பெரியகுளம் சுற்றுவட்டார மக்களுக்கு கும்பக்கரை குளியலை விட வேறு ஒரு நல்ல குளியல் கிடைக்க வாய்ப்பு இல்லை என நினைக்கிறன். மக்கள் வேன்களிலும் ஆட்டோக்களிலும் வந்த வண்ணமாக இருந்தார்கள். கோடைக்காலம் என்பதால் தண்ணீர் வரத்து மிகக் குறைவாகவே இருந்தது. குற்றால சீசன் சமயத்தில் குளிக்கவே முடியாதாம், அவ்வளவு தண்ணீர் கரைபுரண்டு ஓடுமாம். சூரியனுக்கு இது அப்ரைசல் காலம் போல மும்மரமாக தனது பணியை ஆற்றிக்கொண்டிருந்தது. சுற்றிலும் ஒரு நூறு மரங்கள் இருந்த போதிலும் அத்தனையும் கோமா ஸ்டேஜில் calm-ஆக இருந்தன. நா வறண்டு நீரைத் தேடியது.
இந்த நேரத்தில்தான் பதநீர் விற்றுக் கொண்டிருந்த அந்த பெரியவரைப் பார்த்திருந்தேன்.அவரின் வயது எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கலாம். ஒல்லியான தேகம், எண்ணை தேய்த்து பல நாட்களான தேங்காய்ச் சவரி முடி - இலவம் பஞ்சு நிறம். வாயில் செய்யதோ சொக்கலாலோ புகைந்து கொண்டிருந்தது. ஒரு சொம்பு பதநீரை என்னிடம் விற்று முடித்திருந்த நல்ல நேரத்தில் ஆஜானுபாகுவான ஒரு பெண்மணி வாடிக்கையாளராக வந்தார். அவரோடு ஒரு துணைமணியும் கூடவே வந்தார். இருவருக்கும் வயது ஐம்பதைத் தாண்டி இருக்க வேண்டும். பார்த்தாலே பயனாகம் என்று தெரிந்தது. அருகில் ஒரு பெண்மணி சுடச்சுட மீன் சுட்டுக் கொண்டிருந்தார்.
'என்ன பெரியவரே பைனி எவ்ளோ' பேச்சிலும் பயானகம்.
'சொம்பு இருபது ரூபா, ஓல ஐஞ்சு ரூபா' பீடி புகையுடன் சொற்கள் வெளிவந்து விழுந்தன
'கும்பக்கர சண்முகம் தெரியுமா'
பெரியவருக்கு தெரியாதென நினைக்கிறன், வாடிக்கையாள அம்மாவின் மனம் நொந்து பதனீ குடிக்காமல் போய்விட்டால். மையமாக தெரியும் தெரியாது என்பது போல் தலையை ஆட்டினார் பெரியவர்.
'அவரு மகதேன் நான், இப்போ பெங்களூருல இருக்கோம், இப்போ சொல்லுங்க பதனீ வில எவ்ளோ' அந்தம்மா எதற்கு அடி போடுகிறார் எனப் புரிந்துவிட்டது. பெரியவரும் விடவில்லை 'சொம்பு இருபது ரூபா, ஓல ஐஞ்சு ரூபா' அதே பீடி புகை.
'சொம்பு ஒரு ரூவாக்கு குடிச்ச ஊர்ல, இருபது ரூபாக்கு குடிக்க முடியுமா, பத்து ரூபா தாரேன் ரெண்டு சொம்பு குடுங்க'
பெரியவர் எதுவுமே பேசவில்லை. அப்பெண்மணி தொடர்ந்தார். 'நாட்டுல தர்மம் கொறஞ்சு போச்சு பெரியவரே, அதான் மழையே இல்ல, விக்குற விலைவாசில எல்லாரும் கொள்ள அடிக்காங்க. என்ன பாருங்க எப்படி ஜம்ம்ன்னு இருக்கேன், நாங்கல்லாம் புண்ணியம் பண்ணின குடும்பத்துல பொறந்தவங்க, எல்லாரும் புண்ணியம் பண்ணனும், நல்லது பண்ணனும் இல்ல நாசமாயிருவாங்க' அம்மணியின் பிரசங்கம் எரிச்சலாக இருந்தாலும் பொழுதுபோனது. பெரியவரின் நிலைமைதான் பரிதாபமாக இருந்தது. தன்னுடைய மொத்த கோபத்தையும் கையிலிருந்த பீடியின் மீது காட்டினார். தரையில் போட்டு அதன் தலையில் ஒரு மிதி மிதித்தார்.
'இப்பல்லாம் மொள்ளமாரித்தனம் பண்றவன் தாம்மா ஜம்ம்னு இருக்கான், நல்லவன் எல்லாம் என்னமாதிரி நொடிஞ்சு போய்ட்டான்' என்றார் பெரியவர் ஆதங்கத்தோடு. பெரியவரின் டைமிங் அம்மணிக்கு புரியவில்லை, 'அதெல்லாம் இல்ல என்ன பாருங்க ஜம்ம்னு இருக்கேன்' என்றவர் 'கர்த்தர் வேதத்துல என்ன சொல்லியிருக்காரு தெரியுமா...' என்று தொடர்ந்த அம்மணியை தொடரவிடாமல் ஒரு இளைஞர் பட்டாளம் பதனிக்காக பெரியவரை சூழ்ந்துகொள்ள தப்பிச்சோம்டா சாமி என பெரியவர் பதனீ ஊற்றிக் கொடுப்பதில் மும்மரமாகிவிட்டார்.
இந்த நல்ல நேரத்தில் அருகில் பொறிபட்டுக் கொண்டிருந்த மீனின் வாசனை அந்த அம்மாவின் மூக்கைத் துளைத்திருக்க வேண்டும்.
'என்னம்மா மீன் வில எவ்ளோ'
அந்தம்மா விலையைச் சொல்லிய அடுத்தநொடி இந்தம்மா
''கும்பக்கர சண்முகம் தெரியுமா...'
Tweet |
பலர் இப்படித்தான் அடாவடியாக திரிந்து கொண்டிருக்கிறார்கள் :)))
ReplyDeleteஒவ்வொரு பயணத்திலும் கிடைக்கும் அனுபவங்கள்..... - இதற்காகவே பயணிக்கலாம்! :)))
// புகையுடன் சொற்கள் வெளிவந்து விழுந்தன//
ReplyDeleteசீனு பழுத்த எலக்கியவாதி ஆகிவிட்டதை காட்டும் வரிகள்.. ;-)
//கும்பக்கர சண்முகம் தெரியுமா...'//
ReplyDeleteஹஹஹா.. எல்லார்கிட்டவும் இதே பிட்டு தானா?
ஆமா இதென்ன பதிவு நாடோடி எக்ஸ்பிரஸ்ஸுக்கு நடுவுல - "நாடோடி ஆட்டோவா"
ReplyDeleteAmmaam, neenga namma DD perai solli irukkalaame....... avar elunthu ninnu iruppaar :-)
ReplyDeleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteஇந்த பதிவு கைதேர்ந்த இலக்கியவாதியின் பதிவாகவே தெரிகிறது. சம்பவங்களைக் காட்சி படுத்தும் விதம் தான் மக்களிடையே திரைப்படம் வாயிலாக பேசப்படுகிறது. அந்த வகையில் அசத்தியிருக்கிறீர்கள். கும்பக்கர்ண சண்முகம் தெரியுமா இந்த ஐடியா ரொம்ப நல்லா இருக்கே!! தொடருங்கள் சகோதரர் ஐடியாவைச் சொல்லல, தங்கள் பயணத்தை பயணத்தின் வாயிலாக பதிவை. நன்றி சகோ..
அட ராமா...........
ReplyDeleteதெரியும், இப்ப என்னாங்ரேன்னு யாரும் கேக்கலையா?
பதநீர் விற்கற இடத்திலும் பேரமா? சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள்! அப்புறம் அது என்ன பயனாகம் கொஞ்சம் விளக்குங்கள்! சத்தியமா புரியவில்லை!
ReplyDeleteபெரியவர் சொன்னது சரி தான்...
ReplyDeleteவாவ், பதிவு சின்னதா இருந்தாலும் நச்....
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூவலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_1703.html?showComment=1401109674868#c9081758398151123041
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-