இருபத்தி ஆறு வயதுதான் ஆகிறது. திரும்பிப்பார்த்தால் எத்தனையோ வருடங்களைக் கடந்து திரும்பிப்போகவே முடியாத தூரத்திற்கு ஓடிவந்துவிட்டது போல் தோன்றுகிறது. நிதர்சனமும் அதுதான் என்றாலும் சிலநேரங்களில் ஏன் ஓடுகிறோம் எதற்கு ஓடுகிறோம் என்பதெல்லாம் தெரியாமலேயே ஓடிக்கொண்டு இருப்பது போன்ற ஒரு உணர்வு. பள்ளிக்கூடம் முடிந்து தோள்மேல்தோள் கைபோட்டு காலார நடந்து செல்லும் சிறுவர்களைக் காணும் போதும், வட்டமாய்க் கூடி நின்று ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கலாய்த்து சந்தோஷமாய் சிரித்துப் பேசுகின்ற நண்பர்களைப் பார்க்கும்போதும் தான் ஓடிவந்த தூரத்தின் தொலைவு தெரிகிறது.
நினைத்துப்பார்த்தால் இத்தனை காலமாய் நானும் அந்த சிறுவர்களில் ஒருவனாய்த்தானே அலைந்தேன். நாலுபேர் நிற்கும் உலகத்தில் நானும் ஒருவனாய்த்தானே நின்றிருந்தேன். இப்போதோ திடிரென யாரோ ஒருவர் வலுகட்டயாமாய் என்கரம்பற்றி அந்த உலகத்திலிருந்து இந்த உலகத்திற்கு கடத்தி வந்துவிட்டது போல தோன்றுகிறது. சரி என்னைக் கடத்தி வந்தவர் யாராய் இருக்குமென யோசித்துப்பார்த்தால் அது வேறுயாரும் இல்லை, சத்தியமாய் நானேதான்.
கேட்டபொருளை கேட்ட நேரத்தில் வாங்கித்தராத போதும், நினைத்த நேரத்தில் வாடகை சைக்கிள் ஓட்ட காசு தராதபோதும் 'ச்ச சீக்கிரமா வேலைக்கு போய்ட்டா வாடக சைக்கிள் என்ன சொந்த சைக்கிளே வாங்கிக்கலாம்' என நினைக்க ஆரம்பித்த நொடியிலிருந்தெல்லாம் கடத்தத் தொடங்கியிருக்கிறேன். இப்படியாக ஒவ்வொரு சந்தர்பத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக கடத்தி கடத்தி மொத்தமாக இங்கு வந்து சேர்ந்தபின், ஏன்தான் இங்கே வர ஆசைப்பட்டேனோ என நினைக்கச் செய்துவிட்டது இந்த காலம்.
என்னை விட்டுவிடுங்கள் மீண்டும் பள்ளிகூடத்திற்கே ஓடி விடுகிறேன். மிஞ்சிப் போனால் future continuous tense-ல் ஒரு செண்டன்ஸ் எழுதச்சொல்லி அடிப்பார் பிரிட்டோ டீச்சர். பித்தகோரஸ் தியரத்தை ஐந்துமுறை ஒப்பிக்காத வரை வீட்டிற்கு விடமாட்டார் மணிடீச்சர். அவ்வளவுதானே! பரவாயில்லை. நான் தயார். தயவுசெய்து யாராவது என்னை பள்ளிக்கூடத்தில் போய் சேர்த்து விடுங்களேன். உங்களுக்குக் கோடி புண்ணியமாய்ப் போகும்.
நினைப்பதற்கு நன்றாக இருந்தாலும் அப்படியெல்லாம் நடந்துவிடாதுதான். சரி நடந்தவற்றை நினைத்துப் பார்க்கலாம் என்றாலோ, வருடங்கள் நகரநகர முந்தைய வருடங்களில் நடந்தவை மொத்தமும் கொஞ்சமாக நினைவு நாளங்களில் இருந்து அழியத் தொடங்கிவிட்டன. 'செத்தாலும் இந்த விசயத்த மட்டும் மறக்க முடியாது' என நினைத்த விசயங்களில் பல இப்போது நினைவில் இல்லை. செத்தாலும் மறக்கமுடியாத விசயங்களையே மறந்துவிட்டேன் என்னும் போது இன்னபிற விஷயங்கள் எம்மாத்திரம். கடந்த சில வருடங்கள் வரை பள்ளிக்கூட நாட்களில் நடந்த பெரும்பாலான விசயங்களை அப்படியே நியாபகம் வைத்திருந்தேன். சமீபத்தில் வலுகட்டாயமாக அவற்றை நினைவு கூற முயன்றும் ம்கும் பாதிக்கும் மேல் மறந்துவிட்டது. அதனால்தான் நினைவு நாற்காலியில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அந்த கொஞ்சநஞ்ச விசயங்களையாவது இப்போதே எழுதிவிட முடிவு செய்துள்ளேன், குறைந்தபட்சம் கடைவழி வரும் வரையிலாவது துணைக்கு வருமே என்ற நப்பாசையில்தான்.
