ஒரு சிறிய முன்னுரை :
கோவைஆவி என்னும் தளத்தில் அமானுஷ்யமாக இயங்கிவரும் ஆவிக்கு எப்போது அந்த ஆசை தோன்றியது என்று தெரியவில்லை, கடந்தவாரம் நள்ளிரவு ஆவிகள் அலையும் பன்னிரண்டு மணியளவில் ஆவியிடம் இருந்து ஒரு கால் "ஹலோ சீனு" என்றார் "சொல்லுங்க ஆவி" என்றேன் பின்வருவதை சொன்னார்.
'ஹலோ நாங்களும் இஞ்சினியர் தான்' புக் எழுதி முடிச்சிட்டேன், இன்னும் ரெண்டு மாசத்துல கோவை புக்பேர்ல அந்த புக்க ரிலீஸ் பண்ணிரலாம்னு முடிவு பண்ணிருக்கேன், லாஸ்ட் வீக் வாத்தியார் கோவை வந்தப்போ லேஅவுட் பத்தி கேட்டேன் செஞ்சு தாரதா சொல்லிட்டாரு என்றபடி ஆனந்த் ஒரு ஆனந்த அதிர்ச்சி அளித்தார். "சீனு என்னோட புத்தகத்துக்கு நீங்க தான் அறிமுகவுரை எழுதணும், அப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கும்னு." "ஐயோ ஆவி பாஸ் நான் வெறும் மனுஷன் தான் ஆவி எழுதின புக்குக்கு நான் எப்படி விமர்சனம் எழுத முடியும்"ன்னு ஜகா வாங்கினேன்.
என் மீது தொற்றிக் கொண்ட ஆவி என்னை விடுவதாயில்லை "இப்போ நீ எழுதி தராட்டா சென்னைக்கு பறந்து வந்துருவேன்னு" மிரட்டவே அவருடைய புத்தகத்திற்கு என்னுடைய அறிமுகவுரை எழுதிவிட்டேன்.
அந்த அறிமுகவுரை உங்கள் பார்வைக்கு
எங்கோ ஓரிடத்தில் எழுதிக் கொண்டிருக்கும் ஒருவரின் எழுத்துக்களை மிக அருகாமையில் உணரச் செய்யும் வல்லமை பதிவுலகிற்கு உண்டு, அப்படிப்பட்ட பதிவுலகம் மூலம் நண்பரானவர் ஆனந்த விஜயராகவன். பெற்றோர் வைத்த அழகிய பெயரைத் துறந்து இணையத்தில் ஆவியாக வளம் வந்து கொண்டுள்ளார். ஆவி என்ற வித்தியாசமான பெயரே இவர் மீதான ஈர்ப்பை வெகு இயல்பாக வரவழைத்துவிடுகிறது.
"ஹலோ நாங்களும் இஞ்சினியர் தான்" என்ற பெயரில் தான் எழுதி இருக்கும் புத்தகத்தின் தலைப்பும் நம்மை வெகுஇயல்பாக ஈர்க்கிறது. தற்காலத்தில் தமிழகமே "ஹலோ நாங்களும் இஞ்சினியர் தான்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் சமகாலத்தில் தனது இஞ்சினியரிங் கல்லூரி வாழ்வின் படிமங்களை பாஸ்கர் ஜீவா கராத்தே சங்கீதா ரமாதேவி காதல் நட்பு என்ற குறியீடுகள் மூலம் தன்னுள் படிந்த விழுமியங்களை மற்றும் நினைவலைகளை பின்நோக்கிப் பார்த்து ஆங்கிலத்தில் காக்டெயில் என்று கூறிவார்களே அப்படியொரு கலவையாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
நாமக்கல் மாவட்டத்தில் கிராயூர் என்னும் கிராமத்தில் இருக்கும் பாலிடெக்னிக்கில் இருந்து தொடங்கும் கதை மெல்ல நட்பு காதல் நாமக்கல் கிராயூர் என்று கிராமம் கிராமமாக பயணிக்கிறது.
பல இடங்களில் இவரது இயல்பான அதே நேரத்தில் கொஞ்சம் நையாண்டி கலந்து எழுதும் இவரது நடை நம் உதட்டில் சிறு புன்னகையைப் மலரச் செய்ய தவறுவதில்லை, தன்னுடைய வகுப்பில் தான் அமர நினைத்த செகண்ட் பெஞ்சானது சக மாணவரால் தட்டிப் பறிக்கப்படுகிறது, சிறிது நேரத்தில் தனது வகுப்பாசிரியர் மூலம் மீண்டும் கிடக்கும் பொழுது ஆவி இப்படி எழுதுகிறார்.
செகண்ட் பெஞ்ச் கார்னர் சீட் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி.. என் பக்கத்தில் இருந்த, எனது இடத்தை ஆக்ரமித்த அந்த லேண்ட் மாபியாவை பார்த்து ஒரு வெற்றிப் புன்னகை பூத்தேன்.
தன்னுடைய வகுப்பில் சங்கீதா என்ற ஒரே ஒரு மாணவி மட்டும் தான் என்றறியப்படும் பொழுது கூட அந்தக் கவலையை ஆவி சந்தோசமாக சொல்கிறார்.
காய்கறிகள் இல்லாத போது கறிவேப்பில்லை கூட சுவையாக தெரியும் என்பது போல ஒற்றை மாணவியாய் அவள் தான் எல்லோருக்கும் ஒரே டைம் பாஸ்.
கதையில் திடீர் திருப்பமே சங்கீதா என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் சங்கீதாவுடன் இன்னும் சில மாணவிகளும் வகுப்பினுள் நுழைகின்றனர். இங்கிருந்து கதையின் திசை மாறுகிறது அல்லது சங்கீதாவின் தோழி ரமாதேவியால் மாற்றபடுகிறது.
ஆவி எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமானவர் தான், அதனால் தான் ஹீரோயின் அறிமுகப்படலத்தில் சங்கீதாவை அறிமுகம் செய்துவிட்டு ஹீரோயின் தோழி அறிமுகப்படலத்தில் ஹீரோயினை அறிமுகம் செய்து எழுத்துப் புரட்சி செய்துள்ளார். அதிலும் தனது ரமாதேவியை எண்ணி சில இடங்களில் இப்படி சிலாகிக்கிறார்.
ரமாதேவி எனும் பெண் பார்ப்பதற்கு கருப்பு நிற கனகா போல் சாயலில் இருந்தாள்
இதைச் சொல்லும்போது கருப்பான அவள் கன்னங்கள் மெலிதாய் சிவந்திருந்தது.
இவரது வித்தியாசமான செயல்கள் இன்னும் நீளுகிறது காதலி அழைத்ததால் தியான வகுப்பு செல்கிறார், அதே நேரத்தில் காதலியுடன் சேர்ந்து ஆஞ்சநேயர் கோவிலுக்கும் செல்கிறார். காதலியுடன் கோவிலுக்குச் செல்வார்கள் என்ற நிலைபாட்டை மாற்றி ஆஞ்சநேயர் கோவிலுக்கும் செல்லலாம் என்ற நிலைபாட்டை ஏற்படுத்தியவர் நண்பர் ஆவியாகத் தான் இருக்கும். அவரது காதலின் படிமங்களை எண்ணி வியந்து கொண்டுள்ளேன்.
ஆண்டவா தைரியத்த கொடு என்று வேண்டிக் கொண்டே" ரமா, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ திங்க் ஐயம் இன் லவ் வித் யூ.." என்றேன்.
என்றபடி காதலியிடம் காதலையும் சொல்லிவிட்டு, ஏற்றுக்கொள்வாளா மறுப்பாளா என்றபடி ஆவி பரிதவிக்கும் இடத்தில் கச்சிதமான வார்த்தைக் கோர்வைகள் கடைந்தெடுத்த எழுத்தாளனின் எழுத்துக்கள்.
ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் அவள் உரிமை என்ற போதும், நிதர்சனத்தை புரிந்து கொள்ள மனம் ஒப்பவில்லை.
சில இடங்களில் ஆவியின் காதலியான ரமாதேவியின் செய்கை நம்முள் ஒருவித வியப்பை ஏற்படுத்துகிறது. தன் காதலியுடன் முதல் முறை பேருந்தில் பயணிக்கிறார், இன்னும் காதலை வெளிபடுத்தவில்லை, ஒருவருக்கொருவர் முழுமையாய் அறிமுகம் செய்திருக்கவும் இல்லை அந்நேரம் ரமா ஒரு கேள்வி கேட்கிறாள்,
"உங்க வீட்ல எவ்ளோ பேர்? " என்றாள்..
அதற்கு ஆவி
" மூணு பேர்" என்றேன்.
" நீங்க, அப்பா அம்மா மட்டும் தானா?"
" இல்ல, ஒரு தங்கையும், பாட்டியும் இருக்காங்க.."
"அப்புறம் மூணு பேர்னு சொன்னீங்க.."
"ஆமாங்க, வீட்டுல என்னை ஆனந்துன்னும் கூப்பிடுவாங்க, ராஜான்னும் கூப்பிடுவாங்க, அம்மா சிலசமயம் கண்ணான்னு கூப்பிடுவாங்க.. அதைத்தான் கேக்கறீங்கன்னு நெனச்சேன்." நான் சொல்லவும் அவள் இதழ்களில் பூத்திருந்த புன்னகை என் மனதை என்னவோ செய்தது.
இந்தப் பதிலைக் கேட்டதும் என்னுள் ஒரு ஆச்சரியம். இப்படி ஒரு புத்திசாலித்தனமான பதிலைக் கேட்டதும் நானாக இருந்திருந்தால் அப்படியே பேருந்தில் இருந்து குதித்திருபேன் ஆனால் அப்பெண்ணோ மெலிதாக புன்னகைத்தாள் என்று குறிப்பிடுவதைப் ஆவி கூறுவதைப் பார்த்தால் அந்தப் பெண் எவ்வளவு பெரிய அதிர்ச்சியையும் தாங்கக் கூடியவள் என்றே அவதானிக்க வேண்டியுள்ளது.
மிக அருமையான ஒரு புத்தகத்தை எழுதி அதற்கு ஒரு பொடியனை அறிமுக உரை எழுதச் செய்த ஆவி அவர்களுக்கு என் நன்றிகள். ஆவி இன்னும் பல புத்தகம் எழுத வேண்டும் அத்தனையும் ஒரு எழுத்துப் புரட்சி உண்டுபண்ண வேண்டும் என்று மனம் எல்லாம்வல்ல அந்த ஆண்டவனை பிராத்திகிறது.
ஒரு சிறிய பின்குறிப்பு
நம்மள மதிச்சி ஒருத்தரும் அறிமுகவுரைலா எழுத சொல்லமாட்டாங்க... இந்த மாதிரி கற்பனையா எழுதிகிட்டா தான் உண்டு. அறிமுகவுரை என்ற பெயரில் ஆவியின் தொடருக்கு நான் எழுதியது சத்தியமான கற்பனையே
ஒரு சிறிய குட்டு
பதிவு முழுவதையும் படிக்கமால் பின்குறிப்பை மட்டும் படித்தவர்களுக்கு. ஏன் பாஸ் நான் பதிவு எழுதினா மட்டும் மொதல்ல பின் குறிப்ப படிக்றீங்க :-)))
ஷொட்டு
ஆவி அவர்கள் தனது தளத்தில் எழுதிவரும் ஹலோ நாங்களும் இஞ்சினியர் தான் தொடருக்கு... உங்கள் தொடர் சமீப காலமாக வரவில்லை, விடாம தொடர்ந்து உற்சாகமா எழுதுங்க ஆவி பாஸ்...
Tweet |
நம்மள மதிச்சி ஒருத்தரும் அறிமுகவுரைலா எழுத சொல்லமாட்டாங்க... இந்த மாதிரி கற்பனையா எழுதிகிட்டா தான் உண்டு. அறிமுகவுரை என்ற பெயரில் ஆவியின் தொடருக்கு நான் எழுதியது சத்தியமான கற்பனையே
ReplyDeleteநல்ல கற்பனைதான்..!
அடடா, நாஅன் கூட உண்மைன்னு நம்பிட்டேனே, இனிமே பின்குறிப்பு படிச்சிட்டுதான் சீனுவோட போஸ்ட் படிக்கணும்....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎனக்கு ஒன்னுமே எழுத வரல்லப்பா......... முன்னாடி போட்ட கமண்டையும் அழிச்சுட்டேன்
ReplyDeleteஆவி அண்ணன் சொல்லாமல் புத்தகம் எழுதிட்டார்னு நினைத்தேன் .உங்கள் புத்தக அறிமுக உறையை உண்மை என்றே நம்பி விட்டேன். பின்னாடி டுவிஸ்ட்... நல்லா வருவீங்க...
ReplyDeleteஹா...ஹா... கலக்கல் கற்பனை...
ReplyDeleteகாதல் மன்னனுக்கு இப்படி ஒரு ஆசையா !
ReplyDeleteஅடக் கடவுளே! எல்லாமே டுப்பா? ச்சே உண்மை என்று நம்பி, நானும் இனிமேல் புத்தகங்களுக்கு முன்னுரை எழுதலாமே என்று எனக்கு வந்த நம்பிக்கை. பியூசான பல்பு போல டுமீல் ஆயிடுச்சே!
ReplyDeleteமுதலிலேயே காமெடி கும்மியாக இருக்குமோன்னு நினைச்சேன். நினைத்தபடியே ஆயிற்று. சீனு, உஷார்! நீங்கள் சீரியஸ்ஸாக எழுதினால் கூட காமெடி என்று நினைக்கும் அபாயம் இருக்கிறது.
ReplyDeleteஆனால் ஒரு விஷயம் அப்படியே நூறு சதவிகிதம் உண்மை என்று நம்பும்படி எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
//அப்படியே நூறு சதவிகிதம் உண்மை என்று நம்பும்படி எழுதியிருக்கிறீர்கள்.//
ReplyDeleteசீனு யூ ஆர் சென்ட் பெர்சென்ட் ஃபிட் ஃபார் ரிப்போர்ட்டர் ....!
நானே ஒரு நிமிஷம் உண்மையோன்னு நம்பீட்டேன்னா பார்த்துக்கோயேன்..
Deleteவழமையா ஆகச்சிறந்த , பாக்கியவான் ஆனேன் ன்ற மாதிரியான வார்த்தைகளை அதிகமா உபோயகப்"படுத்திண்டு" இருந்தீரு ... இப்போ அதுகூட ,வெகு இயல்பாக , விழுமியம் , படிமம் ல்லாம் சேர்ந்துடுத்து ....!
ReplyDeleteதமிழை காக்க வந்த தி.கொ.போ.சீ வாழ்க...! வாழ்க ...!
மா.போ.சி.க்கு அப்புறம் இப்போ தி.கொ.போ.சீ தான்..!!
Delete//கருப்பு நிற கனகா//
ReplyDeleteஆக்சுவலி கனகா கருப்புதானே பாஸ் ...? இல்ல ச்சும்மா ஒரு டவுட்டு ....!ஆஆஆஆஆஆஆ.. ங் ...!
உட்டா, காக்கா, ரஜினிகாந்த் எல்லாமே கருப்புன்னு சொல்லுவீங்க போலிருக்கு..என்ன பாஸ் நீங்க..கண்ணாடிய தொடச்சிட்டு பாருங்க..
Delete//கடைந்தெடுத்த எழுத்தாளனின் எழுத்துக்கள்.//
ReplyDeleteஓஓஓஓஓஓ ....! இதுக்கு பேருதான் கடைந்தெடுத்து எழுதுவதா ....?
கடைந்தால் வருவது வெண்ணை.. சீனிவாசன் ஒரு சாரி, சீனிவாசனுக்கு பிடித்ததும் வெண்ணை. அப்போ அவர் தான் "கடைந்தெடுத்தாளன்" !!
Delete//அந்தப் பெண் எவ்வளவு பெரிய அதிர்ச்சியையும் தாங்கக் கூடியவள் என்றே அவதானிக்க வேண்டியுள்ளது.//
ReplyDeleteஇருக்காதா பின்ன ...! ஆவியோடவே பேசுறவங்களுக்கு இதெல்லாம் ஒரு அதிர்ச்சியா ... அட பூங்கோ பாஸ் ...!
யூ டூ சுப்பு??
Delete// ஆண்டவனை பிராத்திகிறது.//
ReplyDeleteஎன்னாது பிராத்திகிறதா ...?
ஹஹஹா.. இதுக்கு பேர்தான் "ஸ்பெல்லி டான்ஸ்"
Deleteநான் ஒரு முட்டாளுங்க. அப்படின்னு சந்திரபாபு பாடினது 100
ReplyDeleteஅப்பப்ப ஞாபகம் வரணும். 110
உங்க பதிவை படிக்கறதுக்கு முன்னாடி இனிமேலாவது
பின்னூட்டங்களை படிக்கணும். 120
இல்லை அப்படின்னு சொன்னா. 100 க்கு போ.
சுப்பு தாத்தா.
தாத்தா காலத்துக்கு ஏத்த மாதிரி பின்னூட்டத்த ப்ரோக்ராமாவே சொல்லிட்டாரு..
Deleteஎப்படிலாம் பதிவு தேத்தறாங்கப்பா..நம்மால சொந்தமா ஒரு பதிவே எழுத நேரம் இல்ல.இதுல எங்க கற்பனையா எங்க எழுதறது.
ReplyDeleteநல்ல பலியாடா ஒன்ன தேடிப் பிடிங்க.. அப்புறம் பாருங்க கற்பனை ஊற்றா வரும்!!
Delete//உங்கள் தொடர் சமீப காலமாக வரவில்லை//
ReplyDeleteபதிவர் சந்திப்பு பதிவுகள், வலைச்சரத் தொடர்,ஆவிப்பா அதற்கிடையில் சினிமா விமர்சனங்கள் என மூளை மூச்சுவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. (அப்படி ஒண்ணு இருக்கான்னு கேக்கப்படாது) அடுத்த வாரத்தில் கொஞ்சம் ப்ரீ ஆயிடுவேன். அடுத்த வாரம் எழுத முயற்சிக்கிறேன்.
//இப்படி ஒரு புத்திசாலித்தனமான பதிலைக் கேட்டதும் நானாக இருந்திருந்தால் அப்படியே பேருந்தில் இருந்து குதித்திருபேன் //
ReplyDeleteஓடும் பேருந்திலிருந்து இறங்கக்கூடாது தம்பி, ஆபத்து..
ஆரம்பிக்கும்போதே ஒரு டவுட்டு இருந்துச்சு.
ReplyDeleteஆவி அந்த புத்தகத்தை வெளியிடும்போது இதையே முகவுரையா வச்சுக்கலாம்
அட, நான் டைப் பண்ணி பப்ளிஷ் பண்ணிட்டு பார்த்தா நீங்களும் அதே சொல்லியிருக்கீங்க..
Deleteஇந்தப் பதிவில் சீனு ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்தி பின் பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு கலாய்த்திருந்தாலும் அன்புத் தம்பியின் இந்த காமெடி கட்டுரையை படித்த போது விழுந்து விழுந்து சிரித்தேன். கடைசியில் வரும் வழியில் பிளாஸ்டர் வாங்க வேண்டியதாயிற்று.
ReplyDeleteஆனால் என் புத்தகத்திற்கு இதைவிட நகைச்சுவையாக யாராலும் முன்னுரை எழுதிவிட முடியாது என்பதால் எனது கதை இதையே அறிமுக உரையாக கொண்டிருக்கும் என்பதை சந்தோஷமாக தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
நானும் நிஜம் என்று முழுப்பதிவையும் படிச்சாள் இப்படியா ஏமாத்துவது சீனு இனி
ReplyDeleteபின்குறிப்பு படித்த பின் தான் உங்க பதிவுகளை படிக்கணும்:))) நல்லா இருக்கு எழுத்துநடை!
ஆவியின் எழுத்தும் அதற்கு உங்கள் முன்னரையும்
ReplyDeleteமிகவும் சிறப்பாக உள்ளன! இருவருக்கும் வாழ்து
முன் பதிவு உண்டா(நூலுக்கு)
நன்றி ஐயா..
ReplyDeleteஆவி கூடிய சீக்கிரமே புத்தகம் வெளியிட வாழ்த்துகள். நேற்று ஏதோ ஒரு புத்தகத்தில் நஸ்ரியா படம் பார்த்ததும் எனக்கு ஆவி நினைவுதான் வந்தது!:)
ReplyDeleteஅட வுடுங்கப்பா..ரமாதேவி காதல் உண்மையா? உடாஸா? ;-)
ReplyDeleteநமக்குத் தெரியாம எப்போ ஆவி கதையை முடித்தார் மீதியை வெண்திரையில் காண்பீர் என்பதாக புத்தகம் வெளியிட்ட பின் படிக்கச் சொல்லிட்டாரோன்னு நினைத்தேன்... அருமையான முன்னுரை சீனு... சில திருத்தங்களுடன் அப்படியே போடலாம் அந்த சில திருத்தங்களைச் சொல்லலாம்னு கீழே பார்த்தால் மூக்குடைந்ததுதான் மிச்சம்....
ReplyDeleteஇது என்ன பதிவர் சந்திப்பை விட்டு புத்தக வெளியீடா என்று நினைத்தேன்..
ReplyDeleteஆவியின் அந்ததொடர் முன்பு படித்தேன்.. தற்போது வேலைப் பளுவால் படிக்க முடியவில்லை.. நாளை ஒரே மூச்சில் படித்து விடுகிறேன்...
ReplyDeleteநீங்கள் எழுதியது கற்பனைஎன்றாலும் 'கைதேர்ந்த' இலக்கிய வாதியின் எழுத்து வாடை அடித்தது சீனு... உண்மையிலேயே அவர் இதை புத்தகமாக வெளியிட்டால் இதையே முன்னுரையாக போடும்படி அவருக்கு பரிந்துரைக்கிறேன்.
காதல் நட்பு என்ற குறியீடுகள் மூலம் தன்னுள் படிந்த விழுமியங்களை மற்றும் நினைவலைகளை பின்நோக்கிப் பார்த்து...
ReplyDeleteஆஹா... பயபுள்ள ஓவர்நைட்ல பின்நவீனத்துவ(?) எழுத்தாளன் ஆயிட்டானே... பட், இந்த டீலிங் எனக்குப் புடிச்சிருக்கு. அடுத்து சீனுவோட புத்தகத்துக்கு நான் ஒரு அணிந்துரை எழுதிடலாமா என் தளத்துலன்னு யோசிச்சிட்டிருக்கேன் இப்ப... ஹா... ஹா...!
அட!! !!! வாழ்த்துகள்.
ReplyDelete