தடங்கல் நாம் நம் அடுத்த அடியை எடுத்து வைக்க தயாராகி விட்டோம் என்பதை தோல்விக்கு காட்டுவதற்கான தடங்கள். வாழ்கையில் ஒவ்வொரு வேளையில் ஒவ்வொரு விதமான தடங்கல் வருவது இயல்பு. சமீப காலத்தில் இணையத்துடன் இணைய முடியாத அளவிற்கு ஒரு தடங்கல் ஏற்பட்டது, மிகவும் சோர்ந்து விட்டேன், பழைய நிலைக்கு வர முடியுமா மீண்டும் நம்மால் ப்ளாக் எழுத முடியுமா என்பது போன்ற பல கேள்விகளை கேட்டுக் கொண்டும் சமாதானம் அடைய முடியாத பல பதில்களை எனக்கு நானே கூறிக் கொண்டும் இருந்தேன், இறுதியாக நான் எடுத்த முடிவு, இனி எழுத வேண்டாம் (உங்கள் சந்தோசம் புரிகிறது, காத்திருங்கள் இன்னும் பதிவு முழுமையடையவில்லை), மற்ற நண்பர்களின் பதிவுகளை மட்டும் படித்து அவர்களை உற்சாகப்படுத்துவோம் என்ற முடிவுக்கு வந்தேன்.
ஒருவாரம் கழித்து ப்ளாக்கை திறந்தால் பல சந்தோசங்கள் என்னை வரிசையாக வரவேற்றன. அதில் நான் பெற்ற முதல் சந்தோசம் இதை முதல் சந்தோசம் என்பதை விட முதல் விருது என்றும் சொல்லலாம். என்னை மதித்து(!) சகோதரி கலை, அவர் பெற்ற விருதை என்னுடன் பகிர்ந்து கொண்டது. என் வாழ்வில் நான் பெற்ற விருதுகளில் இதை எத்தனையாவது விருதாகக் கொள்ளலாம் என்று என்னுடைய வாழ்க்கையை சிறிது பின்னோக்கிப் உற்றுப் பார்த்ததில் ஒன்றைப் புரிந்து கொண்டேன் வாழ்க்கையில் நான் பெற்ற முதல் விருது இது தான். அதனால் அந்த மகிழ்ச்சியை எனக்கு அளித்த கலை அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் (ஆண்டவரே கோட்டான கோடி நன்றிகள் ஆண்டவரே கோட்டான கோடி நன்றிகள்).
எனக்கு அளித்த விருதுகளை நான் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு தடங்கலுக்கு வருத்தமும் அதற்கான காரணத்தையும் அதிலிருந்து மீள காரணமானவர்களையும் பற்றி பகிர்ந்துகொள்ள கடமைபட்டுள்ளேன்.
பத்தாவது முடித்தவுடன் "அடுத்து என்ன குரூப் எடுக்க போற" என்ற கேள்விக்கு விடை தேடி ஆரம்பித்த பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பிளஸ் டூ நான் முடிப்பதற்கு முன்பே சமுதாயம் அடுத்த கேள்வியை தயார் செய்து விட்டது "இஞ்சினியரிங் படி" என்ற குரல் திரும்பிய இடங்களில் எல்லாம் எதிரொலித்தது. நான் எடுத்த மிக மோசமான நல்ல மதிப்பெண்களுக்கு (சமுதாயத்தைப் பொறுத்தவரை அது மோசமான மதிப்பெண் நான் படித்த படிப்பை பொறுத்தவரை அது நல்ல மதிப்பெண்!) இஞ்சினியரிங் படிப்பு என்பது கனவாகிப் போனது.மிகப் பெரிய போராட்டத்தின் முடிவில் கலை அறிவியல் கல்லூரியில் படிப்பதற்க்கான இடம் கிடைத்தது. இளங்கலை முடியும் தருவாயில் வேலைக்குச் செல்லபோகிறேன் என்ற என் வாயை அடைத்து "முதுநிலை படி"க்கச் சொல்லியது சமுதாயம்.
சென்னையின் மிகப் பெரிய பொறியியல் கல்லூரி என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்கிற ஒரு கல்லூரியில் அரசாங்க உதவியுடன் இடம் கிடைத்தது. இறுதி ஆண்டின் இறுதியில் கேம்பஸ் இண்டர்வியு என்ற சம்பிரதாயத்தின் உதவியில் தலைசிறந்த நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சமுதாயதிற்கு தெரியாது அந்த நிறுவனம் வேலைக்கு அழைப்பதற்கு பல நாட்கள் ஆகும் என்று. படிப்பு முடிந்ததும் "எப்ப ஜாயின் பண்ண போற" என்ற கேள்வியையும் அது கேட்கத் தவறவே இல்லை. எனக்குத் தான் தெரியுமே. அதனால் தற்சமயத்திற்காக ஒரு சிறு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு நல்ல நாளில் வந்து சேர்ந்துகொள்ளுமாறு அந்த பெரிய நிறுவனம் அழைத்தது. நான் தேர்வானதில் இருந்து சரியாக ஒரு வருடம் பத்து நாட்கள் கழித்து அந்த நிறுவனத்தில் ட்ரைனிங் ஆரம்பமாகியது.
மூன்று மாதங்கள் முடிந்ததும் ப்ராஜெக்ட் கிடைத்து விடும் என்று நம்பிக்கொண்டிருந்த சமுதயத்திற்குத் தெரியாது அங்கே பெஞ்ச் என்ற ஒரு சடங்கு உண்டு என்று. பெஞ்ச் என்றால் ட்ரைனிங் முடிந்து ப்ராஜெக்ட் கிடைக்கும் வரை சும்மா இருக்க வேண்டும் வேலை எதுவும் கிடையாது. ஆனால் சம்பளம் உண்டு. கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அது நரகம் என்பது பெஞ்சில் இருப்பவர்களுக்குத் தான் தெரியும். சமுதாயம் விழித்துக் கொண்டது "எப்போ ப்ராஜெக்ட் கிடைக்கும்? ஏன் இன்னும் சும்மாவே இருக்க?" கேள்விகளை கேட்டுக் கொண்டே சென்றது. அதற்க்கான பதிலை நானும் தேடிக் கொண்டே இருந்தேன். ஒரு நிருபனின் வேலை நிஜத்தைத் தேடுவது, பெஞ்சில் இருப்பவனின் வேலை நிழலைத் தேடுவது காரணம் அலுவலகத்தினுள் செல்ல அனுமதி கிடையாது. தினசரி அலுவலகம் செல்வது, கிடைக்கின்ற நிழலில் உட்காருவது, சிறுவயதில் உட்கார்ந்து கொண்டு விளையாடும் அனைத்து விளையாட்டுக்களையும் விளையாடுவது, கிண்டல் கேலி மதிய சாப்பாடு பின் வீட்டுக்குப் புறப்பாடு என்ற நிலையிலேயே வாழ்க்கை இரண்டு மாதங்களுக்கு நகர்ந்து கொண்டிருந்தது.
முடிவில்லா நிலை என்பது எதிலுமே இல்லை, பெஞ்ச் வாழ்க்கையும் நிறைவுக்கு வந்து சென்ற வாரம் ப்ரோஜெக்டும் கிடைத்து விட்டது. நான் இருக்கும் ஆவடியிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அலுவலகத்தில் தான் இனி என் வேலை. அங்கு தான் நான் செல்ல வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஆவடி இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து இருந்து சென்னை கடந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலிருக்கும் சிறுசேரி சென்று திரும்ப வேண்டும். தலை சுற்றுகிறதா சென்னையில் பலபேரின் அலுவல் நிமித்தம் இப்படித் தான் இருக்கும்.காரணம் சென்னையின் புறநகரில் தான் வீட்டு வாடகை குறைவு. இருபது கி.மீ தொலைவிற்குள் ரூம் பார்த்து அங்கே சென்றுவிட்டேன். இருந்தும் வேலை பழக்கத்திற்கு வரும் வரை கொஞ்சம் கடினமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
என் வாழ்வில் வந்த இந்த மாற்றங்கள் தான் தடங்களுக்குக் காரணம். அதனால் மற்ற நண்பர்களின் எழுத்தை உற்சாகப்படுத்துவதோடு நின்று கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்தேன். அந்த முடிவோடு தான் ப்ளாக்கையும் ஓபன் செய்தேன். ஆனால் முடிவு மாறிவிட்டது இல்லை என்னை உற்சாகப்படுத்தும் உங்களால் மாற்றப்பட்டுவிட்டது. நான் பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்பொழுது வரை என் பதிவை முதல் ஆளாக படித்து வரும் லாய், பதிவுலகின் முதல் நண்பராய் வந்து என் எழுத்தை தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு எப்பொழுது அடுத்த பதிவு எழுதப் போகிறாய் என்று உற்சாகபடுத்துகிற சதீஷ் அண்ணா, முதல் விருது கொடுத்த சகோதரி கலை, பதிவில் நடை எப்படி எப்படி இருந்தால் அது நல்ல பதிவாக இருக்கும் என்று பாடம் சொல்லிக் கொடுத்து என்னை திருத்தும் என் சின்ன வாத்தியார் கணேஷ் சார்,லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக கமெண்ட் கொடுக்கும் நிரஞ்சனா, பல சிறுகதைகள் எழுதி வரும் மெலட்டூர். இரா.நடராஜன் சார், என் ஒவ்வொரு பதிவிலும் இருக்கும் குறை நிறைகளை தவறாது எடுத்துரைக்கும் என் அண்ணன், ஸ்ரீமதி மற்றும் ஜனனி, தவறாது என்னை உற்சாகப்படுத்தும் மணிசார் பிரவீன் வில்வா பவி ராஜி மணிமாறன் மதுரைதமிழன் சீனி ராஜபாட்டை ராஜா ரமணி விச்சு சென்னையை சுற்றிக் காட்ட அழைக்கும் சின்னமலை புதியதாய் கிடைத்த நண்பர்கள் யுவராணி பாலா துளசி கோபால் வெங்கட் நாகராஜ் மூத்த பதிவர்களான லெக்ஷ்மி அம்மா வை கோபால கிருஷ்ணன் ராஜராஜேஸ்வரி அம்மா மற்றும் மனோ சாமிநாதன் என் பதிவிற்க்கான புகைப்படங்களை தந்து உதவும் நண்பன் காளிராஜ் என்று ஒவ்வொருவரும் என் உற்சாகதிற்கான காரணங்கள்.
என் கல்லூரி தோழர்கள், என் உடன் வேலைக்குச் சேர்ந்த தோழர்கள் என்று அனைவர் கொடுக்கும் உற்சாகமும் மிக முக்கியமான காரணங்கள். 'கொஞ்சம் தாமதமாக வந்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன் வாத்தியரே. விதி வழியில் செல்வதால் சதி ஒன்று நிகழ்ந்து விட்டது' என்று கணேஷ் சாரிடம் கூறினேன், அதற்க்கு அவர் உதிர்த்த மிக மிக உற்சாகமான வார்த்தைகள் 'விதி வழி செல்லும் வாழ்வில் உங்களுக்கும் சோதனைகள் நேர்கின்றனவா... மீண்டு வாருங்கள். எல்லாம் நமக்கு உரமே...'. .அடுத்ததாக நான் எதிர் பார்க்காத நிகழ்வு என்னை வலைசரத்தில் அறிமுகம் செய்து வைத்திருந்த தோழி சசிகலா "தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன்" என்று என்னை வலைசரத்தில் அறிமுகம் செய்திருந்த தோழி சசிகலா அவர்கள். எப்போது அடுத்த பதிவு என்று கேட்ட சதீஷ் அண்ணா. இனி பதிவெழுதுவாயா என்று கேட்ட ஸ்ரீ அண்ணா? இப்படி ஒவ்வொருவரிடமும் இருந்து கிடைத்த உற்சாகம் என்னை மீண்டும் பதிவெழுத தூண்டியது. இனி கண்டிப்பாக எழுத வேண்டும் என்ற ஆர்வமும் பிறந்ததது.இன்னும் ஒரு மாத காலத்திற்கு என்னால் தொடர்ந்து எழுத முடியுமா என்று தெரியவில்லை ஆனால் உங்களை தொடர்ந்து கொண்டிருப்பேன் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும்.
இனி விருது கொடுக்கு நேரம்
என் எழுத்துகளை தன் மின்னல் வரிகளால் பாரட்டும் சின்ன வாத்தியார் கணேஷ் சார் அவர்களுக்கு
தன் சிறுகதைகள் சிறந்த சிந்தனைகள் என்று பலவேறு விதங்களில் எழுதி வரும் அய்யா மெலட்டூர். இரா.நடராஜன் சார்அவர்களுக்கு
எல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து வரும் நம்மைக் காக்கும் சீரிய பணியில் இருந்தாலும் சிறப்பாக தன் அனுபவங்களை எழுதி வரும் அண்ணன் சதீஷ் அவர்களுக்கு
அலையல்ல சுனாமி என்ற பெயரில் பதவு எழுதி வரும் அண்ணன் விச்சு
எடக்கு மடக்கு என்று பெயர் வைத்திருந்தாலும் தன் மனதில் தொட்ரியதி அப்படியே எழுதும் முட்டாப்பையன் (!) அவர்களுக்கு
எதாவது எழுதுவோம் என்று எழுதினாலும் திருக்குறளை பாமர விளக்கங்களுடன் எழுதி வரும் ஐயா வியபதி அவர்களுக்கு
நிழலுலகில் நிஜத்தை தேடும் சராசரிப் பெண்ணான யுவராணி தமிழரசனுக்கு
சினிமா சினிமா என்ற தலைப்பில் தான் ரசித்த ஆங்கிலத் திரைப்படங்களை அழகான விமர்சனத்துடன் தரும் நண்பன் ராஜ் அவர்களுக்கு
தான் நினைத்ததைச் சொல்லும் தன்னுடைய பதிவில் நூரைக்கண்ட முரளிதரன் அவர்களுக்கு
தன் கவிதை வரிகளால் கவி பாடும் என் வகுப்புத் தோழன், மண்ணின் மைந்தன், உடன் பணியாற்றுபவன் என்று பல சிறப்புகளை பெற்ற கவிபாலா அவர்களுக்கு
என்று இந்த விருதுகளை பகிர்ந்து கொடுக்கிறேன். இந்தச் சிறுவன் மகிழ்வோடு தரும் விருதை பெற்றுக் கொள்ள தாழ்மையுடன் அழைக்கிறேன்.
Tweet |
இந்த விருது எனக்கு இரண்டு முறை ஏற்கனவே நண்பர்களால் கொடுக்கப்பட்டு விட்டது சீனு. இருந்தாலும் உங்களின் மீண்டும் ஒரு முறை அன்பில் தோய்ந்து வரும் இந்த விருதை ஏற்றுக் கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என் அடுத்த பதிவில் இதைத் தெரிவிக்கிறேன். உங்களுக்கு என் நன்றியும், நல்வாழ்த்துக்களும்!
ReplyDeleteகணேஷ் சார் ஒரு முறை உங்கள் வலைப் பூவை பார்த்தேன் அதில் இந்த விருது இடம் பெறவில்லை என்றவ்டன் கொடுத்தேன். இரண்டு முறை வாங்கி இருந்தாலும் இந்த சிறுவன் தருவதையும் மறுக்காமல் ஏற்றுக் கொண்ட உங்கள் பெருந்தன்மையை எண்ணி வியக்கிறேன். நன்றி சின்ன வாத்தியாரே
Deleteவிருதுக்கு வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteநன்றி ராஜி. நீங்கள் கொடுக்கும் உற்சாகம் தான் என்னை அடுத்த அடி நோக்கி பயணிக்க உதவுகிறது
Deleteசரியான நபர்களுக்குதான் பரிசை பகிர்ந்தளிச்சு இருக்கீங்க சகோ
ReplyDeleteசீனு... இப்படியான சூழலில் எழுத விருப்பம் இருந்தும் எழுதக் கஷ்டமாக இருந்தால் என் மனதில் பட்ட யோசனை இது. வார விடுமுறை தினத்தன்று (ஞாயிறு) ஒரு மணி நேரம் ஒதுக்கி இரண்டு பதிவுகளைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். முடியும் போது பதிவேற்றம் செய்யலாம். இயலும் போதெல்லாம் நீங்கள் விரும்பும் தளங்களில் கருத்திடலாம். என்ன நண்பா... சரிதானே...
