27 Apr 2012

சிரிக்க மூன்று + சிந்திக்க ஏழு


சிரிக்க மூன்று 


1. ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி நான் பேசாதிருக்கும் வரை.....

2. வீட்டை சுத்தப் படுத்துவதற்காகவே பண்டிகைகளை    

      கண்டுபிடித்துள்ளான்     தமிழன் .


3. வெயில் காலத்திற்கும் பனி  காலத்திற்கும் நூல் அளவு தான் 

    வித்தியாசம். 

    எப்படா குளிக்க போறோம்னு யோசிச்சா அது வெயில் காலம்... 

    ஏன்டா குளிக்க போறோம்னு யோசிச்சா அது பனி காலம்...

    # போதி தர்மனின் முந்தைய வாரிசு




சிந்திக்க ஏழு 



1.கடந்ததை நினைத்துக் கலங்காமல் 

   கடக்கப் போவதை நினைத்துக் கடமையாற்றுவோம். 


2.முடிந்தால் முன்னேறு ...

   முடியாவிட்டால் முன்னேற விடு .


3.நான் பூஜ்யமாக இருக்க விரும்பவில்லை... 

   பூஜ்யத்தில் இருந்து தொடங்க விரும்புகிறேன்...

   காரணம்  

   கணிதமும் கணினியும் தங்கள் பயணத்தை... 

   தொடங்குவது பூஜ்யத்தில் இருந்து தான்...


4.வெற்றியிடம் வெற்றியைச் சந்திப்பது போல 

   தோல்வியிடம் தோல்வியைச் சந்திப்பதிலும் 

   பெருமிதம் அடைகிறேன்...


5.குற்றங்களைப் பார்க்கும் பொழுது துரியோதனன் ஆகவும்

   நன்மைகளைப் பார்க்கும் பொழுது துரோணன் ஆகவும் இருக்கும்    
   
   நாம் 

   குற்றங்களைச் செய்து விட்டு நல்லவனாக நடிக்கும் பொழுது 

   மட்டும் சாணக்கியனாக இருக்கின்றோம் 

   #சாணக்கியன்


6.அதிஷ்டம் அதுஇஷ்டம் ஒரு விளக்கம் 

   புகலிடம் பெற நினைத்தவன் புகழிடம் சிக்கினால் 

   - அதிஷ்டம்

   புகழிடம் பெற  நினைத்தவன் புகலிடம் கூட கிடைக்காமல் 

   சிக்கினால்

   - அதுஇஷ்டம்



7. சில நேரங்களில் என்னை எனக்கு
    
    அறவே பிடிபதில்லை !!!

    இருந்தும் உயிர் வாழ்கின்றேன்

    என்னுள் இருப்பவனை பல நேரங்களில்
    
    பிடித்துப் போவதால் !!!


மேற்கூறிய பத்தும் எனது முகநூலில் எழுதியவை. இங்கே பதிவாக உங்கள் பார்வைக்கு  


                                                                                    உணர்ந்ததை உரைக்கிறேன். உரைப்பேன்.

30 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி ராஜா, வந்து வாழ்த்தியதற்கு

      Delete
  2. அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.

    இருப்பினும் எனக்குப்பிடித்தவை:


    //எப்படா குளிக்க போறோம்னு யோசிச்சா அது வெயில் காலம்...

    ஏன்டா குளிக்க போறோம்னு யோசிச்சா அது பனி காலம்...//

    //கடந்ததை நினைத்துக் கலங்காமல்
    கடக்கப் போவதை நினைத்துக் கடமையாற்றுவோம். //

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அய்யா

      Delete
  3. மிக அருமையாக இருக்கிறது நண்பரே. சிறப்பாக தொடருங்கள் உங்கள் எழுத்துக்களை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி பாலா சார். உங்கள் உற்சாகம் எனக்கு ஊக்கம் தருகிறது

      Delete
  4. எனக்கு மிகவும் பிடித்தது சிரிக்க மூன்று மிகவும் அருமை.....வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      Delete
  5. Replies
    1. வருகைக்கு நன்றி ராம்

      Delete
  6. சிரிக்க சிந்திக்க அனைத்தும் அருமை. முதல் இரண்டு "சிரிக்க" சிந்திக்கவும் வைத்தது. எனது வலைப்பதிவிற்கு வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி

    ReplyDelete
  7. சிரிக்க சிந்திக்க அனைத்தும் அருமை. முதல் இரண்டு "சிரிக்க" சிந்திக்கவும் வைத்தது. எனது வலைப்பதிவிற்கு வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி முரளி சார். உங்கள் வாழ்த்துக்களே என் அடுத்த பதிவிற்க்கான உற்சாகங்கள்

      Delete
  8. . வெயில் காலத்திற்கும் பனி காலத்திற்கும் நூல் அளவு தான்

    வித்தியாசம்.

    எப்படா குளிக்க போறோம்னு யோசிச்சா அது வெயில் காலம்...

    ஏன்டா குளிக்க போறோம்னு யோசிச்சா அது பனி காலம்...

    சிரிப்பு இல்லை பாஸ் யதார்த்தமும் அதுதான்...கலக்குறே சீனு...

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நீங்கள் கொடுக்கும் உற்சாகம் தான் அண்ணா.

      Delete
  9. . வெயில் காலத்திற்கும் பனி காலத்திற்கும் நூல் அளவு தான்

    வித்தியாசம்.

    எப்படா குளிக்க போறோம்னு யோசிச்சா அது வெயில் காலம்...

    ஏன்டா குளிக்க போறோம்னு யோசிச்சா அது பனி காலம்...

    சிரிப்பு இல்லை பாஸ் யதார்த்தமும் அதுதான்...கலக்குறே சீனு...

    ReplyDelete
  10. சிரிக்க வைத்த கருத்துக்களும் சிந்திக்க வைத்த கருத்துக்களும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகையே நிறைவளித்தது. வருகைக்குக் கருத்துக்களுக்கும் நன்றி அம்மா

      Delete
  11. செம கருத்துகள் நண்பரே...அனைத்தும் அருமை

    ReplyDelete
  12. எல்லாமே முத்து முத்தா இருக்கு.கலக்கலா எழுதுறீங்க..கீப் இட்அப்..

    ReplyDelete
  13. 3.நான் பூஜ்யமாக இருக்க விரும்பவில்லை...

    பூஜ்யத்தில் இருந்து தொடங்க விரும்புகிறேன்...

    காரணம்

    கணிதமும் கணினியும் தங்கள் பயணத்தை...

    தொடங்குவது பூஜ்யத்தில் இருந்து தான்

    அருமை

    ReplyDelete
  14. அனைத்தும் அருமை..உன்னுடைய முயற்சிக்கு பாராட்டுகள்..

    All the very best

    ReplyDelete
  15. சிரித்தேன் சிந்தித்தேன்.
    நன்று!

    ReplyDelete
  16. சிரித்தேன் சிந்தித்தேன்

    ReplyDelete
  17. arumaiyana pathivu vazhukkal

    ReplyDelete