8 Jan 2015

வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை - குறும்பட- சிறுகதை போட்டி - அறிவிப்பு

ஆவி டாக்கீஸ் - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! குறும்பட - சிறுகதை போட்டி திருவாளர் ஆவி  அவர்களின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபக்க அளவிலோ அல்லது அதைவிட கொஞ்சம் பெரியதாகவோ எழுதி அனுப்பினாலே போதுமானது. உங்கள் கதை ஒரு குறும்படத்தை எடுக்கும் பாணியில் இருந்தால் மிக உத்தமம். 

நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு பெறும் கதை ஆவி டாக்கீஸ் தயாரிப்பில் குறும்படமாக எடுக்கப்படும்.
முதல் பரிசு         :       ரூ.2000இரண்டாம் பரிசு :       ரூ.1000மூன்றாம் பரிசு    :       ரூ.500ஆறுதல் பரிசு       :       ரூ.250   (இரண்டு பரிசுகள்)

தேர்வுக்குழு:
"எங்கள் பிளாக்" ஸ்ரீராம் அவர்கள்,"வீடு" சுரேஷ்குமார் அவர்கள்,"மெட்ராஸ்பவன்" சிவகுமார் அவர்கள்,  மற்றும் உங்கள் "ஆவி"


விதிமுறைகளும், நிபந்தனைகளும்:

  • உங்கள் படைப்புகள்  ​​​400 வார்த்தைகளுக்கு குறையாமலும், 600 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
  • கதைகள் நகைச்சுவை, காதல், க்ரைம், சமூக உணர்வுக் கதைகள், விழிப்புணர்வுக் கதைகள் என எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். தவறான வார்த்தைகளோ, யார் மனதையும் புண்படுத்துவதாகவோ இருத்தல் கூடாது.
  • தேர்ந்தெடுக்கப்படும்/ போட்டிக்கு அனுப்பப்பட்ட சிறுகதைகளில் முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படலாம். அச்சமயம் 'கதை' இன்னாரென்று க்ரெடிட் மட்டுமே மட்டுமே கொடுக்கப்படும். (முதல் பரிசு தவிர வேறு சன்மானங்கள் அளிக்கப்பட மாட்டாது. )
  • கதை உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். வேறு தின,வார, மாத இதழ்களுக்கோ, இணைய ஊடகங்களுக்கோ அனுப்பியதாய்  இருத்தல் கூடாது.
  • கதை உங்கள் தளங்களிலோ, வேறு ஊடகங்கள் எதிலாவதோ வெளியாகியிருத்தல் கூடாது.  அப்படித் தெரிந்தால் கதை உடனே போட்டியிலிருந்து நீக்கப்படும்.
  • எந்த ஒரு கதையையும் தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ போட்டி நடத்துபவருக்கும், தேர்வுக் குழுவுக்கும் மட்டுமே உரிமை உண்டு.
  •  போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் கதைகள் சிறுகதைத் தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படலாம்.
  • ஒருவர் அதிகபட்சமாக இரண்டு கதைகளை மட்டுமே அனுப்பலாம். (ஒரே மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்புதல் அவசியம்). 
  • கதைகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கதைக்கு தேவையெனில் பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவை தமிழிலேயே தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  •            உங்கள் படைப்புகளை அனுப்ப கடைசித் தேதி: ஜனவரி 23, 2015 இரவு 12 மணிக்குள் (IST)
  •          போட்டியின் முடிவுகள் ஏப்ரல் 14, 2015 அன்று வெளியாகும்.
  •             தேர்வுக்கு அனுப்பிய கதைகளை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் (ஏப்ரல் 14, 2015 க்கு பிறகு) படைப்பாளி தங்கள் தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.
  • .    ​   போட்டி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து போட்டி முடியும் நாள் வரை போட்டியார்கள் தேர்வுக் குழுவை சேர்ந்த யாரையும் போட்டி சம்பந்தமாக அலைபேசியிலோ /முகநூலிலோ  தொடர்பு கொள்ளுதல் கூடாது. போட்டி விதிமுறை குறித்த சந்தேகங்களுக்கு மேலே குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். ​


கதைகளை அனுப்பும் முறை:

  • நேர்த்தியாக Format செய்யப்பட்டு MS-Word இல் அனுப்ப வேண்டும். 
  • MS-Word பைலின் பெயரில் உங்கள் கதையின் பெயர் ஆங்கிலத்தில் இடைவெளியின்றி எழுதப்பட்டிருக்க வேண்டும். 
  • (எ.கா)  உங்கள் கதையின் தலைப்பு "காதல் போயின் காதல்" என்றால் MS-Word File, KadhalPoyinKadhal என்ற பெயரில் Save செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • கதைக்கு பொருத்தமான ஏதாவது ஒரு படத்தையோ,  நீங்களே எடுத்த புகைப்படத்தையோ அனுப்பலாம். ஆனால் புகைப்படம் அனுப்புவது கட்டாயமல்ல. (புகைப்படம் தேர்வுக் குழுவுக்கு பிடித்திருந்தால் மட்டுமே வெளியிடப்படும்)
  • MS-Word  பைலையும் புகைப்படத்தையும் (Optional) தனித்தனி Attachment ஆக இணைத்து aaveetalkies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • Subject இல் Aavee Talkies ShortFilm-ShortStory Contest 2015 என்று குறிப்பிடுதல் அவசியம்.
  • Body இல்  பின்வரும் தகவல்கள் உள்ளீடு செய்திருத்தல் அவசியம்.
  • MS -Word இல் தமிழில் உள்ளீடு செய்ய முடியாதவர்கள் ஒழுங்காக பத்தி பிரிக்கப்பட்ட கதையை டைப் செய்து ஈமெயிலின் சப்ஜெக்டில் கீழ்வரும் தகவல்கள் உடன்  சேர்த்து அனுப்பவும்.
  • (PDF வடிவில் அனுப்பப்படும் கதைகள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.)

பெயர்* : புனைபெயர்:(Optional )வசிக்கும் நகரம்:​(தமிழ்நாடு அல்லாத வெளியூர்/ வெளிநாட்டு படைப்பாளிகள் உங்கள் நகரம்/  நாடு சேர்த்து குறிப்பிடவும்.)​அலைபேசி எண்* :வலைத்தளம்:(Optional )கதையின் தலைப்பு* :கதை எண்* : 

நண்பர்கள் அனைவரும் பெருவாரியான அளவில் பங்குகொண்டு பரிசுகளை வெல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்தகவலை உங்கள் வலைப்பூவிலும் பேஸ்புக் பக்கங்களிலும் பகிர்ந்து மேல பல நண்பர்களுக்கு இத்தகவல் சென்று சேர உதவுங்கள். 

கதைகளை அனுப்பவேண்டிய கடைசி திகதி ஜனவரி 23, 2015 என்பதால் விரைந்து எழுதத் தொடங்குங்கள். வெற்றி நமதே :-)

10 comments:

  1. நல்லதொரு முயற்சி. கதை எழுதி அனுப்பப் போகிறவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. பதிவர் சந்திப்பின்போது ஆவி அறிவித்தது மறந்தே போய்விட்டது. நினைவு படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  3. போட்டியில் கலந்துகொள்வோருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. முயற்சிக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. //ஒருபக்க அளவிலோ அல்லது அதைவிட கொஞ்சம் பெரியதாகவோ எழுதி அனுப்பினாலே போதுமானது.//
    @சீனு, நானூறு வார்த்தை மினிமம் எனும் விதிமுறை அடி வாங்குகிறதே? அதற்கு குறைவாக இருந்தால் பரவாயில்லையா..

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை பிரசன்னா... அதிகபட்சத்தை தாண்டாத வரைக்கும் பிரச்சனை இல்லை. அதற்காக சிறிய கதை என்றால் 'சுஜாதா கூறிய உலகின் கடைசி மனிதன் கதை'யைப் போல யாரேனும் ஒருவரியில் கதை எழுதிவிட்டால் என்ன செய்வது :-)

      Delete
    2. ஹாஹா அதுவும் சரிதான்.. ஆறு நொடி குறும்படம்தான் அப்பறம் :)

      Delete
  7. உள்ளீடு என்றால் என்ன?

    நானூறிலிருந்து அறுநூறுக்குள்ளா.. அப்ப எனக்கெல்லாம் வாய்ப்பேயில்லை.

    ReplyDelete
  8. நல்லதொரு முயற்சி, போட்டியில் கலந்துகொள்வோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete