17 Apr 2012

தொலைந்து போன நாட்கள்


[ குறிப்பு : இந்தக் கதையை நீங்கள் மீண்டும் ஒருமுறை வாசிப்பீர்கள் என்பதற்கு நான் கியாரண்டி] 

உன்னோடு பழக ஆரம்பித்த நாட்களில் நீயும் நானும் மணிகணக்கில் பேசிக் கொண்டிருப்பபோம். நிமிடத்திற்கு ஒரு மெசேஜாவது அனுப்புவோம். இன்றோ எல்லாமே படிப்படியாக குறைந்து நம் மீது நமக்குள்ள காதலும் குறைந்து விட்டதோ என்ற சந்தேகத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன். உன் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையைத் தான் திருமணம் செய்துகொள்ளப் போகின்றாய் என்று முடிவெடுத்த பின் உன்னைத் தடுப்பதற்கு நான் யார்?
இருந்தும் உனக்குப் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேர்வு செய்யும் வேடிக்கையான பொறுப்பை என்னிடம் ஒப்படைதுள்ளதால் மனசாட்சியை ஒதுக்கி வைத்துவிட்டு இத்துடன் அந்த பொருத்தமான மாப்பிள்ளையின் படத்தை இணைத்துள்ளேன். இவன் தான் உனக்கு ஏற்றவன். திருமணம் செய்துகொள் வாழ்த்துக்கள்.'

***********

     மஞ்சள் நிறக் கதிர்களை ஆதவன் உற்பத்தி செய்து கொண்டிருந்த அதிகாலைப் பொழுது, ரம்யமான அந்த மண்டபத்தில் மையமாய் வீற்றிருந்த மணமேடையின் மேல் ஏறினாள் மணப்பெண்ணாக. மஞ்சள் நிறத்தில் அவள் கட்டியிருந்த சேலையும், தங்க ஆபரணங்களால் ஏற்பட்டிருந்த ஜொலிப்பும், அழகை இன்னும் அழகாக்கியிருந்த ஒப்பனைகளும், என்னை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

என் உணர்வுகளை, எனக்கும் அவளுக்குமான உணர்வுகளை, எப்படிச் சொல்லப் போகின்றேன் என்று தெரியாத ஒரு நிலையில் இருந்து சொல்கிறேன், நான் தொலைந்து போன நாட்களை.

     கல்லூரியில் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்தவர்கள் தான் நாங்கள். அவளுடன் படித்த அந்த மூன்று வருடங்களில் ஒருமுறை கூட அவளிடம் பேசியது இல்லை. மூன்றுவருடப் படிப்பு முடிந்து அதிலிருந்தும் மூன்று வருடங்களுக்குப் பின் வகுப்புத் தோழி ஒருத்தியின் திருமணத்தில் சந்தித்தேன். இன்று மணப்பெண்ணாக நிற்பவள், அன்று மணப் பெண்ணின் தோழியாக நின்றுகொண்டிருந்தாள். என்னைப் பார்த்தமாத்திரத்தில் என்னிடம் வந்து பேசினாள். அன்று எங்கள் இருவருக்குமே தெரியாது, நாங்கள் நட்பாகி காதலாகி கசிந்துருகுவோம் என்று. 

     நட்புடன் பழகி, காதலித்து, பின் ஜென்ம விரோதியாகி இப்படி மூன்று நிலைகளைக் கொண்ட காதலில், மூன்று நிலைகளையுமே முழுமையாகப் பரிசளித்தவள் அவள். அதிலும் அந்த மூன்றாம் நிலையை மட்டும் அதிகமாகப் பரிசளித்து அழகு பார்த்தாள்.

     எப்போது சண்டை வரும். எதற்காக சண்டை வரும், என்றெல்லாம் எதிர்பார்கவே முடியாது. சில சமயங்களில் எதற்காக சண்டை போட்டோம் என்று தெரியாமலேயே எங்கள் சண்டை சமாதானத்தில் முடிந்துள்ளது. சந்தோசத்திற்கும் அழுவாள். சண்டைக்கும் அழுவாள். கடற்கரையில் நடந்து கொண்டிருக்கும் பொழுது அவள் கையைப் பிடித்து நடக்க ஆரம்பித்தேன். எனக்கு இதெல்லாம் பிடிக்காது என்று கூறி அழ ஆரம்பித்து விட்டாள். பின்னொரு நாள் அதே கடற்கரையில் ஏன் என் கை பிடித்து நடக்கவில்லை என்று கூறி அழ ஆரம்பித்தாள்.

     இப்போது மணமேடையில் கூட கலங்கிய கண்களுடன் நிற்கின்றாள். இந்த கண்ணீருக்கு காரணம் என்ன? எனக்குத் தெரியவில்லை ஆனால் அவளிடம் பதில் இருக்கும். ஒரு ஓரமாக நின்று இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்ததும் வெட்கத்தில் குனிந்து கொண்டாள். இத்தனை நாள் இல்லாத வெட்கம் இந்த நொடியில் ஏன் வந்திருக்க வேண்டும். நான் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதாலா? இருக்கலாம். அந்த ஒரு பார்வைத் தீண்டலுக்குப் பின் அவள் என்னைப் பார்கவே இல்லை.

     மிகவும் தைரியமானவள். இருந்தும் அவளுக்குள் ஏற்பட்ட வெட்கம் அவள் தைரியத்தை குறைத்திருக்க வேண்டும். கடற்கரையில் அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது போலீஸ் எங்களை பிடித்துக் கொண்டது. எனக்கோ பயத்தில் வயிற்றினுள் நூறு பட்டம் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.

     அவளோ தைரியமாக பேச ஆரம்பித்தாள். " இவன் என் காதலன். இவனைத் தான் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன். இது என் அப்பாவின் நம்பர் வேண்டுமானால் பேசிக் கொள்ளுங்கள்" என்றாள் அசாதாரணமாக. அந்தப் போலிசும் பல முறை முயற்சித்துப் போனை யாரும் எடுக்கவில்லை என்ற எரிச்சலில் எங்களை விடுத்துச் சென்றார். 

     தப்பித்தால் போதுமென்று வேகமாக நடக்க ஆரம்பித்த என்னிடம் " உன் போன் நம்பரத்தான் அவருக் கிட்ட கொடுத்தேன், அப்புறம் அவரு போன் பண்ணினா நான் கேட்டதாச் சொல்லு" என்று சொல்லிக் கொண்டே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். அவளுடன் இருக்கும் நேரத்தில் போனை சைலெண்டில் வைப்பது தான் வழக்கம், அதை அறிந்து சமயோசிதமாக செயல்பட்ட அந்த தைரியம் இன்று என்னைப் பார்த்ததும் வெட்கத்தில் ஒளிந்து கொண்டதோ? 

     சுபமுகூர்த்த வேளை நெருங்கிக் கொண்டிருப்பதை நாதஸ்வரமும் மேளமும் உற்சாகமாகக் கூறிக் கொண்டிருந்ததன. அவளும் நானும் எந்த திருமனதிற்குமே முகூர்த்த நேரத்திற்கு சென்றது கிடையாது. முகூர்த்தம் முடிந்து மண்டபமே காலியாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் மண்டபத்தினுள் நுழைவோம். காரணம் வெறிச்சோடிய , மண்டபத்தில் தான் நாங்கள் தனியாக உட்கார்ந்து பேச முடியும். " நம்ம கல்யானதுக்காவது நாம சரியான முகூர்த்த நேரத்திற்கு வரணும்" என்று கிண்டலாக சொல்வாள். இதோ இன்று முகூர்த்த நேரத்திற்கு முன்னமே மணமேடைக்கு வந்துவிட்டாள். 