என்னதான் என் நியாபகசக்தியின் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை வைத்தாலும் சிலவிஷயங்கள் நேற்று நடந்தது போல் நன்றாக நினைவில் உள்ளது. என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகாமைக்கும் அவற்றை நெருங்கிச்சென்று பார்க்கமுடிகிறது. அப்படிப்பட்ட நினைவுகளில் ஒன்று பதினோரு வருடங்கள் என்னை வளர்த்தெடுத்த ஆர்.சி.ஸ்கூலினுள் நான் நுழைந்த முதல்நாள்.
அட்மிஷன் முடிந்து பேபிகிளாஸில் என்னைத் தள்ளிவிடுவதற்காக அழைத்துச் செல்கையில், எங்கே நான் ஓடிவிடுவேனோ என்ற பயத்திலும் 'அப்படியெல்லாம் உன்னை ஓடவிட மாட்டேன்' என்ற ஜாக்கிரதையிலும் கரம்பற்றி அம்மா அழைத்துச்சென்ற அந்த முதல்நாள் நன்றாக நியாபகம் உள்ளது. பேபி கிளாஸின் முதல்தினத்தில் நிச்சயம் கலர்டிரஸ்தான் அணிவித்திருப்பார்கள். இருப்பதிலேயே கொஞ்சம் புதிய காற்சட்டையும், மிக்கிமவுஸோ அல்லது பூ படமோ வரைந்த செருப்பும் அணிந்திருந்திருக்கலாம்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பிறக்கும் இக்காலத்துக் குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்களின் ஒவ்வொரு தருணங்களையும் புகைப்படமாக்க, ஆவணபடுத்த அவர்களைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமே காத்துக்கிடகிறது. தற்போதைய நாட்களில் 'blessed with a baby girl/boy' என்று டெலிவரி முடிந்த அடுத்த நொடி புகைப்படத்துடன் ஸ்டேடஸ் போடும் அளவிற்குப் பரிணாம வளர்ச்சிஅடைந்த தினத்திற்குள் நுழைந்துவிட்டோம். ஆனால் நம்முடைய காலத்திலோ வருடத்திற்கு ஒருபுகைபடமேனும் எடுக்கப்பட்டவர்கள் பாக்கியசாலிகள்.
என்னோடு சேர்ந்து நானும் வளர்ந்துவிட்டதால் சிறுவயதில் நான் எப்படி இருந்தேன் என்பதை எப்போதோ எடுத்த சில புகைப்படங்கள் தான் அடையாளபடுத்துகின்றன. ஒருவேளை அவையும் இல்லாது போயிருந்தால் சத்தியாமாய் நான் எப்படி இருந்திருப்பேன் என்பது தெரியாமலேயே போயிருக்கும். புகைப்படம் எடுத்த அந்த நாலு பேருக்கு நன்றி.
அம்மா விட்டுச்சென்ற சிறிது நேரத்திலேயே எனக்கு இருப்பு கொள்ளவில்லை, மெல்ல எழுந்து சுண்டு விரலை நீட்டினேன். 'ரீசஸ் போணுமா' என்றார் டீச்சர். 'ம்ம்ம்' என்றேன். புதுஇடம். புதுபள்ளி. பாத்ரூம் எங்கிருக்கிறதென எனக்குத் தெரியாதென்பதால் துணைக்கு என்னுடன் சேர்ந்திருந்த ஒரு சூட்டிப்பான மாணவியையும் அனுப்பிவைத்தார் ஆகச்சிறந்த என் ஆசிரியர். எந்த நேரத்தில் அப்படியொரு முடிவேடுத்தாரோ தெரியவில்லை இப்போவரைக்கும் நானும் அந்த மாணவியும் காதலித்தோம் என்றே நினைத்துக் கொண்டுள்ளான் கார்த்திக்.
வேறவழியே இல்ல தொடரும்...
Tweet |
பள்ளி நாட்களுக்கு திரும்ப காலத்தை ரீவைண்ட் செய்து போய்விட மாட்டோமா... என்பது எல்லோரின் மனதிலும் எழுந்து செல்லும் எண்ணம். அதை அழகா விவரிச்சிருக்கே. அப்படி பள்ளிப் பருவத்துக்குப் போகறதுக்கு டைம் மிஷின் மாதிரி அந்த அனுபவங்களை ரசிச்சு எழுதற இந்தத் தொடர், இல்லே...!
ReplyDeleteபேபி ஸ்கூல்ல சேர்ந்த முதல் நாளே இவ்ளோ பசுமையா நினைவிருக்கு உனக்கு. அப்புறம் எப்படி மத்த விஷயங்கள் மறந்து போகும்? சென்சார் செய்யப்பட் வேண்டியவைங்கறதை நாசூக்காச் சொல்லுது பாரு பயபுள்ள! வுட்டா ‘பால்குடி டேஸ்’ன்னு பொற்த கதையவே எழுதுவான் சீனு. ஹி... ஹி... ஹி...
நன்றி வாத்தியார்...
Delete//சென்சார் செய்யப்பட் வேண்டியவைங்கறதை நாசூக்காச் சொல்லுது பாரு பயபுள்ள!// ஹா ஹா ஹா கண்டுபிடிச்சிடீங்க.. சிலரது பெர்சனல் காரணமாக அவர்களின் பெயர்கள் மட்டும் புனைபெயர்களில் வரும் :-)
எழுதப்படாத வா அல்லது எழுதப்படாதா கேள்விக்குறியா? தலைப்பில் குழப்பம்!
ReplyDelete26 வயதுக்குள்ளேயே இந்த நினைவுகளுக்கு வந்தாச்சா சீனு... கடைசியில் கார்த்திக் என்று முடித்திருப்பதால் கதையோ...
சரி, அப்புறம் தொடர்ந்து படித்தால் தெரிகிறது... இல்லையா!
காலாரா, சத்தியாமாய்.....
Delete//எழுதப்படாத வா அல்லது எழுதப்படாதா கேள்விக்குறியா? தலைப்பில் குழப்பம்!// தலைப்பில் குழப்பம் இல்லை மண்டைக்குள் ஏற்பட்ட கலக்கம் :-) எழுதி முடிக்கும் போது செமயான தூக்கம். அதே தூக்க கலக்கத்துடன் publish செய்ததால் வந்த வினை :-) அப்படி செய்யக்கூடாது என பலமுறை நினைத்தும் தோற்றுப்போகிறேன் :-)
Deleteநன்றி டிடி... இன்னும் பலவும் இருந்தது.. இதுவரை கண்ணில் தென்பட்டதை எல்லாம் திருத்திவிட்டேன்...
Delete//கார்த்திக் என்று முடித்திருப்பதால் கதையோ...// கார்த்திக் வேறு நான் வேறுதான்... இப்படியும் ஒரு வாய்ப்பு இருப்பதை நினைத்துப் பார்க்கல ஸ்ரீராம் சார்... ஒவ்வொருவரின் பார்வையிலும் உலகமும் எழுத்தும் வித்தியாசமானது தான்! இல்லையா.
சுவராஸ்யமாக ஆரம்பிச்சாச்சு.....அஞ்சாப்பு வரை லவ்வுன சொர்ண லெட்சுமியை நீ எழுதிட கூடாது என்ற பயம் என்னுள் எரிகிறது.எட்டாப்பு ராஜலெட்சுமியும் கவிதாவும் என்னை வெகுவாக பாதித்தவர்கள்.போச்சே போச்சே..இந்தப்பய அவ்வளவையும் எழுதிருவானோ?
ReplyDeleteநல்லா இருக்கு ராசா ...தொடரட்டும்.
//டாப்பு ராஜலெட்சுமியும் கவிதாவும் என்னை வெகுவாக பாதித்தவர்கள்.// யாருன்னே அது...
Delete//நல்லா இருக்கு ராசா ...தொடரட்டும்// உங்ககிட்ட இருந்து ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்படி ஒரு பாராட்டு :-) நன்றிண்ணே :-)
நியாயமான ஆசை தான்... பதிவு செய்வதும் நல்லது... மறதியும் நல்லது...
ReplyDelete//மறதியும் நல்லது// மறதி இருப்பதால் தான் இந்த உலகம் ஓரளவிற்கு அமைதியாக சுழல்கிறது இல்லையா டிடி :-)
Delete//என்னோடு சேர்ந்து நானும் வளர்ந்துவிட்டதால் //
ReplyDeleteஅட அட அட....
செத்தாலும் மறக்க முடியாத விஷயங்களை அவ்வப்போது எழுதிவிடுதல் நன்று... இல்லையென்றால் கொஞ்ச நாட்களுக்குள் மறந்துவிடும் அபாயம் உண்டு.... எனக்கும் என் பள்ளிக்காலத்துக்குப் போன உணர்வு....
//எனக்கும் என் பள்ளிக்காலத்துக்குப் போன உணர்வு....// நன்றி ஸ்பை... சிலரது பள்ளிகால நினைவுகளையாவது நினைவுபடுத்தும் படி படுத்தி எடுக்க வேண்டும் அம்புட்டேதேன் :-)
Deleteபடுத்தி எடுக்கறதால ஏற்படற (விபரீத) விளைவுகள் என்னான்னு தெரியுமா சீனு பிரதர்... மண்டே என் தளத்தைப் பார்த்தா அந்த விபரீதம் புரியும்.
Deleteஎன்னைவிட்டு விடுங்கள் மீண்டும் பள்ளிகூடத்திற்கே ஓடி விடுகிறேன். ? ஆஹ்...ஆசை தோசை அப்பளம்...
ReplyDeleteவடையெல்லாம் கிடையாதா கவியாழியாரே :-)
Deleteதாலைப்ப்பூ பீராமதாம்ம்.
ReplyDeleteஹா ஹா ஹா நன்றி அப்பா சார் :-)
Delete:))))))))))))))
Deleteசூப்பர் மச்சி.. இந்த பதிவோட ஸ்டைல் நல்லா இருக்கு..
ReplyDeleteதேங்க்ஸ் மச்சி... நண்பேண்டா :-)
Deleteநினைவுகள்..... தொடர்கதை! :)
ReplyDeleteஎல்லோருக்கும் இருக்கும் ஆசை - மீண்டும் பள்ளிக்குச் செல்லும் வயதாகிவிடாதா எனும் ஏக்கம்.....
//மீண்டும் பள்ளிக்குச் செல்லும் வயதாகிவிடாதா எனும் ஏக்கம்.....
Deleteஆமா வெங்கட் சார்.. அதே தான்... //
//நினைவுகள்..... தொடர்கதை! :)// ஓ பாட்டாவே பாடிட்டீங்களா :-)
தயவுசெய்து யாராவது என்னை பள்ளிக்கூடத்தில் போய் சேர்த்து விடுங்களேன். உங்களுக்குக் கோடி புண்ணியமாய்ப் போகும்.
ReplyDelete>>>
ஸ்கூல்ல சேர்த்து விட நாங்க ரெடி அத்துனூண்டு வயசுல கண்ணாடி போட்டு , யூனிஃபார்ம் காலர்ல கர்சீஃப் பின் பண்ணி, கழுத்துல வாட்டர் பாட்டில் மாட்டி ஷூ போட்டு ஆயா இடுப்பில் உக்காந்து செல்லும் சீனுவைப் பார்க்க எங்களுக்கும் ஆசைதான்!! ஆனா, எந்த ஸ்கூல் இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கும்!?
ராஜி.... :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
Deleteயக்காவ் ...! ஆயா சீனு தம்பிய தூக்கினு போற மாதிரி கற்பனை பண்ணிப் பார்த்தேன் ..... மிடில மிடில :)))))))
Delete@பாலண்ணா
அக்கா சொன்ன மாதிரி யாராவது ஒரு ஆயா நம்ம தொடரும் சீனுவ தூக்கினு போற மாதிரி ஒரு படம் போடுங்களேன் .... அயம் வெயிட்டிங் :)
ReplyDeleteநல்லாருக்கமாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு ....!
கடைவழி ?
நேக்கு ரெம்ப நாளா ஒரு சந்தேகம் இந்த ரீசஸ் ஆங்கில வார்த்தையா ? ஆமாம் என்றால் ஆங்கிலத்தில் அந்த வார்த்தையை எழுதவும் . அதைப்பற்றிய ஒரு ஆராய்ச்சி செய்யவேண்டியுள்ளது :)
Recess is a general term for a period of time in which a group of people is temporarily dismissed from its duties. In parliamentary procedure, a recess is initiated by a motion to recess. It is required that all children who attend school must have this break or recess. If the school does not have a recess that is against the law. It was invented by Bronson Alcott, who wanted his students to have active physical play and time to talk.
Deletehttp://en.wikipedia.org/wiki/Recess_(break)
தோள்மேல்தோள் கைபோட்டு//
ReplyDeleteதோள்மேல் கைபோடலாம் ... தோள்மேல்தோள் எப்படி போடுவது :)
//சந்தர்பத்திலும்// ப் போடுமய்யா நா சர்பத்திலும்னு வாசிச்சு தொலைச்சிட்டன் .
பள்ளிகூடத்திற்கே / க்
வலுகட்டயாமாய் :(
ஏன் ?
//செத்தாலும் இந்த விசயத்த மட்டும் மறக்க முடியாது' என நினைத்த விசயங்களில் பல இப்போது நினைவில் இல்லை. செத்தாலும் மறக்கமுடியாத விசயங்களையே மறந்துவிட்டேன் என்னும் போது இன்னபிற விஷயங்கள் எம்மாத்திரம். //
ReplyDeletesuperb
பள்ளி நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது கிடைக்கும் இன்பம் எல்லையில்லாதது. நல்ல பகிர்வு. எனக்கு என் பள்ளி நினைவுகளை இவை நினைவூட்டின. நன்றி.
ReplyDelete@ஜீவன் சுப்பு
ReplyDeleteபாவம் சீனு, பல நிகழ்வுகளை மறந்துவிட்டாலும், தமிழில் எழுத்து பிழை இல்லாமல் எழுதுவதை மட்டும் மறக்கவில்லை.... அதைபோய் .....:))
தொடருங்கள் சீனு! உங்களின் இந்தப் பதிவு மூலம் யார் யாருடைய சாயமெல்லாம் வெளுக்கப் போகிறதோ? சதீஷ் செல்லதுரையும் வரிசையில் நிற்கிறாரே!
ஜாலியாக ஒரு காமென்ட் போடலாம்னு போட்டேன்...தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!
நினைப்பு பள்ளிக்கூடம் நோக்கி சிவகாமி நினைப்பில் பாடம் மறந்த கதை எல்லாம் வரும்போல !ஹீ தொடர் பதிவு தொடரட்டும்.
ReplyDeleteபள்ளிக்கூட நினைவலைகள் சிறப்பு சீனு. நான்கூட பழைய ஸ்கூல் வயசுக்கு திரும்பி போனா எப்படி இருக்கும்னு சில சமயம் நினைப்பேன்! டைம் மிசின்னு ஒண்ணு இருந்தால் எப்படி இருக்கும்! வாழ்க்கையில சிலதை மாத்தினா என்ன ஆகும்னு சில சமயம் யோசிப்பேன்! அப்புறம் இதெல்லாம் டீவியிலே ஓவரா டப்பிங் படம் பார்த்த பீலிங்க்னு விட்டுருவேன்! தொடர வாழ்த்துக்கள்!
ReplyDeleteகணேஷ் சார் சொன்ன மாதிரி பால் குடிடேஸ்னு தலைப்பு வச்சுருக்கலாம்.
ReplyDeleteஒண் பாத்ரூம் கேட்க ஒற்றை விரலை நீட்டணும்னு பேபி கிளாஸ்ல சேரும்போதே கத்துக்கிட்ட போன புத்திசாலியா இருந்திருக்கயே சீனு.நாங்களெல்லாம் தத்திசாலியாத்தானே இன்னைக்கு வரை இருக்கோம்?
நாட்குறிப்புகள் சுவாரசியம்.
நியாபகமா? ஞாபகமா ?
ReplyDeleteநீ பயன்படுத்தும் மென்பொருளில் "ஞா"வரவில்லை என்று நினைக்கிறன். அல்லது வேண்டுமென்றே நியாபகம் என்று எழுதப்பட்டதா?
//26 வயசு-தான் ஆகிறது//...
ReplyDeleteஅப்ப மீதி.