"ஏல சனிக்கிழம ஆபீஸ் இருந்தா லீவ் போட்று, நாம நாளைய இயக்குனர் பைனல்ஸ் போறோம்" வெள்ளிகிழமை விடியும் முன்பே என்னை எழுப்பி அழைப்பு விடுத்தான் மணிக்குமார்.
நாளைய இயக்குனர் சீசன் நான்கின் சிறந்த படத் தொகுப்பாளருக்கான பரிந்துரையில் மணிக்குமரனின் பெயரும் இருக்கவே கண்டிப்பாக வருகிறேன் என்று கூறிவிட்டேன். ஏதாவது ஒரு நாளைய இயக்குனர் ஷூட்டிங்கிற்கு என்னையும் அழைத்துச் செல்லும்படி பலமுறை அவனிடம் கேட்டதுண்டு. இருந்தும் மறதி அவனது முக்கிய வியாதி.
சனிக்கிழமை அன்று அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடைபெற்ற நாளைய இயக்குனர் இறுதிச் சுற்றுக்கு மாலை நான்கு மணிக்கே நானும் எனது தம்பியும் சென்று சேர்ந்துவிட்டோம். ஐந்து மணிக்கு ஆரம்பிப்பதாகக் கூறிய நிகழ்ச்சி ஒரு சிறிய தாமதத்துடன் சரியாக ஏழரை மணிக்கு ஆரம்பமாகியது.நிகழ்ச்சி தொடங்குவதற்கு கடைசி நிமிடம் வரையிலும் அரங்க வடிவமைப்பு வேலையைக் முழு ஈடுபாட்டுடன் கவனித்துக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சியை ஒளி வெள்ளத்தில் மூழ்கடிக்க எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை அன்று தான் கண்டுகொண்டேன்.
இயக்குனர்கள் சுரேஷ் கிருஷ்ணா, சிம்பு தேவன், பாண்டிராஜ் மூவரும் நடுவர்களாக அமர, கீர்த்தியும் சஞ்சீவும் தொகுத்து வழங்கினார்கள். கீர்த்தியை டிவியில் பார்க்கும் போது கொஞ்சம் மொக்கையாகத் தோன்றினாலும் மேடையில் கொஞ்சம் அழகாகத் தான் தெரிந்தார். ஒருவேளை தூரத்துப் பச்சையாக இருக்குமோ!
ஏழு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு அவற்றில் இருந்து மூன்று படங்கள் தேர்ந்தெடுக்கப் போவதாக அறிவித்தார்கள், இடையிடையே சீசன் நான்கில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்கு விருது கொடுத்து கவுரவித்துக் கொண்டிருந்தனர்.
இறுதிச் சுற்றில் ஒளிபரப்பப்பட்ட குறும்படங்கள்
1.மகனே மண்ணாங்கட்டி
தன் மகனை மண்ணாங்கட்டி என்று திட்டும் ஆசிரியர் மற்றும் தன் மகனுக்கு வாய்ப்பு கொடுக்காத விளையாட்டுத்துறை அதிகாரிகளுக்கு சவால் விடும் அப்பா, நகைச்சுவைக் கலந்த சென்டிமென்டான கதை.
2. உன்விழியில் என் கனவு
ஒரு கட்டத்தில் தன் காதலி ஒரு திருநங்கை என்று தெரியவரும் பொழுது காதலனின் மனப்போராட்டம் மற்றும் என்ன முடிவெடுத்தான் என்று பயணிக்கும் வித்தியாசமான கதைக்களம்.
3. +91சைண்டிஸ்ட்
நடிகர் ஸ்ரீகாந்த் உட்பட பெரிய பெரிய திரை நட்சத்திரங்கள் நடித்த குறும்படம். ஆராய்ச்சியாளர்கள் அறிவியல் மேதைகள் அனைவரும் ஏன் இந்தியாவைத் துறந்து வெளிநாடு செல்கிறார்கள் என்பது குறித்து எடுக்கப்பட்ட விழிப்புணர்வு படம். படித்தவர்கள் நாட்டைத் துறந்து செல்வதில்லை, துரத்தபடுவதால் செல்கின்றனர் என்பது தான் கதையின் மையம்.
4. ஏழையின் சிரிப்பில்
தெருவோர அண்ணன் தங்கை பாசம் குறித்த மனதை நெகிழ வைத்த படம்.
5. கொஞ்சம் பெரிய மனசு
சாலையில் நடக்கும் பிரச்சனையைத் தட்டிக்கேட்க பெரிய மனசு தான் வேண்டும் என்று அவசியமில்லை, கொஞ்சம் பெரிய மனசிருந்தால் போதும் என்பதை வலியுறுத்தும் அருமையான படம்.
6. ஓம் க்ரீம்
பேய் ஓட்ட வருபவன் அந்தப் பேயையே காதலிக்கத் தொடங்க, பேயும் இவனைக் காதலிக்கத் தொடங்க இருவருக்குள்ளும் நடக்கும் காதல்ப் போராட்டம் தான் கதை. வித்தியாசமான ஜாலியான படம்.
7. காற்று(முதல் பரிசு)
ஒன்றுமே புரியாத திரைக்கதை என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அட சொல்லவைத்து முடிந்த படம். இந்த சமுதாயம் பெண்களை எப்படியெல்லாம் தங்கள் கைப்பாவையாக வைத்துள்ளது என்பதே படத்தின் கதை.
திரைப்பட பிரபலங்கள்
இந்த நிகழ்விற்கு திரைப்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், பாலு மகேந்திரா, பாக்யராஜ் மற்றும் அவரது மகன் சாந்தனு, எஸ்.வி சேகர், அருண் விஜய், காதல் தண்டபாணி, கானா பாலா, சூதுகவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி, சிம்கா, விஜய் ஆதிராஜ், நிதின் சத்யா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அன்றைய மாலைப் பொழுதின் விழா அரங்கமே குறும்பட குடும்பத்தினரால் நிறைந்திருந்தது. தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் கிராமத்தில் இருந்தெல்லாம் தங்கள் பெற்றோர்கள் உறவினர்களை அழைத்து வந்திருந்தனர், தாங்கள் திரையில் கண்ட மாபெரும் நட்ச்சத்திரங்களிடம் இருந்து தங்கள் குழந்தைகள் விருது பெரும்போது அந்தப் பெற்றோர்கள் அனைவரும் தங்கள் மனதில் என்னோற்றான் கொள் என்னும்சொல் என்று நினைத்திருப்பார்கள்.
சிறந்த இசை அமைப்பாளர், படத்தொகுப்பாளர், நடிகர், நடிகை, வசனகர்த்தா, ஒளிபதிவாளர் என்று பல பிரிவுகளில் பணியாற்றியவர்களுக்கும் பரிசுகளை வழங்கினர்.
நாளைய இயக்குனர் சீசன் நான்கில் வெற்றிபெற்ற படமான "காற்று" குறும்படத்திற்கு கே.பி அவர்கள் பரிசினை வழங்கினார். காற்று படத்தின் இயக்குனர் வேந்தன் மென்பொருள் துறையில் பணிபுரிந்து கொண்டே குறும்படங்களையும் இயக்கி வருகிறார்.
சாந்தனு மற்றும் அருண்விஜய் மேடையில் பேசும்பொழுது நல்ல கதையுடன் வரும் இயக்குனர்களின் திரைப்படத்தை தயாரிக்க முன்வருவதாகக் கூறினார்கள்.
ஒரு காலத்தில் சினிமாவினுள் நுழைய வேண்டும் என்றால் கோடம்பாக்கமே கதி என்று தவமிருந்த நிலை மாறி, திறமை இருக்கும் யார் வேண்டுமானாலும் திரைப்பட உலகினுள் நுழையலாம் என்னும் நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது இன்றைய குறும்பட உலகம்,குறும்பட இயக்குனர்களுக்கு சிறப்பான தளம் அமைத்துக் கொடுத்து அவர்களை இன்னுமின்னும் சிறப்பாக மெருகேற்றும் கலைஞர் தொலைகாட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
என்னைப் பொருத்தவரை கலைஞர் தொலைகாட்சியில் வெளிவரும் ஒரு உருப்படியான மற்றும் நான் பெரிதும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி என்றால் அது நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மட்டும் தான். இந்நிகழ்ச்சி இன்னும் பாகங்களைக் கடக்க வேண்டும், திறமை இருப்பவர்கள் பலரை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் விரைவில் ஸீசன் 5 தொடங்கப் போவதாக அறிவித்தார்கள்.
ஸீசன் ஐந்தை எதிர்பார்த்து ஆவலுடன்...
Tweet |
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியை விடாமல் பார்த்து வருகிறேன். திறமை நிறைய இருக்கிறது.சிம்புதேவனும் பாண்டிராஜும் நல்ல ஆய்வு செய்த முடிவுகளைச் சொல்கிறார்கள்.
ReplyDeleteஇந்த ஞாயிற்றுக்கிழமையை எதிர்பார்த்திருக்கிறேன்.
பகிர்வுக்கு மிகநன்றி.
இந்த ஞாயிறே ஒளிபரப்புவார்களா என்று தெரியவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா
Deleteம்ம்ம்ம்... கலைஞர் தொலைக்காட்சியின் உருப்படியான நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு.. வாழ்த்துக்கள்...
ReplyDeleteவெகுநாள் ஆசை, ஆனால் நிகழ்ச்சி முடிய இரவு 12.30 க்கு மேல் ஆகிவிட்டதால் பயங்கர தலைவலி வந்துவிட்டது, பசி வேறு, OMRஇல் நடுநிசி உணவகம் தேடி அலைந்து பட்ட அல்லல்களையே ஒரு பெரும்பதிவாக எழுதலாம்.. :-)
Delete// பெரும்பதிவாக எழுதலாம்.. :-)//
Deleteஅண்ணன் தி.கொ.போ.சீ க்கு தாழ்மையான வேண்டுகோள் ....!
பயங்கர தலைவலி எங்களுக்கு வராமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் .
இன்றைய குறும்பட உலகம்,குறும்பட இயக்குனர்களுக்கு சிறப்பான தளம் அமைத்துக் கொடுத்து அவர்களை இன்னுமின்னும் சிறப்பாக மெருகேற்றும் கலைஞர் தொலைகாட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் ...!!!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா...
Deleteஇந்த நிகழ்ச்சியை அவ்வளவாகப் பார்த்ததில்லை. பார்க்க வேண்டும்.
ReplyDeleteவரவேற்பு பேனரில் இறுதி சுற்று என்பதற்கு பதிலாக இருதி சுற்று என்று உள்ளது. யாருமே கவனிக்க வில்லையோ.?
எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி சார், பத்தில் இருந்து பதினைந்து நிமிடத்தில் எடுக்கப்படும் குறும்படத்தில் எவ்வளவு திறமைகளை வெளிபடுத்துகிறார்கள்... சில குறும்படங்கள் மிக அற்புதமாக இருக்கும்..
Delete//வரவேற்பு பேனரில் இறுதி சுற்று என்பதற்கு பதிலாக இருதி சுற்று என்று உள்ளது. யாருமே கவனிக்க வில்லையோ.?//
போட்டோ எடுப்பதற்காக மட்டுமே அந்த பேனரைப் கவனித்தேன்.. இவ்வளவு பெரிய எழுத்துப் பிழையா ஹா ஹா ஹா தமிழ் வால்க
//வரவேற்பு பேனரில் இறுதி சுற்று என்பதற்கு பதிலாக இருதி சுற்று என்று உள்ளது. யாருமே கவனிக்க வில்லையோ.?//
ReplyDeleteநான் இந்த பதிவை படிக்க ஆரம்பித்த அடுத்த கணம் அதைக் கவனித்து விட்டேன்.
என்னது ? அறிவாலயத்தில் இப்படி ஒரு சொல் பிழையா எனத் தோன்றாமல் இல்லை.
இன்னொரு கருத்து.
இறுதி என்பதை விட கடை என்ற சொல் பொருந்தும்.
தலைச் சுற்று, இடைச் சுற்று, கடைச் சுற்று எனச் சொல்லி இருக்கலாம்.
யோவ் பெரிசு ...உன்னை ஒரு ஒபினியன் கேட்டாங்களாயா? என சத்தம் சீற்றம் உணர முடிகிறது.
ஓடிப்போயிடரேன்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
தாத்தா, இந்த ஜெனரேஷன் பசங்க உங்க அளவுக்கு ஷார்ப் இல்லே.. அப்பா செம்ம அப்சர்வேஷன்.. ஹேட்ஸ் ஆப் தாத்தா..
Deleteஆவி சொன்ன மாதிரி சுப்பு தாத்தா யு ஆர் கிரேட்..
Deleteஆனால் பொதுவாகவே தமிழ் சமுதாயத்தில் இறுதி என்ற சொல்லாடல் தான் பரவலாக பயன்படுத்தப் படுகிறது, இறுதி ஆட்டம் , இறுதிச் சுற்று, இறுதி நிகழ்ச்சி...
முன்னொருமுறை ஒரு பதிவல் இறுதியாக என்று நான் எழுதி இருந்தததை வாத்தியார் பாலகணேஷ் அப்படி எழுதக் கூடாது என்று கூறி என்னைத் திருத்தினார்..
