17 Jul 2012

பொன்னியின் செல்வன் புதினம் என்னும் புதுமை


பாஞ்சாலி சபதத்தால் ஒரு பாரதம், கைகேயி சாபத்தால் ஒரு ராமாயணம் என்று இந்தியாவின் இரு பெரும் காவியங்களுக்கு காரணகர்த்தா பெண்கள். இதை குறிபிடுவதன் காரணம் பெண்கள் எவ்வளவு வலிமையான சக்தி! அவர்கள் வாக்கின் வலிமை, எவ்வளவு நேர்மறை விளைவுகளை உருவாக்கும். அதே நேரத்தில் எத்தகைய எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும் என்பதை உணர இக்காவியங்கள் ஒரு சிறிய உதாரணம், சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூட பெண்களின் பெருமை கூறும் தமிழ்க் காப்பியங்கள். 



பெண்கள் பெருமை கூறும் காவியங்கள் இத்தனை இருக்க இவை எதுவுமே சமகாலத்தில் எழுதப்பட்டது இல்லை, இதனை மனத்தில் வைத்துத் தானோ என்னவோ கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் என்னும் அருமையான படைப்பை எழுதி இருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட மின் புத்தகம், ஐந்து பாகங்கள். ஒரு பக்கத்திலோ இல்லை ஒரு பாகத்திலோ கூட சலிப்பு தட்டாத எழுத்து வேகம். அத்தகைய படைப்பைப் படித்தது மிகப் பெரிய விசயமாகவே கருதுகிறேன். பதினான்கு நாட்கள் இரவு பகலாக படித்தேன்,  இரவு பகலாக படித்ததற்குக் காரணம் அதில் இருந்த சுவாரசியமும், அடுத்து என்ன நடக்கும் என்று சிந்திக்கக் கூட அவகாசம் இல்லாமல் தன் அபார எழுத்துக்களால் கட்டிபோட்டு இழுத்துச் சென்ற கல்கி அவர்களின் எழுத்துத் திறமையும் தானே அன்றி வேறெதுவுமில்லை. 

ல்கி அவர்கள் தஞ்சையில் பிறந்ததாலோ என்னவோ அவரது வரலாற்றுப் புதினங்கள் அனைத்தும் தஞ்சையைச் சுற்றி அமைந்த சோழ சாம்ராஜ்யத்தையும் பல்லவ சாம்ராஜ்யதையுமே சுற்றி நடக்கும். சோழவள நாட்டின் பெருமைகளையும் பசுமையையும் அத்தனை அழகாய் படம் பிடித்துக் காட்டியிருப்பார். இதை படிக்கும்பொழுது பாண்டிய நாட்டில் இருந்து வந்த நான் நினைப்பது, யாரோ ஒருவர் சொல்லிய வார்த்தைகளைத் தான்,

சேர சோழ பாண்டியர்கள் தனித் தனியே 
பாதி உலகத்தை ஆண்டார்கள்,
இமயத்தில் கொடியையும் நட்டார்கள், 
மூவேந்தர்களும் ஒன்றாய் இணைத்திருந்தால் 
உலகையே ஆண்டிருக்கலாம் காரணம்   
தமிழன் அத்தனை 
வலிமையானவன் வளமையானவன்.  

இனி பொன்னியின் செல்வனை நோக்கி பயணிப்போம். 

சோழ நாட்டிற்கு, சிற்றரசர்களாலும் எதிரி நாடுகளான சேர பாண்டிய ஈழ நாடுகளில் இருந்தும் ஆபத்து வருகிறது. பேரரசன் விஜயாலய சோழர்  வயோதிகம் காரணமாய் படுத்தபடுக்கை ஆகிவிட்டார் மேலும் சிற்றரசர் ஒருவரால் மறைமுகமாக சிறை பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார். அவர் பெற்ற பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காரணங்கள் நிமித்தம் இருக்கிறார்கள். மூத்த மகன் ஆதித்த கரிகாலன் தந்தை வந்து வாழ்வதற்காக பொன்மாளிகையை கட்டிக்கொண்டு காத்திருக்கிறான், தன் ஒரே மகள் குந்தவை பழையாறை என்னும் இடத்தில் வசித்து ராஜாங்க காரியங்களைப் பார்த்து வருகிறாள், இளைய மகன் அருள்மொழிவர்மர் பாண்டிய மணிகிரீடம் ஒளித்து வைக்கபட்டிருக்கும் ஈழ நாட்டின் மீதான போர் தொடுப்பில் இருக்கிறார். இங்கிருந்து தான் கதை தொடங்குகிறது.

சுந்தர சோழர் மற்றும் அவரது பிள்ளைகளின் உயிருக்கும், சோழ நாட்டிற்கும் பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகளால் ஆபத்து வருகிறது. இந்த ஆபத்துகளை எப்படி எதிர் கொள்கிறார்கள், தங்கள் உயிரைக் காத்து நாட்டையும் எவ்விதம் காப்பாற்றப் போகிறார்கள் என்பதை வரலாற்றுப் புதினமாக சொல்கிறார் கல்கி கிருஷ்ண மூர்த்தி அவர்கள். இக்கதையிலே பல பெண்கள் இடம் பெற்றாலும் இடம் பெரும் அனைவரும் முக்கியத்துவம் பெற்றாலும் இரு பெண்கள் மட்டும் தனித்துவம் பெறுகிறார்கள். அவர்கள் சோழர் குலமகள் குந்தவை மற்றும் குலநாசம் செய்யத் துடிக்கும் நந்தினி.

பெண்கள் நினைத்தால் நல்லதும் நடக்கும் நாசமும் விளையும் என்பதை இவ்விருவர் மூலம் எடுத்துச் சொல்லும் விதம் அற்புதமாக இருக்கும். மதியை மயக்கி காமத்தை பொழியும் கண்களுடன், சந்திக்கும் ஆண்கள் அனைவரையும் தன் வலையில் விழச் செய்யும் பெண்ணாக நந்தினியையும், மதியை விழிப்புறச் செய்து அன்பும் பண்பும் நிறைந்த, ராஜ காரியங்களில் முடிவெடுக்கும் தைரியமான பெண்ணாக குந்தவையையும் படைத்திருப்பார். நிற்க இக்கதையில் இடம் பெரும் எவையுமே கற்பனைக் கதாப்பாத்திரம் கிடையாது. வரலாற்று நிகழ்வினுள் தன் கற்பனையைப் புகுத்தி இவ்வாறு நடந்திருக்கலாம் என்று சொல்லுவார், ஆங்காங்கே அவர் கூறும் வரலாற்று நிகழ்வுகளுக்கான ஆதாரங்களையும் கூறிச்செல்வார். உதாரணத்திற்கு இன்னார் இன்னாரை மனம் புரிந்தார் என்பதையும், இன்னாருக்கு இவ்வளவு சொத்துக்கள் இருந்தது அதை இவ்விதங்களில் செலவு செய்தற்கான செப்பேடுகள் கிடைத்துள்ளது என்பதையும் ஆதாரமாகக் கூறுவார். வரலாற்றின் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கச் செய்வார்.  

பொன்னிநதியில் ஓடத்தில் செல்லும்பொழுது தவறி நதியினுள் விழுந்துவிடும் குழந்தை அருள்மொழிவர்மனை திடிரென்று தோன்றி மறைந்த ஒரு பெண்மணி காப்பாற்றிக் கொடுத்ததால் அவருக்கு பொன்னியின் செல்வன் என்ற பெயர், இந்தப்  பொன்னியின் செல்வனே பிற்காலத்தில் முதலாம் ராஜராஜசோழனாக மாறியவர் என்பது வரலாறு சொல்லும் உண்மை. 

