முடிவில்லா கற்பனையின் ஆரம்பமாய்
நீ வந்து அமர்ந்த போதே
என் இதயம் உணர்ந்து கொண்டது...
முடிவில்லா இந்தப் பயணத்தில் உன்னைவிட
மிகப்பெரிய சந்தோசத்தைத் தரக்கூடிய
வழித்துணை என்று எதுவுமில்லை என்று...
என் வாழ்வின் முடிவில்லா
கற்பனையின் முடிவில்லா ஆரம்பம் நீ
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சென்ட்ரல் ரயில் நிலைய மழை பொழியும் இரவில் தான் உன்னை முதன்முதலில் சந்தித்தேன், அன்று நம்மிருவரிடமும் எவ்விதமான அறிகுறிகளும் தென்பட்டிருகவில்லை, இதோ இன்று உனக்காக இப்படியொரு காதல் கடிதம் எழுதேவேன் என்று.
என்னுடைய பரிணாம வளர்ச்சிகளின் விதிகளின் படி காதல் என்பது முயன்று பார்க்கத் தகாத அல்லது அமானுஷ்யம் நிறைந்த பயம் கொடுக்கக் கூடிய ஒரு உணர்வாய் தான் இருந்தது. நீ என் வாழ்வில் வராமல் போய் இருந்தால், இன்றும் அதே பழைய உணர்வுகளுடனேயே, காதலிப்பவர்களை ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டும், கடற்கரை மணலில் சல்லாபம் செய்யும் காதலர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டும் கடந்து போயிருப்பேன்.
என்னைப் பற்றிய அறிதலிலும் உன்னைப் பற்றிய புரிதலிலும் நம் நட்பு மெதுவாகவும், நம்மையே அறியாமல் நம் காதல் மிக வேகமாயும் வளர்ந்ததை நீ என்னிடம் காதலை சொல்லிய அந்த நொடியிலும் அதை மறுக்க முடியாமல் நான் திணறிய அதே நொடியிலும் அறிந்து கொண்டேன்.
உன்னை காதலியாய் ஏற்றுக் கொள்வதற்கு முன்பு வரை மற்ற பெண்களுடன் செவி கொடுத்து பேசுவது எனக்கு பிடிக்காது, அதிலும் தொலைபேசி வாயிலாக என்றால் அறவே பிடிக்காது. நீ என்னுடன் பழக ஆரம்பித்த நாட்களில் என்னுடன் கைபேசி மூலம் பேசும் பொழுது "என்னடா இந்தப் பொண்ணு சும்மா உயிரை வாங்குறா" என்று நினைத்த நாட்கள் உண்டு. தற்சமயங்களில் நீ பேசாது போன நாட்களில் "பேசாம உயிர எடுக்குறாளே" என்று பொறுமுகின்ற என்னை எண்ணி வியந்ததும் உண்டு. என்னை முழுதாய் மாற்றியவள் நீ. இல்லை இல்லை என்னை முழுதாய் உனக்கே உரியவளாய் மாற்றியவள் நீ.
மழை என்றால் நமக்கு மிகவும் பிடிக்கும், நம்மை நமக்கு அறிமுகம் செய்து வைத்ததே மழை தானே! பிடிக்காமல் போய் விடுமா என்ன!
நடுவெயிலில் அந்தப் பேருந்துப் பயணத்தில் திடீரென்று மேகம் கறுத்து மழை பொழியத் துவங்கும் வேளையில் சட்டென்று என் நினைவில் நிறைந்து மழை போல் எங்கும் நிறைந்து விடுகிறாய்.
உடனடியாய் பேருந்தில் இருந்து இறங்கி கொட்டும் மழையில், மழையின் குளுமை கொடுத்த நடுக்கத்தால் நடுங்கும் உன் கரம் பற்றி அடுத்த பேருந்து நிறுத்தம் வரை நடந்து செல்ல வேண்டும் போல் இருக்கிறது. ஆனாலும் அருகில் நீ இல்லை. ஒன்றை கவனித்தாயா நம் காதலை உன் வீட்டில் கண்டுபிடித்து நம்மை பிரித்த அதே நாளிலும் வானம் கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருந்ததை.
உனக்கும் எனக்குமான தொடர்பு அறுந்து விட்டது. என்றோ ஒருநாள் உன்னிடம் சொன்னேன் ஒருவேளை நம்மால் ஒன்று சேர முடியாவிட்டாலும் நல்ல நண்பனாய் அல்லது சக வாழ்க்கைப் பயணியாகவாவது என்னுடன் நீ வர வேண்டும் என்று. ஆனால் உனக்கும் எனக்குமான தொடர்பு அறுந்து விட்டது. யாராலும் சேர்த்து வைக்க முடியாத அளவிற்கு அந்த உறவு அறுந்துவிட்டது.
அறுந்துவிட்டது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன் சார்லஸ் பாபேஜில் தொடங்கி ஷக்கர்பெர்க் வரையிலான அறிவியல் தெய்வங்கள் இப்புவியில் அவதரிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அறுந்து தான் போயிருக்கும். நம்மைப் பிரித்தவர்களுக்குத் தெரியவில்லை பிரிவு காதலை அதிகரிக்கும் என்று.
நிஜத்தில் நிழலாய் உன்னை அறியாமலேயே உன்னைத் தொடர ஆரம்பித்தேன். வெகுநாட்களாய் கோமாவில் இருந்த உனது பேஸ்புக்கில் திடிரென்று மாற்றப்பட்ட உனது நிழற்படம் பார்த்த மறுநொடி புதிதாய்ப் பிறந்தது போல் உணர்ந்தேன். காரணம் எங்கே காதல் தோல்வி உன்னை வெகுவாய் பாதித்துவிடுமோ என்று பயந்திருந்தேன். மீண்டும் உன்னைக் கண்டதில் ஏதோ கண்டத்தில் இருந்து தப்பிப் பிழைத்தது போல் உணர்ந்தேன்.
மூளை சற்றே வேகமாய் செயல்பட்டது. பேஸ்புக்கில் உன்னுடன் பேசுவதற்காக ஒரு முகமூடி தேவைப்பட்டது. டிஜிட்டல் உதவியுடன் அணிந்து கொண்டேன். நான் மட்டுமே வேகமாய் செயல்பட்டு என்ன பிரயோஜனம், 28 நாட்களுக்கு ஒருமுறை வரும் பவுர்ணமி போல் நிதானமாய் வந்து சென்றாய். இந்தக் கால இடைவெளிகளில் முகமூடி அணிந்த என்னை ஒரு நண்பனாய் உன்னிடம் அறிமுகபடுத்த நான் பட்ட பிரயத்தனங்கள் நம் காதலின் மிக முக்கியமான அத்தியாயங்கள்.
உன் ரயில்நிலையம் கடக்கும் நேரங்களிலும், ஏதேனும் வேலையாய் நீ சார்ந்த இடங்களை நான் கடக்கும் நேரங்களிலும் எப்படியாவது உன்னை சந்தித்துவிட மாட்டோமா என்று எதிர்பார்த்திருப்பேன். உன் உறவினர் இருக்கும் ஏரியாவில் ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்று இருந்த போது நீயும் அவர்களின் உறவினராய் அங்கே வந்திருக்க மாட்டாயா என்று கண்கள் தேடியது.
எங்கு சென்றாலும் உனக்கான என் தேடலின் அந்த நொடியை சந்தித்து விடமாட்டேனா என்று ஏங்கியிருக்கிறேன். நூற்றில் 0.0 முறை கூட அதற்கான வாய்ப்புகள் கிடைத்ததே இல்லை.
ஒவ்வொருமுறை கடற்கரை செல்லும் பொழுதும் ரணமாய் வலிக்கும், கடற்கரை மணலில், முழு நிலவொளியில் காதல் பகிர்ந்து கொண்டிருக்கும் காதலர்களைப் பார்க்கையில் உன் நினைவுகளை என்னைப் படுத்தி எடுக்கும்.
அன்று அந்தப் பிரச்சனையை நான் இன்னும் உறுதியாய்க் கையாண்டிருக்கலாமோ என்று என் மீது கோபம் வரும். என்னுடன் பழகிய எத்தனையோ நண்பர்களின் காதல் கதை எனக்குத் தெரியும், எல்லாருமே என்னிடம் தங்கள் காதல் பற்றி ஏதாவது கூறிக் கொண்டே இருப்பார்கள். என்னால் வாதாடி ஜெயிக்க முடியும் நம் காதலுக்கு வந்த நிலைமை போல் ஒரு வித்தியாசமான நிலைமை உலகில் வேறு எந்த காதலிலும் இல்லை என்று.
பைக் வாங்கிய புதிதில் எனது பைக்கில் அமர்ந்து பயணித்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தாய், ஊர் உலகத்தில் இல்லாத பொல்லாத பிரச்னை நம்மை வந்து சூழ்ந்து கொள்ளும் என்று தவிர்த்துவிட்டேன். இதோ இன்று ஓ.எம்.ஆரில் ஒவ்வொரு காதலியும் தன் காதலன் முதுகில் பசை போல் ஒட்டிக் கொண்டு கட்டியணைத்துச் செல்கையில் நான் மட்டும் இந்த பாழாய்ப் போன பாஸ்கரை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு அலுவலகம் சென்று வருகிறேன்.
இந்த பாஸ்கர் வேறு வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்கிறான், " ஏண்டா நீ எப்போ இப்படி கூட்டிப் போப் போற" என்கிறான் அக்கறையாய். அவனிடம் நான் என்ன சொல்வது? அவனுக்கு நம்மைப் பற்றி என்ன தெரியும்?
ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொரு நொடியும் உன்னையே நினைத்து காதல் வளர்த்து, நான் தயாரித்த முகமூடியின் வாயிலாக என் விஸ்வரூபத்தை உன்னிடம் வெளிபடுத்திவிட்டேன். நான் என்பதை நீ உணர்ந்த நொடி நிச்சயம் ஒரு கவிதை போல் இருந்திருக்கும், அதை எனக்காக ஒரு கவிதையாய் எழுதித் தருவாயா? எனக்குத் தெரியும் நீ நன்றாக கவிதை எழுதுவாய் என்று.
இரண்டு முழு இரவுகள் தூங்காத தூக்க கலக்கம் என்னை தூங்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தது. என்னுடைய கைபேசி எண்ணை உன்னிடம் பேஸ்புக் வழியாக கொடுத்திருந்த நினைவுகள் எனது தூக்கத்தை விரட்டியடித்துக் கொண்டிருந்தது. காரணம் நீ என்னை அழைப்பாயா மாட்டாயா என்ற சிந்தனை என்னை வதைத்துக் கொண்டிருந்தது.
என் மேலான காதல் இன்னும் உன்னில் எந்த அளவிற்கு இருக்கிறது என்று தெரியாது, இன்னும் என் மேல் உனக்கு காதல் இருக்கிறதா என்றும் தெரியாது, ஒன்று மட்டும் தெரியும் நிச்சயம் நீ என்னை அழைப்பாய் என்று.
நான் எதிர்பாராத ஒரு ஆழ்ந்த மதிய நேர உறக்கத்தில் ஒரு புது எண்ணில் இருந்து அந்த அழைப்பு வந்தது. முன்பெல்லாம் எனக்கு ஒரு உணர்வு உண்டு எந்த ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தாலும் அது நீயாக இருக்காதா என்று, இந்த அழைப்பைப் பார்த்ததும் அத்தனை தூக்கத்திலும் என் மனம் முழுமையாய் நம்பியது அழைப்பது நிச்சயம் நீயாகத் தான் இருக்கும் என்று.
எதிர்பார்த்த அந்த அழைப்பை எதிர்பாரா ஒரு பதற்றத்துடன் எடுத்தேன், முழுவதுமாக முழித்திருந்தேன், வியர்திருந்தேன். எடுத்ததுமே சன்னமாக, காற்றோடு காற்றாக, பல மாதங்களாய் நான் கேட்காத குரல். உன் பெயர் சொல்லி என் பெயர் சொன்னதுமே அதிர்ந்தேன். இப்போதே ஒரு பாரின் லொக்கேசனில் உன்னுடன் ஒரு டூயட் பாட வேண்டும் என்ற தோன்றவில்லை, உன்னை கட்டிப்பிடித்து அழவேண்டும் போல் தோன்றியது. அதிர்ந்திருந்தேன், ஆனந்தமாய் அதிர்ந்திருந்தேன்.
உன்னால் பேச முடியவில்லை, இல்லை இல்லை நம்மால் பேச முடியவில்லை. நிச்சயம் அழுதிருப்பாய். அப்புறம் கூப்பிடுகிறேன் என்று கூப்பிட்ட வேகத்தில் துண்டித்து விட்டாய்.
மீண்டும் கூப்பிட்டேன் எடுக்கவில்லை, கூப்பிடுவாய் என்று எதிர்பார்த்தேன் பதில் இல்லை. இத்தனை நாள் என்னுள் இருந்த பயமும் அமானுஸ்யமும் இப்போது உன்னில் கலந்து விட்டதா என்ன? பயம் வேண்டாம், எதிர்த்துப் போராட மாட்டேன் என்று நினைத்துவிடாதே! இப்போது நான் முற்றிலும் புதிதாய்ப் பிறந்த உனது தைரியமான காதலன்.
இதோ இதில் முழுவதுமாய் எழுதி இருக்கிறேன், உன் மீதான என் காதலை முழுவதுமாய் எழுதி இருக்கிறேன் படித்துவிட்டு முடிவு செய். படிக்கும் பொழுது இதில் ஏதோ ஒரு குறை இருப்பது போல் உணர்ந்தால் அது மிகச் சரியே.
இது சற்றே குறைபட்ட காதல் கடிதம் தான். முதல் காதல் கடிதத்தையே நிறைவாய் எழுதிவிட்டால் பின்னொருநாள் மற்றொரு காதல் கடிதம் எழுத எனக்குத் தோணாது. என் வாழ்நாள் முழுவதும் உனக்கான காதல் கடிதங்களை எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்காக எல்லை இல்லா காதலில் முழுமை பெறா ஒரு காதல் கடிதம் எழுதுவது எனக்கு மகிழ்சியே...!
இப்படிக்கு
சீனு
பின் குறிப்பு : சற்றே அதீத கற்பனை கலந்த கடிதம்
பின் குறிப்பில் மற்றொரு குறிப்பு : இதில் இருக்கும் உண்மைத் தன்மைக்கும், நம்பகத்தன்மைக்கும் சங்கம் பொறுப்பு ஏற்காது :-)
Tweet |
nalla kaditham...
ReplyDeletekavithai..
மிக்க நன்றி சகோ
Deleteகாதல் கடிதம், உங்கள் மனதின் உணர்வுகளை புரிய வைக்கிறது எங்களுக்கும் !!!
ReplyDeleteஹா ஹா ஹா மிக்க நன்றி மனோ
Deleteநல்ல கடிதம் சீனு......
ReplyDeleteபாராட்டுகள்.
ஹா ஹா ஹா மிக்க நன்றி :-)
Deleteமுதல் காதல் கடிதத்தையே நிறைவாய் எழுதிவிட்டால் பின்னொருநாள் மற்றொரு காதல் கடிதம் எழுத எனக்குத் தோணாது.
ReplyDelete>>
இந்த குறையை தீர்க்கதான் சீனு காதல் கடிதம் போட்டி வெச்சிருக்கார்.
ச்ச ச்ச அதெல்லாம் முடியாது... நானே தான் எழுதுவேன்
Deleteஅறிவோடு உணர்வுகளும் போட்டி போட, மெல்லிய உணர்வுகள் வெல்ல காதல் வழிந்தோடும் கவிதையாய் மிளிர்கிறது கடிதம்.
ReplyDeleteஹா ஹா ஹா மிக்க நன்றி முரளி சார்.. எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்.. என்ன பண்றது கவிதைன்ற பேர்ல நாலு வரியா மடக்கி போட வேண்டி இருக்கு...:-)
Deleteமறுபடியும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபோட்டி முடிவு எப்போது...?
போட்டி கடந்த வாரமே முடிவடைந்தது சார்
Deleteகாதல் போதை தெளியலையா ....அவர் கேட்பது முடிவுகள் வெளியாவது எப்பொழுது என்று
Delete//காதல் போதை தெளியலையா// ஹா ஹா ஹா
Delete//போட்டி முடிவு // இது வந்து வினையெச்சம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் ஹா ஹா ஹா ஷப்பா... மிடில
அறிவிப்பு நாளை வெளிவரும் :-)
முடிவுகள் சம்பந்தமான அறிவிப்பா? இல்லை முடிவுகளா?
Deleteஇப்போது நான் முற்றிலும் புதிதாய்ப் பிறந்த உனது தைரியமான காதலன். //வாழ்த்துக்கள்
ReplyDeleteகவியாழி, கழகக் கண்மணி நீங்க இல்லாம கல்யாணமா :-) நோ நெவர்... ஸ்டார்ட் மியூசிக்... சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
Deleteமீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றி.... கடிதம் அருமை...
ReplyDelete//எதிர்பார்த்த அந்த அழைப்பை எதிர்பாரா ஒரு பதற்றத்துடன் எடுத்தேன்//
ரசித்த வரி....
ஹா ஹா ஹா மிக்க நன்றி சார்
Delete// நம் காதலுக்கு வந்த நிலைமை போல் ஒரு வித்தியாசமான நிலைமை உலகில் வேறு எந்த காதலிலும் இல்லை என்று//
ReplyDeleteஒவ்வொருவருக்கும் ஏற்படும் உணர்வு!
