29 Jun 2014

பிரியாணி - எ ஜர்னி பிரம் O.M.R டூ மேடவாக்கம்

சனிக்கிழமை இரவென்பதால் ஓ.எம்.ஆரே வெறிச்சோடிக் கிடந்தது. அடித்துபெய்த மழையில் சாலையோரத்து நாய்களும் பக்குவமாய் ஒதுங்கியிருந்தன. டோல்கேட்டில் காசு வாங்குபவன் கூட தூங்கிப் போயிருந்தான். வங்காள விரிகுடாவின் குளிர்ந்த காற்றை அனுபவித்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன்.

ஊரே அமைதியாயிருக்க இந்தப் பசிதான் முந்தாநாள் காதலி போல் என்னோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தது. மதியம் சரியாக சாப்பிடாததன் எபெக்ட்டை இப்போது அனுபவித்துக் கொண்டிருந்தேன். எட்டு மணியில் இருந்தே பசிக்கத் தொடங்கியிருந்தாலும் மறை கழண்ட சில நட்டு போல்டுகளை சரி செய்து முடிப்பதற்கு இரவு ஒன்பது மணியாகியிருந்தது. குறித்த நேரத்திற்குள் அவற்றைச் சரி செய்யாவிட்டால் என் அமெரிக்க அக்காவிற்குக் கோபம் வந்துவிடும். உடனே எஸ்கலேட் செய்துவிடுவாள். சரி பசிக்கிறது என்று எனக்குத் தெரியும். அவளுக்குத் தெரியுமா என்ன? மதியம் ஒழுங்காக சாப்பிட்டிருக்க வேண்டும்.  

மதியம் பிரியாணி சாப்பிடலாம் என்று கிரிம்சனை நோக்கிப் படையெடுத்தால் டுடே மெயிண்டனன்ஸ் டே, திரும்பிப் போடே என்று வந்த வழியே அனுப்பிவிட்டார்கள். ஆசையாகச் சென்ற என் பிரியாணி ஆசையில் விழுந்தது மண். இன்றைக்கு பிரியாணி சாப்பிடவேண்டும் என்ற எண்ணமே எனக்கில்லை. மதியம் சாப்பிடச் செல்லும் போது இந்த பிரபுதான் சும்மா இருக்காமல் 'கிரிம்சன்ல பிரியாணி இருக்கும். போலாமா' என்று அழைத்தார். பிரியாணி இல்லை என்றானவுடன், பிரியாணி பட கார்த்தி போல் என கை கால் எல்லாம் உதறத் தொடங்கிவிட்டது. ஆனாலும் இனி சரவணபவனை விட்டால் சாப்பிடுவதற்கு வேறு கடை இல்லை. சலித்துக்கொண்டே உள்ளே நுழைந்தோம். 


சர்வமும் சைவ மயம். நமக்கு இந்த சைவ வாடையே ஆகாது. குமட்டிக் கொண்டு வந்தது. வேறுவழியில்லாமல் தோசையை வாங்கினேன். சிக்கன் பிரியாணியை எதிர்பார்த்து வந்தவனை வெண்டைக்கா சாம்பார் ஊத்தித் தின்னு என்றால் அவனால் எப்படித்திங்க முடியும். வாங்கிய தோசையையே மொறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஐம்பது ரூபாய் நான்கு வாய்க்குக் கூட இல்லை. தோசை இருந்ததற்கான எந்தத் தடயமும் இல்லாமல் இலை துடைத்து எடுக்கபட்டிருந்தது. 

சிறுசேரி சிப்காட் தொழில் முனைவோருக்கான சிறப்புநிலை தொழில் வளாகம் என்பதால் அங்கு தனியார் உணவகங்கள் தொடங்குவதற்குத் தடா. அந்தந்த அலுவலகங்கள் வேண்டுமானால் அவரவர் வளாகங்களுக்குள் உணவகம் ஆரம்பித்துக் கொள்ளலாம். சிறுசேரி வளாகத்தினுள் ஆரம்பிக்கக் கூடாது. ஒருவேளை வெளி உணவகங்களில் சாப்பிட வேண்டுமானால் சில கி.மீட்டர்கள் பயணித்து ஓ.எம்.ஆருக்குத்தான் வர வேண்டும். 

