22 Mar 2012

ஹாய் கங்ராட்ஸ்


     வெகு நேரமாக யாரோ என்னைக்  கவனித்துக்கொண்டு இருப்பது போலவே ஒரு உணர்வு. அந்த உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தவள் ஒரு பெண். அவள் என்னைப் பார்க்கின்றாளா இல்லை எனக்குத்தான் அது போன்ற பிரமையா என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை. என்னைச் சுற்றி மிகப் பெரிய கூட்டம் இருந்தது. எனக்கும் அவளுக்கும் இடையில் இருந்த தூரமும் மிக அதிகம். இருவருக்குள்ளும் இருந்த இடைவெளியை குறைத்துக் கொண்டே வந்தேன். அவளைத் தெளிவாக பார்க்க முடியும் அளவிற்கு எங்கள் இடைவெளியைக் குறைத்து விட்டேன். 


     இப்போது உறுதியாகக் கூற முடியும் அவள் பார்த்துக் கொண்டிருப்பது என்னைத் தான் என்பதை. அவள் கண்களை என்னுடைய கண்கள் நேருக்கு நேர் சந்தித்த பொழுது, பெண்மையின் வெட்கம் அவளுக்குள் வந்திருக்க வேண்டும். பார்வையை மாற்றிக் கொண்டாள். எங்கள் பார்வை சந்திக்கும் பொழுது எல்லாம், அவளுடைய பார்வையை மாற்றிக் கொண்டாள். அவள் உதட்டில் ஏற்படும் சிறு புன்னகையைக் கூட தெளிவாக ரசிக்கும் அளவிற்கு என்னுடைய பார்வையை அவள் மீது கவனமாக பதித்திருந்தேன்.  

"கோல்ல்ல்ல்....." 

     இந்த சப்தம் என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருந்தது. இன்டெர் காலேஜ் ஸ்போர்ட்ஸ் மீட். எங்கள் கல்லூரிக்கும் இன்னொரு கல்லூரிக்கும் foot ball semi final நடந்து கொண்டிருக்கிறது. நின்று கொண்டிருப்பது கல்லூரி மைதானம். நின்று கொண்டிருப்பது என்பதை விட விளையாடிக் கொண்டிருப்பது என்னும் வார்த்தை மிகச் சரியாக இருக்கும். 

     விளையாட்டை மறந்து, கண்டதும் காதல் அல்லது காதல் போன்ற ஒரு உணர்வுக்குள் தள்ளப்பட்டு இருந்தேன். "காதல் மிகப் பெரிய அவஸ்தை", என்பது காதலர்கள் சொல்லும் கதை. காதலிக்காமல் இருப்பது அதை விட மிகப் பெரிய அவஸ்தை. அதிலும் இவள் போல் ஒரு பெண்ணை காதலிக்காமல் இருப்பது உலகிலேயே மிகப் பெரிய அவஸ்தை.  

     எப்போது எங்கள் கல்லூரி கோல் அடித்தாலும் உற்சாகமாக கைத்தட்டி ஆரவாரம் செய்து கொண்டிருந்தாள். அதற்காகவே ஒரு கோல் அடிக்கலாம் போல் இருந்தது. உறுதியாகத் தெரிந்தது அவள் எங்கள் கல்லூரி தான் என்று. மணி பதினொன்றைத் தாண்டி இருக்க வேண்டும். சூரியனின் பார்வை சற்று அதிகமாவதை உடலில் விளையாடிக் கொண்டிருக்கும் வியர்வைத் துளிகள் எக்காளமிட்டு சொல்லிக் கொண்டிருந்தன. அந்தச் சூரியனே அவளிடம் தோற்றுவிடுவது போன்ற பிரகாசம் அவளது முகத்தில் இருந்தது. இத்தனை பிரகாசமான முகம் இவ்வளவு நாள் பரிச்சியமில்லாமல் போனது எப்படி என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.   

     கால் பந்தாட்டத்தில் பந்தின் மீதிருந்து கவனம் சிதறினால் நாம் சிதறி விடுவோம். வேறு வழி இல்லாமல் பந்தையும் தொடர்ந்து அவளையும் தொடர்ந்து கொண்டிருந்தேன். பந்தைத் தவற விட்டாலும் விடுவேனே தவிர அவளைத் தவற விடக் கூடாது என்பதில் மனம் உறுதியாக இருந்தது. சூரியன் மேகத்தினுள் மறையும் போதெல்லாம், அவளது முகம் முழு நிலவு போல் அழகாகவும் மென்மையாகவும் இருந்தது. இதை அவளிடம் இப்போதே சொல்ல வேண்டும் என்கின்ற அவசரம் வேறு என்னைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது.


     தோளின் மீது ஒரு கை படர்வதை உணர்ந்து திரும்பினேன். சிவா. என்னை அதிகமாக நேசிக்கும் தோழன். நான் கால் பந்தாட்டம் விளையடுவதற்குக் காரணமே அவன் தான். என்னை பற்றி எனக்கு தெரிந்ததை விட அவனுக்குத் தான் அதிகமாகத் தெரியும். 

     "என்னடா ரொம்ப நேரமா அந்தப் பொண்ணையே பார்த்துட்டு இருக்ற போல", எப்படி என்ற ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தேன். எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல புன்னகைத்தான். 

     "congrats டா, அந்தப் பொண்ண இம்ப்ரெஸ் பண்றதுக்காக இன்னைக்கு மேட்ச் நல்லா விளையாடற மாதிரி தெரியுது. இப்படியே விளையாடு சீக்கிரமா கேப்டன் ஆகிறலாம்" போகும் போது ப்ரீ அட்வைஸ் வேறு கொடுத்துவிட்டுச் சென்றான்.

     அவன் சொன்னதன் பின்தான் தெரிந்தது, நான் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்பது . நமக்குப் பிடித்தவர்கள் நம்மை ரசிக்கும் பொழுது நாம் செய்யும் வேலைகள் சிறப்பாக அமைவது ஆச்சரியமான அதிசியம் தான். 

     பந்தை விரட்டிக் கொண்டு எங்கு சென்றாலும் மீண்டும் ஆரம்பப் புள்ளியிலேயே வந்து நின்றேன் அவளை ரசிப்பதற்காக. 2:2 என்ற கணக்கில் போட்டி சென்று கொண்டிருகின்றது. இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டோம். யாராவது ஒருவர் கோல் போட்டாலும் வெற்றி தோல்வி தெரிந்து விடும். வெற்றி பெற்றால் மட்டுமே final உள் நுழைய முடியும். பரபரப்பான இறுதி நிமிடங்கள் ஆரம்பித்து விட்டது.

     அவளுடைய கைகளை ஒருத்தி பிடித்து இழுப்பதும் இவள் செல்ல மறுப்பதும் தெரிந்தது. எங்கள் அணி ஜெயிக்க வேண்டும் என்று இறைவனிடம் கேட்கத் தோன்றவில்லை. இறைவா நான் வரும் வரை அவள் அந்த இடத்தை விட்டு நகரக் கூடாது. நான் அவளிடம் பேச வேண்டும். ஒரு வார்த்தையாவது பேச வேண்டும். மீண்டும் ஒரு முறை அவளைப் பார்த்துக் கொண்டேன் எங்கும் செல்லவில்லை. அங்குதான் நின்று கொண்டிருந்தாள். 

     நாம் ஒரு திசையில் செல்ல நினைத்தால் விதி நம்மை வேறு பாதைக்கு அழைத்துச் சென்று விடும். பந்து என்னை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது, இந்த இடத்தில இருந்து நகர மாட்டேன் என்று சபதமிட்டவனை நகர்த்திக் கொண்டு செல்ல பந்து என் காலருகில் வந்து விட்டது. 


      அந்த இடத்தில் இருந்து நகரத் தொடங்கினேன். அங்கிருந்து விலகிச் செல்ல விலகிச் செல்ல எனக்கு அவளிடமிருந்தே விலகிச் செல்வது போல் இருந்தது.பந்தை சிவா தான் என் பக்கம் திருப்பி விட்டிருந்தான். பந்தைத் தடுத்தாடுவதிலும் கோல் கீப்பரை ஏமாற்றி கோல் போடுவதிலும் நான் திறமையானவன். வெற்றியைத் தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்கும் மன நிலையில் சிவா இல்லை.அவளைத் தவிர வேறு எதைப் பற்ற்யும் சிந்திக்கும் மனநிலையில் நான் இல்லை. ஆனால் வெற்றி என்னைத் துரத்துகிறது. என் மனமோ அவளைத் துரத்துகிறது. தொட்டுவிடும் தூரத்திலிருப்பது வெற்றிமட்டும் தான். அவளை பின்பு தேடிக் கண்டு பிடித்துக்கொள்ளலாம் என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டேன். 

     பந்து என்னிடம் உதைவாங்கிக் கொண்டே மெதுவாக முன்னேறிச் சென்று கொண்டிருந்தது. கோல் கீப்பர் பார்வையை நான் கை காட்டிய திசைக்கு மாற்றிய பொழுது பந்தை திசை திருப்பினேன். யாரும் எதிர் பார்க்காத ஆனால் நான் எதிர் பார்த்திருந்த நேரத்தில் ஆட்டத்தின் கடைசி உதையை பந்திற்குப் பரிசளித்தேன். பந்து வெற்றியைச் சென்றடைந்திருந்தது. 

     வெற்றிக் களிப்பில் ஒட்டு மொத்த அணியும் என்னைத் தூக்கிக் கொண்டாட ஆரம்பித்தது. கல்லூரி மாணவர்கள் அனைவரும் வெற்றியைக் கொண்டாட மைதானத்தினுள் சிதற ஆரம்பித்தார்கள். இந்தக் கூட்டத்தினுள் என்னால் அவளைத் தேட முடியவில்லை. கூட்டம் மெதுவாக கலைய ஆரம்பித்திருந்தது. தண்ணீர் பாட்டில் ஒன்றை எடுத்துக் கொண்டு அவள் நின்றிருந்த இடம் நோக்கி நடக்கத் தொடங்கினேன். அவள் இல்லாத அந்த இடம் வெறுமையாகக் காட்சியளித்தது. 


     களைத்திருந்தேன். கை கால்கள் வலியெடுக்க ஆரம்பித்தன. ஒரு இருக்கையில் படுத்த நிலையில் அமர்ந்தேன். கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, மீதியை தலைவலியாக ஊற்றினேன். அழ வேண்டும் போல் இருந்தது. சிவா என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

     கண்களை இருக்க மூடினேன். என் முன் நிழல் ஆடுவது போல் இருந்தது. மெதுவாக கண்களைத் திறந்தேன், முகத்தின் அருகில் கைகளை நீட்டியபடி ஒருவர் நின்று கொண்டிருந்தார். கண்களை முழுமையாகத் திறந்தேன். அவள் தான், ஆம் அவளே தான். என் எதிரே நின்று கொண்டிருந்தது நான் தேடிய தேவதை தான். அதே முகம். அதே புன்னகை. 


     மெதுவாக இதழ் பிரித்துக் கூறினாள் " ஹாய் கங்ராட்ஸ்    "... 



19 comments:

  1. Hi சீனு,
    Nice story,
    Is this your experience?
    any way superb lines. Continue your சிறுகதைகள். ;)

    ReplyDelete
  2. Wowwwwwwwwwwwww சீனு கலகிட்டயா நீ என்ன ஒரு திரைக்கதை பிச்சிட்ட பின்னிட்ட ஹ்ம்ம் அந்த பிகர் பேர சொல்லவே இல்லையே பா!!!!! next Episodela sollu hmm I am Waitingggggggggggggggggg

    ReplyDelete
  3. UyiruuuuVery nice da...screenplay and the sentence formation is so good better come to industry as a writer

    ReplyDelete
  4. சிறந்த ஆரம்பம்
    கோர்க்கப்பட்ட கவிதைச்சரம்
    மனதின் மறுபக்கம் அழைத்துச்சென்ற சீனுவுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. Hai congrats!! athu antha ponnu dhanae!!

    ReplyDelete
  6. appaty yea en life la nadanthathu mathiri erukka da ohh naan sonna thaa thaan podurukiya ,,,,first katha starting la oru tension aarmpichu athuvum nee eethula semi final nu sollurathukku pathila fiinal nu sollirukanum evan erakanavea love propose panni result ku wait pannura mathuri kattanum then last katha end la eva vanthu smile panna odaneea oru goal addikuram game win pannuran love la um win pannuran athukku appuram a film by seenu nu title podurom

    ReplyDelete
  7. ஹாய் கங்ராட்ஸ்

    ReplyDelete
  8. super da seenu continue da...
    i eagerly waiting da...
    super da..
    super da...
    supera eluthura da....

    ReplyDelete
  9. //அந்த இடத்தில் இருந்து நகரத் தொடங்கினேன். அங்கிருந்து விலகிச் செல்ல விலகிச் செல்ல எனக்கு அவளிடமிருந்தே விலகிச் செல்வது போல் இருந்தது.//

    //மெதுவாக இதழ் பிரித்துக் கூறினாள் " ஹாய் கங்ராட்ஸ் "... //

    அழகான முடிவு, பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டில் மகிழ்ந்தேன் அய்யா. மிக்க மகிழ்ச்சி

      Delete
  10. vilaiyum payir mulayilaye theriyuthu saare

    ReplyDelete
  11. அன்பின் சீனு - கால்பந்து போட்டியில் நடந்த ஒரு நிகழ்வினை அழகாக படம் பிடித்துக் காட்டியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. பின் தொடர்வதற்காக

    ReplyDelete
  13. //வெற்றியைத் தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்கும் மன நிலையில் சிவா இல்லை.அவளைத் தவிர வேறு எதைப் பற்ற்யும் சிந்திக்கும் மனநிலையில் நான் இல்லை// அது!! கதையா? உண்மையா? எதுவானாலும் பிரமாதம்!

    ReplyDelete