வழக்கமாக ஜெயம் ரவி படங்களைப் பார்ப்பதே அரிது, அதிலும் அரங்கில் சென்று பார்ப்பது என்பது மிக அரிது. இருந்தும் அமீர் என்னும் மாயபிம்பம் விரித்த மாய வலையில் மாயமாய் சிக்கிக் கொண்டேன் என்று நினைக்கும் பொழுது அவ்வ்வ்வ்வ்வ்....
பாங்காங்கில் பிழைபிற்காக நுழைகிறது நாயகன் குடும்பம். தன்னை ஏமாற்றிய உலகத்தை, ஏமாந்த பொழுது தன்னுடன் நிற்காத உலகத்தை , பணத்தால் வெல்ல வேண்டும் என்று துடிக்கும் நாயகன். அவனை சுற்றி நடக்க ஆரம்பிக்கும் விஷயங்கள் என்று திரைக்கதை பயணிக்கத் தொடங்குகிறது.
படம் ஆந்திரா, தாய்லாந்து(பாங்காங்), மும்பை, கோவா என்று பல திருபங்களுடன் நம்மை திருப்பு திருப்பு என்று திருப்புகிறது. தலை சுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் இந்தப் படத்தை தவிர்க்கவும். அல்லது மருத்துவ ஆலோசனைக்குப் பின் படம் பார்க்கவும். காரணம் படத்தில் அவ்வளவு திருப்பங்கள் உள்ளது.
நண்பன் மணிகுமரனுடன் படம் பார்க்க சென்றிருந்தேன். குறும்படத்துறையில் எடிட்டராக உள்ளான். "எடிட்டிங் சரியில்ல, ஒளிபதிவு சரியில்ல" என்று ஒவ்வொரு குறையாக சொல்லிக் கொண்டே வந்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக தொங்கிக் கொண்டிருந்த காட்சிகளை அப்படியே விட்டுவிடுவது தானே புது டெக்னிக் இது கூட புரியாமல் இருக்கிறான்.
பாங்காங்கில் விபச்சாரம் அதிகம் என்று கேள்விபட்டுள்ளேன், இந்தப் படத்தில் அதை மிக தத்ரூபமாக காட்டியுள்ளர்கள். பார் கேர்ளாக இருக்கும் நமது கதாநாயகியை வைத்து விபச்சாரம் செய்ய முற்படுகிறான் வில்லன் போல் வந்து செல்லும் ஒரு வில்லன். தன் அனுமதி இல்லாமல் தன்னை கற்பழிக்கப் பார்ப்பவனிடம் இருந்து தப்பிச் செல்கிறாள் நம் கதாநாயகி. அவளை வில்லனின் அடியாட்கள் துரத்துகிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமது கதாநாயகன் ஆதி அவர்களை அடித்து துவைத்து துவம்சம் பண்ணவில்லை, இங்கே தான் இருக்கிறது ட்விஸ்ட். அவள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று விட்டுவிடுகிறான்.
சிறிது நேரம் கழித்து நட்ட நடு இரவில் நாயகன் தனியாக காரில் பயணிக்கிறான். அப்போது நடு வழியில் நின்று கொண்டிருக்கும் ஒரு கார் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருக்கிறது. அது ஆடும் ஆட்டத்தைப் பார்த்து இரட்டை அர்த்தத்தில் புரிந்து கொண்டால் "சீ நீங்க ரொம்ப மோசம் பாஸ்". இந்த இடத்தில் தான் இயக்குனர் அமீர் மிக முக்கியமான திருப்பம் வைத்துள்ளார்.
கதாநாயகியை உள்ளே கட்டிபோட்டு விட்டு கடத்தி வந்த தடிமாடுகள் காற்று வாங்கப் போய்விட தப்பிக்கும் வழிதேடி வண்டியை உள்ளிருந்து உதைத்துக் கொண்டிருப்பார் நாயகி. அவர் உதைக்கும் உதையில் வண்டி முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருக்கும், உடனே யாருக்கோ ஆபத்து, 'யாருக்கோ என்ன யாருக்கோ', நாயகிக்கு ஆபத்து என்று புரிந்து புஜபல பராகிரங்களுடன் கிளம்பி விடுவார். இந்த இடத்தில ஒரு சண்டைக் காட்சி, சண்டைக் காட்சியை இருளில் புதுமையான கோணத்தில் அமைதுள்ளார்கள். ஹீரோ அடியாள் என்று எவ்விதமான பேதமும் இல்லாமல் அனைவருக்கும் இருளுக்கு ஏற்ற பளபளப்பான கருப்பு ஆடைகள் கொடுத்து யார் யாருடன் சண்டையிடுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்கா வண்ணம் வெகு சாமர்த்தியமாய் அமைதிருப்பார்கள். கண்டுபிடிப்பவர்களுக்கு லட்ச ருபாய் பரிசு கொடுக்கலாம். பல அற்புதமான கேமராக் கோணங்களை உள்ளடக்கி அறிவுக்கு வேலை தரும் விதமாக அமைந்திருகிறது இந்த சண்டைக் காட்சி.
படம் முழுவதும் நாயகன் குடிக்கிறார், நாயகி ஊதுகிறார், தமிழ் கலாசாரக் காவலர்கள் என்று தன்னை முன்னிறுத்துவது வெறும் சொல்லளவில் மட்டும் தானோ என்னவோ. இதில் ஒரு மிகப் பெரிய காமெடி, சிகரெட்டின் ப்ரண்ட் நேம் வரும் பொழுது அதை ப்ளர் ஆக்குபவர்கள் அந்த சிகரெட்டையும் ப்ளர் ஆக்க வேண்டியது தானே.
இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திலும் வந்திராத வசனங்கள், அதற்காவே இந்தப் படத்தை இன்னுமொரு முறை மறுபடியும் பார்க்கலாம்.
1. எவ்ளோ வேகமா ஓடுரோம்ன்றது முக்கியம் இல்ல, யாரு வேகமா ஓடுராங்கன்றது தான் முக்கியம்.
2. எனக்கு வாழ்கையில எதுவுமே முக்கியம் இல்ல, பணம் தான் முக்கியம்.
3. ஒன்னு இந்த இடத்துல அந்த பகவான் புணமாகனும், இல்ல இந்த ஆதி புணமாகனும்
(வசனங்களில் பிழை இருக்கலாம்)
வாரேவா இது போன்ற பல வசனங்களை படம் நெடுகிலும் அள்ளித் தெளித்திருக்கிறார். வசன உழைப்பில் புது முயற்சி. அதை விட புது யுக்தி வசன உச்சரிப்பில் வெளிபடுகிறது. மதிய உணவு இடைவேளைக்குப் பின் "ஐன்ஸ்டீனின் இயற்பியல் கோட்பாடுகளை" அறிவியல் வாத்தியார் விளக்கும் பொழுது எவ்வளவு இதமாக இருக்கும். அதே போல் தான் ஒவ்வொருவரும் வசனம் பேசுகிறார்கள்.
அதிலும் ஜெயம் ரவியின் வசன உச்சரிப்பு மார்வலஸ். நாம் இயற்பியல் கோட்பாடுகளில் லயித்து இருக்கும் நேரம், அந்த வாத்தியார் "வெளியே போடா நாயே" என்று கத்தினால் கூட தேன் பாய்வது போன்று இருக்குமே அதேபோல இயல்பாக கோவப்படுகிறார்கள் நமது கதாபாத்திரங்கள். "ஒன்னு இந்த இடத்துல அந்த பகவான் புணமாகனும், இல்ல இந்த ஆதி புணமாகனும்" என்று ஜெயம் ரவி கத்திக் கதறும் பொழுது ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று அருகில் இருந்தவன் அந்த வசனத்திற்கு தாளம் சேர்த்துக் கொண்டிருந்தான். குட் காம்பினேசன்.
நாயகிக்கு வசன உச்சரிப்பு சுத்தமாக வரவில்லை, உதட்டசைவு என்பது பெயரளவில் கூட இல்லை. அநியாயத்திற்கு தமிழ் உச்சரிப்பை கொல்லு கொல்லு என்று கொலையாய்க் கொல்கிறார். இடைவேளைக்குப் பின் படம் மும்பையில் பயணிக்கத் தொடங்குவதால், ரசிகர்கள் நலன் கருதி ஹிந்தி உதட்டசைவுகளுக்கு தமிழ் டப்பிங் இருக்கும் என்று மைக்ரோ எழுத்தில் போடுகிறார்கள். மிஸ்டர் அமீர் சார் படம் மொத்தமுமே அப்படித்தானே உள்ளது, இதை ஆரம்பத்திலேயே போட்டிருக்கலாம். டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வு தான் ஆதிபகவன் முழுவதும்.
பாடல்கள் ஹா ஹா ஹா ஹாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இருந்தும் தமிழ்த் திரைப்படப் பாடல்களைப் பற்றி குறிபிட்டே ஆகவேண்டும். ஹாலிவுட் சினிமாக்களில் என்னதான் லாஜிக் மிஸ்டேக் வைத்திருந்தாலும் பாடல்கள் இல்லாமல் இருப்பதால் விறுவிறுப்பு குறையாமல் அல்லது குறைக்காமல் திரைக்கதையை நகர்த்திச் செல்வார்கள். இந்த விசயத்தில் நம் இயக்குனர்கள் பெரிதும் கோட்டை விட்டுவிடுகிறார்கள். படத்தில் பாடல் வரும்போதெல்லாம் நானும் மணிகுமரனும் லாஜிக் ஓட்டைகளைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தோம். இதை நாளைய இயக்குனர்கள் கவனத்தில் கொண்டால் அட்லீஸ்ட் அந்த ஒரு ஓட்டையையாவது அடைக்க முயற்சி செய்யலாம்.
இரண்டாவது பாதியில் வரும் திருப்பம் மட்டும் கொஞ்சம் வொர்த். அது தான் பகவான். படத்தில் ஜெயம் ரவி டபுள் ஆக்ட் என்பது காட்சிப்படுத்தப்பட்ட இடம் அல்லது காட்சிக்குள் கொண்டுவந்த இடம் சூப்பர். இருந்தும் ஒருவரின் பின்புலமும் சொல்லப்படாதது கொஞ்சம் உறுத்துகிறது. ஆதி, பகவான், ராணி, என்ற வலுவான கதாபாத்திரங்களுக்கு வலுயேற்ற மறந்துவிட்டார் நமது இயக்குனர். படத்தில் ஹீரோ என்று யாருமே கிடையாது. வரும் அனைவருமே வில்லன்கள் தான். அதனால் தானோ என்னவோ பலரும் நட்டாற்றில் கழற்றி விடப்பட்டு விட்டார்கள்.
தனது தங்கை முறையற்ற ஒருவனை காதலிக்கும் பொழுது அவளது கண்ணெதிரே அவனைக் கொன்றுபோடும் இடத்தில ஜெயம் ரவியின் நடிப்பு சபாஷ். சில இடங்களில் வசனமும், சில சில காட்சிகளும் சபாஷ். "நீ எல்லாம் என்னடா பெரிய கிரிமினல், உன்னோட பிரண்டு கூட என்ன மோப்பம் புடிச்சிட்டான், ஆனா உன்னால முடியல" என்று நாயகி சொல்லும் இடம் சூப்பர். கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி சூப்பர். 'ஒருவேள தனித்தனி காட்சிகளாக பார்த்தால் வேணா புடிக்குமோ என்னவோ'.
ஆந்திரவாலாக்கள், ஜெயம் ரவியின் முதல் பார்ட்னர், மத்திய மந்திரி, என்ற பல வில்லன்களையும் பக்குவமாய்காட்டி பின் அவர்களை உப்புகுச்சப்பாணி ஆக்கிவிட்டு பகவான் என்னும் வில்லனுக்கு அபிநயம் கூட்டி நல்ல சுருதி சேர்த்துள்ளார். அரவாணியாக வரும் பகவான் சிறப்பாக செய்ய முயன்றுள்ளார், காரணம் அவர் எதாவது ஒரு அபிநயம் பிடிக்கும் போதெல்லாம் வரலாறு அஜீத் கண்முன் வந்து செல்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. மேலும் ஆதியாக வரும் ஜெயம் ரவியின் மீசையை பார்க்கும் பொழுது தடையறத் தாக்க அருண் விஜயின் நியாபகம் வந்துத் தொலைகிறது.
படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று பார்த்தால் காட்சிக்கு காட்சி இருக்கிறது. அனுபவமுள்ள இயக்குனருக்கு இதுவா அழகு. அதிலும் சூர்யா ஜீவா கார்த்தி என்று மூவருக்கும் சிறப்பான அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த இயக்குனாரால் ஜெயம் ரவிக்கு பெற்றுத் தர இயலாமல் போனது யார் போட்ட திருஷ்டி என்று தெரியவில்லை. காரணம் நல்ல கதைகளம் இருந்தும் பல பல இடங்களில் பயணிக்கும் திரைக்கதை கடைசிவரை கதையுடனும் நம்முடனும் ஒட்ட மறுக்கிறது.
போரட்டகாரர்களுக்கு சில டிப்ஸ்
1. ஆதிபகவன் - சில இந்து இயக்கங்கள் ஆரம்பித்து வைத்து விட்டன
2. போலி பாஸ்போர்ட் தயாரிப்பவன் ஒரு கிறிஸ்டியன்
3. போலி சி.பி.ஐ ஆபீசர் ஒரு முஸ்லிம்
4. பாங்காங் மக்கள் பௌத்தர்கள்
5. பகவான் ஒரு அரவாணி
யாராவது எதாவது செய்து படத்தை ஓட வைத்துவிடுங்கள். அல்லது உங்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவு செய்து படத்தை திரையரங்கில் பாருங்கள், இல்லை இல்லை, நீங்கள் பார்த்தே ஆக வேண்டும்.
ஆதிபகவன் - கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். காரணம் யான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற்றே ஆக வேண்டும்.
பின்குறிப்பு : லேபிளில் சிரிப்பு என்று போட்டிருப்பதைப் பார்த்த பின்பும் நீங்கள் சிரிக்காவிட்டால் என் வலைபூ மீது கல்லெறியாதீர்கள், உடைவது உங்கள் மானிட்டராகத் தான் இருக்கும் :-)
விளம்பரம்
ஜோதிஜி எழுதிய டாலர் நகரம் புத்தகம் வாங்க நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும் அல்லது 9940229934 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
Tweet |
நன்றாக விமர்சித்துள்ளீர்கள் சீனு... (சில எழுத்துப் பிழைகளையும் கவனித்து இருக்கலாம்... MV-BG அவர்களை சந்திப்பதில்லையா...?)
ReplyDeleteடிப்ஸ் வேண்டுபவர்கள் வருவார்கள் என்று நினைக்கிறேன்...
மிக்க நன்றி டிடி சார், நேற்று தான் மி.வ வை சந்தித்தேன்... வாத்தியார் ஆயிற்றே சந்தித்த வேளையில் புது அசைன்மெண்ட் கொடுத்து விட்டார்.... ஹா ஹா ஹா
Deleteவிஞ்ஞானம் மேல் உங்களுக்கு என்ன அப்படி ஒரு வெறி? படம் அவ்வளவு மொக்கையாவா இருக்கு? என்னமோ உலகம் சுற்றும் வாலிபன் அளவுக்கு பில்ட் அப் குடுத்து பேசிருந்தாரு அந்த டைரக்டரு? டைரக்டர்களும் கேர்ள் ஃப்ரென்ட்ஸ் மாதிரி தான் போல, நம்பவே முடியல...
ReplyDelete// டைரக்டர்களும் கேர்ள் ஃப்ரென்ட்ஸ் மாதிரி தான் போல, நம்பவே முடியல...//என்னய்யா நேத்தும் சண்டையா. ஆதிபகவன் படத்துக்கு கூட்டிட்டுப் போங்க காதல் ரத்து தேவைப் படாது.
Delete//என்னய்யா நேத்தும் சண்டையா// நான் குடைக்குள் மழை பார்த்திபன் மாதிரி.. ஒன்லி கற்பனை.. நோ ரியாலிட்டி
Deleteஒண்ணுமில்ல ப்ரொட்யூசர் காசுல பட்டாயாவுக்கு போய் சமாச்சாரம் பார்க்கனும்ன்னு ஆசை... அதான் முனுக்குன்னா இப்பலாம் தாய்லாந்துக்கு கிளம்பிடுறாங்க...
ReplyDeleteஅவரு பார்த்த சமாச்சரத்த தக்குனூன்டு காட்டி இருப்பாரு... அப்போ எல்லாருமே பாரின் போறது இதுக்கு தானா #ஒரு டவுட்டு...
Deleteதன் அனுமதி இல்லாமல் தன்னை கற்பழிக்கப் பார்ப்பவனிடம் இருந்து தப்பிச் செல்கிறாள் நம் கதாநாயகி. -அனுமதியோட நடந்தா அது உங்க ஊர்ல கற்பழிப்பா சீனு? ஹி... ஹி... படத்துல ஒண்ணு ரெண்டு குறைகள் இருந்தா சுட்டிக் காட்டலாம்னு நெனச்சு பெருந்தன்மையா படத்தைப் பாராட்டி(?) எழுதியிருக்கீங்க. நிச்சயம் நீங்க பெற்ற ‘இன்பத்தை’ நான் பெற மாட்டேன்ப்பா.!
ReplyDeleteஎன்ன விட யாரும் இந்த படத்த அதிகமா பாராட்டி எழுதிற கூடாதுன்னு தான் உப்பு காரம் புளி எல்லாம் கொஞ்சம் தூக்கலா போட்டு பதிவு எழுதி இருக்கேன்... இந்தப் பதிவ படிச்சா அவங்க கண்டிப்பா தியேட்டருக்கு போகணும்... # என்ன ஒரு நல்ல எண்ணம் எனக்கு....
Deleteஎங்க படம் நல்லா இருக்குன்னு சொல்லிடுவீங்களோன்னு நினைச்சேன்! ஒரு விஷயத்துக்காக நான் அமீரை பாராட்டறேன், பட்டாயா, மும்பை, பார், பகவானின் காமப் பார்வை இப்படி பல இடங்களில் ஆபாசத்தை புகுத்த வாய்ப்பிருந்தும் டீசண்டாக சொல்லி இருக்கும் அணுகுமுறைக்காக.. (அதுக்காக ஐட்டம் சாங்கில் கூட கழுத்திலிருந்து கால் வரை ஆடை போட்டு ஆட விட்டிருப்பது கொஞ்சம் ஓவர்..
ReplyDelete//அதுக்காக ஐட்டம் சாங்கில் கூட கழுத்திலிருந்து கால் வரை ஆடை போட்டு ஆட விட்டிருப்பது கொஞ்சம் ஓவர்..// எல்லதையையும் சொல்லிட்டு லாஸ்ட் லைன்ல வச்சீங்க பாத்தீங்களா ஒரு பஞ்ச்.... நாம் எல்லாம் ஒரே இனம்....
Deleteஆபாசம் குறைவு ஆனால் வன்முறை அதிகம்....
விரிவான அலசல்... கண்டிப்பாக நான் இந்தப்படத்தைப் பார்க்கமாட்டேன்... உங்க போன் நம்பர் என்ன?
ReplyDelete// கண்டிப்பாக நான் இந்தப்படத்தைப் பார்க்கமாட்டேன்...// இப்படி சொல்லி என்ன ஏமாற்றக் கூடாது நண்பா... 9940229934 என் எண்... கூப்டு திட்டனும்னா திட்டுங்க.. மறுக்க ஒரு தடவ படத்துக்கு கூட்டிட்டு போயிராதீங்க...
Deleteவிமர்சன நடை நல்லா இருக்கு சீனு.
ReplyDeleteமிக்க நன்றி முரளி சார்... நேற்று தியேட்டர் சொல்லும் பொழுது உங்க ஏரியா மடிப்பாக்கம் கடந்து தான் சென்றேன்
Deleteபருத்தி வீரனுக்குப் பிறகு அமீர் இயக்கிய படம் என்று நினைக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பின் இவ்வளவு சொதப்பலா..? விமர்சனம் நன்றாக இருக்கிறது சீனு
ReplyDeleteஇதோ.... இதோ கிளம்பி விட்டேன் படம் பார்க்க... ஆமாம் எந்தத் தியேட்டரில் பார்க்கலாம்?
ReplyDeleteசீனு உங்களுக்கு கோடி புண்ணியம், உங்களை மாதிரி ஆட்கள் இருப்பதால் தான் இன்னும் நம் நாட்டில் மழை பெய்துகொண்டிருக்கிறது, எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து எங்களை காப்பாத்திட்டீங்க.
ReplyDeleteதப்பிவிடுவோம் :) நன்றி.
ReplyDelete//நீங்கள் பார்த்தே ஆக வேண்டும். //
ReplyDeleteஏன் இந்தக் கொலவெறி சீனு?!
சகோ. நீங்கள் எழுதியதிலேயே முழு நீள நகைச்சுவைப் பதிவு இது, ஆனால் மிக கருத்தன விஷயம் சொல்வது போலே சொல்கிறீர்களே, உங்கள் எழுத்து திறன் நாளுக்கு நல வளர்கிறது ,
ReplyDeleteசெம சீனு! ஆனா இந்தப் படத்துல எல்லாமே மொக்க சீனு! (Scene) :)
ReplyDeleteஇந்த விமர்சனத்தை மொதல்லையே பார்த்து தொலைச்சிருந்தா படத்தை பாக்காமலாவது இருந்திருக்கலாம்! அமீர் ஏமாத்திட்டார்!
fair review..thnks
ReplyDeleteஇது ஸ்கார்பேஸ் படம் ரீமேக் தம்பி.. சொதப்பிட்டாய்ங்க..
ReplyDeleteஇது ஸ்கார்பேஸ் படம் ரீமேக் தம்பி.. சொதப்பிட்டாய்ங்க..
ReplyDelete