14 Oct 2015

ஐடி வேலை @ மெண்டல் கேர்

நேற்று இரவு உணவு முடித்து வந்து கொண்டிருக்கும் போது எதிரில் வந்து கொண்டிருந்தவன் தான் இந்தப் பதிவை எழுதக்காரணம். இப்போதெல்லாம் யாரேனும் தனியாக பேசிக்கொண்டு போனால் யாரும் வித்தியாசமாகப் பார்ப்பதில்லை. நேற்றைக்கு தனியாக பேசியபடி நடந்த அவனை கணேஷிடம் காட்டிய போது 'அண்ணே ஒழுங்கா பார்த்தியா, போன்ல எதுவும் பேசிட்டுப் போகப் போறான்' என்றான். 'இல்ல அவன் போன்ல பேசல தனியாத்தான் பேசிட்டு போனான்'. விரக்தியின் உச்சத்தில் எதையோ அவன் உதடுகள் முணுமுணுக்க யாரிடமோ எதையோ சொல்லும் வேகத்தில் அல்லது தன் அருகில் நடந்து வரும் ஒருவனிடம் மிக சீரிசயாக பேசும் தொணியில் கைகளை வீசிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தான். அவன் கண்கள் நிறைய சோகமும் விரக்தியும் நிறைந்திருந்ததது. திரும்பித் அவன் நடந்து சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.   

***

நண்பனுக்கு நடந்த கதை

அலுவலகத்தில் ஒரு காட்சியை காணும் போதெல்லம் வயிற்றில் புளியைக் கரைக்கும். அது யாரையாவது ஸ்ட்ரெக்சரில் வைத்து தூக்கிக்கொண்டு போகும் காட்சி. எவ்வித அசைவும் இல்லாது கிடக்கும் அவர்களது உடலை சுற்றி ஒரு கூட்டமே பதறி அடித்துக்கொண்டு ஓடும். அப்படி ஒரு காட்சியை காண நேரும் போதெல்லாம் ஏன்? ஏன்? ஏன்? என்ற கேள்வி ஆயிரம் முறை எழும். அதற்கான பதில்அதனை அனுபவித்துப் பார்த்த  என் நண்பனின் மூலமே கிடக்கும் என்பது சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி. அதே போன்ற ஒரு ஸ்ட்ரெக்சரில் அவனை தூக்கிகொண்டு போகும்போது உடைந்துவிட்டேன். மனசு கேட்கவில்லை. அவனை தூக்கிச் சென்றவர்களிடம் போய் கேட்டேன். யாருமே பதில் பேசவில்லை. சொல்லப்போனால் அவர்கள் யாருக்கும் என்னை தெரியவில்லை. 'அவன் என் நண்பன், ஏன் என்னாச்சு' என்று மீண்டும் கேட்டபோது 'திடிர்ன்னு மயங்கிட்டாரு, ஒண்ணும் பெரிய பிரச்சனை இல்லை' என்றார் அந்தக் கூட்டத்தில் ஓடிய ஒருவர். ஐடி கம்பெனியில் இது ஒரு பெரிய பிரச்சனை. மயங்கி விழுவது இல்லை. உயிருக்கு உயிரான நண்பனின் ப்ராஜெக்ட் நபர்களுக்கு நம்மை யாரென்றே தெரியாது என்பதுதான். ஒரு கண்ணாடிச் சிறைக்குள் அடைபட்டுக் கொண்ட உலகமது. ஓடிசென்று அவர்களிடம் கேள்வி கேட்டபோது பதட்டத்தில் அவர்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. என்னை மூன்றாம் நபராக மதித்த அவர்களுக்கு என்னிடம் பேசப்பிடிக்கவில்லை. விளைவு ஏதோ குறுகுறுப்பில் நான் கேட்டதாக தோன்றியிருக்ககூடும் அவர்களுக்கு


அடுத்த நாளே அவனுக்கு போன் செய்தேன். 'இன்னிக்கு ஆபீஸ் வந்துட்டேன். நேர்ல பார்க்கணும் வா தல' என்றான். அடிபட்ட பாம்பு போல் சுருண்டு கிடந்தான். 'என்னடா ஆச்சு' என்றேன். பேசத் தொடங்கினான். அழத் தொடங்கினான் என்பது தான் சரி. 'பயங்கர பிரஷர் தல, ஒருவாரமா கசக்கி புழியுறாங்க. லாஸ்ட் ஒரு மாசமா ஐஞ்சு மணி நேரம் தான் தூங்குறேன். சரியா சாப்பிடறது இல்ல, எந்தநேரமும் வேலைய பத்தி மட்டும் தான் யோசனை ஓடுது. நேத்து மதியம் பயங்கரமா தல வலிக்கிற மாதிரி இருந்தது. மண்டைக்குள்ள எதோ பிரச்சனைன்னு தெரியுது ஆனா என்னன்னு தெரியல. என்ன சுத்தி பயங்கர வெளிச்சம். எல்லாமே மெதுவா நகருற மாதிரி ஃபீல். உணர்வே இல்ல. பக்கத்தில இருந்து என்கூட பேசுறாங்க, நான் கல்லு மாதிரி உக்கார்ந்து இருக்கேன். மூளையே எம்ட்டி ஆனா மாதிரி ஒரு ஃபீல். என் பேரு மட்டும் தான் நியாபகம் இருக்கு. நான் யாரு, எங்க இருக்கேன் ஒண்ணும் நியாபகம் இல்ல. பக்கத்தில இருந்தவர்கிட்ட கேட்கிறேன் 'நான் ஏன் இங்க உக்கார்ந்து இருக்கேன்னு' என்ன மொறைச்சு பார்த்தாரு. திரும்பவும் கேட்டேன். ரெண்டு மூணு தடவ கேட்டேன். காமெடி பன்னாதடான்னு கோவத்தில எந்திச்சு போயிட்டாரு. அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாமே கனவு மாதிரி இருக்கு. முழிச்சு பார்த்தா பெட்ல இருக்கேன். குளுகோஸ் ஏறிட்டு இருக்கு. மயங்கி விழுந்துட்டேன்ன்னு சொன்னாங்க. எல்லாமே கனவுன்னு நினைச்சேன். ஆனா அதுக்கு அப்புறம் ஃபிரண்ட் கேட்ட கேள்விதான் தல' என்று கூறிவிட்டு நிறுத்தினான். 

'என்னடா கேட்டாரு' என்றேன். 'நேத்து காமெடிக்கு தான் அப்படி கேட்கிறேன்னு நினைச்சேன். ஆனா உண்மையிலேயே உனக்கு எதுவும் நியாபகம் இல்லையான்னு கேட்டாரு' என் மைன்ட் ஃப்ளாஷ் ஆனதுகூட கனவுன்னு தான் நினைச்சேன். ஆனா அவரு கேட்டதுக்கு அப்புறம் தான் புரிஞ்சது நிஜமாவே அவர்கிட்ட அப்படி கேட்ருக்கேன். மயங்கி விழுறதுக்கு முன்னாடி அரை மணி நேரம் பைத்தியம் மாதிரி நடந்துகிட்டேனாம். இப்ப நிஜமாவே பயமா இருக்கு தல எனக்கு எதுவும் ஆயிருச்சோன்னு' என்று கூறிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டான். என்னை விட ரெண்டு வயது சின்ன பையன். குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி. வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறான். 'தல வேலைய விட்ரடுமா' என்றான். பதில் சொல்லத் தெரியவில்லை. பதில் சொல்ல முடியாத இடத்தில் தான் நானும் நின்று கொண்டிருக்கிறேன். 

'சரி இன்னிக்கு ஏண்டா ஆபீஸ் வந்த ஒருவாரம் லீவ் எடுத்துருக்க வேண்டியது தான' என்றேன். 'முடிஞ்சா வர முடியுமான்னு கேட்டாங்க. மனசு கேட்கல வந்துட்டேன்' என்றான். இந்தப் பதில் பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் இது தான் நிஜம். இதுதான் நிதர்சனம். 

***

நண்பர் சொன்ன கதை 

'ஃகேபிடேரியால செம கூட்டம். உட்கார இடம் இல்லை, ஒரே ஒரு டேபிள் மட்டும் காலியா இருந்தது. அங்க ஒரு பொண்ணு தனியா உட்கார்ந்து இருந்தா. வேற வழி இல்ல அங்கதான் உட்காரனும். உக்கார்ந்த பின்னாடி தான் தெரியுது அவ அழுதுட்டு இருந்தது. பயங்கரமா அழுதுட்டு இருந்தா. கண்ணீர் அப்படியே தாரதாரயா கொட்டுது. திடிர்ன்னு போன் எடுத்தா, ரொம்ப நேரம் பேசுனா, இடையில செத்ரலாம் போல இருக்குன்னு சொன்னா. எனக்கு பகீர்ன்னு ஆயிருச்சு. அங்க இருந்து எந்திச்சு போயிரலாம்னு பார்த்தேன். அந்த வழியா போறவன்லா நம்ம ஒருமாதிரியா பாக்குற மாதிரி இருந்தது. மனசு கேட்கல நானே அதுகிட்ட பேச ஆரம்பிச்சேன். ன்னா தான் பிரச்சனை, ஏன் இப்படி அழுதுனு இருக்கீங்கன்னு. நிமிர்ந்து பார்த்தா. சொல்ல வேணாம்னா விட்றுங்க. ரொம்ப அழுதுனு இருக்கீங்க. எதுவும் பிரச்சனைன்னா வீட்டுக்கு கிளம்பி போயிருங்க. இங்க இருக்காதீங்கன்னு சொன்னேன். அவ பேச ஆரம்பிச்சா.'

'பத்து வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் அவளுக்கு. நாலு வருஷம் ஆன்சைட்ல இருந்திருக்கா. அதுல ரெண்டு வருஷம் மேனேஜரா இருந்திருக்க. ஆன்சைட்ல இருக்கும் போதே ஃப்ரஜெக்ட் முடிஞ்சு போனதால இங்க அனுப்பி விட்டுடாங்க. இங்க புது ஃப்ராஜெக்ட். அடிமட்ட லெவல்ல இறங்கி வேல பார்க்க சொல்லிருக்காங்க. பதினஞ்சு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கவங்களே அடிமட்ட வேலை பார்க்கும் போது நான் பார்க்க முடியாதுன்னு இவளால எப்படி சொல்ல முடியும். ஆனாலும் சொல்லிருக்கா. எல்லாருமா சேர்ந்து இவள கட்டம் கட்டி மட்டம் தட்ட ஆரம்பிச்சிடாங்க. ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் கிளம்பிரலாம் ஆனா லேப்டாப் எடுத்துட்டு போகனும். எப்போ கூப்பிட்டாலும் வேல செய்ய தயாரா இருக்கணும், இப்படி நிறைய பிரஷர்'. 

இவ கொஞ்சம் ஸ்லோ பிக்கப் போல அவங்க வேகத்துக்கு ஈடுகொடுத்து வேலை செய்ய முடியல. அதுதான் பெரிய பிரச்சனையா மாறி இருக்கு. நைட் எல்லாம் தூக்கம் வராம எப்போ பார்த்தாலும் எதையோ பார்த்து பயந்த மாதிரியே இருந்திருக்கா. குழந்தைகளை போட்டு அடிக்கிறது, புருஷன்ட்ட கோவபடுறதுன்னு டெய்லி வீட்லையும் பிரச்சனை. புருஷன் தயவுசெஞ்சு நீ வேலைய விட்று இப்படி லூசு மாதிரி பிகேவ் பண்ணாதன்னு சொல்லிருக்கான். எங்க நிஜமாவே எதுக்கும் உதவாதவளா மாறிட்டமோன்னு பயம் வந்தருக்கு. அந்த டிப்ரெஷன்ல ரெண்டு நாளா சாப்பிடவே இல்லியாம். யாருகூடவாவது கொஞ்சம் பேசுனா நிம்மதியா இருக்கும்னு புருசனுக்கு போன் செஞ்சிருக்கா, அவன் நான் பிசியா இருக்கேன் அப்புறம் கூப்புடுன்னு சொல்லிருக்கான். அதனாலதான் செத்துரட்டும்மான்னு கேட்டிருக்காளாம். என்றார். 

'இன்னா சொல்றதுன்னு தெரியல. தயவுசெஞ்சு தப்பான முடிவு எடுத்திராத, நல்லா யோசிச்சு முடிவு எடு. உனக்குன்னு குடும்பம் குழந்தைங்க இருக்கான்னுனு சொல்லிட்டு வந்தேன்' என்றார். மனசு பாரமா இருக்கு நண்பா. நிம்மதியே இல்லாம ஏன் இப்படி ஒரு வாழ்க்கை என்றவருக்கு என்னால் கூற முடிந்த பதில் ஒரு சொட்டு புன்னகை, நானும் இங்க தான இருக்கேன் என்ற ஆறுதல் பார்வை.  

மெண்டல் கேர்

அலுவலகத்தில் எர்கோ கேர் என்று ஒரு மென்பொருள் நிறுவி இருக்கிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உங்கள் கை கால் கழுத்து முதுகுக்கான உடற்பயிற்சிகளை செய்யச்சொல்லி உத்தரவு கொடுக்கும். எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதுவே செய்துகாட்டும். யாருக்கும் அதை கவனிப்பதற்கு கூட நேரம் இல்லை. ஒரு ஓரத்தில் அதுபாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும். நாங்கள் எங்கள் வேலையைப் பார்த்தபடி இருப்போம். சரி அது இருக்கட்டும். என்னைக் கேட்டால் எர்கோ கேருடன் சேர்த்து மெண்டல் கேர் கூட கொடுக்கலாம். ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் என்று அவதிப்படும் பலருக்கும் மெண்டல் கேர் மிக அவசியமான அவசரமான தேவையாக இருக்கலாம். உடன் இருப்பவர்களுடன் பேசினாலே பெரும்பாலான கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும். ஆனால் இங்கே ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாக நடந்து கொண்டிருக்கும் போது தீர்வு என்பது மெண்டல் கேர் போன்ற மென்பொருள் வழியாகக் கிடைக்கலாம் என்பதும் ஊகம் தான். 

அலுவலக இணையத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எர்கோ கேர் மென்பொருளை நீங்கள் உபயோகிப்பதற்கான முக்கிய காரணம் என்ன 1. கை வலி 2. கழுத்து வலி 3. முதுகு வலி 4. இவை அனைத்தும். கை கழுத்து முதுகு என வாக்களித்தவர்கள் அத்தனைபேரும் ஒற்றை இலக்கத்தில் இருக்க இவையனைத்தும் என்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை இப்போது வரைக்கும் 42.2%. வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரன் மாதிரி என்று ஒரே இடத்தில் கொஞ்சம் கூட நகரமால் கணினிக்குள் புதைந்து போவது தான் முக்கிய காரணம். ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கு என்று அலுவலகத்தில் பல வழிகள் உண்டு. ஒரு பெரிய பூங்கா, புல்வெளி, எக்ஸர்சைஸ் செண்டர் என்று எவ்வளவோ இருந்தும் இதைப்பற்றி எல்லாம் யோசிக்கும் மனநிலை வாய்ப்பதே இல்லை. நேரத்திற்கு வேலையை முடிக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே ஓடிக் கொண்டிருந்தால் எப்படி மற்ற சிந்தனைகளுக்கு நேரம் ஒதுக்க முடியும். 

தினமும் காபி குடித்துவிட்டு அலுவலகம் நோக்கி நடக்கும் போது எதிரில் சிலர் வாக்கிங் சென்று கொண்டிருப்பார்கள், சிலர் புல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் சரவணா ஏக்கமாக சொல்வான் 'நாளைக்கு நாமளும் வாக்கிங் போகணும்டா, இப்பலாம் நாம நடக்குறதே இல்ல' என்று. தினமும் நாளை நடக்கலாம் என்று சொல்லும் சரவணாவுக்கும் தெரியும் அதை கேட்கும் எனக்கும் தெரியும் அது எங்களுக்கு நாங்களே சொல்லிக்கொள்ளும் ஆறுதல் என்று. மற்றபடி நாளை மற்றுமொரு நாளே.  
***

ஐடி வேலை இப்படித்தான் இருக்கும் என்பது தெரியும். உங்கள் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரும் வழி உங்களிடம் மட்டும் தான் இருக்கிறது. அதனால் உங்கள் உடலுக்கும் மனதுக்குமான ரிலாக்சேஷனை அவ்வபோது கொடுங்கள். குறைந்தபட்சம் அதற்கான முயற்சியையாவது எடுங்கள். இல்லை எதோ ஒரு கட்டத்தில் மனநிலை பாதிப்பு அடைந்து திரியும் போது உங்களை நீங்களே இழந்திருப்பீர்கள். அப்போது உங்கள் வயது நீங்கள் வாழ வேண்டிய வயதாகக் கூட இருக்கலாம்.

17 comments:

  1. ரிலாக்ஸ் ஆக இனி எதாச்சும் செய்வார்களா?

    ReplyDelete
  2. ஐ. டி. செக்டார் மட்டும் இல்ல. இப்ப எல்லா செக்டாருமே இப்படித்தான் கீது. இதற்கு காரணம் பல லேபர் லாஸ் இந்த ஐ.டி. செக்டாருக்கு அப்ளை ஆவதில்லை.


    பலர் கொத்தடிமை மாதிரி தான் தம்மை உணர்கின்றனர். அண்மையில் ஐரோப்பாவில் வேலை பார்க்கும் எனது வலை நண்பர் ஒருவரை நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டு விட்டேன். அவர் ஐ. டி .துறை தான் என்று எனக்குத் தெரியும். நான் கேட்டது ஐ.டி யில் எந்த பீல்டு டெக்னிகல் லே, சாப்ட்வேர் டெவலப்பிங் ஆ, சாப் , இது மாதிரி எதுன்னாச்சும் சொல்வார் என்று எண்ணினேன்.
    அவர் சொன்னதெல்லாம்.
    "நானா !! பன்னி மேய்க்கறேன் !" என்றார்.

    கிளைன்ட் கோ ஆர்டினேஷன் என்று புரிந்து கொண்டேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. சுப்பு தாத்தா நீங்க சொல்றது ரொம்ப சரி. அரசு அலுவலகங்கள்லயும் டார்ச்சர் அதிக மாயிடுச்சு. அரசு விதிகளின் படி 24 ஹவர்சம் எப்ப கூப்பிட்டாலும் ஒர்க் பண்ணனும்.. லீவு போடறது ரொம்ப கஷ்டமா போச்சு அப்படியே லீவு கிடைச்சாலும் போன் மூலமாவே வேலை செய்யறமாதிரிதான் இருக்கு, மேலதிகாரிகளின் டார்ச்சர், அரசியல்வாதிகளின் தலையீடுகள் கீழுள்ள பணியாளர்களின் ஒத்துழைப்பின்மை, சின்ன விழயங்களுக்குக் கூட கோர்ட்டுக்குப் போறது. கோர்ட்டு செலவுகள்னு ஏகப்பட்ட பிரச்சனைகள் .தற்கொலை செய்து கொள்ற அளவுக்கு கூட போயிடுது

      Delete
  3. சீனு அருமையான பதிவு! இன்றைய தலைமுறை, இளைய தலைமுறை முழித்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது! நான் இன்று காலை ஒரு தற்கொலை செய்து இறந்த இளம்பெண்ணின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுவிட்டு இதுபற்றி ஒரு பதிவு எழுதியே ஆக வேண்டும் உளவியல் ரீதியாக என்று நினைத்திருந்த போது உங்கள் பதிவு! மிக மிகச் சரியே எர்கோ கேர் பிரபலமாகி வருகின்றது. எல்லாமே நாம் வருமுன் காப்போம் என்பதை விட வந்த பின் பார்ப்போம் என்ற மன நிலையில் இருப்பதால் தான். இன்னும் எர்கோ கேர் பற்றியும் மென்டல் கேர் பற்றியும் எழுதலாம் ஆனால் இங்கு பின்னூட்டம் பதிவாகிவிடும்...எனவே எனது பதிவில்..என்றாலும் ஒன்றே ஒன்று....மேலைநாட்டினரும் இந்த ஐடி துறையில் இருப்பவர்கள் தான் ஆனால் அவர்கள் ரிலாக்சேஷனுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். வார இறுதி என்றால் அலுவலகம் வருவோர்கள் மிக மிகக் குறைவு...தங்கள் பெர்சனல் தருணங்களில்தான் இருப்பார்கள்..இந்தியர்கள் இன்னும் அதற்குப் பழகவில்லை என்பது வேதனைக்குரியது..

    கீதா

    ReplyDelete
  4. ஐ.டி துறையில் வேலை செய்வோரை பற்றிய மாயப்பிம்பம் ஒன்று உலாவருகிறது! அதை உடைத்தெரியும் விதமான சிறப்பான பதிவு. உங்கள் நண்பரும், அந்த பெண்ணும் அதற்கப்புறம் என்ன ஆனார்கள்? என்ற கேள்வி எழுகிறது. வேலைகளுக்காக நம்மை நம் உடல் இயக்கத்தை மாற்றிக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றி கொண்டு இருக்கிறோம்.

    ReplyDelete
  5. பதிவு இன்றைய ஐ.டி துறையின் அவல நிலையை விளக்கும் ஒன்றாக உள்ளது! நடை நன்று!

    ReplyDelete
  6. Seenu is explaining the tragic situations today in IT sector.But Pulavar is saying his NADAI nandru.
    This is weird.

    ReplyDelete
  7. எத்தனை எத்தனை பிரச்சனைகள்..... எல்லாத் துறைகளிலும் பிரச்சனைகள் உண்டு என்றாலும் இங்கே பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பலரது வாழ்க்கை முறையே மாற்றி அமைத்துவிட்டது இத்துறை...... நண்பர்களின்றி, தங்களுக்குள் தனி உலகமாகவே மாறிவிட்ட சிலரைப் பார்த்து வேதனைப்பட்டிருக்கிறேன்....

    நல்ல கட்டுரை சீனு.

    ReplyDelete
  8. எந்த கேரும் ஐ.டி ஊழியர்களை காப்பாற்றாது, பிரச்சனையின் வேர் இதுவல்ல என எல்லாருக்குமே தெரியும். நாயாய் பேயாய் முதலாளிக்கு வேலை செய்து மன உளைச்சலில் பைத்தியம் பிடித்து சாவதை விட, சங்கம் அமைத்து போராடி ஒருவேளை வேலை இழந்தாலும் தன்மானம் சுயமரியாதையுடன் ஊழியர் நலனுக்காக உழைத்தோம் என்ற மன நிம்மதியுடன் வாழலாம்.

    இதோ ஓராயிரம் ஐ.டி ஊழியர்களின் கதையும், அவர்கள் செல்ல வேண்டிய பாதையும்

    http://www.vinavu.com/search/?q=%E0%AE%90.%E0%AE%9F%E0%AE%BF

    ReplyDelete
  9. இந்த பதிவின் நோக்கம் என்ன? உங்களுடைய பிரச்சனைகளை சொல்லும் உங்கள் பதிவிலேயே பிரச்சனைக்கான தீர்வும் இருக்கிறது.. வாழ்வில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறோம் என்று முடிவு செய்து விட்டால் இந்த மன அழுத்தங்கள் குறைந்து விடும். You know what i mean!

    ReplyDelete
  10. மனசு ரொம்பக் கஷ்டமா இருக்கு.. ஆனா ஐடியில் இப்படித்தான் இருக்கிறது ... நாம தான் நம் உடல் நலனைக் கவனித்துக்கொள்ள வேண்டும், நமக்கு ஒன்னுனா, கம்பெனிகாரன் புதிய பட்டதாரிகளைப் பிழிவதற்கு எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருப்பான். ஆனா, எப்படி பார்த்துக்கொள்வது என்பது தான் கேள்வி!! பாருங்க உங்க நண்பரை மறுநாளே வரச்சொல்லியிருக்கின்றனர்!!
    அனைவரும் எளிதாக வேலையை விட்டுவிட்டுப் போக முடியாது..இதற்கெல்லாம் என்ன தீர்வு வருமோ!!
    உங்கள் நண்பருக்குத் தைரியம் சொல்லுங்கள், ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்தாலே இன்னும் உடல் நலனைப் பாதிக்கும்..பார்த்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  11. அய்யா நம்பா தொழிலாளர் நலச்சட்டமெல்லாம் என்னா செய்யுதுங்கோ ?

    8 மணி நேர வேலை, பணியிடையே ஓய்வு, இத்யாதி இத்யாதி .......
    இதுல்லாம் பாலாப்போன உள்நாட்டுத் தொழிற்சாலைகளுக்கு மட்டும் கிடுக்கிப்பிடி போட்டுத் தாக்குமா ?

    வெளிநாட்டுக்காரன் நிருவனமென்றால் இந்தியத் தொழிலாளர்கள் படும் வேதனைகளை பவ்யமாகக் கையக்கட்டி பார்க்க மட்டும் தான் செய்யுமா ?

    சாதரனமா திருபூரில் ஒரு வெளிநாட்டு நிறுவன வியாபார ஒப்பந்தத்திற்க்கே குழந்தைத் தொழிலாளர் இல்லாதிருக்கவேண்டும், தொழிலாளர் களிப்பிட வசதி முதற்கொண்டு ( சும்மாங்காட்டிக்கும், தொழிலாளர் நலனில் அக்கரை எடுத்துக்கிறாங்களாம் ) பார்க்கும் நிறுவனங்கள் இம்மாம் பெரிய பணம் கொழிக்கும் IT துரையில் வேளை செய்யும் வல்லுனர்களின் உடல், மன நலங்களைத்தூக்கி கடாசிடுவாங்கலோ ?
    யாரு நிறுவனம் இந்தியாவில் நடத்தினாலும், தொழிலாளர் நலத்துக்கு உட்பட்டு நடத்துபவர்களுக்கு மட்டும் தொழில் துவங்க அனுமதி என்றும், மீறும் பட்சத்தில் அந்நிறுவனத்தின் LICENSE ஐ ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனையில் தொழில் துவங்க அனுமதி அளிக்க சட்டம் கொண்டு வரலாமேஏஏஏஏஏ ?

    ஒருவேலை ஏற்கனவே இப்படி சட்டமிறுந்துதான் வந்தாரை வாழவைக்க இறுக்கிரவன் உயிரை எடுத்துக்கிட்டு இருக்காகளோ ?
    அட ஈஸ்வரா உனக்கே வெளிச்சம் !!!
    காலம் கலிகாம்
    அதிலும்
    கம்ப்யூட்டர் கலிகாலம்!!!

    ReplyDelete
  12. ஐடி துறையில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் பிரச்சனைகள் அதிகரித்துதான் இருக்கின்றன. ஐடி துறையில் பிரச்சனைகள் அதிகரிக்க ஒரு காரணம் இந்தியர்கள்தான் என கூறலாம். வெளிநாடுகளில் வந்து வேலைபார்க்கும் இந்தியர்கள் தன் சக இந்தியர்களைவிட மிக அதிக நேரம் வேலை பார்த்து வெள்ளைக்காரர்களிடம் நல்ல ம்திப்பை பெற்றுவிட வேண்டும் என்று வேலை செய்ய ஆரம்பித்து தங்களின் அடிமைதனத்தை காட்டி நல்ல பெயர்கள் பெற ஆரம்பித்தனர் அவர்களின் இந்த போட்டிமனப்பான்மை செயல்களால் அவர்களே பாதிக்கப்பட்டார்கள் இப்பொது அமெரிக்கர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை. முன்பு எல்லாம் அமெரிக்கர்கள் காலை 6 அல்லது 7 மணிக்கெல்லாம் வேலைக்கு வந்து மாலை 5 அல்லது 5 மணிக்கெல்ல்லாம் கிளம்பிவிடுவாரகள் வார இறுதி நாட்களில் வேலையைப் பற்றி நினைக்கவே மாட்டார்கள். இந்த இந்தியர்கள் மற்றும் ஏசிய நாட்டை சார்ந்தவர்கள் வந்ததும் எல்லாமே தலைகிழாக மாறிவிட்டது என்பது என்னவோ உண்மையே.... இதனால் தொழிலாளிகள் திண்டாட்டமும் முதலாளிகளிடம் கொண்டாட்டமும் ஏற்பட்டு இருக்கிறது

    ReplyDelete
  13. நல்ல கட்டுரை.

    காரணங்கள் நமது அறியாமையும் செயல்பாடற்ற தன்மையும்தான்.

    ReplyDelete
  14. வணக்கம் தங்கள் தளத்திற்கு புதியவன்! ஐ டி யை பற்றி அழகான பதிவு! பல நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கேன் இந்த துறையில் இருப்பவர்கள் அதைவிட்டு வெளிவரும்போது எதும் தெரியாத மனநிலையில் இருப்பார்கள் என்று!
    ஆனால் இங்குதான் தினக்குலிக்குதிண்டாட்டமும் லட்சம் சம்பளத்திற்கு திணரும் முறை இருக்கிறது! தீர்வுதான் இல்லை!! நன்றி!!!

    ReplyDelete
  15. மெண்டல் கேர்

    கேர் மெண்டல்...?!!!

    ReplyDelete
  16. பீதிய கிளப்பறயே சீனு.
    அதனால்தான் நிறைய ஐ.டி காரர்கள் கொஞ்ச காலத்துக்குப் பிறகு ஹோட்டல் வைக்கறது இயற்கை விவசாயம் செய்யறதுன்னு இறங்கிடறாங்கன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete