தலைமை ஆசிரியர் அலுவலகத்தின் முன்புறம் இருந்த அந்த வளாகமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது,பதினொன்றாம் வகுப்பு சேர்க்கைக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களின் படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் ஒட்டபடுவதற்காக நூற்றுக்கணக்கான பெற்றோர்களும் மாணவர்களும் காத்துக் கொண்டிருந்தனர். தாங்கள் விரும்பிய க்ரூப் கிடைத்துவிட வேண்டும் என்ற வேண்டுதல் சில மாணவர்களிடமும், எது எப்படியோ தன்னுடைய மகனுக்கு இடம் கிடைத்தால் போதும் என்ற பரிதவிப்பு பல பெற்றோரிடமும் இருந்தது.
திடிரென்று ஒரு சலசலப்பு. வாட்ச்மேன் தன் கையில் இருந்த காகிதங்களை அறிவிப்புப் பலகையில் ஒட்டத் தொடங்கியிருந்தார். அதுவரை மரநிழல்களில் அமர்ந்து ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்த அம்மாக்களிடமும், அமைதியாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த அப்பாக்களிடமும் ஒரு திடீர் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஓடியாடி விளையாண்டு கொண்டிருந்த அத்தனை மாணவர்களும் அறிவிப்புப் பலகையைச் சூழத் தொடங்கினர். ஒவ்வொருவரிடமும் தங்கள் பெயரைக் கண்டுபிடிப்பதற்கான அவசரம் இருந்தது. பள்ளியில் இடம் கிடைத்துவிட்டதா என்பதைத் தெரிந்து கொள்வதில் ஒருவித ஆர்வம் இருந்தது.
ஒவ்வொரு பிரிவு வாரியாக பெயர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் தேடுவதில் சிரமம் இருக்கவில்லை. கணினி அறிவியல் பிரிவில் என்னுடைய பெயர் இரண்டாவதாக இடம் பெற்றிருந்தது, எனக்கும் மேலே சத்யா இருந்தான், எஸ்.எஸ்.எல்.சி யில் என்னை விட அவன் இரண்டு மதிப்பெண்கள் கூடுதல் எடுத்திருந்தது நியாபகம் வந்தது, குமார் செல்வா ஆனந்த் சுரேஷ் சுப்பையா ரமேஷ் இவர்கள் பெயரையும் தேடினேன்,அங்கங்கே சிதறிக் கிடந்தார்கள், இருந்தாலும் எங்கள் அனைவருக்கும் இடம் கிடைத்துவிட்டது, இப்பள்ளியில் இடம் கிடைக்க வேண்டுமென்பது எங்களது பலநாள் கனவு, பலித்துவிட்டது.
எனக்கு இடம் கிடைத்துவிட்டது. நான் கேட்ட கம்புயுட்டர் சயின்சும் கிடைத்துவிட்டது. அம்மாவிடம் இதைச் சொல்வதற்காக அந்தக் கூட்டத்தில் இருந்து விலகி அம்மாவைத் தேடி ஓடும்பொழுது ஒரு கை பலமாக என் சட்டையைப் பிடித்து இழுத்தது, இன்னும் கொஞ்சம் பலமாக இழுத்திருந்தால் என் சட்டை கிழிந்திருக்கும். சட்டென திரும்பினேன். சற்றும் அறிமுகமில்லாத ஒருவர் என்னை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார், முகம் நிறையப் புன்னகை. கண்கள் நிறைய ஏதோ ஒரு தேடல். அவரை முழுவதுமாக கவனித்தேன்.
அவருடைய கை முழுவதிலும் காய்ந்து போன சகதியின் கறை அங்கொன்றும் இங்கொன்றுமாக உதிர்ந்து விழத் தயாராகிக் கொண்டிருந்தன. சவரம் செய்யப்படாத பத்துநாள் தாடி. சீவப்டாத, எண்ணை வாடையில்லாமல் வானம் பார்த்து சலாம் போட்டுக் கொண்டிருந்த அவருடைய தலைமயிர். பழுப்புப் ஏறிப் போன வெள்ளைச் சட்டை, முழங்கால் வரை சகதியின் படிமங்கள், அதற்கு மேல் மடித்துக் கட்டப்பட்ட நீலம் கண்டிராத கசங்கிய வெள்ளை வேஷ்டி. கசங்கிப் போகாத நல்ல திடமான உடல்.
கையிலிருந்த ஒரு காகிதத்தை என்னிடம் காண்பித்து பேசத் தொடங்கினார் "மவன் ஏதோ சோலி விசயமா தின்னவேலி வர போயிருக்கான், இங்க தான் சேக்கணும்னு பாரம் வாங்கி போட்டோம், கிடைச்சதா இல்லையான்னு பாத்து சொல்லுயா, நமக்கு படிப்பு வராது" அந்தத் தாளில் அவரது மகனின் பெயரும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எண்ணும் எழுதி இருந்தது, அழகான கையெழுத்து, நிச்சயம் அவரது மகனுடையதாகத் தான் இருக்க வேண்டும்.
அவரை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு நோட்டீஸ் போர்டைச் சுற்றி இருந்த கூட்டத்திற்குள் நுழைந்தேன். அக்ரி க்ரூபில் அவரது மகனின் பெயர் இருந்தது.உடனடியாக அவரை நோக்கி ஓடினேன், நான் சொன்னது எதுவுமே அவருக்கு விளங்கவில்லை, தன் மகனுக்கு இடம் கிடைத்துவிட்டது என்பதைத் தவிர. "எம்மவனுக்கு இடங்கிடச்ருசில்லா அது போதும், அவென் படிச்சா போதும் ராசா, எம்மவன் தென்காசி பள்ளியோடத்துல படிச்சா போதும்" என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார். அவர் கண்களில் நீர் தேங்கத் தொடங்கி இருந்தது, இன்னுமின்னும் என்னிடம் ஏதோ சொல்ல வந்தார்,அதற்குள் என்னுடைய பழைய பள்ளித் தோழர்கள் அனைவரும் என்னைச் சுற்றிக் கொண்டார்கள்.
"ஏம்ல கம்ப்யுட்டர் சயின்ஸ் எடுத்த, உன் மார்க்குக்கு பயாலஜி கிடச்சிருக்கும் லா"
"அவங் கிடக்கான் சீனு, நாம கம்ப்யுட்டர் படிச்சி பில்கேட்ஸ் ஆயிருவோம்னு பொறாம"
"எலேய் டாக்ட்டருக்கு தாம்ல மதிப்பு மண்ணாங்கட்டி எல்லாம், கம்ப்யுட்டர் வேஸ்ட்"
"ஸ்கூல் என்னிக்கு தொறக்குன்னு தெரியுமா"
"புது யுனிபார்ம் வாங்கணும், நாம எல்லாரும் ஒண்ணா போய் வாங்குவோம்"
"ஸ்கூல் பேக், நோட் இனி எதுவுமே தேவையில்ல"
"எலேய் குமாரு உங்கையா வாறாரு, நாங்க கிளம்புறோம், சாய்ங்காலம் எல்லாரும் சீனு தெருவுக்கு வந்த்ருங்க"
தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் எங்குமே நல்ல தமிழ்மீடியம் பள்ளிகள் கிடையாது, ஆவுடையானூரில் இருக்கும் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி கூட கொஞ்சம் சிறந்த பள்ளி என்றாலும் அங்கே சென்று வர பேருந்து வசதி கிடையாது. இலஞ்சி, செங்கோட்டை, கடையநல்லூர், பாவூர்ச்ச்சத்திரம், கீழப்புலியூர் இங்கிருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு மத்தியில் தென்காசிப் பள்ளியே எவ்வளவோ மேல் என்ற எண்ணத்தில் தான் எனது அண்ணனை அங்கு சேர்த்திருந்தனர், அவனுடைய சொந்த முயற்ச்சியால் ஆயிரத்தி ஐம்பது மதிப்பெண் பெற்று சாதனையும் புரிந்திருந்தான். "படிக்கிற புள்ள எங்கிருந்தாலும் படிக்கும்" என்பதை நிரூபித்தவன் அவன்.
என்னதான் என்னுடைய அண்ணன் அரசுப் பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் எனக்கும் அவனுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள். நான் நன்றாக படித்துவிடுவேன் என்பதை நம்புவதற்கு என் அம்மா தயாராயில்லை. நான் அரசுப் பள்ளியில் படிக்கக் போவதில் அம்மாவுக்கு அவ்வளவாக மகிழ்ச்சியில்லை, மேலும் எனக்கு அரசுப் பள்ளியில் இடம் கிடைத்த விஷயத்தை எல்லாருமே துக்கம் விசாரிப்பது போல் விசாரித்துக் கொண்டிருந்தனர். என் அம்மாவோ "வேற வழியில்லக்கா, இங்க தான் சேக்க முடிஞ்சது, வாழ்க்கைய நினைச்சு பார்த்து படிச்சா அவனுக்கு நல்லது, நம்மளால படிக்க தான் வைக்க முடியும்" என்று தன் பங்குக்கு மறைமுகமாக எனக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். என் வீட்டில் என்று இல்லை பெரும்பாலான நண்பர்கள் வீட்டிலும் இது தான் பேச்சாக இருந்தது.
ஆனால் எங்களுடைய மனநிலையோ வேறுமாதிரி இருந்தது. பத்தாம் வகுப்பு வரை மிகவும் கண்டிப்பான கிறிஸ்துவப் பள்ளியில் பயின்ற எங்களுக்கு கண்டிப்பே இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளி என்பது பூலோக சொர்கம் போன்றது. பத்து வருடமாக கண்களை மறைத்துக் கொண்டிருந்த கடிவாளம் அவிழ்க்கப்பட்ட குதிரைகளின் சுதந்திர மனநிலையில் இருந்தோம்.
இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற வாசகம் பொறித்த பள்ளியின் பிரம்மாண்ட நுழைவாயிலே எங்களைப் பார்த்து வசீகரமாகச் சிரிப்பது போலத் தோன்றியது.
இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாழ்க்கையில் கிடைத்த மிகச் சிறந்த தோழன். எப்படி வாழலாம் என்பதை கற்றுக் கொடுத்ததை விட எப்படி வாழக் கூடாது என்று கற்றுக் கொடுத்தப்பள்ளி. என் வாழ்வின் மிக முக்கியமான சுவாரசிய நினைவலைகளின் ஊற்று இப்பள்ளிக்கூடம் தான்.
நட்பு,சண்டை, காதல், காமம் என்று படிப்பு தவிர்த்த அத்தனை விசயங்களையும் அதே நேரத்தில் வாழ்க்கையையும் கற்றுக் கொடுத்த பள்ளி. அந்த நினைவலைகளை "அரசுப்பள்ளி மாணவனின் நாட்குறிப்பில் இருந்து" என்ற பகுதியின் மூலம் சிறிது அசைபோட்டுப் பார்க்க ஆசை. நீங்களும் தவறாது வாருங்கள் அந்த மாணவனின் நாட்குறிப்பைப் புரட்டிப் பார்ப்பதற்கு.
இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற வாசகம் பொறித்த பள்ளியின் பிரம்மாண்ட நுழைவாயிலே எங்களைப் பார்த்து வசீகரமாகச் சிரிப்பது போலத் தோன்றியது.
இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாழ்க்கையில் கிடைத்த மிகச் சிறந்த தோழன். எப்படி வாழலாம் என்பதை கற்றுக் கொடுத்ததை விட எப்படி வாழக் கூடாது என்று கற்றுக் கொடுத்தப்பள்ளி. என் வாழ்வின் மிக முக்கியமான சுவாரசிய நினைவலைகளின் ஊற்று இப்பள்ளிக்கூடம் தான்.
நட்பு,சண்டை, காதல், காமம் என்று படிப்பு தவிர்த்த அத்தனை விசயங்களையும் அதே நேரத்தில் வாழ்க்கையையும் கற்றுக் கொடுத்த பள்ளி. அந்த நினைவலைகளை "அரசுப்பள்ளி மாணவனின் நாட்குறிப்பில் இருந்து" என்ற பகுதியின் மூலம் சிறிது அசைபோட்டுப் பார்க்க ஆசை. நீங்களும் தவறாது வாருங்கள் அந்த மாணவனின் நாட்குறிப்பைப் புரட்டிப் பார்ப்பதற்கு.
Tweet |
ennennmo ninaivukku varuthu sako....
ReplyDeletethodarungal....
"எப்படி வாழக் கூடாது" என்றால் இனி சுவாரஸ்யம் அதிகம் தான்...
ReplyDeleteமலரும நினைவுகள் அருமை..!
ReplyDeleteஹலோ, நாங்களும் ஸ்டூடன்ட் தான்??!!
ReplyDelete//அண்ணன் சொந்த முயற்ச்சியால் ஆயிரத்தி ஐம்பது மதிப்பெண் பெற்று சாதனையும் புரிந்திருந்தான்.
ReplyDeleteஎனக்கும் அவனுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள்.//
அப்போ நீங்க வெறும் ஐம்பது தான் எடுத்தீங்களோ??
Haa Haaaaaaaaa.....!
Delete/நுழைவாயிலே எங்களைப் பார்த்து வசீகரமாகச் சிரிப்பது போலத் தோன்றியது.// தோன்றுமே??
ReplyDelete// "அரசுப்பள்ளி மாணவனின் நாட்குறிப்பில் இருந்து"//
ReplyDeleteஎழுதுங்க, கூடவே வர்றோம்..
எங்கள் பள்ளி நினைவுகளை தூணிடிவிட்டமைக்கு நன்றி..பின்தொடரக் காத்திருக்கிறோம்
ReplyDeleteஇன்றைய திரைப் படங்களும் விலாவரியாக எப்படி வாழக் கூடாது என்பதை சொல்வதைப்போலவா...உங்கள் தொடரும் ?ஆவலோடு இருக்கிறேன் !
ReplyDeleteஎன்னுடைய பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது இந்தப்பதிவு! அய்யய்யோ இவிங்க கிண்டல் பண்ண ஆரம்பிச்சிருவாங்களே...
ReplyDeleteஹா ஹா ஹா :)
DeleteI am also from ici for hr secondary. When i read this i got nostalgic feeeling. Thks seenu i m wating
ReplyDeleteI am also from ici for hr secondary. When i read this i got nostalgic feeeling. Thks seenu i m wating
ReplyDeleteமறக்க முடியாத நாட்கள் - முதல் செட் . வருடம் 1978 - 1980
ReplyDeleteஆரம்பமே அசத்தலா இருக்கு. தொடருங்க சீனு. படிச்சு ரசிக்க நாங்கலாம் இருக்கோம்
ReplyDeleteஎல்லோரும் மலரும் நினைவுகளா கல்லூரி வாழ்க்கையைத்தான் நினைப்பார்கள்...நீங்க பள்ளி வாழ்க்கையையே சொல்லப் போறீங்க ....படிக்கிறோம் அந்த சுவாரசியங்களையும்...
ReplyDeleteஎன்னடா நம்ம சீனுவோட பதிவு கொஞ்சம் சிறுசா இருக்கேன்னு பார்த்தேன்.. படிச்சப்பறம் தான் தெரியுது இது வெறும் முன்னோடம்னு :)
ReplyDeleteசிறப்பா தொடருங்க ...
என்னோட பள்ளிக்கூட நாட்கள் நினைவுக்கு வந்து விட்டது! ஸ்கூல் ஆட்டம் காண காத்திருக்கிறேன்!
ReplyDeleteஎல்லோரும் பள்ளிக்கூட நினைவுகள் வந்துவிட்டன என்கிறார்கள், பேசாமல் தொடர் பதிவிற்கு அழைத்துவிடுங்கள், சீனு.
ReplyDeleteஉணர்வு பூர்வமான எழுத்துக்களால் உங்கள் பள்ளி நாட்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்திருக்கிறீர்கள், தொடர்ந்து படிக்கிறேன். வாழ்த்துக்கள்!
எலேய் தமிழ் வாசி சொன்னது மாதிரி ரொம்ப லெங்க்தியா இழுக்காதல ... கொஞ்சம் சுருக்கும் சாரே ...
ReplyDelete"வலி" மொழிகின்றேன்
Deleteஹா ஹா ஹா நிச்சயம் என் எழுத்தை பரிசீலிக்க வேண்டிய நேரம்.. அதுக்காக சின்னதா எழுதுவேன்னு மட்டும் நினைக்காதீங்க :-)))
Deleteநட்பு,சண்டை, காதல், காமம் என்று படிப்பு தவிர்த்த அத்தனை விசயங்களையும் அதே நேரத்தில் வாழ்க்கையையும் கற்றுக் கொடுத்த பள்ளி.// அது என்ன மச்சி காமம் ... அப்படின்னா ????????????
ReplyDeleteசீனு இந்த பதிவ உங்க ஊரு மொழி நடையில எழுதலாமே ... நான் சொன்னத கவனத்துல வையி மக்கா ...
ReplyDeleteமுழுமுழுக்க பேச்சு வழக்குல எழுதறது கஷ்டம் ராசா (என்னைப் பொருத்தவரை).. ஆனா பேச்சுவழக்கு இருந்தா அது நெல்லைத் தமிழாத் தான் இருக்கும் டே
Deleteநான் போட்ட கமெண்ட் காணும்...
ReplyDeleteகாக்கா தூக்கிட்டுப் போயிருச்சா.. :-)
Deletehttps://www.facebook.com/rasamby/posts/10151875323824106?comment_id=27706499&offset=0&total_comments=9¬if_t=share_comment
ReplyDeleteமிக்க நன்றி நண்பா.. பார்த்தேன்.. உற்சாகமான உரையாடலுக்கு நன்றி
Delete