19 Jul 2014

வேலையில்லா பட்டதாரி - ஹவுஸ்புல்

நிச்சயமாக படத்தின் கதையை விவரிக்கப் போவதில்லை. இந்தப்பதிவு ஒரு சி செண்டர் பார்வையாளனாக என்னுடைய விமர்சனம் அவ்வளவே. 

வேலையில்லா பட்டதாரி. நாவலூர் ஏஜிஎஸ்ஸில்  முதல்நாள் இரவுக் காட்சி. அதிலும் வெள்ளிக்கிழமை இரவென்பதால் ஒட்டுமொத்த ராஜிவ்காந்தி சாலையும் அரங்கை நிறைத்திருந்தது. ஏதாவது ஐ.டி கான்பரன்ஸ் நடந்தால் கூட இவ்வளவு கூட்டம் வருமா தெரியவில்லை. அம்புட்டு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பட்டதாரி ஊழியர்களும் வேலை இல்லாப் பட்டதாரியைப் பார்க்கக் குழுமியிருந்தார்கள் தங்களின் கடந்தகால நினைவுகளை திரும்பிப் பார்பதற்காக. கடந்த தலைமுறையில் கமலகாசன் தொடங்கி ராம்ஜி வரை வேலையில்லாப் பட்டதாரியாக நடித்துவிட்டுப் போக இந்த தலைமுறையினருக்காக வே.இ.பட்டதாரியாக களத்தில் இறங்கியுள்ளார் தனுஷ். அவரின் சொந்தத் தயாரிப்பும் கூட. இதுவே அவருக்கு வினையாகிப் போனது வேறுவிஷயம், மானப்பிரச்ச்னையும் கூட. இதன் பின்னணி உங்களுக்கும் தெரிந்திருக்கலாம் இல்லையேல் அப்புறம் சொல்கிறேன். 



பொறியியல் முடித்துவிட்டு, தான் படித்த கட்டிட கட்டுமான துறையில் நியாயமான முறையில் நேர்மையான மனிதர்களுக்கு மத்தியில் வேலை பார்க்க ஆசைப்படும் நாயகன் இடைவேளை வரைக்கும் அப்படி ஒரு வேலை கிடைக்காமல் கஷ்டபடுகிறார். இடைவேளைக்குப் பின் அப்படி ஒரு வேலை கிடைத்தாலும், அப்படியாகக் கிடைத்த வேலையை தக்க வைத்துகொள்ள கஷ்டப்படுகிறார். காரணம் நம் நாயகன்தான் நேர்மையானவன் ஆயிற்றே. அதனால் அவனைத் தொந்தரவு செய்ய ஒரு அமுல்பேபி வில்லனாக வருகிறான். அவ்வப்போது டூயட்பாட பக்கத்துவீட்டில் குடியேறும் அமலாபேபி ஹீரோயினாகிறார். அவ்வளவு தான் கதை.  

முதல்பாதியில் விறுவிறுப்பான காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் திரைக்கதை எழுதிய விதத்தில் அவை விறுவிறுப்பாகவே நகர்கின்றன. என்னை கேட்டால் படத்தின் பெரும்பலம் தனுஷைத் தவிர்த்து வசனமும் ஒளிபதிவுமே என்பேன். பெரும்பாலான வசனங்கள் பட்டையக் கிளப்புகின்றன. அதிலும் தனுசின் டயலாக் டெலிவரி பிரமாதம். 'முன்னல்லாம் இல்லதாவங்க இருக்குறவங்கட்ட இருந்து பிடுங்கினாங்க, இப்ப என்னடான்னா இருக்குறவங்க இல்லாதவங்க கிட்ட இருந்து பிடுங்குறீங்க' ஒரு சோற்றுப்பதம். தனுஷ் பேசும் பெரும்பாலான வசனங்கள் அடிபொலி. செயற்கைத்தனம் இம்மியளவும் இல்லை. என்ன நாயகி அமலாபால் இடத்தில் வேறொரு ஈரோயின் இருந்திருந்தால் இன்னும் சூப்பராய் இருந்திருக்கும். அமலாபாலுக்கு கல்யாணம் ஆகிவிட்டதாலோ என்னவோ ஆண்டியாகவே தெரிகிறார். சொல்லபோனால் அதுதான் உண்மையும் கூட. 

சமீபத்திய வெற்றிப்படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான் இப்படத்தின் இயக்குநர் என்பதால் படத்தின் ஒளிபதிவு ரிச்சாக இருக்கிறது. நன்றாகவும் இருக்கிறது. சென்னைக்குள்ளேயே படம் மொத்தத்தையும் முடித்தது பாராட்டத்தக்கது.  

படத்தின் சில காட்சி அமைப்புகள்  கொஞ்சம் பிரஷ்ஷாக இருந்தது. அதில் ஒன்று நாயகன் ரகுவரன் நாயகி ஷாலினிக்குக் கொடுக்கும் பிறந்தநாள் பரிசு. ஒட்டுமொத்த அரங்கமும் வேறொன்றை எதிர்பார்த்துக் காத்திருக்க அங்கே நடப்பதோ யாரும் எதிர்பாராத ஒன்று. வெகுநாட்களுக்குப் பின் திரையில் தோன்றும் சின்னக் கலைவாணர் சற்றே ஆறுதல் அளிக்கிறார் என்பதுதான் விகடனின் விமர்சன வரியாக இருக்கும் என்பது என் அவதானிப்பு. 

பாடல்கள் அனிருத்தின் வழக்கமான டெம்ப்ளேட் இசை. அதேநேரம் அனிருத்தின் இசைக்கு தனுஷின் நடனம் பிரமாதம். அவ்வளவு எனர்ஜிட்டிக். திருடா திருடி சுள்ளானில் நடித்த தனுசுக்கும் வேலையில்லா பட்டதாரி தனுசுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள். இத்தனை நாள் தனுஷ் என் பிடித்த நடிகர்களின் பட்டியலில் இல்லை. இந்தப்படத்தில் எனக்கு அவரை வெகுவாகப் பிடித்துப் போய்விட்டது. நடிப்பு பிரமாதம். சமுத்திரக்கனி மற்றும் சரண்யா பொன்வண்ணனின் நடிப்பும் அருமை.          

முதல் பாதியுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பாதி தொய்வு என்றே பலரும் விமர்சிக்கின்றனர். எனக்கு அப்படியொன்றும் தெரியவில்லை. படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை சலிப்பு தட்டாமல் தான் சென்றது. என்ன இரண்டாம் பாதி திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அடுத்தடுத்து என்ன நடக்கபோகிறது என்பதை கணிக்கக் கூடிய வழக்கமான திரைக்கதை தான் என்றாலும் போதுமான அளவு மசாலா தடவி பரிமாறப்பட்ட விதத்தில் சுவைக்குப் பஞ்சமில்லை. நம்பிப்போய் பார்க்கலாம். 

ரசித்த சில காட்சிகள் :
  • தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் தம்பிக்கு பணம் கொடுத்து உதவுவது. 
  • சரக்கடித்துவிட்டு சரண்யாவிடமும் அமலாபாலிடமும் கூத்தடிக்கும் காட்சிகள். 
  • சமுத்திரகனி தனுஷை ஆறுதல்படுத்தும் காட்சி 
  • வில்லனின் அப்பாவிடம் நேருக்கு நேர் விடும் சவால். 
  • அமுல்பேபியிடம் தனுஷ் பேசும் அத்தனை காட்சிகளும். 
  • பத்திரிக்கையாளர்களிடம் தனுஷ் பேசும் காட்சி.  

வேலையில்லா பட்டதாரியை தனுஷே தயாரித்ததால் படத்தை வெளியிடுவதில் சிக்கலில் மாட்டியிருந்ததாக ஒரு பத்திரிக்கைச் செய்தி படித்தேன். அதவாது தனுஷ் சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படம் தயாரிப்பதாகவும் அந்தப் படத்தையும் தங்களிடமே விற்றால் மட்டுமே வேலையில்லா பட்டதாரியை வாங்குவோம் என்றும் தனுசை டார்ச்சர் செய்தார்களாம் டிஸ்ட்டிப்யுட்டர்கள். கடந்த சில படங்கள் தனுஷுக்கு சரியாக போகாததால் ஏற்பட்ட நிலைமை இது. அதனால் தனுஷுக்கு கிட்டத்தட்ட இது தன்மானப் பிரச்சனை. மேலும் 25-வது படம் வேறு. இது வெற்றிப்படமாக அமைந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார். அதற்காக அதிகமாக உழைத்துள்ளார். தனுஷ் எதிர்பார்த்த வெற்றியை அவர் அறுவடை செய்வாரா என்றால்? 



படம் முடிந்து வெளிவரும் போது அனைவரும் தங்களுக்குள் திரைப்படத்தை மிக உற்சாகமாக விமர்சிக்கத் தொடங்கியிருந்தனர். 'எனக்கு அந்த சீன் புடிச்சிருந்தது'. 'ஒவ்வொரு டயலாக்கும் செம மச்சி'. 'த்தா மாஸ் சீன் டா' என்று ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை விமர்சித்துக் கொண்டே நகர்ந்தனர். சமீபத்தில் பார்த்த எல்லா முதல்நாள் இரவுக் காட்சிகளிலும், படம் முடிந்ததும் தலையைத் தொங்கபோட்டுக் கொண்டு ஏதோ ஒரு விரக்தியில் செல்லும் ரசிகனையோ அல்லது 'செம தலைவலி எப்படா போய் தூங்குவோம்' என்ற எண்ணத்தில் செல்லும் ரசிகனையோ பார்த்துப் பழகியிருந்த எனக்கு இந்தக் காட்சி சற்றே புதுமையாய் இருந்தது. ஒரு திரைப்படம் வெற்றி பெற ரசிகனின் புளகாங்கிதத்தை விட வேறு என்ன விசயம் வெற்றியைத் தேடித் தந்துவிடப் போகிறது. 

வேலையில்லா பட்டதாரி - ஒருவேளை நீங்கள் வேலையில்லாப் பட்டதாரியாக இருந்தாலோ இருந்திருந்தாலோ உங்களுக்குள் இருக்கும் பழைய நினைவுகளை கிளறிவிட வாய்ப்புள்ளது. 

49 comments:

  1. கேரள பாதிப்பு விமர்சனத்திலுமா? எண்ட அம்மே ...... தனுஷ் சிறந்த நடிகர்னு முன்னாடியே பல படத்துல காட்டிட்டாரே ...என்னா கொஞ்சம் உடம்புதான் இல்ல ...

    ReplyDelete
    Replies
    1. அதானே நல்லா கேளு தல.. அது சரி அது என்ன இந்த ஓர வஞ்சனை.. சீனு போடற சினிமா விமர்சனத்துக்கு மொதோ ஆளா வந்து கமேண்ட வேண்டியது.. எங்க ஏரியா பக்கம் எல்லாம் தலை காட்டுறதே இல்ல.. டூ பேட் மிஸ்டர் தீவிரவாதி.. "நாங்க" வாட்ச் பண்ணிகிட்டே இருக்கோம்.. எப்போ அட்டாக் பண்ணுவோம்னு தெரியாது. பீ கேர்புல்..

      Delete
    2. மூட பொறுத்துதான் தல .....உங்களுக்குனா தெனமும் கமெண்ட் போடனுமே அவ்வ்வ்வ்வ்வ்வ். சில நேரம் வரிசையா. ஒரு ரவுண்டு வந்து போடுவேன் . மத்தபடி தனிப்பட்ட எந்த விடயமும் இல்லை .உண்மைய சொன்னால் உங்கள் வரிசையான பதிவுகள் மூச்சு முட்ட வைக்கிறது .படிக்கவே முடில ...எப்படித்தான் எழுதுறீங்கன்னு தெரில ...
      அத்தோட இந்தப்பட வெளம்பரம் கொஞ்சம் கவனிக்க வைத்திருந்தது.காலைல எழுந்ததும் இவர். விமர்சனம் பேஸ்புக் லிங்க்ல. பேஸ்புக் ஆரம்பத்தில் சீனுவ ஸ்டார் போட்டு வைச்சதால நோட்டிபிகேஸன்ல வந்துடும்.அதான் இவனோட ஸ்டேட்டஸ்ம் மிஸ் ஆகுறதில்ல
      அப்படி பார்த்தா என்னோட பக்கம் நம்ம பயலுக ஒருத்தனும் வரமாட்டாங்களே ....ஏன்னா நம்ம பயலுங்க மத சார்பற்றவர்கள் ,சாதி சார்பற்றவர்கள்னு நிரூபிக்க வேண்டியதா இருக்குது.
      இன்னொரு முக்கியமான விடயம் சீனுதான முகமறியா காலத்தில் இருந்து எனக்கு வெளக்கு பிடிச்சவர் .வழிகாட்டின்னு சொல்ல வந்தேனுங்க ......
      எப்ப அட்டாக் செய்தாலும் பரவால்ல ...நாம அடி வாங்காத ஏரியாவே இல்ல. :)

      Delete
    3. பல பதிவுகள் சைலண்ட்டா கடந்தாலும் உங்க கேள்வி பதில் பதிவுலதான் தனிமைய பத்திய ஒரு சிந்தனை ஆட்கொண்டது. அதுல மூடை மீறி ஒரு தடவை கமெண்ட் பப்ளிஷ் ஆகாம இருந்தும் மறுபடி மெனெக்கெட்டு பின்னூட்டம் இட்டேன் .ஓட்டு போட்டேன் ப்ரோ.கடந்த வாரம் எழுதி போட்ட கவிதைக்கு யாருமே வரல .....காதலை கொண்டாடும் சமூகம் அதன் சோக முடிவுக்கான அடிப்படையை எழுதிய கவிதைக்கு நோ ரெஸ்பான்ஸ் .மவுனம் ஒவ்வொரு குற்றத்திற்க்கும் துணை செய்யும் ப்ரோ.

      Delete
    4. தனுஷ் சிறந்த நடிகர் தான், இருந்தாலும் இந்தப் படம்தான் என்னை வெகுவாய்க் கவர்ந்தது (மயக்கம் என்ன, 3 இன்னும் பார்க்கவில்லை )

      @கோவை ஆவி - யோவ் அவரு சும்மாவே வாழப்பழம் உள்ள குண்டூசிய சொருகுவாறு, இப்ப கடப்பாரைய - என்சாய் பாஸ் :-)

      Delete
    5. (மயக்கம் என்ன, 3 இன்னும் பார்க்கவில்லை ) இனிமேலும் பார்க்காதீர்ய்யா.. அப்புறம் உமக்குள்ள வந்துருக்குற தனுஷ் ரசிகன் ஓடிபோயிருவான்!

      Delete
    6. வெறுப்புல இருக்கன் ..எஞ்சாயாம் .....போடா டேய் ...கடப்பார இல்ல ஒரு கவச குண்டலத்தையே சொருகலாம்னு திட்டம் ....

      Delete
  2. //நிச்சயமாக படத்தின் கதையை விவரிக்கப் போவதில்லை//

    அப்படி இருந்தால்தானே சொல்ல! ஹிஹிஹி!

    //ஆண்டியாகவே தெரிகிறார். சொல்லபோனால் அதுதான் உண்மையும் கூட. //

    அவ்வ்வ்வ்!

    சரக்கடிக்கும் காட்சி இல்லாமல் இவர்களால் படமெடுக்கவே முடியாதா..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா

      ஸ்ரீராம் சார்,

      மொதல்ல முண்டாசுபட்டி பாருங்க

      Delete
  3. கல்யாணம் ஆயிட்டதால இல்ல... ஆகறதுக்கு முன்னாலயும் கூட மில்க் ஆண்ட்டி மாதிரிதான்யா இருப்பாங்க. ஹா.. ஹா... ஹா... தனுஷின் ப்ளஸ் பாயிண்ட் அவருடைய டயலாக் டெலிவரிதான். இல்லாட்டி அந்த ஒல்லிப்பிச்சான் உடம்பை வெச்சுக்கிட்டு இந்த லெவலுக்கு முன்னேறியிருப்பாரா...? படம் பாத்தவங்களை பேச வெச்சிருச்சு ஏதோ ஒரு வகையிலன்னா ஹிட்தான். நல்லது.

    ReplyDelete
    Replies
    1. //கல்யாணம் ஆயிட்டதால இல்ல... ஆகறதுக்கு முன்னாலயும் கூட மில்க் ஆண்ட்டி மாதிரிதான்யா இருப்பாங்க. // அதுவும் சரிதான் வாத்தியாரே.. நந்திதாவை நடிக்க வைத்திருக்கலாம் :-)

      Delete
  4. போட்டுட்டான்யா திரை விமர்சனம்.. ஹஹஹா..

    ReplyDelete
  5. அடிபொலி?? -- தமிழ் விமர்சனத்தில் மலையாள வாசனை..செல்லாது செல்லாது.. ;)

    ReplyDelete
    Replies
    1. தமிழ்ப் பட விமர்சனத்துல மலையாள வார்த்தை வந்ததுக்கு ஏதும் குறியீடு உண்டா ஆவி?

      Delete
    2. //தமிழ் விமர்சனத்தில் மலையாள வாசனை..செல்லாது செல்லாது.. ;)// உங்கள யாரு மோந்து பார்க்க சொன்னது.. வந்தா பேசாம படிக்கணும் அத வுட்டுட்டு :-)))))))

      Delete
    3. அடிபொலி இருந்த இருந்த இடத்தில் முதலில் அதகளம் என்று தான் எழுதியிருந்தேன்.. அப்புறம்தான் அடிபொலி என்று மாற்றினேன்.. அதனால் தான் நாலு பேர் அதைப் பற்றிப் பேசுகிறீர்கள் :-)

      Delete
  6. //முதல்நாள் இரவுக் காட்சிகளிலும்// வேகமா படிச்சதுல முதலிரவுக் காட்சியிலும் னு படிச்சு தொலைச்சுட்டேன்.. எங்கடா நாம அந்தக் காட்சிய மிஸ் பண்ணிட்டமான்னு ஒரு நிமிஷம் யோசிக்க வச்சுது.. ஹிஹிஹி..

    ReplyDelete
    Replies
    1. எப்படி ஆவி! நானும் முதல்ல இப்படித்தான் படிச்சேன்.

      Delete
    2. நீங்க நல்லா வருவீங்க ஆவி பாஸ் :-) எங்க தூக்க கலக்கத்துல நான்தான் தப்பா எழுதிட்டனோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன் :-)

      Delete
    3. மொக்கராசு ஆலோசோ வித் தி சேம் பிராப்ளம், திஸ் லைன்!

      Delete
    4. பாருங்க எல்லோருக்கும் ஒரே மாறி தோணுதுன்னா எழுதின உங்க குத்தமா, படிச்ச எங்க குத்தமா? சொல்லுங்க யுவர் ஆனர்!!

      Delete
  7. பாக்கனும்கிற இன்ட்ரெஸ்ட் இன்னும் வரலை சீனு. ஒருவேளை சதுரங்க வேட்டை பாத்ததுக்கபுறம் வருமோ என்னமோ.....

    ReplyDelete
    Replies
    1. யோவ்.. அதான் ஒண்ணுக்கு ரெண்டு பேர் சொல்றோம்ல பாருய்யா.. ரெண்டு படத்தையும் பாரு.. எவன் கேக்கப்போறான்.. என்ன கெட்டு விடப் போகிறது..?

      Delete
    2. வே.இ.ப ரொம்ப நாளைக்குப் பின் எதிர்பார்த்துச் சென்ற படம் ஏமாற்றாமல் விட்டது ஐந்தில் தான்.. பொழுது போக்குப் படம் தானே நம்பிப் பார்க்கலாம்

      Delete
  8. தலையைத் தொங்கபோட்டுக் கொண்டு சொல்ல தயாராக இல்லை...!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு புரியக் கூடாது என்பதற்காகவே எழுதப்பட்ட கருத்துரையா டிடி இது :-))))))

      Delete
  9. மிஸ்டர் நல்ல தம்பி, VIP ஐ பொறுத்தவரை பொட்டிய வாங்க ஏகப்பட்ட போட்டி இருந்தது.. நீங்க சொல்ற டார்ச்சர் எல்லாம் உண்மையில்ல..

    ReplyDelete
    Replies
    1. தெர்ல பாஸு.. இது நான் படிச்ச நியுஸு... இணையத்துல அதுவும் சினிமாத்துறைலஎது உண்மை எது பொய்ன்றதா ஆண்டவனாலக் கூட கண்டுபிடிக்க முடியாது :-)

      Delete
  10. நல்லதொரு விமர்சனம்..தனுஷின் நடிப்பு எனக்கும் பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. அப்போ தவறவிடாதீங்க சார்

      Delete
  11. சீனுவின் முதல் சினிமா விமர்சனமா? வேறு எதுவும் படிச்சதா நினைவில்லை.
    விமர்சனம் நல்லா. இருக்கு அடிபொலி-மலையாள வார்த்தைன்னு தெரிஞ்சுகிட்டேன். அர்த்தம்தான் தெரியல

    ReplyDelete
    Replies
    1. முரளி சார்,

      இது எனது எத்தனையாவது சினிமா விமர்சனம் என்றே தெரியவில்லை.

      வலைபூ ஆரம்பித்த புதிதில் அதிகமான சினிமா விமர்சனங்களை எழுதியுள்ளேன் ஒரு கட்டத்தில் திரும்பிப் பார்த்தால் வலைப்பூ முழுமையுமே சினிமா விமர்சனங்களாகவே நிரம்பி இருப்பது போல் தோன்றியது. சம காலத்தில் ஒட்டுமொத்த தமிழ் கூறும் இணைய நல்லுலகும் சினிமா விமர்சனங்களை எழுதத் தொடங்கியிருந்தது சோ எனக்குப் பிடித்த அல்லது என்னைப் பாதித்த படங்களை மட்டுமே விமர்சிப்பது என்ற எல்லைக்குள் என்னைக் குறுக்கிக் கொண்டேன் :-)

      //சீனுவின் முதல் சினிமா விமர்சனமா? // முரளி சார் இது பகடி இல்லையே அவ்வவ்வ்வ்வ் :-)

      Delete
  12. அப்ப பார்க்கலாம்னு சொல்றீங்க! :) அப்புறம் அந்த அடிபோளி நல்லா இருக்குமா? அது ஒருவகை ஸ்வீட் தானே? :P

    ReplyDelete
    Replies
    1. யோவ் இருக்கியேளா ? ப்ளேட மிஸ் செய்றோம்ய்யா

      Delete
    2. போளி நல்லா இருக்கும்.. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. பெங்களூர்ல கிடைக்குமா கார்த்திக் :-) ஆமா அடிபோளிண்ணா அடியில இருக்குற போளிதானே :-)

      @சதீஷ் அண்ணே,

      அவரு ரெம்ப பிஸின்னு நினைக்கிறன்.. இல்ல காமிக்ஸ் எழுத்தாளரா மாறிட்டாரான்னு தெர்ல.. தற்போது தலைமறைவா இருக்காரு :-)

      Delete
    3. @சதீஷ்: காமிக்ஸ் பத்தி மட்டும் எழுதறதால, ப்ளாக் காத்தாடுது ஜி! :D

      Delete
  13. வ்ிக்ர்ம்ுக்க்ு அப்ப்ுற்ம் வ்ிள்க்க்ம்ர்ாள்ர்ாற்ால் அட்ிவ்ன்ங்க்ிய்வ்ர் (ப்ட்த்த்ில்) த்ன்ுச்ஷ்த்ான்ன்ு ந்ின்ைக்ிற்ெேன்

    ReplyDelete
    Replies
    1. இருமல் வந்தா இருமி முடிச்சுட்டு அப்பறமா கமென்ட் போட வேண்டியது தானே??

      Delete
    2. ஹா ஹா ஹா...

      Delete
  14. //ஒரு சி செண்டர் பார்வையாளனாக என்னுடைய விமர்சனம் அவ்வளவே. ///
    இந்த விமர்சனம் சி செண்டர் ரேஞ்சுக்கு ராவா இல்ல தல, கொஞ்சம் டீசன்ட்டா பி செண்டர் போல இருக்கு!

    ReplyDelete
  15. விமர்சனத்தை முழுமையாக ரசித்துப் படித்தேன். எழுத்து நடை சிறப்பாக உள்ளது. பாராட்டுகள்.

    ReplyDelete
  16. //இந்தப்பதிவு ஒரு சி செண்டர் பார்வையாளனாக என்னுடைய விமர்சனம் அவ்வளவே. //

    யோவ்.. 'சி' ரோல சென்டர் சீட்ல உக்காந்தத கதைய இப்ப யாரு கேட்டா?

    ReplyDelete
  17. //'த்தா மாஸ் சீன் டா' என்று ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை விமர்சித்துக் கொண்டே நகர்ந்தனர்.//

    உண்மைய சொல்லுய்யா? யார் அந்த பதிவர்?

    ReplyDelete
  18. படத்தின் ட்ரெயிலர் வெளிவந்த போதே, "இது நம்ம கதையா இருக்கும் போலருக்கே" என எண்ண வைத்ததில் இருந்தே படக்குழுவினரின் வெற்றி தொடங்கி விட்டதாய்க் கருதுகின்றேன்..

    சென்னையின் தெருக்களில், இதே பி.இ படித்துவிட்டு வேலைக்காக நாயை விட கேவலமாய் அலையும் என் போன்ற இளைஞர்கள், வேலை கிடைத்ததும் (கிடைத்தால்) எங்களின் முதல் மாத சம்பாத்தியத்தில் இப்படத்தை கண்டுகளிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம்..
    விகடன் விமர்சனக்குழுவை மிஞ்சும் வகையில் தங்களின் விமர்சனம் அமைந்துள்ளது.. எதிர்பார்த்த ஒன்றே..

    வணக்கம்..

    ReplyDelete
  19. படம் சுவாரஸ்யமாக இருக்கிறதோ என்னமோ உங்கள் பதிவுக்கு வந்த விமரிசனங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன!

    ReplyDelete
  20. படம் நாளை பார்க்கலாம் என்று இருக்கின்றோம்...உங்கள் பதிவு அருமை சீனு! எழுதிய விதம் அசத்தல்! தனுஷின் நடிப்பு நல்லா இருக்கும் சீனு...நல்ல வெர்சடைல் ஆக்டர்...ஆடுகளம் ரொம்ப நல்ல பண்ணிருப்பாரு..... அது "அடி பொளி"..சீனு! அதாங்க உங்க பதிவு.....

    ReplyDelete
  21. மிகச் சிறந்த விமர்சனம்(!?).நேற்றுப் பார்த்தேன்,நன்றாக இருந்தது படம்.அலட்டல் இல்லாமல் எடுத்த காட்சிகள்.நச் வசனங்கள் என்று..............நன்றாக இருந்தது.(ஒரு காலத்தில்,அமுல் பேபியாகத் தெரிந்தவர்.............ஹூம்!உங்க எல்லார் வாயிலையும் நெ..........அ........கொ........ஹி!ஹி!!ஹீ!!!ச்சும்மா.)

    ReplyDelete
  22. உங்க திரை விமர்சனத்தை விட வந்திருக்கும் பின்னூட்டங்கள் படிப்பதற்கு "வளரெ நந்நாயிட்டு உண்டு சாரே".

    ReplyDelete