திருப்பூர் நான் நினைத்ததை விட சற்றே பெரிய ஊர்.
நான் அழைத்த ஒவ்வொரு
பிரபல பதிவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி தப்பிக்க கடற்கரை தள ஓனர் விஜனுடனான எங்களது திருப்பூர் பயணம் தொடகியது. சென்னையில்
எங்களுடன் சேர்ந்து பயணிக்கத் தொடங்கிய மழை திருப்பூர் வரையிலும் விடமால் தொடர்ந்து கொண்டே இருந்தது. திருப்பூர் சென்று சேர்ந்ததும் மழையும் விட்டபாடில்லை தொழிற்களம் நிர்வாக இயக்குனர் அருணும் வந்தபாடில்லை. அருணிடம் நான் வந்து சேர்ந்த தகவலை பசியுடன் தெரிவிக்க இதோ பத்து நிமிடத்தில் வருகிறேன் என்று சொன்னவர் சரியாக (மூன்று * பத்து) =? நிமிடத்தில் வந்து நான் தமிழன் என்று பெருமையுடன் பறை சாற்றினார். இருந்தும்
பசிக்கு ருசியான சப்பாத்தி வாங்கிக் கொடுத்து
உபசரிபதிலும் தான் தமிழன் என்பதை மீண்டும் ஒருமுறை
இந்த உலகிற்கு நிருபித்தார்.
அதன் பின் அவரது பைக்கில் நாங்கள் ட்ரிப்ள்ஸ் சென்றது பொறுக்காமல், லக்ஸ்மி ஸ்டார்ட் ஆக மறுத்தது. கடைசி வரை லக்ஸ்மி ஸ்டார்ட் ஆகவில்லை என்பதால் ஆட்டோ பிடித்து சென்றோம் என்பது எல்லாம் பதிவிற்கு சற்றும்தேவையில்லாத பதிவுகள்(மேலும் இந்த வரி யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல).
வீடு சுரேஷ் - அன்றைய தினம் எங்களுக்கு இளைப்பாற வீடு கொடுத்தவர் என்ற பெருமை இவரையே சாரும். தல ஒரு வலை தள புலி ( தல நீங்க சொல்ல சொன்னத சொல்லிட்டேன், பேமெண்ட் ஒழுங்கா வந்துரும் தான!)
தமிழ் parents சம்பத் - வீடு சுரேஷ் அவர்களின் அலுவலகத்தில் சம்பத் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. வலைப்பூ மூலம் டாலர் சம்பாதிப்பது எப்படி என்று புத்தகம் வெளியிடும் அளவிற்கு சம்பத்திடம் விஷயம் இருக்கிறது.
அதிகாலை ஏழுமணிக்கு மதுமதியும், பெரியார் தளம் அகரனும் வீடு சுரேஷ் வீட்டிற்கு வந்து அலப்பறை செய்ய அங்கு ஒரு மினி பதிவர் சந்திப்பே நடந்தது. மக்கள்சந்தை நிறுவனர் திரு.சீனிவாசன் , தானே வந்து தனது ஸ்கோடாவில் எங்களை அரங்கிற்கு அழைத்துச் சென்றார் என்பது குறிபிடத்தக்கது. சுமார் பதினோரு மணியளவில் அரங்கம் சென்று சேர்ந்தோம். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பதிவர்கள் அரங்கம் முழுவதும் ஆங்காங்கே தென்பட்டனர்.
சந்திப்பில் நான் சந்தித்த பதிவர்கள் பற்றி சில துளிகள்
ஜீவன்சுப்பு - பல பதிவர்களைப் படித்து பதிவர் ஆனவர். வலைபூ தொடங்கி விட்டார் இன்னும் எழுதத் தொடங்கவில்லை. வலைபூவிற்கு மிகப் புதியவர். புதிய அறிமுகம் (தல சீக்கிரம் பதிவு எழுதத் தொடங்கவும்).