நீங்க கடிதம் எழுதல.. அத நானும் மறக்கல... விரைவில் உங்களுக்கு கும்மி சார்பாக கவுரவிக்கபடும் :-)
Deleteசீனுவின் விறுவிறுப்பான துப்பறியும் நாவலைப் போல காதல் கடிதமும் விறுவிறுப்பு நிறைந்து இருக்கிறது .............காதல் கடித போட்டி என்றதும் எங்களின் எழுத்தை மீட்க ஒரு சந்தர்பம் என்று நினைத்து எழுதினோம் ஆனால் இப்பொழுதான் தெரிகிறது உங்கள் காதலை மீட்கத்தான் இந்த போட்டி என்று ...............பரவாயில்லை சீனு எப்படியாவது ஜெயிதுவிடுங்கள் போட்டியில் (காதலில் ) வாழ்த்துக்கள்
ReplyDeleteஹா ஹா ஹா இந்த பதிவ முன்னாடியே எழுதிட்டேன், பரிசுப் போட்டி முடிஞ்சதும் வெளியிட்டா நல்லா இருக்கும்ன்னு சொன்னாதால (REVERT) தூக்கிட்டேன்...
Deleteநேத்து நைட் மீண்டும் பதிவு பன்ன எடிட் பண்ணினப்போ பின்குறிப்பு மிஸ் ஆயிருச்சு, தூக்க கலக்கத்துல நான் கவனிக்கல... இப்ப சேத்தாச்சு சேத்தாச்சு... :-)
// எப்படியாவது ஜெயிதுவிடுங்கள் போட்டியில் (காதலில் ) வாழ்த்துக்கள்// உங்க வாழ்த்து உண்மையாகனும்ன்றதுகாகவே ஒரு பொண்ண தேடி கண்டுபிடிக்கிறேன்.. லவ் பண்றேன்... :-)
//சீனுவின் விறுவிறுப்பான துப்பறியும் நாவலைப் போல // நல்ல வேல நியாபகபடுத்தினீங்க.. மொதல்ல அத தூசி தட்டனும்... வர வர நா ஓவர் சோம்பேறி ஆயிட்டேன்க்கா:-)
Deleteவாழ்த்து உண்மையாகனும்ன்றதுகாகவே ஒரு பொண்ண தேடி கண்டுபிடிக்கிறேன்.. லவ் பண்றேன்... :-)
Deleteஅப்படினா இப்போ இருக்குற உங்க லவ்வர் கோச்சிக்க மாட்டாங்களா? :-)
//பின் குறிப்பு : சற்றே அதீத கற்பனை கலந்த கடிதம் // நம்ப முடியலையே
ReplyDeleteக்கும் பின்குறிப்ப போடாட்டா மட்டும் நம்பவா போறீங்க :-)
Deleteகுறைபட்ட காதல் கடிதத்தை நிறைக்க வருவாங்க... இல்ல வந்துட்டாங்களா ?
ReplyDeleteபின் குறிப்பு : சற்றே அதீத கற்பனை கலந்த கடிதம்//
ReplyDeleteMeans, கற்பனை ‘கலந்த’ (உண்மைக்) கடிதம் :)
இது ஏற்கெனவே படித்த மாதிரியே இருக்கிறது சீனு!
ReplyDeleteஇனி நானும் இப்படி ஒரு கடிதம் எழுதலாமோ/ஹீஈஈஈஈஈஈஈஈஈ!
ReplyDeleteகவிதயெல்லாம் எழுதி கலங்கடிக்குற சீனு ..! இப்டித்தான் காதல் வந்தா நீ நீயா இருக்கமாட்ட ...!
ReplyDelete//"பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சென்ட்ரல்"
அமானுஷ்யம் ...பரிணாம வளர்ச்சி .....//
அடிக்கடி பய(ண)க் கட்டுர , வரலாற்றுக் கட்டுற , துப்பறியிற கதை எல்லாம் எழுதி எழுதி , கடசில காதல் கடிதமும் அந்த ரேஞ்சுக்கே எழுதறியே தம்பு ...! பொண்ணு பயப்புடாம இருந்தா சரி ...!
//ஒன்றை கவனித்தாயா நம் காதலை உன் வீட்டில் கண்டுபிடித்து நம்மை பிரித்த அதே நாளிலும் வானம் கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருந்ததை.////
ReplyDeleteஅட அட கலக்கல் பாஸ்
very good love letter :)
ReplyDelete