அதனால் இரவும் வேறுவழியில்லை. அதே சரவணபவன். அதே தோசை சப்பாத்தி பரோட்டா. இதைத் தவிர வேறு எதவாது கிடைக்குமா என விலைப் பட்டியலில் தேடினேன். எல்லாமே தோசை வகையறா. ஒவ்வொன்றின் விலையும் ஐம்பதுக்கும் மேல். ஐம்பது ரூவாய்க்கு இந்த காஞ்சு போன தோசைய சாப்பிடனுமா? நெவர். 'போடா நீயும் உன் தோசையும்' ச.பவனுக்கு ஒரு குட்பை சொல்லிவிட்டு மீண்டும் என் இருக்கைக்கே வந்துவிட்டேன். பசி இப்போது தலைக்கேறியிருந்தது. வீடு திரும்பும்போது நாவலூரில் வழக்கமாக சாப்பிடும் மரியாவில் சாப்பிட்டுக் கொள்ளலாமென வயிறைச் சமானதானம் செய்தேன். அப்படி இப்படியென்று அலுவலகத்தை விட்டுக் கிளம்பிய போது மணி இரவு பத்து. 

மெல்ல மரியாவை நெருங்கும் போதுதான் பிரியாணி ஆசை தலைதூக்கியது. 'நாம ஏன் பிரியாணி ட்ரை பண்ணகூடாது?'. நேற்றே மரியாவில் விசாரித்திருந்தேன். இந்த நேரத்தில் அங்கே பிரியாணி கிடையாது என்று கூறியிருந்தார்கள். இவனை விட்டால் நமக்கு வேறு கடையா இல்லை?. 

ஆனால் என் கெட்ட நேரம் ஓ.எம்.ஆரில் இருக்கும் சிறிய சிறிய கடைகள் அத்தனையும் சாத்தபட்டிருந்தது. கடைகளே இல்லை. பெரிய பெரிய ஹோட்டலுக்குச் செல்லும் அளவுக்கு நான் இன்னும் அப்பாடக்கர் ஆகவில்லை. அடுத்து இருக்கும் ஒரே கடை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை எதிரில் ஒரு பிரியாணி கடைதான். அதன் பெயர் எதோ தலப்பாகட்டி என்ற பெயரில் வரும். நானும் சரவணாவும் ஒருமுறை சாப்பிட்டோம். சுவை பிரமாதம். அதன் சுவையை நினைத்துப் பார்த்தபோதே பசி இன்னும் வேகமாய்ப் பசிக்கத் தொடங்கியது. 

மணி பத்தேகால். இன்னும் பத்து கிமீ செல்ல வேண்டும். இந்நேரம் அந்தக் கடை திறந்திருக்குமா அடைத்திருக்குமா எதுவும் தெரியாது. 'எனக்கு பிரியாணி வேணும் டாட்'

பெரும்பாக்கத்தை நெருங்க நெருங்க பசி கூடிக்கொண்டே இருந்தது. வானத்தில் மின்னல். சுற்றிலும் குளிர்ந்த காற்று. நல்ல பசி. மனம் முழுக்க பிரியாணி. வண்டி தன் போக்கில் சென்று கொண்டிருந்தது. இருந்தும் பிரியாணி கடையை நெருங்க நெருங்க கடை திறந்திருக்க வேண்டுமே என்ற எண்ணம் உச்சபட்ச பயமாய் மாறியிருந்தது. நல்லவேளை கடை திறந்திருந்தது. உள்ளே சிலர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். வெளியே பிரியாணி அண்டாவும் இருந்தது. இதுபோதாதா. 

வண்டியை நிறுத்தினேன். உள்ளே நுழையும் போதே வாசலில் கேட்டுப் போட்டான் சர்வர். டேய் பிரியாணி இல்லன்னு சொல்லிராதடா. நான் அழுதுருவேன் என்று நினைத்துக் கொண்டே மெல்ல அவனிடம், 'பிரியாணி என்றேன்'. 'சாரி சார் பிரியாணி ஓவர்' என்றான் மூஞ்சியை நாளை வெட்டுப்பட இருக்கும் கோழிபோல் வைத்துக் கொண்டு. அவன் கூறிய அச்சொல்லைக் கேட்டதும் மின்னல் ஒரு நிமிடம் நின்றுபோனது. காற்று போன இடம் தெரியவில்லை. 'என்னது இல்லையா' என்றேன். 'ஆமா சார் க்ளோசிங் டைம் முடிஞ்சது' என்றான். 'குஸ்கா கூட இல்லையா' என்றேன். அண்டாவை தரையில் டொம் என்று கவிழ்த்தான். இதற்கு மேல் ஒருவார்த்தை பேசினால் உன் தலையில் கவிழ்த்திருவேன் என்பது போல் இருந்தது அவன் செய்கை.                     

'வேற என்ன இருக்கு'

'பிரைட் ரைஸ், நூடுல்ஸ்' 

'வேற'

'நான், பாராட்டோ, சப்பாத்தி, தோசை'

தோசை. அந்த வார்த்தையைக் கேட்டதுமே அங்கிருந்து கிளம்பிவிட்டேன். இந்த பிரைட் ரைஸ், நூடுல்ஸ் எல்லாம் என் விருப்ப மெனு கிடையாது. 'நான், பாராட்டோ, சப்பாத்தி'க்கு சைட்டிஷ் கிடையாது. காசு கொடுத்து வாங்க வேண்டும். அடுத்து இருக்கும் ஒரே ஆப்சன் தோசை. இதற்காகவா இவ்வளவு தூரம் வந்தேன். பெரும்பாக்கம் இல்லை என்றால் என்ன? மேடவாக்கம் இருக்கிறதே. பிரியாணியைத் நோக்கிய தேடல் மீண்டும் தொடர்ந்தது. ஒருவேளை மேடவாக்கத்திலும் கடை அடித்திருந்தால், அங்கே தோசை சாப்பிடக் கூட நல்ல கடை கிடையாதே. பெரிய கடை என்றால் சங்கீதா ஹாட்சிப்ஸ் தான். அங்கு போய் சாப்பிடுவதற்கு அலுவலகத்தில் இருக்கும் சரவணபவனிலேயே சாப்பிட்டிருக்கலாம். விலையாவது ஒரு பத்து ரூபாய் குறைவாயிருக்கும்.               

மனதை திடப்படுத்திக் கொண்டு மேடவாக்கத்தை நோக்கிக் கிளம்பினேன். இங்கே தான் எனக்குக் காத்திருந்தது அடுத்த ட்விஸ்ட். பெ.பாக்கத்தில் இருந்து மேடவாக்கதிற்கு இருவழிகளில் செல்லலாம். ஒன்று நேர் வழி. அதில் சென்றால் நான் வழக்கமாக சாப்பிடும் ஹைதராபாத் தலப்பாகட்டிக்குச் செல்லலாம். ஆனால் இந்நேரம் அக்கடை அடைத்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இன்னொரு வழி சித்தாலப்பாக்கம் ரோடு. அங்கே பிரியாணி-இன் என்று ஒரு கடை உள்ளது. முழுக்க முழுக்க பிரியாணிக்கான கடை. சுவை பிரமாதம் இல்லை என்றாலும் தற்போதைய தேவை ஒரு பிரியாணி. அதனால் அங்கு செல்வது என முடிவு செய்தேன். 

வழியில் விருதுநகர் பிரியாணி என்றொரு கடை இருந்தது. நமக்கும் இந்த விருதுநகர் என்ற பெயருக்கும் ஏழாம் பொருத்தம். தி.நகர் உஸ்மான் ரோட்டில் 'விருதுநகர் அய்யனார்' என்றொரு ஹோட்டல் உள்ளது. சுத்த வேஸ்ட். அங்கு சாப்பிட்ட அனுபவத்தை தனிபதிவாக எழுதலாம். இன்னொருமுறை விருதுநகர் பரோட்டா என்று நண்பன் வாங்கிக் கொடுத்தான். அதைத் தின்னுத் தொலைத்துவிட்டு ஏற்பட்ட பின்விளைவுகள் எனக்கு மட்டும் தான் தெரியும். உசுரு முக்கியம் பாஸு. அதனால் பிரியாணி-இன் இருக்க பயமேன். 


இந்த இடத்தில் மெட்ராஸ் பிரியாணியைப் பற்றி கூறியே ஆக வேண்டும். உங்கள் ஊரில் பிரியாணி எப்படி என்று தெரியவில்லை. நெல்லை பிரியாணிக்கும் மெட்ராஸ் பிரியாணிக்கும் ஆறில்லை நூறு வித்தியாசம். நெல்லை மாவட்டத்தில் எல்லா முக்கிய நகரங்களிலும் பிரியாணி சாப்பிட்டுவிட்டேன் எங்குமே சென்னை டேஸ்ட் இல்லை. பரோட்டாவுக்கு பேமஸான பார்டர் ரஹ்மத்தில் கூட பிரியாணி கேவலமாய்த்தான் இருக்கும். தென்காசி செல்லப்பா கொஞ்சம் ஓக்கேப்பா. நெல்லை முழுவதுமே சம்பா அரிசி பிரியாணி. இங்கோ பாஸ்மதி அரிசி பிரியாணி. திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கூட எனக்குப் பிடிக்காது. எங்கள் வீட்டில் எல்லாரும் தி.த பிரியாணி வாங்கி சாப்பிட்டால் நான் மட்டும் ஹைதராபாத் பிரியாணி வாங்கிச் சாப்பிடுவேன். அம்புட்டுப் பிடிக்கும். 

மழைத் தூறல் வலுத்திருந்தது. நனையத் தொடங்கியிருந்தேன். பிரியாணி-இன் முன் வண்டியை நிறுத்தியபோது வெளியில் நான்கு திண்டுக்கல் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. கடையை ஒழுங்காக அடைதிருக்கோமா என்று சரிபார்க்க அந்த பூட்டில் தொங்கிக் கொண்டிருந்தார் மொதலாளி. 'என்னடா சீனு உனக்கு வந்து சோதனை'. பேசாம தி.த பிரியாணிக்கு போயிரலாமா என்று யோசிக்கும் போதே அதுக்கு பட்னி கிடந்திரலாம் என்றது என் மனம். கடைசி முயற்சியாக நான் வழக்கமாக சாப்பிடும் ஹைதராபாத் தலப்பாகட்டிக்குச் சென்று பார்க்கலாம் என்று மீண்டும் மனம் தளராத விக்கிரமாதித்தியன் தன் பயணத்தைத் தொடங்கினான்...

மேடவாக்கம் மெயின் ரோடில் இருக்கும் அந்த கடைக்கு வந்து சேர்ந்தேன். கடைக்காரச் சிறுவன் பிரியாணி அண்டாவை கடைக்குள் நகர்த்திக் கொண்டிருந்தான். மொதலாளி வெளியில் எரிந்த லைட்டை அணைத்துக் கொண்டிருந்தார். வண்டியை கடையின் முன் நிறுத்தியதும் அவர் முகத்தைப் பார்த்தேன். 'என்ன' என்றார். 'பிரியாணி' என்றேன். 'முடிஞ்சிருச்சு' என்றார். உள்ளிருந்து பையனின் குரல். அண்ணே இருக்குண்ணே. ஒரு ஐஞ்சு பிரியாணி இருக்கும் என்றான். அவருக்கு அது புரியும் முன் எனக்குப் புரிந்திருந்தது. மெல்ல கடைக்குள் நுழைந்தால் ஒரு காதல்சோடி ஒரே தட்டில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தது. 'எங்க போனாலும் இவங்க தொல்ல தாங்க முடியல' என்று பொறாமைப்பட்டுக் கொண்டே வழக்கமாய் உட்காரும் நாற்காலியில் சென்று அமர்ந்தேன். 

தட்டு நிரம்பி வழிய வழிய பிரியாணி வைத்திருந்தான் அந்த சிறுவன். சிக்கனை மானாவாரியாய் அள்ளி இரைதிருந்தான். 'வேட்ட ஆரம்பமாயிருச்சு டோய்' சந்தோசத்தில் துள்ளிக் குதித்தது மனது. என்ன சூடுதான் ஆறிப்போய் இருந்தது. 'உனக்கு பிரியாணி கிடைச்சதே பெருசு இதுல இது வேறயா' என்று என்னை நானே கடிந்து கொண்டு சிக்கனைக் கடித்தேன். சுவை அறுசுவை. என் பசி மெல்ல பிரியாணியின் முன் மண்டியிட்டுக் கொண்டிருந்தது. சாப்பிட்டுக் கொண்டே அந்த சிறுவனைக் கவனித்தேன். காதல் சோடிகளின் லீலைகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். கல்லாவில் மொதலாளியும் அவர் நண்பரும் அளவளாவிக் கொண்டிருந்தார்கள். பிரியாணி நல்ல குழைவாக பதமாக இருந்தது. சிக்கனும் நன்றாக வெந்திருந்தது.   

மொத்த பிரியாணியையும் சாப்பிட்டு முடிக்கும் நேரம், கடை மொதலாளி அந்தச் சிறுவனை அழைத்தார் 'டேய் ரஹீம் இங்க வா'. பவ்யமாய் அவர் அருகில் சென்றான் அந்தச் சிறுவன். பதின்ம வயதின் மாற்றங்கள் அவனிடம் ஆரம்பமாகியிருந்தது. கையில் நூறு ரூபாயைக் கொடுத்து 'போயிட்டு வா' என்றார். இதைப் பார்த்ததும் அருகில் இருந்த அவர் நண்பர் அந்த மொதலாளியிடம் 'என்ன பாய் பேட்டா நூறு ரூவா கொடுக்ற நல்ல வருமனந்தான் போல' என்று கேட்டார். 


அதற்கு மெல்ல சிரித்துக் கொண்டே அந்த மொதலாளி, 'டெய்லி பிரியாணி துன்னு துன்னு வெறுப்பா இருக்குதுன்னான் அதான் சங்கீதால போய் தோச சாப்ட்னு வாடான்னு அனுப்ச்சேன்' என்றார். டாட் 

21 comments:

  1. ஹா....ஹா... ஹா...

    இக்கரைக்கு அக்கரை பச்சை!

    ReplyDelete
  2. கடைசிப் பாரா செம்ம்ம....
    தி.த.ன்னா நமக்கு தெரிஞ்சது திண்டுக்கல் தனபாலன்தான்லேய்... திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியை நீ இப்டி சுருக்கறேன்னு சரியா புரிஞ்சுக்காட்டி நம்மாளை பிரியாணி வியாபாரியாக்கிருவாங்க் லேய்... உஸாரு... ஹி... ஹி... ஹி...

    ReplyDelete
  3. //சர்வமும் சைவ மயம். நமக்கு இந்த சைவ வாடையே ஆகாது. குமட்டிக் கொண்டு வந்தது. //
    அட அட கலக்கல்
    எல்லாம் சாப்பாட்டுக் கதை பற்றி எழுவாங்க. அதற்காக அலைந்து திரிந்த கதை வித்தியாசம்+சுவாரசியம்
    பிரியாணி போல பதிவு சுவையாய் இருந்ததுன்னு சொல்ல ஆசைதான். ஆனா நான் என்.வி. சாப்பிட மாட்டேனே. பதிவு தோசை மாதிரி சூப்பரா இருந்தது.
    கற்பனைன்னாலும் சாப்பாட்டுப் பதிவுலகூட டுவிஸ்ட் வைக்கிற ஒரே பதிவர் நீதாம்பா.

    உன் "பிரிய" ாணி பதிவுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. என்னது... கற்பனையா...? சீனு... உன்னக் கவுத்திட்டார்டா முரளி அசால்ட்டா... ஹா... ஹா... ஹா....

      Delete
    2. முரளி சார் இப்படி கவுத்திடீங்களே சார்.. இது கதையல்ல நிசம் :-)

      Delete
    3. வாத்தியார் சொன்னத நம்பாதே கடைசி ரெண்டு பாராவை மட்டும்தான் சொன்னேன்.

      Delete
    4. வாத்தியார் கமெண்டுக்கு பதிலா உடனே மேலே உள்ள கம்மெண்டை முன்னாடியே போட்டேனே. காணலையே

      Delete
  4. ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக நல்ல பிரியாணி....

    ReplyDelete
  5. பிரியாணியே தான் வேணும்னு அடம்பிடிச்சதுக்கு கிடைச்சது ஒரு பதிவு... வேற ஏதாவது ஹோட்டலில் போயிருந்தால் அளவான பிரியாணியும் பிரியாணி சாப்பிட்ட சின்ன திருப்தியும் மட்டுமே கிடைச்சிருக்கும். கடைசி பாராவுல சொன்ன டிவிஸ்ட் எதிர்பாராதது.... நல்ல வர்ணனைகள், ரசித்துப் படித்தேன்...

    ReplyDelete
  6. நல்ல 'சுவை'யான நீ.....ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ...ண்ட பகிர்வு/பதிவு.///மனதை திடப்படுத்திக் கொண்டு மேடவாக்கத்தை நோக்கிக் கிளம்பினேன்.///இது கூட இல்லேன்னா எப்புடி திடம் கொண்டு போராடுறது?ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
  7. ஒரு முறை காளாஹஸ்தி சென்று மதியம் லஞ்சுக்கு அலைஞ்ச அனுபவம் அப்படியே மனசுக்கு வந்தது. ஒரு தோசை ஐம்பது ரூபா வாங்கிறானுங்க சைவம் சாப்பிடும் நாங்க எப்படி ஏழையாயிடறோம் பார்த்தீங்களா? கடைசி பாரா பைனல்டச் செம அருமை!

    ReplyDelete
  8. திடமான தேடலுக்கு வாழ்த்துகள். கடைசி ட்விஸ்ட்டுக்கும் தான். அலைவது என்றால் இப்படி ஒரு அர்த்தமா. :))

    ReplyDelete
  9. :))))))

    ஒரு வழியா பிரியாணி கிடைச்சுதே!

    ReplyDelete
  10. கடைசி ட்விஸ்ட் மட்டும் இல்லன்ன்னா கார்ர்ரர்ர்ர் .....இவ்ளோ தூரம் உன் கூட கடுப்போட பயணித்ததுக்கு கடைசி ட்விஸ்ட்தான் காப்பாத்துச்சு ....

    ReplyDelete
  11. செம அனுபவம் பாஸூ... ஒரு பிரியாணிக்கு இம்புட்டு போரா, பெரும் அக்கபோரா இல்ல இருக்கு...

    /////ஒரு காதல்சோடி ஒரே தட்டில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தது. 'எங்க போனாலும் இவங்க தொல்ல தாங்க முடியல' என்று பொறாமைப்பட்டுக் கொண்டே// அந்தே பீலிங்க்கு பேரு பொறாமையா....

    ReplyDelete
  12. திடம் கொண்டு போராடு சரியாகத்தான் பேரு வைச்சுருக்கீங்க சீனு! எப்படியோ போராடி கடைசில சாப்டுட்டீங்க...கடைசில ஒரு டிவிஸ்ட்...சூப்பர்.....கூடவே இனாம் மாதிரி ஒரு பதிவு போட காதல் ஜோடி வேற..ம்ம்ம்ம்ம்...

    ReplyDelete
  13. பள்ளிக்கரனை பஸ் ஸ்டாப் அருகில், வெங்கடேஷ்வரா ஸ்வீட் ஸ்டால் வாசலில், தள்ளுவண்டியில் பிரியாணி பார்சல் வாங்கி சாப்பிட்டு பாருங்க, மாலை 7 முதல் 8.30 வரை மட்டுமே கிடைக்கும். sunday holiday. Taste is simply super.

    Varun Vijay

    ReplyDelete
  14. பதிவை ரசித்தேன் என்பதைவிட ருசித்தேன் எனலாம். நன்றி.

    ReplyDelete