விஜயன் - வருகாலத்தில் இவர் ஒரு எழுத்தாளர் ஆனால் ஆச்சரியப் படுவதற்கில்லை. நான் ரசிக்கும் கவிஞர்களில் இவரும் ஒருவர்.
நா.மணிவண்ணன் - மதுரையில் இருந்து விழாவை சிறபிக்க வந்த தல ரசிகர். தல போலவே வார்த்தைகளையும் அளவாக அளந்து பேசுகிறார். ( தல நீங்க பதிவு எழுதாட்டி, வீடு உங்க வீட்டுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பப் போறதா தகவல் வந்துருக்கு.
ஜோதிஜி - விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்று தன முழுக் கவனத்தையும் அதில் மட்டுமே செலுத்தி இருந்தார். அவ்வபோது பதிவர்களையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.
திண்டுக்கல் தனபாலன் - உடல் மற்றும் மன சோர்வின் காரணமாக சற்றே அசதியாய் இருந்தார், மற்றபடி சென்னை பதிவர் சந்திப்பில் எவ்வளவு உற்சாகமோ பங்கெடுத்தாரொ அதே உற்சாகம் இங்கும் தொடர்ந்தது ( சார் வீட்டில் கணினி இணைப்பு கட் ஆன காரணத்தால் வலையுலக சூறாவளி சுற்றுப் பயணத்தை தாமதப்படுத்தியுள்ளார்.
சிபி - பதிவுலக அறிமுகம் தேவைபடா பதிவர் ( லோக்கல் சேனலுக்கு அவர் அளித்த தகவல் "அலெக்ஸா ராங்கில் ஐம்பதயிறதிற்குள் இருக்கும் பதிவர்" என்று).
மோகன் சஞ்சீவன் - தொழிற்களம் தளத்தில் இது வரை இருநூறு இருநூறு பதிவுகள் எழுதி இருப்பவர். சம்பவ இடத்தில் வைத்து மட்டும் மூன்று பதிவுகளை போஸ்ட் செய்து தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியவர். அறிவியல் தமிழுக்கு வலையுலகில் ஆதரவு இல்லை என்று வருத்தப் படுகிறார்.
சிவகாசிக்காரன் - கடந்த மூன்று வருடமாக பதிவு எழுதுகிறார். மிகக் குறைவாக எழுதினாலும் மிக நிறைவாக எழுதுகிறார். சமீபத்தில் அவர் எழுதி இருந்த டைம்மெசின் என்னும் நீண்ட சிறு(!)கதை - அற்புதம்.
செழியன் - நெல்லையை சேர்ந்த மாணவன், கவிதை மீது கொண்ட காதலால் கவிதைப் போட்டியில் பங்கு கொள்வதோடு நில்லாமல் போட்டிகள் நடத்துவதாகவும் உளவுத் துறை தகவல் சொல்லியது.
கண்மணி அன்போடு - பொறியியல் மாணவி. விழாவின் தொகுப்பாளர் அவதாரம் எடுத்து சிறப்பாக செய்தவர். கை தட்டலாமே, கை தட்டலாமே என்று கூறியே பலரையும் கை தட்ட வைத்தவர். விழாவை தொகுத்த விதம் அருமை. தனது அப்பா அம்மாவையும் விழாவிற்கு அழைத்து வந்திருந்தார். இவரது அப்பாவும் ஒரு பதிவர்.
கோவை மு சரளா - பெண் என்னும் புதுமை என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். தமிழ் என் அடையாளம் என்னும் தலைப்பில் மிக சிறப்பாக பேசினார்.
(ஒருவேளை ஏதேனும் பதிவர்கள் விடுபட்டிருந்தால் என்னை மன்னிச்சு)
விழாவின் சில பிளஸ் மற்றும் மைனஸ் மூலம் ஒரு ஷார்ட் கவரேஜ் :
முதலில் மைனஸ்கள் (இவற்றைக் குறைகளாக சொல்லவில்லை, இனி வரும் தொழிற்களம் விழாக்களில் இவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்ற நல் எண்ணத்துடன்)
1. விழாவில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு பற்றி தெரிவிப்பதில் ஏற்பட்ட தாமதம். சக பதிவர்களைச் சந்திப்பதில் பெரும்பால பதிவர்களுக்கு இருக்கும் ஆர்வம் அவர்களை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கச் செய்யும். உ.தா சென்னை பதிவர் சந்திப்பு. பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யும் பொழுது முறையான கால இடைவெளிக்குள் அறிவிப்பதும், அவர்களுக்கான வசிதிகள் (உண்ண, உறங்க) குறித்து அறிவிப்பது மிக முக்கியம்.
2. விழா மேடையில் பேச பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. அப்படி வாய்ப்பு கொடுத்தது தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்தால், தவிர்க்க இயலாத பேச்சாளர்களுக்கு முதல் வாய்பளித்து இருக்க வேண்டும். சென்னையில் இருந்து தன்னை தயார் செய்து கொண்டுவந்த மதுமதிக்கு பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது அவர் மனதை பாதித்ததோ இல்லையோ என் மனதைப் பாதித்தது. மதுமதி நிச்சயம் சுவாரசியமாகப் பேசி இருப்பார் என்பது திண்ணம்.
3. சுவாரஸ்யமே இல்லாத சிலரது பேச்சு நீண்டு கொண்டே சென்றது, மக்கள் பல நேரம் சலிப்படைந்திருந்தார்கள், விழாவில் அது தவிர்க்க முடியாத ஒன்று, இருந்தும் அவர்களுக்கு என்று ஒதுக்கபட்ட கால இடைவெளியில் பேசி முடிக்க வேண்டும் என்று கண்டிப்பு கலந்த தோழமையுடன் கூறி இருக்கலாம். அல்லது அப்படி கூறும் ஒருவரை இனங்காண வேண்டியது தொழிற்களத்தின் முதல் வேலை. மேடையில் பேசிய ஒருவர் எதற்கெடுத்தாலும் கை தூக்க சொல்லியது உச்ச கட்ட காமெடி.
4. மிக முக்கியமான ஒருவர். இவர் பெயர் மற்றும் புகைப்படம் இருந்தும் இரண்டையும் தவிர்க்கிறேன். பதிவர் கண்மணி தான் விழாவை தொகுத்து வழங்கப் போகிறார் என்பது முடிவாகிய பின்னும் வலுகட்டாயமாக அவரிடம் இருந்து அந்த வாய்ப்பை தட்டிப் பறித்தார். கலெக்டர் சகாயம் அரங்கினுள் நுழையும் பொழுது கண்மணி பேச எத்தனிக்கும் வேளையில் மைக்கை தனதாக்கி சிங்கம் போல முழங்கத் தொடங்கினார். திருச்செந்தூர் சஷ்டியிலே சூரனை வதம் செய்ய முருகன் கிளம்பும் பொழுது வீரமாக வர்ணனை செய்வார்களே அதே போல் தான் மிகக் கம்பீரமாக இருந்தது அவரது வர்ணனை. இருந்தும் தட்டிப் பறித்த செயல், சகாயத்தின் முன் நீங்கள் போட நினைத்த படம் - பாஸ் எனது பார்வையில் நீங்கள் கூண்டுக்குள் அடைபட்ட சிங்கம் - எவ்வளவு கர்ஜித்தாலும் வாயைப் பிளந்து பார்ப்போமே தவிர ஈர்க்கப் பட்டு விடமாட்டோம். பின்னர் ஒரு சந்தர்பத்தில் தவறான தகவல் நீங்கள் கொடுக்க அதை ரமணாஸ்ரமம் என்று கண்மணி திருத்த, போதும் பாஸ் இதோட நான் நிறுத்திக்கிறேன் (உங்க புராணம் பாடுறத).
