சிவகாசிக்காரன் ராம்குமாருடன் பதிவர் சந்திப்பு அரங்கினுள் நுழையும் போதே அரங்கம் களைகட்டத் துவங்கியிருந்தது.
"சீனு நான் உங்களோட தீவிர வாசகன்" என்றபடி என்னை வரவேற்றார் என் தீவிர வாசகர். நல்ல வேளை உங்களைக் காணத் தான் அவ்வளவு தூரம் பயணித்து வந்தேன் என்று என்னை மிரட்டாமல் தீவிர வாசகன் என்றளவோடு நின்று கொண்டார் இதுவரை நான் பார்த்திராத அந்த தீவிர வாசகர். அட நமக்குக் கூட வாசகன் இருப்பாரா என்ற வியப்புடன் அவரை நோக்கி வெறித்த பார்வையில் உள்மனது சொன்னது "ஏய் அவிங்க உன்ன ஓட்றாங்க டா" என்று.
சஸ்பென்ஸ் வைக்காமல் நான் எப்போது பதிவை வளர்த்துள்ளேன், என்னுடைய அந்த தீவிர வாசகர் யார் என்று பதிவின் இடையில் எங்காவது கூறுகிறேன்.
நம் கல்யாணவீட்டில் உற்றார் உறவினர்களை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்சியைப் போல பதிவர்களின் வருகையும் சந்திப்பும் களைகட்டத் தொடங்கியிருந்த காலை நேரம். இதுவரை பதிவுகளின் மூலமும் பின்னூட்டங்களின் மூலமும் மட்டுமே பழகியிருந்த நண்பர்களை நேரில் சந்திக்கப் போகிறோம் என்ற உணர்வே அலாதியாய் இருந்தது. முதல் பதிவர் சந்திப்பில் 'சில' பதிவர்களின் அறிமுகம் கிடைத்திருந்த போதும் என்னைப் பொறுத்தவரை இந்தபதிவர் சந்திப்பு தான் மிக முக்கியமானது. காரணம் இம்முறை என்னைச் சில பதிவர்களுக்கு தெரிந்துள்ளது என்பதையும் தாண்டி எனக்குப் பல பதிவர்களைத் தெரிந்துள்ளது என்பது தான்.
முதல் பதிவர் சந்திப்பின் போது என்னுடன் அறிமுகமான பெரும்பாலனவர்கள் என்ன பதிவில் என்ன பெயரில் எழுதிக் கொண்டிருந்தார்கள் என்று கூட எனக்குத் தெரியவில்லை, கடந்த முறை இடைவெளியுடன் கூடிய ஒரு சம்பிரதாயமான அறிமுகமாகவே எங்கள் அறிமுகம் நிகழ்ந்து. ஆனால் இம்முறை என்னால் சக பதிவர்களுடன் சகஜமாக பழக முடிந்தது, அதிசயித்து ஆச்சரியப்பட்டு ஆர்வமுடன் நட்புடன் எளிதாக பழக முடிந்தது.
விபத்தில் இருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வரும் ஆவிபாஸ் உற்சாகமாக கலந்து கொண்டது தான் என் முதல் மகிழ்ச்சி, காரணம் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த ஆவியுடன் பேசியபோது "அடிபட்டதால பதிவர் சந்திப்புல கலந்துக்க முடியாம போயிருமோன்னு பயமா இருக்கு சீனு" என்றளவில் பதிவர் சந்திப்பை மிக ஆர்வமாக எதிர்பார்த்திருந்தார்,அவரை மிக பத்திரமாக அழைத்து வந்து அக்கறையாய் கவனித்துக் கொண்ட கோவைநேரம் ஜீவாவிற்கு நன்றி.
பதிவர்களின் வருகையைப் பதிவு செய்யவும் மற்றும் அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் உணவு டோக்கன் வழங்குவதற்காகவும் உதவி செய்ய எனது நண்பர்கள் இருவரை அழைத்து வந்திருந்தேன். காலை ஒன்பது மணியளவில் அதிகமான அளவில் பதிவர்கள் அணிவகுத்து வர, இவர்களை சமாளிப்பது என்று தெரியாமல் எனது நண்பர்களும் இவர்களுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்த ரூபக்கும் ஸ்கூல்பையனும் கொஞ்சம் குழம்பிவிட்டார்கள்.