ReplyDeleteஉங்கள் யோசனை அருமையான யோசனை சார். கண்டிப்பாக அதனை பின்பற்றுகிறேன். வழிகாட்டி இல்லா மனிதனை வழிநடத்துவது சக மனிதர்களின் அனுபவங்கள் தானே
Delete"வாழ்த்துக்கள் சார் !
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன் சார்
Deleteநன்றி தோழரே. உங்கள் விருதினை மனமாற ஏற்றுக்கொள்கிறேன்.
ReplyDeleteHow many posts are not important. How you construct each post is important. You started your writings on Chennai city. Continue with that. further, you can attempt on human relations around you. write some thing on socio-economic issues.
DeleteIf there is quality improvements in your writing, that will the real honour for me.
m r natarajan
How many posts are not important. How you construct each post is important. You started your writings on Chennai city. Continue with that. further, you can attempt on human relations around you. write some thing on socio-economic issues.
DeleteIf there is quality improvements in your writing, that will the real honour for me.
m r natarajan
மனமார்ந்த நன்றிகள் விச்சு
Deleteநண்பா மீண்டும் வந்ததற்கு நன்றி ஆனால் கடுப்பு ஏற்றதிர்கள் ப்ளாக் எழுதாமல் சென்று விடலாம் என நினைதிர்களா தேடிவந்து மிதிப்பேன்....நமக்கு எல்லாம் இதுவெல்லாம் சாதாரணம் நானும் இன்னும் நீங்கள் அனுபவித்த "சமுகம்" அந்த தொல்லையில் இருந்து நானும் கஷ்டப்பட்டு கொண்டு தான் உள்ளேன்....
ReplyDeleteசின்னமலை உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்கு அதிக உற்சாகத்தைத் தருகிறது. கண்டிப்பாக எழுதுகிறேன் நண்பா உங்களிடம் மிதி வாங்கும் அளவிற்கு உடம்பில் வலு இல்லை. ஆம் நமக்கான நேரத்தை தயாரித்துக் கொண்டால் எல்லாம் நலமாக நடக்கும். கொஞ்சம் பிளான் பண்ணி பண்ணுவோம் :-)
Deleteசமுகம் என்ற கட்டமைப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். மீறி வெளியில் வருவோம். நகைச்சுவைப் பதிவு எழுத முயல்கிறேன் .சென்னைக்கு வாருங்கள் நன்றாக சுத்தி காண்பிக்கிறேன். உங்கள் அன்பில் நான் மெய்மறந்தேன் நன்றி
பலர் கல்யாணம் செய்து கொண்டே பதிவு எழுதும் போது நமக்கு என்ன நண்பா இதெல்லாம் சர்வ சாதாரணம் இதற்கு மேலும் கஷ்டம பதிவு எழுத இயலாது என்று கூறினால் தளபதியின் சூப்பர் ஹிட் "சுறா" வை நூறு முறை பார்க்கணும்...அடுத்ததாய் சிரிப்பு பதிவு நாளை எழுதி puplish செய்ரிங்க சரியா....
ReplyDeleteகூடிய விரைவில் தங்களை சந்திக்க வருகிறேன் கேட்டபடி சென்னை சுற்றி காட்ரிங்க ஓகே...recent என்ன படம் பார்த்திங்க...
ReplyDeleteவாழ்த்துக்கள் சீனு! நீங்கள் பெற்றதை பகிர்ந்தளித்து இருக்கிறீர்கள். உங்கள் விருதைப் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். தென் சென்னைப் பகுதிக்குள்தான் உங்கள் வசிப்பிடம் என்று கருதுகிறேன். புதிய பணியிலும் பதிவிலும் உங்கள் பணி சிறக்கட்டும். மீண்டும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிருதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி சார். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
Deleteவிருது பெற்ற தங்களுக்கும், தங்கள் மூலம் விருதுகளைப் பெற்றுள்ள அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல இருக்கீங்களா கோபால் அய்யா. உங்கள் அடுத்த பதிவை எதிர்நோக்கி காத்திருக்கும் பலரில் ஒருவன்
Deleteசரியான ஆட்களுக்கு விருது கொடுத்திருக்கீங்க ஃப்ரெண்ட்! விருது பெற்றதற்கும், வழங்கியதற்கும் நல்வாழ்த்துக்கள்! பணி நிமித்தம் நீங்கள் இப்படி கஷ்டப்பட வேண்டியிருக்கேன்னு நினைக்கறப்ப வருத்தமாவும், அந்த நிலையிலயும் எங்களின் அன்பைப் புறக்கணிக்காம முடியறப்பல்லாம் எழுதறேன்னு சொன்னது சந்தோஷமாவும் இருக்கு சீனு. நானும் அதேதான் சொல்றேன். எப்பப்ப முடியுதோ, அப்பப்ப எழுதுங்க, எங்க ப்ளாக்குக்கு வாங்க. ஒரேயடியா விலகிடறதுங்கறது வேண்டாம். ரைட்டா?
ReplyDeleteநன்றி நிரஞ்சனா. தவறாமல் உங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் வருவேன். ட்ரைனிங் முடியற வரைக்கும் கொஞ்சம் கஷ்டங்களை அனுபவிக்கத் தான் வேண்டும். வேளை பழகி விட்டதென்றால் back to form than......
DeleteHow many you write is not important. How you construct each post is more important. You started writing on Chennai City. It is good. Carry on. Also write on human relations, your observations about the society, polity, environment etc.
ReplyDeleteIf any improvement had taken place in your postings, that will the real honour for me.
m r natarajan
சார் உங்கள் அன்பு ஒன்றே போதும். உங்களைப் போன்றவர்கள் வழிகாட்டுதல்கள் என் போன்ற சிறுவர்களுக்கு தேவை. சீக்கிரம் வெளிநாடு பயணம் முடித்து வாருங்கள். அதையும் பதிவாக போடுங்கள். காத்திருக்கிறோம்
Deleteவிருது அளித்த உங்களுக்கும் அதை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி ராஜா, நான் கலங்கிப் போய் இருக்கும் என்னை கை கொடுத்து ஆதரிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
Deleteநீங்கள் தொடந்து கலக்குங்கள் தல
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteமுதலில் எனக்கு விருது குடுத்தற்கு மிக்க நன்றி..... உங்கள் விருதினை மனமாற ஏற்றுக்கொள்கிறேன்.....
கவுண்டர் சொல்லுவது போல் "ஐ.டி வாழ்க்கையில் இது எல்லாம் ரொம்ப சாதாரணம்பா".
ஒவொரு ஐ.டி ஊழியரும் தங்களது ஆரம்ப காலத்தில் இந்த மாதிரி சோதனைகளை கடந்து வந்து இருப்பார்கள்.....
இதற்காக நீங்கள் எழுதுவதை நிறுத்துவேன் என்று சொல்வதை நான் கண்டிப்பாய் ஏற்க மாட்டேன். எனக்கு பிடித்த மிக சில ப்ளாக்கர்களின் நீங்களும் ஒருவர். உங்கள் தொய்வு இல்லாத எழுத்து நடை படிபவர்களை சோர்வு அடையவிடாமல் கடைசி வரை கொண்டு செல்லும் நடை. தொடர்ந்து எழுதுங்கள்..
ப்ளாக் ஒரு நல்ல ஸ்ட்ரெஸ் ரெலீவர் (Strees releaver)...முகம் தெரியாத பல நல்ல நண்பர்களை உங்களுக்கு பெற்று தரும்.....
உங்களுக்கு பிடித்த பதிவர்களில் ஒருவராக என்னையும் கருதுவது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது. உங்கள் பாராட்டுகளுக்கும் விருதை ஏற்றுக் கொண்டமைக்கும் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போக வண்ணம் தொடர்ந்து எழுதுகிறேன்.
Deleteகண்டிப்பாக. எழுத்தின் மூலமாக நட்பு பூக்கள் மலரும் என்றால் அது வலை பூவல் மட்டுமே முடியும்
நண்பரே,
ReplyDeleteமுதலில் எனக்கு விருது குடுத்தற்கு மிக்க நன்றி..... உங்கள் விருதினை மனமாற ஏற்றுக்கொள்கிறேன்.....
