சிவகாசிக்காரன் ராம்குமார் தனது வலைப்பூவில் புதுகோட்டையில் இருக்கும் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த குடவரைக் கோவில்கள் குறித்து எழுதிய போதே அங்கு செல்ல வேண்டுமென முடிவெடுத்திருந்தோம். புதுக்கோட்டை வருவதாய் இருந்தால் அருகில் இருக்கும் அனைத்து இடங்களையும் சுற்றிக்காட்டுவதாக ராம்குமாரும் வாக்குறுதி கொடுத்திருந்தார். பல்வேறு காரணங்களால் புதுக்கோட்டைப் பயணம் தடைபட்டுக்கொண்டே இருந்த நிலையில் அரசன் தங்கையின் திருமணம் வர அதை ஒரு காரணமாய்க் கொண்டு புதுக்கோட்டை நோக்கி பயணப்பட்டோம்.
இந்த நல்லநாளில் சென்னையில் இருந்து கிளம்பும் சமயம் ராம்குமாரிடம் இருந்து அழைப்பு வந்தது ' நண்பா மானேஜர் வாராரு என்னால உங்க கூட வரமுடியாத நிலை. எப்படி போகணும்ன்னு சொல்றேன், நீங்க சுத்தி பார்த்துகோங்க' என்றார் அசால்ட்டாக. மனிதர் வேறு ஏகத்துக்கும் பிரபலம் ஆகிவிட்டாரா, அவரை எதிர்த்து கேள்வி கேட்கவே பயமாய் இருக்கிறது. ஒருவேளை ஏதேனும் கேட்டுவிட்டால் அதையே ஸ்டேடஸாக்கி விடுவதில் வல்லவர் என்பதால் 'சரி நண்பா, நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்' என்றேன்.
புதுக்கோட்டைக்கு சென்று சேர்ந்தபோது மணி இரவு பத்தரை. பிரபலமாகிவிட்ட காரணத்திலோ என்னவோ தெரியவில்லை நாளுக்குநாள் பாலிசாகிக் கொண்டே போகிறார் ராம்குமார் (ராம்குமாரது காதலிகளின் கவனத்திற்கு). ராம்குமார் அறையின் மொட்டைமாடியில் ஒரு இலக்கிய கூட்டத்தை நிகழ்த்திவிட்டு நித்திரைக்கு செல்லும்பொழுது மணி ஒன்றரையைக் கடந்திருந்தது.
அன்றைய தினத்தில் எங்கெல்லாம் செல்லவேண்டும், எப்படியெல்லாம் செல்ல வேண்டும் மேலும் செல்லும் இடங்கள் பற்றிய சிலகுறிப்புகள் முதலானவற்றை கொடுத்துவிட்டு ராம்குமார் கழண்டுகொள்ள நாங்கள் குடுமியான் மலையை நோக்கி பயணப்பட்டோம்.
புதுக்கோட்டை நகரத்தில் இருந்து சரியாக 20 கி.மீ தொலைவில் மணப்பாறை செல்லும் வழியில் அமைந்துள்ளது குடுமியா ன் மலை. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மட்டுமே சற்றேனும் பெரிய நகரம், மற்றவை அனைத்தும் கிராமங்களே. அதிலும் நாங்கள் பயணித்த அத்தனை பகுதிகளும் மிகவும் வறண்ட கிராமங்கள். செல்லும் பாதை முழுவதும் மரங்கள் இருந்தாலும் எதிலும் பசுமையே இல்லாத ஒருமாதிரியான வறண்ட பூமி. நல்லவேளையாக அனல் காற்று இல்லை. தப்பித்தோம்.
குடுமியான் மலையில் இறங்கியதுமே ஆச்சரியம். கூட்டம் கூட்டமாக சிறியதும் பெரியதுமாய் கும்மாளமடித்துக் கொண்டிருந்தன குரங்குகள். இவை அனைத்தும் ஆவியை வரவேற்க வந்த குரங்குக் கூட்டம் என்று தெரியும். இருந்தும் ஆவியை வரவேற்பதற்காக இத்தனை பேர் அதுவும் கூட்டம் கூட்டமாக வருவார்களென கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை ஆவியும் பிரபலமாகிவிட்டாரோ...!