     மூன்று மாதங்களுக்கு முன் என்னிடம் " எங்க வீட்ல என்ன உடனே கலயாணம் பண்ணிக்க சொல்றாங்க. அவங்க பாக்ற மாப்பிள்ளை எல்லாரையும் பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிட்டு இருக்கேன். சீக்கிரமா எங்க வீட்ல பேசு. டெய்லி அம்மா அழுறாங்க அவங்கள என்னால சமாளிக்க முடியல" என்றாள் அழுதுகொண்டே. எனக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை அவளை உடனடியாக கல்யாணம் செய்து கொள்ளும் நிலையிலும், வேலையிலும் நான் இல்லை. இது அவளுக்கும் தெரியும். 

     "கொஞ்ச நாள் பொறுத்துக்கோ, இப்ப நான் பண்ற ப்ராஜெக்ட் கண்டிப்பா சக்சஸ் ஆகும், அதோட ரிசல்ட் வந்ததும் நானே உங்க அப்பாகிட்ட வந்து பேசுறன்" இதை தவிர வேறு எதையும் என்னக்கு சொல்லத் தெரியவில்லை. 

     அன்று சிரித்துக் கொண்டே தலையாட்டியவள் அதிலிருந்து சரியாக இரண்டு நாட்கள் கழித்து எனக்கொரு மெயில் அனுப்பினாள். ' இதில் மூன்று போட்டோக்கள் இனைத்துள்ளேன், மூன்றுமே எனக்காக என் வீட்டில் பார்த்த மாப்பிள்ளைகளின் போட்டோக்கள். இதில் எனக்குப் பொருத்தமானவன் யார் என்று கூறு" என்று கேட்டிருந்தாள்.

    இதற்கு முன்பும் இதேபோல் என்னிடம் கேட்டுள்ளாள், நானும் வந்த புகைப்படங்களைப் எல்லாம் பார்காமலேயே ' உனக்குப் பொருத்தமானவன் யாரும் இதில் இல்லை வேண்டாமென்று கூறி விடு' என்றுள்ளேன். அவளும் அதைத் தான் எதிர்பார்ப்பாள்.அவளுக்குப் பொருத்தமானவன் என்னை விட்டால் வேறு யாரும் கிடையாது என்பது போலத் தான் எங்களை நாங்கள் பழக்கி வைத்துள்ளோம். 

     ஆனால் இம்முறையோ அவள் என்னிடம் கேட்ட விதம் வேறு. நானும் உறுதியாக முடிவெடுத்து விட்டேன். எத்தனை நாள் தான் வாழ்வா சாவா என்று போராடுவது. இருப்பதிலேயே ஓரளவிற்கு அழகான புகைப்படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். அந்த நொடியில் என் மனதில் தோன்றிய எண்ணங்கள் அனைத்தையும் எழுத்துக்கள் ஆக்கினேன். 

     'உன்னோடு பழக ஆரம்பித்த நாட்களில் நீயும் நானும் மணிகணக்கில் பேசிக் கொண்டிருப்பபோம். நிமிடத்திற்கு ஒரு மெசேஜாவது அனுப்புவோம். இன்றோ எல்லாமே படிப்படியாக குறைந்து நம் மீது நமக்குள்ள காதலும் குறைந்து விட்டதோ என்ற சந்தேகத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன். உன் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையைத் தான் திருமணம் செய்துகொள்ளப் போகின்றாய் என்று முடிவெடுத்த பின் உன்னைத் தடுப்பதற்கு நான் யார்? 

     இருந்தும் உனக்குப் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேர்வு செய்யும் வேடிக்கையான பொறுப்பை என்னிடம் ஒப்படைதுள்ளதால் , மனசாட்சியை ஒதுக்கி வைத்துவிட்டு இத்துடன் அந்த பொருத்தமான மாப்பிள்ளையின் படத்தை இணைத்துள்ளேன். இவன் தான் உனக்கு ஏற்றவன். திருமணம் செய்துகொள் வாழ்த்துக்கள்.'

     அது நான் ஒரு வேகத்தில் எடுத்த முடிவு. என்ன செய்வது என்று தெரியாமல் என் நிலை மறந்து, அவசரத்தில் எடுத்த முடிவு. அந்த முடிவு இவ்வளவு சீக்கிரம் திருமணம் வரை வந்துவிடும் என்று இம்மியளவு கூட எதிர்பார்க்கவில்லை. எதிரில் பார்க்கும் இந்தக் காட்சியை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. 

     தொலைந்து போன நாட்களை சிந்தித்துக் கொண்டே இருந்த நேரத்தில் அவள் அப்பா என்னை நெருங்கி வருவதைக் கண்டதும் என் பார்வையை திசை மாற்றினேன். அருகில் வந்தவர் என் கைகளைப் இருக்கப் பற்றி இழுத்தார். " என்ன மாப்பிள்ள மேடையையே பார்த்திட்டு இருக்கீங்க, முகூர்த்த வேளை நெருங்குது, சீக்கிரம் தயாராகுங்க போங்க போங்க" என்று கூறி கொண்டே என்னைத் தள்ளிக் கொண்டு சென்றார் மணமகன் அறைக்குள். 
  
     என்ன புரியவில்லையா ! தெளிவாகச் சொல்கிறேன். அன்று ஒரு வேகத்தில் அவளுக்கு ஒரு மெயில் அனுபியதாகச் சொன்னேன் இல்லையா, அந்த மெயிலில் அவளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளையின் புகைப்படமாக இணைத்திருந்தது என் படத்தைத் தான். அவளில் நான் தொலைந்து போன நாட்களை அவளால் மட்டுமே திருப்பித் தர முடியும் என்ற வேகத்தில் நான் அனுப்பிய மெயில் அது. 

     அந்த மெயிலை துரதிஷ்டவசமாகவோ இல்லை அதிர்ஷ்டவசமாகவோ அவள் அண்ணன் படித்துவிட்டான். எங்கள் விஷயம் இருவீட்டாருக்கும் தெரிந்து, பல சண்டைகள், பல சமாதனங்களுக்குப் பின் இருவீட்டார் அழைப்போடு எங்கள் திருமணம் இனிதே நடைபெற உள்ளது. வந்து வாழ்த்திவிட்டுச் செல்லுங்கள்.  

17 comments:

  1. dai.. ni love panna ok avalum love panna. ana nium sollala avalum sollala ana rendu perukum terium..
    well telent ah name eadum podala -super..
    but marriage la mappillai ni illa. vera oruthan. ana ponnu ni love pannava- eduku ni mappillai nu pota???.
    But ni ava kitta love solli iruntha intha climax than un life la nadanthu irukum...
    -super da..
    Kasantha kadhal Kasiuthu inga.. Dont feel

    ReplyDelete
  2. semma boss!! enna boss real life story ah??

    ReplyDelete
  3. எனக்கொரு மெயில் அனுப்பினாள். ' இதில் மூன்று போட்டோக்கள் இனைத்துள்ளேன், மூன்றுமே எனக்காக என் வீட்டில் பார்த்த மாப்பிள்ளைகளின் போட்டோக்கள். இதில் எனக்குப் பொருத்தமானவன் யார் என்று கூறு" என்று கேட்டிருந்தாள். semma trilling but end of story no no end of my comment வாழ்த்திவிட்டுச் செல்லுங்கள். indha Srinivasanai

    ReplyDelete
  4. climax padichatukapuram thaan heart beat normal aachu... Thalaiva you are great... vaalga valamudan...

    ReplyDelete
  5. அந்த மெயிலை துரதிஷ்டவசமாகவோ இல்லை அதிர்ஷ்டவசமாகவோ அவள் அண்ணன் படித்துவிட்டான். எங்கள் விஷயம் இருவீட்டாருக்கும் தெரிந்து, பல சண்டைகள், பல சமாதனங்களுக்குப் பின் இருவீட்டார் அழைப்போடு எங்கள் திருமணம் இனிதே நடைபெற உள்ளது... annan en sanda potan??? having doubt da
    .. explain.. veetla partha maplai thane eduku sanda..????

    ReplyDelete
  6. கமெண்டிர்க்கு காத்திருக்கவும்!!!!

    ReplyDelete
  7. hey really super da...ippadi ellam real life la iruntha nalla than irukkum....enna panrathu? story la yavathu pathu santhosha patukalam..


    Ama unakkulla ivalo thiramai irukkunu sollave illa;-)....

    Anyway congrats thambi:-)

    ReplyDelete
  8. மென்மையான கதை...கடைசியை சூப்பரா முடிச்சியிருக்கீங்க .tamil 10 ல் இணைத்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி மணிமாறன் சார். கதையை tamil 10 ல் இணைத்தமைக்கு மிக்க நன்றி. இணைந்திருப்போம்

      Delete
  9. அவளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளையின் புகைப்படமாக இணைத்திருந்தது என் படத்தைத் தான். அவளில் நான் தொலைந்து போன நாட்களை அவளால் மட்டுமே திருப்பித் தர முடியும் என்ற வேகத்தில் நான் அனுப்பிய மெயில் அது./

    எதிர்பார்த்த முடிவு...

    திருமண வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  10. happy married life.. subam! climax twist is expected one... story was interesting!! nalla narration... all the best !

    - Ananth deepam

    ReplyDelete
  11. சோக முடிவு்க்குக் கொண்டு செல்வது போல தோன்றச் செய்து சுப முடிவைத் தந்திருக்கிறீர்கள். பிரமாதம்! உங்களின் நடை (i Mean, எழுத்து நடை) அழகாக உள்ளது. நிரூவின் Heartful வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நிரு...உங்க அளவிற்கு எழுத்து நடை இல்லாவிட்டாலும் எதோ கொஞ்சமா முயற்சி பணியிருகேன். வருகை தந்து வாசித்து வாழ்த்தியும் சென்ற சகோதரிக்கு நன்றி.

      Delete
  12. சோக முடிவு்க்குக் கொண்டு செல்வது போல தோன்றச் செய்து சுப முடிவைத் தந்திருக்கிறீர்கள். பிரமாதம்! உங்களின் நடை (i Mean, எழுத்து நடை) அழகாக உள்ளது. நிரூவின் Heartful வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. //அவளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளையின் புகைப்படமாக இணைத்திருந்தது என் படத்தைத் தான்.//

    இது எதிர்பார்த்த ஒன்று தான். சுபமான முடிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. இந்தக் கதையை நீங்கள் மீண்டும் ஒருமுறை வாசிப்பீர்கள் என்பதற்கு நான் கியாரண்டி
    intha dialog sonnathukagavay marubadiyum padika kudathu nu mudivu yeduthu tu i read the story, and at last i didn't read it again. Was able to get it at the first shot itself.

    நட்புடன் பழகி, காதலித்து, பின் ஜென்ம விரோதியாகி இப்படி மூன்று நிலைகளைக் கொண்ட காதலில், மூன்று நிலைகளையுமே முழுமையாகப் பரிசளித்தவள் அவள்.
    yella story la yum yen girls ah blame panriga??? Is this fair upon a writer?

    கடற்கரையில் நடந்து கொண்டிருக்கும் பொழுது அவள் கையைப் பிடித்து நடக்க ஆரம்பித்தேன். எனக்கு இதெல்லாம் பிடிக்காது என்று கூறி அழ ஆரம்பித்து விட்டாள். பின்னொரு நாள் அதே கடற்கரையில் ஏன் என் கை பிடித்து நடக்கவில்லை என்று கூறி அழ ஆரம்பித்தாள்.
    Boss lady's psychology nalla therinji vachi irukinga...

    வெறிச்சோடிய , மண்டபத்தில் தான் நாங்கள் தனியாக உட்கார்ந்து பேச முடியும்.
    neega athan panriga pola...
    ;)

    Overall good one...

    ReplyDelete
  15. Dai seenu nice story da read pannitae irukkum podu apdi semaya irukku feeling tis is wat happening in every ones life da simply superb!!!Yaroda real life story da ithu???

    ReplyDelete