இந்நேரத்தில் இவர்களுக்கு உதவி செய்வதற்காக சட்டென்று களத்தில் குதித்தார்கள் சிவகாசிக்காரன் ராம்குமாரும், ஆவி பாஸும். ஆவிக்கு கையில் சர்ஜரி செய்திருந்த போதும் உற்சாகமாக எழுதத் தொடங்கிவிட்டார். எங்களுக்கு தான் முதலில் கஷ்டமாக இருந்தது, வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலும் அவர் விடவில்லை, அடையாள அட்டையில் தன பொற்கரங்களால் எழுதத் தொடங்கிவிட்டார்.
சிறிது நேரத்தில் பெரும்பாலான பதிவர்கள் வருகைதரவே வருகைபதிவு பொறுப்பை என் நண்பர்களிடம் விட்டுவிட்டு அரங்கினுள் நுழைந்தோம்.
"வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது, அள்ளி வந்த வண்ணங்களை எந்தன் நெஞ்சில் நீ தூவு" அரங்கம் முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறியிருந்த பதிவர்களை தனது பாடலின் மூலம் ஒருங்கிணைத்தார் சுரேகா. சென்ற முறை போலவே இம்முறையும் மிக அற்புதமாக தொகுத்து வழங்கிய பெருமையும் சுரேகாவையேச் சாறும் .
புலவர் ராமானுசம் அய்யா தலைமை வகிக்க, சென்னைப்பித்தன் முன்னிலை வகிக்க பதிவர்கள் அறிமுகத்துடன் இனிதே ஆரம்பமானது பதிவர் சந்திப்பு.
டேஷ்பொர்டிலும் தமிழ்மணத்திலும் மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த பல பதிவர்களையும் ஒரே இடத்தில சந்திக்க முடிந்தது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம், டெல்லியில் இருந்து வந்திருந்த வெங்கட் நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர், வெகுநாட்களாய் சந்திக் வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தளிர் சுரேஷ், சுற்றினால் இவரோடு அல்லது இவரைப் போல் ஊர் சுற்ற வேண்டும் என்று வைக்கும் கடல் பயணங்கள் சுரேஷ். வருகைப் பதிவு செய்யும் இடத்தில நெற்றியில் தீட்டியிருந்த பட்டையைப் பார்த்ததும் சட்டென்று சென்று அறிமுகம் செய்து கொள்ள வைத்த பழனி கந்தசாமி அய்யா என்று மிக உற்சாகமாக என்னை சுழலச் செய்து கொண்டிருந்தது பதிவர் சந்திப்பு.
எத்தனை எத்தனை பதிவர்கள், அனைவரிடமும் சென்று பேச வேண்டும், புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் மண்டபத்தில் ஏதாவதொரு வேலைகள் துரத்திக் கொண்டே இருந்ததால் பதிவர்களைத் துரத்த முடியவில்லை என்ற ஒரு கவலை என்னுள் இருந்து கொண்டே இருந்தது.
கருப்பு டீ.ஷர்ட் கையில் ஒரு சாப்பாட்டு பையுடன் ஒரு பெரியவர் வந்து அமர்ந்த போது அட சுப்பு தாத்தா என்றேன் ஆவியிடம், அப்போது பாமரன் உரையாற்றிக் கொண்டிருந்ததால் சட்டென்று சுப்பு தாத்தாவிடம் சென்று பேச முடியவில்லை, அதன்பின் அவரைக் காணவில்லை, அவரை சந்தித்து பேசாததும் வருத்தம்.
வாத்தியார் என்னை அழைத்து :டேய் சீனு, இவரு யாருன்னு உனக்கு தெரியுமா என்ற போது, தெரியாது என்று என் முழியும், அதை சொல்லத் தெரியாமல் முகமும் தவித்த போது "இவரு தான்டா எங்கள் கௌதமன் சார்: என்று வாத்தியார் கூறியதும் கௌதமன் சாரின் கைகளைப் சட்டெனப் பற்றிக் கொண்டேன், சந்திப்பு முடியும் போது கவுதமன் சாருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள நினைத்தேன் அவரும் கிளம்பிவிட்டார். ஸ்ரீராம் சார் நீங்களும் எஸ் ஆகிட்டீங்க (வராமலே).
சந்திப்பு முடிந்து அரங்கத்தின் வெளியில் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது "சீனு என்கூட மட்டும் போட்டோ புடிச்சிக்க மாட்டீங்கள்ள.. போங்க நீங்க " என்று பொய்க் கோபத்துடன் கூறியபடி நகர்ந்துவிட்டார் ஜோதிஜி. எவ்வளவு பெரிய மனிதர் அசால்ட்டாக சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார், அவரைக் கைபிடித்து அழைத்து (இழுத்து) வந்து அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டது எங்களுக்கு மிகபெரிய மகிழ்ச்சி.
காலையில் எனது வாசகராக என்னிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்ட அந்த பிரபல பதிவர் பதிவர், சந்திப்பு முடியும் வரையிலும் எங்களுடனேயே இருந்தவர், "சீனு நான் உங்களோட தீவிர வாசகன்" என்று என்னை கலாய்த்து அவர் யார் என்பதை நான் கண்டுகொண்டதும் சட்டென தழுவிக் கொண்ட அந்த பதிவர் வேறு யாரும் இல்லை பிளாக்கர் நண்பன் அப்துல்பாசித் தான்.
இருந்தும் பதிவர் சந்திப்பு முழுவதும் ஒரு பதிவரை மிஸ்பண்ணிக் கொண்டே இருந்தேன்...

ஆவி தி பாஸ் |

வாமுகோமு, பாமரன, புலவர், பித்தன், கேபிள், பாட்டையா |

'எங்கள்' கௌதமன் சார் |
வாத்தியார் என்னை அழைத்து :டேய் சீனு, இவரு யாருன்னு உனக்கு தெரியுமா என்ற போது, தெரியாது என்று என் முழியும், அதை சொல்லத் தெரியாமல் முகமும் தவித்த போது "இவரு தான்டா எங்கள் கௌதமன் சார்: என்று வாத்தியார் கூறியதும் கௌதமன் சாரின் கைகளைப் சட்டெனப் பற்றிக் கொண்டேன், சந்திப்பு முடியும் போது கவுதமன் சாருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள நினைத்தேன் அவரும் கிளம்பிவிட்டார். ஸ்ரீராம் சார் நீங்களும் எஸ் ஆகிட்டீங்க (வராமலே).
சந்திப்பு முடிந்து அரங்கத்தின் வெளியில் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது "சீனு என்கூட மட்டும் போட்டோ புடிச்சிக்க மாட்டீங்கள்ள.. போங்க நீங்க " என்று பொய்க் கோபத்துடன் கூறியபடி நகர்ந்துவிட்டார் ஜோதிஜி. எவ்வளவு பெரிய மனிதர் அசால்ட்டாக சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார், அவரைக் கைபிடித்து அழைத்து (இழுத்து) வந்து அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டது எங்களுக்கு மிகபெரிய மகிழ்ச்சி.
பிளாக்கர் நண்பன், கற்போம், மனக்குதிரை, ஜோதிஜி |
காலையில் எனது வாசகராக என்னிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்ட அந்த பிரபல பதிவர் பதிவர், சந்திப்பு முடியும் வரையிலும் எங்களுடனேயே இருந்தவர், "சீனு நான் உங்களோட தீவிர வாசகன்" என்று என்னை கலாய்த்து அவர் யார் என்பதை நான் கண்டுகொண்டதும் சட்டென தழுவிக் கொண்ட அந்த பதிவர் வேறு யாரும் இல்லை பிளாக்கர் நண்பன் அப்துல்பாசித் தான்.
இருந்தும் பதிவர் சந்திப்பு முழுவதும் ஒரு பதிவரை மிஸ்பண்ணிக் கொண்டே இருந்தேன்...
(வேறு வழியேயில்லை, இந்தப் பதிவு தொடர வேண்டும், தொடரும் என்பது விதி...! )
Tweet |
தம்பி உங்களோட பங்களிப்பு பாராட்டும் வகையில் இருந்தது.உங்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக நன்றி சீனு ஜி.வரமுடியவில்லையே என்ற வருத்தத்தை உங்கள் பதிவு கொஞ்சம் போக்கிவிட்டது. வீடியோதான் பார்க்கமுடியவில்லை. நீங்களாவது படங்கள் பதியவும்.
ReplyDeleteஅழகாகப் பதிந்திருக்கிறீர்கள்.
அப்பாடி... பதிவர் சந்திப்பு பற்றி இப்போதான் ரெண்டாவது பதிவு... முதல் பதிவு திரு சென்னைப்பித்தன் பக்கத்தில் படித்தேன்.
ReplyDeleteசீனு.... பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்ததுக்கு காரணம் உங்களின் உழைப்பு...
ReplyDeleteசீனு உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோசம்.
ReplyDeleteமனசில பட்டதை அப்படியே விவரிச்சு எழுதிய சீனு.... நல்லாருக்கு.... தொடரட்டும்...
ReplyDeleteஉற்சாகப் பதிவுக்கு பாராட்டுக்கள்..!
ReplyDeleteவிழா சிறப்புற நடைபெற்றதற்கு சீனுவுக்கும் பெரும் பங்கு உண்டு. பாராட்டுக்கள்.
ReplyDeleteகாலையில் கொஞ்சம் தாமதமாக ஆரம்பித்தாலும் நேர நிர்வாகத்தில் அசத்தி, சரியான நேரத்தில் மிகச்சரியாக திருவிழாவை நடத்திக்காட்டிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்
ReplyDelete// தொடரும் என்பது விதி...!//
ReplyDeleteஇன்னும் விசயத்தையே சொல்லலையே.. தொடர்ந்துதானே ஆகணும்.. உன்கிட்டயிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்..
ஒவ்வொரு வரியிலும் இன்னும் நிறைய சொல்ல வேண்டும் என்கிற ஆவல் தெரிகிறது.... வாழ்த்துக்கள் சீனு...
ReplyDelete// "அடிபட்டதால பதிவர் சந்திப்புல கலந்துக்க முடியாம போயிருமோன்னு பயமா இருக்கு சீனு"//
ReplyDeleteசந்திப்புல கலந்துக்க முடிஞ்சதுல ரொம்ப சந்தோசம். இப்பவும் முன்னாடியே வந்து வரவேற்பு குழுவோட சேர்ந்து என்னால முடிஞ்ச வேலைகள் செய்யனும்னு நினைச்சிருந்தேன்.. விதி வலியது. அதுல கொஞ்சம் வருத்தம் தான்..
இந்த சிறிய வயதில் கடுமையான உழைப்புடன் கூடிய திட்டமிடல். அடுத்த வருடமும் இதே போல ஜெயிக்க வாழ்த்துகள்.
ReplyDeleteசீனு நன்றி.
ReplyDeleteஇனி சென்னை வருகின்ற நாட்களில் எல்லாம் சந்திக்கின்றேன். கவலை வேண்டாம்.
பதிவர் திருவிழாவில் எல்லோரையும் ஒருங்கிணைப்பு செய்த உங்கள் பணியையும், ராஜசேகர் அவர்களின் ஈடுபாட்டையும், திண்டுக்கல் தனபாலன்,பாலகணேஷ், கோவை ஆவி, சேட்டைக்காரன், ஸ்கூல் பையன், சுப்புத்தாத்தா பலரிடமும் நிறைய பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரமின்மை காரணமாக அவசரகதியில் திரும்பவேண்டியதாயிற்று. வந்த எல்லா பதிவர்களும் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார்கள். நூற்று இருபதுக்கும் மேற்பட்ட சிந்தனையாளர்களை ஒரே அரங்கத்தில் காணக் கிடைத்தது சந்தோஷமாக இருந்தது. மீண்டும் சந்திப்போம். மீண்டும் மீண்டும் மீண்டும்!
உங்க கூடவும் பேச முடியவில்லை.. கண்டிப்பா இன்னொரு சந்திப்புல உங்களுடன் பேச ஆவலாக உள்ளேன்..
Delete//ன்று பொய்க் கோபத்துடன் கூறியபடி நகர்ந்துவிட்டார் ஜோதிஜி. //
ReplyDeleteஆஹா.. இவர்தான் ஜோதிஜி யா? திரும்பி வரும் வழியில் இவருக்கு அடுத்த இருக்கையிலேயே ஆறு மணிநேரம் அமர்ந்து பயணம் செய்தும் அவருடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் உறங்கிக் கொண்டு இருந்ததை நினைத்தால் கொஞ்சம் குற்ற உணர்வு தோன்றுகிறது..
உங்கள் குழுவினருக்குத்தான் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எளிதான பயணமாக மாற்றியமைக்கு. நிச்சயம் சந்திப்போம்.
Delete///ஆஹா.. இவர்தான் ஜோதிஜி யா?///
Deleteஅடப்பா(ஆ)வி ...!
//கொஞ்சம் குற்ற உணர்வு தோன்றுகிறது..//
கொஞ்சம் தானா ....? உன்ன .....
This comment has been removed by the author.
Delete//தீவிர வாசகர் யார் என்று பதிவின் இடையில் எங்காவது கூறுகிறேன்.//
ReplyDeleteதீவிர வாசகர் னதும் தீவிரவாதியோன்னு நினைச்சேன்..
இந்த முறை சீனுவை சந்தித்து பேச நினைத்தேன் முடியவில்லை ஆனாலும் சீனுவுக்குள் இருக்கும் அபார திறமைகளை கண்டு வியக்கிறேன் அடுத்த முறை நிச்சயம் சந்திக்கலாம் தொடர்ந்து பதிவர் சந்திப்பை பற்றி எழுதுங்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteவெல் அப்டேட்.
ReplyDeleteசீனுவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...
ReplyDeleteஇதோ வந்து விட்டது இந்த மனக்குதிரையின் பின்னூட்டமும்.. :-)
ReplyDeleteசீனு, தங்களை கண்டத்தில் மிகவும் மகிழ்ச்சி, விழா வெகு சிறப்பாக இருந்தது..... மீண்டும் சந்திக்க ஆவல், நிறைய பேசுவோம் !
ReplyDeleteமிகச் சிறப்பாக விழாவை நடத்தி முடித்த உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள், சீனு. பதிவர் விழாவின் ஒரு பகுதியை மட்டுமே ரசித்த எனக்கும் பலரையும் சந்திக்க, பேச முடியவில்லை என்பது பெரிய குறைதான். நிகழ்ச்சிகளிடையே எழுந்து போய் யாரையும் பார்க்க முடியவில்லை.
ReplyDeleteஅடுத்த வருடம் ஈரோட்டில் பதிவர் திருவிழா என்று சொல்லியிருக்கிறார்கள். அரை நாள் மட்டும் நிகழ்ச்சிகள் இருக்கட்டும். மீதி அரை நாள் எல்லோரும் எல்லோரையும் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கலாம்.
நீங்கள் எனக்குக் கொடுத்த பரிசுக் கூப்பனில் நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொண்டேன் சீனு. அடுத்தமுறை பார்க்கும்போது உங்கள் கையெழுத்தைப் பெற்றுக் கொள்ளுகிறேன்.
இன்னும் பதிவர் சந்திப்பிலேயே இருக்கிறேன்.
நன்றி சீனு!
ஒரு போட்டோ எடுத்து உங்கள் பதிவிலே போடுவீர்கள் என்று தெரிந்திருந்தால்,
ReplyDeleteஉங்கள் பின்னாடி, பூனைக்குட்டி போல சுற்றிக்கொண்டே இருந்திருப்பேனே !!
ஹூம். அதிருஷ்டம் அவ்வளவு தான். அடுத்த தடவை யாவது பார்ப்போம்.
அது சரி, நான் கொண்டு வந்தது சாப்பாட்டு பை அல்ல. ஸ்கூல் பாக்.
அரங்குக்குள் உஷ்ணம் மிக கடுமையாக இருந்ததால், பாமரன் அவர்கள் உரை முடியும்பொழுது வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.
பதிவர்கள் அருகாமை தான் குளிச்சி சாதனம். என்று விழா ஏற்பாடு செய்தவர்கள் நினைத்திருக்கலாமோ ??
புலவர் இராமானுசம் உரை மிகவும் அருமை.
சுப்பு தாத்தா.
u may visit here.
www.subbuthatha.blogspot.com
அந்த போட்டோ எடுக்கும் போது கரண்ட் போயிடுச்சா இல்லையே சுப்பு தாத்தா இறுதியாக பேசும் முக்கியமான இடத்தில் கரண்ட் போய்விட்டது திரும்ப அவரை பேச சொல்லி இருக்கலாம் என்ன சொல்ல வந்தார் என்பதே தெரியவில்லை.
Delete//(வேறு வழியேயில்லை, இந்தப் பதிவு தொடர வேண்டும், தொடரும் என்பது விதி...!//)
ReplyDeleteஆமா ...ஆமா ...! நாங்கூட கேள்விப்பட்டுருக்கேன்" விதி வலியது" ன்னு ....!
இன்னும் அசதி போகல போல வழமையான ரைட் அப் மிஸ்ஸிங் ....!
GREAT EFFORT AT ON & OFF FIELD...! WELL-DONE SEENU ....!
தம்பி தாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் விழாவுக்கு ஓடி ஆடி உழைத்தது கண்டு மிக்க மகிழ்ந்தேன். அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteபதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! எனக்கும் புகைப்படம் எடுத்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் உண்டு! சிறப்பாக நடைபெற்றது விழா! பாராட்டுக்கள்! நன்றி!
ReplyDeleteவிழா சிறப்புற நடைபெற்றது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி சீனு
ReplyDeleteதங்களை சந்தித்ததிலும் மகிழ்ச்சி
அன்பின் சீனு - விழா சிறப்புடன் நடைபெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி - படங்கள் பகிர்வினிற்கும் - பதிவினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete//சஸ்பென்ஸ் வைக்காமல் நான் எப்போது பதிவை வளர்த்துள்ளேன், //
ReplyDeleteசஸ்பென்ஸ் வைக்காம எப்ப முடிச்சு(ம்) இருக்க ...?
குருவே அழகாக தொகுத்திருக்கிறீங்க...
ReplyDeleteபல பதிவர்களின் முகங்கள் இப்பொழுதுதான் எனக்குத் தெரிகிறது...
பகிர்வுக்கு நன்றிப்பா........
விழாசிறக்க வேர்க்க விறு விறுக்க சுறு சுறுப்பாக உதவிகள் பல புரிந்த சீனி மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். நீங்கா நினைவுகளை மட்டும் என்னோடு எடுத்து வந்துவிட்டேன்.
ReplyDeleteநண்பா உண்மையிலேயே மிக மிக சிறப்பான அனுபவம் கிடைத்தது உங்களால் எனக்கு.. மிக்க நன்றிகள்.. இந்த பதிவை படிக்கும் போது அந்த இனிமையான நாள் அப்படியே நகராமல் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது..
ReplyDeleteபடிக்கும்போதே நெகிழ்ச்சியாக இருந்தது. “தொடரும்” – ஆவலோடு .எதிர்பார்க்கிறேன்
ReplyDelete//வேறு வழியேயில்லை, இந்தப் பதிவு தொடர வேண்டும், தொடரும் என்பது விதி...! )//
ReplyDelete:)
என்ன சொல்வதுன்னு தெரியலை நண்பா.... மனமெல்லாம் மகிழ்ச்சி பரவியிருப்பதால் வார்த்தைகள் வெளிவரவில்லை....
ReplyDeleteஇப்பவும் சொல்றேன் "நான் உங்களோட தீவிர வாசகன்"
ReplyDelete
ReplyDeleteசெம கலக்கியிருக்கீங்க போல... ஆனா பதிவர் மாநாட்டுக்குப் பின் போன வருடம்போல அந்தளவு பரபரப்பில்லையே சீனு... பதிவுகளும் அவ்வளவாக காணோம்... போரடித்து விட்டதா.. :-)
எனிவே நானும் இணையம் வழி கண்டுகளித்தேன்... ஆடியோ மட்டும் வரவில்லை.
என்னால் வர முடியவில்லையே
ReplyDeleteஉங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் தீயாக வேலை செய்து கொண்டிருட்தீர்கள், உங்கள் குழுவினரக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றியும்..!
ReplyDeleteஅனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சியான தருணங்கள்.
ReplyDelete