அன்பான பதிவுலகத்திற்கு வணக்கங்கள்,
இதுவரை யாருக்குமே காதல் கடிதம் எழுதியதில்லை, எழுதாத ஒரு காதல் கடிதத்தை கற்பனையாய் எழுதினால் என்ன என்ற ஒரு உணர்வு, ஒரு மாலை வேளையில் என்னுடன் சேர்ந்து கொண்டு என்னைத் துரத்த ஆரம்பித்தது.
என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பாலர் வகுப்பில் தொடங்கி இதோ இந்தக் கணம் என் முன் தோன்றி ஏதோ ஒருவிதத்தில் என்னுள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகின்ற அந்த திடீர் பெண் மீது வரும் திடீர்க் காதல் வரை அத்தனை நியாபகங்கள் வந்து செல்கின்றன.
சரி பள்ளியில் தொடங்கி, திடீரென்று முன் தோன்றும் அந்த அழகு தேவதைகள் வரை ஒவ்வொருவருக்காய் அடுக்கடுக்காய் கற்பனைக் கடிதங்கள் எழுதலாம் என்ற சிந்தனைக்கு வந்தேன். நான் மட்டுமே எழுதினால் கொஞ்சம் போர் அடிக்கும், துணைக்கு பதிவுலக நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு தொடர் பதிவாய் எழுத ஆரம்பித்துவிடலாம் என்ற அளவில் அந்தக் காதல் கடித எண்ணம் சற்றே உரு ஏறியிருந்தது.
இந்தக் காதல் கடிதம் எழுதும் எண்ணம் இன்னும் மெருகேற ஏன் இதையே ஒரு போட்டியாக வைக்கக் கூடாது என்ற விபரீத ஆசை எழுந்ததன் விளைவு இப்பதிவு.
முடிவுசெய்ததுமே ஸ்கூல் பையனுக்கு தொலைபேசினேன் காரணம் சில நாட்களுக்கு முன் இந்த விசயத்தைப் பற்றி இவரிடம் தான் பேச ஆரம்பித்திருந்தேன். அவரும் உற்சாகபடுத்த உடனடியாக களத்தில் குதித்துவிட்டேன்.
நடுவர்களாக பங்கெடுக்க வாத்தியார் பாலகணேஷ், எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார் மற்றும் மூன்றாம் சுழி அப்பாதுரை சாரை தொடர்பு கொண்ட பொழுது எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மூவருமே முழு மனதுடன் மிக சந்தோசமாக சம்மதித்தார்கள். அதுவே எனக்கு மிகப்பெரிய ஆறுதல்.
சில பதிவர்கள் தற்போது பதிவெழுதுவதையே குறைத்துவிட்டனர். இன்னும் சிலர் அனுபவம், சினிமா பயணக்கட்டுரைகள் என்று எழுதுபவர்கள். அதனால் தொடர் பதிவு எழுதுவதில் அவர்களை அழைக்க எனக்கு தயக்கம் இருந்தது.
தற்போது போட்டியாக அறிவிப்பதால் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. உங்கள் அனைவரையும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன். இது எனது முதல் முயற்சி, உறுதுணையாய் இருந்து உற்சாகப்படுத்தவும், உற்சாகத்துடன் கலந்து கொள்ளவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
போட்டிக்கான தலைப்பு :
1. உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுத நினைத்த காதல் கடிதம்.
2. உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுத மறந்த காதல் கடிதம்.
3. உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுதிய காதல் கடிதம்.
விதிமுறைகள் :
1. கற்பனையோ / உண்மையோ நீங்கள் எழுத வேண்டியது ஒரு காதல் கடிதம்.
2. முழுக்க முழுக்க கவிதையாய் இருக்கக் கூடாது ஆனால் கவிதையும் கலந்து இருக்கலாம்.
3. காப்பி பேஸ்ட்டாக இருக்கக் கூடாது. முடிந்த அளவிற்கு சொந்த கவிதைகளை மேற்கோளாக எழுதுங்கள்.
4. 500 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். அதிகபட்சம் 1200 வார்த்தைகள்.
செய்ய வேண்டியது :
1. நீங்கள் கலந்து கொள்ள தயாரா என்பதை பின்னூட்டத்தில் தெரிவித்து அதனுடன் உங்களை தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டு செல்லுங்கள்.
2.நீங்கள் எழுதிய காதல் கடிதத்தை உங்கள் பதிவில் வெளியிட்டு bsrinivasanmca@gmail.com என்ற எனது முகவரிக்கு அந்த பதிவின் லிங்க்கை அனுப்புங்கள்.
கலந்து கொள்வதற்கான இறுதி தேதி ஜூலை இருபது.
ஆகஸ்து 10க்குள் பரிசு பெற்றவர்கள் பற்றிய விபரம் அறிவிக்கப்படும்.
பரிசு பற்றிய விபரம்
முதல் பரிசு - 500 ரூபாய்
இரண்டாம் பரிசு - 300 ரூபாய்
மூன்றாம் பரிசு - 200 ரூபாய்
மற்றும் மூன்று ஆறுதல் பரிசுகள் தலா 150 ரூபாய்.
முதல் மூன்று பரிசு பெற்றவர்களது காதல் கடிதங்கள் திடங்கொண்டு போராடுவில் வெளியிடப்படும்.
பதிவர்கள் அல்லாதவர்களுக்காக :
பதிவர்கள் அல்லாதவர்கள் பங்கு கொள்ள நினைத்தால் அவர்களும் தாராளமாய் பங்கு கொள்ளலாம். அவர்கள் செய்ய வேண்டியது, தங்களுடைய படைப்பினை எனது bsrinivasanmca@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களது சிறுகுறிப்புடன் அனுப்பினால் அந்த படைப்புகள் திடங்கொண்டு போராடுவில் இடம் பெறும். மற்றும் நடுவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதனால் நீங்களும் தாராளமாய் இப்போட்டியில் பங்கு கொள்ளலாம்.
இது தவிர வேறு ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.
இது எனக்கான முதல் அனுபவம் அதனால் இப்போட்டியில் வேறு ஏதேனும் முக்கிய குறிப்பு விடுப்பட்டது போல் உணர்ந்தீர்கள் என்றால் அதையும் தெரியப்படுத்துங்கள்.
உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் இப்போட்டி குறித்த தகவலை சென்று சேருங்கள்.
நீங்கள் கலந்து கொள்ள தயாரா என்பதை பின்னூட்டத்தில் தெரிவித்து அதனுடன் உங்களை தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டு செல்லுங்கள்.
இந்தப் பதிவின் தலைப்பை நீங்கள் பார்த்த நொடியில் இருந்தே கவுண்ட்டவுன்ஆரம்பித்து விட்டது, உடனே எழுதத் தொடங்குகள் நீங்கள் எழுத நினைத்த/மறந்த அல்லது எழுதிய காதல் கடிதத்தை.
Tweet |
போட்டிக்கு வாழ்த்துக்கள் மச்சி
ReplyDeleteநீ இருக்க மச்சி :-)
Deleteஆஹா! மிக அருமையான போட்டி, போட்டியில் கலந்து கொள்ளும் அளவிற்கு திறமை இல்லா விட்டாலும், பல கடிதங்களை படிக்க ஆவலாக இருக்கிறேன்.
ReplyDeleteஅப்படி சொல்லதீர்கள் நண்பா... களத்தில் இறங்குங்கள்
Delete//தொடர்பதிவாய் எழுதுவதாய் இருந்தால் நான் அழைப்பு விடுக்க நினைத்த நண்பர்கள்// ஹாரிபாட்டர் //
ReplyDeleteநன்றி பா..
:-)
Delete//முதல் முயற்சி, உறுதுணையாய் இருந்து உற்சாகப்படுத்தவும், உற்சாகத்துடன் கலந்து கொள்ளவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். //
ReplyDeleteம்ம் பார்த்துக்கலாம் பாண்டியா..
