20 May 2013

சொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 3


அத்தியாயம் 1 | அத்தியாயம் 2

'நீங்கள் அழைக்கும் எண் தற்போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்குப் பின் முயற்சிக்கவும்.' 




'விக்ரம். ஆபத்து இவனுக்கா, இல்லை இவனை நம்பியதால் பாலாஜிக்கா? அருகில் இருக்க வேண்டிய நேரத்தில் எங்கே போய்த் தொலைந்தான்.'  வினோதிற்கு, பாலாஜியின் அளவிற்கு விக்ரமின் மீதும் கவலை ஏற்பட்டிருந்தது .

விக்ரம் மிக புத்திசாலி. நாம் யோசிப்பதை யோசித்து முடிக்கும் முன்பே செய்து முடிக்கும் அளவிற்கு புத்திசாலி. அனைவரின் கோபத்தையும் எளிதில் சம்பாதித்துவிடுவான். எல்லாராலும் அவனது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடிவதில்லை, 'சின்னபையனுக்கு இவ்ளோ திறமையா' என்ற பொறாமையின் வெளிபாடே மற்றவர்கள் விக்ரமின் மீது வெளிபடுத்தும் கோபத்திற்கு காரணமாய் இருக்கும். நிதானமாய் யோசித்துப் பார்த்தால் விக்ரமை கொண்டாடலாம், ஆனாலும் பெரியவர்களின் சின்னபுத்தி இளையவர்களின் சாதுர்யத்தை ஆராதிக்க விடுவதில்லை.       

"வினோத், இன்னும் எங்களுக்கு க்ளு எதுவும் கிடைக்கல, ஐ'ம் வெயிட்டிங் பார் யு, நீங்க எப்போ ரீச் ஆவீங்க" பெரிய தெய்வங்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட அவசரத்தில் இருந்தார் கார்த்திக், காக்கி அஸ்திரங்களும், வெள்ளை வஸ்திரங்களும் இந்நேரம் அவரை துகிலுரிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். ஒரு ஆபத்பாந்தவன் அவசரத் தேவையாய் இருக்கலாம், அந்த அவசரம் அவரது பேச்சில் தெரிந்தது.

"வீரவாஞ்சி தாண்டி பத்து நிமிஷம் ஆகுது, ஸ்டேஷன் வந்ததும் ஆட்டோ புடிச்சி நேரா ஹாஸ்பிடல் வாரேன், வீ வில் மீட் தேர்." 

"வேணாம் வினோத், நானே ஸ்டேஷன் வாரேன், வைட் ஷர்ட், காக்கி பேன்ட்"

"நீங்க சொன்ன குறிப்புல பல தலை தென்படும் கார்த்திக், நான் இறங்கினதும் உங்களுக்குக் கால் பண்றேன். அப்படி இல்லாட்டா எஸ் 7,அங்க வந்த்ருங்க" 

ரயில் மெதுவாக நெல்லை காற்றை சுவாசிக்கத் தொடங்கியிருந்தது. பெரிய ரயில்வே ஸ்டேஷன் என்றாலும் பிரமாண்டமான ஸ்டேஷன் இல்லை. சமீபகாலமாய் 24X7 என்ற அளவில் உற்சாகமாக இயங்கத் தொடங்கியுள்ளது. 

கொஞ்சம் பணக்காரத்தனம் தெரிந்த மனிதர்கள் ஏசிப்பெட்டியின் வருகைக்காக தங்கள் அரைகால் சட்டைகளுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். சாதாரணமான மனிதர்கள் அவர்களைப் போன்ற சாதரான மனிதர்களை வரவேற்க, நலம் விசாரிக்க, கட்டி அணைக்க தயாராகிக் கொண்டிருந்தார்கள். 

பெரும்பாலானா கூட்டம் மதுரையிலேயே இறங்கிவிட்டதால் குறைவான மக்களே தங்களை குருவாயூரில் இருந்து விடுவித்துக் கொண்டார்கள். வினோத்தை அடையாளம் கண்டுகொண்ட கார்த்திக், நடந்து வந்த வேகத்துடனேயே அவசரமான ஒரு புன்னகையையும் சேர்த்துக் கொண்டார். 


கார்த்திக். துல்லியமாக 5.எட்டடி உயரம் இருக்கலாம், உயரத்திற்கேற்ற எடை. இளமையும் அழகும் கார்த்திக்கை கொஞ்சம் கம்பீரமாய், தோரணையாய்க்  காட்டியது, அளவாய் வெட்டப்பட்ட தலைமுடி. மாநிறத்தில் கொஞ்சம் உயர்ரக நிறம். மப்டிக்கே உரிய காக்கி பேண்ட், வெள்ளை சட்டை. ஓரம் ஒதுக்கப்படாமல்  முறுக்கிக் கொண்டிருக்கும் மீசை மட்டும் சற்றே அன்னியமாய்.

அவருடனான முதல் கைகுலுக்கலிலேயே  அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்று விசாரிக்க வேண்டும். மிகபெரிய கருப்பு கண்ணாடியை தன் வெள்ளை சட்டையில் சொருகியிருந்தார்.

"ஹல்லோ கார்த்திக்" என்று சிரித்துக் கொண்டே நீட்டிய வினோத்தின் கையை மற்றொரு கை வேகமாக பலவந்தமாக பற்றியிழுத்து "ஹலோ வினோத் வெல்கம் டூ நெல்லை" என்றது புன்னகை மாறாமல்.    

திடிரென கார்த்திக்கின் பின்னால் இருந்து தோன்றி வலுக்கட்டாயமாக கையை  இழுத்து நிகழ்ந்த ஒரு இழுவையான வரவேற்பை வினோத்தும் கார்த்திக்கும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

"என்ன பாஸ் திருடன பார்த்த மாதிரி இப்படி முழிக்கிறீங்க, சாயங்காலம் S7க்கு நாந்தான வாறேன்னு சொல்லிருந்தேன்... ஹாய் கார்த்திக்...உங்கள ஹாஸ்பிட்டல்ல தேடுனா இங்க என்ன பண்ணுறீங்க"

விக்ரமின் இயல்பான பேச்சு கார்த்திக்கின் முகத்தை மேலும் சுருங்கச் செய்து கொண்டிருந்தது.

"பாஸ் அவர அப்படி பார்க்க வேணாம்ன்னு சொல்லுங்க" 

"விக்ரம் பீ சீரியஸ், உன் மொபைல் ஏன் ஸ்விட்ச் ஆப்ன்னு வருது, எத்தன தடவ நானும் கார்த்திக்கும் ட்ரை பண்றது.  பாலாஜிய ஹாஸ்பிடல்ல இருந்து கடத்திட்டாங்களாம், நீ கூட பிரச்சனையில மாட்டிட்டியோன்னு பயந்துட்டு இருக்கோம்" , வினோத்

"விக்ரம் இவ்ளோ நேரம் எங்க போனீங்க, வொய் நோ ரெஸ்பான்ஸ், டூ யு நோ வாட் இஸ் ஹாப்பனிங் ?", கார்த்திக் கேள்விகளை அடுக்கினார். 

"ஒன்னு சொன்னா ரெண்டு பேரும் கோச்சுக்க மாட்டீங்களே.. பாலாஜிய நான் தான் ஹாஸ்பிட்டல்ல இருந்து கடத்தினேன்..."  இயல்பாக கூறிவிட்டு குழந்தையைப் போல்  போல் விக்ரம் சிரித்ததை புழுவைப் பார்ப்பது போல் பார்த்தார் கார்த்திக்.

"இதுவே வேற யாராவது இப்படி பேசியிருந்தா தோல உறிச்சிருப்பேன்", கார்த்திக். 

"இப்போ ஒன்னும் கெட்டுப் போகல, கூட்டிட்டுப் போயி உறிங்க கார்த்திக், விக்ரம் ஜஸ்ட் பீ சீரியஸ், வாட் ஹாப்பெண்ட்"

"ஓகே பாஸ் ஐ'ம் சீரியஸ், பாலாஜி பத்திரமா, ரொம்ப பத்திரமா இருக்காரு, ஸ்டேஷன்க்கு வெளியில, அந்த விநாயகர் கோவில் பக்கம் காபி ரொம்ப நல்லா இருக்கும், கமான் காபி குடிச்சிட்டே பேசலாம்."

"கார்த்திக், ப்ளீஸ் டோன்ட் மைண்ட் திஸ், எனக்கு இவனப் பத்தி தெரியும், கொஞ்சம் ஆர்வக் கோளாறு பட் நம்பலாம், வாங்க காபி குடிச்சிட்டே பேசலாம்"

" திஸ் இஸ் இரிடேட்டிங் மீ வினோத்" கார்த்திக் வேறு வழியில்லாமல் வினோத்துடன் நகரத் தொடங்கினான். 

"அண்ணாச்சி, மூணு பெரிய கிளாஸ் காபி... நல்ல சூடா.." அண்ணாச்சியிடம் அலறிவிட்டு வினோத்தை நோக்கினான் விக்ரம் 

"சாயங்கால தலவலிய சமாளிக்க காப்பி இஸ் அவர் எனர்ஜி இல்ல பாஸ். ஸ்டேஷன்க்கு வெளியில் இருக்குற இந்த கடை நெல்லை பேமஸ், செம ரிப்ரஷா இருக்கும்."     

"விக்ரம்..பாலாஜிய எங்க? இப்ப எப்டி இருக்கார்?", கார்த்திக்கால் வேறு எதிலும் மனதை செலுத்த முடியவில்லை, அதே கேள்விகள்,ஆனால் பலமுறை கேட்டும் கிடைக்கப்பெறாத பதிலுக்காக பொறுமையிழந்து காத்துக் கொண்டிருந்தார்.     

"மொதல்ல இருந்தே சொல்றேன் கார்த்திக், அப்பறம் என்ன திட்றதும், திட்டாததும் உங்க விருப்பம்"

"மார்னிங் ஹாஸ்பிடல்க்குப் போய் பாலாஜிய பார்த்தேன், தலையிலையும் கால்லயும் நல்ல அடி, முழிச்சாலும் நடக்கறதுக்கு ஒரு மாசமாது ஆகும். நம்ம கார்த்திக் நேத்து நடந்தத விலாவாரியா சொன்னாரு, மத்தியானம் அவர கூட்டிட்டு கலெக்டர் பங்களாவுக்கு போனேன்"

கார்த்திக், "எனக்கு எஸ்பிட்ட இருந்து போன் வந்தது, கலெக்டர் விசயமா ரொம்ப அர்ஜெண்ட் மீட்டிங், சோ உடனே கிளம்பிட்டேன், இப்போ கலெக்டர் எங்க அத மட்டும் சொல்லு மொதல்ல்ல..." வார்த்தையின் தீவிரம் அதிகமாகியது.

" கொஞ்சம் பொறுமையா இருங்க, விலாவாரியா சொல்லிட்டு இருக்கேன்ல" விக்ரமும் கொஞ்சம் எரிஞ்சலடைந்தான். 

"போலீஸ் தரப்புல  கலெக்டர மிரட்டுறதுக்கா நடந்த வெறும் கொலை முயற்சின்னு எப்.ஐ.ஆர் பைல் ஆகியிருக்கு. இது வெறும் கொலை முயற்சி இல்ல, அவர கொலை பண்றதுக்ககாவே நடந்த முயற்சி, நிச்சயமா பாலாஜி அவங்க கூட சண்ட போட்ருகாறு, ரூம்ல இருந்த அலாராம் வொர்க் ஆகல, சண்டை போட்டுட்டே ரூம் கதவ திறந்து செக்யுரிட்டிய கூப்பிட்டு இருக்காரு, போலீஸ பார்த்ததும் கொலை பண்ண வந்தவங்க பாதியிலேயே விட்டுட்டு ஓடிட்டாங்க, கொலை, கொலைமுயற்சியா மாறி இருக்கு."

கார்த்திக், "இது கொலை முயற்சி தான், ரொம்ப நாளாவே கேசவ பெருமாள், கலக்ட்டர விலைக்கு வாங்க முயற்சி பண்றாரு. அவருக்கு தேவ கலக்ட்டர் தான், அவரோட உயிர் இல்ல. போன்ல மிரட்டி பணியாதவர, ஆள் வச்சி அடிச்சா பணிஞ்சிருவாருன்னு கணக்கு போட்டுருக்காரு".

வினோத் "கார்த்திக், விக்ரம் முழுசா பேசி முடிக்கட்டும்"   

விக்ரம், "கம்பவுண்ட் சுவர உடச்சி உள்ள வந்தததா போலீஸ் சொன்னாங்க,  சுவர் உயரம் ரொம்ப அதிகம், பட் அந்த பெரிய சுவர ஓவர் நைட்ல உடைக்கிறது ரொம்ப கஷ்டம்."

"சுவர உடைக்கறதுக்கு அவங்க பயன்படுத்தினது கடப்பாறையோ கம்பியோ இல்ல, கொஞ்சம் அடுத்த லெவல், இல்ல புதுவகையான அச்சுறுத்தல், சைலண்ட் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் யூஸ் பண்ணிருக்காங்க, பாமோட அதிர்ச்சி சுவர் முழுசும் பரவி இருக்கு, செங்கல் உடைப்பு ரொம்ப தூரத்துக்கு சிதறியிருக்கு. அவங்க யூஸ் பண்ணினது வெறும் பில்டிங் உடைக்கிற கெமிகல்ஸா இல்ல எக்ஸ்ப்ளோசிவ்ஸான்னு கண்டுபிடிக்கணும், இதெல்லாம் போலீஸ் குறிப்புகள்ள மிஸ்ஸிங்", கார்த்திக்கை கொஞ்சம் துருதுருவென்று பார்த்தான் விக்ரம்.  

"எதிரி கையில அருவா கத்தி இருந்தா கூட இவ்ளோ பதறி இருக்க மாட்டேன்.  பங்களாவுல கொலைபண்ண முயற்சி பண்ணினவங்க நிச்சயமா ஹாஸ்பிடல்க்கும் வருவாங்கன்ற  எச்சரிக்கை உணர்வு என்ன துரத்திட்டே இருந்தது. உடனே கார்த்திக்கு போன் பண்ணினேன் அவரு எடுக்கல, மீட்டிங்ல பிசியா இருந்த்தார்"

" சோ", வினோத்   

"இங்க இருக்குற மத்த போலீஸ் யாரையும் நம்பி என்னால களத்துல இறங்க முடியல, என்னோட ரொம்ப நம்பிக்கையான பிரண்ட்ஸ் வச்சி பாலாஜிய ஹாஸ்பிடல் கடத்தினேன், போலீஸ் பாதுகாப்பு ரொம்ப அமோகமா இருந்தததாலா பாலாஜிய இடம் மாத்துறது ஒன்னும் அவ்ளோ பெரிய சவாலா இல்ல. முகம் தெரிஞ்ச எதிரிக்கு தெரியாத இடத்துல இப்போ பாலாஜி  பத்திரமா இருக்கார்"   

"மொபைல் சார்ஜ் இல்லாம ஆப் ஆனது மட்டும் தான் தற்செயல் மத்த எல்லாமே என்செயல் தான். இடம் மாத்தினதும் திரும்பவும் ஹாஸ்பிடல் வந்தேன் கார்த்திக் இல்ல, பாஸ்ஸ கூப்பிடலாம்ன்னு இங்க வந்தேன், நீங்க ரெண்டு பெரும் இங்க இருக்கீங்க."

"கார்த்திக் சார் உங்காளுங்க இருக்கும் போது, உங்க பாதுகாப்புல இருந்த பாலாஜிய தான் நான் இடம் மாத்தினேன். கிண்டலுக்காக சொல்லல, பணம் எல்லா இடத்துலையும் சர்வசாதாரணமா விளையாடுது, நீங்க கைகாட்டாத எந்த போலீஸையும் நாங்க நம்ப தயாரா இல்ல, இத நான் சொல்ல, ஒருமுற பாலாஜியே சொல்லிருக்காரு." 

" பாலாஜி இருந்த இடத்துல வேற ஒருத்தனையோ இல்ல ஒரு பிணத்தையோ வச்சி டெஸ்ட் பண்ணலாம்ன்னு யோசிச்சேன், ஆனா எனக்கு அந்த அளவுக்கு செல்வாக்கு கிடையாது. இப்போதைக்கு வேற இடத்துக்கு தான் மாத்த முடிஞ்சது"   

"இன்னும் அவரு மயக்கத்துல தான் இருக்காரு, ஆனா பாதுகாப்பா இருகாரு, என்னால உறுதியா சொல்ல முடியும், அவரோட உயிருக்கு ஆபத்து இருக்கு, கொலைகார எதிரிய சம்பாதிக்கிற அளவுக்கு எதோ ஒரு ரகசியம் பாலாஜிட்ட மறஞ்சு இருக்கு.. எதிரிய கண்டுபிடிக்கணும் அதோட அந்த ரகசியத்தையும் சேர்த்து கண்டுபிடிக்கணும்" 

வினோத், யாருக்கு பரிந்து பேசுவது என்று தெரியாத இரண்டுகட்டான் மனநிலையில் கார்த்திக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, விக்ரம் கார்த்திக்கின் சட்டையிலிருந்த கருப்பு கண்ணாடியை அணிந்து தலையை கலைத்து விட்டுக் கொண்டிருந்தான். இந்த செயல் கார்த்திக்கை இன்னும் கோவப்படுதியது.  


"ரொம்ப அதிகமா கற்பன பண்ணியிருக்க விக்ரம், இது உனக்கு தேவை இல்லாத வேல, எங்களுக்கு தேவை இல்லாதா டென்சன், என்னிகாது ஒருநாள் நீ இதுக்கு பதில் சொல்லியே ஆகணும்" திடிரென வெளிப்பட்ட கோவத்தில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் விருட்டென ஜீப்பில் ஏறி புறப்படுவதற்கு தயாராக, இஞ்சினுக்கு கட்டளை பிறப்பித்த நேரம்,  


ஜீப்பில் இருந்த கண்ட்ரோல் ரூம் போன் வேகமாக அலறியது. 

"ஸார், பாளையங்கோட்டை எஸ்.ஐ ஸ்பீகிங் சார், ஓவர்"

"எஸ்"

"சந்தேகப்படுற மாதிரி நடமாடுன ஒரு வார்டுபாய பிடிச்சி விசாரிக்கும் போது தப்பிச்சி ஓடிட்டான் ஸார், அவன்கிட்ட இருந்த பாய்சனஸ் டிரக்ஸ் அண்ட் ஒரு கத்தி பறிமுதல் பண்ணிருக்கோம், பட் ஆள் எஸ்கேப். கொஞ்சம் உடனே வர முடியுமா ஸார். ஓவர்"            





                                                                                                          உன்னைத் தொடர்கிறேன் 

27 comments:

  1. Interestimg turnings. Nice commentery of characters. Natural dialogues. Kalakkre ksanna

    ReplyDelete
    Replies
    1. முதல் வருக்கைக்கும் உற்சாகமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி வாத்தியாரே

      Delete
  2. நல்லாத்தான் போகுது!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குட்டன்

      Delete
  3. விறுவிறுப்பு குறையாமல் கொண்டு போறீங்க சீனு... கண்டின்யூ!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் சார்... இந்த விறுவிறுப்பு குறையாம கொண்டு போக முயற்சி பண்றேன் சார்

      Delete
  4. எதிர்ப்பார்க்காத திருப்பம்... தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்

      Delete
  5. வர்ணனையில் கலக்குகிறீர்கள்... விறுவிறுப்பாக செல்கிறது...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஸ்கூல் பையன்....

      Delete
  6. திடீர் திருப்பங்களுடன் சுவாரசியமாக எழுதுகிறீர்கள்.தொடருங்கள் நாங்களும் உங்களை தொடர்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி டினேஷ்.. ஆமா எதுனால உங்க பேரு டினேஷ்? தினேஷ் தான இருக்கனும் :-)

      Delete
  7. சுவாரஸ்யம் அள்ளுகிறது! அடுத்த பகுதியை சீக்கிரம் வெளியிடுங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தளிர்

      Delete
  8. ரொம்ப டெவலப் ஆயிட்டே போறீங்க.. ஒவ்வொரு அத்தியாயம் செல்ல செல்ல எழுத்து நடையில் வளர்ச்சி தெரிகிறது..

    ReplyDelete
    Replies
    1. மிக உற்சாகமான கருத்துரைக்கு மிக்க நன்றி சார்... என்னை மென்மேலும் மெருகேற்றுவது இங்கு நீங்கள் அனைவரும் கொடுக்கும் உற்சாகம் தான்

      Delete
  9. இந்த வாரம் தான் கொஞ்சம் விறுவிறு.. பாராட்டுக்கள்.

    துல்லியமாக 5.எட்டடி உயரம் இருக்கலாம் - அது எப்படி?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அப்பாதுரை சார்...

      //துல்லியமாக 5.எட்டடி உயரம் இருக்கலாம் - அது எப்படி?// இப்படியெல்லாமா என்ன லாக் பண்றது :-) ஹா ஹா ஹா

      Delete
  10. பரபரப்பாய் நகர்கிறது.வாழ்த்துக்கள் சீனி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கவியாழி

      Delete
  11. பரபரப்பும் பிடிகொடாமல் தொடர் தொடரட்டும்!சீனு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நேசன்.. ஒரே நேரத்தில் மூன்று பகுதிகளையும் படித்து கருத்திட்டு என்னை உற்சாகப்படுதியதற்கு மிக்க நன்றி

      Delete
  12. உங்கள் எழுத்தில் ராஜேஷ் குமாரின் 'பாதி'ப்பு தெரிகிறது !மீதி உப்பையும் சேர்த்து கார,சாரமாக தொடர வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. விறுவிறுப்புடன் செல்கிறது சீனு.தொடரட்டும் இந்த விறுவிறுப்பு

    ReplyDelete
  14. Thank you for making this interesting article. I'm happy to visit here

    ReplyDelete
  15. அது என்ன ' 5.எட்டடி' , உங்க styleஅ ?

    நன்றாக செல்கிறது, தொடர வாழ்த்துக்கள்.

    அடுத்த அத்தியாயத்தில் ரம்யா வலம் வர காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  16. ஒரு தேர்ந்த எழுத்தாளரின் டச். வெல்டன் சீனு

    ReplyDelete