கவுண்டர் சொல்லுவது போல் "ஐ.டி வாழ்க்கையில் இது எல்லாம் ரொம்ப சாதாரணம்பா".
ஒவொரு ஐ.டி ஊழியரும் தங்களது ஆரம்ப காலத்தில் இந்த மாதிரி சோதனைகளை கடந்து வந்து இருப்பார்கள்.....
இதற்காக நீங்கள் எழுதுவதை நிறுத்துவேன் என்று சொல்வதை நான் கண்டிப்பாய் ஏற்க மாட்டேன். எனக்கு பிடித்த மிக சில ப்ளாக்கர்களின் நீங்களும் ஒருவர். உங்கள் தொய்வு இல்லாத எழுத்து நடை படிபவர்களை சோர்வு அடையவிடாமல் கடைசி வரை கொண்டு செல்லும் நடை. தொடர்ந்து எழுதுங்கள்..
ப்ளாக் ஒரு நல்ல ஸ்ட்ரெஸ் ரெலீவர் (Strees releaver)...முகம் தெரியாத பல நல்ல நண்பர்களை உங்களுக்கு பெற்று தரும்.....
உங்கள் விருதினை மனமாற ஏற்றுக்கொள்கிறேன். நன்றி நண்பரே
ReplyDeleteவிருதை ஏற்றக் கொண்டமைக்கு மிக்க நன்றி அய்யா
Deleteவாழ்த்துக்கள் சீனு ...நீங்க இன்னும் நிறைய விருது வாங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....
ReplyDeleteதாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும் ....
என்னை மாறி இல்லாமல் நல்லா எழுதுறிங்க ....அதையே அப்புடியே புடிச்சிக்கிட்டு கணேஷ் அண்ணா சொல்லுறதை எல்லாம் மண்டைக்குள்ள ஏற்றி பிரபல பதிவர் ஆக வாழ்த்துக்கள்
ReplyDeleteநீங்கள் விருது கொடுத்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteகலை மீண்டு வருவதற்க்கான ஆரம்பப் புள்ளி நீங்கள் தான், அதனால் முழு முதல் நன்றிகள் உங்களுக்கு
Deleteஉங்கள மாதிரி கலகலப்பா எழுத என்னால முடியுமா தெரியாது கண்டிப்பா அதற்க்கு முயற்சி செய்றேன்.
நீங்கள் கொடுத்த விருது கண்டிப்பாக எனக்கு நல்லதோர் ஆரம்பமே
அன்றைக்கே உங்களிடம் சொல்லனும் நினைதிநேன் ,,,ஆனால் மே பதினெட்டாம் திகதி நிகழ்வால் ரெண்டு நாள் இணையத்தில் மனமாய் இருக்க முடியவில்லை ..
Deleteஉங்கள் பயண தொலைவு நேரமின்மை அதுவெல்லம்புரிகிறது ....இருந்தாலும் எழுதுவதைக் கை விடாதிங்கோ ....தொடர்ந்து எழுதுங்க ...நீங்க நல்லா எழுதுறிங்க .....
மீ யும் அம்பத்தூர் பக்கம் தான் ...அஞ்ச இருந்து கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சென்று வரணும் ...அதுவும் சென்னை டிராபிக் ....பஸ் கூட்டம் ....நான்கு மணி நேரம் பயணத்திலே செலவாகும் ..அப்புறம் படிப்பு ....பயணத்திலே பாதி போவது தான் சென்னை வாழ்க்கை ,....
நல்லா எழுதுரிங்கள் ...தொடர்ந்து எழுதுங்கோ ...
வாழ்த்துக்கள் பாஸ் ..
ReplyDeleteஎன்னடா இனிமேல் கதை எழுத மாட்டாறுனு
நினைக்கும் போது ,உங்க நிலமைய அப்படியே எழுதிடீங்க ..
Super ..
நீங்க அடுத்ததா project பத்தியும் அங்க
இருக்கறவங்க பத்தி எழுதுங்க ...
ப்ராஜெக்ட் பத்தியா ஹா ஹா ஹா ஏண்டா இந்த கொல வெறி... கண்டிப்பா அங்க நடக்ற சுவையான சம்பவங்களை பதிவு செய்றேன் டா. என்ன இருந்தாலும் பெஞ்ச் அ கொஞ்சம் மிஸ் பண்றேன் டா
Deleteவாழ்த்துக்கள் பாஸ் ..
ReplyDeleteஎன்னடா இனிமேல் கதை எழுத மாட்டாறுனு
நினைக்கும் போது ,உங்க நிலமைய அப்படியே எழுதிடீங்க ..
Super ..
நீங்க அடுத்ததா project பத்தியும் அங்க
இருக்கறவங்க பத்தி எழுதுங்க ...
மிக்க நன்றி அன்பு
ReplyDeleteஎன் பெயரையும் தங்கள் பதிவில் இணைத்ததற்கு நன்றி !!!!
ReplyDeleteகுருவே நீங்கள் இல்லாமல் சிஷ்யன் மட்டும் தனியாக எங்கு செல்வது
Deleteநண்பா தமிழ்மணம்,tamil10,இன்டலி போன்றவற்றில் இணைத்து கொண்டுதானே உள்ளீர்கள் அப்படி என்றால் அதன் ஓட்டு பட்டையை வையுங்கள்.ட்விட்டர் வையுங்கள் நண்பா....
ReplyDeleteஎன்ன சொல்லட்டும்?
ReplyDelete:-)
தொடர்ந்து மேலும் சாதிக்கவும் , விருதுக்கும் என் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஉனது பெருந்தன்மைக்கு நன்றி சீனு.இதுக்கெல்லாம் நாம சரிதானா?என்று தோன்றுகிறது.எனது நண்பர்கள் வட்டாரத்தில் வலைபூ அறியப்படாத ஒன்று.வலைப்பூ யாரையும் அறியாமல் இருந்த எனக்கு உன்னை போல் பல நல்ல உள்ளங்களை இந்த குறுகிய காலத்தில் தந்துள்ளது.அதுவே என்னை பொறுத்த வரை பெரிய விஷயம்.கூடுதலாக இந்த விருது வேறு.நன்றி நண்பா......எவ்வளவு எதில் விருப்போமோ அவ்வளவு அதில் நீங்கள் காலம் செலவளிப்பிர்கள்.உங்கள் எழுத்தை நீங்க இன்னும் விரும்புங்க.இன்னும் எழுதுவிங்க.நான் அடுத்த மாதம் காஷ்மீர் போறேன்.ஜூலைக்கு பின் ஜம்மு சாம்பா எல்லையில் காவல்.இனிமேல் விடுமுறையில் மட்டுமே எழுத முடியும்.விடுமுறை என்றால் வார விடுமுறை இல்லை..வருஷ விடுமுறை.கைபேசியில் உங்க பதிவுகளை படிக்கலாம்.என்னை யோசித்தால் நீங்க எவ்வளவோ பரவாயில்லை.தொடர்ந்து எழுதுங்க.தமிழ்மணத்தில் இணையுங்க...நான் வடிவேல் பாய் விரித்த கதையாக இன்னும் முடியலை.நீங்க இணைந்த பின்னாடி சொல்லி கொடுங்க..இணைந்திருப்போம்.
ReplyDeleteஅண்ணா தங்களது விருதுக்கு மிக்க நன்றி!!!
ReplyDeleteமற்ற பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
வலைச்சர பணி முடித்து ஊருக்கு சென்று விட்டு இன்று தான் வந்தேன் . வாழ்த்துக்கள் நண்பரே .
ReplyDeleteசீனு எங்கே இருக்கீங்க.....
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteசீனு, உங்கள் உலகம் மிக பெரியது. இத்தனை நன்மை விரும்பிகளை பெற்றுள்ள நீங்கள், மிகவும் இனிமையானவராக திகழ்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇதுவரை நான் படித்த உங்கள் பதிவு, ஒரு ஆழ்ந்த சிந்தனை கொண்ட, பணிவும், நேசமும் உள்ள இளைஞனை அடையாளம் காட்டுகிறது.
உங்களுக்கு மேன் மேலும் பல விருதுகள் வர, வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் கனிவான கருத்துக்களுக்கும் உளம் நிறை நன்றிகள். என் உலகை விசதரமாக மாற்றுவதே உங்களை போன்ற சொந்தங்கள் தான் அதன் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்
Delete