வரலாற்றுச்சுவடுகள்
"லவ்வர்ஸ டே ஸ்பெஷல் கதை எழுதச் சொல்லி இருகாங்க தல, நம்ம கம்பெனி வெப் சைட் பாத்தீங்களா" மதிய உணவு முடித்து அரக்க பறக்க ஓடி வந்த விக்ரம் மூச்சுவிடக் கூட மறந்து என்னிடம் கூறிய வார்த்தைகள் தான் இவை.
"அத ஏண்டா இவ்ளோ ஆர்வமா சொல்ற, நடத்துனா நடத்திட்டு போகட்டும் " கூறியது சீனுவாகிய நான்.
"யோவ் தல உங்கள மதிச்சு சொன்னேன் பாருங்க, எதாவது எழுதிக் கொடுயா நாமளும் கலந்துப்போம்"
"ஹா ஹா ஹா " ... மீண்டும் நான்
"சிரிக்காதீங்க தல, நா சீரியஸா பேசிட்டு இருக்கேன், நமக்கு பரிசு எல்லாம் கிடைக்கும். நல்ல விஷயம் நடந்தா வேணாம்னா இருக்கு" , விக்ரம்.
" சரி எதபத்தி, என்ன எழுதலாம்னு சொல்லு ட்ரை பண்ணிப் பாப்போம்"
"ஹீரோ நடுவெயில்ல ஒரு பொண்ண பாக்குறான். உடம்பெல்லாம் வேர்வை யோட நிக்குற ஹீரோவ ஹீரோயின் பாக்குறா, பொண்ணும் பையன பார்த்த உடன இம்ப்ரெஸ் ஆகுறா, முதல் பார்வையில லவ்வு, ஆனா ரெண்டு பெரும் லவ்வ சொல்லிக்கக் கூடாது " கதையின் கருவை அத்தனை ஆர்வமாய் சொல்லிக் கொண்டிருந்தான் விக்ரம்.
இந்த சம்பவத்தை இந்த இடத்தில ஸ்கிப்பிவிட்டு வேறு சில முக்கியமான விசயங்களைப் பற்றி பேசுவோம்.
மின்னல்வரிகள்
அசால்ட்டாக ஐநூறு ஆயிரங்களைக் கடந்து பலரும் தெம்பாக ஓடிக் கொண்டிருக்க, ஐம்பதைத் தொடுவதற்குள்ளாக எனக்கோ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது. அல்லது அப்படி ஒரு பிரமை கற்பனை மாயை அல்லது மாயை அல்லாத உண்மை. பதிவுலக ஜாம்பவான்களை தொன்று தொட்டு எழுதிவரும் மார்கண்டேயன்களைப் பார்க்கும் பொழுது ஐம்பது என்பது அளப்பரிய சாதனையோ அல்லது அலப்பறையைக் கூட்டும் சாதனையோ அல்ல. இருந்தும் என்னைப் பொறுத்த வரையில் மகிழ்ச்சியான ஒரு விஷயம்.
எங்கள்(என்) பிளாக்
சிறுகதைகளை தவிர வேறு எதுவும் எழுதக் கூடாது என்று தான் பதிவுலகினுள் காலடி எடுத்து வைத்தேன். பதிவுலகை நாடி வந்தவர்களின் நாடி பிடித்துப்பார்த்த பொழுது நமது கடையில் சிறுகதைகளை வைத்து மட்டுமே வியாபாரம் செய்துவிட முடியாது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டேன். (எனது ஆரம்பகாலப் பதிவுகள் பெரும்பாலும் சிறுகதைகளாக மட்டுமே இருக்கும்). சிறுகதைகளைத் தவிர்த்து எழுத நினைத்த விஷயம் சினிமா, கேபிள் வழியாக சினிமா சினிமாவைப் பார்க்கும் ஹாலிவூட்ரசிகர்களும் ஹாரிப்பாட்டர்களும் இருக்கும் இந்த இடத்தில் நம் படம் ஓடாது என்பதையும் கணிக்கத் தவறவில்லை. ( நான் எழுதிய சினிமா பதிவுகளுக்கே ஹிட்ஸ் அதிகம் என்பது வேறு விஷயம்!).
ஒரு பதிவன் என்பவன் நிகழ்கால வாழ்க்கையை (அ) தன் எண்ணங்களை பதிந்து பகிருந்து கொடுப்பவனாக இருக்க வேண்டும் என்ற பதிவுலக விதிக்கு ஏற்ப என்னை மாற்றிக் கொண்டேன். அப்படியாக நிகழ்காலத்தைப் பற்றி எழுத வேண்டுமென்ற எண்ணத்தில் எழுதத் தொடங்கிய பதிவுகள் தான் சென்னையைப் பற்றிய பதிவுகள். தென்காசியைப் பற்றி எழுதாமல் சென்னையைப் பற்றி மட்டுமே அதிகம் எழுதுவதாக என் மண்ணின் மைந்தர்கள் என்னை முறைப்பதுண்டு. தென்காசியைப் பற்றி எழுதவும் பேசவும் பல விஷயங்கள் இருந்தும், சென்னையில் நான் தேடித் தேடி அறிந்து கொண்ட விஷயங்கள் அதிகம். அவை நிகழ்கால சென்னைவாசிகளுக்கும் வருங்கால சென்னைவாசிகளுக்கும் நிச்சயம் உதவலாம் (உதவாமலும் போகலாம்) என்ற எண்ணமே சென்னையைப் பற்றிய எனது பதிவுகளுக்கான மிக முக்கியமான விஷயம்.
ஸ்பெஷல் மீல்ஸ் - சுஜாதா
வலைபூ ஆரம்பித்தால் அதில் சுஜாதா என்னும் பிள்ளையார் சுழியைத் தான் முதலில் பதிக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து காலம் கடத்திக் கொண்டே இருந்தேன். ஐம்பதாவது பதிவும் வந்துவிட்டது இதுவரை ஒருபதிவு கூட வாத்தியாரைப் பற்றி எழுதவில்லை. எழுத்தறிவித்தவன் வாத்தியார் அவரைப் பற்றிய பதிவு விரைவில் விரைவில் என்று எழுத முடியாமல் விரைவாக காலமும் மற்ற பதிவுகளும் கடந்து கொண்டே உள்ளது. வெகு சமீபத்தில் தான் யவனிகா படித்தேன், அதைப் பற்றியாவது எழுத வேண்டுமென்று நினைத்தேன் முடியவில்லை. ஹாரி புண்ணியத்தில் சுஜாதா சாயலில் கதை எழுதும் வாய்ப்பு கிடைத்தது, அதற்காக ஹாரி அவர்களுக்கு சிறப்பான நன்றிகள்.
தம்பி - தீவிரவாதம்
சகபதிவர்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களைப் போல் எழுத வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் பலரும், தயவு செய்து இவர்களைப் போல் மட்டும் எழுதி விடாதே என்பதற்கு எடுத்துக்காட்டாய் சிலரும் மறைமுகமாக பயிற்சி அளித்துக் கொண்டே உள்ளார்கள். சமயங்களில் பதிவுலகில் நடக்கும் வெட்டுக்குத்துக்களும் தீவிரவாதங்களும் ஷப்பா.... இருந்தும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான படிப்பினையை கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் உள்ளார்கள். ஆரோக்கியமான விவாதங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் உள்ளது. நான் சொல்ல வரும் விஷயம், பதிவுலகம் நேரத்தைக் குடிக்கவில்லை, ஏதோ ஒரு விதத்தில் ஒரு வித்தியாசமான சூழ் நிலையை உருவாகிக் கொடுத்துக் கொண்டே உள்ளது என்பது தான். அதனால் பதிவுலகம் போர் அடித்து விடாது என்பது என் கணிப்பு.
பிட்...பைட்...மெகா பைட்...
எனது பதிவு மூலம் நான் அறிந்து கொண்ட சில பிட்...பைட்...மெகா பைட்கள்...