வழிகாட்டியை பிடித்துகொண்ட ஆவி |
ஒரு சிறிய குன்று, அந்த குன்றின் அடிப்புறத்தில் அமைந்திருக்கும் சௌந்தரநாயகி உடனுறை சிகாநாதர் ஆலயம். கோவிலினுள் நுழையும் போதே அங்கிருக்கும் அமைதியும் ரம்மியமும் கூறிவிடுகின்றன நான் காலத்தால் பழமையானவன் என்று. நுழைந்தவுடன் அமைந்திருக்கும் கல் மண்டபத்தில் விஷ்ணுவின் தசாவதாரா சிற்பங்களை செதுக்கி வைத்திருகிறார்கள். அவற்றை ரசித்துக் கொண்டிருக்கும் போதே ஊர்க்காரர் ஒருவர் அருகில் வந்து ஏதோ பேசத்தொடங்கினார். என்ன பேசினார் என்று தெரியவில்லை ஆனால் அவரது உடல் மொழி 'கோவில சுற்றிக் காட்டுறேன் பணம் தர முடியுமா?' என்பதுபோல் இருந்தது. 'எவ்வளவு வேண்டும்' என்றோம். ஆளரவமற்ற அந்தக் கோவிலில் எங்களை விட்டால் அவருக்கும் வேறு வழியில்லை என்பதால் 'எவ்வளவு கொடுத்தாலும் பரவாயில்லை' என்றார். இவ்வளவு தூரம் வந்துவிட்டு இங்கிருக்கும் சிற்பங்களை வெறும் சிற்பங்களாக மட்டுமே பார்த்துச் செல்வதில் அர்த்தம் இல்லை. இக்கோவிலின் பின்னணி வரலாறு முதலியவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்ததால் அவரை துணைக்கு அழைத்துக் கொண்டோம்.
அங்கே என்ன தெரிகிறது |
குடுமியான் மலையில் இருக்கும் இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில். தற்போது இந்திய தொல்பொருள் துறையின் கீழ் இருக்கும் இக்கோவிலில் ஓசைவழிபாடு குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. நாங்கள் சென்றிருந்த நேரம் கோவிலின் நடைசாத்தபட்டிருந்தது.
மின்சார வெளிச்சம் இல்லாமல் இருள் நிறைந்திருந்த கற்பகிரத்தினுள் மௌனமாய் வீற்றிருந்த சிவலிங்கத்தை ஒருவழியாய்க் கண் டுபிடித்து விட்டோம். இருந்தும் சிவனை தெளிவாகப் பார்க்க முடியவில்லை. தற்செயலாய் கவனித்தபோது சிவனுடைய தலையில் நாகம் போன்ற அமைப்பு காணப்பட்டது. முதலில் அது என்ன என்று தெரியாமல் குழம்பினாலும் நாகம்தான் என்ற முடிவுக்கு வந்திருந்தோம். இந்நேரத்தில் எங்களுக்கு வழித்துணையாய் வந்தவர் ஸ்தல வரலாறு குறித்த கதையைக் கூறினார்.
இந்த பகுதியை ஆண்டுவந்த சோழ மன்னன் கோவிலில் நடைபெறும் தினசரி பூஜையில் நாள்தவறாது கலந்து கொள்வான். ஒருநாள் மிக அதிகமான வேலைப்பளு காரணமாக அவனால் குறித்த நேரத்திற்கு பூஜைக்கு வர இயலவில்லை. மன்னன் வரமாட்டான் என்று முடிவு செய்த கோவில் பூசாரி, பூஜையை முடித்துவிட்டு, இறைவனுக்கு வைத்த மலர்களை அந்த ஊரில் இருந்த தேவதாசியிடம் கொடுத்துவிட்டானாம். இந்நேரத்தில் மன்னன் பூஜைக்கு வந்துவிட, என்ன செய்வதென தெரியாத பூசாரி, அந்த மலர்களை தேவதாசியிடம் இருந்து வாங்கிவந்து மீண்டும் இறைவனின் பூஜைக்கு வைத்துள்ளான். பூஜை முடிந்ததும் அவற்றில் இருந்து ஒரு மலரை எடுத்து மன்னனிடம் பிரசாதமாய் கொடுக்க, அப்படி கொடுத்த ஒரு மலரில் தாசியின் மயிர்கற்றை ஒன்று இருந்துள்ளது. இதுகண்டு ஆத்திரம் அடைந்த மன்னன் பூசாரி மீது கடும் கோபம் கொள்ள, அது இறைவனின் சிகை என்றும். இந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு சிகை இருப்பதாகவும் கூறுகிறான். மன்னன் நம்ப மறுக்கிறான்.
அடுத்தநாள் மன்னன் கோவிலுக்கு வருவதற்கு முன் லிங்கத்தின் மீது ஒரு மயிர்கற்றையை வைத்துவிட்டு, இறைவனிடம் மனமுருகிப் தன்னை மன்னிக்க வேண்டி பிராத்திக்கிறான் பூசாரி. அன்றையதினம் கோவிலுக்கு வந்த மன்னன் நேராக சிவலிங்கத்தின் அருகில் சென்று சிகை இருக்கிறதா என்று பார்கிறான். மன்னன் பார்ப்பதை உணர்ந்துகொண்ட பூசாரி லிங்கத்தின் மீது தான் வைத்த மயிர்களில் இருந்து ஒன்றை எடுத்து காண்பிக்கிறான்.நம்ப மறுக்கும் மன்னன் தன் கைகளாலேயெ ஒரு மயிர்கற்றையைப் பிடித்து இழுக்கிறார். வரவில்லை. மீண்டும் மீண்டும் வலுகொண்டு இழுக்கிறார். ஒரு பெரிய போராட்டத்திற்குப் பின் அவர் கைகளில் ஒரு சிகை சிக்குகிறது. ஆனால் அதிசியமாக அந்த சிகை பிய்த்து எடுக்கப்பட்ட பகுதியில் இருந்து ரத்தம் கசிகிறது.
புணரமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் |
அன்றிலிருந்து சிவனார் சிகாநாதர் ஆனார். இதுதான் தலபுராணம் என்றார் எங்கள் வழிகாட்டி.
திருநலக்குன்றம் என்றும் சிகாநாதர் கோவில் என்றும் அழைக்கப்பட்ட இடம் தற்போது குடுமியான் மலை என்றழைக்கப்படுகிறது.
சோழ மன்னனால் கட்டப்பட்ட இக்கோவிலானது பல்வேறு மன்னர்களின் ஆட்ச்சிகாலத்தில் விரிவு செய்யப்பட்டுள்ளது. சோழன் சிகாநாதருக்கு ஆயிரங்கால் மண்டபத்துடன் கூடிய ஆலயம் எழுப்ப, பாண்டியனோ பத்தாம் நூற்றாண்டில் சௌந்தர நாயகிக்கு ஆலயம் எழுப்பியுள்ளான். இவர்களைத் தொடர்ந்து பதினைந்தாம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த விஜயநகர பேரரசர்கள் கோவிலை புணரமைத்துள்ளனர். மூலவர் சந்திக்கு செல்லும் அர்த்த மண்டபத்தில் பல சிற்பங்கள் உள்ளன. இவை அனைத்துமே மாலிக்கபூர் என்னும் மொகலாய மன்னனின் படையெடுப்பின் போது சிதைக்பட்ட சிற்பங்கள். சிலவற்றில் கை இல்லை, சிலவற்றில் கால் இல்லை, சில மூளியாய் நிற்கின்றன, சில முண்டமாய் நிற்கின்றன.
சிதைக்கப்பட்ட சிற்பங்கள் |
அதன்பின் பதினேழாம் நூற்றாண்டில் நாயக்கர்களின் கீழ் வந்த ஆலயத்தில் நாயக்கர்கள் நூற்றாண்டு மண்டபம் எழுப்பி புணரமைத்துள்ளனர். இங்கு விஷ்ணுவின் தசாவதார சிற்பங்கள் இருப்பதால் இதனை தசாவதார மண்டபம் என்றும் குறிப்பிடுகிறார்கள், மேலும் இச்சிற்பங்களுக்கு மத்தியில் ஒரு நிர்வாண மங்கையின் சிலையும் அவளை சிவனடியார்கள் காமத்தோடு நிர்வாணமாக துரத்தி செல்வது போன்றும் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது . இச்சிலையானது சைவ வைணவ சண்டைகளை சித்தரிக்கும் வண்ணம் வடிக்கப்பட்டுள்ளதாக இருக்க வேண்டும். இதே மண்டபத்தின் இரண்டு தூண்களில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. குதிரையின் மீது அமர்ந்திருக்கும் இளவயது கல்கி பகவானாக ஒரு தூணிலும், அதையே குதிரையில் முதியவராக அமர்ந்திருக்கும் கல்கி பகவானாக மற்றொரு தூணிலும் மிக அற்புதமாக வடிவமைத்துள்ளனர்.
மேலும் நாயக்கர்கள் கட்டிய இந்த நூற்றுக்கால் மண்டபமானது மாலிக்கபூர் படையெடுப்பிற்கு பின்னர் கட்டப்பட்டது என்பதால் எவ்வித சேதாரமும் இல்லாமல் தப்பித்து நிற்கிறது. இருந்தும் முறையான பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்ட இக்கோவிலை இந்த தொல்பொருள் துறை தனது கட்டுப்பாட்டினுள் கொணர்ந்து புணரமைத்து வருகிறது. இடிக்கப்பட்ட/இடிபட்ட மண்டபங்களை மீண்டும் எழுப்பியுள்ளனர் என்பது கூடுதல் தகவல். எங்குமே இயற்கை வெளிச்சத்தைத் தவிர வேறு வேறு வெளிச்சம் இல்லை. நல்லவேளை பகல் பொழுதில் சென்றதால் தப்பித்தோம்.
கல்கி பகவான் இளமை மற்றும் முதுமை நிலைகளில்
எங்கள் வழிகாட்டி அடுத்ததாக எங்களை அழைத்துச் சென்ற இடம் திருமேற்றளி என்னும் ஆதிகோவில். குடுமியான் மலையில் கட்டப்பட்ட முதல் குடவரைக் கோவிலும் இதுவே. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டார். குடவரைக் கோவிலினுள் நுழையும் முன் அதனருகில் பாறைகளில் பொறிக்கப்பட்ட சில கல்வெட்டுகளைக் காட்டினார். பாலிகிரந்த மொழியில் எழுதப்பட்ட இக்கல்வெட்டானது இசைக் கல்வெட்டு என்றும். இசைக்கான இலக்கண குறிப்புக்கள் இங்கு மட்டுமே கல்வெட்டில் பொறிக்கபட்டுள்ளதாயும் கூறினார். மேலும் இவற்றின் அருகே தொன்மை இசைக் கருவிகளின் சிற்பங்களும் செதுக்கபட்டிருந்தன. ஆவி எப்படியாவது அதில் இருக்கும் படிமங்களை படித்துவிடுவது என்று எவ்வளவோ முயன்று பார்த்தார். அந்தோ பரிதாபம் அவருக்கு பாலிகிரந்தம் தெரியவில்லை என்பதால் இசைக் கல்வெட்டு தப்பித்தது கூடவே நாங்களும்.
சிலபல படிகளுடன் மேலேறினால் வருவது குடவரைக் கோவில். திருசெந்தூரில் வள்ளியை மணமுடித்த பின் முருகன் இருந்ததாய் கூறப்படும் ஒரு குகைக் கோவில் உண்டு. அது இயற்கையான மிகபெரிய குகை. அதுபோலவே இங்கும் ஒரு குகை உள்ளது இது மனிதர்களால் செயற்கையாக குடையப்பட்ட குகை (அ) குடவரைக் கோவில்.
சிங்கத்தின் குகையைப் போன்ற மிகபெரிய குகையைப் போல் குடைந்துள்ளார்கள். ஒரே நேரத்தில் இருபது பேர் வரை நிற்கமுடியும் அளவிற்கு மிகபெரிய குடவரைக் கோவில். அன்றைய தினத்தில் நாங்கள் பார்த்த மிகபெரிய குடவரைக் கோவிலும் இதுவே. கோவிலின் உள்ளே சிவபெருமான் தனியே தவம் புரிந்து கொண்டுள்ளார். இந்த லிங்கமானது தனியாக செய்து பொருத்தப்பட்ட லிங்கமல்ல, அங்கே அப்படியே செதுக்கப்பட்ட லிங்கம். மலையைக் குடையும் பொழுது, அதே பாறையிலேயே சிவபெருமானுக்கான லிங்கத்தையும் வடித்துள்ளனர்.
குடவரைக் கோவில் என்பதால் இயற்கை வெளிச்சம் நுழையவும் தடா. அந்த இடமே கும்மிருட்டாக இருந்தது. எங்கள் வழிகாட்டியின் கையிலிருந்த டார்ச் லைட் தான் ஒளி வழங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில் குடவரைக் கோவிலின் இடப்புறம் வெளிச்சம் பாய்ச்சினார் வழிகாட்டி. அசந்துவிட்டோம். அத்தனை இருட்டில், திடிரென்று வெளிச்சம் பாய்ச்சப்படும் பொழுது உங்கள் அருகில் பிரம்மாண்டமாய் ஒரு உருவம் நின்றால் எப்படியிருக்கும். அப்படித்தான் நாங்களும் உணர்ந்தோம். அவர்கள் வேறுயாருமில்லை துவார பாலகர்கள்தான். இக்கோவிலின் இருபுறமும் பிரம்மாண்டமாய் நின்ற நிலையில் புன்னகை சிந்துகிறார்கள் இரு துவாரபாலகர்களும். அப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ இத்தனை திறமையானவனா தமிழன். ஆர்வமிருப்பின் தவறவிட்டு விடாதீர்கள். தமிழனின் கலையார்வத்துக்கும், கலை நுணுக்கத்துக்கும், கலை நேர்த்திக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இந்த குடவரைக் கோவில்.
புன்னகையுடன் துவாரபாலகர் |
மற்றொரு முக்கியமான விஷயம், எங்களுடன் வந்த வழிகாட்டி இல்லையென்றால் அடைத்துக் கிடக்கும் இந்த குடவரைக் கோவிலை அடைத்த நிலையில் அது ஏதோ ஒரு அறை என்ற மனநிலையிலேயே கடந்திருப்போம். நல்லவேளை அவர் அங்கிருந்தார், எங்களை அழைத்தார், காண்பித்தார். நாங்களும் மகிழ்ந்தோம். எங்கள் பயணத்தின் ஆரம்பமே அசத்தலாய் இருந்ததில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. வழிகாட்டிக்கு நூறு ரூபாய் வழங்கிவிட்டு அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் சித்தன்னவாசல்.
Tweet |
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசுவாரஸ்ய விவரங்கள் சீனு. கோவில் படங்கள் இன்னும் இரண்டு பகிர்ந்திருக்கலாமே..
ReplyDeleteநானும் புதுக்கோட்டை பக்கத்தில்தான் வளர்ந்தது எல்லாம், ஆனால் ஒரு முறை கூட இங்கு சென்றதில்லை, இதை பார்க்கும்போதும் படிக்கும்போதும் மிஸ் செய்துவிட்டோமே என்று தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி சீனு..... அடுத்த முறை இது போல செல்லும்போது சொல்லுங்களேன்.
ReplyDeleteSeenu very intrest keept up
ReplyDeleteதஞ்சையில் பல வருடங்கள் இருந்தபோதிலும் சித்தன்ன வாசல் குடவரைக்கொவில் செல்லும் வாய்ப்பு கிட்டியதில்லை.
ReplyDeleteசீனு அதை கிட்ட கொண்டு வந்து கிட்ட செய்துவிட்டார்.
உங்கள் கம்பியர்ங்க் மிகவும் ரசித்தேன். (ஆவிப்பா விழாவில்)
இது போன்ற தலங்களை அடைந்து அங்குள்ள சிறப்புக்களை ஒரு புத்தக வடிவிலே விரைவிலே கொண்டு வாருங்கள்.
சுப்பு தாத்தா.
ஆஹா! குடுமியான்மலையை பார்த்தே ஆகனும்ன்னு மனசுல ஆசை வந்திட்டுது. இந்த கோடை விடுமுறைக்கு அவசியம் போய் வரனும்.
ReplyDeleteஸ்தல வரலாறு குறித்த தகவல்களுக்கு நன்றி...
ReplyDeleteமொட்டைமாடி - ஓர் இலக்கிய கூட்டம் - அடுத்த பகிர்வில்...?
கப்ஸா, கரடி விடறதெல்லாம் நாங்க ஏத்துக்க மாட்டோம்(சிகை..), மாலிகாபூர் கூட்டம் கையில பெரிய சுத்தி வெச்சுகிட்டே இருந்திருப்பானுகளோ !. சிவனடியார்கள் துரத்தல் சிலை போட்டோ இல்லையா ? பாலிகிரந்த மொழி...எட்டா...ம் அறிவு இருந்தா படிச்சிரலாம்.
ReplyDeletehttp://maragadham.blogspot.in/2010/11/blog-post_18.html
ReplyDeleteநல்ல பகிர்வு! நல்ல ஒரு சுர்றுலா கட்டுரைப் படித்த உணர்வு! பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது!..
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி!
அழகான நடை..
ReplyDeleteசூப்பர் எழுத்து.. அப்படியே ஒவ்வொரு போஸ்ட்டா போட்டு கலக்கவும்.. பாலீஷானதுக்கு காரணம், ஈயம் பூசுபவரிடம் கொடுத்து முகத்தில் லேசாக ரெண்டு கோட்டிங் அடித்தது தான்.. உங்கள் முகமும் பாலீஷ் ஆக வேண்டுமா?
ReplyDeleteஅழகான படங்கள்... விறு விறு...
ReplyDeleteநாங்கல்லாம் சிற்பங்களை சுத்திப்பாத்து படமெடுத்துட்டிருந்தப்ப, நீ கைடையே ஓரமாத் தள்ளிக்கினு போனப்பவே நென்ச்சன்ப்பா... பயபுள்ள ஸ்தல வரலாறுககு அடிபோட்டு பதிவத் தேத்தப் போவுதுன்னு! இருந்தாலும் ரைட்டிங் ஸ்டைலு ஸோக்காதான்பா கீது! கன்டின்யூ...!
ReplyDeleteAthuvum Avar enna sonnarnnu kettappo payapulla "Atha Pathivula solren, padichchukkonga" nnu sollichchu paarunga..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
Deleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்
வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்
இலக்கிய விவாதத்தை நிகழ்த்திவிட்டு நாங்கள் கிளம்புகையில் 12 மணிதானே இருக்கும்... நித்திரைக்குச் செல்லுகையில் மணி ஒன்றரைன்னு சொல்லியிருக்கியே... ஒருவேளை சிவகாசிக்காரனும், தென்காசிக்காரனும் தனியா ஏதாவது இலக்கிய விவாதம் பண்ணீங்களோ...? ஹா.... ஹா...!
ReplyDeleteRajiv Gandhi Salai patriya alasalai "pagirndhadhaai" aduththa naal sivagasikkaran polambinaare.. maranthutteengalaa?
Deleteசூப்பரான பயணக் கட்டுரை! நான் இன்னும் இந்த மலையைப் பார்த்ததில்லை.
ReplyDeleteஅருமையான பயணப்பகிர்வு! சுவாரஸ்யமான நடை! ஒரு முறை அந்த இடங்களுக்கு சென்று பார்க்கத்தூண்டுகிறது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅடுத்த முறை சென்னை வந்தால் போய்ப்பார்க்க வேண்டும் பார்க்கலாம் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதங்களது எழுத்து நடை நானும் உங்களுடன் சேர்ந்து வந்த மாதிரியே உணர வைக்கிறது.
ReplyDeleteவாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
சுவாரஷ்யமான பல விடயங்கள் அடங்கியுள்ள பதிவு. அற்புதங்கள் பல அக்காலத்தில் நடந்துள்ளது. ஏனோ இப்போது உலகமே தலைகீழாக மாறிவிட்டது அதுதான் ஏனென்று புரியவில்லை
ReplyDeleteகோவில் வரலாறு அறிந்தேன் சுவாரசியம். சிறப்பான ஸ்தல பார்வைக் கட்டுரை
ReplyDeleteஇலக்கிய விவாதத்துல என்ன பேசினீங்கனு நாலு வரி எழுதினா கொறஞ்சா போயிரும்?
ReplyDeleteஇதான் குடுமியான் பெயர்க்காரணமா.. சரிதான்.
தமிழன் தான் அந்த சிற்பங்களை செதுக்கினான்றது..... ரொம்ப எதிர்பார்க்கறீங்களோ?
அறிமுகம் செய்ததற்கு நன்றி...
ReplyDeleteசிறப்பான இடம் பற்றிய சிறப்பான தகவல்கள் சீனு.
ReplyDeleteதிருச்சியின் அருகில் இருந்தாலும் ஏனோ இதுவரை குடுமியான் மலை பார்த்ததில்லை!
படங்கள் நன்று. இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாமோ?
ஆஹா ...தெரிஞ்சிருர்ந்தா அந்த மலைக்கோவிலுக்கும் கூட்டிக்கிட்டுப் போகச் சொல்லியிருப்பேன். மேலும் நார்த்தாமலை குடவறைக் கோவிலும் பாத்திருக்கலாம்..!!
ReplyDelete