பிரபல பதிவருடன் திடீர் சந்திப்பு
வேலையற்ற சோம்பலற்ற வியாழக்கிழமை மாலை. புதிய எண்ணிலிருந்து ஒரு அழைப்பு, நான் ஹலோ என்றதும் தன்னுடைய பெயரைச் சொன்னார், அவருடைய பெயரைக் கேட்டதும் என் முகத்தில் ஆயிரம் மின்னல் வெட்டியது போன்ற பிரகாசம், வானத்திலும் மேகங்கள் இடி முழக்கத்துடன் என் சந்தோசத்தை கொண்டாடத் தொடங்கியிருந்தன. "சீனு நான் இப்போ தாம்பரம் வருவேன் உங்களைப் பார்க்க முடியுமா என்றார்". வரம் தருவதற்காக அந்த இறைவனே தாம்பரம் வரை வருவதாக இருந்தால் பக்தன் நான் அதைப் பெற்றுக்கொள்ள தாம்பரம் நோக்கி செல்ல மாட்டேனா என்ன?
லேசான மழையிலும் பொங்கிப் பிரவாகம் எடுத்திருந்த சாலைகளின் ஊடே பயணிக்கத் தொடங்கினேன், சரியாக ஆறரை மணியளவில் சந்தித்தோம். அவரை இதற்கு முன் புகைப்படத்தில் பார்த்திருந்தாலும் நேரில் பார்பதற்கு மிகவும் வித்தியாசமாக மற்றும் இளமையாக இருந்தார். பதிவர் சந்திப்பு மற்றும் பதிவர்கள் குறித்து கேட்டறிந்து கொண்டார், எங்களுக்குள் நடந்த உரையாடலில் அவர் கூறிய மிக முக்கிய விஷயம் "ஒரு விஷயம் பதிவு செய்யுறோம்ன்னா அந்தப் பதிவு மேல நமக்கு ஒரு காதல் வரணும், அத யாரும் படிக்கிறாங்க படிக்கல, கமெண்ட் போடுறாங்க போடல, அதப் பத்தி கவலைப் படவே கூடாது, நாம எழுதுற பதிவு முதல்ல நமக்கு மன நிம்மதி கொடுக்கணும்" என்றார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.
முப்பது நிமிட அளவிலேயே எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது, அன்றைய இரவே தமிழ்நாட்டில் இருந்து கிளம்புவதால் உடனடியாக சென்ட்ரல் செல்ல வேண்டும் என்று கூறி விடைபெற்றுச் சென்றார். இன்னும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருக்கலாமே என்று என்னுள் தோன்றினாலும் தன்னுடைய அவசர வேலைகளின் மத்தியிலும் என்னை சந்திக்க அழைத்ததே மிக சந்தோசமாக இருந்தது. மிகப் பெரிய மனிதர்களின் நட்பை சம்பாதித்துக் கொடுத்த வலையுலகின் மீதான காதல் இன்னுமின்னும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி சார்.
இன்னும் இருமாதங்களில் மீண்டும் சென்னை வரவிருப்பதாகவும் அப்போது மற்ற நண்பர்களை கண்டிப்பாக சந்திக்கிறேன் அதுவரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ஒரு அன்புக் கட்டளையிட்டுச் சென்றார்.
அந்தப் பிரபல பதிவர் யார் என்பது எங்களுக்குத் தெரியும் என்பவர்கள் தயவு செய்து அமைதி காக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்பது நிச்சயம் ஒரு குறியீடு அல்ல.
சென்னையில் ஒரு காவல் தெய்வம்
அது ஒரு வேலையற்ற செவ்வாய்க் கிழமை. என்னிடம் வசமாக சிக்கியவர் அரசன், "தலைவரே கிண்டில இருக்கேன், பொழுது போகல என்ன பண்ணலாம்" என்றேன், "நீங்க அங்கயே இருங்க தலைவரே இதோ வந்த்ருர்றேன்" என்றவர் அரைமணி நேரத்தில் வந்துவிட்டார், சினிமாவுக்குச் செல்லலாமா இல்லை வேறு எங்கும் செல்லலாமா என்பதில் எங்களுக்குள் பெருங்குழப்பம்.
"தலைவரே பில்லர் பக்கத்துல கிராமத்து எபெக்ட்டுல ஒரு முனீஸ்வரன் கோவில் இருக்கு ஒருதடவ மதுமதி கூட்டிட்டுப் போனார் போவோமா" என்றார். அட இதுதான நமக்கு வேணும் என்றபடி உற்சாகமாக கிளம்பினோம். எப்படியெல்லாமோ சுற்றவைத்தப் பாதை முடிவில் அந்த முனீஸ்வரனின் பிரம்மாண்ட சிலை அருகே கொண்டு சேர்த்தது.
டிபிகல் சென்னைக்கு சொந்தமான பணக்காரத்தனம் அதைத் தொடரும் குடிசைவாசிகள் இவர்களில் இருந்து சற்றே விலகி காட்சியளிக்கிறார் முனீஸ்வரன். அங்காள பரமேஸ்வரி மூலவராக அருள்பாலிக்க வெளியே காவல் தெய்வமாக முனீஸ்வரன். அருகே கூவம் சலசலப்பில்லாமல் வெறும் சாக்கடையாக ஓடிக் கொண்டுள்ளது.
மிகவும் பிரம்மாண்டமான முனீஸ்வரன். கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம் சென்னையின் அவுட்டோரில் இருந்திருக்க வேண்டிய முனிஸ்வரன் தப்பித்தவறி இண்டோரில் இருப்பதால் அவுட்டோர் செலவை மிச்சப் பிடிக்க பெரும்பாலான கிராமத்துப் படபிடிப்பு இங்கேயே எடுக்கபடுவதாக அரசன் சொன்னார். நாங்கள் சென்ற போதும் ஒரு குத்துபாட்டுக்காக ஆடிக் கொண்டிருந்தார்கள். கோவமான காவல் தெய்வம் வேறுவழியே இல்லாமல் கேவலமான குத்துப் பாடல்களைப் பார்த்துக் கொண்டுள்ளார்.
குறும்படம் - தமிழ் இனி
சமீபத்தில் வெகுவாக பார்த்து ரசித்த ஒரு குறும்படம் தமிழ் இனி. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக எடுக்கப்பட்ட குறும்படம் என்றும் சொல்லலாம். இப்படத்தின் இயக்குனர் திரு.மணிராம் கலிபோர்னியா வாழ் தமிழர். நாளைய இயக்குனர் பைனல்ஸ் வரை முன்னேறி வந்தவர். படம் பற்றி நான் எதுவுமே கூறத் தேவையில்லை காரணம் படமே தேவையான விசயங்களை கூறிவிடும்.
மேத்யு கார்மெண்ட்ஸ்
ரங்கநாதன் தெருவுக்கு அருகில் இருக்கு நடேசன் தெருவில் மேத்யு கார்மெண்ட்ஸ் என்ற ஆடவர் ஆடையகம் உள்ளது. இங்கு ஒரு ரெடிமேட் ஷர்ட்டின் விலை 450 ருபாய் மட்டுமே. தரமாகவும் உள்ளது நிறைய வெரைட்டியும் உள்ளது. ஜீன்ஸ் மற்றும் பேன்ட் குறித்து நோ கமெண்ட்ஸ்...
Mathew Garments
No 21 Uma Complex 1st Floor,Near Mambalam Railway Station, Natesan St,
அலுவலகம் முடிந்து வீட்டிற்கு கிளம்பத் தயாரான போது தான் அவள் அலுவலகம் உள்நுழைந்தாள். வழக்கத்தை விட மேக்கப் கொஞ்சம் அதிகமாக இருந்தது. பின்னபடாமல் கலைத்து விட்ட தலையை கோதிக் கொண்டே அவளது தோழி அருகே சென்றவள் பையிலிருந்த ஸ்மார்ட் போனை கையில் எடுத்து அதனை முகம் பார்க்கும் கண்ணாடியாக மாற்றினாள். முகம் தெளிவாக தெரிந்திருக்காது என்று நினைக்கிறன் போனில் முன் பக்கம் இருக்கும் கேமராவை ஆன் செய்து தனது மேக்கப்பை தொடங்கினாள்.
திடிரென்று "ஆவ்" என்றவளை நோக்கி அவளது தோழி "வாட்" என்றாள்.
"கேப்ல வரும் போது லேசா மழைதுளி பட்டது... ஸீ மை மேக்கப் வெண்ட் ஆப்" என்றபடி மேக்கப் கலைந்த தனது முகத்தையே மீண்டும் சோகமாக பார்க்கத் தொடங்கினாள்.
அவளுடைய சோகம் என்னையும் ஆட்கொண்டது பாவம் மேக்கப் கலைந்த முகத்துடன் அவளால் எப்படி நைட்ஷிப்டை தொடர முடியும் என்ற பெரும் வருத்தத்துடன் வீட்டிற்கு கிளம்பிய போது மணி இரவு பதினொன்று.
ஜஸ்ட்கிளிக்
அரசனுக்குச் சொந்தமான நூலகத்தில்
வேலையற்ற சோம்பலற்ற வியாழக்கிழமை மாலை. புதிய எண்ணிலிருந்து ஒரு அழைப்பு, நான் ஹலோ என்றதும் தன்னுடைய பெயரைச் சொன்னார், அவருடைய பெயரைக் கேட்டதும் என் முகத்தில் ஆயிரம் மின்னல் வெட்டியது போன்ற பிரகாசம், வானத்திலும் மேகங்கள் இடி முழக்கத்துடன் என் சந்தோசத்தை கொண்டாடத் தொடங்கியிருந்தன. "சீனு நான் இப்போ தாம்பரம் வருவேன் உங்களைப் பார்க்க முடியுமா என்றார்". வரம் தருவதற்காக அந்த இறைவனே தாம்பரம் வரை வருவதாக இருந்தால் பக்தன் நான் அதைப் பெற்றுக்கொள்ள தாம்பரம் நோக்கி செல்ல மாட்டேனா என்ன?
லேசான மழையிலும் பொங்கிப் பிரவாகம் எடுத்திருந்த சாலைகளின் ஊடே பயணிக்கத் தொடங்கினேன், சரியாக ஆறரை மணியளவில் சந்தித்தோம். அவரை இதற்கு முன் புகைப்படத்தில் பார்த்திருந்தாலும் நேரில் பார்பதற்கு மிகவும் வித்தியாசமாக மற்றும் இளமையாக இருந்தார். பதிவர் சந்திப்பு மற்றும் பதிவர்கள் குறித்து கேட்டறிந்து கொண்டார், எங்களுக்குள் நடந்த உரையாடலில் அவர் கூறிய மிக முக்கிய விஷயம் "ஒரு விஷயம் பதிவு செய்யுறோம்ன்னா அந்தப் பதிவு மேல நமக்கு ஒரு காதல் வரணும், அத யாரும் படிக்கிறாங்க படிக்கல, கமெண்ட் போடுறாங்க போடல, அதப் பத்தி கவலைப் படவே கூடாது, நாம எழுதுற பதிவு முதல்ல நமக்கு மன நிம்மதி கொடுக்கணும்" என்றார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.
முப்பது நிமிட அளவிலேயே எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது, அன்றைய இரவே தமிழ்நாட்டில் இருந்து கிளம்புவதால் உடனடியாக சென்ட்ரல் செல்ல வேண்டும் என்று கூறி விடைபெற்றுச் சென்றார். இன்னும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருக்கலாமே என்று என்னுள் தோன்றினாலும் தன்னுடைய அவசர வேலைகளின் மத்தியிலும் என்னை சந்திக்க அழைத்ததே மிக சந்தோசமாக இருந்தது. மிகப் பெரிய மனிதர்களின் நட்பை சம்பாதித்துக் கொடுத்த வலையுலகின் மீதான காதல் இன்னுமின்னும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி சார்.
இன்னும் இருமாதங்களில் மீண்டும் சென்னை வரவிருப்பதாகவும் அப்போது மற்ற நண்பர்களை கண்டிப்பாக சந்திக்கிறேன் அதுவரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ஒரு அன்புக் கட்டளையிட்டுச் சென்றார்.
அந்தப் பிரபல பதிவர் யார் என்பது எங்களுக்குத் தெரியும் என்பவர்கள் தயவு செய்து அமைதி காக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்பது நிச்சயம் ஒரு குறியீடு அல்ல.
சென்னையில் ஒரு காவல் தெய்வம்
அது ஒரு வேலையற்ற செவ்வாய்க் கிழமை. என்னிடம் வசமாக சிக்கியவர் அரசன், "தலைவரே கிண்டில இருக்கேன், பொழுது போகல என்ன பண்ணலாம்" என்றேன், "நீங்க அங்கயே இருங்க தலைவரே இதோ வந்த்ருர்றேன்" என்றவர் அரைமணி நேரத்தில் வந்துவிட்டார், சினிமாவுக்குச் செல்லலாமா இல்லை வேறு எங்கும் செல்லலாமா என்பதில் எங்களுக்குள் பெருங்குழப்பம்.
"தலைவரே பில்லர் பக்கத்துல கிராமத்து எபெக்ட்டுல ஒரு முனீஸ்வரன் கோவில் இருக்கு ஒருதடவ மதுமதி கூட்டிட்டுப் போனார் போவோமா" என்றார். அட இதுதான நமக்கு வேணும் என்றபடி உற்சாகமாக கிளம்பினோம். எப்படியெல்லாமோ சுற்றவைத்தப் பாதை முடிவில் அந்த முனீஸ்வரனின் பிரம்மாண்ட சிலை அருகே கொண்டு சேர்த்தது.
டிபிகல் சென்னைக்கு சொந்தமான பணக்காரத்தனம் அதைத் தொடரும் குடிசைவாசிகள் இவர்களில் இருந்து சற்றே விலகி காட்சியளிக்கிறார் முனீஸ்வரன். அங்காள பரமேஸ்வரி மூலவராக அருள்பாலிக்க வெளியே காவல் தெய்வமாக முனீஸ்வரன். அருகே கூவம் சலசலப்பில்லாமல் வெறும் சாக்கடையாக ஓடிக் கொண்டுள்ளது.
மிகவும் பிரம்மாண்டமான முனீஸ்வரன். கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம் சென்னையின் அவுட்டோரில் இருந்திருக்க வேண்டிய முனிஸ்வரன் தப்பித்தவறி இண்டோரில் இருப்பதால் அவுட்டோர் செலவை மிச்சப் பிடிக்க பெரும்பாலான கிராமத்துப் படபிடிப்பு இங்கேயே எடுக்கபடுவதாக அரசன் சொன்னார். நாங்கள் சென்ற போதும் ஒரு குத்துபாட்டுக்காக ஆடிக் கொண்டிருந்தார்கள். கோவமான காவல் தெய்வம் வேறுவழியே இல்லாமல் கேவலமான குத்துப் பாடல்களைப் பார்த்துக் கொண்டுள்ளார்.
குறும்படம் - தமிழ் இனி
சமீபத்தில் வெகுவாக பார்த்து ரசித்த ஒரு குறும்படம் தமிழ் இனி. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக எடுக்கப்பட்ட குறும்படம் என்றும் சொல்லலாம். இப்படத்தின் இயக்குனர் திரு.மணிராம் கலிபோர்னியா வாழ் தமிழர். நாளைய இயக்குனர் பைனல்ஸ் வரை முன்னேறி வந்தவர். படம் பற்றி நான் எதுவுமே கூறத் தேவையில்லை காரணம் படமே தேவையான விசயங்களை கூறிவிடும்.
இயக்குனர் மணிராம் அவர்களுடன் |
ரங்கநாதன் தெருவுக்கு அருகில் இருக்கு நடேசன் தெருவில் மேத்யு கார்மெண்ட்ஸ் என்ற ஆடவர் ஆடையகம் உள்ளது. இங்கு ஒரு ரெடிமேட் ஷர்ட்டின் விலை 450 ருபாய் மட்டுமே. தரமாகவும் உள்ளது நிறைய வெரைட்டியும் உள்ளது. ஜீன்ஸ் மற்றும் பேன்ட் குறித்து நோ கமெண்ட்ஸ்...
Mathew Garments
CIT Nagar, Thiyagaraya Nagar, Chennai, TN 600017
044 6632 6091
உங்களை எல்லாம் ஏண்டி சுனாமி தூக்கல அலுவலகம் முடிந்து வீட்டிற்கு கிளம்பத் தயாரான போது தான் அவள் அலுவலகம் உள்நுழைந்தாள். வழக்கத்தை விட மேக்கப் கொஞ்சம் அதிகமாக இருந்தது. பின்னபடாமல் கலைத்து விட்ட தலையை கோதிக் கொண்டே அவளது தோழி அருகே சென்றவள் பையிலிருந்த ஸ்மார்ட் போனை கையில் எடுத்து அதனை முகம் பார்க்கும் கண்ணாடியாக மாற்றினாள். முகம் தெளிவாக தெரிந்திருக்காது என்று நினைக்கிறன் போனில் முன் பக்கம் இருக்கும் கேமராவை ஆன் செய்து தனது மேக்கப்பை தொடங்கினாள்.
திடிரென்று "ஆவ்" என்றவளை நோக்கி அவளது தோழி "வாட்" என்றாள்.
"கேப்ல வரும் போது லேசா மழைதுளி பட்டது... ஸீ மை மேக்கப் வெண்ட் ஆப்" என்றபடி மேக்கப் கலைந்த தனது முகத்தையே மீண்டும் சோகமாக பார்க்கத் தொடங்கினாள்.
அவளுடைய சோகம் என்னையும் ஆட்கொண்டது பாவம் மேக்கப் கலைந்த முகத்துடன் அவளால் எப்படி நைட்ஷிப்டை தொடர முடியும் என்ற பெரும் வருத்தத்துடன் வீட்டிற்கு கிளம்பிய போது மணி இரவு பதினொன்று.