ரசாங்கம் எப்படி நடைபெற்றிருக்கும் அதில் யாரெல்லாம் முக்கிய பொறுப்புகள் வகித்திருப்பார்கள் போன்ற பல விசயங்களை நுணுக்கமாக ஆராய்ந்து எழுதி இருப்பார், அரசன் என்பவன் எப்படி செயல் பட வேண்டும், அவன் கீழ் பணியாற்றுபவர்களை எப்படி எல்லாம் கையாள வேண்டும் என்பதை தன் கற்பனை மூலம் மெருகேற்றி இருப்பார். முதல் அமைச்சராக வரும் அநிருத்த பிரம்மராயரும் அவரின் ஒற்றனாக வரும் திருமலை நம்பியும் அரசாங்கத்தின் தூண்களாக இருப்பார்கள். ஒரு ஒற்றன் அரசாங்கத்திற்கு எவ்வளவு முக்கியமானவன் என்பதையும் அவன் எவ்விதம் விவேகத்தோடு செயல்பட வேண்டும் என்பதையும் திருமலை நம்பி மூலம் சொல்லியிருப்பார். 

கோபத்தில் முடிவெடுக்கும் நண்பனான பல்லவன் பார்த்திபேந்திரனும், மூடத்தனத்தால் முடிவேக்கும் கந்தமாறனும் நந்தினியின் காமவலையில் விழுந்தபின் கதையின் போக்கையும் வேகத்தையும் பல மடங்கு மாற்றியிருப்பார்கள் . ஆராயாமல் செய்யும் காரியம் கெடுதலில் முடியும் என்பதை இவர்கள் மூலம் அறியலாம். பலபக்கங்களில் இருந்து வரும் நெருக்கடிகளைக் கண்டு சோழப் பேரரசர் எப்படி கலங்குகிறார், முடிவெடுக்கத் தெரியாமல் திணறுகிறார். இந்த நெருக்கடி காலச் சூழ்நிலையை அவர் மகள் குந்தவையும் முதலமைச்சர் பிரம்மராயரும் கையாளுகிறார்கள் என்பதைப் படிக்கவே பிரம்மிபாய் இருக்கும். பார்த்துப் பார்த்து செதுகியிருப்பார் பொன்னியின் செல்வனை.

வ்வொரு  கதாப்பாத்திரத்திற்கும் உயிர் கொடுத்திருப்பார் சரியான விகிதத்தில் உணர்ச்சி கொடுத்திருப்பார், நம்மையும் உணரச் செய்திருப்பார். கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் (1950-1954) வரையில் எழுதிய தொடர்கதையை பல பதிப்புகள் கண்டு சாதனை படைத்த புதினம் என்னும் புதுமையை விமர்சனம் என்னும் வார்த்தைக்குள் அடக்கிவிட முடியாது. நான் கூறியதை கதையின் கரு என்று வேண்டுமானால் கொள்ளலாம். கதைச் சுருக்கமோ கதையையோ எல்லாம் நான் சொல்லவில்லை, பாதி பேர் படித்திருப்பீர்கள், படிக்காத மீதிபேர் படித்துவிடுங்கள். படிக்காவிட்டால் படித்து விடுங்கள், படித்திருந்தால் பெருமை கொள்ளுங்கள் அறுபுதமான புத்தகம் ஒன்றை படித்ததற்காக.
      
முக்கியமான ஒருவரை நான் விட்டுவிட்டேன் அல்லவா? , பொன்னியின் செல்வனைப் படித்தவர்களோ அல்லது அதனைப் பற்றி அறிந்தவர்களோ நான் வேண்டுமென்றே செய்த பிழையைக் கண்டு பிடித்திருக்கலாம். ராஜாங்கத்திற்கு ஆபத்து வந்திருக்கிறது காப்பாற்றி ஆக வேண்டாமா ?, கதைக்கு நாயகன் வேண்டாமா ?. ஆம் நான் கூற மறுத்தது கதையின் நாயகனைப் பற்றித் தான்.

என்னைக் கவர்ந்த கதையின் நாயகனை, சோழ சாம்ராஜ்யத்தைக் காப்பாற்ற பெரிதும் பாடுபட்ட  வாணர் குலத்து வீரனை, அரசரர் புதல்வர்களின் நண்பனை, எல்லோரரயும் தன் வலையில் விழச் செய்த நந்தினியையே தன் வலையில் விழச் செய்த உள்ளம் கவர் கள்வனை, சுஜாதாவின் கணேஷ் - வசந்த் பாத்திரம் போல் என் மனம் கவர்ந்த வந்தியத்தேவனைப் பற்றி ஒரு பதிவில் ஓரிருவரிகளில் சொல்லிவிட்டால் அவன் எப்படி என்னை மன்னிப்பான். காத்திருங்கள் அவனுகென்று ஒரு பதிவு அதுவே அடுத்த பதிவு.  

46 comments:

  1. அற்புதமான பதிவு....பொன்னியின் செல்வன் புக்கை எத்தனை முறை படிச்சசேங்க.....????

    ReplyDelete
    Replies
    1. முதல்வராக வருகை தந்து என்னை உர்ச்சகபட்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் ராஜ்

      Delete
  2. நான் இது வரை படித்தது இல்லை படிக்க வேண்டும் எனவும் தோன்றவில்லை...ஏன் என்றே தெரியவில்லை சிறுவயதில் இதை போன்றதை படிக்க ஆசை பட்ட நான் இப்ப இதை எடுத்து பார்க்க கூட தோனவில்லை...சீனு மன்னிக்கவும் நீ எழுதியதில் பாதிக்கு பின் படிக்கவே இல்லை...இதில் சென்றால் சுஜாதா எழுதிய சில ebook கிடைக்கும் அது மட்டும் தான் என்னால் செய்யமுடியும் கதை படிப்பது என்றாலே ஒரு வித சலிப்பு ஏற்படுகிறது(காமிக்ஸ் தவிர) http://www.tamilcube.com/res/tamil_ebooks.html

    ReplyDelete
    Replies
    1. நண்பா நீ படிக்கவில்லை ஆர்வமில்லை என்பதையெல்லாம் ஒத்துக் கொள்கிறேன், என்றாவது ஒரு நாள் உனக்கு கண்டிப்பாக ஆர்வம் வரும் அன்று தவறாமல் படித்துவிடு... காரணம் அத்தனை அருமையான புத்தகம்

      சுஜாதாவின் பெரும்பழ மின் புத்தகங்கள் மற்றும் புத்தகங்கள் என்னிடம் உள்ளன நண்பா... இருந்தும் என்னிடம் இல்லாத புத்தகங்கள் உள்ளதா என்று பார்கிறேன். தங்கள் கலைசெவைக்கு மிக்க நன்றி நண்பா

      Delete
  3. கல்கியில் ஒவ்வொரு முறை பிரசுரமாகும் போதும்.. அந்தந்த ஓவியர் கைவண்ணத்திற்காகவே பிரித்து வைத்து பைண்ட் செய்து வாசித்தோம். தாத்தா காலத்திலிருந்து கலெக்க்ஷன்.. வந்தியத்தேவனை யாரால் மறக்க முடியும்.. நம் வீட்டில் ஒருவரைப் போல நேசிக்க முடிந்த கதாபாத்திரமாயிற்றே..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்...

      ஒன்று தெரியுமா ரிஷபன் சார் நான் படித்த மின் புத்தகத்தில் ஒரு படம் கூட கிடையாது...

      அணைத்து கதாபாத்திரங்களையும் என் கற்பனையில் மட்டுமே செதுக்கிக் கொண்டு படித்தேன், அப்படிப் படித்த எனக்கே பிடித்துப் போயிருந்தால் படம் பார்த்து படித்த உங்களை எல்லாம் கற்கவ வேண்டும்

      Delete
  4. பொன்னியின் செல்வன் கதைக்கு மிகப் பெரிய ப்ளஸ் மணியம் அவர்களின் படங்கள். குந்தவை, ஆழ்வார்க்கடியான், வந்தியத் தேவன் பெரிய/சிறிய பழுவேட்டரையர்கள் என்றெல்லாம் சொன்னால் அவர்கள் உருவம் இன்றும் நினைவுக்கு வருமளவு நம் கண்முன்னே நிறுத்தியவர் அவர்தான். எனக்கு ஒரு பெரிய குறை இப்போது எல்லா பதிப்பகங்களிலும் புத்தகம் போடுகிறார்கள். சாண்டில்யன் ஆகட்டும், கல்கி ஆகட்டும் அப்போது வந்த ஓவியங்களுடன் பதிப்பித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று குறை நீண்ட நாட்களாக உண்டு. யவனராணியையோ, சிவகாமியையோ, வந்தியத் தேவனையோ அந்தந்த உருவங்களுடன் - ஓவியங்களுடன் - படித்தால்தான் சிறப்பு!ம்....ஹூம்.... இதெல்லாம் பைன்ட் பண்ணி அந்தக் காலம் முதலே பாதுகாத்து வந்திருந்தால்தான் சாத்தியம். விகடனில் ஓவியங்களுடன் வெளிவந்த சமீபத்துப் பதிப்பு கூட முழு திருப்தியைத் தரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ ராம் சார் நான் ஒரு படம் கூட பார்கவில்லை, அனைத்தையும் கற்பனை மட்டுமே செய்து கொண்டேன்... உங்களிடம் அத்தகைய பழைய படங்கள் இருந்தால் காண்பியுங்கள் பார்த்து ரசிக்கிறேன்... வருகைக்கு நன்றி சார்

      Delete
  5. அது சரி... சங்கதாராவும் படித்து விட்டீர்கள்தானே...!

    ReplyDelete
    Replies
    1. கேள்வி தான் பட்டிருக்கிறேன், படித்தது இல்லை.... உங்கள் ஆர்வமான கேள்வியிலேயே அதனை படிக்க வேண்டும் போல் தோன்றுகிறது. நிச்சயம், படிக்கிறேன்

      Delete
  6. பொ.செ. விமர்சனம் நல்ல முயற்சி.
    ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை ஒரு பக்கத்தில் விமர்சனம் எழுதுவது கடினம். அதிலும், பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு மாபெரும் வெற்றி பெற்ற பலராலும் பலமுறை படிக்கப்பட்ட புத்தகத்தை விமர்சனம் செய்தால் அனைவரும் விமர்சனத்திலுள்ள குறைகளையேத் தேடுவர்.

    நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. // விமர்சனம் செய்தால் அனைவரும் விமர்சனத்திலுள்ள குறைகளையேத் தேடுவர்.// அது உண்மை தான் சார். நல்ல வேலையாக நானும் விமர்சனம் செய்யவில்லை மாறாக ஒருவரும் குறை தேடவில்லை. உங்கள் வருகையும் உற்சாகப்படுத்தும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன்

      Delete
  7. சாரி நண்பா.. எனக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ரொம்ப தூரம்!
    பொன்னியின் செல்வன் சூப்பர் கதைன்னு எல்லாரும் சொல்லி கேள்விப்படிருக்கிறேன்.. ஆனா எனக்குல்லாம் படமா பார்த்ததுக்கப்புறம் தான் இன்ட்ரஸ்டே வரும்!
    அதுனால இந்தப் பதிவை ஸ்கிப் செய்து கொள்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. இன்று ஸ்கிப் செய்து கொள் நண்பா..ஆனால் தவற விட்டுவிடாதே... வருகைக்கு நன்றி நண்பா

      Delete
  8. எத்தனை முறை படித்தாலும் அலுக்காத கதை பொன்னியின் செல்வன். அதைப் பற்றிய உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சீனு.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக சார் அற்புதமான புத்தகம்... தங்கள் தொடர் வருகையால் தொடர்ந்து மகிழ்ச்சி அடைகிறேன்

      Delete
  9. பொன்னியின் செல்வனுக்கு ஈடான மர்ம நாவல் இன்றுவரை எழுதப்படவில்லை என்றே கருதுகிறேன்.இதனைப் பற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருக்கலாம்.
    தொடருங்கள் காத்திருக்கிறோம்.
    த.ம 7

    ReplyDelete
    Replies
    1. முரளி சார் சரியாகச் சொன்னீர்கள் நிச்சயமாக அது மர்ம நாவல் தான்... பேசிக் கொண்டே இருக்கலாம்... படித்துவிட்டேன் பேசத் தான் ஆள் இல்லை... இதோ நாம் இங்கு பேசிக் கொண்டு இருகிறோமே மகிழ்வாய் உள்ளது

      Delete
  10. நல்ல பதி பாஸ் பொதுவா பொன்னியின் செல்வன் பற்றி நீறையப் பேர் கதைத்திருக்க பார்த்திருக்கிறேன் இதுவரை நான் படித்தது கிடையாது...

    படிப்பதற்கு தூண்டுகிறது உங்கள் பதிவு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக படியுங்கள் பாஸ் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அதற்க்கு கல்கி கியாரண்டி

      Delete
  11. ஆஹா....!!!அருமையான பகிர்வு.விரைவில் அடுத்த பதிவை வெளியிடுங்கள்.காத்திருக்கிறேன்....!சந்திப்போம் சொந்தமே!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவிர்க்காய் காத்திருக்கும் உங்களுக்கு மனம் நிறை நன்றி தோழி

      Delete
  12. பொன்னியின் செல்வன் நான் படிக்க வேண்டும் என வாங்கி வைத்து இருக்கும் ஒரு புத்தகம் நண்பா.. ஆனால் இன்னும் நேரம் அமையவில்லை.. கண்டிப்பாக இந்த பதிவை வாசித்தவுடன் இன்னும் விருப்பம் கூடியும் இருக்கிறது.. நாவலில் சில பகுதிகள் வாசித்தேன்.. அருமை..

    ReplyDelete
    Replies
    1. வாங்கி வைத்துவிட்டாயா அப்போ படித்து விட வேண்டியது தானே

      Delete
  13. பொன்னியின் செல்வன் நான் இன்னும் படித்ததில்லை! ஆனால் படிக்கும் ஆவலை தூண்டும் விதமாக இருக்கிறது அண்ணா தங்களது இந்த பதிவு! பகிர்வுக்கு நன்றி அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. பதிவுலகம் பக்கம் உங்களைக் காணவில்லையே தோழி... சீக்கிரம் பதிவு ஒன்றைப் பதியுங்கள்

      Delete
  14. sako!

    naan kelvi pattullen
    padithathilai!
    ungal moolam "karu" therinthu kondathaal makizhchi!

    ReplyDelete
    Replies
    1. சீனி நீங்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகம்... நிச்சயம் ரசிப்பீர்கள்

      Delete
  15. சிறப்பான பதிவு... எத்தனை முறை படித்தாலும், மீண்டும் படிக்கத் தூண்டும்..
    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 9)

    "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete
    Replies
    1. சார் தங்கள் வருகைக்கும் தமிழ் மன வாக்குக்கும் நன்றி... உங்கள் பதிவுகளை நான் விடுவதில்லை சார்

      Delete
  16. மிக அருமையான பதிவு.எனக்கு மிக பிடித்த புத்தகம்.படித்து முடிக்கும் வரை எந்த வேலையையும் செய்ய முடியவில்லை.அருமையான நடை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி செந்தில் சார் தங்களுக்கும் தங்கள் முதல் வருகைக்கும்

      Delete
  17. பலமுறை திரும்பத் திரும்ப வாசித்து ரசித்த புத்ககம் பொன்னியின் செல்வன். இப்போ நீங்க படிச்சு ரசிச்சு எழுதியிருக்கறதைப் பாக்கறப்பவும் மகிழ்ச்சியா இருக்கு. நண்பர் ஸ்ரீராம் சொல்லியிருக்கறதை கவனியுங்க சீனு. வானதி பதிப்பகம் வெளியீடான ‘காலச்சக்கரம்’ நரசிம்மா எழுதின ‘சங்கத்தாரா’வையும் அவசியம் வாங்கிப் படிச்சுடுங்க. வந்தியத் தேவனை அடுத்ததாய் சந்திக்க ஆவலுடன் நான்.

    ReplyDelete
    Replies
    1. சின்ன வாத்தியாரே சங்கதாரவை கண்டிப்பாய் வாங்கி படித்து விடுகிறேன்... நான் பெரிதும் மதிக்கும் நீங்கள் இருவருமே சொன்னதன் பின்பு அப்புத்தகத்தை தவற விடுவேனா... தங்கள் வருகையால் உள்ளம் நிறைகிறேன் வாத்தியாரே

      Delete
  18. enakkum rompa pidikkum.....பொன்னியின் செல்வன்

    thanjavur kovilukku pakkathilaye iruppathaal.....naan koduththu vaiththavan...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் கல்கி போன்ற மனிதர்கள் வாழ்ந்த பூமியில் வாழ்வதற்கு

      Delete
  19. பொன்னியின் செல்வன் விமர்சனம் மிக அருமையாக உள்ளது .
    மேலும் தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மபாளடியால் தங்களுக்கும் தங்கள் முதல் வருகைக்கும்

      Delete
  20. பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பித்திறுக்கிறேன் உங்கள் பதிவு இன்னும் உற்சாகமளிக்கிறது நன்றி.

    ReplyDelete
  21. Had a similar experience with Ponniyin Selvan, wonderful one. Every tamil people should read this.

    ReplyDelete
  22. Had a similar experience with Ponniyin Selvan. Wonderful one.

    ReplyDelete
  23. நான் சிறுவயதில் படித்தும் படிக்காமலும், படங்களைப் பார்த்து ரசித்து கீற முயன்றதும் நினைவுக்கு வருகிறது. குந்தவை, வந்தியத்தேவன் பெயர்கள் மிகப் பிடிக்கும் மறக்காத பெயர் வானதியும் மிகப்பிடிக்கும். இடுகைக்கு நன்றி. நானும் வாசிக்க எண்ணம் உண்டு. ஆனால் இ- புத்தகமாக அல்ல.நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  24. பொன்னியின் செல்வன் நாவல் பத்தி நிறையக் கேள்விப்பட்டிருக்கேன். இதுவரை படிச்சதில்லை. இப்ப படிக்கணும்கற ஆவலை உண்டாக்கிட்டீங்க நீங்க. படிச்சிடறேன் நண்பா.

    நான் என் தளத்துல ஆன்மீகம். ஆடி மாதம் பத்தின சிந்தனைகளை உங்களை தொடரச் சொல்லி வேண்டுகோள் விடுத்திருக்கேன். என் தளம் வந்து பார்த்துட்டு தொடரும்படி கேட்டுக்கறேன்.

    http://nirusdreams.blogspot.in/2012/07/blog-post_20.html

    ReplyDelete
  25. Arumaiyaana padhivu. Enakkum ponniyin selvan naavalai migavum pidikkum. O/L padikkum podhe perum paadu pattu 1 maadhaththil vaasiththu mudiththen. Adhilirundhu thaan kalkiyaiyum nesikka aarambiththen. Innum eludhungal. Appadiye namma thalaththukkum konjam vandhuttup pogalaame? http://newsigaram.blogspot.com

    ReplyDelete
  26. பொன்னியின் செல்வனை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது, சீனு. கோடை விடுமுறையில் ஸ்ரீரங்கம் போகும்போதெல்லாம் படிப்பேன். இப்போது என் பெண் அதேபோல திரும்பத்திரும்ப படித்து வருகிறாள்.
    அடுத்த தலைமுறையும் படிக்கும்!
    காலத்தை வென்ற கதை!

    அதைப்பற்றி பேசுவதே ஒரு ஆனந்தம், இல்லையா?

    ReplyDelete
  27. //படிக்காவிட்டால் படித்து விடுங்கள்//

    அவசியம் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டுள்ளது தங்கள் பதிவு..

    வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete