முன் குறிப்பு : இவ்விடம் முழுமையான விமர்சனம் எழுதப் படுவதில்லை.
ஒவ்வொரு முறையும் படம் பார்க்கப் போவதே படத்தின் கதையை விட மிகப் பெரிய கதையாகி விடுகிறது. அது சரி எந்தப் படத்தில் தான் கதை உள்ளது, என் கதைக்கு வருகிறேன். 8.45 சிறப்பு காட்சி "நான் நந்தா மற்றும் கெளதம்", அடடா இதுவே ஒரு படத்தின் பெயர் போல் உள்ளதே ஆச்சரியக்குறி.
க்ரோம்பேட் வெற்றி. காலை காட்சி முடிந்து அலுவலகம்/கல்லூரி/பள்ளி செல்லலாம் என்று வந்திருந்தவர்கள், காதலன் காதலியுடன் வந்திருந்தவர்கள், தோழர்களுடன் வந்தவர்கள், பைக்/பஸ்/ரயில் என்று எதனதன் மூலமெல்லாம் வரமுடியுமா அதன் மூலமெல்லாம் வந்தவர்கள் அனைவரும் ஆவலுடன் டிக்கெட் வாங்க கவுண்டர் முன் குழுமிஇருந்த நேரம்....
க்ரோம்பேட் வெற்றி. காலை காட்சி முடிந்து அலுவலகம்/கல்லூரி/பள்ளி செல்லலாம் என்று வந்திருந்தவர்கள், காதலன் காதலியுடன் வந்திருந்தவர்கள், தோழர்களுடன் வந்தவர்கள், பைக்/பஸ்/ரயில் என்று எதனதன் மூலமெல்லாம் வரமுடியுமா அதன் மூலமெல்லாம் வந்தவர்கள் அனைவரும் ஆவலுடன் டிக்கெட் வாங்க கவுண்டர் முன் குழுமிஇருந்த நேரம்....
ஒலிபெருக்கியில் "சில வர்த்தக பிரச்சனையின் காரணமாக காலை சிறப்பு காட்சி ரத்து, இன்று படம் வெளியிடப்படுமா என்பது பதினோரு மணிக்கு மேல் அறிவிக்கப்படும்" என்றார்கள். விஸ்வரூபதிற்குப் பின் உடனடியாக கிடைத்தமற்றொரு பல்ப்.
//அலுவலகம்/கல்லூரி/பள்ளி செல்லலாம் என்று வந்திருந்தவர்கள்// என்று மேற்சொன்ன எந்த வகையறாக்குள்ளும் நாங்கள் வராததால் பதினோருமணி வரை அரங்கிலேயே காத்திருப்பது என்று முடிவானது. இடையில் பொங்கல் வடை, காபி, கரும்பு ஜூஸ் என்று பொழுதும் கழிந்தது.மதியம் 12 மணிக்கு கடல் பார்க்கப் போவது உறுதியானது. ஸ்தோத்திரம்.
வெற்றி பெரிய திரையரங்கு. ஏமாளிகளுக்கு எல்லாம் முன் வரிசையில் அடைக்கலம் கொடுத்திருந்தார்கள். சற்றே புத்திசாலி என்பதால் எனக்கு வேண்டிய வரிசையைக் கேட்டுப் பெற்றிருந்தேன். அரங்கம் பாதியளவு கூட நிறையவில்லை, அதனால் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து படத்தை ரசிக்கலாம் என்ற சுதந்திரம் அளித்த்தார்கள். இந்நேரத்தில் வெற்றி திரையரங்கைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். திரை அரங்கில் சீட்டானது கல்யாண மண்டபத்தில் அடுக்கப்பட்டிருப்பது போல் சம தளத்தில் மிக நேர்த்தியாக விரிக்கப்பட்டிருந்தது! நல்லவேளை கூட்டம் மிக குறைவு என்பதால் எவனிடமும் "அண்ணே கொஞ்சம் குனிங்கன்னே, தல மறைக்குது" என்று புலம்பியிருக்கவில்லை. 'இனிமே இந்த தியேட்டருக்கு போக கூடாது டா சீனு'.