- அக்கா என்ற வார்த்தையை கூகிள் தப்பார்த்தம் செய்து கொண்டதால் எனது அக்கா கடைக்கு கணிசமான வாடிகையளர்கள் தினமும் தவறாது வந்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
- பொன்னியின் செல்வனைப் பற்றி படிப்பவர்கள் மிக அதிகமாகவே உள்ளார்கள். ஒரு நாளில் குறைந்த்தது ஒருவராவது பொன்னியின் செல்வனைத் தேடுகிறார். ஏதோ ஒரு விதத்தில் சென்னையும் ராமேஸ்வரமும் படிக்கப்படுகிறது.
- சினிமா பதிவுகளுக்கு தான் தமிழன் முதலிடம் கொடுக்கிறான் என்பதற்கு உதாரணம் என் சினிமா விமர்சனகள் கூட படிக்கப்படுகின்றன என்பது தான்.
தலைபோல வருமா
பதிவெழுத ஆரம்பித்த புதிதில் என் எழுத்துக்களை உற்சாகப்படுத்த நண்பன் காளிராஜ் வரைந்து கொடுத்த படம் தான் தற்போது என் வலைபூவிற்கு அடையாளமாக இருக்கும் புகைப்படம். அவனாக முன்வந்து செய்து கொடுத்தது, தலைப்பிற்கு ஏற்ற வகையில் அந்த படத்தை தயார் செய்து கொடுத்தது, வலைபூவிற்கு அற்புதமான அடையாளம் கிடைக்க அவனும் ஒரு காரணம். மிக்க நன்றி தல. இதுவரை ஒரு முறை கூட இதை பற்றி எங்கும் குறிபிட்டது இல்லை, இங்கே வைப்பு கிடைத்தது கூறிவிட்டேன்.
ஊர்ப்பேச்சு
தொடர்ந்து உற்சாகமளித்து வரும் அனைவரையும் தனியே குறிப்பிடவில்லை, குறிப்பிட நினைத்தால் உங்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தனிப் பதிவு ஒன்றே எழுதலாம், அப்படி எழுத நேரம் கிடைப்பின் தவறவும் மாட்டேன். இந்தப் பதிவு உலகம் மிக முக்கியமான நல்ல நண்பர்களைப் பெற்றுக் கொடுத்துள்ளது.. இதற்குக் காரணம் உங்கள் முகங்கள் இல்லை எழுத்துக்கள் தான்....அந்த எழுத்துக்களுக்கு எனது நன்றி.
கேளுங்க
ஐம்பது பதிவுகள் எழுதியதற்காக சங்கம் எனக்கு பாராட்டு விழா எதுவும் நடத்துமா ? என்பதை ராசா கேளுங்க மூலம் தலைவரிடம் கேட்கச் சொன்னார், ( தலைவரே உங்கள் மரமண்டையில் ஏறியதா?)
பிலாசபி
பொருத்தமான தலைப்புகள் அனைத்தும் சகபதிவர்களிடம் இருந்து சுட்டது, காப்புரிமை கேட்டு சங்கத்துப் படியேறின் நீதி வழங்கப்பட மாட்டாது என்பதை இங்கே பெருமையாகக் கூறிக் கொள்கிறேன். காரணம் இங்கே நீதிகள் விற்கப் படுவதில்லை.
விளம்பரம்
விளம்பர குறிப்பு : பதிவின் ஆரம்பத்தில் இருக்கும் நீலநிற எழுத்துகளைப் படித்து விட்டு மீண்டும் விளம்பரப் பகுதிக்கு வாருங்கள்.
"நல்ல விஷயம் நடந்தா வேணாம்னா இருக்கு" என்று அன்று விக்ரம் சொல்லிய வார்த்தைகளால் நடந்த ஒரு நல்ல விஷயம் நான் வலைபூ ஆரம்பித்தது ...! (மூணு புள்ளி ஒரு ஆச்சரியக் குறி). என் வலைப்பூவின் முதல் பதிவு அல்லது சிறுகதை அன்று விக்ரம் கொடுத்த கதைக்கரு தான். அந்த முதல் பதிவு மற்றும் நான் எழுதிய முதல் கதை இன்றைய விளம்பரம்.
Tweet |
ஐம்பது பதிவுகள் எழுதியதற்காக சங்கம் பாராட்டு விழா நடத்தாததை வன்மையாக கண்டிக்கிறேன் !!! (மூன்று ஆச்சரியக் குறிகள்) ஹா... ஹா...
ReplyDeleteமேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
நன்றி...
tm2
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சார்
Deleteவாழ்த்துக்கள் தம்பி....கொஞ்சமா எழுதுனாலும் சிறப்பா எழுதுறீங்க.....இன்னும் பல ஐம்பதுகளை கடக்க வாழ்த்துக்கள்....விழா செலவு சீனுவோடது என்றால் தினமும் விழா எடுக்கலாம் என்று தலைவர் அறிவித்துள்ளார்.....
ReplyDeleteதம்பி -தீவிரவாதம் னு தொரத்தி தொரத்தி கொல்றீயே நீ நல்லவனா? கெட்டவனா?
ஒரு ட்விஸ்ட் கதை படிச்சு நாளாச்சு..எடுத்து உடேன்..எடுத்து விட பாம்பா பல்லியான்னு சங்கத்தில யாரும் கேக்க கூடாது..
நாடோடி எக்ஸ்பிரஸ் எங்கயோ நடுக்காட்டுல நிக்குற மாதிரி இருக்குது.....அத சென்னை சிட்டிக்குள்ள ஓட்டலாம் தப்பே இல்லை....
தொடக்கம் முதலே என்னை உற்சாகப் படுத்தும் உங்களுக்கு மனம் நிறை நன்றி அண்ணா
DeleteCongratulation
ReplyDeleteநன்றி தோழி
Deleteசீனு சார் - ஐம்பதுக்கு வாழ்த்துகள். மேலும் 50000000000000000000000000000000 பதிவுகள் எழுத வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஅடங் கொக்க மக்கா
Deleteஹா ஹா ஹா உங்க வாக்கு பலிக்க எழுதுகிறேன் சார்
Deleteஎழுந்துட்டேன்.. இதோ வறேன்...
ReplyDeleteஅப்படியா சீனு..??
ஹா ஹா ஹா இதோ வந்துட்டேன்
Deleteஐம்பதுக்கு என் அன்பான வாழ்த்துகள்.
ReplyDeleteஎன் 50 ஐ நினைத்துப்பார்த்து சிரித்து மகிழ்ந்தேன்.
இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html
மேலும் மேலும் எழுத்துலகில் ஜொலித்து விரைவில்
ஆயிரத்தை எட்ட ஆசீர்வதிக்கிறேன்.
அன்புடன்
VGK
மிக்க நன்றி அய்யா.. இதோ சென்று வாசிக்கிறேன்
Deleteஐம்பதுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சார்
Deleteஐம்பதுக்கு வாழ்த்துகள் சீனு
ReplyDeleteஅண்ணே இந்தாங்கண்ணே பெப்புசி...
ReplyDeleteகுடிச்சீக்கோங்க.. அட வெக்கப்படாம குடிச்சிக்கோங்க......
சிறந்ததொரு எழுத்தாளரை அறிமுகப்படுத்தைய கூகுளுக்கு நன்றி
ஐம்பதைத் தொட்ட நண்பனுக்கு வாழ்த்துக்கள்
>>>>சிறந்ததொரு எழுத்தாளரை<<<
Deleteகுருவியாரே வீட்டுக்கு போனதும் முதல் வேலையா பல் விளக்கிரும்..இல்லைன்னே நாறிடும்!
என்ன இது ஒரே வில்லங்கமாத்தான் வருகுது......
Deleteஎனக்கு சண்டே என்னாலே பயம் அதவிட மண்டே எண்டாலும் பயம்
மிக்க நன்றி அண்ணே. பெப்சி தாம்னே எனக்கும் ரொம்ப பிடிக்கும்
Deleteவரலாறு ஏன்யா இப்புடி... உம்ம தனியா கவனிக்கிறேன்
நேத்து பிளாக் ஆரம்பிச்சி இன்றைக்கு 50 பதிவுகள் எழுதிக் கடந்த தம்ப்ப்ரி சீனுவை வழ்ழ்த்துகிறேன்......
ReplyDeleteஅதிவு சுருக்கமாகவும், எளிமையாகவும், படிப்பதற்கு சுவயாகவும் இருந்தது.
தொடருங்கள்...டொடர்கிறோம்...
இப்படிக்கி
வனா.சுனா.
கருத்துரையில் சொற்பிழை இல்லை என்பதை உணர்க! இது...என் அபிமானத்திற்குரிய தலைவர் புதிதாக கண்டுபிடித்திருக்கும் சொல் இலக்கணமாகும்! அனைவரும் மனப்பாடம் செய்துகொள்ளும்படி வேண்டு விரும்பி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!
Deleteஆகச் சிறந்த உங்கள் கருத்துகளை மனபாடம் செய்து கொண்டேன் பட்டிகாட்டான் அவர்களே
Deleteவரலாறு நானும் கவனிச்சேன், புது தலைவரா கலக்கும் வோய்
Deleteவாழ்த்துக்கள் நண்பா!!!
ReplyDeleteநன்றி நண்பா
DeleteInteresting narration. Enjoyed it.
ReplyDeleteNumbers are not important. Write at your own speed. Congrats
உற்சாகமான கருத்துக்கு நன்றி சார்
Deleteவாழ்த்துக்கள் மச்சி...ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு தான் பதிவுலகம் பக்கம் வந்து இருக்கேன்...தலயும் 50 தொட்டாச்சு, நீங்களும் 50 தொட்டாச்சு.
ReplyDeleteநன்றி தல... சீக்கிரம் எழுத ஆரம்பிங்க
Deleteஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா! வழக்கம் போல எழுத்து நடை அருமை. சின்ன சின்னதாக ரசனைமிகுந்த வார்த்தைகள் ஆங்காங்கே தெளிக்கப்பட்டுள்ளது. இது தான் சீனு டச்!
ReplyDeleteஅருமையான சொல்லாடல்...இதை மறந்துவிட்டீர்களே! :)
Deleteமிக்க நன்றி பிளாக்கர் நண்பன் அவர்களே.... உங்களது இனிமையான கருத்துக்களுக்கு மிக்க மிக்க நன்றி...
Deleteஉங்கள் ப்ளாக் படம் பற்றி சொல்ல வேண்டும் என நினைத்திருந்தேன், காலம் ஒத்துழைக்கவில்லை. படம் பிரமாதம். நீங்கள் உருவாக்கியது என்று தான் நினைத்திருந்தேன்.
ReplyDeleteபடத்தில் ஒருவர் பந்து வீசுகிறார் (Bowling) தானே?
//ஐம்பது பதிவுகள் எழுதியதற்காக சங்கம் எனக்கு பாராட்டு விழா எதுவும் நடத்துமா ? //
ReplyDeleteசங்கத்தில் கேட்காமல் ஐம்பதாவது பதிவு எழுதியதற்கு நீங்கள் தான் அபராதம் தர வேண்டும்!
சரியாக சொல்லி விட்டீர்கள்..
Deleteசெல்லாது செல்லாது வாங்க நாம மொதல்ல இருந்து ஆடலாம்
Deleteஉண்மையில் உங்களைப் போன்ற நண்பர்களை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி!
ReplyDeleteஇது என்ன எடிட் பண்ணி பண்ணி நீம்க்லே பேசிக்கிறது..
Deleteயோவ் ஹாரி உன்னியும் சேர்த்து தான் நம்ம அண்ணாச்சி சொன்னாப்ல, கோவப் படக் கூடாது
Deletevaazhthukkal sonthame....
ReplyDeleteமிக்க நன்றி சீனி
Deleteவாழ்த்துக்கள் மச்சி..!
ReplyDeleteயோவ் போயா, இத எல்லாம் மனபாடம் செய்ய முடியாது ( ஹா ஹா ஹா)
Deleteஐம்பதுக்கு வாழ்த்துக்கள் சகோ தொடருங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ
Delete50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்குப் பிடித்த பதிவர்களின் வலைத்தளங்களின் தலைப்புக்களையே வைத்து இந்தப் பதிவை எழுதியது நல்ல உத்தி!
இன்னும் பல பதவுகள் எழுத வாழ்த்துக்கள்.
சங்கத்து ரகசியத உடசிராதீங்க அம்மா
Deleteபதிவுலக கார்த்திக் சுப்பராஜ் அவர்களே. இந்த சந்தோசத்தை கொண்டாட இவ்வார இறுதியல் பீட்சா ட்ரீட் வைக்குமாறு.....
ReplyDeleteஅண்ணன் மெட்ராஸ் அவர்களே இதில் உள் குத்து எதுவும் இல்லையே
Deleteபுதுவிதமாக சிந்தித்து உங்கள் ஐம்பதாவது பதிவை அமைத்திருப்பதற்குப் பாராட்டுகள். அதில் 'எபி'யும் இடம் பெற்றிருப்பது சந்தோசம். வித்தியாசமாக இருக்கிறது. ஐம்பதைக் கடந்ததற்கும் வாழ்த்துகள். செக்கிரமே 100, 500 என்று பரவ வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சார்... நிச்சயமாக சார்
DeleteTF
ReplyDeleteஐம்பது பதிவுகள் - வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி அம்மா
Delete50 பதிவுகளை திடத்துடன் போராடி எழுதித் தள்ளியமைக்கு வாழ்த்துக்கள் மச்சி...சீக்கிரமே 100 தாண்டிடலாம்!
ReplyDeleteசங்கத்துல பொன்விழா எங்க அரேஞ்ச் பண்ணியிருக்கீங்க? கூகிள் ப்ளஸ்ஸா? ஃபேஸ்புக்கா?
அண்ணே எங்கயாச்சும் எடுங்க அண்ணே
Delete999-தடவை மனப்பாடம் செய்தும் எனக்கு ஒன்னுமே விளங்கலை... யோவ் ஹாரி நீர் தான் அப்பார்டக்கர் ஆச்சே உமக்கு ஏதாவது பிரியுதான்னு பாரும்!
ReplyDelete'அப்பார்டக்கர்' இவர் எந்த ஊரு டாக்டர்
Deleteஅதானே அவரெல்லாம் சங்கத்து டாக்டர் கூட கிடையாது
Deleteஆனா ஒன்னு வோய்.. இந்த பதிவை படிச்சதும் எந்த பதிவையும் படிக்கலாங்க்குற ஒரு தகிரியம் மனசுல வந்திருச்சு.... அந்த வகையில் உமக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கணும் வோய்....ஆனா இந்த ஐம்பது பதிவை படிச்சும் உயிரோட உலாவிகிட்டு இருக்கிற எங்களை போன்ற தியாகிகளுக்கு யாருய்யா விழா எடுக்கிறது!
ReplyDeleteஇருப்பினும் சங்க 'பொருளாளர்' வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டதிர்க்கிணங்க விழா நடத்துவதாய் சங்கத் தலைவர் முடிவு செய்துள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன! சற்று நேரத்தில் இது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் கிடைக்கப்பெறலாம்!
நண்பனின் 50 நாள் விழாவில் இல்லாததை குறித்து மிகவும் வருந்துகிறேன்.
Deleteசங்கர் சேர் கூப்பிடல, விஜய் கூப்பிடல பிறகு எப்படி போறதாம்.. ஹி ஹி
தானைத்தலைவனுக்கு..... தன்மான தமிழனுக்கு பாராட்டு விழா!
ReplyDeleteஎங்கள் அண்ணன்...கருமை நிற கண்ணன்,பேச்சிலே மன்னன்,சிந்தனை சிற்பி,சயனைடு குப்பி,செயற் சிங்கம்...பிரச்சார பீரங்கி...ஒரு வாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கும் போர்குணம் கொண்ட போர் வாள் 'திடங்கொண்டு போராடு- சீனு அவர்களுக்கு பாராட்டு விழா எதிர்வரும் 30.2.2013 அன்று கீழ்கண்ட முகவரியில் நடைபெற இருக்கிறது என்பதை சங்க தலைவர் ஹாரி அவர்கள் பெரும் உவகையுடன் நம்மிடையே அறிவிக்கிறார்!
விழா நடைபெற இருக்கும் இடம்; நெ.26 விவேகானந்தர் தெரு, பஹ்ரைன் மெயின் ரோடு, பஹ்ரைன் முட்டு சந்து, பஹ்ரைன் பஸ் ஸ்டாப் எதிர்புறம், பஹ்ரைன்!