சில பிளஸ்கள்
1. வந்திருந்த பதிவர்கள் அனைவரையும் மிகச் சிறப்பாக வரவேற்றது. பொது மக்களில் இருந்து பதிவர்களை தனித்துக்காட்டியது. சகாயம் வீற்றிருக்கும் மேடையில் சக பதிவர்களுக்கு வாய்பளித்தது.
2. மேடையில் திருநங்கை ஒருவருக்கும் சம வாய்ப்பு அளித்து அமரச் செய்தது. அவர் பேசுவதற்கும் வாய்ப்பளித்து இருக்கலாம்.
3. தாய் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிக்கு ஊக்கம் அளித்தது. அவர்கள் திறமைகள் "ஆகா அற்புதம் அருமை - காணற்கரிய காட்சி". எவ்வளவு திறமைகளை ஆளுமைகளை அந்தப் பள்ளி அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் பரவ அந்த பள்ளி எடுக்கும் முயற்சிக்கு ஊக்கம் அளித்த மக்கள் சந்தையின் பாங்கு பாராட்டத்தக்கது. நாட்டுபுறக் கலைகள் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அதன் மீது இன்னும் அதிகமான தீராக் காதல் கொள்ளச் செய்தது அந்த மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சி.
4. தாய் தமிழ் பள்ளி பற்றிய விரிவான பதிவு கண்டிப்பாக இங்கு சுட்டி படியுங்கள். பரப்புங்கள் ( என் வேண்டுகோள்).
5. தமிழ்வழி அதிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பதில் பெருமை கொள்ளுங்கள். நாளைய தமிழை வளர்க்கப் போவது கவிஞர்களும், புலவர்களும் இல்லை அரசுப் பள்ளி மாணவர்கள் தான் என்று திரு.சகாயம் ஆற்றிய அற்புதமான உரை.
.
சில மைனஸ் தவிர்த்து என்னைப் பொறுத்த வரை மிக அற்புதமான நிறைவான விழா. சில புதிய நண்பர்களை பெற்றுக் கொடுத்த விழா. அதற்க்கு வகை செய்த தொழிற்களம் குழுவினருக்கு மகிழ்ச்சியான பாராட்டுகள்.
பின் குறிப்பு 1 : அருண் உங்க லக்ஷ்மி ஸ்டார்ட் ஆகாதா மேட்டர் பத்தி கவலைப்படாதீங்க, அற்புதமான இளைஞர்னு சகாயம் சொன்னாரு அத நினைச்சு பெருமைப்படுங்க
பின் குறிப்பு 2 : இந்த விழா சம்ந்தமான போட்டோமற்றும் வீடியோ எனக்குக் கிடைத்ததும் பகிர்கிறேன். மாணவர்களின் கலை நிகழ்ச்சி அடங்கிய வீடியோவை நிச்சயம் காணுங்கள்.
Tweet |
sako...!
ReplyDeleteungal pathivun moolam thindukkal balan sako..
nilaiyai arinthen!
eppadi irukkaar!
enna udalil pirachnai ....
thayavu seythu baalan sako...vukku cell naumher irunthaal naan visaariththaathai sollidunga....
உங்கள் அக்கறை புரிகிறது. நிச்சயம் அவரிடம் தெரிவிக்கிறேன் நண்பா..
Deleteவிவரங்கள் தெரிந்து கொண்டேன். நல்ல முயற்சி. இப்படி ஒரு சந்திப்பு நடக்கவிருப்பதே எனக்குத் தெரியாதே.... அட... எனக்குத் தெரிந்து, என்னையும் அழைத்திருந்தால் நானும் என்னால் ஏன் வரமுடியவில்லை என்று சொல்லியிருப்பேன்...! :)))
ReplyDeleteநெட் கனெக்ஷன் பிரச்னையை விடுங்கள். DD க்கு என்ன ஆச்சு? பணி மாறுதல் என்றுதானே சொல்லியிருந்தார்? உடல்நிலை சரியில்லையா?
//அட... எனக்குத் தெரிந்து, என்னையும் அழைத்திருந்தால் நானும் என்னால் ஏன் வரமுடியவில்லை என்று சொல்லியிருப்பேன்...! :)))// கொர்ர்ர் ... இந்த வாரம் கணேஷ் சார் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வரவும் ...எதிர்பார்க்கிறோம் ....
Deleteசிறிது உடல் நலம் சரி இல்லை என்று சொன்னார். பெரும் அலைச்சல் மற்றும் தூக்கமின்மை அவரை சோர்வடைய வைத்துள்ளது சார்.
கணேஷ் சார் புத்தக வெளியீடா சொல்லவேயில்ல என்னைய மறந்துட்டாங்களா எல்லாரும்?
Deleteஅசந்து போய் ஆச்சரியத்துடன் முழுமையாக படிக்க வைத்த ஒரு பத்திரிக்கையாளரின் பாணியில் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். இதில் நான் குறிப்பெடுக்க பல விசயங்கள் உள்ளது.
ReplyDeleteமிக உற்சாகமான கருத்துரைக்கு மிக்க நன்றி ஜோதிஜி...
Delete//சிபி - பதிவுலக அறிமுகம் தேவைபடா பதிவர் ( லோக்கல் சேனலுக்கு அவர்அளித்த தகவல் "அலெக்ஸா ராங்கில் ஐம்பதயிறதிற்குள் இருக்கும் பதிவர்"என்று).//
ReplyDeleteசிங்கம்லே!!
சிங்கமே தான் என்ன சந்தேகம் இருக்கு..
Deleteநல்லதொரு முயற்சி எழுத்தாளரே...
ReplyDeleteஅந்த வாய்ப்புத் தட்டிப் பறித்தவரைப் பற்றி நிகழ்விலே முகம்சுழித்திருப்பார்களே பலர்...:)
மற்றப்படி புதிய சில உறவுகளை அறிமுகப் படுத்திய பதிவு
புது வருடம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்
எழுத்தாளராவே ஆக்கிடீங்களா... இன்னும் நடக்க வேண்டிய ஊட வேண்டிய தூரம் நிறையவே உள்ளது நண்பா
Deleteஅட போங்க பாஸ் . திருப்பூர் சந்திப்ப பத்தி எழுதியாவது ஒரு பதிவு போடலாம்னு " நினைச்சேன்" ஆனா நீங்க "தொவச்சு காயபோட்டுடீங்க " . இதுல கொடும என்னன்னா நா எப்டி எழுதனும்னு நெனச்சானோ அப்டியே எழுதிபுட்டீங்க .
ReplyDeleteமிக அழகான நேர்த்தியான பாராட்டுகள் அதே சமயம் நாசுக்கான குட்டுகள் ரெண்டையும் கலகலப்பா பதிவீருக்கீங்க .
அழகு சகோ ..அழகு .....!
அத பத்தி எல்லாம் கவலைப் படாதீங்க தல... நமக்கு தேவ மேட்டர்... அது கிடைச்ச பதிவப் போட வேண்டியது தான்... நீங்களும் எழுதுங்க எழுதுங்க எழுதிட்டே இருங்க
Delete//மிக அழகான நேர்த்தியான பாராட்டுகள் அதே சமயம் நாசுக்கான குட்டுகள் ரெண்டையும் கலகலப்பா பதிவீருக்கீங்க .//
மிக்க நன்றி பாஸ் :-)
"பிரபல பதிவரின்" அற்புதமான நடை...
ReplyDeleteதொழிற்களம் விழாவில் பதிவர் சந்திப்பு பற்றி ஒரு நல்ல அலசல்..
நீண்ட நேரம் பேசியவர் என்ன பேசினார் என்று சரியாக கவனித்திருக்கலாம் பதிவரே!! இங்கே, திருப்பூரில் பல அரசு பணியாளர்கள் லஞ்சத்திற்கு எதிரான இவரது போராட்டத்தால் விடுப்பு எடுத்திருக்கிறார்கள்..
அவரை பற்றிய தனி கட்டுரை விரைவில் பதிகிறோம்..
தொடருங்கள்...
//நீண்ட நேரம் பேசியவர் என்ன பேசினார் என்று சரியாக கவனித்திருக்கலாம் பதிவரே!! // யாருடைய பேச்சையும் நான் இங்கு பதியவில்லை (பதிவின் நீளம் கருதி). மேலும் குறைந்த கால அளவில் பின் வருபவர்களையும் அவர்கள் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணம்... லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் ... நாங்களும் தயார்
Deleteபதிவு உலகில் இப்படி பதிவர் சந்திப்பெல்லாம் கூட நட்க்குமா. இவ்வளவு பதிவர்கள் இருக்கிறார்களா? எல்லாமே எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. நான் நேற்றுதான் வலைப்பூ தொடங்கி பதிவு எழுதவே தொடங்கி இருக்கிறேன்.இந்த பதிவு படித்ததும் இவ்வளவு திறமையானவங்களுக்கு மத்தியில் நான் என்னத்தை எழுதப்போகிறேனோன்னு பயம்மாதான் இருக்கிறது.
ReplyDeleteபதிவுலகுக்கு உங்களை வரவேற்கிறோம்... தமிழ் பதிவுலகம் கடல் போன்றது.. எல்லைகள் பெரியது... நாம் விரித்துக் கொள்ளதா வரை விரியாது... உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்
Deleteபதிவர் சந்திப்பு என்பது நீங்கள் தங்கியிருந்த இல்லத்திலேயே நடை பெற்று இருக்கிறது. ஆனால் விழாவில் அது முழுமையாக நடை பெறவில்லை. காரணம் நேரக் குறைவு. தொழிற் காலத்திற்கு பல ஆலோசனைகள் சொல்லி வருகிறேன். அதை நேரில் வலியுறுத்தவும்.சில விசயங்களை தெளிவாக்கிக் கொள்ளவும் எண்ணி இருந்தேன் . அது முடியவில்லை. அடுத்து நான் இங்கு பதிவர் மட்டுமல்ல நாடு முழுவதும் அறிவியல் மாநாடுகளுக்கு சென்று வரும் ஒரு அறிவியல் வாதி. அறிவியல் , தொழில் நுட்பம் , விண்வெளி, வானவியல்., இயற்கை எல்லாவற்றையும் பரப்புவதில் ஈடு பட்டுள்ளேன். முக நூலில் மாணவர்களை வெகு அளவில் நண்பர்களாகப் பெற்று அவர்களை அறிவியல் பாதையில் கொண்டு செல்கிறேன். தமிழ் , ஆங்கிலம் இரண்டிலுமே எழுதுகிறேன் . ஆங்கிலக் கவிதைகள் கவிதைத் தொகுப்புகளில் வந்து கொண்டு இருக்கின்றன
ReplyDeleteஇவ்வளவு விரிவாக நான் எழுதுவதன் காரணம் என்னை இங்கு முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதாலேயே. தவிர இங்கு சில மனக் குறைகள் ஏற்பட்டுள்ளன. அதை தொழிற் களம் தான் நிவர்த்தி செய்ய வேண்டும் . நானும் விழா நிகழ்வுகளை எழுதுவதாக இருந்தேன்.விஜயன் பெயரில் இருந்ததால் நான் எழுத இருந்ததை விட்டு விட்டேன். யார் எழுதுவது உள்பட அன்று தெளிவாக்கிக் கொள்ள நேரம் இல்லை . நன்றி
விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி சார். உங்கள் ஆதங்கம் உங்கள் பேச்சிலும் தற்போது உங்கள் எழுத்திலும் புரிகிறது. உங்களுக்கு ஏற்ற களத்தை நீங்கள் தயார் செய்து வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
Deleteநல்ல அலசல்!
ReplyDeleteநன்றி தலைவா
Deleteநாங்கள் வர முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது .
ReplyDeleteவிழா சிறப்பாக நடந்தது மகிழ்ச்சி ... வாழ்த்துக்கள் .
நீங்கள் வராதது எங்களுக்கும் வருத்தமே செல்வின்...
Deleteஅன்புள்ள சீனு,
ReplyDeleteநேரில் வந்து கலந்து கொள்ள முடியவில்லை என்ற என் வருத்தத்தை உங்கள் பதிவு போக்கி இருக்கிறது.
மக்கள்சந்தை திரு சீனிவாசன் அவர்களின் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
//மேடையில் பேசிய ஒருவர் எதற்கெடுத்தாலும் கை தூக்க சொல்லியது உச்ச கட்ட காமெடி. //
ReplyDeleteஜெ... ரசிகரோ !!
சக்கை குச்சி ஆடிவா வீடியோ பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். உருமியின் உருமல் அட்டகாசம்.
நன்றி நண்பரே!
நான்...மற்றும் பலர் மனதில் இருந்த ஒரு சில குறைகளை சுட்டிக்காட்டியதற்கு நன்றி..!
ReplyDeleteசென்னை பதிவர்கள்,மற்றும் வெளியூர் பதிவர்களுக்காக ஹோட்டல் விக்ரமில் இரண்டு குளுகுளு அறை முன்பதிவு செய்யப்பட்டிருந்தது தமிழ்ச்செடி நண்பர்கள் சார்பாக...!
மதுமதி நாங்க மூன்று பேர்தான் தோழரே வருகின்றோம் என்றார்...! எதற்கு வீண் செலவு என்றார்..!சரி நம் அலுவலகத்தில் தங்கிக்கலாம் என்றேன்..! என்னுடைய அலுவலகத்தில் நடந்தது பதிவர் சந்திப்பு என்பதை விட பயிற்சி என்றே சொல்லலாம்! எல்லா புகழும் சம்பத்துக்கே....!ஹிஹி!
This comment has been removed by the author.
Deleteஅழகாக விழாவினை கண் முன் காட்சி படுத்தும் படி சிறப்பா சொன்னீங்க சகோ. நிறை குறைகளை தயங்காது எடுத்து சொன்ன விதம் பாராட்டுக்குரியது.
ReplyDeleteஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் பரவ அந்த பள்ளி எடுக்கும் முயற்சிக்கு ஊக்கம் அளித்த மக்கள் சந்தையின் பாங்கு பாராட்டத்தக்கது.
ReplyDeleteரசித்தேன் ,மிக்க நன்றி
ReplyDeleteஒவ்வொரு பதிவர் சந்திப்பிலும் உங்களின் ஈடுபாடு ஆச்சர்யமளிக்கிறது சீனு.நிறைய பதிவர்களை அறிமுகமும் செய்கிறீர்கள்.விரைவில் பதிவர் சந்திப்புகளும் நானும் என்ற தலைப்பில் பதிவு போட்டாலும் ஆச்ச்ரயபடுவதற்கில்லை...keep it up seenu..!
ReplyDeleteசும்மா, பின்னிடீங்க .... இப்போதாங்க,எந்த்ரிச்சி உக்காந்து இருக்கேன் நல்லா, திரும்பும் போது பேருந்தில் பக்கத்துல இருந்த ஆள் கொடுத்த பரிசு டெங்கு காய்ச்சல், என்ன பத்தியும் சொன்னதுக்கு நன்றி
ReplyDelete:) இவ்வளவு தாமதமா இந்தப் பதிவ படிச்சிருக்கேன் :) உங்க நடை எப்பவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும், ஆனாலும் எல்லாத்தையும் இவ்வளவு வெளிப்படையா சொல்லிடிங்களே!
ReplyDelete