ஒருவேளை தமிழுக்குள் பொதிந்து கிடக்கும் சில விஷயங்கள் மெல்ல மெல்ல அழிந்து வருகிறதோ...?
//கீர்த்தியை டிவியில் பார்க்கும் போது கொஞ்சம் மொக்கையாகத் தோன்றினாலும் மேடையில் கொஞ்சம் அழகாகத் தான் தெரிந்தார்.//
ReplyDeleteஇனி கீர்த்தி வேறயா? இல்லாட்டாலே நம்ம பசங்க கும்மு கும்முன்னு கும்மறாங்க.. இதுலே நீயே ஏம்பா அல்வா கிண்டி கையில கொடுக்கறே?
ஹா ஹா ஹா இல்லாட்டா மட்டும் விட்றவா போறீங்க... எது எப்படியோ நஸ்ரியாவ யாரோட ஒப்புதலும் இல்லாம குத்தகைக்கு எடுத்ததுக்கே நம்ம சங்கத்த கூட்டி தீர்ப்பு சொல்ல வேண்டி இருக்கு
Deleteசரி, சரி, வழக்கம்போல தீர்ப்பு நமக்கு சாதகமா இருக்கட்டும்..
Deleteஇந்தப் பகுதி இந்த வாரம் வருமா? தொலைக்கட்சியில் சீனுவைப் பார்க்கலாமா?
ReplyDeleteஆடியன்ஸ் என்னும் உயர்ந்த இடத்தில் இடம் கிடைத்ததால் நாளைய இயக்குனர் ஒளிபரப்பப் படும் பொழுது எங்கள் வீட்டிற்கு வந்ததால் என்னை நேரில் பார்க்கலாம்
Deleteஎங்கே எந்த சொல்லைப் பயன்படுத்துவது என்று தெரியாதவர் மனதில் சிக்கி, தமிழ் இப்படி வதைபடுகிறதே?
ReplyDeleteஇருதி இல்லை; இறுதியும் இல்லை; முடிவுச் சுற்று என்பதே சரி.
ஹா ஹா ஹா தமிழினத் தலைவர் அலுவலக நுழைவாயிலில் தமிழ் வாழ்கிறது :-)
Deleteஅது என்ன நாளைய இயக்குனர்? இன்றைய இயக்குனர்களுக்குத் தானே பரிசு கொடுத்திருக்கிறார்கள்?
ReplyDeleteஇன்றைய இயக்குனர்கள் என்பவர்கள் வெள்ளித் திரையில் படம் இயக்குபவர்கள்.. நாளைய இயக்குனர்கள் என்பவர்கள் இன்றைய குறும்பட இயக்குனர்கள் நாளைய வெள்ளித்திரை இயக்குனர்கள் என்ற அர்த்தத்தில் அந்தத் தலைப்பை வைத்துள்ளார்கள்
Deleteஅன்பின் சீனு - நல்லதொரு நிகழ்வினை அப்படியே படம் பிடித்துக் காட்டியமை நன்று - பரிசு பெற்ற நாளைய இயக்குனர்களூக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநல்ல நிகழ்ச்சியைப் பற்றி சொல்லியிருக்கீங்க... இந்த வாரம் உங்கள டீ.வி ல பார்க்கலாமா????
ReplyDeleteவாய்ப்பு கிடைத்தால் ஏழு படத்தையும் பர்த்துடனும், நம்ம சீனு அண்ணா சொல்லியும் பார்க்காம விட்டோம்னு இருக்கக்கூடதுள்ள....
ReplyDeleteதொலைக்காட்சி பார்ப்பதில்லை சீனு. உங்களின் இந்தப் பதிவு படித்த பின் நல்ல நிகழ்ச்சிகளை மிஸ் பண்ணுகிறோமோ என்று தோன்றுகிறது.
ReplyDeleteஎத்தனை மணிக்கு எந்த கிழமையில் வருகிறது என்று சொல்லுங்களேன்.
படங்கள் வெளிவந்தால் [யூட்யூபில்] சொல்லுங்க சீனு பார்க்கணும்....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநாளைய இயக்குனர் சீசன் 4 - இறுதிச் சுற்று"அருமையான பதிவு சீனு !!! அனைத்தையும் நேரில் பார்த்த அனுபவம் அதிலும் ஒளி அமைப்பின் பின்னணி அவர்கள் மீது ஓர் தனி மரியாதையை ஏற்படுத்துகின்றது அவர்கள் இல்லையேல் அழகில்லை!!!!
ReplyDelete