28 Nov 2012

"பதில்" வினவு தளம் - நம்மால் நமக்காக நாமே


னைவருக்கும் இனிமையான வணக்கங்கள். சம்பளம் கொடுக்கும் முதலாளி இந்த மாதம் வேலையும் கொஞ்சம் அதிகம் கொடுத்துவிட்டதால் வலையுலகம் பக்கம் வருவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது. என்றும் தொடர்ந்து உற்சாகமாக இயங்கும் வலையுலகிற்கு மீண்டும் ஒருமுறை உற்சாகமான வணக்கம் வைத்துவிட்டு பதிவிற்குள் நுழைகிறேன் உங்களோடு...

பிரபல பதிவர் பிளாக்கர்நண்பன் அப்துல் பாசித்தும் அவரைப் போலவே பிரபல பதிவரான கற்போம் பிரபு கிருஷ்ணாவும் இணைத்து தொடங்கியுள்ள புதிய தளம் "பதில்". பதில் என்னும் தளத்தின் பெயரே அதற்கான பதிலை தெளிவாக சொல்லிவிடுகிறது, இருந்தும் இந்தப் பதிவை நீட்டி முழக்க வேண்டிய கட்டாயத்திற்கு என்னை நானே தள்ளிக் கொண்டதால் இந்தத் தளத்தினைப் பற்றி கொஞ்சம் விரிவாக பின்வரும் வரிகளில்.

சுஜாதவின் ஏன் எதற்கு எப்படி, மதனின் ஹாய் மதன்ஸ் கேள்விகளில் இடம் பெரும் கேள்விகளில் இருந்தே தமிழனின் ஞானத்(!) தேடலை நாம் வியக்கலாம். இது வரை நாம் கேள்விபட்டிராத வார்த்தைகளையெல்லாம் கோர்த்து கேள்வியாகக் கேட்பார்கள், சுஜாதாவும் மதனும் அவற்றிக்கான விடையை எங்கிருந்தாவது தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்துவிவார்கள். சமீபத்தில் என்னைக் கவர்ந்த ஒரு ட்வீட் "விக்கிபீடியா இல்லாத நாட்களில் தமிழகத்தின் விக்கிபீடியாவாக இருந்தவர் சுஜாதா". 

நிச்சயமாக உலகம் முழுவதுமே கேள்விகளாலும் பதில்களாலும், பதில் தேடுவதற்கான பதில் கேள்விகளாலுமே நிரம்பியுள்ளது. கேள்வி கேட்பவன் ஞானம் பெறுகிறான், பதில் கொடுப்பவன் ஞானத்தை விருத்தி செய்கிறான் என்ற பழமொழியை நிச்சயம் ஏதோ ஒரு நாட்டில் யாரோ ஒரு மகான் சொல்லி இருப்பார். அதனால் கேள்வி பதில் என்பது நம் வாழ்வு சார்ந்தது, வாழ்தலுக்கான தேடல் சார்ந்தது. இன்றைய இணைய உலகத்தில் கேள்விகளை விட பதிலே நிரம்வி வழிகின்றன இருந்தும் அவை அனைத்தும் தமிழில் கிடைக்கப் பெறுகின்றனவா என்பது தான் முக்கியம். 


                                       

ணையவெளியில் தொழில்நுட்பம் சார்ந்த நமது சந்தேகங்களைத் தீர்க்க உதவும் விதமாக பாசித்தும் பிரபுவும் இணைத்து தொடங்கியுள்ள தளம் "பதில்". உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைக் கேள்வியாக்கலாம், மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். சுருக்கமாக லிங்கன் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் நம்மால் நமக்காக நம்மைக் கொண்டு நடத்தப்படும் ஒரு தளம் தான் கேள்வி "பதில்" தளம். கணினி இணையம் மொபைல் ப்ளாக் இவை சார்ந்த கேள்விகளும் இத்துறை சார்ந்த வேலைவாய்ப்பு பற்றியும் உங்கள் கேள்விகளையும் பதிலையும் தரலாம்.

த்தனை பெரிய தமிழ் இணைய வெளியில் நிச்சயம் பல்லாயிரக்கனக்கான தமிழர்களுக்கு பலவிதமான தொழிநுட்பத்தில் சிறந்த புரிதலும் அனுபவமும் இருக்கும் அவர்களின் வழிகாட்டுதல்கள் தேவைப்படுபவர்களுக்கு தேவையான நேரத்தில் சென்று சேரலாம். அந்தப் பல்லாயிரக் கணக்கானவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம், யாரோ ஒரு நண்பரின் கேள்விக்கு பதில் தரலாம், அதனால் இப்படி ஒரு தளம் திறந்த இரு நண்பர்களுக்கும் இந்த முயற்சிக்கும் முதலில் வாழ்த்துக்கள்.

                                           
மிழில் குழுமம் என்றும் ஆங்கிலத்தில் forum என்றும் சொல்லுவார்கள். இங்கு நடைபெறுவது முழுவதும்கேள்வி பதிகலாகவும் விவாதங்களாகவும் இருக்கும். சம காலத்தில் பேஸ்புக் ட்விட்டர் கூட விவாதகளங்கள் தான் ஆனால் அவற்றை முழுமையான கேள்வி பதில் தளங்களாகக் கருத முடியாது, காரணம் இவற்றில் முறையான கோர்ப்பு கிடையாது, மற்றும் இவை பொழுதுபோக்கு சார்ந்தவை. மேலும் கேள்வி கேட்டு பதில் அளிப்பது ஒன்றும் புதிய முயற்சி இல்லை காலம் காலமாக இணையம் அறிந்த ஒன்று தான், இதனை நான் மறுக்கவில்லை, ஆங்கிலத்தில் தொழில் நுட்பம் சார்ந்த விவாத களங்களும் கேள்வி பதில் தளங்களும் அதிகம், ஆனால் தமிழில் தொழிநுட்பம் சார்ந்த விவாத களம் இதுவரை யாராலும் முறையாக நடத்தப் படவில்லை என்பதே உண்மை. அந்தக் குறையை போக்கும் விதமாக இரு இளைஞர்கள் வழிநடத்துகிறார்கள் என்றால் அவர்களை நாம் ஊக்குவிப்பதில் தவறு இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதில் தளத்திற்கு செல்லுங்கள் உங்கள பங்களிப்பை அளியுங்கள். 

                          

தில் தளத்தில் உங்களுக்கு என்று ஒரு கணக்கு தொடங்குகள், வாருங்கள் பயணத்தில் இணைவோம். சில நாட்களுக்கு முன் ஹாரியின் வலைப்பூவில் எங்கள்பிளாக் ஸ்ரீராம் சார் நினைவுபடுத்திய பாரதியின் இந்த வரிகள் நியாபகம் வருகிறது "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்". எட்டுத்திக்கில் இருக்கும் கேள்விகளுக்கும் கலைச் செல்வமாக பதில் தளம் மாற எனது வாழ்த்துக்கள் மற்றும் பங்களிப்புகள். 

"மிழில் இது புது முயற்சி இல்லை என்றாலும் சிறந்த முயற்சியாக கொண்டு செல்ல நினைக்கிறோம்" என்ற பிளாக்கர் நண்பனின் வார்த்தைகளை நான் வழிமொழிகிறேன். 


விளம்பரம் 

காமெடிகும்மி என்னும் வலைப்பூவில் சீனு என்னும் பெயரில் எழுதும் ஒரு பதிவரின் அமானுஷ்ய தொடர் படிக்கத் தவறாதீர்கள்.  

20 comments:

  1. நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம். பாராட்டுகள் பதிவர்கள் பெயருக்கும் லிங்க் கொடுத்திருப்பீர்கள் என்று கர்சரை நிரடி நிரடிப் பார்த்தேன்!

    பதிவில் என் பெயர் படித்தது சந்தோஷத்தை ஏற்படுத்தியது!

    ReplyDelete
  2. பாராட்டப் படவேண்டிய விஷயம் சீனு.

    ReplyDelete
  3. நல்ல முயற்சி. வெல்லட்டும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அருமை... இதன் மூலம் வலைப்பதிவாளர்கள் அல்லாதவர்கள் கூட பயனடைவார்கள் என்பது பெருமகிழ்ச்சி... நன்றி...

    ReplyDelete
  5. நிஜமாகவே நல்ல முயற்சி..

    ReplyDelete
  6. அருமையான விஷயம். நண்பர்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்

    ஆமா தலைப்பில் ஏன் வினவு தளம்? ஓ..கேள்வி என்ற அர்த்தத்திலா? ரைட்டு

    ReplyDelete
  7. நல்ல முயற்சி ... பயன் பெறுவோம் மிஸ்டர் சீனு ,...
    நண்பர்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வழக்கமான உங்கள் அழகிய நடையில் அருமையாக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பா! நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தளத்தை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும் என்ற எங்களுக்கு உற்சாகாத்தை தருகிறது.

    பதில் தளம் சார்பாக,
    அப்துல் பாஸித்!

    ReplyDelete
  9. //நிச்சயமாக உலகம் முழுவதுமே கேள்விகளாலும் பதில்களாலும், பதில் தேடுவதற்கான பதில் கேள்விகளாலுமே நிரம்பியுள்ளது//
    இந்த இடத்தை படிக்கும் போது மெய் சிலிர்த்தது அண்ணா,பதில் தளத்தை பற்றிய தங்களின் பதிவு தாமதமான விமர்சனம் என்றாலும் தரமான விமர்சனம்.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. கேள்வி கேட்ட சில மணி நேரங்களில் பதிலும் சொல்லி விடுகிறார்கள்... மேலும் விளக்கத்திற்கு இணைப்புகளையும் கொடுக்கிறார்கள்...

    வலையுலக நண்பர்கள் என்னிடம் கைபேசியில் கேட்கும் கேள்விகளுக்கு இவர்களின் தள இணைப்புகளை கொடுப்பது வழக்கம்... இப்போது இந்த தளத்தையும் சொல்லி விடுகிறேன்...

    மிகச் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை...

    உங்கள் தளத்திலும் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  12. மிகவும் அருமையான ஆக்கபூர்வமான முயற்சி. என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  13. அழகான முயற்சி நிச்சயமாக அவசியம் தேவையானதுவும் கூட...
    சில மாதங்களுக்கு முன்னர் ஹாரியும் இப்படியொரு வலைப்பூவை ஆரம்பித்திருந்தாரே

    ReplyDelete
  14. சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்". எட்டுத்திக்கில் இருக்கும் கேள்விகளுக்கும் கலைச் செல்வமாக பதில் தளம் மாற எனது
    வாழ்த்துக்கள்

    அருமையான முயற்சி வாழ்த்துக்கள் சீனு

    ReplyDelete
  15. சகோ சீனு ...
    பதில் . காம் தளம் நல்லாயிருக்கா , மோசமா என்று போகபோகத்தான் தெரியும் ஆனால் இங்கு முதல் முறையாக வந்த என்னை ,
    உங்க எழுத்து நடை வசீகரித்து விட்டது ....தொடர்ந்து எதையாவது நல்லதாக எழுதுங்க ...பின்தொடர்கிறேன்

    ReplyDelete
  16. மிகவும் சிறப்பான முயற்சி. என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  17. பதில் தளம் பற்றிய பகிர்வுக்கு நன்றி பாஸ். உங்களைப் போன்ற நண்பர்கள் தான் பதில் தளம் இப்போதும் வெற்றிகரமாக இயங்க காரணம் :D

    தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும் :-)

    ReplyDelete
  18. வலைச்சரத்தில் இன்று அறிமுகமாகியிருக்கும் 'பதில்' தளத்திற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  19. வணக்கம்

    இன்று உங்களின் படைப்பு வலைச்சரத்தில் அறிமுகமானது வாழ்த்துக்கள் அருமையான பதிவு எழுத்துலகில் மேலும் வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete