தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் நியாபகம் வருகிறதா...
முதலில் கமலஹாசனிடம் ஒரே ஒரு கேள்வியுடன் இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்
ஹல்லோ மிஸ்டர் கமல் இவ்வளவு திறமைய இத்தனை நாள் எங்க ஒளிச்சி வச்சிருந்தீங்க?
சமீப காலமாய் எங்கெங்கு காணினும் விஸ்வரூபம் தான். ஜனவரிஇருபத்தி நான்காம் தேதி மிக ஆவலாய் இருந்தேன், இரவு நெருங்க நெருங்க தடை விலகுமா விலகாதா என்பதே கேள்விக்குறியாய் இருந்தது. படம் வெளியாகவில்லை தடை ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு என்று கேள்விபட்டதும் ஆங்கிலத்தில் FRUSTRATION என்று சொல்வார்களே அப்படித் தான் இருந்தது எனக்கு.
சென்றமுறை டிக்கெட் புக் செய்யும் பொழுது மாயாஜாலில் ஏரோ த்ரீ-டி சவுண்ட் சிஸ்டம் உள்ளது என்பதை அறிந்து கொண்டேன். தடைகளைத் தாண்டி வரும் பொழுது மாயாஜாலில் படம் பார்ப்பது என்ற முடிவுக்கும் வந்துவிட்டேன். இரவு நேரப் பணிக்கு கிளம்பிய மிகச் சரியான நேரத்தில் மாயாஜாலில் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகி இருந்தது, சகோதர சகோதரிகளிடம் சொல்லி புக் செய்ய சொன்னால் திரைக்கு மிக மிக அருகில் இருக்கும் முதல் வரிசையை புக் செய்தார்கள் ( அதையாவது செய்தார்களே என்று சந்தோசப் படுவதைத் தவிர வேறு வ(ழி)லி இல்லை.
உலக அளவில் ரெட் டெயில்ஸ் என்னும் ஒரே ஒரு திரைப்படம் மட்டும் ஏரோ-த்ரீ-டி தொழில் நுட்பத்தில் வந்துள்ளது, விஸ்வரூபம் உலக அளவில் இரண்டாவது மேலும் ஆசிய அளவில் முதல் திரைப்படம். பீட்ஸா படம் பார்க்கும் பொழுது இடையே ட்ரைலெர் ஒளிபரப்பப்பட்ட பொழுதே ஒலிபதிவு மிகவும் பிடித்துப் போய்விட்டது. படம் பார்த்த பலரும் " மொக்க தியேட்டர்ல கூட சவுண்ட் சூப்பரா இருக்கு" என்று எழுதி இருந்தது எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி இருந்தது.
உடன் வேலை பார்க்கும் ஆந்திர மாநிலத்து நண்பர்கள் ஆந்திராவில் படம் பார்த்துவிட்டு வந்து ஆகோ ஓகோ என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அதுவேறு கடுப்பையும் எதிர்பார்ப்பையும் அத்துமீறி கிளப்பிக் கொண்டிருந்தது. ஒருவழியாய் தடைகளை வென்றே சரித்திரம் படைக்க வந்து சரித்திரமும் படைத்துவிட்டது என்றே சொல்லலாம்.
விஸ்வரூபம் ஏரோ த்ரீ- டி யில்
சென்னைக்கு வந்த ஐந்து வருடங்களில் அத்தனை திரையரங்கிற்கும் சென்று விட்டேன் மாயாஜாலைத் தவிர இன்று அதுவும் நிறைவேறியது. அரங்கின் முதல் மூன்று இருக்கை. இருநூறு பேர் மட்டுமே அமர்ந்து படம் பார்க்கக் கூடிய மிக சிறிய திரையரங்கு.
கமலஹாசனின் அறிமுக நடனத்துடன் தொடங்கியது விஸ்வரூபம். சலங்கை ஒலி ஏரோ த்ரீ டியில் மிக துல்லியமாக இருந்தது. சலங்கையின் சரடைக் கழற்றும் பொழுது தரையில் உரசும் ஒலி கூட மிகத் துல்லியமாக இருக்கிறது. சில முக்கியமான இடங்களில் மற்றும் சிறப்பு சப்தங்களில் மட்டுமே ஏரோ த்ரீடி பயன்படுத்தப் பட்டுள்ளது என்று நினைக்கிறன். சண்டைக் காட்சிகளில் அரங்கம் இல்லை இருக்கைகள் கூட அதிருகிறது.
வழக்கமான தமிழ் சினிமாவிற்கு தேவையான அத்தனை மசாலாவும் இருக்கிறது இந்தப் படத்தில். தமிழ் சினிமா ஏன் இந்திய சினிமாவே இதுவரை பார்த்திராத கதைக் களத்தில் வெகு அற்புதமாக தேவையான மசாலாக்களை மிக நேர்த்தியாக ஆங்காங்கு தூவி, தெவிட்டாத அற்புதமான பதார்த்தத்தை கொடுத்துள்ளார் உலக நாயகன்.
"உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே" பாடலுக்கு கமலின் அபிநயம், அரங்கில் இருந்த எங்களுக்கு அப்படி ஆடத் தெரியாது என்பதால் கமலின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தோம். சில பாடல்கள் பெரிய பாடலாக இருக்கிறதே என்று சலிப்படைந்ததுண்டு, இந்தப் பாடல் இன்னும் கொஞ்சம் நீளக் கூடாதா என்று எண்ண வைத்த முதல் பாடல்.
உலகுண்ட பெரு வாய்யன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்று பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி
இந்த பூங்கோதை மறந்தாளடி
கமலைப் பின்தொடரும் டிடெக்டிவ் ஆசாமியிடம் இருந்து திரைக்கதை கதைக்குள் வேகமாக நகரத் தொடங்குகிறது. தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்டு அடிவாங்கும் நடனக் கலைஞன் கமல், குரான் ஓதியபடி வெளுத்து வாங்கத் தொடங்கும் சண்டைக்காட்சி அப்பப்பா அந்த சண்டைக் காட்சியில் எவ்வளவு உற்சாகம் அவரிடம். தொழில்நுட்ப உதவியுடன் படமாக்கப்பட்டிருக்கும் அந்த சண்டைக் காட்சி சிம்ப்ளி சூப்பர்.
ஆப்கானிஸ்தான் தலிபான்களை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார். தாலிபான்களை காண்பிக்கும் அந்தக் கட்சிகள் ஒரு டாக்குமென்ட்ரி போல் நகர்ந்தாலும் கதை ஓட்டத்திற்கு அவசியமாகிறது. நாம் எல்லாம் நடை உடை பாவனையில் கையை காலை சுழற்றி கிரிக்கெட் விளையாடுவோம் தாலிபன்கள் கோட்டையில் சைகைகளால் சுட்டு சுட்டு விளையாடுகிறார்கள். நிஜத்திலோ விளையாட்டு வினையாகிறது. என்ன செய்வது?
அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கும் தீவிரவாதியாக கமல் கனகச்சிதமாகப் பொருந்திப் போகிறார். படத்தில் அரபியும் ஆங்கிலமும் ஆக்கிரமிப்பிதிருப்பதைப் பார்க்கும் பொழுது இதை ஹாலிவுட் படமாகவே எடுத்திருக்கலாம். மேலும் படம் முழுக்க முழுக்க ஆப்கனிலும் அமெரிக்காவிலும் மட்டுமே நகர்கிறது. செட் போட்டு தான் எடுத்துள்ளார்கள் என்றாலும் உண்மைக்கு மிக அருகில் இருக்கிறது கலை.
ஆப்கனில் நடைபெறும் சண்டையின் பொழுது தவறுதலாக அப்பாவியைக் சுட்டு வருந்தும் ஒரு அமெரிக்கன், கூட்டம் கூட்டமாக இருக்கும் குடும்பங்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தும் அமெரிக்கன் என்று அமெரிக்கப் படையின் முரண்பட்ட முகத்தை அற்புதமாகக் காட்டியிருப்பார். அமெரிக்க தாக்குதலில் அடிபடும் அப்பாவி மக்களைப் பார்க்கும் பொழுது அமெரிக்கா மீதோ தலிபான்கள் மீதோ கோபம் வரவில்லை மனிதம் இழந்த மனித மிருகங்களின் மீது தான் கோபம் வருகிறது.
இத்தனை வருட அனுபவத்தையும், உழைப்பையும் மொத்தமாகக் கொட்டி உலகத்தரத்தில் ஒருபடம் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். சண்டைக் காட்சிகள் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது, இந்தப் படம் மட்டும் முடக்கப்பட்டிருந்தால் படத்தோடு சேர்ந்து கமலும் முடங்கிப் போயிருப்பார்.
சில காட்சிகளில் சில உயிர்கள் பலியாகும் பொழுது கமல் மிக வருந்துவார் இது என்னைப் பொருத்தவரை லாஜிக் மிஸ்டேக் போல் தோன்றியது, காரணத்தை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
வசனங்கள் அருமை. பெரும்பாலான வசனங்கள் கமல் தான் எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். ரசித்து சிரிக்க வைக்கின்றன. அது தான் கமல் டச். கமல் படம், என்றுதான் முதல் முறை பார்த்தவுடன் புரிந்துள்ளது. இதில் சில டெக்னிகல் வார்த்தைகளை கூறுகிறார்கள், அதை சாமான்யனுக்கும் புரியும்படி எடுக்காதது குறையே.
ஷங்கர் - இஷான் - லாய் மூவரும் பின்னணியில் பின்னி எடுத்துள்ளார்கள். கத்திரி கனகச்சிதம். ஒலி/ஒளிப்பதிவு அபாரம். பூஜா குமாரை விட ஆண்ட்ரியா என்னை கவர்ந்துவிட்டார். அட சில காட்சிகளுக்கு ஒசாமா பின்லேடனும் வந்து செல்கிறார்.
கிளைமேக்சில் கமல் தொழுகை செய்வார். ஆனால் அதற்கு முந்தைய கட்சியில் 'கடவுள் தான் காப்பாத்தணும்' என்று ஒரு வசனம் வரும் பொழுது, 'கடவுள். எந்த கடவுள் காப்பாத்துவாரு' என்று தனது நாத்திகத்தையும் வலிந்து திணித்துள்ளார். கமல், நீங்களே உங்களைப் பற்றி சொல்லும் அந்த வசனம் மிகச் சரி யு ஆர் தி ஹீரோ யு ஆர் தி வில்லன்.
தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்றியாகி விட்டது இந்தியாவைக் காப்பாற்ற வேண்டாமா 'எவன் என்று நினைத்தாய் எதைக் கண்டு சிரித்தாய்' என்று இந்தியாவை காப்பாற்ற இரண்டாம் பாகத்தில் வருகிறார் உலக நாயகன்.
இந்தப் படத்தை எத்தனை முறை அரங்கில் பார்ப்பேன் என்று என்று தெரியாது. நிச்சயமாக திரை அரங்கில் பார்க்க வேண்டிய படம். சென்னையில் இருந்தால் சத்யமிலோ அல்லது மாயாஜாலிலோ பாருங்கள்.
Tweet |
இரண்டாவது 'மூ' உடனே moveஆனால் சரி...
ReplyDeleteஹா ஹா ஹா மிகச் சரியாக சொன்னீர்கள் சார்
Deleteஅடுத்த முறை மாயாஜாலில் டிக்கெட் போட்டால் என்னையும் நினைவில் கொள்க. ரசித்து ருசித்து எழுதியிருக்கிறாய் சீனு. உலகநாயகனின் ரசிகனான எனக்கும் உடனே படம் பார்க்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டு விட்டது உன்னால்!
ReplyDeleteநிச்சயம் வாத்தியரே.. சத்யம் அதை விட பெரிய திரையரங்கு... நாம் அங்கு சென்று பார்க்கலாம்...
Deleteசூப்பர்! :) பெங்களூரில் Aero - 3D இருக்கிறதா என்று தெரியவில்லை இந்த வார இறுதியில் பார்க்க வேண்டும்!
ReplyDeleteபெங்களூருவில் இருக்கிறதா என்று தெரியவில்லை.... படம் தாறுமாறு...
DeleteI have booked in Sathyam on Sunday. Good Review, Thank you Seenu.
ReplyDeleteமிக்க நன்றி சார்.. சத்யமில் அடுத்த வாரம் பார்க்கலாம் என்றுள்ளேன்.. இல்லையென்றால் என் தோழர்கள் என் நட்பை ரத்து செய்து விடுவார்களோ :-)
Deleteஇன்றே பார்த்தாகி விட்டதா?! நான் கூட (வேறு வழியில்லாமல்) தியேட்டரில்தான் இந்த முறை படம் பார்க்க வேண்டிய நிலை. ஒரு நண்பரின் வற்புறுத்தல். சத்யமாம்!
ReplyDeleteதியேட்டரில் படம் பார்க்க வாய்ப்பு கிடைத்ததே என்று சந்தோசப்படுங்கள்... அதுவும் சத்யம் வேறு... என்ஜாய் சார்
Deleteயோவ் பார்த்தாச்சா ...
ReplyDeleteநானும் விரைவில் பார்த்துடுறேன்
ReplyDeleteயோவ் ராசா பாத்தாச்சு பாத்தாச்சு... சீக்கிரம் பார்த்து பூஜா குமாரை நினைத்து கவிதை பாடவும்
Deleteசீனு உமர் சார்ந்த கூட்டம் தாலிபான் இல்லை ஒரு அடிப்படைவாதக் கூட்டம்
ReplyDelete///நோட்டோ படை குண்டுகளால் அழித்த கிராமத்தை உமர்,கமல் பார்வையிடும் போது ஒரு வயதான மூதாட்டி ரஷ்யன் வந்தான், அமேரிக்கன் வந்தான்,தாலிபான் வந்தான், இப்ப நீங்க வந்திருக்கீங்க..என்று சொல்லுவாள்////
அல்கொய்தாவில் பயிற்சி பெற்ற கமல் இந்த உமர் கூட்டத்திற்கு பயிற்சி அளிக்கின்றார்.அதை உமர் சலீமிடம் பின்பகுதியில் கூறுவார்.
நான் மறந்து விட்ட சில காட்சிகளை நீ அழகாக தொகுத்திருக்கின்றாய் அருமை! அந்த (பாடல் காட்சி)
விஸ்வரூபம் பற்றி எழுதினால் ஒரு பதிவு போதாது...!
ஆப்கனில் தீவிரவாதம் புரிபவர்கள் அனைவருமே தலிபான்கள் என்று நினைத்தேன். தலிபான்கள் வேறு, அடிப்படைவாதிகள் வேறா... அப்படி என்றால் ஏன் கமல் ஒசாமாவைப் பார்த்து யார் என்று கேட்கிறார்... குழப்புகிறது...
Deleteதலிபான்களே பல அமைப்புகள் சார்ந்த ஒரு கூட்டமைப்பு, தலிபான்களுக்கு எதிரான சில அமைப்புகள் உள்ளது, நம்ம இந்தியாவில் இருக்கும் ஜாதி கட்சிமாதிரி நிறைய உட்பிரிவுகள் இருக்கின்றன.அதில் ஒரு அமைப்பு விஸ்வரூபத்தில் காட்டப்படுவது.
Deleteசீனு நாங்கல்லாம் பார்க்கணும் னு பர பர னு இருக்கிறப்ப பார்த்ததும் இல்லாம விமர்சனம் எழுதிட்டீங்களா படம் பார்க்கிறேன் விமர்சனம் எழுதறேன் ?
ReplyDeleteபார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வம் தான் சார்...
Deleteநல்லா இருக்கு கமலின் விஸ்பரூபம் உங்களின் பார்வ மீண்டும் பாக்கனும் பல இடங்கள சரியா என்னால புரிஞ்சிக்க முடியல
ReplyDeleteஎன்னால கூட சில இடங்கள சரியா புரிஞ்சிக்க முடியல... அத சாக்க வச்சி இன்னொரு தடவ பாக்கணும்.. :-)
Deleteபடம் செமயா இருந்துச்சு போல. இங்க ரிலீஸ் ஆகியிருக்கும். நம்ம ஊர் பக்கம் இன்னும் சத்தத்தைக் காணோம். வீட்டுல டிவிடி வச்சிட்டும் தியேட்டர்ல பார்க்க வெயிட்டிங். என்ன.. தியேட்டர்ல கொஞ்சம் காட்சிகளை வெட்டியிருப்பாங்க.
ReplyDelete//அரபியும் ஆங்கிலமும் ஆக்கிரமிப்பிதிருப்பதைப் பார்க்கும் பொழுது இதை ஹாலிவுட் படமாகவே எடுத்திருக்கலாம்.//
வட போச்சே?? எனக்கொரு பதிவு மிஸ்ஸாகி போச்சு.. :(
என்னது வட போச்சா... இல்லாட்டா மட்டும் படமே பாக்காத மாதிரி பேச வேண்டியது... :-)
Deleteதடைக் காலத்தின் போது பேசப்பட்ட அதே கதையைத்தான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள் ...
ReplyDeleteதடை நீக்கத்தின் பின்னான மாற்றங்கள் ஏதும் ?
பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பது போல தெரியவில்லை நண்பா... வெட்டப்பட்ட காட்சிகளைப் பார்த்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்
Deleteஎன் நெருங்கிய நண்பர், ஆவரேஜ் தான் என்கிறார்.. நம் அரசியல்வாதிகளும், மதவாதிகளும், ஃபேஸ்புக் மக்களும் பில்ட்-அப் கொடுத்தே படத்தை மிகப்பெரிய வெற்றி ஆக்கியிருக்கிறார்கள் என்கிறார்.. நான் படம் பார்த்தால் தான் தெரியும் என நினைக்கிறேன்.. நல்ல விமர்சனம் :)
ReplyDeleteஎனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நண்பா.. திரைகதை ஓட்டத்துடன் நாமும் ஊட கொஞ்சம் கடினமாக உள்ளது... பார்த்துட்டு சொல்லுங்க
DeleteIT is true. The film has so much of logic errors.
Deleteவிமர்சனம் அருமை.... எளிய நடையில் மிகவும் நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள்... நன்றி...
ReplyDeleteமிக்க நன்றி நண்பா... நீங்களும் சீக்கிரம் பாருங்க
Deleteசூப்பர் தல, இங்க ஏரோ-3D எல்லாம் கிடையாது...நல்லா அனுபவிச்சு பார்த்து இருக்கீங்க.
ReplyDeleteநன்றி தல... ஆனா உங்கள மாதிரி டீடைல்லா லாம் எனக்கு எழுத தெரியாது தல.. :-)
DeleteArticle needs to be corrected. It is AURA 3D (ஆரா 3D)
Deleteஇதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. ஆனா திருத்துவதென்றால் it should be ஓரா 3D.. :-)
Deleteகமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு இந்த படத்தின் கதைகருவின் உச்சம். இதற்காக இசுலாமியர்களின் உணர்வுகளை சோதனை செய்து பார்த்து இருக்கின்றார் என்பதுதான் உண்மை
ReplyDeleteஅமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.
ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன்
‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை
தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம்
அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள்
Excellent review Seenu. Want to see it soon.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletesuperb review....awaiting for VISWAROOBAM PART II INDIA..........
ReplyDeleteநான் வெறும் தியேட்டரில்தான் பார்த்தேன், உங்களது வலைப்பூ படித்தவுடன் ஆரோ 3D சவுண்ட் சிஸ்டத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது ! தொடர வாழ்த்துக்கள்....
ReplyDelete