ஆனா நமிதாவ மனசுல வைச்சு நம்ம அரசன் நாலு வரி எழுதினாலே, ஒரு பயல் பக்கத்துல நிக்க முடியாதே..
ஹா ஹா ஹா விட்ரா விட்ரா அரசனுக்கு ஒரு நமீதா உனக்கு ஒரு ------ நீயே பில் பண்ணிகோயேன் :-)
Deleteநான் ரெடி......
ReplyDeleteஆஹ்கா ஸ்கூல் பையன் (கூட...!) களத்துல இறங்கிட்டாறு... போட்டியில் வெல்வதற்கு வாழ்த்துக்கள் சார்
Deleteநீ கேட்டப்ப பந்தாவா சரின்னு சொல்லிட்டாலும், ஸ்ரீராமுக்கும் அப்பா ஸாருக்கும் மத்தியில இந்த கைப்புள்ளயான்னு இப்பவும் உள்ள ஒரு உதறல் இருந்துட்டேதான் இருக்கு.... கூடவே ஜாலியாவும் இருக்கு. எந்த சானலை திருப்பினாலும், மூணு ஜட்ஜுங்க உக்காந்துக்கிட்டு, ‘‘உனக்கு கெமிஸ்ட்ரி(?) சரியில்ல’’ ‘‘உன் பாட்டுல ஃபீல் வரலை’’ன்னுல்லாம் சொல்லி பங்கெடுத்துக்கற அப்பாவிங்களை பேய்முழி முழிக்க வெக்கறதப் பாத்து ட்ரெய்னிங் எடுத்துருக்கோம்ல... சமாளி்ச்சுருவோம்! ஹி... ஹி...!
ReplyDeleteஹா ஹா. ஒரு பெண்பால் ஜட்ஜ் இல்லாதது தான் குறை.
Deletegood point ரூபக் ராம். சிந்திக்க வேண்டிய விசயம் சீனு.
Deleteஇப்படி ஒருவாதம் நான் எதிர்கொள்வேன் என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் இது ஒரு ஆரோக்கியமான சூழல் என்பதால் என் நினைவில் வந்தவர் ரஞ்சனி நாராயணன் அவர்கள். தொலைபேசிவாயிலாக அவரது அனுமதியைப் பெற்றுவிட்டேன்.
Deleteரஞ்சனி நாராயணன் அவர்கள் ranjaninarayanan.wordpress.com என்ற தளத்தில் எழுதி வருகிறார்கள்.
அவரை நடுவராக இங்கே அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆரோக்கியமான விவாதம் தொடங்கி வைத்ததற்கு நன்றி ரூபக்
நடுவராக இருக்க சம்மதித்ததற்கு நன்றி ஸார்... சங்கத்து பதிவர்கள் பிக்சிங் அது இது என்று களத்தில் இறங்குவார்கள் வலையில் விழுந்து விடாதீர்கள் :-)
Deleteநான் எதிர்பார்த்த படி ரஞ்சனியே நாராயணனையே நீங்கள் அனுகியத்தில் எனக்கு ஆச்சரியம் இல்லை :) மிகவும் சிறப்பாக பின்னூட்டு இடுபவர்.
Deleteகணேஷ் மற்றும் அப்பாதுரை சார் உங்கள் நடுவர் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
Deleteஅன்புடன் வந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். நன்றி சீனு
ReplyDeleteவாழ்த்துக்கள் ரூபக்...
Deleteஉற்சாகமாக போட்டியில் கலந்து கொள்வதற்கும் போட்டியில் வெல்வதற்கும் வாழ்த்துக்கள் ரூபக்
Deleteநன்றி சீனு மற்றும் ஸ்கூல் பையன்.
Deleteஸ்கூல் பையன் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
உங்கள் முயற்சி பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி ரூபக்... கூட இருந்து உற்சாகப்படுத்த நீங்கள் இருக்கும் பொழுது எனகென்ன கவலை :-)
Deleteதூள் கிளபுங்கள் :)
Deleteபங்கு கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள். பரிசு முக்கியமல்ல பங்கு கொள்வதே முக்கியம் என்று முடிந்தவரை அனைவரும் கலந்துகொள்ள வாழ்த்துகள். சீனு.. இத்தனை கடிதங்களைப் படித்து ஏதோ டிரெய்னிங் எடுக்க நினைப்பது போல இருக்கிறது!!!!! என்னையும் நடுவராகப் போட்ட உங்கள் பெருந்தன்மைக்கும் பொறுமைக்கும் நன்றி. நான் என்னைப்பற்றி சொல்ல நினைத்ததை பாலகணேஷ் சொல்லி விட்டார்.
ReplyDelete//பரிசு முக்கியமல்ல பங்கு கொள்வதே முக்கியம் என்று முடிந்தவரை அனைவரும் கலந்துகொள்ள வாழ்த்துகள். // மிக சரியாக சொன்னீர்கள் சார்...
Delete// ஏதோ டிரெய்னிங் எடுக்க நினைப்பது போல இருக்கிறது// என் போன் நம்பர் தெரிஞ்சும் இப்படி பப்ளிக்கா உண்மையைப் போட்டு உடைக்கிறீங்களே...
மிக்க நன்றி ஸார்... நீங்கள் சிலபல போட்டிகள் எங்கள் பிளாக்கில் நடத்தி உள்ளதால் உங்கள் மேலான அறிவுரைகளை எதிர்பார்கிறேன்
தங்கள் நடுவர் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஸ்ரீராம் சார் .
Deleteஇதெல்லாம் பத்து பன்னெண்டு வருஷம் முன்னாடி வைச்சிருக்கணும்....நம்ம கடிதத்தை படித்துவிட்டு நம்மளை நடுவருங்க காதலிச்சா சங்கம் பொறுப்பேற்குமா? காதலிக்கும்போது எழுதுன கடிதத்தை படிச்சிட்டு அப்போலோ நர்சிங் காலேஜ் பிரின்சிபால் காறி துப்புச்சாம்......இப்ப என்னவெல்லாம் நடக்குமோ?இந்த மாதிரி கடிதமெல்லாம் படிக்க வேண்டியுள்ளதேன்னு அழப்போற நடுவர்களுக்கு அட்வான்ஸ் அனுதாபங்களுடன் .....நானும் கலந்து கொல்கிறேங்கோ ..... :)
ReplyDelete:-)
Deleteஹலோ சதீஷ்! நடுவர்கள்ன்னு கணேஷ் அண்ணா, சகோ ஸ்ரீராம், அப்பாதுரைன்னு மூணு பேருமே ஆம்பிள்ளைங்களா நடுவர்கள போட்டிருக்காங்க. அவங்க உங்களை வவ்வுவாங்களா?! போங்க சகோ காமெடி பண்ணிக்கிட்டு..,
Delete//அப்போலோ நர்சிங் காலேஜ் பிரின்சிபால் காறி துப்புச்சாம்......இப்ப என்னவெல்லாம் நடக்குமோ?// இப்படி ஒரு தன்னபிக்கையோட இந்தப் போட்டியில நுழையிற உங்களைப் பார்த்து வியக்கிறேன் பிரம்மிகிறேன் ஆனந்தப்படுகிறேன் சொல்ல வார்த்தைகளைத் தேடிக் கொண்டுள்ளேன்
Delete@ராஜி
//போங்க சகோ காமெடி பண்ணிக்கிட்டு..,//
இப்படி ஒரு அக்கா இருக்க வரைக்கும், இந்தத் தம்பிய யாராலையும் ஒன்னும் பண்ண முடியாது ( எப்படி மீ எஸ்கேப்)
ஹா..ஹா... வித்தியாசமான முயற்சி..நான் காதலித்ததே இல்லையை சீனு....நான் கலந்து கொள்ளலாமா...(மனைவியை நினைத்து எழுதலாம் என்றால் ........வேணாம் ...என் கஷ்டம் என்னோடு போகட்டும்.. :-) )
ReplyDelete//நான் காதலித்ததே இல்லையை சீனு...// இப்படியெல்லாம் சொல்லி எஸ் ஆக முடியாது சார்... நீங்க எழுதியே ஆகணும்... உங்களைப் பட்டியலில் சேர்த்து விட்டேன்... போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
Deleteமுயர்ச்சிக்க்கலாம் என எண்ணுகிறேன்...