(முட்டு சந்தில் வைத்து கும்மினால் தான் தப்பியோட முடியாது என்பதை கவனிக்க)
சூப்பர் மாமா.. வரலாற்றுக்குள் இப்படி ஒரு கமர்சியல் சிங்கம் ஒளிந்து இருக்கிறது
Deleteபாருங்களேன்
முட்டு சந்து தானே வாரும் வந்து எல்லரும சேர்ந்து முட்டலாம்
Delete//ஒரு கமர்சியல் சிங்கம்// பார்த்து வோய் சிங்கம் த்ரீ வந்து தொலைத்து விடப் போகிறது...
வணக்கம் சீனு...
ReplyDeleteசீனுவாகிய நான்.//
ReplyDeleteநான் என்னமோ சீனு என்பவர் பெரும்பதிவராக இருப்பார் என்று நினைத்தேன் , அது நீங்கள் தான் என்று சுய விளக்கம் அளித்தமைக்கு என் உள்ளம் கசியும் நன்றிகள் (சிக்கனுமில்ல, சிக்க வைக்கனுமில்ல )
"ஹீரோ நடுவெயில்ல ஒரு பொண்ண பாக்குறான். உடம்பெல்லாம் வேர்வை யோட நிக்குற ஹீரோவ ஹீரோயின் பாக்குறா, பொண்ணும் பையன பார்த்த உடன இம்ப்ரெஸ் ஆகுறா, முதல் பார்வையில லவ்வு, ஆனா ரெண்டு பெரும் லவ்வ சொல்லிக்கக் கூடாது //
ReplyDeleteநடுவெயிலில் ஹீரோ எந்த திசைய நோக்கி நிற்கிறார் என்பதை கூறவில்லை, ஹீரோயினி வயசு சொல்லவில்லை .. இப்படி நிறைய குறைகளை களையவும் சீனு... இந்த கதையை இதுவரை யாரும் படமெடுக்க இல்லையெனில் நானே உங்களை வைச்சி படம் எடுக்குறேன், ஹாரி மச்சி எல்லாத்தையும் இயக்குவார், வசு தயாரிப்பார் .. சதீஷ் அண்ணன் மட்டும் படத்தை ப்ரமொடே பன்னுவர்ர்
தொழில்நுட்ப உதவி பாசித்த விட்டுபுட்டிங்க
Deleteதலையோட மங்காத்தாவை சுட்டு நீங்கள் பெரும் தல ஆகிவிட்டிர்கள் தல
ReplyDeleteஒரு பதிவன் என்பவன் நிகழ்கால வாழ்க்கையை (அ) தன் எண்ணங்களை பதிந்து பகிருந்து கொடுப்பவனாக இருக்க வேண்டும் என்ற பதிவுலக விதிக்கு ஏற்ப என்னை மாற்றிக் கொண்டேன். அப்படியாக நிகழ்காலத்தைப் பற்றி எழுத வேண்டுமென்ற எண்ணத்தில் எழுதத் தொடங்கிய பதிவுகள் தான் சென்னையைப் பற்றிய பதிவுகள்//
ReplyDeleteஉண்மைதான் தல ..
ஐம்பது பதிவுகள் எழுதியதற்காக சங்கம் எனக்கு பாராட்டு விழா எதுவும் நடத்துமா ? என்பதை ராசா கேளுங்க மூலம் தலைவரிடம் கேட்கச் சொன்னார், ( தலைவரே உங்கள் மரமண்டையில் ஏறியதா?) //
ReplyDeleteஇப்ப என்ன உங்களுக்கு சங்கத்தின் மூலமாக பாராட்டு விழா நடத்தனும் தானே, இதை நான் ஹாரி மச்சிக்கு திருப்பி விடுகிறேன் அவர் கவனித்து கொள்வார்
வணக்கம் பாஸ் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன் முதலில் வருகின்றேன் அதுவும் 50வது பதிவில் வருவது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
ReplyDelete! (மூணு புள்ளி ஒரு ஆச்சரியக் குறி).//
ReplyDeleteஉங்க நேர்மைய நான் மனதார பாராட்டுகிறேன் அய்யா
அண்ணன் ராசா.. மிக உற்சாகமான கருத்துக்கள், சிங்கத்தை அசிங்கப் படுத்தினாலும் சிங்கம் சிங்கம் தான் என்பதை சங்கத்துக்கு எடுதுச்ஜ் சொல்ல வேண்டும் என்று கேட்கிறேன்... இப்படி இதனை கமெண்ட்டுகள் போட்டு என்னை உற்சாகத்தில் ஆழ்த்தி விடீர்கள்....
Deleteபேரை கொஞ்சம் டேமேஜ் ஆகியிருந்தாலும் உங்கள் மனம் தளராத கமேன்ட்டுகளுக்கு வாழ்த்துக்கள் தல.. இனிமே பொங்கல் வைக்ரதுக்கு முன்னாடி தெளிய வச்சி அடிக்கும் படி கேட்டுக் கொல்கிறேன்
யோவ் சீனு...நீர் 50-ஆவது பதிவு எழுதுனது....ஒசாமா..ச்சே..ஒபாமா ஆபீஸுக்கு மட்டும் தெரிஞ்சது....ஒரு வாரம் உம்மை கூட்டிட்டு போய் வச்சு அழகு பாப்பாய்ங்க!
ReplyDeleteகருத்தில் உதவி,
தன்மான தலீவர் பட்டிக்காட்டான் ஜெய்!
பட்டிகாட்டான் ஜெய் அவர்களை பட்டிகாட்டான் ஜெய் என்று மரியாதை இல்லாமல் அழைத்ததால் துபாயை மூன்று முறை சுற்றி வரும் படி கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்
Deleteவாழ்த்துக்கள் நண்பரே! தொடர்ந்து கலக்குங்கள்! நன்றி!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சார்
Delete50க்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் சீனு.
ReplyDeleteமிக்க மிக்க நன்றி வாத்தியாரே
Deleteவாழ்த்துக்கள்....இன்னும் தொடர்ந்து எழுதுங்க...
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சார்
Deleteவாழ்த்துக்கள் நண்பரே! மேலும் பல சிறப்புகளைப்பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDeleteமிக்க நன்றி நண்பா
Deleteவாழ்த்துக்கள் அண்ணா ! ட்ரீட் எப்போ??
ReplyDeleteகுடுத்ருவோம் தம்பி
Deleteஐம்பதிற்கு பாராட்டுகள்... மேலும் பல பதிவுகள் எழுதிட வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சார்
Deleteவாழ்த்துக்கள்
ReplyDelete49
ReplyDeleteஇத்தனை கருத்துரை இடுவதற்கு பயபுள்ள எம்புட்டு தந்திச்சு
Delete99
Deleteஐம்பதாவது பதிவில் ஐம்பதாவது கருத்து!
ReplyDeleteநூறாவது பதில்... தொடர்ந்து வந்து என்னை உற்சாகப் படுத்தும் நண்பன் பாசத் அவர்களுக்கு சங்கம் விர்சுவல் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கும்
Deletevalthukal.... awaitng for ur 100th episode...soon soon
ReplyDeleteமுதலில் half centuryக்கு வாழ்த்துக்கள். வழமை போல கலக்கல் பதிவு. மச்சி உன்னோட பரிமாணத இன்னும் வித்தியாசமா பார்க்க விரும்புறோம். அதிகம் மசாலா பதிவுகள குறைச்சு கொள்ளு மச்சி.. (நல்ல எழுத்துக்கள் இதற்குள் மங்க கூடாது.) மற்ற படி இதுவரை பதிவுலகு பார்த்திராத புது வித பதிவை நான் உன்னிடம் எதிர்பார்கிறேன். கலக்கல் மச்சி கலக்கு
ReplyDeleteமிக்க நன்றி ஹாரி... மசாலாப் பதிவுகள்... ம்ம் என்ன செய்வது நண்பா கடந்த மூன்று பதிவுகளுமே அப்படி ஆகிவிட்டது... ஒரு சின்ன மாற்றத்திற்காக தான்.. உனது அக்கறையான பதிலுக்கு மிக்க நன்றி
Delete