ஜஸ்ட்கிளிக்
அரசனுக்குச் சொந்தமான நூலகத்தில்
Tweet |
படிக்க மிக இன்ரெஸ்டிங்கா இருந்தது. அரசன் தன் காதலி படத்தை இப்படி பப்ளிக்காக போட்டு இருக்கிறார். சொல்லிவையுங்க அவரிடம் யாராவது அவரது காதலியை லவட்டிக் கொண்டு போய்விடுவார்கள் என்று
ReplyDeleteமிக்க நன்றி மதுரைத் தமிழன்
Deleteதல, அந்த பிரபல பதிவர் யார்ன்னு என்னக்காவது தனியா சொல்லுங்க.... :):)
ReplyDeleteவணக்கம் தல நல்லா இருக்கீங்களா.. பேசி ரொம்ப நாள் ஆச்சு
Deleteமுகமறியா பதிவுலக நண்பர்களை முதன்முதலில் பார்க்கும் போது வரும் பரவசம் இருக்கே...சொல்லி மாளாது....!
ReplyDeleteநிச்சயம் உண்மை மனோ ன்னே
Deleteசுவாரஸ்யமான கலவைத் தகவல்கள்!
ReplyDeleteஉள்பெட்டியை விடவா சார்.. இல்லைன்னா மனவரிகளோட நிலா காயும் நேரம் சரணம்
Deleteமிகவும் சுவாரஸ்யமான ஜஸ்ட் ரிலாக்ஸ்.... இப்படி ஒரு முனீஸ்வரன் கோவில் இருப்பது எனக்கு இப்போது தான் தெரியும்....
ReplyDeleteஅந்தப் பொண்ணு மேல உனக்கு பொறாமைய்யா.... எவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு போட்ட மேக்கப் ஒரு துளி மழையால் கலைஞ்சிருச்சேன்னு வருத்தப்படுது....
அடேயப்பா அரசனுக்கு எத்தனை காதலிகள்!
ரைட்டு.. அடுத்த முறை அந்தப் பிள்ள மேக்கப் போடும்போது ஸ்.பை. க்கு ஒரு போனை போட்டுருப்பா!!
Deleteமிஸ்டர் ஸ்பை அன்னிகொரு நாள் உங்களுக்கு போன் பண்ணி மொக்க போட்டுட்டு இருந்தனே அன்னிக்கு தான் போனோம் அந்த முனீஸ்வரன் கோவிலுக்கு
Delete//அந்தப் பொண்ணு மேல உனக்கு பொறாமைய்யா....// ஹி ஹி ஹி
@கோவை ஆவி
Delete//ஸ்.பை. க்கு ஒரு போனை போட்டுருப்பா!!//
ஸ்.பை. க்கு மட்டும் தானா சில அமானுஷ்ய சக்திகளுக்கு வேணாமா
இதிலும்விறுவிறுப்பு
ReplyDeleteவிறுவிறுப்பு, சுறுசுறுப்பு, மொறுமொறுப்பு- இதுதான்
Deleteஎங்கள் சீனுவின் தனிச்சிறப்பு!!
(அட,அட, அட கலக்குறே ஆவி) #ஸெல்ப்_அப்ரிசியேஷன்
இந்த பசங்க இப்டிதான்யா ஏதாது கிண்டல் பண்ணிட்டே இருபாயிங்க.. நீங்க வாங்கையா நாம அடுத்த பதிவர் சந்திப்பு பேசுவோம்..
Delete//அட,அட, அட கலக்குறே ஆவி// ஆவி எப்போதும் பறக்கத் தானே செய்யும்.. இது கொஞ்சம் புது மாதிரியான ஆவியா
Deleteஜஸ்ட் ரிலாக்ஸ்.... அருமை சீனு...
ReplyDeleteஅந்த பிரபல பதிவர் யாருன்னு சொல்லவேயில்லையே :)
சுனாமி - ஏன் இந்த கொலை வெறி! உங்களுக்காவது இளம்பெண்.... நாங்க அனுபவிச்சது வேற மாதிரி - பிறிதொரு சமயத்தில் எனது பக்கத்தில் எழுதுகிறேன்!
வெங்கட் சார் ஆட்டோக்ராப் விரைவில்..:)
Deleteமிக்க நன்றி வெங்கட் சார்.. உங்க டெல்லிவாலா ஏக் கார் வாலா பொண்ண விட இது கொஞ்சம் கம்மி தான்
Delete@கோவை ஆவி வெங்கட் சார்கிட்ட இருந்த போட்டோகிராப் முடிஞ்சதால இனி ஆட்டோகிராப் தான்...
Deleteயார் சார் அந்த மர்ம பதிவர்?
ReplyDeleteமேத்யு கார்மெண்ட்ஸ் - பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி வியர்த்த அனுபவம் உண்டு, அதன் பிறகு அந்தப் பக்கம் போகவே இல்லை.
மிஸ்டர் முனீஸ்வரனை காண என்னை அழைத்து செல்லாதது மிகவும் வன்மையாகக் கண்டிக்கப் படுகிறது.
//உங்களை எல்லாம் ஏண்டி சுனாமி தூக்கல // யார் அவள் என்று சொல்லுங்க, தூக்கிடுவோம் :)
// யார் அவள் என்று சொல்லுங்க, தூக்கிடுவோம் :)//
Deleteநீங்க தூக்கிடுவீங்க ன்னு பயந்து தான் சீனுத் தம்பி உங்ககிட்ட சொல்லாமலே எஸ் ஆயிருக்கு!!
//மேத்யு கார்மெண்ட்ஸ்//வொர்த்தான இடம் ரூபக் ... அங்க இருந்த நெருக்கடிக்கு பயந்து தான் நாங்களும் சீக்கிரம் கிளம்பிட்டோம்
Deleteமிஸ்டர் முனீஸ்வரன் அருள் நமக்கு எந்நாளும் உண்டு மகனே... அது சரி ஆலு டிக்கி எப்போ வரும்
//யார் அவள் என்று சொல்லுங்க, தூக்கிடுவோம் :)// எல்லாம் நம்ம எதிரி முகாம சேர்ந்தவங்க தான்
//எஸ் ஆயிருக்கு!!// ஆமா நான் எஸ் ஆனத ஆவி கண்டுபிடிச்சிருச்சு,... நாளைக்கு X Y Z எல்லாம் ஆவேன் அதையும் ஒழுங்கா கண்டுபிடிச்சிரனும் என்ன :-)))))))
Delete//தூக்கிடுவோம் //
Deleteஇத தூங்கிடுவோம்னு தானே படிக்கோணும் ....! டவுட்டு ...!
சுவாரஸ்யமான தகவல்கள் அண்ணா...
ReplyDeleteஅந்த பிரபல பதிவர நீங்களா தான செட் பண்ணுனீங்க? கரகாட்டக்காரன்ல செந்தில் ஏற்ப்பாடு பண்ணுன மாதிரி... ஹி ஹி...
சென்னையில் இப்படியொரு கோவிலா? ஆச்சர்யமாக உள்ளது.
அரசன் அண்ணாவின் புத்தகங்களை நானும் படித்திருக்கிறேன்...
அழகான தொகுப்பு... நன்றாக உள்ளது அண்ணா...
//அரசன் அண்ணாவின் புத்தகங்களை நானும் படித்திருக்கிறேன்...//
Deleteஒரு வேளை கள்ளக் காதலோ??
ஏன்யா ஏன் ..? நான் ஊர்ல இல்ல ...
Delete//அரசன் அண்ணாவின் புத்தகங்களை நானும் படித்திருக்கிறேன்...// அட அரசன் புத்தகம் எல்லாம் எழுதி இருக்காரா.. யோவ் ராசா சொல்லவே இல்ல.. என்ன புக்குயா எழுதினா...
Deleteத ம: நான்கு
ReplyDeleteஎலேய் தம்பி உனக்கு கெரகம் சரியில்லைன்னு நினைக்கிறேன், சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உன் விருப்பம் ....
Deleteயோவ் ராசா.. என் கட்ச்சிகாரன மிரட்டுறது நல்லா இல்ல சொல்லிபுட்டேன்... என்னய்யா பண்ணினான் என்ன பண்ணினனான் என் கட்சிகாரன்.. நான் ஜெவிக்கனும்னு எனக்கு வோட்டு போட்டான் இது ஒரு குத்தமாயா...
Deleteஎலேய் தம்பி நீ கள்ள வோட்டு கூட போடுறா.. எத்தனை அடக்குமுறை வந்தாலும் நாம கண்டுக்காம போயிட்டே இருப்போம்
சுவாரஸ்யமான தகவல்கள் அருமை... வாழ்த்துக்கள் சீனு...
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html
மிக்க நன்றி டிடி.. இதோ அங்க வாறன்
Deleteஆஹா! யார் அந்தப் பதிவர்? மனதிற்குள் ஒரு யூகம். நீங்கள் சொல்லக்கூடாது என்பதால் எனது யூகத்தையும் சொல்லவில்லை.
ReplyDeleteதகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தன. உண்மையில் ஐயனார் மிரட்டுகிறார்.
அரசனின் காதலிகளை நாங்களும் அறிந்து கொண்டோம். புத்தகங்களைக் காதலிக்கும் அவருக்குப் பாராட்டுக்கள்.
ஹா ஹா ஹா சொல்லிவிடாதீங்க.. ரகசியம் ரகசியமாவே இருக்கட்டும்
Delete//புத்தகங்களைக் காதலிக்கும் அவருக்குப் பாராட்டுக்கள்.// அவர் புத்தகங்களை மட்டுமே காதலிக்கவில்லை என்பதை சொல்ல சங்கம் கடமைப் பட்டுள்ளது
//பாவம் மேக்கப் கலைந்த முகத்துடன் அவளால் எப்படி நைட்ஷிப்டை தொடர முடியும் என்ற பெரும் வருத்தத்துடன் வீட்டிற்கு கிளம்பிய போது //
ReplyDeleteஆபிஸ விட்டு கிளம்பினவன் விறுவிறுன்னு வெளிய போகாம நின்னு நிதானமா ஜொள்ளு விட்டுகிட்டு அப்புறமா சுனாமி தூக்கல.. சுப்பிரமணியம் சாமி தூக்கலேன்னு சொல்லிக்கிட்டு.. சின்னப்புள்ளத்தனமா இருக்கே!!
இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க தல, இந்தாளு இப்படியே தான் பண்ணுறது .. அய்யனார் போட்டோ அஞ்சு போடும் பொது அந்த புள்ள போட்டோ ஒன்னு போட்டிருந்தின்னா அண்ணன் இப்படி கோப படமாட்டார், எங்களுக்கும் கண்ணு கலங்கிருக்கும் ... மாபெரும் பிழையை செய்த சீனுவை காட்டத்துடன் கண்டிக்கிறோம்
Deleteமேக்கப் கலைஞ்ச நிலையில அந்த புள்ளைய தம்பி மட்டும் போட்டோ எடுத்திருந்தா அந்தப்பிள்ள பொம்பள அய்யனாரா மாறி குத்தி கிழிச்சிருக்கும்!!!
Delete// சுனாமி தூக்கல.. சுப்பிரமணியம் சாமி தூக்கலேன்னு சொல்லிக்கிட்டு..// பார்ரா ஆவி ரைமிங்க...
Delete// மாபெரும் பிழையை செய்த சீனுவை காட்டத்துடன் கண்டிக்கிறோம்//
Deleteயோவ் உன் காட்டதுல இருக்கும் வாட்டம் என்னான்னு எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா :-)
அட பக்கிகளா பட்டைய கிளப்புறீங்கய்யா ....
Deleteஆவிக்கு ஸ்பெசல் சபாஷ் ....!
தமிழ்படம் பார்ட்-2 வுக்கு செட் போட்ட அய்யனாரோ?? "அறிவுப் பேசி" அட்டகாசமான புகைப்படங்களைத் தருது.. சூப்பர்..
ReplyDelete//அறிவுப் பேசி// அது என்ன தல அறிவுப் பேசி :-))))))))
Deleteபுக்க கடன் கேக்கப்படாதுன்னு பயபுள்ள என்ன ட்ரிக் பண்ணியிருக்கு பாரு..ம்ம் அடுத்த வாரம் இதுக்காகவே சென்னை வர்றேன். அவரோட காதலிகள்ல ஆளுக்கு ஒண்ணு தூக்கறோம். என்ன ரெடியா சீனு??
ReplyDeleteஇல்ல தல சுஜாதா தன்னிடம் இருக்கும் புத்தங்களை அவரோட மனைவி மாதிரி சொல்வாராம், அதானால என்னிடம் இருக்கும் புத்தகங்களுக்கு காதலிகள் என்று சொன்னேன் ... எப்புடி நம்ம அறிவு ?
Deleteஉம்ம அறிவுக்கு நஸ்ரியாவ விட்டுதான் சுத்திப் போட சொல்லணும்.
Deleteஏற்கனவே நான் போன வாரம் எஸ்கேப் பண்ணிட்டேன் கோவை ஆவி
Delete// அவரோட காதலிகள்ல ஆளுக்கு ஒண்ணு தூக்கறோம். என்ன ரெடியா சீனு// அல்ரெடி ரெண்டு என்கிட்டே தான் இருக்கு.. ஒன்னு சூப்பர் இந்நூனு டூப்பர்
Delete// எப்புடி நம்ம அறிவு // இப்படி நமக்கு நாமே கேள்விகேட்டு பெருமபட்டுகிட்டா தான் உண்டு.. ஆமா தல அறிவுன்னா என்ன ஜாப்பனிசா.. இல்ல சைனீசா
Deleteயோவ் நீ அன்னைக்கு போட்டோ எடுக்கும்போதே மைல்டா டவுட்டு வந்துச்சி ... எதுக்கு பாஸ் இப்படி கோத்து விட்டீர் .. ஆவி அண்ணன் என் காதலிகளை லவட்ட பார்க்கிறார் ...
ReplyDelete//யோவ் நீ அன்னைக்கு போட்டோ எடுக்கும்போதே மைல்டா டவுட்டு வந்துச்சி// ஹே ஹே நாங்கல்லாம் சைலண்ட்டா வயலண்ட் பண்ணுவோம்.. தேவைபட்டா தீவிரவாதியா கூட கூப்பிடுவோம் ... எங்கிட்ட சில அமானுஷ்ய வெப்பன்ஸ் கூட இருக்கு.. இந்தப் பக்கம் தான் அமானுஸ்யமா சுத்திட்டு திரியுது ... :-)))))
Deleteசீனு பதிவு கலக்கல் ...// கோவமான சாமி கேவலமான ஆட்டத்தை // நச்சென்று இருந்துச்சி ... தொடரட்டும்
ReplyDeleteஆலம்பனா நான் உங்கள் அடிமை....
Deleteசீனு என்னால் அந்த பிரபல பதிவர் யார் என்று அனுமானிக்க முடியவில்லை எனவே எனக்கு போனில் சொல்லி விடவும்
ReplyDeleteமுனீஸ்வரன் சிலை பார்க்க பிரமிப்பா இருக்கு அடுத்த முறை செல்லும் போது என்னையும் அழைக்கவும்
அரசனின் காதலிகளை சென்ற வாரம் தான் பார்த்து விட்டு வந்தேன் சீ புத்தக சேமிப்பை பார்த்து வந்தேன் என்று சொல்கிறேன்
ஹா ஹா ஹா அரசன் காதலிகளை நாம காதலிக்கக் கூடாதுன்னு எந்த சட்டமும் இல்லையே சார்
Deleteபதிவரை சந்தித்ததில் இருந்து கடைசி கிளிக் வரை சுவாரஸ்யம் தந்தது ஜஸ்ட் ரிலாக்ஸ்! விரைவில் அந்த பதிவர் யார் என்று அறிந்து கொள்ள தூண்டுகிறது மனம்! நன்றி! சென்னையில் முனீஸ்வரர் கோவிலா? வியப்பும் ஆச்சர்யமும் ஏற்பட்டது!
ReplyDelete//சென்னையில் முனீஸ்வரர் கோவிலா? //
Deleteஅட உங்களுக்கு தெரியாம சென்னையில ஒரு கோவிலா
யோவ் ஆவி எனக்கே மைல்டா ஒரு டவுட் வந்த்ருச்சுயா இது பயணமா.. இல்ல திடங்கொண்டு போராடா ன்னு :-))))))))))
ReplyDeleteகலக்கறீங்க சீனு ...அரசனை பேரரசனாக்கி விட்டீர்கள்
ReplyDeleteஎப்படியெல்லாம் பதிவெழுத மேட்டர் கிடைக்குது பாருங்க உங்களுக்கு! முனீஸ்வரன் படங்கள் photoshop இல்லையே? முதல் படம் மிகவும் அருமை.
ReplyDeleteபுத்தகங்கள் காதலியைப் போன்றவை - ம்ம்ம்ம்.. என்ன அரசன் இப்படி சொல்லிட்டாரு!
அந்த பிரபல பதிவர் யார் என்று சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்களே.......ஐயனார் படங்கள் அருமை......நல்ல காக்டைல் பதிவு !
ReplyDeleteஅய்யானார் படம் awesome....! படம் எடுத்தவருக்கு நல்ல போட்டோ சென்ஸ் ...!
ReplyDeleteஎல்லாரும் சாப்பாட்டு விசயத்தியே எழுதாம கார்மெண்ட்ஸ் பத்தியும் எழுதுங்கப்பா ...!
//வேலையற்ற சோம்பலற்ற வியாழக்கிழமை மாலை//
ReplyDelete//அது ஒரு வேலையற்ற செவ்வாய்க் கிழமை. //
ஏன்யா , வேலைய விட்டுட்டியா ...? என்னாச்சு .....? என்னாச்சு ...?
பதிவு எழுதுன , "ஆகச்சிறந்தன்னு" சொன்ன ,அப்புறம் "பாக்கியா"வான் னென்னு சொன்ன , "படிமம்" ன்ன , "வெகு சிறப்பாக" ன்னு சொன்ன கடசியா விழுமியம்ன்னு சொன்ன....! எங்கயாவது விழுந்துட்டியா ....? என்னாச்சு ...? என்னாச்சு ...?
இந்தப் புத்தகங்கள்
ReplyDeleteஎன் காதலியைப் போன்றது.
பார்த்துக்கொண்டிருக்கும்போது
படிக்கத் தூண்டும்
படித்த பின்
ஏன் படித்தோம்
என்று எண்ணத் தோன்றும்