18 Feb 2013

எக்ஸாம் ஹால் - சிறுகதை


டல் முழுவதுமாக போர்வைக்குள் புதைந்திருந்தது. கையை மட்டும் வெளியே நீட்டி மொபைலை தேடிக் கொண்டிருந்தேன்கடுமையான காய்ச்சல், ஆனால் அது காய்ச்சலா என்பதை எனது அம்மா தொட்டுப் பார்த்து சொன்னால் தான் அதற்குரிய மதிப்பு கிடைக்கும்சுத்தமாக முடியவில்லை, உடல் வலி, அசையக் கூட முடியவில்லை. வலது கை மொபைலை தேடிக் கொண்டிருந்த வேளையில் இடது பக்க மூளை என்னவெல்லாமோ சிந்தித்துக் கொண்டிருந்தது

த்தாவது முடிக்கும் வரை பெயில் என்ற சொல் ஒரு கெட்ட வார்த்தை போன்றது. சிறைச் சாலை போன்ற பள்ளியில் இருந்து விடுதலை பெற்று அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய பொழுது பெயில் என்பது நாடி நரம்பு ரத்தம் சதை இன்னும் என்னென்ன அறிவியல் கூறுகள் உண்டோ அங்கெல்லாம் பரவி விரவி விட்டது. முதல் முறை பெயிலான பொழுது வலித்தது அப்புறம் பெயில் மட்டுமே பாஸ் மார்க் வாங்கிக் கொண்டிருந்தது.  


எம்.சி., நான்காவது செமஸ்டருக்கான மாதிரித் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது, இன்று நான்காம் நாள் தேர்வு. இளநிலை பயிலும் பொழுதாவது கவுரவ மதிப்பெண்கள் பெற்று பெயிலாவேன், இங்கோ ஒற்றை இலக்கத்தை தாண்டினாலே எதோ ஸ்டேட் பர்ஸ்ட் எடுத்தது போல் திருஷ்டி போடுகிறார்கள் எனது ஆருயிர்த் தோழர்கள். என்ன தான் கேவலமாக பெயில் ஆனாலும் தேர்வுக்கு ஆப்சென்ட் ஆனதே கிடையாதுமாதிரித் தேர்வு என்றாலே அது பெயிலாகி பெயிலாகி விளையாடும் விளையாட்டு.அல்லது மூன்று மணி நேர ஆழ் நிலை தியானத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் தியானக் கூடம்.

தேர்வறையில் பேசக்கூடாது, என்னால் பேசாமல் இருக்க முடியாது. கண்களால் ஜாடை காட்டுவது, சைட் அடிப்பது, பென்சில் கடன் வாங்குவது, பதில் பரிமாறுவது என்று அந்த சூழலே ஏகாந்தமாக இருக்கும், கடவுள் போன்றது. அந்த உணர்வை அனுபவிக்க மட்டுமே முடியும், விளக்க முடியாது.

பொதுவாக தேர்வுக்கு பேனா மட்டும் தான் எடுத்துச் செல்வேன், ஸ்கேல் பென்சில் எல்லாமே கடன் தான், முதல் நாள் தேர்வில் அருகில் இருந்த பி. பையனிடம் ஸ்கேல் கடன் வாங்கும் பொழுதே சொல்லி விட்டான் "அண்ணா நா எல்லா எக்ஸாம்க்கும் வரமாட்டேன், நாளையில இருந்து ஸ்கேல் கொண்டு வந்த்ருங்க" என்று

பார்பதற்கு மிகவும் அப்பாவியாக இருப்பான்பரிட்சையில் அவன் பேப்பரை தவிர வேறு எங்கும் பார்க்க மாட்டான்என்னிடம் ஸ்கேல் கொடுபதற்கு கூட பயப்படுவான். சமயங்களில் அவனை நினைத்து சிரித்துக் கொண்டிருப்பேன்அவனும் அவனது நண்பனும் பெயிலாகி விடக் கூடாது என்பதற்காக எக்ஸாமை கட் அடித்து விடுவார்கள் என்று கூறினான். காரணம் எங்கள் கல்லூரியில் ரேங்க் கார்ட் என்ற கொடுமையெல்லாம் உண்டு

வன் சொன்னது போலவே இரண்டாம் நாள் தேர்வுக்கு வரவில்லை. கையாலேயே ஸ்கேல் இல்லாமல் கோடு போட்டு தேர்வெழுதினேன். மூன்றாம் நாள் அவன் உற்சாகமாக தேர்வெழுதிக் கொண்டிருந்தான், நன்றாக படித்திருப்பான் போல. நானோ வழக்கம் போல் என் வகுப்புத் தோழர்களுடன் கண்களாலேயே பேசிக் கொண்டிருந்தேன்

க்ஸாம் ஹால் பற்றிய சிந்தனை கலைந்த பொழுது கை இன்னும் மொபைல் போனை தேடிக் கொண்டிருந்தது. தூங்கும் முன் மொபைலை எங்கே எந்தப் பக்கம் வைத்தேன் என்று நினைவில்லை. ஹெ ச் ஓடி யிடம் லீவ் கேட்க வேண்டும். எப்படி கேட்கப் போகின்றேன் என்று தெரியவில்லை, கண்டிப்பாக தர மாட்டார்கள். நான் படித்துக் கொண்டுள்ளது அந்தமான் சிறைக்கு ஒப்பான பொறியியல் கல்லூரி. நிர்வாகத்தைப் பொறுத்தவரை கண்டிப்பு என்பதன் மறுபெயர் அடக்குமுறை. அம்மாவை விட்டு லீவ் கேட்க வேண்டும். அதை நினைக்கும் பொழுது வலியைத் தாண்டி எரிச்சல் தான் மேலிட்டது

போர்வைக்குள் இருந்து வெளிப்பட்டு நிமிரும் பொழுது நடு முதுகில் வலி கடுமையாய் இருந்தது. மழையில் ஆனந்த நடனம் இட்டது ஒரு குத்தமா, மொபைல் கையில் சிக்கியதும் மீண்டும் தொம் என்று பாயில் விழுந்தேன், திறக்க முடியாத கண்களை திறக்கும் பொழுது மொபைலின் வெளிச்சம் கண்களைக் குறுக்கியது. சுந்தர் மணி தினேஷ் நந்தா என்று பலரும் மெசேஜ் மற்றும் மிஸ்ட் கால்களால் என் தூக்கத்தைக் கலைக்க முற்பட்டு தோற்றுப் போயிருந்தனர். வழக்கமாக சுந்தர் மட்டும் ஆல் தி பெஸ்ட் மெஸேஜ் அனுப்புவான், வழக்கத்திற்கு மாறாக பல மெசேஜ்கள் குவிந்திருந்தன

சுந்தர் அனுப்பிய மெசேஜை முதலில் ஓபன் செய்தேன் "ஸ்ரீனி டுடே காலேஜ் லீவா,  தின்க் டுடே காலேஜ் இஸ் லீவ் டா". நான் லீவ் போடப் போவதை நானே சற்று முன்பு தான் முடிவு செய்தேன் அதற்குள் என்ன இவன் "டுடே காலேஜ் லீவா" என்று கேட்கிறான். அவசரமாக மீண்டும் ஒருமுறை படிக்கும் பொழுது தான் " தின்க் டுடே காலேஜ் இஸ் லீவ் டா" என்ற வார்த்தை அழுத்தமாக நெஞ்சில் பதிந்தது. காலேஜ் லீவ் என்றதும் மொத்த காய்ச்சலும் சரியாகி திடீர் உற்சாகம் நெஞ்சில் பரவியது போன்ற உணர்வு. மற்றவர்களின் மெசேஜும் அதையே சொல்லியது. மீண்டும் சுந்தரிடம் இருந்து மெசேஜ் " கன்பார்ம்ட் வித் ஹெ ச் ஓடிடுடே காலேஜ் இஸ் லீவ்". 
   
ழைகால லீவ் தவிர்த்து மற்ற நேரங்களில் திடீர் விடுமுறை அறிவிப்பு மரணத்திற்காக இல்லாமல் வேறு எதற்காக இருக்கப் போகிறது. ஏதோ ஒரு உற்சாகத்தில் சுந்தருக்கு போனே செய்தேன், ஒரு விஷயத்தை பற்றி சொல்வதில் அல்லது கேட்பதில் அவனுக்கு இருக்கும் ஆர்வம் எங்கள் வகுப்பில் வேறு யாருக்கும் கிடையாது. எந்த செய்தி சொல்ல வருகிறானோ அதை அதற்கே உரிய டெம்போவில் சொல்வான்

"டேய் ஸ்ரீனி என்னடா இப்படி ஆய்ருச்சு" என்றைக்குமே சொல்ல வருவதை உடனே சொல்லிவிட்டால் அவனுக்கே உரிய தனித்துவம் என்னவாவது. முதலில் அவன் உணர்வுகளைக் கொட்டிவிட்டு பின்பு தான் விசயத்திற்கு வருவான்

"ண்டா என்னாச்சு", முனகலுடன் கேட்டேன்

"தெரியாத மாதிரியே கேக்காத, ஐயோ பாவம் டா அந்தப் பையன்", இதைக் கேட்டதும் தூக்கம் முழுவதுமாக தெளிந்துவிட்டது. நான் நார்மலாக இருந்திருந்தால் என்னிடம் இந்நேரம் அர்ச்சனை வாங்கியிருப்பான்.           

"ல்லடா...நம்ம காலேஜ் பி பையன் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டானாம், காலேஜ் பஸ்ல போகும் போது ஆக்சிடெண்ட், காலேஜ்ல பெரிய பிரச்சனன்னு நினைக்றேன், அதான் இன்னிக்கு லீவ் விட்டுடாங்க, எக்ஸாம் கிடையாது", ஆக்சிடெண்ட் பற்றிய அதிகபடியான விபரம் அவனுக்கும் தெரியவில்லை. என்ன மனநிலைக்கு நான் செல்வது.

ரு உயிர், அந்த உயிர் சார்ந்த குடும்பம், அவர்களது நிலை, இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கியவர்கள் மனநிலை, உடன் பிறந்தவர்கள் உண்டா?, ஒரே பிள்ளையா?, என்று பல சிந்தனைகள் நொடிப் பொழுதில் வந்து சென்றது. ஒரு நிமிடம் நானும் இறந்து பிறந்தது போல் இருந்தது. சுந்தருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பலரும் கால் வெயிட்டிங்கில் வந்து சென்றார்கள், மணி தினேஷ் நந்தா ராகுல் என்று ஒவ்வொருவரிடமும் கேட்டுப் பார்த்தேன், என்ன நடந்தது என்று ஒருவருக்கும் தெரியவில்லை.  

ன்னுடைய குரல் கேட்டு என்னருகில் வந்த அம்மா, குறிப்புணர்ந்து என் கழுத்தைத் தொட்டுப் பார்த்து " என்னல இப்டி தீயா கொதிக்கி, மழைல நனையாதண்ணா எங்க கேக்க, ப்போ இவனுங்க லீவு வேற கொடுத்துத் தொலைய மாட்டானுங்களே"  என்று கத்திக் கொண்டே மீண்டும் அடுபாங்கரை நோக்கி நகர்ந்தார், ஆச்சரியம் நான் மனதில் நினைத்த அத்தனையையும் வார்த்தையாக்க அம்மாவால் மட்டுமே முடியும். இதே நேரத்தில் தன் மகனை இழந்த அந்தத் தாயின் நிலைமையையும் யோசித்துப் பார்த்தேன். நம்முடைய உயிர் நமக்கானதாக மட்டும் இருந்திருந்தால் ஆடுமாடாக இவ்வுலக வாழ்க்கையை கழித்திருப்போம். உறவுகள் சார்ந்த வாழ்கையில் உயிரிழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. அதிலும் வாழவேண்டிய வயதில் மரணம் என்பது எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை

ரணம் பற்றிய எனது வேதாந்தங்களை கலைத்தான் ஜோதி. போனை அட்டென் செய்தேன், அவன் குரலிலும் வருத்தம், ஆனாலும் விசயத்தை கண்டுபிடிப்பதில் நிபுணன் தான்


"ரெட்ஹில்ல்ஸ் பக்கம் ட்ராபிக்ல ரொம்ப நேரமா பஸ் நின்னுன்னு இருந்ருக்கு, ஏன் நிக்குதுன்னு ஜன்னல் வழியா எட்டி பாத்ருக்கான், பின்னாடி வந்த லாரிகாரன் தலைய நசுக்கிட்டான்......................" இன்னும் ரொம்ப விளக்கமாக காட்சியை விளக்கினான் என்னால் இதற்கு மேல் விவரிப்பதற்கு மனதிடம் இல்லை காரணம் அவன் கூறிய நொடி என் தலையும் நசுங்கியது போல் உணர்ந்தேன்திடம் இருந்தால் அப்படியொரு காட்சியை நீங்களே உங்கள் கண்முன் விரித்துக் கொள்ளுங்கள்

விபத்து நடந்ததும் காலேஜ் பஸ் டிரைவர் பயந்து ஓடியதால் என்ன செய்வதென்று தெரியமால் தவித்துள்ளனர். உதவிக்கு எவரும் வர மறுக்க துடித்துக் கொண்டிருந்த அந்த உயிரை பெரிய போராட்டத்திற்கு பின் ஆட்டோவில் ஏற்றி  மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர், விதி வலியது, வழியிலேயே அவனது விதியை முடித்துக் கொண்டு அழைத்துச் சென்று விட்டது

"க்சிடெண்ட்ல ஒரு பையன் இறந்துட்டான், இன்னிக்கு காலேஜ் லீவு" என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் படுத்துவிட்டேன். மதிய செய்தி மூலம் விபத்து குறித்து முழு விபரம் அறிந்து கொண்ட அம்மா வழக்கம் போல் புலம்பிக் கொண்டிருந்தார்நேரம் ஆக ஆக காய்ச்சல் அதிகரித்ததே தவிர குறையவில்லைநடக்க முடியாமல் மருத்துவமனை நடந்து சென்றேன். ஒரு ஊசி போட்டதன் பின் தான் அம்மாவுக்கு மனதில் நிம்மதி வந்தது

ரு மரணத்திற்குப் பின் நான்காவது நாள் தேர்வு தொடங்கிய பொழுது, என் அருகில் அமர வேண்டியவன் இல்லை, பின்னால் அவன் நண்பனைப் பார்த்தேன் அவனும் வரவில்லைதேர்வறையே சோகமாய் இருந்தது, நானும் உற்சாகம் இழந்து காணப்பட்டேன். வழக்கமாய் எழுதும் இரண்டு பக்கம் கூட இம்முறை எழுதவில்லை. வழக்கம் போல் செல்வா குறிப்பிட்ட அந்தப் பெண்ணை ஜாடை காட்டி கிண்டல் அடித்துக் கொண்டிருந்தான். ஏனோ தெரியவில்லை அந்த மரணம் என்னை அறியாமலேயே என்னை வெகுவாய் பாதித்திருந்தது. தேர்விலும் தேர்வு முடிந்தும் அனைவரும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். ஒருவேளை அது என்னருகில் இருப்பவனாக இருக்குமோ என்றெல்லாம் எண்ணி அவ்வாறெல்லாம் இருக்கக் கூடாது என்றெல்லாம் வேண்டிக்கொண்டேன்

டைசி தேர்வு, இன்றும் அவன் வரவில்லை, மாறாக பின்னால் அவன் நண்பன் இருந்தான்

"க்ஸாம்க்கு படிச்சிட்டியா" என்றேன், எந்தவித பாவனையும் இல்லாமல் தேமே என்று முகத்தை வைத்துக் கொண்டு படித்துவிட்டேன் என்று சொல்லும் விதமாக தலையை ஆட்டினேன். இப்படி யாரவது பேசினால் மீண்டும் அவர்களிடம் பேசப் பிடிக்காது. இருந்தும் தேர்வு முடிந்ததும் அவனிடம் சென்று என் அருகில் அமர்ந்திருப்பவன் ஏன் வரவில்லை என்று கேட்டேன்

"ண்ணா அவன்தான்னா ஆக்சிடெண்ட்ல இறந்துட்டான்", எந்த வார்த்தைகளை நான் கேட்கக் கூடாது என்று நினைத்தேனோ அவற்றை கண்ணீரால் உதிர்த்துவிட்டு வேகமாய் நடக்கத் தொடங்கிவிட்டான்


29 comments:

  1. Replies
    1. நிச்சயமா நந்தா... மறக்க முடியாத நினைவு

      Delete
  2. கலங்க வைத்தக் கதை.
    நடை மிக சரளமாக இருக்கிறது. உங்கள் பிற கதைகளையும் படிக்கத் தோன்றுகிறது.
    விபத்து ஏற்பட்டால் தேர்வை நிறுத்துவாங்களா என்ன?

    ReplyDelete
    Replies
    1. யுனிவெர்சிட்டி தேர்வென்றால் விடுமுறை தர மாட்டார்கள் சார், மாதிரித் தேர்வு தானே, அதான் விடுமுறை கொடுத்துவிட்டார்கள். மிக்க நன்றி சார் தங்கள் வருகைக்கு

      Delete
  3. sako..!

    kathaithaane....
    unmaiyillaiye....

    kalanga seythathu sako.....

    ReplyDelete
    Replies
    1. கதை என்று சொல்லி பொய் சொல்ல விரும்பவில்லை சகோ

      Delete
  4. அற்புதமாக வாழ வேண்டிய ஆன்மா அற்பமாய் முடிந்துபோனது வருத்தமாய் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வாழ வேண்டிய / வாழ்ந்திருக்க வேண்டிய ஆன்மா

      Delete
  5. மரணம் ஏற்படுத்தும் மனவலிகளை, எண்ணச்சிதறல்களை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் சீனு. நிஜமாக நடந்த சம்பவமென்று மட்டும் சொல்லி விடாதீர்கள். இன்னும் வருத்தமாகி விடும்.

    ReplyDelete
    Replies
    1. மூன்று வருடத்திற்கு முன் நடந்த சம்பவம் ஸ்ரீராம் சார்...

      Delete
  6. கதையாகவே இருக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. கதையாக மட்டுமே மனதில் கொள்ளுங்கள் DD சார்

      Delete
  7. உருக்கமான கதை....

    //நிர்வாகத்தைப் பொறுத்தவரை கண்டிப்பு என்பதன் மறுபெயர் அடக்குமுறை.//

    "நிர்வாகத்தைப் பொறுத்தவரை கண்டிப்பு என்பது அடக்குமுறையின் மறுபெயர்" என்றிருந்தால் நன்றாக இருக்கும்.

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா, நீங்கள் குறிப்பிட்ட வாக்கிய மாற்றம் கூட இன்னும் தெளிவாக உள்ளது

      Delete
  8. கலக்கிட்டீங்க சீனு. கதைன்னு நம்ப முடியல.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி முரளி சார், அது கதையல்ல நிஜம் தான் சார்

      Delete
  9. கதையாகவே இருக்கட்டும்.கடவுளே மாணவர்களையும் மற்ற உயிர்களையும் விபத்திலிருந்து காப்பாற்று.

    ReplyDelete
    Replies
    1. கதையாகவே இருந்துவிட்டால் பிரச்னை இல்லை தான் அம்மா

      Delete
  10. //முதல் முறைபெயிலான பொழுது வலித்தது அப்புறம் பெயில் மட்டுமே
    பாஸ் மார்க் வாங்கிக்கொண்டிருந்தது. // வலி பழகிடும் ..

    //அவனும் அவனது நண்பனும் பெயிலாகி விடக் கூடாதுஎன்பதற்காக எக்ஸாமை கட் அடித்து விடுவார்கள் என்று கூறினான். // நானும் ....

    //காலேஜ் லீவ் என்றதும் மொத்த காய்ச்சலும் சரியாகி திடீர்உற்சாகம் நெஞ்சில் பரவியது போன்ற உணர்வு.// சமயத்துல ஆபிஸ் லீவுனா கூட ...

    //மழைகால லீவ் தவிர்த்து மற்ற நேரங்களில் திடீர் விடுமுறை அறிவிப்பு மரணத்திற்காக இல்லாமல் வேறு எதற்காக இருக்கப் போகிறது// கண்டிப்பா

    // உறவுகள் சார்ந்த வாழ்கையில் உயிரிழப்புஎன்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. // மொத்த பதிவின் உச்சம் .சபாஷ்.

    ReplyDelete
  11. //ஒரு உயிர், அந்த உயிர் சார்ந்த குடும்பம், அவர்களது நிலை, இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கியவர்கள் மனநிலை, உடன் பிறந்தவர்கள் உண்டா?, ஒரே பிள்ளையா?, என்று பல சிந்தனைகள் நொடிப் பொழுதில் வந்து சென்றது. ஒரு நிமிடம் நானும் இறந்து பிறந்தது போல் இருந்தது.//

    எனக்கும் இப்படியெல்லாம் தோன்றும் சீனு. மனதை நெகிழ வைத்துவிட்டது இந்தப் பதிவு. நீண்ட நாட்கள் மனதை அலைகழிக்கும் போல இருக்கிறது. எத்தனை சமதானம் சொன்னாலும் ஏற்க முடியாத இழப்பு.

    ReplyDelete
  12. //ஒரு உயிர், அந்த உயிர் சார்ந்த குடும்பம், அவர்களது நிலை, இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கியவர்கள் மனநிலை, உடன் பிறந்தவர்கள் உண்டா?, ஒரே பிள்ளையா?, என்று பல சிந்தனைகள் நொடிப் பொழுதில் வந்து சென்றது. ஒரு நிமிடம் நானும் இறந்து பிறந்தது போல் இருந்தது.//

    எனக்கும் இப்படியெல்லாம் தோன்றும் சீனு. மனதை நெகிழ வைத்துவிட்டது இந்தப் பதிவு. நீண்ட நாட்கள் மனதை அலைகழிக்கும் போல இருக்கிறது. எத்தனை சமதானம் சொன்னாலும் ஏற்க முடியாத இழப்பு.

    ReplyDelete
  13. //நம்முடைய உயிர் நமக்கானதாக மட்டும் இருந்திருந்தால் ஆடுமாடாக இவ்வுலக வாழ்க்கையை கழித்திருப்போம். உறவுகள் சார்ந்த வாழ்கையில் உயிரிழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. // சத்தியமான வார்த்தை.. நல்ல நடை & நல்ல கதை.. அம்மாவின் பேச்சுத்தமிழ் மற்ற இடங்களிலும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.. வாழ்த்துக்கள் நண்பா..
    விபத்து/ஆக்ஸிடண்ட் - நாம் ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு போகும் இந்த சொல், சொல்லாக இல்லாமல் செயலாக ஒரு வாழ்க்கையில் நடந்தால்? அதை நினைக்கவே மனம் கலங்குகிறது.. தினமும், ஒவ்வொரு நிமிடமும் என்னை பயமுறுத்தும் ஒரே விசயம் விபத்து.. சாலையை நம்மோடு பகிர்ந்துகொள்பவன் நம் உயிரின் பாதுகாப்பிலும் சரி பங்கு வகிக்கிறான்.. நாம் மட்டும் சரியாக இருந்தால் போதாது, எதிரில் வருபவனும் ஒழுங்காக வர வேண்டும்.. அதே தான் நமக்கும்.. நாம் ஒழுங்காய் சாலையில் போவது, நமக்கு மட்டும் அல்ல, சாலையில் செல்லும் பிறரின் பாதுகாப்புக்கும் தான். சாலையை முறையாக பயன்படுத்துவோம், சாலை விதிகளை மதிப்போம்.. விபத்துக்கள் இல்லாத உலகம் அமைய இறைவனை வேண்டுவோம்..

    ReplyDelete
  14. உறவுகள் சார்ந்த வாழ்கையில் உயிரிழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. அதிலும் வாழவேண்டிய வயதில் மரணம் வேண்டாமே ..! கதையிலும் கற்பனைகளிலும் மட்டுமே இருக்கட்டும் ... நொந்து போக வைத்த எக்ஸாம் ஹால் - சிறுகதை ..

    ReplyDelete
  15. கலங்க வைத்த கதை! சிறப்பான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  16. டச்சிங் கதை பாஸ்.

    ReplyDelete
  17. மீண்டும் பள்ளி காலத்திற்கு சென்று வந்தது போல இருந்தது நண்பரே....நல்ல பதிவு, தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. நெஞ்சு கனக்கிறது சீனு.கதையை ஒரே டெம்போவில் கடைசி வரை எழுதுவது அசாத்தியமான ஓன்று.ஆனால் இதில் ஆரம்பம் முதல் முடிவுவரை கலங்கிய நெஞ்சோடு படிக்க வைத்து விட்டாய்.கடைசி பத்தி நெகிழ்வு

    ReplyDelete
  19. பெரும் சுமை ஏறுகிறது கதையை முடித்த பின்...

    ReplyDelete