இரண்டு நாட்களுக்கு முன்னரே காதல் போயின் காதல் படத்தின் டீசரை அனுப்பிவிட்டார் ஆவி. ஆர்வத்துடன் ஓபன் செய்தால் எந்த ஒரு காட்சிக்காக என்னை அனைவரும் கலாய்த்தார்களோ, எந்த ஒரு காட்சியில் 'ஐ வான்ட் மோர் எமோசன் என்றார்களோ அதையே டீசரில் வைத்திருந்தார். 'யோவ் ஏன்யா இப்படி செஞ்சீரு' என்று சட்டையைப் பிடிக்கலாம் என்றால் நான் எதை நினைத்திருந்தேனோ அதையே பதிலாக கூறினார் ஆவி. (என்ன பதில் என்பது ஆப்டர் தி மூவி)
'சரி டீசர் எப்படி இருக்கு' என்றார்.
அவரிடம் வழக்கமாக நான் கூறும் பதில் 'என்னை தவிர எல்லாமே நல்லா இருக்கு பாஸ்'
'யோவ் விளையாடாத, சீரியஸா கேக்குறேன், எப்படி இருக்கு'
'பாஸு நானும் சீரியசாத்தான் சொல்றேன்' என்று சொன்னதையே மீண்டும் சொல்லவும் மனுஷன் கடுப்பாகிவிட்டார்.
'இல்ல பாஸ். எனக்கு ஏற்கனவே கதை தெரியும், அதுனால கருத்து சொல்றது ரொம்ப கஷ்டம்' என்றேன்.
'இல்ல சொல்லுங்க' என்றார் விடாப்பிடியாக. அப்போதைக்கு 'நன்றாக இருக்கு' என்று கூறினாலும். கதை தெரியாத ஒரு பார்வையாளனாக என்னால் அந்த டீசரைப் பார்க்கவே முடியவில்லை. அந்த டீசர் ஒரு படத்தின் காட்சிகளாக, எதற்கு அடுத்து என்ன வரும் என்பதாகத்தான் என் மனதினுள் ஓடிக் கொண்டிருந்தது.
ஆனால், இந்த ஆனால் தான் மிக முக்கியம். டீசர் வெளியாகி அது குறித்து நீங்கள் கூறும் கருத்துக்களை பார்க்கும் போதுதான் என்னாலும் உங்கள் பார்வையில் பார்க்க முடிகிறது.
டீசரின் வாயிலாக நீங்கள் ஊகித்திருக்கும் கதையின் படி, நாயகி நாயகனை(!) காபி குடிக்க அழைக்கிறார். வேகமாக வரும் ஒரு காரின் சக்கரம் தேயும் சப்தம் கேட்கிறது. நாயகி 'கமல்' என்று கத்துகிறார். coming soon. எழுத்துக்கள் வருகின்றன.
இதை மட்டும் வைத்து கதைக்குள் ஒரு கதை பின்னினால் கதை வேறொரு பார்வைக்கு செல்கிறது. நிச்சயமாக நான் இப்படி யோசிக்கவில்லை. கதைக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தேன். கதையின் முக்கியமான எந்த ஒரு விசயமும் இதில் காண்பிக்கப்படவில்லை. காண்பித்திருந்தால் எதிர்பார்ப்பு வேறு மாதிரி இருந்திருக்குமா தெரியவில்லை.
ஆனால் ஆவியும் எடிட்டர் முல்லை வேந்தனும் இந்த டீசரின் மூலம் பார்வையாளர்களுக்கு எதை காட்சிகளாக காண்பித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தார்களோ அதை மிகச் சரியாக மிகத் தேவையான அளவில் காண்பித்து இருக்கிறார்கள் என்பதை உணரும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹேட்ஸ் ஆப் டூ யு போத்.
அப்புறம் என்னதான் என்னை சரமாரியாக ஓட்டித் தள்ளினாலும் என்னை எங்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் நண்பர்களே எனதாருயிர்த் தோழர்களே உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி...
டீசரின் மற்றொரு சிறப்பான அம்சம் இதன் ஆரம்பத்தில் வரும் குரல். முதல்முறை கேட்டத்தில் இருந்து இப்போது வரைக்கும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. அப்படி ஒரு மயக்கும் குரல். அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் - நண்பர், எழுத்தாளர், பண்பலைத் தொகுப்பாளர் கார்த்திக் புகழேந்தி. உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் நண்பா...
காதல் போயின் காதல் குறும்படம் பெப்ரவரி 23 ஆம் தியதி வெளிவர இருக்கிறது.
- உங்கள் அனைவரின் மேலான ஆதரவை எதிர்பார்த்து
காதல் போயின் காதல் குறும்படக் குழு
பின்குறிப்பு : குறும்படம் சார்ந்த விரிவான பதிவுகளில் இனிவரும் பொழுதுகளில் :-)

Tweet |
முன்னோட்டம் நன்றாக வந்துள்ளது. இன்னும் ஓரிரண்டு காட்சிகளை சேர்த்திருக்கலாம்... வாழ்த்துக்கள்....
ReplyDelete//காதல் போயின் காதல் குறும்படம் பெப்ரவரி 23 ஆம் தியதி வெளிவர இருக்கிறது. //
ReplyDeleteபார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் நண்பா....
ReplyDeleteஅது என்னய்யா Official Teacher?
ReplyDeleteபெரும் படங்களுக்கே டீசர் இவ்வளவுதான் இருக்கும் எனும்போது குறும்படத்துக்கு இதற்குமேல் நீளமாக எதிர்பார்ப்பது தவறுதான்!
ReplyDeleteகாத்திருக்கிறோம்.
பல "லாம்"கள் சொல்ல"லாம்" என்று ஆசை தான். ஆனால் முழு குறும்படமும் பார்த்துவிட்டு சொல்கிறேன். இப்போது ஒரு "லாம்" மட்டும்,
ReplyDeleteடீசரை முன்னரே வெளியிட்டு குறும்படத்தை இன்று வெளியிட்டிருக்க"லாம்".
கணினித்திரையில் குறும்படம் வெற்றிப்பெற்று வெள்ளித்திரையில் பயணிக்க குறும்படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!
கார்த்திக் புகழேந்தி குரல் பளீர்... பளீர்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ஆவியின் தளத்தில் டீசர் பார்த்தேன்..... நன்றாக வந்திருக்கிறது.
ReplyDeleteஒரு வித எதிர்பார்ப்புடன் நானும் காத்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDelete