அந்த நிமிடம் வரை எங்கள் இருவருக்குமே தெரியாது அன்று மாலையே நாங்கள் சந்திப்போம் என்று. அந்தப் பிரபல பதிவர் மனது வைத்ததால் அன்று மாலையே அவரை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. வெள்ளிக்கிழமை காலை அவரிடம் கேட்டேன் உங்களை சந்திக்கலாம் என்றால் எங்கே சந்திக்கலாம் என்று, எங்கேயும் சந்திக்கலாம் ஆனால் தற்போது மயிலையில் உள்ளேன் என்றார். மயிலாப்பூர் நான் இருக்கும் இடத்தில இருந்து தொலைவு என்றேன் சாதரணமாக, அப்போ எங்கு சந்திக்கலாம் என்று சொல் நான் வருகிறேன் என்றார் அசாதாரணமாக. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, நீங்கள் எல்லாம் வர வேண்டாம் சார் நானே வருகிறேன் என்றேன், "உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் சென்ட்ரல் ரயில் நிலையம் வா" என்றார். சென்ட்ரல் வருவதற்கு நான் மயிலாப்பூரே வந்துவிடுவேன் என்றேன். காரணம் இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை ( "ஐயோ அடங்க மாட்டன்றானே" பிரபலத்தின் மைன்ட் வாய்ஸ் ) .
ஒருவழியாய் இருவருக்கும் பொதுவாய் ஒரு இடம் முடிவானது சைதாப்பேட்டை கார்நீஸ்வரர் கோவில் அருகில் இருக்கும் டீ கடை என்று. (பதிவர்களே உங்களுக்கு ஒரு தகவல், அந்தப் பிரபல பதிவர் தினமும் மாலை சரியாக 6.30 மணிக்கு இங்கு தான் டீ (சுகர் கொஞ்சம் கம்மியா) குடிப்பார் . வேண்டுமானால் அவரை இங்கேயும் சந்திக்கலாம்). நானும் வழி கண்டறிந்து சென்று விட்டேன். 6.30 மணிக்கு வரச் சொன்னார். நானோ 6.15 க்கே வந்துவிட்டேன் (தமிழன் பண்பாட்டை மீறி சரியான நேரத்திற்கு முன்பாகவே நான் வந்ததால் எங்கள் இருவருக்குமே கொஞ்சம் மனஸ்தாபம் தான்,' நானெல்லாம் ஒரு தமிழனா?' என்று என்னை நானே திட்டிக் கொண்டேன்).
அவரை இதற்கு முன் பார்த்து இல்லை, ஆனால் சில பதிவுகளில் அவர் புகைப்படம் பார்த்துள்ளேன், அவர் என்ன வாகனம் வைத்துள்ளார் என்பதையும் அவர் பதிவின் மூலமே அறிவேன் ( பயபுள்ள என்னா ஒரு புத்திசாலித்தனம்! ). இந்நேரத்தில் ஹெல்மட்டிற்குள் முகம் புதைத்த ஒருவர் சிரித்துக் கொண்டே அவர் வண்டியை என் அருகே நிறுத்தினார். அந்தப் பிரபல பதிவர் தானோ என்று எண்ணி சலாம் போடத் தயாரானேன். அதன்பின் தான் கவனித்தேன் அது அவர் வாகனம் இல்லை என்று. பின் யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே "சார் கே கே நகர் எப்படி போகணும்" என்ற கேள்வி என் மீது வந்து விழுந்தது. "தெரியாது சார், நானும் ஏரியாக்கு புதுசு" என்று சொல்லிவிட்டு "அதுக்கு ஏன்யா ஐஞ்சு நிமிசமா பக்கதுல நின்னு சிரிசிகிட்டே இருக்க" என்று முனுமுனுத்தது நல்ல வேளை அவர் காதில் விழவில்லை.
பிரபல பதிவர் வந்தார், சம்பிரதாயமான அறிமுகங்கள் எதுவும் இல்லாமலேயே டீ குடிக்க சென்றோம். தமிழனுக்கு "டீ குடிக்க வாரீங்களா சார்" என்பதை விட வேறு என்ன பெரிய அறிமுகம் தேவை. ஆச்சரியம் என்னவெனில் அந்தப் பிரபலமோ தன்னைப் பிரபலம் என்று காட்டிக் கொள்ளாமல் பலநாள் பழகிய நண்பரைப் போல் பழகியது தான். பதிவர் சந்திப்பு பற்றி சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்த பின் "மாம்பலம் ரயில் நிலையத்திற்கு மிக மிக அருகில் தான் என் வீடு , வா போயிட்டு வரலாம்" என்றார். சட்டென்று ஏதோ டிவி விளம்பரம் தானோ என்று பின்னால் திரும்பிப் பார்த்தேன், விளம்பரம் எல்லாம் ஒன்றும் இல்லை என் வீடு தான் அங்குள்ளது என்று அழைத்துச் சென்றார்.
அப்போது தான் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது, மாம்பலம் ரயில் நிலையத்திற்கு தானே அவர் வீடு அருகில்? எனக்கில்லையே. இருந்தும் செல்வதென்று முடிவான பின், பின் வாங்குவது எப்படி? ( அண்ணாச்சி கடையில கேட்டா குடுப்பாங்கன்னு மொக்க காமெடி எல்லாம் சொல்லாதீங்க). வீடு வந்து சேர்ந்தோம். அவருடைய வாகனத்தை அதனிடத்தில் விட்டபின் ( இவ்ளோ டீடைல் தேவையா இப்ப?) வீட்டிற்குள் நுழைந்தோம். வரவேற்பறையே மினி நூலகம் போல் இருந்தது. முக்கியமான விஷயம் புத்தகங்கள் அனைத்தும் முறையாக ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்க்கவே பிரமிப்பாய் இருந்தது. நானெல்லாம் எடுத்த பொருளை எடுத்த இடத்தில வைப்பதே பெரிய விஷயம்.
பல புதிய பதிவர்களைப் பற்றி பேசினார், புத்தகங்கள் எங்கெங்கெல்லாம் கிடைக்கும் என்பது போன்ற தகவல் சொன்னார். சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார். முன்னொருமுறை என்னிடம் சொல்லி இருந்தார் உன்னை சந்திக்கும் பொழுது மகாபலிபுரம் பற்றிய புத்தகம் தருகிறேன் என்று ஆனால் இப்போது கொடுத்ததோ வேறு ஒன்று( ஓசியில் வந்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்ப்பது தமிழனின் வழக்கம் என்பதை மீண்டும் மீண்டும் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.) எங்கே அந்தப் ப்த்தகதைப் பற்றி மறந்து விட்டாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே "அந்தப்புத்தகம் என்கிட்டே இப்போ இல்லை பதிவர் சந்துப்புக்கு நீ வரும் போது அதைத்தாரேன்" என்றார். சார் உங்க நியாப சக்திக்கு நீங்க ஐ ஐ டி ல கோல்ட் மெடல் வாங்கிருக்கணும் சார் என்று நினைத்துக் கொண்டேன்.
மற்ற பிளாக்குகளில் நான் குடுத்த கமெண்ட், எனக்கு வந்த கமெண்ட் என்று அசராமல் அவர் நியாபகத்தில் இருந்து சொல்லிக் கொண்டே சென்றார், 'கோல்ட் மெடல் கொடுக்கும் எண்ணம் இப்போது வைர மெடல் ஆக மாறியது. ' ( சார் என்னால் நினைக்க மட்டும் தான் முடியும் அதற்காக கேட்டு விடாதீர்கள், பின் ஒரு தமிழனின் மானம் கப்பலேற காரணமாய் இருக்காதீர்கள்). அந்தக் காலத்தில் இருந்து அவர் சேமித்து வைத்து வரும் புத்தகங்களை பார்க்கும் பொழுது மலைபாயும் மகிழ்வாயும் இருந்தது, காரணம் நானுமொரு புத்தகக் காதலன். சரித்திர நாவல்களில் அக்காலங்களில் இடம் பெற்ற ஓவியங்களைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார். அக்கால சரித்திர நாவல் ஓவியரான ஓவியர் ஜெக்கு ஜெ எல்லாம் போட்டார்.
உங்கள் வீட்டிற்கு நான் வந்தால் மிஞ்சி மிஞ்சிப் போனால் என்ன காட்டுவீர்கள், இது ஊட்டியில் எடுத்த போட்டோ, இது எங்க அம்மா ஊட்டி விடும் போது எடுத்த போட்டோ என்று ஏகப்பட்ட போட்டோ ஆல்பத்தைக் காட்டுவீர்கள். இந்தப் பிரபலமோ இதிலும் சற்று வித்தியாசம் தான். பைண்ட் செய்த பல புத்தகங்களை என் கையில் கொடுத்து இது சுஜாதா கலெக்சன்ஸ், இது கல்கி இது சாண்டில்யன் கலெக்சன்ஸ் என்று அடுக்கிக் கொண்டே சென்றார், நானெல்லாம் அவர் வீட்டு பக்கத்தில் இருந்திருந்தால் நூலகம் பக்கமே சென்றிருக்கமாட்டேன். அனைத்தையும் அத்தனை அழகைப் பாதுகாத்து வருகிறார். வெகு நேரம் பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம். வெகு நேரம் சிறிது நேரம் போலத் தான் தோன்றியது, ஆனால் நானோ வெகு தொலைவு செல்ல வேண்டும் என்பதால் அவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டேன். பதிவுலகில் நான் சந்தித்த முதல் சந்திப்ப்பு, அதுவும் பிரபல பதிவருடன் திடீர் சந்திப்பு. மறக்கமுடியாத சந்திப்பு. மிக்க நன்றி வாத்தியாரே.
பேசிக் கொண்டிருக்கும் பொழுது இடையில் அவரது சிறிய ஆசையை வெளிபடுத்தினார். அவரது சிறுகதைத் தொகுப்பை புத்தகமாக வெளியிட வேண்டுமென்பது தான் அந்த ஆசை. ( ஒருவேள அவர் இத ரகசியம்னு என்கிட்டே சொல்லி இருப்பாரோ, நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேனோ). அவருடைய கற்பனை உலகைப் பற்றி சொல்லிய பொழுது நெஞ்சம் நெகிழ்ந்தது.
அந்தப் பிரபல பதிவர் யார் என்று பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன், இன்னும் கண்டு பிடிக்கவில்லையா? இல்லை அவர் மின்னல் வரிகளைப் படிக்க வில்லையா?
அவர் எனக்களித்த புத்தகத்தில் கையெழுத்துடன் அவர் எழுதி இருந்த வரிகள் மூலமே அவரை அறிமுகம் செய்கிறேன் ( பிரபல பதிவரை அறிமுகம் செய்யும் சாதாரணன் ) ' பிரபல பதிவரே எப்புடி' .
எனக்கு நண்பனாய்
என் எழுத்தின் வாசகனாய்
கற்றுக் கொள்வதில் சிஷ்யனாய்
பல நிலைகளில் என்னுடன் வரும் சீனுவுக்கு
நல்வாழ்த்துக்களுடன்
Tweet |
சந்திப்பை மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteதங்கள் சூடான வருகைக்கும் சுவையான பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சார்
Deleteநான் முதலிலேயே ஊகித்துவிட்டேன்!....அவர் ஏனோ இப்பெல்லாம் என் வலைக்கு கருத்திட வருவதில்லை. ஒரு வேளை பிரபலம் என்பதாலோ! பல பிரபலங்கள் இப்படித்தான்...
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
ஐயய்யோ... பழகினவங்களை மறக்கற ஆள் நானில்லை வேதாம்மா... என்னை தவறாம ஊக்குவிக்கற உங்களை விட்ருவேனா... இடையில சிலநாள் பிரச்னைகளால் அதிகம் வரலை. இனி தொடர்ந்து வருவேன் நான்.
Deleteஉங்கள் வலைபூ WORDPRESS ஆகா இருப்பதால்Follower ஆகா முடியவில்லையே எனக்கும் வருத்தம் உண்டு, இருந்தும் தவறாது வருகிறோம் என்று வாத்தியாரும் சொல்லிவிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி
Deleteபுத்தகங்கள் என்று நீங்கள் பேசும்போதே அவர் கணேஷ் என்று நான் கண்டுபிடித்துவிட்டேன்
ReplyDeleteபுத்தகத்தின் மறுபெயர் கணேஷ் என்பது தான் உங்கள் அகராதில் விளக்கமோ, உங்கள் பேட்டியும் படித்துவிட்டேன், பாவம் சார் ரெண்டு பேரும்... ஹா ஹா ஹா
Deleteசக பதிவர் சகோ கணேஷ் & சகோ சசி இரண்டு பேரும் என்னை சந்தித்தார்கள் அதை பற்றிய விபரங்கள் எனது அடுத்த பதிவில் இது அவர்களுக்கே தெரியாதுங்கோ....
ReplyDeleteஆஹா... இப்படி ஒரு அமர்க்களத்தை ஆரம்பிச்சுட்டீங்களா... அங்க வந்து பாக்கறேன் உங்களை.
Deleteசார் அது அமர்க்களம் இல்ல அட்டகாசம்
Deleteஆஹா............. புத்தக வேட்டைக்கு எனக்கு(ம்) இடம் கிடைச்சுருச்சு! மாம்பலம் ரயில் நிலையத்துக்குப் பக்கமா? ரங்கநாதன் தெரு இல்லை என்று நம்புவோம்!
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
Red Corpet Welcom to Thulasi Teacher to my House!
Deleteநிச்சயமாக துளசி டீச்சர், நமக்காக அவர் காத்திருக்கிறார் என்பது சாலப் பொருந்தும்
Deleteஅவ்ருடைய அனபையும் வரவேற்கும் பண்பையும்
ReplyDeleteசமீபத்தில்தான் அனுபவித்தேன் என்பதால்
இந்தப் பதிவை ரசித்துப் படிக்க முடிந்தது
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
உங்கள் சந்திப்பு மற்றும் சென்னை வருகையைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார் ரமணி சார், உங்களை போன்ற நட்சத்திரப் பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு விரைவில் வர போகிறது. வாருங்கள் விரைவில் சந்திக்கலாம்
Deleteகணேஷ் புத்தகப் பித்தர் என்று நானும் அவர் பதிவுகள் படித்துத் தெரிந்து கொண்டேன். அவர் ஆசை சீக்கிரம் நிறைவேற எங்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteஆமாம் சார் அவர் ஆசை சீக்கிரம் நிறைவேற நானும் காத்துக் கொண்டுள்ளேன், தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மனம் நிறை நன்றி ஸ்ரீராம் சார்
Deleteஅசாத்திய நினைவாற்றல் கொண்டவர் மின்னல் கணேஷ் அவர்கள்.பதிவர் சந்திப்பின்போது பெயரைச் சொன்னதும் பாரதி தானே உங்க ப்ரொஃபைல் படம் என்று பிரமிக்க வைத்தார்.அவர் புத்தகம் வெளியிடு வதை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteஅவருடைய நியாப சக்தி அபாரமானது, நீங்களும் சந்திபிற்க்கு வருகிறீர்கள் என்று நினைக்கும் பொழுது மகிழ்வாய் உள்ளது, வருகைக்கு நன்றி சார்
Deleteமின்னல் வரிகள் ~~~~!!!!
ReplyDeleteநன்றி அம்மா தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும்
Deleteஆஹா... கணேஷ் நல்ல நண்பர்... அவரைச் சந்தித்ததை சுவையாக எழுதியிருக்கீங்க சீனு... வாழ்த்துகள்.
ReplyDeleteரொம்ப நன்றி வெங்கட் சார் உங்களை கூட ஒருமுறை ரயில் நிலையத்தில் சந்தித்ததாக நீங்கள் எழுதி இருந்தீர்கள், அதைப் படிக்கு பொழுதே மகிழ்வாய் இருந்தது. வருகைக்கு நன்றி சார்
Deleteஏதோ சஸ்பென்ஸ் படம் பார்க்கிற மாதிரி இருந்தது சீனு...... :)
ReplyDeleteஹா ஹா ஹா ஆனா சஸ்பென்ஸ் க்கும் எனக்கும் ஒத்தே வராது தல...மகிழ்ந்து படித்ததில் மகிழ்ச்சி நண்பா
Deleteசீனு... நான் சாதாரண ஆசாமிதான்னு சொன்னாலும் உங்க மனசுல உயர்ந்த இடம் தந்ததால பிரபல(?) பதிவர்னு அடைமொழியோட சொல்லி அசத்திட்டீங்க. சந்தித்துப் பேசிய பொழுதுகள் எனக்கு மிகமிக மகிழ்வைத் தந்தன என்பதே நிஜமான நிஜம். நீங்கள் அம்பத்தூர்வாசி என்று நினைத்துத்தான் சென்ட்ரல் வரச் சொன்னேன். இல்லாவிட்டால் நானா அலையவிடும் ஆசாமி? இந்த ஒரு திருத்தம் தவிர, மற்றபடி நீங்கள் ரசித்து எழுதியிருப்பதில் கொள்ளை கொள்ளையாய் மகிழ்ந்து போனேன். மிக்க நன்றி தோழா.
ReplyDeleteசார் இனிமே எல்லாமே இப்படித் தான். பிரபலங்கள் வாழ்கையில் இதெல்லாம் சாதாரணம்.
Delete//இல்லாவிட்டால் நானா அலையவிடும் ஆசாமி?// சார் உங்களை நான் அலைய விட்டுவிடக் கூடாது என்பதில் தான் அத்தனை மறுப்புகள் சொன்னேன்,
// மிகமிக மகிழ்வைத் தந்தன என்பதே நிஜமான நிஜம்/. இதை படிக்கும் பொழுதே இன்னும் மகிழ்வாய் உள்ளது.
மிக்க நன்றி சார் அன்றைய சந்திபிர்க்கும் இன்றைய வருகைக்கும்
இனிய சந்திப்பை அருமையா எழுதி உள்ளீர்கள் நண்பரே !
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி... (த.ம. 7)
மிக்க நன்றி தனபாலன் சார், திண்டுக்கல் பக்கம் வந்தால் உங்களையும் சந்தித்து விடுவோம், முடிந்தால் நமது பதிவர் சந்திப்பிற்கும் வாருங்களேன்
Deleteசுவாரஸ்யம் சமீபமாய் தான் அவரை அறிவேன். நெடு நாள் தெரிந்தது போன்ற உணர்வு இவருடன் பழகும் போது வருகிறது
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கும் சுவையான பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சார்...
Deleteஆமாம் சகோ அவர் உண்மையிலேயே பிரபம் தாங்க .
ReplyDeleteசந்திப்பை விறுவிறுப்பாக கதை படிப்பது போல சொல்லியுலீர்கள். பதிவர் சந்திப்பு, புத்தகம் என்றதுமே அது கணேஷ் சார் தான் என்று கணித்துவிட்டேன். அழகிய சந்திப்பு!
ReplyDeleteநான் அறிந்த கணேஷை உங்கள்மூலம் அறியும்போது பல புதிய கோணங்களில் பார்க்க முடிகிறது!
ReplyDeleteசிறப்பான பதிவரை சந்தித்து சிறப்பான தகவல்கள் தந்தமைக்கு நன்றி! இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை!http://thalirssb.blogspot.in/2012/07/blog-post_24.html
ReplyDeleteபதிவை வாசிக்க துவங்கும் போதே யூகித்து விட்டேன்! இடையில் TVS படம் பார்த்ததும் உருதிப்படுத்திவிட்டேன்!
ReplyDelete(TM 11)
கொடுத்து வைத்தவன் சீனு நீ...எனக்கெல்லாம் இந்த மாதிரி பதிவர் கூட்டமோ,இல்லை பதிவருடன் சந்திப்போ நடக்குமா?கடந்த விடுமுறையில் நெல்லையில் ஏதாவது சந்திப்பு நடக்கும் என எதிர்பார்த்தேன்.யாரும் அசைந்தா மாதிரி தெரியலை.அடுத்த தடவை யாரை பார்த்தாலும் எனக்கும் ஒரு புத்தகத்தை வாங்கிட்டு வாப்பா...நீ பேசாம வாரா வாரம் ஒரு பதிவரை பார்த்துக்கோ...அந்த சந்திப்பை பதிவாவும் போடலாம்..என்னை போல உள்ளவங்களுக்கு அறிமுகமும் கிடைக்கும்...சுவராஸ்யமான பதிவு...
ReplyDeleteநண்பா இவர் தானே அந்த இளம் பதிவர்..
ReplyDeleteஅழகாக சொல்ல வேண்டும் என்பதை உங்களுக்கு சொல்லித்தரவா வேண்டும்.......
ReplyDeleteஎந்த வித அழுப்புமில்லாமல் படிக்கக் கூடிய அனுபவப் பகிர்வு.......
மாம்பலம் இரயில் நிலையத்துக்கு அருகேதான் வீடு என்று சொன்னவுடனேயே
ReplyDeleteஅந்தப் பதிவர், பால கணேஷ் என்று தெரிந்துகொண்டுவிட்டேன். நான் அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்த பொழுது, எனக்கும் ஒரு புத்தகம் (அவர் வடிவமைத்தது) கொடுத்தார். பல பிரமுகர்கள் கூறியிருக்கும் முத்தான, சத்தான விஷயங்கள். இதுவரையிலும் நான் சந்தித்திருக்கும் நான்கு பதிவர்களில், நண்பர் கணேஷ்
மறக்க முடியாதவர்.
நல்ல சந்திப்பு,நல்ல பகிர்வு.
ReplyDeleteமகிழ்சியில் பங்கெடுக்கிறேன் சொந்தமே!.இவர் பற்றிய கூடுதல் அறிமுகம் தந்த சொந்தம் நீனுவிற் 1 ஸ்றோங் ரீ பாஸ்...
ReplyDeleteவாழ்த்துக்கள்.வழமை போல கலகலப்பாய் மைண்ட் வாய்ஸ் எல்லாம் போட்டு சொல்லிருக்கிங்க.சந்திப்பேர்ம் சொந்தமே:)
sako..!
ReplyDeletemoontru murai vanthu padikka mudiyaamal-
ponathu!
aanaalum thaamathamaaka vanthu padithu vitten!
santhippil ungalukku santhosam!
pakirnthathaal enakku santhosam!
சீனு சந்திப்பை அருமையாய் சொல்லி இருக்கீங்க....சீனு என்னும் பிரபல பதிவரை நான் எப்ப சந்திப்பேனோ ஆண்டவா எனக்கு சிக்கிரம் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவும்...சீனு பேட்மேன் பார்த்தாச்சா பார்க்கவில்லை என்றால் பார்க்கவும் உடனே எனக்கும் ஹாலிவுட்க்கும் ஆகாது போகாது என்று எல்லாம் சொல்ல கூடாது இதற்கு முந்தைய பாகம் பார்க்கா விட்டாலும் பரவாயில்லை பாருங்கள்.....நீங்க சொன்ன பிரபல பதிவரின் தளத்திற்கு இதுவரை செல்லவில்லை.....
ReplyDeleteநீயும் பிரபல பதிவராய் மாறிவிட்டாய் தமிழ்மணம் 12
ReplyDeleteநீங்கள் சந்தித்ததை சொன்னவிதம் அருமை நண்பா
ReplyDelete