24 Nov 2014

ரியல் எஸ்டேட் மிருகமும் - வண்டலூர் ஜூவும்

தினமும் தொலைகாட்சியில் ரியல் எஸ்டேட் செய்யும் ப்ரோக்கர்கள் சென்னைக்கு மிக மிக அருகில் இருக்கும் வண்டலூரில் இருந்து ஐந்தே நிமிடத்தில் சென்று விடக்கூடிய இடத்தில் ப்ளாட் போட்டு விற்றுக் கொண்டிருப்பதை காட்டுகிறார்கள். அவர்களது வியாபார யுக்தியே அருகில் இருக்கும் லேண்ட்மார்க்குகளைக் கூறி கூவி கூவி விற்பனை செய்வதுதானே. அப்படித்தான் இந்த வண்டலூர் அருகில் இருக்கும் ப்ளாட்டையும் விற்றுக் கொண்டிருந்தார்கள். 

வண்டலூரின் லேண்ட்மார்க்காக அவர்கள் கூறுவது இன்னும் சில வருடங்களில் இங்கே அமைய இருக்கும் உலகின் மிகபெரிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை. 

ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அது இப்போது நிரம்பி வழியும் அவலத்தில் இருப்பதால் சென்னை தினமும் அதன் காலை மாலை வேளைகளிலும் அசந்தர்ப்பமான சூழ்நிலைகளிலும் திக்குமுக்காடிப் போகிறது. நிலைமையை சரிசெய்ய அங்கு இருக்கும் பேருந்து நிலையத்தையே இரண்டு அடுக்கு பேருந்து நிலையமாக மாற்றலாமா என்று யோசித்துப் பார்த்தார்கள். என்ன நினைத்தார்களோ அந்த திட்டத்தைக் கைவிட்டு இப்போது வண்டலூர் என்கிறார்கள். 

கோயம்பேடில் பேருந்து நிலையம் வருவதற்கு முன் அனைத்து பேருந்துகளும் பாரிஸ் வரை சென்று வந்து கொண்டிருந்தன. சென்னை ஒன்னில் ட்ராபிக்கை கட்டுபடுத்த ஊரின் ஒதுக்குபுறமாக இருந்த கோயம்பேடைத் தேர்ந்தெடுத்தது தமிழக அரசு. இப்போது கோயம்பேடும் மையப் பகுதி ஆகிவிட்ட நிலையில் சென்னைக்கு மிக மிக அருகில் இருக்கக் கூடிய வண்டலூரைத் தேர்வு செய்திருக்கிறார்கள் அதிகாரிகள், அரசியல் மட்டத் தலைகள். 

எந்த படித்த அறிவு ஜீவி வண்டலூரைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி புத்தி புகட்டினார் என்று தெரியவில்லை. ஒருவேளை வண்டலூரின் பின்கதை அந்த அதிமேதாவிக்கு தெரியாமல் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆசியாவின் மிகபெரிய மிருகக் கண்காட்சி சாலையை பிரிடிஷ் அரசாங்கம் முதன்முதலில் அமைத்த இடம் தற்போது சென்ட்ரலில் மூர்மார்க்கட் அருகில் இருக்கும் இடம். 


அப்போது பாரிஸ் சென்ட்ரல் போன்ற இடங்கள் இயற்கைச் சூழல் மிகுந்து இருந்த பகுதிகள் என்பதால் அங்கே அமைத்தார்கள். முதலில் உயரதிகாரிகள், சமஸ்தான தலைவர்கள் மட்டுமே வந்து போகும் இடமாக இருந்த சென்ட்ரல் மிருகக் காட்சி சாலை மெல்ல மெல்ல பொதுமக்கள் பார்வைக்கும் திறந்து விடப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் வண்டி கட்டி பார்த்து சென்றிருக்கிறார்கள். மெல்ல அவர்களின் முக்கியமான பொழுது போக்கும் இடமாகவும் மாறி இருக்கிறது.

இவ்விசயம் நம்மக்கள் மத்தியில் சற்றே பிரபலமாக கூட்டம் கூட்டமாக வந்துசெல்ல ஆரம்பித்தனர். மேலும் இவ்விடங்களை இவர்கள் செத்த காலேஜ் என்றும் உயிர் காலேஜ் என்றும் வாஞ்சையோடு அழைக்கத் தொடங்கினர். விஷயம் சுத்துப்பட்டு எட்டுபட்டிக்கும் பரவ "எட்றா வண்டிய" என்றபடி வண்டிமாடு கட்டிக்கொண்டு சென்னைக்கு கிளம்பிவிட்டார்கள் ஜமீன்கள் மிராசுகள் மற்றும் ஜனங்கள். வெகுவிரைவில் இவ்விரு இடங்களும் நகரின் முக்கியமான பொழுதுபோக்கு மையமாக மாறின. இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் வான்படை விமானங்கள் மதராசப்பட்டினத்தைத் தாக்கலாம் என்ற நிலை ஏற்பட்ட போது விலங்குகளின் நலன் கருதி இடமாற்றம் நடைபெற்றுள்ளது. அதன்பின் மீண்டும் இங்கேயே மாற்றிவிட்டார்கள். இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன? என்பது குறித்துத் தெரியவில்லை. 

சமநேரத்தில் மிருகக் காட்சி சாலையில் இருந்த விலங்குகளை ஏதோ திடீர் நோய் தாக்கி அவற்றின் உயிரைக் காவு வாங்கி இருக்கின்றன, ஒன்று அல்ல இரண்டு அல்ல, கொத்து கொத்தாக விலங்கினங்கள் செய்தது மடிய, என்ன நடக்கிறது என்பதையே நம் அரசாங்கத்தால் உணர்ந்து கொள்ள முடியாமல் போயிருக்கிறது. உடனடியாக ஒரு ஆய்வுக் கமிட்டியை  களத்தில் இறக்கி இருக்கிறார்கள். அதில் இருந்த மருத்துவர்களும், ஆய்வாளர்களும் மிருகங்களுக்கு வந்திருக்கும் புதிய நோயைக் கண்டுபிடித்து ஒரு ரிப்போர்ட்டை சப்மிட் செய்தார்கள். அதில் அவர்கள் கூறிய விஷயம் உடனடியாக அரசாங்கத்தை சிந்திக்கச் செய்தது. 

அவர்கள் கூறிய கருத்து

பாரிஸ் சென்ட்ரல் எழும்பூர் பகுதியில் போக்குவரத்தும் வாகனங்களின் எண்ணிகையும் கணிசமாகப் பெருகி விட்டதால் வாகனங்கள் எழுப்பும் ஒலியை விலங்குகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக ரெஸ்ட்லெஸ் என்று கூறுவோமே, அது மாதிரியான மன நோய் விலங்குகளைத் தாக்கி அவற்றை ஒரு நிலையில் இல்லாமல் வைத்து சாகடித்துக் கொண்டிருகின்றன. இந்நிலை மாற வேண்டுமானால் உடனடியாக இடத்தை மாற்ற வேண்டும் என எச்சரித்திருக்கிறார்கள்.

உறக்கம் கலைந்த அரசாங்கம் மாற்றுவழி தேடி யோசித்த போது சென்னையில் இருந்து முப்பது கிமீ தொலைவில் அமைந்திருந்த வண்டலூரின் பசுமையான இயற்கைச் சூழல் உயிரியல் பூங்கா கட்டமைக்க ஏற்ற சூழல் என்று அரசாங்கம் முடிவெடுத்து 1976-ம் வருடம் சுமார் 1400 ஏக்கர் பரப்பளவில் உதயசூரியனின் தலைமையில் உதயமானது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா.  

இப்படி மிருகங்கள் அனைத்தையும் பாதுகாப்பதன் பொருட்டு உடனடியாக இடத்தை மாற்றியாக வேண்டிய நிலை. அதற்காக அடுத்த இடத்த தேடிய போதுதான், சென்னையில் இருந்து சற்றே தொலைவில், தனிமையில் ஓரளவு மலைப்பாங்கான அடர் வனம் சூழ்ந்த இடமாக இருந்த வண்டலூரைத் தேர்வு செய்தது அரசாங்கம். அன்றிலிருந்து இன்று வரை மிகப் பெரிய உயிர்ச்சூழலின் சாட்சியாக இயங்கி வருகிறது வண்டலூர் மிருகக் காட்சி சாலை. 

இப்போது அதே வண்டலூரில் தமிழக அரசாங்கம் மிகபெரிய பேருந்து நிலையத்தை அமைக்கப் போவதாக அறிவித்து இருக்கிறது. அதவாது என்ன காரணத்திற்காக வண்டலூர் உருவானதோ அதையே இல்லாமல் செய்யும் வேலையில் இறங்கி இருக்கிறது அரசாங்கம். இப்படியே போனால் வண்டலூரையே இழுத்து மூடிவிட்டு அதன் மேலேயே ரியல் எஸ்டேட் வியாபாரம் நடத்தினாலும் நடத்துவார்கள் நம்மவர்கள். இத்தனை நாள் காடுகளை அழித்து காடு போன்ற சூழலை ஏற்படுத்தி அதில் வாழ்ந்து கொண்டிருந்தோம். இப்போது காடு போன்ற சூழலையும் அழிக்க இருக்கிறோம்.  

என்ன செய்வது மனிதன் என்பவன் மிகபெரிய சுயநல மிருகம். தன் இனம் நிம்மதியாக வாழ எதையும் செய்யக் கூடியவன். தான் நிம்மதியாக வாழ தனது இனத்தையே அழிக்கக் கூடியவன் தானே, மிருக இனம் அழிவதைப் பற்றி அவனுக்கு என்ன கவலை இருந்து விடப் போகிறது. 

23 comments:

  1. செம்ம. மூர்மார்கெட் முன்பு மிருகக்காட்சி சாலையா... இப்போதுதான் அறிகிறேன். அடுத்து வண்டலூர் ஜூ வை செங்கல்பட்டுக்கு மாத்திட வேண்டியதுதான் ..

    ReplyDelete
  2. விடுங்க சீனு... வண்டலூர் ஜூவை விழுப்புரத்துக்கு மாற்றி விடலாம். அது ஏற்கெனவே தெரிந்துதான் நான்கைந்து புலிகள் தப்பித்து நேத்ரா தலைமையில் வெளியில் போய் இடம் பார்த்து விட்டு வந்திருக்கின்றன போல!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹாஹ்ஹ அருமையான பதில் நண்பரே!

      Delete
  3. மனிதர்களின் பேராசையும், முட்டாள் தனங்களும், மிச்சம் மீதி இருக்கும் விலங்கினங்களை, இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் மொத்தமாக அழித்துவிடும் போலிருக்கிறதே!

    ReplyDelete
  4. // தான் நிம்மதியாக வாழ தனது இனத்தையே அழிக்கக் கூடியவன் தானே... //

    சரி தான்...

    ReplyDelete

  5. //எந்த படித்த அறிவு ஜீவி வண்டலூரைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி புத்தி புகட்டினார் என்று தெரியவில்லை. ஒருவேளை வண்டலூரின் பின்கதை அந்த அதிமேதாவிக்கு தெரியாமல் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.//

    டென்சன் ஆகாதீங்கண்ணே. லெஸ் டென்சன் மோர் வொர்க். மோர் வொர்க் லெஸ் டென்சன்.

    ReplyDelete
  6. சீனு! முதலில் உங்களுக்கு மிகப் பெரிய பொக்கே அண்ட் கை குலுக்கல், ஒரு கால்நடை மருத்துவனின் தாய் என்பதாலும், விலங்குகள், சுற்றுப்புறச்சூழல், இயற்கை ஆர்வலர் என்ற வகையிலும். சென்ற வாரம்தான், வண்டலூரில் பேருந்து நிலையம் வரப் போவதை அரசல் புரசாலாக அறிய, அதைப் பற்றி அறிய இணையத்தை நாட அதில் சென்ற வருடமே ப்ளூ பிரின்டே ரெடி எனப்து போல இருக்க உடனே, அதைப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டி நான் மகனைத் தொடர்பு கொண்டு அதைப் பற்றி ஸ்கைப்பினோம். அதனால் விலங்குகளுக்கு என்ன பாதிப்பு வரும் என்று.

    மூர்மார்க்கெட், அங்கு ஜூ இதைப் பற்றி எல்லாம் அறிந்து அங்கு விலங்குகள் இறந்ததற்கான கார்ணம் அறிந்து, நீங்கள் சொல்லி இருக்கும் அதே....மனம் கணக்கு போட்டது. அப்போ வண்டலூரைத் தூக்குப்பா அப்படின்றுவாங்களோனு....நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் அதுதான் நடக்கும் போல....அனியாயம்....அந்த விலங்குகள் அதிமேதாவிகளைச் சபிக்கட்டும்.
    நண்பர் ஸ்ரீராம் சொல்லி இருப்பது போல் புலிகள் இடம் பார்த்துவிட்டனவோ?!!!

    அட என்னவோ போங்க...

    ReplyDelete
  7. அதிகாரிகள் சிந்தித்தால் மாற்றம் வரலாம்!

    ReplyDelete
  8. ஐயோ ! இதென்ன ..:( .பிரிடிஷ்காரர்கள் ஒரு சீரிய நோக்குடன் இந்த அமைதியான சூழலை ..தேர்ந்தெடுத்திருக்காங்க
    ஒரு காலத்தில் நமது சந்ததிக்கு இயற்கை சூழலில் பொழுது போக்கு எனும் அம்சம் இல்லாமபோகபோகுது :(
    ஏற்கனவே பட்டாம்பூச்சியும் தேனியும் செத்து விழுது ,மனிதர்களின் பேராசையால் :( இதற்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா ? ..மக்கள் நினைத்தால் மாற்றலாம்

    ReplyDelete
  9. Hi I am agreeing with your view point of save animals but same time please note change of animals from Moore market to vandalur happens much latter in MGR govt and not in British period

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, தகவலில் பிழை இருந்தால் அது தவறு தான் திருத்தி விட்டேன். கடந்த வருடம் வண்டலூர் பற்றிய பதிவில் சரியான காரணத்தை எழுதி இருக்கிறேன். நேற்று அலுவலகம் செலும் அவசரத்தில் எழுதிய பதிவாகையால் பிழை திருத்தத்தில் கோட்டை விட்டிருக்கிறேன்... நன்றி

      வண்டலூர் பற்றிய முந்தைய பதிவு
      http://www.seenuguru.com/2013/12/vandaloor-zoo.html

      Delete
  10. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போதே வண்டலூருக்கு மாற்றப் பட்டதாக கூறி இருப்பது தவறு
    எம்.ஜி ஆர் ஆட்சிக் காலத்த்தில் இந்த மாற்றம் செய்யப் பட்டாதாக படித்த நினைவு இருக்கிறது. 1976 இல் பணிகள் தொடங்கப் பட்டு 1985 இல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்து வைக்கப் பட்டது என அதன் இணைய தளம் தெரிவிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார் நான் தான் தவறாகப் பதிவு செய்திருக்கிறேன்....

      Delete
  11. சமூகப் பொறுப்புள்ள பதிவு ..
    மிருகங்கங்களுக்காக பேசும் மனிதன் புனிதன்..
    ஏன் சேன்ஞ ஆர்கில் ஒரு ஆண் லைன் பெட்டிஷனை ஆரம்பிக்கக் கூடாது ?

    ReplyDelete
  12. வேட்பாளரே வாக்கு பத்து

    ReplyDelete
    Replies
    1. வேட்பாளரா... ஆமா இது தொகுதி மக்களுக்கு தெரியுமா மது அய்யா :-)

      Delete
  13. முரளிதரன் சொன்னதுபோல எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சியின் போதுதான் உயிரியல் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது. மூர் மார்கெட் அருகில் இருந்தபோது நான் சென்று பார்த்ததுண்டு. திட்டமிடுபவர்கள் மனிதர்களையே ஒரு பொருட்டாக மதிக்காத நிலையில் மிருகங்களுக்கு சவுகரியங்களை எதிர்பார்ப்பது கடினம்

    ReplyDelete
    Replies
    1. மாது சார், நீங்க அவ்ளோ பழைய சென்னைய பார்த்து இருக்கீங்களா.. உங்க போன் நம்பர் ப்ளீஸ் :-)

      Delete
  14. மனிதர்களின் தேவைக்காக இயற்கைகளை அழித்துக் கொண்டு இருக்கிறோம்! இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை! விரிவான தகவல்களுடன் சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள் சீனு!

    ReplyDelete
  15. சீனி சகோ!!!!!!!
    என்னவொரு சமூக அக்கறை உள்ள பதிவு!!! ஏற்கனவே உங்க TAGLINE பார்த்து அதான் (எழுத்துகள் பற்றியது) சந்தோசமும் ஆச்சரியமும் அடைந்திருக்கிறேன்!! இந்த முறை அட்டகாசமான பதிவு. விகடன் உராங்குட்டான் கட்டுரை படித்திருப்பீர்கள் அதே போன்ற தரத்துடன் துயர் சொல்கிற பதிவு. இளைஞர்கள் இப்படி சிந்திப்பது நாளை உலகின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது.

    ReplyDelete
  16. மனிதர்கள் மிருகமாகிக் கொண்டிருக்கிறார்கள், மிருகங்கள் மனிதர்களாகிக் கொண்டிருக்கின்றன. இப்பதிவு மூலமாக தங்களின் சமூகப் பிரக்ஞையை உணர முடிகிறது. சமூகத்தின்மீதான தங்களின் அக்கரையும், ஆதங்கமும் நியாயமானதே. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  17. மிருகக்காட்சிச்சாலையை அமைப்பதற்குரிய இடமாக வண்டலூர் தெரிவு செய்யப்பட்ட விடயம் இரு வேறு பந்திகளில் இடம்பெற்று பதிவின் தொடர்ச்சியைக்(Flow) குழப்பினாலும் பதிவினூடாக வெளிப்படுத்தப்படும் சமூகவியற் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன :)

    ReplyDelete
  18. இதுக்குலாமா அலட்டிக்குறது?! சென்னைக்கு மிக அருகாமையில் திண்டிவனத்துக்கு வண்டலூர் ஜூவை மாத்திடலாம்

    ReplyDelete