எதுவுமே செய்யாம இன்னும் நாலு மாசம் கழிச்சு 'அரங்கில் சென்று பார்த்திருக்க வேண்டிய படம். தவறவிட்டு விட்டேன் அது இதுன்னு கொஞ்சமும் உப்புச்சப்பில்லாம ஒரு ஸ்டேடஸ் போடுவீங்க பாருங்க அப்போதான் கான்ட் ஆகும். உங்கள நண்பராக்கிக் கொண்ட பாவத்துக்கு அதையும் படித்தாக வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுவோம். இப்படியொரு நிலை வரமால் இருக்க இந்தப்படத்தை அரங்கில் சென்றுபர்த்துவிடுங்கள். நல்லதொரு திரையனுபவத்தை தவறவிட்ட சாபாம் உங்களை அண்டாது இருக்கட்டும். ஸ்தோத்திரம்.   

4 comments:

  1. ஹாஹா ...

    வாழ்த்துக்கள் சார் ...:)

    ReplyDelete
  2. தனி ஒருவன் - திரையனுபம்// இது எந்த ஊரு மொழின்னு சொன்னா கற்றுக்கொள்ள வசதியாக இருக்கும் தலைவரே ....

    ReplyDelete
  3. //'எழுத்தாளர் சுபா நல்லா வசனம் எழுதி இருக்காங்க. ஒரு லேடிக்குள்ள இவ்வளவு திறமையா'//

    பத்திரிகைகளில் எழுதும்போதுதான் = சுபா!
    திரையில் வசனம் எழுதும்போது = சுரேஷ் - பாலா! அல்லவோ?

    ReplyDelete
  4. சுபா சுரேஷ் பாலான்ற இரண்டு ஆண் அப்டின்ற அரிய தகவல் உங்களுக்கு தெரிஞ்சு இருந்தா வாழ்த்துக்கள். // எங்களுக்கு வாழ்த்துகள்!!!! திரைக்கதை வசனம் என்றால் இருவரின் பெயரும் வந்து விடுமே.....அப்போ இதுல சுபானுதான் போட்டுருக்காங்களா...சீனு?

    கீதா

    ReplyDelete