கடல் - "ஒண்ணா அல மேல"
படத்திற்கு வசனம் ஜெயமோகனும் மணிரத்தினமும். ஜெமோ அநியாயத்திற்கு சுஜாதாவை விமர்சிப்பதால் எனக்கு அவர்மேல் ஈர்ப்பு இல்லை. அவர் எழுத்துக்களை இன்னும் படித்தது இல்லை. சொல்லப்போனால் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததில்லை.
"உங்கள் நுரையீரல் பஞ்சு போன்று மென்மையானது, அதனால் புகைபிடிப்பதை நிறுத்துங்கள்", எப்பா டேய் தயவு செஞ்சு புகைபிடிப்பதை நிறுத்துங்கப்பா, இந்த வீடியோவ பாக்க சகிக்கல.
பாதிரியார் பயிற்சிப் பள்ளியில் பாஸ்டராக இருக்கும் அர்ஜுன் மற்றும் அரவிந்த் சாமி என்று திரை விரிகிறது. தியேட்டர் சவுண்ட் சிஸ்டம் சரி இல்லை என்பதால் பல வசனங்கள் கேட்டகவில்லை. நான் சாத்தான் சாத்தான் என்று சொல்லும் அர்ஜுன், கிறிஸ்த்துவ மதத்தின் அடிப்படைவாதத்தை நையாண்டி செய்யும் வசனங்கள் போன்றவை மற்றுமொரு போராட்டத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். இவற்றை ஜெயமோகனின் இந்துத்துவா என்று கண்டனம் செய்வார்கள் என்று நான் நிச்சயம் அவதானிக்கிறேன். பாஸ்டர் அர்ஜுன் கள்ளத்தனமாக ஒரு பெண்ணுடன் உறவு கொள்வதை அரவிந்த்சாமி கண்டுபிடிக்க முழுமையான சாத்தானாக மாறுகிறார் அர்ஜுன்.
ஹீரோவின் அம்மா ஒரு விலைமாது. ஹீரோவை அனாதையாக்கி இறந்துவிட கடல் ஆரம்பமாகிறது. ஆதரவற்ற ஹீரோவின் வாழ்கையை எதுவும் அறியா பருவம், அறியத் தொடங்கும் பருவம், எல்லாம் அறிந்த பருவம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். எதுவும் அறியா பருவம் நிச்சயம் அது ஒரு கவிதை. காட்சி விவரிப்புகள் படு நேர்த்தியாக இருக்கிறது. அந்தக் குழந்தையின் உணர்வுகள் நம்முள் அப்படியே.
எதுவும் அறியாவில் இருந்து அறியத் தொடங்கும் பருவத்திற்கு "மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி" என்ற பின்னணி அதிர ஹீரோவும் வளரத் தொடங்குகிறான். இதற்க்கு மேல் கதை என்று ஒரு ஜீவன் இருந்தால் அதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
ஹீரோ எல்லாராலும் வெறுக்கப்படும் காட்சிகள் வேகவேகமாக கதை சொல்கின்றன. என்னென்ன கெட்டப்பழக்கம் உண்டோ அத்தனைக்கும் ஆளாகிறான். தனக்கான உணவுக்காக மற்றவர்களை மிரட்டத் தொடங்குபவன் ரவுடியாக மாறுகிறான்.
கடற்கரையோர கிறிஸ்துவ கிராமத்தை அப்படியே செல்லுலாய்டுக்குள் சிறை பிடித்துள்ளார் மணி சார். அவர்களது வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் என்று அவற்றை கொண்டுவர அதிகமாக உழைத்துள்ளார். இங்கே வசனங்களுக்கு ஜெமோவின் உதவியும் அவருக்கு அவசியம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் கடற்கரையோர கிறிஸ்துவர்கள் மேல் மற்ற பகுதி கிறிஸ்துவர்களுக்கு எதிர்மறையான பிம்பம் வரவும் வாய்ப்புள்ளது. பாதிரியார் சம்மந்தமான காட்சிகளைப் பாருங்கள் புரியும்.
ஹீரோவை பாதிரியார் உட்பட அனைவருமே தொம்ம என்கிறார்கள், அப்படி என்றால் என்ன?
ஒரு சில காட்சிகளுக்கு பேருந்து நிலையம், ஒரு சில காட்சிகளுக்கு மருத்துவமனை, ஒரு சில காட்சிகளுக்கு ஜாமீன் பங்களா, ஒரு சில காட்சிகளுக்கு ஏரி என்பதைத் தவிர்த்து மொத்த படமும் , கடற்கரை, கடற்கரை கிராமம், கடல், கடற்கரையோர பாழடைந்த வாஸ்கோடகாமா காலத்து சர்ச் என்று சுற்றி வருகிறது. ஒட்டு மொத்த படத்தையும் பாடல்களையும் ஒரு கிராமத்திற்குள் எடுத்து முடிக்க நிச்சயம் மணி ரத்தினத்தால் மட்டுமே முடியும்.
ஒவ்வொரு பாடல் தொடங்கும் போதும் அரங்கம் ரசிகர்களால் அதிர்கிறது. சில பாடல்கள் வழக்கம் போல் காட்சிகளுக்குப் பின் தொடங்கி, நகர்ந்து, மெல்ல மெல்ல அடங்கி வந்த சுவடே தெரியாமல் மறைகிறது. மனநோயை வைத்துப் படம் எடுப்பது பேஷன் ஆகிவிட்ட காரணத்தால் ஹீரோயினுக்கு மன நோயையை கொடுத்து உலவிட்டுள்ளர்கள்.முதலில் அது தெரியவில்லை. ஆனால் சில வசனங்கள் அதை ஊர்ஜிதப் படுத்தும்.ஹீரோயினுக்கு பதின்ம வயது என்றால் நம்ப மறுக்கிறான் இந்த நந்த கோபால். "அதுக்காக பிறப்புச் சான்றிதழையா காட்ட முடியும்".
கார்த்திக் ராதா இருவரின் முதல் படம் அலைகள் ஓய்வதில்லை (கடல்)
கார்த்திக் ராதா இருவரின் குழந்தைகளின் முதல் படம் கடல்.
நடிப்பில் யாரையும் குறை சொல்ல முடியவில்லை. ஒளிபதிவு நம்மை அந்தந்த இடங்குகளுக்கே கூட்டிச் செல்கிறது, அந்த இடங்களில் இருப்பது போன்ற உணர்வையும் தருகிறது.
முடிவில்லா ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சிக்கு தாவி எப்படி எப்படியெல்லாமொ பயணிக்கிறது கடலின் திரைக்கதை. சில வசனங்கள் அற்புதம். சுஜதாவின் இழப்பு கடலில் ஜெமோவின் வசனத்தில் தெரிகிறது. கடற்கரையோர வாழ்க்கை வாழ்பவர் என்பதால் வசனத்திற்கு ஜெமோ நல்ல தேர்வு தான்.
"நன்மை என் உடம்புல கொஞ்சம் ஒட்டி இருந்தாலும் அத வெட்டி எரிஞ்சிருவன் டே"
" திரும்பி வர முடியாத ரொம்ப தூரத்துக்கு போயிட்டேன்"
" இந்த தேவதூதனுக்குக் கிடச்ச தேவத இவ தானோ"
வசனங்களில் பிழை இருக்கலாம்!
இசை, ஒளிபதிவு, சி.ஜி, கலை, ஒப்பனை, கதாபாத்திரங்கள் என்று தன்னுடைய குழுவில் இருக்கும் எல்லாரையும் வேலை வாங்கிவிட்டு கேப்டன் ஆப் ஷிப் என்னும் தன்னுடைய கேப்டன் வேலையில் மட்டும் மணி சார் சிறிது கோட்டை விட்டுவிட்டாரோ என்றுஎண்ணத் தோன்றுகிறது.
என்னைக் கேட்டால் மேக்கிங் ஆப் தி பிலிம் இஸ் நைஸ் பட் ஸ்டோரி அண்ட் ஸ்க்ரீன் ப்ளே ஆப் தி பிலிம் இஸ் நாட் நைஸ்...
இருந்தும் கடல் எனக்கு பிடிச்சிருக்கு உங்களுக்குப் பிடிக்குமான்னு தெரியல.... ஸ்தோத்திரம்.
Tweet |
//எல்லாரையும் வேலை வாங்கிவிட்டு கேப்டன் ஆப் ஷிப் என்னும் தன்னுடைய கேப்டன் வேலையில் மட்டும் மணி சார் சிறிது கோட்டை விட்டுவிட்டாரோ// அவருடைய பல படங்களுக்கும் இது பொருந்தும்.. காட்சிகளில் அழுத்தமே இருக்காது, ஆனால் அந்த காட்சியை ஒட்டி வரும் பாடலில் பாத்திரம் உயிரை கொடுத்து நடிக்கும், கேமரா மிரட்டியிருக்கும், இசையும் பாடலும் உயிரை குடையும்.. எங்கோ கேள்விப்பட்டது இது, “ராவணன் படத்தில் விக்ரம் சுடப்பட்டு கீழே விழும் காட்சியில் ஒருவன் கைதட்டிக்கொண்டே சொன்னானாம், ‘மச்சான் செம லொகேஷன்ல?’ என்று”.. மணியின் படங்களில் இது போன்ற காட்சிக்கு தேவை இல்லாத, காட்சியை மிஞ்சக்கூடிய மிசயங்கள் நிறைய இருக்கும்.. என்னை கேட்டால், நாம் புகழும் அளவுக்கு மணிக்கு திறமை இருக்கிறதா என தெரியவில்லை
ReplyDeleteஅ. சாமிக்காக பார்க்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்...
ReplyDeleteகடைசியில் ஒரு நிமிடத்தில் படத்தை புரிந்து கொண்டேன் .-ஸ்தோத்திரம்
ReplyDeleteஉங்கள் விமர்சனம் படிக்கும்போது இந்தப்படம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று தோன்றவில்லை... இருந்தாலும் மணிரத்னம் படம் என்பதால் கண்டிப்பாகப் பார்ப்பேன்...
ReplyDeleteநீர் எதுக்கய்யா இந்த அலப்பரை கூட்டுர...படம் பாக்கலாமா வேண்டாமா அதை சொல்லும்...
ReplyDeleteமேக்கிங் மட்டும் பத்தாதே நண்பா! :)
ReplyDelete//ஒட்டு மொத்த படத்தையும் பாடல்களையும் ஒரு கிராமத்திற்குள் எடுத்து முடிக்க நிச்சயம் மணி ரத்தினத்தால் மட்டுமே முடியும். //
ReplyDeleteநீங்க வேற.. காமெடி பண்ணிக்கிட்டு.. பிட்சா.. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்னு எல்லாரும் எங்கயோ போயிட்டிருக்காங்க.. இவர் இன்னும் கிராமம்.. சர்ச்..பாதர்..னு கடலோர கவிதைகள் காலத்துல ஒக்காந்துட்டிருக்காரு ..
சபாஷ் பந்து! நன்றாகச் சொன்னீர்கள்! படத்தைப் பற்றிய உன் கருத்துக்களை விட, படம் பாக்க நீங்க காத்திருந்ததையும், தியேட்டர் பத்தின உன் ட்ரெய்லரையும் ரொம்ப ரசிச்சேன் சீனு. விமர்சனத்தை விட விமர்சனத்தோடமேக்கிங் சூப்பர்!
ReplyDeleteகாமெரா கொஞ்சம் நல்லாயிருந்துச்சு.. :)
ReplyDeleteவிமர்சனம் வழக்கம் போல அருமையா இருக்கு சீனு...படம் பற்றி வந்த மற்ற விமர்சனங்கள் எல்லாமே படத்திற்கு எதிராக உள்ளது.இருந்தாலும் 'மணிரத்னம்' என்ற ஒற்றை மந்திரத்திற்காக ஒரு முறை பார்க்கலாம் என்றிருக்கிறேன்.
ReplyDeleteசீனு... நீங்க விமர்சனம் சொல்ற விதம் ஒரு கதை சொல்ற மாதிரியே இருக்கு.
ReplyDeleteநன்றி...படத்தை நாளை பார்க்கிறேன்...
ReplyDeleteபாத்துட்டீங்கல்ல!சந்தோசமா இருங்க!
ReplyDeleteநான் பார்க்க நினைத்திருந்தேன். மோகன்குமார் வேற நல்லா இல்லைன்னு விமர்சனம் எழுதி இருக்கார்.... இன்னும் சிலரும் இதையே சொல்லி இருக்காங்க! அதனால 150/- மிச்சம்னு விட்டுட்டேன் :) இப்பத்திக்கு....
ReplyDeleteநண்பர் அழைத்தால் சென்றாலும் செல்லலாம்!
அரவிந்த் சாமி, ஒளிப்பதிவு மற்றும் இசையை தவிர ஒண்ணும் உருப்படியா இல்ல..
ReplyDeleteTimes of India விமர்சனம், படம் ஒரு முறை கூட பார்க்கும்படி இல்லை என்று உள்ளது.
ReplyDeletehttp://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOIBG/2013/02/03&PageLabel=8&ForceGif=true&EntityId=Ar00800&ViewMode=HTML
//தியேட்டர் சவுண்ட் சிஸ்டம் சரி இல்லை என்பதால் பல வசனங்கள் கேட்டகவில்லை.//
ReplyDeleteதப்பு..மணிரத்னம் படத்துல பாதி வசனம் அப்படித்தான்!
தொம்ம என்றால் மண்டு என்று அர்த்தம் என்று நினைக்கிறேன்!
உங்கள் எழுத்து நடை மிக நன்றாக உள்ளது , நீங்களும் கதாசிரியர் ஆகா முயற்சிக்கலாமே
ReplyDeleteதொம என்பது தாமசின் தமிழ். (ஸ்ரீராம் - நீங்கள் தோமையர் மலைக்கு அருகில் வசிக்கிறீர்கள்.. ஹ்ம்ம்ம்)
ReplyDeleteஎத்தனையோ வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த தமிழ்ப்படம். மணிரத்னத்தையும் ஜெயமோகனையும் தலைகீழாக அர்ஜூன் போலத் தொங்கவிடத் தோன்றியது. what a waste!
அது தொம... இது தொம்ம... தஞ்சாவூர்ப் பக்கங்களில் நான் சொன்ன மாதிரிப் பிரயோகங்கள் உண்டு துரை! அது சரி, முடி சூடிய உங்கள் பு.ப ஒன்று எனக்கு அனுப்புங்களேன்!
Deleteஹா ஹா ஹா... அங்கங்கு தெரியும் குறும்பான நகைச்சுவையுடன் பதிவை படித்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை, நல்ல பதிவு..... டேவிட் பட விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteசற்றே புத்திசாலி என்பதால் எனக்கு வேண்டிய வரிசையைக் கேட்டுப் பெற்றிருந்தேன்.
ReplyDelete//என்னைக் கேட்டால் மேக்கிங் ஆப் தி பிலிம் இஸ் நைஸ் பட் ஸ்டோரி அண்ட் ஸ்க்ரீன் ப்ளே ஆப் தி பிலிம் இஸ் நாட் நைஸ்...//
nice ...))..