ReplyDeleteமுயற்சி செய்வதா, நீங்கள் எப்போதோ போட்டியினுள் நுழைந்து விட்டீர்கள் வெற்றி வேல் வீர வேல் என்று பெயரிலேயே வெற்றி வேலை வைத்திருக்கும் நீங்கள் முழக்கமிட வேணாமா
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஎழுதிட்டா போச்சி
நீங்கள் இந்தப் போட்டியில் பங்கு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி ராஜ், போட்டியில் நீங்கள் வெல்ல வாழ்த்துக்கள்
Deleteகலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும், திணறப் போகும் நடுவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDelete"அரசனுக்கும் விஜயனுக்கும் சரியான போட்டி என்பதால்..." மற்றவர்களுக்கும் ஒரு உற்சாகம் வர வேண்டாமா...? ஹிஹி...
நீங்களும் பங்குகொள்ள முயற்சி பண்ணுங்களேன் டிடி :-)
DeleteKalandhu kolla naan thayaar. Parisu thaan romba kuraiviu nanbaa. Oru 500000 nu podunga. Aamaa, "yuththam aarambam" thodar ennappa aachu?
ReplyDeletesigarambharathi@gmail.com
நீங்களும் கலந்து கொள்வதில் எனக்கு மிகபெரிய மகிழ்ச்சி சிகரம் பாரதி...
Deleteமுதலில் இந்த போட்டியை முடித்து விடுவோம், விரைவில் யுத்தத்தையும் ஆரம்பித்து விடுவோம் ..
@ ஹாரி கவனிக்க
கலக்குங்க! ரசிக்க காத்திருக்கிறோம்.
ReplyDeleteமுரளி சார் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்... பரிசீலனை செய்யுங்கள்
DeleteGood effort Seenu
ReplyDeleteமிக்க நன்றி மோகன் குமார் சார்...
Deleteசரியான நடுவர்கள். ரூபக் ராம் சொன்ன மாதிரி ஒரு பெண் நடுவரையும் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteசேர்த்துக் கொண்டோம் சார்... :-)
Deleteஅழைத்தமைக்கு நன்றி,நிச்சயம் முயல்கிறேன்
ReplyDeleteமிக்க நன்றி கோகுல்... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.. விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறேன் :-)
Deletegokul304@gmail.com
Deleteஎங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவில் கொஞ்சமாவது (இந்தக்காலத்து) காதல் அனுபவம் இருப்பவரை நடுவராக போட்டு எங்கள் வாயை, கையை எல்லாம் கட்டிப் போட்டுட்டீங்க. மேலும் எங்கள் ப்ளாக் ஆசிரியர்களில் ஒருவர் நடுவராக இருப்பதால், மீதியுள்ள ஆசிரியர்கள் எவரும் போட்டியில் போட்டியில் பங்கேற்கும் தகுதியை இழக்கிறார்கள்.
ReplyDeleteஉங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்!
ஹா ஹா ஹா இப்படி சொல்லி எஸ் ஆகிவிட்டீர்கள் :-) மிக்க நன்றி சார்... உங்கள் உற்சாகமான வாழ்த்திற்கு
Deleteவாழ்த்துகள் சீனு,,,, அப்படியே பதிவர் சந்திப்பில் அவர்களை கெளரவப்படுத்திவிடலாம் தானே,,,,!! அருமை,,,!!
ReplyDeleteநன்றி தல... நீங்களும் அவசியம் இப் போட்டியில் பங்குகொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்
Deleteமுயற்சிக்குப் பாராட்டுக்கள் சீனு. அனைவரும் பங்குபெற வாழ்த்துகிறேன்.
ReplyDeleteகடவுளுக்குக் காதல் கடுதாசு எழுதலாமானு ஒருத்தர் என் கிட்டே கேட்டிருக்கார் சீனு.. ரூல்ஸ் எதுனா இருக்குதா?
முயற்சிக்கு உறுதுணையாய் இருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் சார்..
Delete//கடவுளுக்குக் காதல் கடுதாசு எழுதலாமானு ஒருத்தர் என் கிட்டே கேட்டிருக்கார் சீனு.. ரூல்ஸ் எதுனா இருக்குதா?//
அந்த யாரோ ஒருவர் நீங்கள் தானே உண்மையைச் சொல்லுங்கள் :-)
கடவுள் அப்புறம் செல்லகுட்டி டாமி புஜ்ஜி குட்டி ஜிம்மி என்று மேலும் யாரோ சிலர் கேட்டு விடுவதற்குள் ரூல்ஸை வெளியிட்டே ஆக வேண்டும் :-)
முதல் ஆளாக நான் தயார். எனது மின்னஞ்சல் முகவரி:
ReplyDeletehttp://kavipriyanletters.blogspot.com/
இந்த போட்டிக்கான தலைப்பில்.... எனது காதலியும், தொழியுமானவளுக்கு நான் எழுதிய கடிதத்தின் பதிவு:
http://kavipriyanletters.blogspot.com/2013/06/blog-post_6.html
முதல் ஆளாக தங்களது படைப்பை அளித்து உற்சாகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி
Deleteபோட்டிக்கு ஒரே ஒரு கடிதம் மட்டுமா? இரண்டு மூன்று அனுப்பலாமா? தெளிவுபடுதவும்.
ReplyDeleteஒவ்வொருவரும் ஒவ்வொரு கடிதம் தான் எழுத வேண்டும், மேலும் நீங்கள் போட்டி அறிவிக்கும் முன்பே எழுதி இப்போட்டியும் தற்செயலாய் அமைந்ததால் நீங்கள் விருப்பபட்டால் வேறு ஒரு கடிதம் எழுதி கொடுங்கள். உங்கள் விருப்பமே
Deleteபொத்தி பொத்தி வளத்த புள்ள மேகல. அதனால அவளுக்கு வெக்கம் விட்டு போகல.
ReplyDeleteBoss ungalukku thaan first price ,,,,,,,,,,,(vadivelu style eppaty valathurukanga,,,,,awwwow) megala address thara mudium ma ,,,,,,,,,,,,,,,,,,
Deleteஹா ஹா ஹா அண்ணே மெட்ராஸ் வொய்.எம்.சி.ஏ ல படிக்கும் போது நீங்க அடிச்ச டாவு அத்தனையும் எனக்கு தெரியும், அதுல ஒன்ன எடுத்து வுடறது :-)
Deleteதூக்கிப் போட்டு நாலு மிதிமிதிச்சா வெட்கம் போயிரும்....!
Deleteஇதுவரை காதல் கடிதம் எழுதியதில்லை கற்பனை என்று சொன்ன உடன் ஒகே முயற்சிக்கல்லாம் என்று நினைக்கிறேன் வாய்ப்புக்கு நன்றிகள் பல
ReplyDeleteமிக்க நன்றி ஹிசாலீ... உங்கள் பெயரையும் பட்டியலில் சேர்த்துவிட்டேன், போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்
Deleteஇதுவரை யாருக்குமே காதல் கடிதம் எழுதியதில்லை,
ReplyDelete>>
ஹலோ மக்காஸ், இதை நாம எல்லோரும் நம்பிட்டோம்தானே?! நம்பிட்டோமாக்கும் சகோ!
ராஜி நீங்கள் என்னை தானே கலக்கிறீங்க நிஜமா தான் நம்புங்கள் ஒகே
Deleteஇப்படியா பப்ளிக்கா கிழிக்கிறது... ஹிசாலீ நல்ல புள்ள எனக்கு நல்லாத் தெரியும்
Deleteநன்றி சீனு
Delete
ReplyDeleteமுதல் மூன்று பரிசு பெற்றவர்களது காதல் கடிதங்கள் திடங்கொண்டு போராடுவில் வெளியிடப்படும். AMA evaru londaon magazine la poduramathiri seen podurathu,,,,,,,,,,,,,,,,,erukatum erukattum first price amount kanniya erukeay 5000rs na nalla erukkum athey mathiri aaruthaal parisum kammiya erukku athuvum 5000rs ernthaa nalla erukkum !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எலேய் நீ ஒருத்தம் போதும்ல என் புகழ அன்டார்ட்டிகா வரைக்கும் கொண்டு போவ, தென்காசிப் பக்கம் வராமலாப் போகப் போறேன் :-)
Deleteஉங்களத்தான் சகோ! எல்.கே.ஜி படிக்கும் குட்டீசுக்கே லவ்வு இருக்கு, நீங்க லவ்வலையா? யார் காதுல பூ வைக்க பார்க்குறீங்க?
ReplyDeleteஐயோ நிஜமாதான் அக்கா உங்களிடம் பொய் சொல்வேனா ? இதுவரைக்கும் இல்லை இனிமேல் வந்த பாக்கலாம் என்ன உங்களிடம் சொல்கிறேன் போதுமா
Deleteநானும் நானும் :-)
Deleteஒருத்தர் எத்தனை கடிதம் எழுதலாம்ன்னு சொல்லுங்க?! ஏன்னா! யாரும் இங்க ஒரு லவ்வோட நின்னுடலை.., கஜினி முகம்மதுக்கு போட்டியான ஆளுங்கள்லாம் இங்க உண்டு..,
ReplyDeleteஉங்களை பற்றி இப்படி ப்பளிக்காக சொல்லலாமா சகோ ஆமாம் கஜினி முகம்மதுக்கும் நீங்க சகோவா?
Deleteஹா ஹா ஹா எப்படி மதுரைத் தமிழன் கிட்ட வசமா சிக்குனீங்களா.... இப்ப பதில் சொல்லுங்க
Deleteநாம மாட்டிக்காம இருக்கணும்னா முந்திக்கிட்டு தாக்குறது எங்க மதுரைக்காரவிங்க வழக்கம். உண்மைல கஜினி முகம்மதுக்கு தான்தான் சகோங்கறதை மறைக்கத்தான் மதுரைத்தமிழன் இப்டிச் சொல்றாரு. இது புரியாம என் தங்கைய மாட்டிக்கிட்டதா சொல்றியே சீனு!
Deleteநானும் கலந்துக்குறேன் சகோ! மின்னஞ்சல் முகவரி gandhimathiakp@gmail.com
ReplyDeleteநானும் கலந்துக்குறேன் அக்கா மின்னஞ்சல் முகவரி hishalee@gmail.com
Deleteமிக்க நன்றி ராஜி அக்கா, மிக்க நன்றி ஹிசாலீ
Deleteநடுவர்களுக்கு கடிதம் எழுதலாம்னு இருக்கேன்.... சீனு....
ReplyDeleteஅண்ணே அப்டியே நீங்களும் ஒரு லெட்டர் எழுதிப் பாக்கது..
Deleteகண்ணே, மதுரை மறிக் கொழுந்தேன்னு ஆரம்பிங்க
எலேய்... நீ எழுதாட்டியும் தப்பு தப்பா சொல்லித் தராத. -மறிக- இல்ல -மரிக்- மதுரை மல்லியேன்னு தான் ஆரம்பிக்கணும் நியாயமா...!
Deleteபால கணேஷா பாலையா கணேஷா?
Deleteஎத்தனை வயதுக்காரர்களுக்கும் ஆர்வம் குறையாத ஒரு விஷயம் இந்தக் காதல்.
ReplyDeleteசபாஷ்! சரியான போட்டி!
இன்னும் சில நிபந்தனைகள்:
ஒருவர் ஒரு கடிதம் தான் எழுதலாம். ஒருவரே பல கடிதங்கள் எழுதுவது மற்றவர்களின் வாய்ப்பை பாதிக்குமோ என்று தோன்றுகிறது.
பதிவர்கள் அவர்களது தள முகவரியைக் கொடுக்க வேண்டும்.
ரூபக் ராமிற்கு ஒரு ஜே!
காதல் என்றால் இருவர் அல்லவா? ஒரு பாலரை மட்டும் நடுவராகப் போடுவது சரியல்ல!
ராஜியின் உற்சாகத்துக்கு மற்றொரு ஜே!
காதல்கடிதம், இதுவரை சத்தியமாக எழுதியதில்லை! ஆனால்,சும்மா எழுதி தான் பார்போமே என்ற ஆவல் வந்திருக்கிறது! இதோ அம்மா, உங்க ஆசிர்வாதத்தோட நானும் ரெடி :)
Deleteநன்றி ரஞ்சனி அம்மா. தங்கள் வருகையால் போட்டியில் உற்சாகம் கூடியது.
Deleteதங்கள் நடுவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Deleteகலந்துகொள்ளும் அத்தனை பேரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்! (இது எப்படி இருக்கு?)
Deleteபங்கேற்பவர்கள் எழுதும் கடிதங்களைப் படிக்க நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்!
நன்றி ரூபக் ராம்! உங்களால் தான் இந்த வாய்ப்பு!
மிக்க நன்றி ரஞ்சனி அம்மா மற்றும் ரூபக்
Deleteமகா லக்ஸ், உங்கள் பெயரையும் பட்டியலில் சேர்த்து விட்டேன், மின்னஞ்சல் மற்றும் தங்கள் வலைபூ முகவரி கிடைக்குமா
உங்கள் சுறுசுறுப்பைப் பாராட்டியே ஆக வேண்டும் சீனு!
ReplyDeleteஎனது நிபந்தனைகள் சரிப்படுமா என்று மற்ற நடுவர்களிடம் கேட்டு முடிவு செய்யுங்கள்.
என்னையும் நடுவராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி!
நடுவர்களின் தீர்ப்பே என்றும் இறுதியானது உறுதியானது டிஸ்கான் TMT கம்பிகள் போல
Deleteநீங்களும் எங்களுடன் கை கோர்க்க வருவதில் மிகமிக மகிழ்கிறேன் ரஞ்சனிம்மா. வெல்கம்!
Deleteமிக உற்சாகமான உங்கள் கருத்துரைகளைப் பார்க்கும் பொழுது என்னுள்ளும் உற்சாகம் இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. உங்கள் அனைவருக்கு எனது நன்றிகள்.
ReplyDeleteஎன்னுள் இருந்த சில குழப்பங்கள் சிலவற்றிற்கு உங்கள் சில கேள்விகள் மூலம் தெளிவான விடை கிடைத்து வருகிறது. நிகழும் ஆரோக்கியமான விவாதத்திற்கு மிக்க நன்றி
நடுவர்கள் நால்வருடனும் இணைந்து விதிமுறைகளுக்கு இறுதிகட்ட வடிவம் தயாரித்து வருகிறோம், அவற்றை திங்கள் அன்று பதிவாக வெளியிடுகிறேன்.
அந்த பதிவில் இதுவரை எழுத சம்மதம் தெரிவித்த அத்தனை நண்பர்களின் பெயர்களும் தள முகவரியும் வெளியிடப்படும்.
அது வரை உங்கள் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டே இருங்கள்...
மிகவும் சந்தோசமான நன்றிகள்
சிகரங்களுக்கு நடுவே இந்த சிறுபிள்ளை என்ன செய்ய இயலும் ? இருப்பினும் தலைமைவகிப்பவர்களை அழ வைக்கவாவது எழுதுகிறேன்... எப்பூடி
ReplyDeleteஹா ஹா ஹா அவர்களை அழ வைத்து எங்களை சிரிக்க வைக்கப் போகும் சகோதரியே வாழ்க நீர் பல்லாண்டு. தங்கள் பெயரையும் பட்டியலில் சேர்த்து விட்டேன், வெற்றி பெற வாழ்த்துக்கள்
Deleteமுழுக்க முழுக்க கவிதையாய் இருக்கக் கூடாது ஆனால் கவிதையும் கலந்து இருக்கலாம்.
ReplyDeleteஆமா இது என்ன இப்படியெல்லாம் கண்டிஷன் போட்டா எப்படி ? எனக்கு கடிதம் எழுதி பழக்கமில்லையே ?
உங்களை இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட வேண்டும் இல்லையெனில் நீங்கள் முதல் பரிசை எளிதாக தட்டிக் கொண்டு போய்விடுவீர்கள் காரணம் காதல் கடிதத்தில் கவிதையும் எழுதி நெஞ்சை உருக்கும் கவித்திறமை உடையவர் நீங்கள் அல்லவா. அம்மா சசி இங்கு காதல் கடிதம் எழுததான் போட்டி காதல் காவியம் படைக்க அல்ல
Deleteசகோ சசிகலா //எனக்கு கடிதம் எழுதி பழக்கமில்லையே ?// எனக்கும் பழக்கம் இல்லையே அதனால் வந்த வினை தான் இது...
Delete//அம்மா சசி இங்கு காதல் கடிதம் எழுததான் போட்டி காதல் காவியம் படைக்க அல்ல// ஹா ஹா ஹா மதுரைத் தமிழன் சார் ஏன் இப்படி... ஹா ஹா ஹா
எழுதுவதற்கு முன்னாடியே இப்படியா தமிழா...?
Deleteஹா ஹா! தமிழால இருக்குது பஞ்ச்ச்ச்ச்ச்...
Delete
ReplyDeleteஎனது தளத்தில் உங்களது இந்தப் பதிவை பகிர்ந்து இருக்கிறேன்.
இணைப்பு இதோ: காதல் கடிதம் எழுதத் தயாரா? http://wp.me/244Wx
பகிர்தலுக்கு நன்றிகள் பல...
Deleteஇனிய வணக்கம் சகோதரர் சீனு!...
ReplyDeleteஅங்கு வந்து வாழ்த்தியமைக்கு நன்றி கூறி உங்கள் வலைப்பூ வலம்வர வந்தேன்.
மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கு!..
நல்லதொரு போட்டிதான். காதலில் போட்டிபோடுவார்கள். ஒரு ஆணை பல பெண்களும் ஒரு பெண்ணை பல ஆண்களும் காதலிப்பதற்கு... இங்கென்னவென்றால் காதல் கடிதம் திறமையாக எழுதுவதற்குப் போட்டியா? அருமை. நல்ல முயற்சிதான். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் சகோ!
நடுவராகப் பணியாற்றவிருக்கும் நடுவர்களுக்கும்,
பங்குபற்றும் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்!
த ம.14
எல்லாம் சொல்லிவிட்டு நீங்கள் பங்கு கொள்கிறீர்களா இல்லையா என்று சொல்லாமல் சென்று விட்டீர்களே... கவிதை எல்லாம் எழுதுகிறீர்கள்? ஒரு கடிதம் எழுத மாட்டீர்களா :-)
Deleteநானும் கடிதம் எழுதப் போகிறேன் :)
ReplyDeleteநீங்கள் இல்லாமல் போட்டியா.. வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)
Deleteநானும் கலந்துக்ககிறேன்
ReplyDeletenetworkdesign71@gmail.com
மிக்க நன்றி கொல்லான், உங்களை பட்டியலில் இணைத்துக் கொண்டேன், போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
Deleteசவாலே சமாளி. நானும் எழுதப் போகிறேன். உங்கள் விதிமுறைகளைத் திங்களன்று படித்துவிட்டு லைல மஜ்னு சீஸன் ஆரம்பிக்கலாம்:)
ReplyDeleteஅருமை அருமை அருமை.. நீங்கள் கலந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
Deleteஅசத்துங்க வல்லிம்மா! வாழ்த்துக்கள்!
Deleteசீனு சகோ பரிசு பெறுவதைவிட இங்கு அனைவரையும் ஒன்றாக சந்திக்க வைத்த தங்களுக்கு நன்றி கூறவேண்டும். ஏதோ வந்தோம் பதிவிட்டோம் பின்னூட்டமிட்டோம் என்றிருந்தோம்.இப்படி ஒரு உற்சாகத்தை கொடுத்தற்கு நன்றி உங்களுக்கே...
Deleteஹா ஹா ஹா.. ஹி ஹி ஹி... ஹு ஹு ஹு... நான் காதலில் இருந்த போது இது தான் நான் பேசிய கவிதைகள்.. சரி, கற்பனையான காதலிலாவது உருப்படியாக எதாவது தோன்றுகிறதா என பார்க்கலாம்..
ReplyDeleteபடிப்பவர் நெஞ்சைப் பிழிய வைக்கும் விதமாக இப்போதே எழுத ஆரம்பிதுவிட்டீர்கள் என்று நினைக்கிறன், உங்களுக்காக உங்கள் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.. ( இந்த பயணம் படத்துல நம்ம ரைசிங் ஸார பார்த்து காமெடியன் சொல்லுவாரே அந்த மாடுலேஷன்ல மட்டும் திங் பண்ணிறாதீங்க ) :-)
Deleteஎனது கல்யாணம் காதல் கல்யாணம்தான் ஆனால் காதல் கடிதம் எழுதி காதலித்தது அல்ல. அதனால் யாரவது மண்டபத்தில் காதல் கடிதம் எழுதி வைத்து இருந்தால் எனக்கு அனுப்பவும் பரிசில் பாதியை கண்டிப்பாக பகிர்ந்து அளிக்கிறேன்,
ReplyDeleteஅடே சீனு உன்னால் கடிதம் டைப் பண்ணி பண்ணி விரல்களுக்கு வலி வந்ததும் மூளை சுளுக்கி போனதுதான் மிச்சம்( அது எல்லாம் உங்களுக்கு இருக்குதா என யாரும் கேட்க கூடாது)
ஆமாம் சீனு உங்க மனதை எந்த பெண்ணிடம் பறி கொடுத்து இருக்கிறீர்கள் என்ற உண்மையையாவது இப்போதாவது சொல்லக் கூடாதா என்ன? சீனு நீங்க மிக புத்திசாலி போட்டி என்ற பெயரில் காதல் கடிதம் எப்பை எழுதுவது என்பதை மிக எளிதாக கற்று கொள்ளும் வழியை அறிந்திருக்கிறீர்களே பாராட்டுக்கள் சீனு & வாழ்த்துக்கள்
இந்த போட்டியில இப்படியும் ஒரு உள் குத்து இருக்குதா?
Deleteபல கடிதங்கள் இங்கு அரங்கேற ஒரு காதலை வாழ வைத்தால் நமக்குத்தான் எத்தனை ஆனந்தம் கிடைக்கும்.
அட அப்படியென்றால் உங்களிடம் பல கடிதங்கள் இருக்க வேண்டுமே, கலந்து கொள்வது பற்றி பரிசீலித்து பாருங்கள்... தொடர்ந்து என்னை உற்சாகப் படுத்தி வரும் உங்களுக்காக விரைவில் ஒரு காதல் கடிதம் எழுதுகிறேன் :-)
Delete//ஒரு காதலை வாழ வைத்தால்//
அடப்பாவி :-)
என் முதல் காதலில் கடிதம் எழுதியது இல்லை.....நான் கடிதம் எழுதனும் என்றால் எனக்கு புது காதலி கிடைக்கனும் அதற்காக பிரார்த்தனை பண்ணுங்கள்
Deleteமகிழ்ச்சியுடன் ஏற்கிறேன் நானும் கலந்துக்குறேன் சகோ! vitrustu@gmail.com
ReplyDeleteநீங்கள் கலந்து கொள்வதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி சார்... போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
Delete
ReplyDelete//மிக உற்சாகமான உங்கள் கருத்துரைகளைப் பார்க்கும் பொழுது என்னுள்ளும் உற்சாகம் இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது./
அடடடா..!! யப்பா.!! எப்படி தாய்க்குலங்களை பண்றான் பாரு. ராஸ்கோல்!!
பப்ளிக் பப்ளிக் பப்ளிக்.. :-)
Deleteவாருங்கள் வல்லி!
ReplyDeleteஒரு கை பார்த்துவிடுங்கள்!
Best wishes!
நானும் உங்களுடன் சேர்ந்து அவரை வாழ்த்துகிறேன் :-)
Deleteமிகவும் மகிழ்ச்சி .............நானும் கலந்துக்கொள்கிறேன்.
ReplyDeletethamilselvi94@gmail.com
நீங்கள் கலந்து கொள்வதில் எங்களுக்கும் மகிழ்ச்சி தமிழ் செல்வி, போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
Deleteபோட்டி இருந்தால்தான் எதுவும் சிறக்கும் போல ஏனென்றால் பின்னுட்டம் இட்டதிலேயே பதிவர்கள் சாதனை படைத்துவிட்டார்கள் கொஞ்சம் திரும்பிப்பாருங்களேன் 108 பின்னூ ட்டங்கள் ம் ம் ம்... நிறைய மலரும் நினைவுகளை படிக்கப்போகிறோம்
ReplyDeleteஹா ஹா ஹா அதுவும் மிக சரிதான்... சகோ மின்னல் நாகராஜ், நீங்களும் கடிதம் எழுத கற்பனைக் குதிரையை தட்டி விடுங்கள்
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete\\\முழுக்க முழுக்க கவிதையாய் இருக்கக் கூடாது ///
ReplyDeleteMe escape.
கவிதையில் அசத்துற நீங்க இடையில கொஞ்சம் உரைநடையையும் சேர்த்து வசன கவிதைல நிச்சயம் அசத்த முடியும் கவிஞரே! எஸ் ஆகாம கோதாவுல குதியுங்க...!
Deleteஆஹா வாழ்த்துக்கள் சீனு சிறப்பான ,ஆக்க பூர்வமான விடயம் பல மூத்தவர்கள் இந்த கோதாவில் காதல் கடிதம் தீட்டும் போது எனக்கும் ஆசைதான் ஆனால் தனிமரம் நேரமும் ,எழுத்துப்பிழையும் என்னையும் இயல்பில் காதலில் தோல்வி செய்வேன் என்பதால் மீ எஸ்§§ ஹீ வாசகனாக உங்கள் தொடர் பதிவில் தொடர்கின்றேன் நடுவர்கள் படும் அன்பு மிரட்டலுக்கு வாழ்த்துக்கள்§ மீண்டும் வாழ்த்துக்கள் நல்ல ஒரு விடயத்துக்கு சீனு!
ReplyDeleteநேசன்... எழுத்து்ப் பிழைக்காக மார்க் எதுவும் குறைக்க மாட்டோம். அவசியம் எழுதுங்க!
Deleteவாத்தியார் சொன்னதை கவனியுங்கள் நேசன், நீங்களும் இந்தப் போட்டியில் பங்கு கொண்டால் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி
Deleteஆ! சிவகுமாரன்.. ஏன் எஸ்கேப்?
ReplyDeleteஅவரை விட்டு விடாதீர்கள்... :-)
Deleteகாலமெல்லாம் உன் கண் அசைவுக்காகவே காத்திருப்பவனை
ReplyDeleteஒரு காதல் கடிதம் எழுது என பணித்துவிட்டாய். என் கண்களை
பனிக்கச் செய்துவிட்டாய்.
இதயம் லப் டப் என்று அடிக்கிறது என்று நான் நினைத்ததில்லை.
இதயக்கதவுகள் எனது நான் விடும் பெருமூச்சு காற்றினிலே தடுமாறி நீ வருவாயோ என திறந்தும் மூடியும் நிலை கொள்ளாது நின் வரும் வழியினில் விழி வைத்து பார்த்துகொண்டு இருக்கிறது.
ஜூலை 20 ம் தேதி வரை நீ காத்திருக்கவேண்டாம். அதற்கு முன்னேயே நான் எழுதும் கடிதம் உன்னை வந்தடையும்.
என் கடிதம் வருமென்று உன் வீட்டு வாசலிலே நீ இரவு நேரம் முழுவதும் உட்கார்ந்து
இருப்பாய் என எனக்குத் தெரியாமல் இல்லை. இன்னும் ஜூனிலெ இருப்பதும் ஜூலையிலே இருபதுமாக மொத்தம் நாற்பது நாட்கள் இருக்கின்றன. நாற்பது நாட்களும் அலுவலகம் போகாது இருப்பது முடியாதது தான். இருப்பினும் நீ இல்லாதபோது எனது கடிதம்
தந்தை தாய் கைகளிலே கிடைத்தால் கூட பரவாயில்லை அந்த கொடூரன் உன் அண்ணன் கண்ணன் உண்மையிலே அவன் கம்சன் அவன் கைகளிலே கிடைத்துவிட்டால் என்னை த்வம்சம் பண்ணி விடுவான். மாங்கனி சுவையாம் உன் இதழ்களை ருசிக்க காத்திருக்கும் எனது பற்களை உடைத்து அவன் வாயை மணி பர்ஸ் ஆக்கி விடுவானோ என்ற பயமும் இருக்கிறது.
நானே வந்து அந்த கடித்தத்தை கொடுக்கலாம் என்றால் பயமாக இருக்கிறது. உன் வீட்டு வாசலிலே இருக்கிறதே ஒரு நாய். அது அன்று என்னை ஓட ஓட விரட்டியதே உனக்கு நினைவு இருக்கும் என நம்புகிறேன்.
உன் அண்ணன் கம்சனையும் பொறுத்துக்கொண்டு நான் இருப்பேன் . உனைக்காதலிப்பேன். எந்த நாய் தடுத்தாலும் நான் வருவேன்.
காதலி.!! காத்திரு. காலம் நம் கைகளில்.
ஒரு செய்தி சொல்லவேண்டும். நல்ல காதல் கடிதத்திற்கு ரூ. 500 ஆம். சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. சரவணா பவனில் ஒரு இட்லி காபி சாப்பிடவே ரூபா 600 ஆகிறது. விலை வாசி ஏற்றத்தை கணக்கில் கொண்டு காதலை ஆதரிக்கும் கதாசிரியர்கள் ஒரு நூறு ருபாய் அதிகம் கொடுப்பார்கள். என நம்பிக்கையும் இருக்கிறது.
காதல் வாழ்க.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
அட...! கமெண்லயே சுப்புத் தாத்தா காதல் கடிதத்துக்கான ப்ராக்டிஸை ஆரம்பிச்சுட்டாரே... வாழ்த்துக்கள் உங்களுக்கு!
Deleteயாரங்கே.. சுப்புத் தாத்தாவுக்கு பரிசைக் கொண்டு வா.
Deleteசுப்பு தாத்தாவின் பின்னூட்டமே முதல் பரிசை கொடுக்கவைத்துவிடும் போல... நண்பர்களே இவர்களை எல்லாம் பார்த்து பயந்து கடிதம் எழுதாமல் இருந்து விடாதீர்கள். பரிசுக்காக அல்ல... காதல் ஒரு சுகமான அனுபவம் கற்பனையாக எழுதுவோம் அதுவும் சுகமான உணர்வே..
Deleteசுப்பு தாத்தா.. உங்களுடன் மற்றவர்களுக்குப் பலத்த போட்டி இருக்கப் போகிறது, அத்தனை காதல் ரசம் :-)
Deleteஎனது பதிவுக்கு சுப்புத் தாத்தா எழுதிய கவிதை இதோ:
Deletesury Siva
கிழவிக்கொரு காதல் கடிதம்
என் இல்லக்கிழவிக்கொரு காதல் கடிதம்
கணப்பொழுதிலெ எழுதிவிட்டேன்.
காணும் கண்கள்
காணாத காட்சிகளை மனக்
கண்முன்னே நான் கொண்டு வந்தேன்.
எண்ணிய தெல்லாம் நீயே எனவே
என்றுமே நானே எண்ணி வந்தேன்.
ஏங்கும் பொருள் என ஒன்று இருந்தால்
என் தங்கம் நீயே என்றுணர்ந்தேன்.
பிறந்ததும் நான் அழுதேனாம்
புரியாமல் என் அன்னை துடித்தாளாம்
பிறவாத உன்னை நான் தேடினேன் நீ
பிறந்த பின்னே தான் முறுவலித்தேன்.
கண்ணா கண்ணா என நீயும்
கண்ணே கண்ணே என நானும்
கதறவில்லை மரம் சுற்றவில்லை.
கண்களில் உன்னை என்று கண்டேனோ
உண்டு விட்டேன். என் இதயத்தில்
கொண்டு விட்டேன்.
intha kavithai
mudiyatha thodarkathai.
saravanan meenachi mudiyalaam.
subbu thatha meenachi paatti mudiyumo ?
ithu sindhubadh serial.
subbu thatha
சசி! உங்கள் தைரியத்தைப் பாராட்டுகிறேன். மற்றவர்களையும் உற்சாகப்படுத்தும் மறுமொழிக்கு இன்னொரு சிறப்புப் பாராட்டு!
சுப்புத் தாத்தா அவர்களே... அட்டகாசம்...
Deleteகண்ணா கண்ணா என நீயும்
Deleteகண்ணே கண்ணே என நானும்
கதறவில்லை மரம் சுற்றவில்லை.
பாருங்க என்ன அழகா கவிதையா எழுதியிருக்காங்க. இந்த மாதிரி கவிதை எழுத சொன்னா எழுதிடுவேன். இருப்பினும் எழுதுவோம் ....நண்பர்களே.
சுப்பு தாத்தா, அசத்திடீங்க, as usual!
Deleteசுப்பு தாத்தா, சூப்பர்.. அட்டகாசம். டிரைலரே இவ்வளவு கலக்கல்னா மெயின் பிக்சர் எப்படி இருக்குமோ.. ஹ்ம்ம்.. காத்திருக்கிறோம்..
Deleteசீனு..! நான் எதிர்பார்த்ததை விட ஆர்வமாக நண்பர்களின் பங்கெடுப்பும், வரவேற்பும் இருப்பதைப் பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது! நடுவர்களுக்கு பொறுப்பு கூடியிருப்பதையு்ம, எதை செலக்ட் செய்வது என்று குழம்பி சிகையைப் பிய்த்துக் கொள்ள நேரும் என்பதால் இம்மாதம் சிகையழகுக் கலைஞருக்குத் தரும் பணம் மிச்சம் என்பதையும் இது தெள்ளென உணர்த்துகிறது!
ReplyDeleteஹா ஹா ஹா எப்படியோ உங்கள் செலவை மிச்சம் பிடித்ததில் எனக்கும் மகிழ்ச்சி தான் (ஆமா இதெல்லாம் உங்களுக்கு ஒரு செலவா என்ன.. ஹி ஹி ஹி )
Deleteஅருமையான முயற்சி அண்ணா! நானும் களத்தில் இறங்குகிறேன்!
ReplyDeleteவெல்கம் யுவரானி.
Deleteகொஞ்ச காலமாய் வலையுலகம் பக்கமே உங்களைக் காணோமே எங்கே வராமல் பொய் விடுவீர்களோ என்று நினைத்தேன்..
Deleteநீங்களும் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி யுவராணி... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்
கணேஷ் சாருக்கும் சீனு அண்ணாவுக்கும் வணக்கம். கல்லூரி வாழ்க்கை முடிந்துவிட்டது மற்றும் நேரமின்மை, சரியான இணைய இணைப்பின்மை காரணமாகவும் பதிவுகளில் கவனம் செலுத்தமுடிவதில்லை. இப்பொழுது தான் வாழ்க்கையில் வேரூன்றவே ஆரம்பித்திருக்கிறேன்! கொஞ்சம் நிலை பெறும் வரை இந்த பதிவுலகத்தில் இருந்து விடுப்பு மட்டுமே எடுத்துள்ளேன். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் மின்னஞ்சலில் குவியும் பதிவுகளை மட்டும் படித்து வந்தேன். இங்கு எதோ தலைப்பை பார்த்து உள்ளே வந்தால் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது அதுதான் நானும் பட்டியலில் சேர்ந்துகொண்டேன். கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் எல்லையுமில்லை பஞ்சமுமில்லை பார்க்கலாம் எனது கற்பனை எவ்வளவு தூரம் நீள்கிறது என்று!!! எங்களது கடிதங்களை படித்திட தயாராகுங்கள் சார்!!!!!!!!
Deleteஅடடா, சூப்பர் போட்டியா இருக்கே! முதலில் போட்டி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்! 4 நடுவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநான் கலந்துக்கலாமான்னு யோசிக்குறேன்! ஏன்னா காதல் கடிதம்னா அதுல ஒரு ஃபீல் இருக்கணும்!:) அப்படியே மெழுகா உருகணும்! நமக்கு அப்படி செண்டி மெண்டா எழுத வராதே?? :) மொக்கையாத்தான் எழுத வரும்! :)
அப்புறம் நடுவர்களில் - நம்ம அண்ணன் பால கணேஷ் இருக்காரே? அவரு ரொம்ப நல்லவரு! :) வல்லவரு! :) என் மேல ரொம்ப பாசமானவரு! வர வர நல்ல அழகா, ஹேண்ட்சமா :) வர்ராரு! அவரு ஒரு ஜீனியஸ் :)
( கணேஷ் அண்ணே, ஏதோ என்னால முடிஞ்சளவுக்கு புகழ்ந்திருக்கேன்! போட்டியில கலந்துக்கிட்டா, பார்த்துக் கவனிச்சிடுங்க :)
நீங்க எந்த அளவுக்கு திறமையானவர்னு எனக்கு நல்லாவே தெரியும் மணி... கலந்துக்கிட்டு அசத்துங்க! அதுசரி... நீங்க உண்மைகளைத் தானே சொல்லியிருக்கீங்க. இதுல எங்கருந்து வந்தது புகழ்ச்சி? ஹி... ஹி...!
Deleteவணக்கம் மணி, உங்களது பெயரை பட்டியலில் சேர்த்துவிட்டேன், போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள், வாத்தியார் பால கணேஷ் பற்றி நீங்கள் கூறிய விசயங்களில் துளி அளவும் பொய் இல்லை என்பதால் நீங்கள் எழுதப் போகும் கடிதமும் நிச்சயம் கற்பனையாய் இருக்காது என்பது உங்கள் எழுத்துக்களை பார்க்கும் போதே தெரிகிறது :-)
DeleteThis comment has been removed by the author.
Deleteஅனைவருக்கும் வணக்கம்!முதற்கண் யாம் பதிவர் அல்ல, இளைஞரும்(கொலைஞர் போல்) அல்ல.அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று கதவை அகலத் திறந்த போதும்,பங்கு கொண்டால் சிறுசுகள் பாவம்!!!!!!!!!!!!!!ஹ!ஹ!ஹா!!!
ReplyDeleteஅட மேட்டர் நல்லாருக்கே. நாமளும் குதிச்சிரவேண்டியதுதான்.
ReplyDeletevankavasinka@gmail.com
http://vankavasinkajosinka.blogspot.com/
சீனு சார்,
ReplyDeleteஉங்க ஐடியா செம செம செம.... அதுக்கு முதல்ல வாழ்த்துக்கள்! 3 நாளா யோசிச்சு யோசிச்சு போட்டியில கலந்துக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்!
உங்க வாத்தியாருக்கு நீங்க அவரோட சிஸ்யர்ன்றதுல ஏகப்பட்ட பெருமையாக்கும்! ’நல்ல ஐடியா, சீனு சார் ரூம் போட்டு யோசிச்சார் போல’ அப்டினு ஜஸ்ட் ஒரு செண்டன்ஸ்தான் சொன்னேன். ஆனா அவரு என்னனா, ‘என்னோட சிஸ்யன் அதுதான் அப்டி யோசிக்கிறான்’னு ஒரு 5, 6 வரிகள் சொல்லி ஒரே பெருமை அவருக்கு! எப்டியோ எனக்கு தெரிஞ்சு நடுவர்கள்ல எல்லாருமே அப்பாவிகள்தான் உங்க வாத்தியாரத் தவிற! சோ அவர கொஞ்சம் அழ விட்டு பாக்கவே போட்டியில கலந்துக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்!
e-mail : chamu261@gmail.com
blog : http://www.sudarvizhi.com/
எழுத்துப் பிழைகளுக்கு மார்க் குறைக்க மாட்டேனு சொல்லி இருக்கும் வாத்தியாருக்கு ஸ்பெசல் நன்றிகள்! எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்!
சுப்பு தாத்தா அவர்களோட கவிதை ரொம்பவும் இளமையா இருக்கு!
அப்பறம் போட்டி முடிஞ்சதும் நடுவர்களும் காதல் கடிதத்த அவங்க தளத்துல எழுதனும்னு சொல்லி இருக்க உங்களுக்கு பாராட்டுக்கள் சார்!
நான் ரெடி......thmalathi@gmail.com
ReplyDeleteஏதோ எழுதுவேன் பாஸ் பாக்கலாம் premshopra@yahoo.com
ReplyDeleteஒரு ரெண்டு வாரம் ஊர்ல இல்ல, அதுக்குள்ள என்னென்னவோ நடந்திருக்கு. நானும் கலந்துக்கலாம்னு ஆசப்பட்டேன், ஆனா பின்னூட்டத்துல ஜாம்பவான்கள் கலந்துக்கறத பார்த்துட்டு பதுங்கீட்டேன்..
ReplyDeleteபரிசு சரியில்ல. அந்த பொண்ண எப்படியாச்சும் கால்ல விழுந்தாவது என் கூட சேத்து வெக்கணும். டீல் ஓக்கேவாண்ணே?
ReplyDeletekoothaadii@gmail.com
அட போன வாரம்தானே ஒன்று எழுதினேன்... இன்னொன்னு உதிக்குதானு முயற்சி பண்ணி பாக்குறேன்.. :) என் மின்னஞ்சல்: kodimalligai@gmail.com
ReplyDeleteபோட்டியில் பங்கேற்கிறேன் நண்பரே.....
ReplyDeletetamizhmuhil@gmail.com
I am ready. aakhilcse@gmail.com
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பிறகு வலைத்தளத்தின் பக்கம் வந்தது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அதுவும் அனைத்து வலைப்பதிவரையும் இங்கே காணுகையில் மிகவும் உற்சாகமாக இருக்கிறது...
ReplyDeleteஅது மட்டுமின்றி இந்தப் போட்டியும் மிகவும் அருமையாக உள்ளது...
ரஞ்சனி நாராயணன்,மின்னல்வரிகள் பாலகணேஷ்,எங்கள் பிளாக் ஸ்ரீராம்,மூன்றாம் சுழி அப்பாதுரை இவர்கள் நடுவர்களாக இருப்பது இன்னும் சிறப்பு...
போட்டியில் கலந்துக் கொள்பவர்கள், கொள்ளப் போகிறவர்கள் அனைவர்க்கும் தமிழ்த்தொட்டில் தமிழ்ராஜாவின் வாழ்த்துக்கள்.
திடங்கொண்டு போராடு சீனு அவர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்... இந்த காதல் கடிதங்களைப் படிக்க வேண்டுமானால் எப்படி படிப்பது... ஒவ்வொருவர் தளத்திற்கும் சென்று பார்ப்பது தான் வழியா...?
ஒரு சின்ன யோசனை... எல்லா கடிதங்களை ஒரு குறிப்பிட்ட தளத்தில் போட்டால் எல்லாரும் எளிதாகப் படிக்கலாம்... அது மட்டுமின்றி காதல் கடிதத்தின் மொத்த தொகுப்பாகவே அந்த தளம் நாளை உருவாகலாம்... இது என்னுடைய யோசனை...
அனைவரது கடிதங்களையும் படிக்கும் ஆவலுடன்...
தகவலுக்கு நன்றி... போட்டிக்கு நான் தயாராகி விட்டேன்... ஜுரி கமிட்டியில் நீங்களும் ஒருவர் என்பதால் எனக்கு கவலை இல்லை..
ReplyDeleteஎன்னையும் ஆட்டத்துல சேத்துக்குங்க சாமிகளா!
ReplyDeleteநானும் வரேன் சாமி....இன்னும் கொஞ்சம் டைம் கிடைக்குமா....????
ReplyDeleteஇப்பதான் இணையம் வர முடிந்தது....
இறுதி தேதியை நீடித்தால் இன்னும் சிலருக்கு உதவியாக இருக்கும்.....
அவசரத்தில் படைப்பு கேட்டுவிட கூடாது பாருங்க....
nakksabaram2009@gmail.com
மன்னிக்கவும்....ஜூலை-யை ஜூன் என்று தவறுதலாக படித்துவிட்டேன்.....
ReplyDeleteவிரைவில்....
சபாஷ்.... சரியான போட்டி! :)))
ReplyDeleteஇதுவரைக்கும் யாருக்கும் காதல் கடிதம் எழுதினதில்லை சீனு! :))))
பெரிய இடத்திலிருந்து ஒரே பிரஷர்.... அதனால எழுதித்தான் ஆகணும்! சீக்கிரமா எழுதிடறேன்....
நானும் முயற்சிக்கிறேன் நண்பரே...
ReplyDeleteyeskayenn_sr@yahoo.com
பால கணேஷ்8 June 2013 07:06
Deleteநேசன்... எழுத்து்ப் பிழைக்காக மார்க் எதுவும் குறைக்க மாட்டோம். அவசியம் எழுதுங்க!////
ஹைஈஈஈஈஈஈஈஈஈ ஜாலி டோலி டாலி ராலி ரீ ரீ அண்ணா வாங்கோ ஒருக் கா பார்த்திடுவம் .....
நோ ரெல்லிங் மிஸ்ட்டக் ....
எச்ச்சூஸ் மீஈஈஈ ,என்ன இது ...
ReplyDeleteசீனு நியாபகம் இருக்கோ என்னை .....
நீங்கள் ப்ளாக் ஆரம்பித்தது இப்போ மாறி இருந்தது கட கட எண்டு வளர்ந்து வீட்டீர்கள் ஜூனியர் கண்ணா..?.... ஹீஹீஹீ ...நீங்கலாம் எனக்கு அப்புறம் தானே ப்ளாக் ஆரம்பிச்சீங்க அதான் ஜூனியர் ...
என்னது காதல் கடிதம் எழுதனுமோ ....விடுப்புக் கடிதமே எனக்கு எழுத தெரியாது இய்துல காதல் கடிதம் வேற .....
ஆனாலும் எழுதி தான் பார்க்கொனுமே ...நானும் கயந்துகிலமா
நானும் முயற்சித்து பார்க்கலாம் என்றிருக்கிறேன்.. என் காதலுடன் வருகிறேன் விரைவில்.
ReplyDeleteநானும் முயற்சித்து பார்க்கலாம் என்றிருக்கிறேன்.. விரைவில் வருகிறேன் என் காதலுடன்..
ReplyDeletesrikrishnajayanth@gmail.com
இது எனது தளம் http://apdineshkumar.blogspot.com/ Email.apdineshk@gmail.com
ReplyDeleteநானும் எழதுலமா?